“என் பொண்டாட்டி இல்லாம என்னால சாப்பிட முடியல மம்மி.” என்று அர்ஜுன் தன் அம்மாவிற்கு கால் செய்து புலம்பினான். அவன் சொல்வதைக் கேட்டு எமோஷனல் ஆவதற்கு பதிலாக ஹா ஹா ஹா என்று சத்தமாக சிரித்த ஜானகி “என்ன அர்ஜுன் பேசிட்டு இருக்க நீ? நீ என்ன இப்பதான் காலேஜ் படிக்கிறதா உனக்கு நினைப்பா? என்னமோ உன் கேர்ள் ஃபிரண்ட் கூட சண்டை போட்டுட்டு அவ உன் கிட்ட பேசலைன்னு சாப்பிடாம இருக்கிறதா அம்மா கிட்ட வந்து கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருக்க! உனக்கு பசிச்சா நீ சாப்பிடு. உனக்காக வேலை பாக்குறதுக்கு அந்த ஆபீஸ்ல ஆளுங்களுக்கா பஞ்சம்? நீ சாப்பிடாம இருக்கிறதுக்கும் தேன்மொழிக்கும் என்னடா சம்பந்தம்?” என்று கிண்டலாக கேட்டாள்.
“ஒரே அசிங்கமா போச்சு குமாரு!” என்ற ரீதியில் தன் தலையில் கை வைத்த அர்ஜுன் “என்ன மம்மி இப்படி என்ன நோஸ்கட் பண்றீங்க? அவ இந்தியா கிளம்பி போகும்போது நீங்க எல்லாரும் அவ கூட சேர்ந்துக்கிட்டு என்னை பிரிந்து உங்களால இருக்க முடியாது.. எனக்கு எதுவும் வாங்க கூடாதுன்னு நினைச்சு தானே அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க! இப்ப அவ இல்லாத ஃபீலிங்ல நான் ஒழுங்கா சாப்பிடலைன்னு சொல்லிட்டு இருக்கேன்.. இப்ப மட்டும் எனக்காக அவ கிட்ட பேச மாட்டீங்களா நீங்க?” என்று பாவமாக கேட்க, “இப்ப என்ன உனக்கு? நீ தேன்மொழி இந்தியா போன சோகத்துல சாப்பிடாம இருக்கேன்னு நான் அவ கிட்ட சொல்லனுமா? நான் எமோஷனலா பேசி அவளை கன்வின்ஸ் பண்ணனும் அப்படித் தானே! உன் பிளான் அது தான்னா என் கிட்ட டைரக்டா சொல்லுப்பா அர்ஜுன்.. உன் மம்மி நான் உனக்கு ஹெல்ப் பண்ண மாட்டேனா? எனக்கு என் பையனும் மருமகளும் எப்பயும் சந்தோஷமா இருக்கணும் அதுதான் முக்கியம்..” என்றாள் ஜானகி.
“டாடியை விட மம்மி ரொம்ப டேஞ்சரா இருக்காங்க.. என்ன கரெக்டா புரிஞ்சி வச்சிருக்காங்க. இவங்கள இதுக்கு மேல என்ன சொல்லியும் cheat பண்ண முடியாது.” என்று நினைத்த அர்ஜுன், “மாம்.. எனக்கும் அவ சொல்றது எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு அவ பின்னாடியே சுத்திட்டு இருக்கணும்னு தான் ஆசையா இருக்கு. பட் அது எல்லாம் அவ்ளோ சீக்கிரம் நடக்கிறது இல்ல. இப்ப இருந்து நான் எல்லாத்தையும் ப்ராசஸ் பண்ண ஆரம்பிச்சா கூட எல்லாமே கரெக்டா முடிஞ்சு நான் வெளியே வர்றதுக்குள்ள 2,3 இயர்ஸ் ஆகிடும்.
நான் சொன்னா அதை அவ புரிஞ்சிக்க மாட்டேங்கிறா மம்மி.. இப்படி இருக்கிற அவள நான் என்ன பண்ணி சமாதானப்படுத்துறது நீங்களே சொல்லுங்க! எனக்கு அவ பண்றது கூட பெரிய விஷயம் இல்ல.. டாடி எங்க ப்ராப்ளம்க்கு நடுவுல வந்து அப்பப்ப நாரதர் வேலை பார்த்துட்டு போறாரு இல்ல அதுதான் எனக்கு டென்ஷன் ஆகுது. அவர் மட்டும் இன்வால்வ் ஆகம இருந்திருந்தா, என் ஹனி பேபி இந்தியா போயிருக்கவே மாட்டா.. இப்ப நானும் இப்படி எல்லாம் உங்க கிட்ட புலம்பிட்டு இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது..
இன்னைக்கு பாருங்க எல்லாருக்கும் அவ தலைவாழை இலை போட்டு சமைத்து போட்டு இருக்கா.. எனக்காக அவ ஒரு ஆப்பிள் ஜூஸ் ஆவது போட்டு கொடுத்திருக்காளா? நீங்களே சொல்லுங்க.. என் பொண்டாட்டி கையால பரிமாறி அவ சமச்சத சாப்பிடணும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா? சியாவுக்கு குக்கிங்கே தெரியாது.. என் லைஃப்ல அப்படி ஒரு சம்பவம் எல்லாம் நடந்ததே இல்லை..
பிரிட்டோ அவ சமச்ச ஃபுட்டை ஃபோட்டோ எடுத்து எனக்கு சென்ட் பண்ணான். அத பாத்த உடனே எனக்கு அவ சமச்சதை சாப்பிடணும்னு தோணுது. அவ எத்தனை நாள் இந்தியாவுல இருக்க போறாளோ அதை பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை.. பட் இனிமே நான் அவ சமச்சத மட்டும் தான் சாப்பிட போறேன். எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல.. அவ சமைச்சு கொடுக்காம இந்த அர்ஜுன் எதுவுமே சாப்பிட மாட்டான். டாடி எனக்கு கொடுத்த செவன் டேஸ் சேலஞ்ச்ல நான் இப்படி ஃபாஸ்டிங் இருந்து எப்படி வின் பண்றேன்னு பாருங்க.” என்று பெருமிதத்துடன் சொன்னான்.
அவன் இப்படி சீரியஸாக பேசியவுடன் தான் அவன் இந்த விஷயத்தில் தீவிரமாக இருக்கிறான் “அப்ப நிஜமாவே நீ அவ உனக்கு சமைச்சு கொடுக்கிற வரைக்கும் உண்ணா விரதம் இருக்கிறது என்று முடிவு பண்ணிட்டியா?” என்று பதட்டத்துடன் கேட்க, “ஆமா மம்மி.. அவளுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்னு அவளுக்கு புரியணும்ல.. எவ்வளவு நாள் அவ கோச்சிக்கிட்டு இங்க வராம இருக்கான்னு நானும் பார்க்கிறேன். அவ சமைச்சு கொடுக்காம நான் சாப்பிட மாட்டேன். இதுல நான் ஸ்ட்ராங்கா இருக்கேன்.” என்று உறுதியாக சொன்ன அர்ஜுன் அவனுக்கு அவசரமாக பார்த்து முடிக்க வேண்டிய வேலைகள் சில இருந்ததால் ஜானகியிடம் பிறகு பேசுவதாக சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான்.
“என்ன இவன் சின்னப்புள்ளத்தனமா இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கான்? இவனுக்கு என்ன வயசாகுது.. இப்ப தான் அடிபட்ட காயம் எல்லாம் சரி ஆகிட்டு வருது.. இப்ப போய் சாப்பிடாம இருந்தா உடம்புக்கு என்ன ஆகிறது? இந்த லவ் வந்துட்டாலே எல்லாருக்கும் பைத்தியம் பிடிச்சிருது.. இவனை எப்படியாவது நம்ம சொல்றதை கேட்க வைக்கணும்னு நினைச்சு தான் நான் தேன்மொழி இந்தியா போனதுக்கு எதுவுமே சொல்லல. இப்ப அதுவே பெரிய ப்ராப்ளம் ஆகிரும் போலயே!” என்று நினைத்த ஜானகி உடனே தேன்மொழிக்கு கால் செய்தாள்.
அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து லஞ்ச் என்ன செய்யலாம் என்று தன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த தேன்மொழி “அத்தை கால் பண்றாங்க மா.. ஒரு நிமிஷம் இருங்க பேசிட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு தன் ரூமிற்கு சென்று “சொல்லுங்க அத்தை!” என்றாள். அர்ஜுன் தன்னிடம் சொன்னதை அப்படியே அவளிடம் சொன்ன ஜானகி “அர்ஜுன் ரொம்ப பிடிவாதக்காரன் தேன்மொழி.. அவன் ஒன்னு நடக்கணும்னு நினைச்சா அதை எப்படியாவது நடத்தி காட்டிடுவான்.. நீ சமைச்சு கொடுக்காம எத்தனை நாள் ஆனாலும் அவன் சாப்பிடவே மாட்டான். அவ்வளவு பிடிவாதம் பிடிப்பான்.. இப்ப என்னமா பண்றது?” என்று சோகமாக கேட்டாள்.
“அவர் வேணும்னே என்ன அங்க வர வைக்கிறதுக்காக இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்காரு அத்தை.. என்னை சமாதானப்படுத்தணும்னா நான் சொல்றத தானே செய்யணும்.. அத விட்டுட்டு இப்பயும் என்ன பிளாக்மெயில் பண்ணி அவர் இஷ்டத்துக்கு என்ன ஆட்டி வைக்கணும்னு நினைக்கிறாரு.. இப்படி எல்லாம் அவர் பண்றத பாத்தா எனக்கு இன்னும் கோபம் தான் வருது. நானும் பார்க்கிறேன் உங்க பையனோட பிடிவாதத்த.. அவருக்கு இருக்கிற கோவத்துல பிடிவாதத்தில அவர் பொண்டாட்டி எனக்கு பாதியாவது இருக்காதா? அவர் எவ்ளோ நேரம் சாப்பிடாமல் இருக்கிறாருன்னு பாக்கலாம் விடுங்க!” என்று தேன்மொழியும் விடாப்பிடியாக சொல்லிவிட, “என்னமா அவன மாதிரியே நீயும் பேசுற! இப்படி உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு நான் தான் இப்போ என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்.” என்று ஆற்றாமையுடன் சொன்னாள் ஜானகி.
“இந்த விஷயத்துல நீங்க தேவை இல்லாம யோசிச்சு ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க. இது எனக்கும் அவருக்கும் நடுவுல இருக்கிற இஸ்யூ. இதை நாங்களே சால்வ் பண்ணிக்கிறோம். உங்க கிட்ட இனிமே அவர் ஏதாவது இந்த மாதிரி சொன்னாருன்னா, உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்று நீங்களே சொல்லிடுங்க.. இப்ப விட்டுட்டா அவரை எப்பவும் நம்மளால ஒரு நார்மல் லைப்க்கு கொண்டு வர முடியாது.” என்று தேன்மொழி சொன்னதால், “ஓகே மா, ஓரளவுக்கு மேல உங்க விஷயத்துல நான் interfere ஆனாலும் நல்லா இருக்காது. பெருசா எதுவும் பிரச்சனையாகாம பார்த்துக்கோ.. அர்ஜுன் கோபால இருந்து சரியாகியே கொஞ்ச நாள்தான் ஆகுது. இன்னும் அவனுக்கு உடம்பு முழுசா சரியாகல. இதுல நீ இல்லாம வீட்டு பக்கம் கூட வர மாட்டேங்குறான்.. சரியா சாப்பிடாம தூங்காம தான் சுத்திட்டு இருக்கான்.. ஒரு அம்மாவா அவனுக்காக யோசித்து இது எல்லாத்தையும் உன் கிட்ட சொல்ல வேண்டியது என் கடமை. நான் சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம். பட் இது ரொம்ப பெருசாகி அவனுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா எங்களால வந்து பாத்துட்டு சும்மா இருக்க முடியாது அதயும் ஞாபகத்துல வச்சுக்கோ.” என்று சொல்லிவிட்டு ஜானகி அந்த அழைப்பை துடித்து விட்டாள்.
ஜானகி பேசிய அனைத்திலும் நியாயம் இருக்கிறது என்று நினைத்த தேன்மொழி “ச்சே.. இவரை சமாளிக்கிறதே எனக்கு பெரிய வேலையா இருக்கும் போல. எப்படித் தான் இவருக்கு இப்படியெல்லாம் ஐடியா வருதோ தெரியல! இவரோட இந்த பிடிவாதம் எவ்ளோ நேரத்துக்கு இருக்கன்னு நானும் பாக்குறேன்.” என்று நினைத்து தன் வேலையை பார்ப்பதற்காக சென்று விட்டாள்.
அவள் கிச்சனில் சமைக்கும்போது அவள் அருகில் சென்று நின்று கொண்ட ஆருத்ரா “மம்மி நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்! எனக்கு நீங்க குக் பண்றது எப்படின்னு சொல்லி குடுங்க.” என்று ஆர்வமாக கேட்க, “குக் பண்ண கத்துக்கிட்டு நீ என்னடா பண்ண போற? நம்ம வீட்ல தான் சமைக்கிறதுக்காகவே chef நிறைய பேர் இருக்காங்களே!” என்று அவளிடம் கேட்டாள் தேன்மொழி.
“இருக்கிறாங்க தான்.. பட் எனக்கு இங்க ரொம்ப போர் அடிக்குதே.. நான் இங்க என்ன பண்றது? நீங்களே சொல்லுங்க! ஆதி மாமா இருந்தாலாவது நான் அவர் கூட ஏதாவது விளையாடிட்டு இருப்பேன்.. அவரும் எங்கோ வெளியே போய்ட்டாரு..!!” என்று ஆருத்ரா பாவம் போல் தன் முகத்தை வைத்துக் கொண்டு செல்ல “அச்சோ எதுத்தா குட்டிக்கு போரடிக்குதா! இப்ப நம்ம என்ன பண்ணலாம்?” என்று கேட்டுவிட்டு சில நொடிகள் யோசித்த தேன்மொழி “ம்ம்.. ஐடியா! இங்க சம்மர் கிளாஸஸ் நிறைய நடக்கும். நான் ஒர்க் பண்ண ஸ்கூல்ல கூட இப்ப ஏதாவது கிளாஸ் நடந்துட்டு தான் இருக்கும். அப்படி ஏதாவது ஒரு கிளாஸ்ல உன்னை சேர்த்து விடுறேன். மார்னிங் போனா ஈவினிங் தான் வீட்டுக்கு வர முடியும். நீ வேணா போறியா?” என்று அவளிடம் கேட்டாள்.
“கிளாஸா?” என்று இழுத்த ஆருத்ரா “அங்க போனா படிக்க சொல்லுவாங்களா?” என்று சோகமாக கேட்க, உடனே அவளைப் பார்த்து லேசாக புன்னகைத்த தேன்மொழி “இல்ல இல்ல ரெகுலர் ஸ்கூல் மாதிரி இருக்காது.. உனக்கு ஏதாவது skill based training கொடுப்பாங்க. உனக்கு டான்ஸ் ஆட பிடிக்கும்னு தான் சொல்லு.. இங்க பக்கத்துலயே ஒரு டான்ஸ் கிளாஸ் இருக்கு. நான் அங்க கூட உன்னை சேர்த்து விடுறேன்.” என்று தேன்மொழி சொன்னவுடன், அதுவரை சுருங்கி இருந்த ஆருத்ராவின் முகம் 100 வாட்ஸ் பல்பை போல பிரகாசமாக மாறிவிட, “வாவ் டான்ஸ் கிளாசா! எனக்கு இந்தியன் கிளாசிக்கல் டான்ஸ் கத்துக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. பட் அங்க ரஷ்யால ப்ராப்பர் டீச்சர் கிடைக்கலைன்னு டாடி எனக்கு கிளாஸ் அரேஞ் பண்ணி கொடுக்கவே இல்ல. இங்க கிளாசிக்கல் டான்ஸ் இருந்தா என்ன அந்த கிளாஸ்ல ஜாயின் பண்ணி விடுங்க. நான் கண்டிப்பா ரெகுலரா போவேன் மம்மி.” என்று ஆர்வத்துடன் சொன்னாள்.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-73
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.