அத்தியாயம் 75
“மம்மி.. where are you?” என்று கத்திக் கொண்டு மகிழன் லிண்டாவை தேடி ஓடினான். இது மாதிரியாக வெளியில் விளையாடிக் கொண்டிருந்த மகிழன் திடீரென்று சத்தம் எழுப்புவதை கேட்டு பதற்றப்பட்ட லிண்டா “என்ன ஆச்சு எதுக்கு இவன் இப்படி சத்தம் போட்டு ஓடி வரான்? விளையாடிட்டு இருக்கும்போது கீழே எதுவும் விழுந்துட்டானா?” என்று நினைத்து அவசர அவசரமாக வெளியில் வந்து பார்த்தாள்.
அவளை கண்டவுடன் வேகமாக அவள் அருகில் ஓடிச் சென்ற மகிழ மூச்சு வாங்க “மம்மி.. மம்மி.. Big Daddy.. Big Daddy!” என்று திக்கி திணறி சொன்னான். “Big Daddy-யா? உங்க அர்ஜுன் அங்கிள் இந்த டைம்ல வீட்டுக்கு வந்து இருக்கிறாரா என்ன?” என்று லிண்டா அவனிடம் குழப்பமான முகத்துடன் கேட்க, “எஸ் மம்மி, அவர் வீட்டில் தான் இருக்காரு.. பட் அவருக்கு என்னமோ ஆயிடுச்சு. நீங்க சீக்கிரம் வாங்க.. வந்து அவருக்கு என்னாச்சுன்னு பாருங்க.” என்ற மகிழன் லிண்டாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஹாலுக்கு சென்றான்.
அங்கே அர்ஜுன் லிவ்விங் ஏரியாவில் சோஃபாவின் அருகில் மயங்கி கிடக்க, அதைக் கண்டு வாய் அடைத்துப் போன லிண்டா “Oh.. Shit!” என்று முணுமுணுத்துவிட்டு வேகமாக அர்ஜுனின் அருகில் சென்று அவன் கையில் தட்டி “அர்ஜுன் ப்ரோ.. அர்ஜுன் ப்ரோ.. what happened to you?” என்று பதட்டமான குரலில் கேட்டாள்.
ஆனால் அர்ஜுனிடம் எந்த அசைவும் தெரியவில்லை. உடனே அருகில் உள்ள டேபிளில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்த லிண்டா அவனுக்கு மயக்கம் தெளிகிறதா? என்று சோதித்துப் பார்த்தாள். அப்போதும் அர்ஜூன் அப்படியே கிடந்ததால், அவளுக்கு பயமாக இருந்தது. உடனே மகிழனை அனுப்பி வாசலில் நின்று கொண்டிருந்த வேலை ஆட்களை உள்ளே அழைத்து வந்து அர்ஜுனை தூக்கிக் கொண்டு போய் அவனுடைய அறையில் படுக்க வைக்க சொன்னாள்.
பின் லிவ்விங் ஏரியாவில் இருந்த இன்டர்காம் மூலமாக ஜானகிக்கு கால் செய்து விஷயத்தை சொல்லி “நீங்க சீக்கிரம் அர்ஜுன் ப்ரோவோட ரூமுக்கு வாங்க. நான் டாக்டருக்கு கால் பண்ணி வர சொல்றேன்.” என்றுவிட்டு அந்த அழைப்பை துண்டித்தாள். பின் டாக்டருக்கு கால் செய்து வரச் சொன்னாள் லிண்டா. அர்ஜுன் திடீரென்று அப்படி மயக்கம் போட்டு கீழே விழுந்ததால் அந்த ஏகே பேலஸ் பரபரப்புடன் காணப்பட்டது.
இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு ஜானகியிடம் இருந்து தேன்மொழிக்கு கால் சென்றது. அப்போது இந்தியாவில் ஈவினிங் டைம் என்பதால், ஆருத்ராவை டான்ஸ் கிளாஸில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றிருந்த தேன்மொழி அந்த காலை அட்டென்ட் செய்து “சொல்லுங்க அத்தை! நான் வெளியே இருக்கேன். வீட்டுக்கு போயிட்டு உங்களுக்கு கால் பண்ணவா?” என்று கேட்டாள்.
“ஏன் இப்ப உனக்கு என் கிட்ட பேசறதுக்கு கூட டைம் இல்லையா? நான் உன் மேல இப்ப ரொம்ப கோவமா இருக்கேன் தேன்மொழி. அர்ஜுன் விஷயத்துல தப்பா ஏதாவது நடந்தால் கண்டிப்பாக நான் சும்மா இருக்க மாட்டேன்னு உன் கிட்ட ஏற்கனவே சொன்னேன் இல்ல!
என் பையன் உன்ன நெனச்சு சாப்பிடாம தூங்காம இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாம போய் லோ பிளட் பிரஷர் ஆகி மயக்கம் போட்டு விழுந்துட்டான்.. நல்லவேளை அவன் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் இப்படி ஆயிருக்கு.. டிரைவரை கார் ஓட்ட வேண்டாம்னு சொல்லி அனுப்பி வச்சிட்டு இவனே கார் ஓட்டிட்டு இவ்வளவு தூரம் ஆபீஸ்ல இருந்து வந்திருக்கான்.. வர்ற வழியில அவனுக்கு ஏதாவது ஆகி இருந்தா, அதுக்கு யார் பொறுப்பு சொல்லு?
நீயும் என் பையனும் சேர்ந்து எப்பயும் சந்தோஷமா வாழனும்னு தான் நான் உங்க ரெண்டு பேருக்கும் ஆசை ஆசையா கல்யாணம் பண்ணி வச்சேன். கடைசியில உன்னாலயே என் பையனுக்கு ஏதாவது ஆயிரம் போல இருக்கு! என் அர்ஜுனை இப்படி பாக்குறதுக்கே எனக்கு கஷ்டமா இருக்கு.” என்று ஜானகி கோபம் கலந்த சோகத்துடன் சொல்ல,
அவள் பேச பேச தேன்மொழியில் கண்களில் இருந்து அறிவிப்போல கண்ணீர் கொட்டத் தொடங்கியிருந்தது. “என்ன அத்த சொல்றீங்க? இப்ப அவர் எப்படி இருக்காரு? டாக்டர் வந்து அவரை செக் பண்ணினாரா? என்ன சொன்னாரு? பெருசா எந்த பிரச்சனையும் இல்ல தானே! அவர் நார்மல் ஆயிட்டாருல்ல?” என்று அழுது கொண்டே தேன்மொழி அவசரமான குரலில் கேட்க, “இப்ப அவன் நார்மலா தான் இருக்கான். டாக்டர் அவன் சரியா சாப்பிடாம தூங்காம இருக்கறதுனால தான் இப்படி எல்லாம் ஆச்சுன்னு சொல்லிட்டு போயிட்டாரு. இதுக்கு அப்புறமாவது அவன் கரெக்டா இல்லைனா, அவனோட ஹெல்த் ரொம்ப effect ஆகும்னு வார்னிங் கொடுத்துட்டு போய் இருக்காரு தேன்மொழி.. நான் சொல்றது உனக்கு புரியுதா? உனக்கு என் புள்ள மேல கொஞ்சமாவது அக்கறை இருந்தா, உன் கோபம் பிடிவாதம் எல்லாத்தையும் விட்டுட்டு உடனே கிளம்பி ரஷ்யா வந்து சேரு. நீ அங்கே இருந்து வர்றதுக்கு தேவையான எல்லாத்தையும் நான் அரேஞ்ச் பண்றேன்.” என்று கோபமாக சொன்ன ஜானகி அந்த அழைப்பை துண்டித்து விட்டாள்.
நடுரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த தேன்மொழி அவள் இங்கே நின்று அழுது கொண்டிருந்தாள் மற்றவர்கள் என்ன எது என்று கேள்வி கேட்பார்கள் என நினைத்து தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு, “எனக்கும் இப்பவே போய் அவர பாக்கணும்னு தான் இருக்கு. பட் இதுக்காக நான் கிளம்பி போயிட்டா, இதுக்கு அப்புறம் என்னால அவரை எதுவுமே பண்ண முடியாம போயிடும். நான் என்ன சொன்னாலும் அவர் கேட்க மாட்டாரு. இப்ப என்ன பண்றது?” என்று யோசித்தபடி ஆருத்ராவை அழைத்து வருவதற்காக சென்றாள்.
அவள் ஆருத்ராவுடன் வீட்டிற்கு செல்லும்போது அவளுக்காகவே அங்கே காத்திருந்த பிரிட்டோவும் கிளாராவும் அவளை தனியாக அழைத்து சென்று “மிஸஸ் பிரசாத் நம்ம இப்பவே கிளம்பி ரஷ்யா வரணும்னு ஸ்ட்ரோங்கா சொல்லிட்டாங்க. நீங்க என்ன பண்ண போறீங்க மேடம்? எங்களால அர்ஜுன் சாரை ரிச் பண்ண முடியல. மேபி அவர் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காருன்னு நினைக்கிறேன். மிஸ்டர் பிரசாத் ஒரு பிசினஸ் மீட்டிங்காக ஆஸ்திரேலியா போய் இருக்காரு. சோ அவர் கிட்டயும் இந்த சமயத்துல நம்மளால காண்டாக்ட் பண்ணி எதுவும் கேட்க முடியாது.” என்று கேட்க, சில நொடிகள் அமைதியாக எதையோ யோசித்த தேன்மொழி “அத்தை என் மேல கோவமா இருக்காங்க. நான் கால் பண்ணா எடுப்பாங்களா மாட்டாங்களான்னு தெரியல. அவருக்கு இப்ப எப்படி இருக்குன்னு கேட்டுட்டு, அவரை எனக்கு நான் கால் பண்ண சொன்னேன்னு அத்தை கிட்ட சொல்லுங்க. நான் அவர் கிட்ட பேசணும். நான் என்ன நெனச்சு இங்க வந்தனோ அது நடக்காம என்னால திரும்ப ரஷ்யா போக முடியாது.” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
அவளது கைகள் அடுத்தடுத்து பரபரப்புடன் வேலையை பார்க்க தொடங்கியது. ஆனால் அவளது என்ன ஓட்டங்கள் முழுவதும் அர்ஜுன் தான் நிறைந்திருந்தான். தனக்கு அருகிலேயே மொபைல் ஃபோனை வைத்துக்கொண்டு அர்ஜுனிடம் இருந்து கால் வருகிறதா என்று எதிர்பார்த்து காத்திருந்தாள். “மேடம் நம்ம ரஷ்யா கிளம்புறதுக்கு மிஸஸ் பிரசாத் அரேஞ்ச் பண்ண ஜெட் ரெடியா இருக்கு. நம்ம உடனே கிளம்பனும் இன்ஸ்ட்ரக்ஷன் வந்திருக்கு.” என்று கிளாரா சென்று தேன்மொழியிடம் சொல்ல, “நான் அவரை எனக்கு கால் பண்ண சொன்னத அத்தை கிட்ட சொன்னீங்களா இல்லையா?” என்று பதில் கேள்வி கேட்டாள் தேன்மொழி.
“சொல்லிட்டேன் மேடம்.” என்று கிளாரா சொல்ல, “அப்ப அவர் கிட்ட இருந்து எனக்கு கால் வரட்டும். நான் அவர் கிட்ட பேசாம எங்கேயும் கிளம்ப மாட்டேன். முன்னாடி என்னை இங்க இருந்து எப்படி கடத்தி தூக்கிட்டு போனீங்களோ, அந்த மாதிரி வேணும்னா உங்களால முடிஞ்சா force பண்ணி என்னை கூட்டிட்டு போங்க.. நானா வரணும்னு நினைச்சீங்கன்னா, அது எனக்கு தோணும்போது தான் நடக்கும்.” என்று தன் மனதை கல்லாக்கி கொண்டு உறுதியுடன் சொன்னாள் தேன்மொழி.
ஜானகி அவர்களை கிளம்பி வர மட்டுமே சொல்லி கட்டளையிட்டு இருந்ததால், தேன்மொழி எப்படி வலுக்கட்டாயமாக முன்பு போல அழைத்துச் செல்ல முடியும்? என்று புரியாமல் குழப்பத்தில் இருந்த கிளாராவும், பிரிட்டோவும் மீண்டும் ஜானகிக்கு கால் செய்து விஷயத்தைச் சொல்லி என்ன செய்வது என்று கேட்டு பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அப்போது டிவி நியூஸில் “வெளிநாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மிஸ்டர் அர்ஜுன் பிரதாப் சென்னையில் இரண்டே நாட்களில் ஒரு மிகப்பெரிய டிரஸ்ட் ஒன்றை தனது மனைவி தேன்மொழியின் பெயரில் உருவாக்கி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேன்மொழி அவரை சமூக வலைதளத்தில் காதலித்து ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்டதாகவும் நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இந்த பிரம்மாண்ட ஆதரவற்றோர் இல்லத்தினால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டமாக சாலையோரத்தில் இருப்பவர்கள், முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகள் என ஏராளமானவர்கள் அங்கே தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் அங்கே தங்க விரும்புபவர்கள் இந்த மொபைல் நம்பருக்கு கால் செய்து தங்களது டீடைல்ஸ்களை கொடுக்கலாம். பிரபல தொழிலதிபரின் இந்த திடீர் செயல் மக்களால் பாராட்டப்பட்டு வரும் நிலையில், இதுபோன்று அவர் மேலும் பல ஆதரவற்றோருக்கான இல்லங்களை உருவாக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை எழுப்பி வந்து கொண்டிருக்கிறார்கள்.” என்று ஒரு பெண் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அந்த நியூஸில் பேக்ரவுண்டில் தேன்மொழி ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயரில் பல்லாயிரம் சதுரடிகள் பரபரப்பில் உள்ள ஒரு பிரம்மாண்ட கட்டிடம் தெரிய, அர்ஜுன் தேன்மொழி இருவரின் புகைப்படங்களும் நியூசில் ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர்களது திருமண புகைப்படம் கூட இடம் பெற்றிருந்தது.
நடப்பது எதுவும் தெரியாமல் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த விஜயா திடீரென்று வந்த அந்த நியூஸை பார்த்து “ஏய்.. தேன்மொழி இங்க வந்து பாரு.. நியூஸ்ல என்னென்னமோ சொல்றாங்க டி.” என்று குரல் கொடுத்தாள். கிச்சனில் நின்று கொண்டிருந்த தேன்மொழிக்கும் கூட நியூஸில் ஓடியது அரைகுறையாக கேட்டிருந்தது. அதனால் வேகமாக வெளியில் வந்து டிவியில் ஓடியதை நம்ப முடியாமல் பார்த்தாள்.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-75
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.