ஆருத்ரா டான்ஸ் கிளாஸ் செல்வதற்கு சம்மதம் தெரிவித்ததால் சமைக்கும் வேலையை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்த தேன்மொழி அவளை தயார் செய்து தானும் கிளம்பி அருகில் உள்ள கிளாசிக்கல் டான்ஸ் கிளாஸுல் அவளை சேற்று விட்டு வந்தாள். ஏற்கனவே அவர்கள் பல நாட்களுக்கு பிறகு இந்தியா வந்து சேர்ந்ததினால் ஏராளமானவர்கள் அவளையும் அவளது குடும்பத்தினரையும் சூழ்ந்து கொண்டு “ஏண்டி தேன்மொழி நீ எங்கேயோ காணாம போயிட்டனு கேஸ் எல்லாம் கொடுத்து உங்க வீட்ல இருக்குறவங்க தேடிட்டு இருந்தாங்க.. நீ என்னமோ ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு தெருவுக்குள்ள பேசிக்கிறாங்க.. திரும்பி வந்த உன் கழுத்துல தாலி எல்லாம் இருக்குது.. அதே மாதிரி கூட ஒரு பெரிய பிள்ளையையும் கூட்டிட்டு வந்து இருக்கியாம். உன் புருஷனை மட்டும் எங்க டி ஆள காணோம்? உன் கூட யாரோ வெளிநாட்டுக்காரங்க எல்லாம் சுத்திட்டு இருக்காங்கன்னு நான் கேள்விப்பட்டேன்! என்ன சமாச்சாரம்?
உங்க வீட்ல நடக்கிறது எல்லாம் ஒரே மர்மமால்ல இருக்கு.. நீ நெஜமாவே கல்யாணம் பண்ணிக்கிட்டியா? பாக்குறதுக்கு உன்ன மாதிரியே இருக்கிற ஒரு சின்ன பொண்ணு உன் அம்மா அம்மான்னு கூப்பிட்டுட்டு தெரியுது.. நீ இப்ப தானே ஓடிப்போன அதுக்குள்ள உனக்கு எப்படி அவ்ளோ பெரிய பொண்ணு பொறந்தது? அதுவும் வந்தது தான் வந்த இத்தனை நாள் கழிச்சு வீட்டுக்கு வரும்போது உன் புருஷனை கூட்டிட்டு வர மாட்டியா? என்ன ஆச்சு உனக்கு உன் புருஷனுக்கு ஏதாவது சண்டையா?” என்று ஆளாளுக்கு அவள் செல்லும் வழியெல்லாம் அவளை நிறுத்தி வைத்து தங்களது கேள்விக்கணைகளால் அவளை தொலைத்தார்கள்.
இந்தியாவில் வந்து இறங்கி உதயாவிடம் தன் வாழ்க்கையில் நடந்ததைப் பற்றி எல்லாம் சில பொய்களை கலந்து சொல்ல தொடங்கிய தேன்மொழி அப்போதில் இருந்து இப்போது வரை ஒரு அளவு இல்லாமல் அடுக்கடுக்காக பொய்யாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போதும் எதை எதையோ சொல்லி அவர்களை எல்லாம் சமாளித்துவிட்டு தனது வீட்டிற்குள் வந்து நுழைந்த தேன்மொழி பெருமூச்சுவிட்டு “முதல் வேலையா நான் யார் யார் கிட்ட என்னென்ன பொய் சொல்லி இருக்கேன்னு ஞாபகப்படுத்தி நோட் போட்டு எழுதி வச்சுக்கணும் போல இருக்கு.. என்ன இவங்க.. இந்த அளவுக்கு சிஐடி ரேஞ்சுக்கு யோசிச்சு கொஸ்டின் கேட்கிறாங்க..
சப்பா.. என்னால ஆன்சர் பண்ண முடியல சாமி.. நாளை பின்ன பொய் சொன்னத மறந்துட்டு அப்புறம் அவங்க ஏதாவது கேட்டாங்கன்னா வேற ஒன்னு சொல்லி மாட்டிக்க கூடாது. எல்லாரும் குறிப்பா என் புருஷன் எங்க புருஷன் எங்கன்னு தான் கேக்குறாங்க.. அந்த ஆளுக்கு தான் என் மேல அக்கறையே இருக்க மாட்டேங்குதே... இருந்திருந்தா என்னை விட்டுட்டு பிடிவாதமா இன்னும் அங்கேயே இருப்பாரா? இதுல சின்ன பசங்க மாதிரி சாப்பிட மாட்டேன் தூங்க மாட்டேன்னு அனுப்பிச்சுட்டு இருக்கான்.. ஆஆஆஆ.. அவன பத்தி யோசிச்சாலே கடுப்பா வருது!!” என்று தனக்குள் புலம்பியவள், தனது மைண்ட் செட்டை மாற்றுவதற்காக ஏதாவது வேலை செய்தால் நன்றாக இருக்கும் என நினைத்து சமையல் கட்டிற்குள் புகுந்தாள்.
ஆருத்ராவும் இப்போது டான்ஸ் கிளாஸ் சென்று விட்டதால், அங்கே வாசலில் ஒருவனை காவலுக்கு நிறுத்திவிட்டு கிளாராவும் பிரிட்டோவும் அப்படியே அவுட்டிங் செல்லலாம் என நினைத்து தனியாக கிளம்பி விட்டார்கள். அவர்கள் இருவரும் ஷாப்பிங் சென்று செல்ஃபிக்கள் எடுத்து ஸ்டேட்டஸில் எல்லாம் போட, அதைப் பார்த்து பொறாமையில் வெந்து புழுங்கிய அர்ஜூன் “எனக்கு தான் டா புதுசா கல்யாணம் ஆயிருக்கு.. ஆனா என்ன தவிர மத்த எல்லாரும் ஜாலியா இருக்கீங்க.. இப்ப வரைக்கும் நானும் என் பொண்டாட்டியும் ஹனிமூன் கூட போகல டா... பட் யாருக்காவது அத பத்தி கொஞ்சமாவது கவலை இருக்கா பாரு! முக்கியமா என் டாடி தான் என் லைஃப்ல பெரிய வில்லன்.. அவர் இருக்கிற வரைக்கும் நான் என் பொண்டாட்டிய கனவுல மட்டும் தான் பார்க்க முடியும் போல.” என்று நினைத்து பெருமூச்சு விட்டான்.
வெகு நேரம் ஆக சாப்பிடாமல் இருந்ததால் அவனது வயிறு சாப்பாடு போட சொல்லி கூப்பாடு போட்டது. “நோ அர்ஜுன்.. இதுக்காக எல்லாம் நீ கொஞ்சம் கூட அசரக் கூடாது. என் உன்னால சாப்பிடாம இருக்க முடியாதா என்ன? எத்தனை நாள் வேலை வேலைன்னு சாப்பிடுறதை மறந்துட்டு இருந்திருப்ப! இப்போ உன் லைஃப்க்காக நீ கொஞ்ச நேரம் இல்ல கொஞ்ச நாள் சாப்பிடாம இருக்கறதுனால இப்ப என்ன ஆகிட போது? இந்த விஷயத்துல நீ எந்த அளவுக்கு பிடிவாதமா இருக்கியோ, அந்த அளவுக்கு உன் ஹனி பேபி மனசு மாற சான்ஸ் இருக்கு. So control.. control yourself..!!” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு சாப்பிடாமல் இருக்க போராடினான்.
அப்போது அவன் மூளை “நீ சாப்பாடு தானே டா சாப்பிட மாட்டேன்னு சொன்ன.. அதுக்காக எதுக்கு தண்ணி கூட குடிக்காம இருக்கணும்? சாமிக்கு வேண்டிக்கிட்டு விரதம் இருந்தா கூட ஃப்ரூட்ஸ், நட்ஸ், மில்க், ஜூஸ் எல்லாம் எடுத்துப்பாங்க.. நம்ம பொண்டாட்டிக்காக தானே ஃபஸ்டிங் இருக்கோம்.. சோ சைடுல அதெல்லாம் சாப்பிடலாம் தப்பில்ல..
இது உன் ஆபீஸ். உன்னை மீறி நீ அதெல்லாம் சாப்பிட்டத பத்தி யார் போய் அவ கிட்ட சொல்ல போறாங்க?” என்று அவனிடம் பாய்ண்டாக கேட்க, “அதானே.. அந்த ராட்சசி வேணும்னே என் மேல இருக்கிற கோவத்துல ஒரு ரெண்டு மூணு நாள் போகட்டும் அதுவரைக்கும் இவன் தாங்குறானான்னு பாக்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தா, நம்ம நிலைமை என்ன ஆகிறது? அதனால இந்த மாதிரி யாருக்கும் தெரியாம அப்பப்ப கொஞ்சம் சாப்பிட்டுக்கணும். அப்ப தான் அவ வர்ற வரைக்கும் இந்த வயசான காலத்துல உசுர புடிச்சி வைக்க முடியும்.” என்று நினைத்து உடனே தனது சர்வாண்டிற்கு கால் செய்து அவனை உள்ளே வரச் சொன்னான்.
அவன் மூளை அவனுக்கு லிஸ்ட் போட்டு சொன்ன உணவு வகைகள் அனைத்தையும் அவனிடம் சொல்லி “இப்ப நான் சொன்னது எல்லாத்தையும் உடனே ரெடி பண்ணி யாருக்கும் தெரியாம கொண்டு வந்து எனக்கு அப்பப்போ குடுத்துட்டு போங்க. நான் டயட் ஃபாலோ பண்ணலாம்னு இருக்கேன்.” என்றான். “ஓகே சார், போய் உடனே கொண்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு சென்றான் அந்த சர்வெண்ட்.
அப்படியே அர்ஜுன் நினைத்ததை போல இரண்டு நாட்கள் ஓடி விட்டது. என்ன தான் யாருக்கும் தெரியாமல் அர்ஜுன் நடுநடுவில் நீர் ஆதாரங்களை எடுத்துக் கொண்டாலும், அவன் தூங்காமல் அதிக பிரஷர் எடுத்துக் கொண்டு வேலை செய்து கொண்டே இருந்ததால் தான் மிகவும் வீக்காக இருப்பதைப் போல உணர்ந்தான். ஆனால் அப்போதும் தன் பிடிவாதத்தை மட்டும் கைவிடாமல் அவன் திட உணவுகளை தெரியாமல் கூட தன் வாயில் வைக்கவே இல்லை.
அங்கே நடக்கும் அனைத்தும் ஜானகி மூலம் தேன்மொழிக்கு தகவல்களாக சென்று கொண்டே இருந்தது. எதுவும் சாப்பிடாமல் இருப்பதற்கு முதலில் ஏதேனும் சாப்பிடுகிறானே அதுவே போதும்.. இதில் இருந்து அவனால் பசி தாங்க முடியாது என்று தெரிகிறது. அதனால் இந்த வேண்டாத வேலை எல்லாம் எதற்கு? என நினைத்து அவனே அவனது மனதை மாற்றிக் கொள்வான் என்று யோசித்த தேன்மொழி தனது சோகங்கள் அனைத்தையும் தன்னுடனே புதைத்துக் கொண்டு கோபத்தை மட்டுமே அர்ஜுனிடம் காட்டினாள்.
இப்போது அவன் பட்டினி கிடப்பதை விட, அவளது ஆயுள் முடியும் வரை அவள் கணவன் அவளுடன் ஒரு நல்ல வாழ்க்கையை நிம்மதியாக வாழ வேண்டும் என்பது மட்டுமே அவளுடைய ஒரே வேண்டுதலாக இருந்தது. அதற்காக இந்த கஷ்டத்தை அவள் ஏற்றுக் கொள்ள முடிவு செய்தாள். அங்கே அர்ஜுன் சரியாக சாப்பிடாததால் தானும் சாமிக்கு விரதம் இருப்பதாக தனது அம்மாவிடம் எல்லாம் பொய் சொல்லிவிட்டு தேன்மொழியும் அங்கே அவன் என்ன சாப்பிடுகிறானோ அதையே அவளும் சாப்பிட்டாள்.
அந்த தகவலும் அர்ஜுனுக்கு பிரிட்டோ மூலம் சென்றது. அதைக் கேட்டு சோகமான அர்ஜுன் “இவ என் மேல இருக்குற கோவத்துல எனக்கு இப்படி ஒரு பனிஷ்மென்ட் கொடுக்குறான்னு நான் ஆவது நினைச்சு வேணும்னே இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கேன்னு வச்சுக்கலாம். பட் இவன் எதுக்கு தேவை இல்லாம இப்படி பண்றா? பேசிக்கலி பாய்சை விட கேர்ள்ஸ் ரொம்ப விக்கா இருப்பாங்க. இதுக்கு முன்னாடி எல்லாம் இந்த மாதிரி அவ சாப்பிடாம இருந்திருக்கவே மாட்டா.. சோ இதை அவ பாடி அக்சப்ட் பண்ணாது. தேவை இல்லாத ஹெல்த் இஸ்யூஸ் தான் வரும். .
சரியான பைத்தியக்காரியா இருக்கா இவ.. என்னை விட்டு பிரிஞ்சு போய் என்னையும் கஷ்டப்படுத்தி இவளையும் கஷ்டப்படுத்துகிறா.. ஆஆஆஆ.. God.. டாடி எனக்கு கொடுத்த டைம்ல இன்னும் வெறும் நாலு நாள் தான் இருக்கு. நான் என்ன பண்ணி அவளை கன்வின்ஸ் பண்ண போறேன்?” என்று யோசித்து சோகத்தில் கரைந்து கொண்டிருந்தான்.
அவனால் வேலையில் கூட சரியாக கான்சன்ட்ரேட் செய்ய முடியவில்லை. அதனால் ஆகாஷை அழைத்து “எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. நீ இங்க இருந்து எல்லாத்தையும் பாத்துக்கோ. ஈவினிங் நான் ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டியது இருக்கு. பிரசெண்டேஷன் எல்லாம் ரெடியா இருக்கு. நீதான் என் ப்ளேஸ்ல இருந்து எல்லாத்தையும் பாத்துக்கணும். ஏதாவது இம்பார்டன்ட் ஆனா டவுட்னா எனக்கு கால் பண்ணி கேளு. நான் சொல்றேன்.” என்று சொல்லிவிட்டு அவனாகவே தன் காரை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.
அவனுக்கு இருந்த களைப்பில் அது பகல் நேரமாக இருந்தாலும் கூட சென்று அடுத்து உறங்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் அவன் தனது ரூமை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்க, அவனுக்கு தன் முன்னே தெரிந்த காட்சிகள் எல்லாம் மங்கிய வெளிச்சத்தில் இரண்டு மூன்றாக தெரிவதைப் போல இருந்தது. அதனால் அப்படியே நின்ற அர்ஜுன் தன் கண்களை தேய்த்து விட்டு சுற்றி முற்றி பார்த்தான்.
அப்போது கார்டனில் விளையாடிக் கொண்டிருந்த மகிழன் உள்ளே ஓடி வந்தான். அவன் கண்களில் அர்ஜுன் தென்பட, “பிக் டாடி.. நீங்க என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டீங்க! உங்களுக்கு இன்னைக்கு ஆபீஸ் லீவா?” என்று கேட்டான்.
அவன் குரலைக் கேட்டு அவன் பக்கம் திரும்பிய அர்ஜுன், “மகிழ்” என்று அவன் பெயரை முணுமுணுத்தபடி அப்படியே தன் தலையை பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்தான். அதை கண்டு பயந்து போன மகிழன் தன் கையில் இருந்த ballஐ கீழே போட்டுவிட்டு “மம்மி.. மம்மி.. மம்மி.. where are you?” என்று கத்தியபடி தனது தாய் தந்தையரின் அறையை நோக்கி ஓடினான்.
- மீண்டும் வருவான் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-74
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.