“சாபமாய் வந்த என் உயிரே” ஆடியோ நாவலை நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் யூடியூப் சேனலில் கேட்டு மகிழுங்கள்.

தன் அப்பா தேன்மொழிக்கும் தனக்கும் நடுவில் எப்போதும் வருகிறார் என நினைத்து கடுப்புடன் படுத்திருந்த அர்ஜுனுக்கு தூக்கமே வரவில்லை. ஆனால் எதை எதையோ நினைத்து மனதளவிலும் உடலளவிலும் சோர்வாக இருந்த தேன்மொழி தன்னையும் அறியாமல் ஆருத்ராவை அனைத்து கொண்டு உறங்கி விட்டாள். அந்த ரூமிற்குள் நுழைந்த விஜயா ஒரு பாயை எடுத்து போட்டு தரையில் படுத்துக் கொண்டு தன் மகளை பார்த்தாள்.
“அவங்க அப்பா இறந்து போனதுக்கு அப்புறம் பொம்பள புள்ளைய வச்சுக்கிட்டு என்ன பண்ண போறோம் அவளை எப்படி கரை சேர்த்த போறோம்னு யோசிச்சு ரொம்ப கவலைப்பட்டேன். கண்ண மூடி கண் திறக்கறதுக்குள்ள இப்போ என் பொண்ணுக்கு கல்யாணமே ஆகிடுச்சு.
எதையுமே நான் ஆசைப்பட்ட மாதிரி அவளுக்கு நான் பார்த்து செய்யற வாய்ப்பு எனக்கு கிடைக்காம போயிடுச்சு. அந்த கடவுள் எப்படியோ என் கண்ணால அவளுக்கு கல்யாணம் ஆகுறத என்ன பாக்க வச்சுட்டான். அதை நினைச்சு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான். இவ எப்ப எனக்கு பேரபிள்ளைங்க பெத்து கொடுப்பான்னு நான் பாத்துட்டு இருந்தா, அவ புருஷனுக்கு பிறந்த பிள்ளைகளை புடிச்சுக்கிட்டே திரியுறா இவ..
ஆனாலும் அந்தப் பிள்ளைங்களும் இவ மேல பாசமா தான் இருக்கு.. அத பாக்கும்போது நமக்கும் அதுவும் நம்ம பேரப்பிள்ளைங்க தானேன்னு நினைச்சா அதுங்களையும் பாக்குறதுக்கு ஆசையா தான் இருக்கு.. இந்த ருத்ரா பிள்ளைக்கு நம்ம தேனு மேல ரொம்ப பாசம். ஆனா அதுங்கெல்லாம் அவங்க அம்மா செத்துப்போனது தெரியாம இவளை அந்த பொண்ணு சியான்னு நினைச்சு பாசம் காட்டிட்டு இருக்குதுங்க..
ஆனா அந்த பொண்ணு செத்துப்போச்சு.. தேன்மொழிய உங்க அப்பா இரண்டாம் தரமா கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு இந்த பிள்ளைகளுக்கு தெரிஞ்சா, அப்பயும் இவங்க இதே மாதிரி பாசமா இருப்பாங்களா? வளர்ந்ததுக்கு அப்புறம் என்ன தான் இருந்தாலும் நீ எனக்கு சித்தி தானேன்னு கேட்டுட்டா அதை எப்படி என் புள்ளையால தாங்க முடியும்? இவ சொந்த குழந்தைகளா நினைச்சு அவங்கள பாசமா பாத்துக்குறா.. இத நெனச்சு சந்தோஷப்படுறதா இல்ல கவலைப்படுறதான்னே தெரியல..!! என்னமோ எல்லாம் கடவுளுக்கு தான் வெளிச்சம்.” என்று நினைத்த விஜயா அந்த அறையில் உள்ள சுவரில் மாட்டப்பட்டு இருந்த ஃபோட்டோவில் உள்ள தன் கணவனை பார்த்தாள்.
இந்த திருமணம் எப்படி நடந்து இருந்தாலும், தங்கள் வீட்டின் முதல் திருமணம் தேன்மொழி உடையது. அவளது திருமணத்தை அவள் அப்பா உயிருடன் இருந்து பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே.. என்று யோசிக்கும்போது அவளுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இப்படியே அதைப் பற்றி யோசித்தவாறு அவளும் தூங்கி போனாள்.
காலையில் தூங்கி எழுந்த அர்ஜூன் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவதற்காக டைனிங் ஏரியாவிற்கு சென்றான். அப்போது ஜானகியுடன் பேசியபடி அவன் அருகில் வந்து அமர்ந்த பிரசாத் “ஹாய் அர்ஜுன்.. என்ன அதிசயமா இருக்கு வீட்ல இருக்க..!! வீடு இல்லாதவன் மாதிரி கடைசி வரைக்கும் வெளியவே சுத்திட்டு இருப்பேன்னு நினைச்சேன்.. பரவால்ல.. இங்க உனக்குன்னு ஒரு ஃபேமிலி இருக்குன்னு உனக்கு ஞாபகம் வந்துருச்சுன்னு நினைக்கிறேன்.” என்று நக்கலாக கேட்க,
தன் அப்பாவை முறைத்து பார்த்த அர்ஜுன் “என் ஃபேமிலில பிராப்ளம் கிரியேட் பண்ணி என்ன வீட்டை விட்டு துரத்தினதே நீங்க தானே டாடி.. இப்போ ஏன் எதுவும் தெரியாத மாதிரி நடிக்கிறீங்க?” என்று கடுப்புடன் கேட்டான்.
“எது.. நான் உன் ஃபேமிலில ப்ராப்ளம் கிரியேட் பண்றனா? டேய் fool... மேரேஜ் ஆகி இத்தனை வருஷம் ஆகியும் உன் ஃபேமலியை எப்படி ஹாப்பியா வச்சுக்குறதுன்னு தெரியாம நீ தாண்டா சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிற..
உன் லைஃப்ல இருக்கிற பிராப்ளமை சால்வு பண்றதுக்கு தான் என்னால முடிஞ்ச அளவுக்கு உனக்கு நான் ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன். இதுக்கு நீ எனக்கு தேங்க்ஸ் தான் சொல்லணும்.” என்ற பிரசாத் தன் தட்டில் உணவை போட்டுக் கொண்டு அர்ஜுனின் பிளேட்டிலும் உணவை பரிமாறினார்.
“ஓஹோ என்னையும் என் வைஃபையும் பிரிக்கிறது தான் நீங்க எனக்கு செய்ற நல்லதா? மம்மியும் இந்தியா போகணும்னு சொல்லிட்டு இருந்தாங்கள்ல.. இன்னைக்கு அவங்க கிளம்பறதுக்கு நான் எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸும் பண்றேன். அப்ப தான் உங்களுக்கு என் சுச்சுவேஷன் புரியும்.” என்ற அர்ஜுன் தன் அம்மாவை பார்த்து, “என்ன மம்மி இன்னைக்கே இந்தியா கிளம்பறீங்களா? ஆருத்ராவை சமாளிக்க கண்டிப்பா தேன்மொழிக்கு உங்க ஹெல்ப் தேவைப்படும். அண்ட் சித்து வேற மம்மி என்னை விட்டுட்டு போய்ட்டாங்கன்னு புலம்பிட்டு இருக்கான். அவனையும் பேசாம நீங்க உங்க கூட கூட்டிட்டு போயிருங்க!” என்றான்.
தன் மகனையும் கணவனையும், பார்த்து அழகாக புன்னகைத்த ஜானகி “நீங்க சொன்னாலும் சொல்லலைனாலும் என் மருமகளைப் பார்க்க நானே இந்தியா போர் ஐடியால தான் இருக்கேன்.” என்று சொல்ல, “நீ போவதுனா போ.. எனக்கு அதுல எந்த பிராப்ளமும் இல்ல. நீ என்ன இவன் பொண்டாட்டி மாதிரி என் கூட சண்டை போட்டுட்டு இந்தியா போற? உன் பையன பொண்டாட்டிய எப்படி ஹாப்பியா வச்சுக்கணும்னு என்னை பார்த்து கத்துக்க சொல்லு.. இவ்வளவு வயசாகியும் இன்னும் இவனுக்கு பர்சனல் லைஃபையும், கரியரையும் பேலன்ஸ் பண்ண தெரியல.. பட் எல்லாம் தெரிஞ்ச மாதிரி எல்லாரையும் இவன் தான் பெரிய இவன்னு அதிகாரம் மட்டும் பண்றது..!!” என வேண்டுமென்று அவன் ஈகோபை தூண்டிவிடும்படி பிரசாத் பேசிக் கொண்டிருந்தார்.
பேசுவது தன் அப்பாவாக இருந்ததால் தனக்கு கோபம் வந்தாலும் அனைத்தையும் கேட்டுக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்த அர்ஜுன் “பேசுங்க டாடி நல்லா பேசுங்க.. இப்ப உங்களுக்கு இப்படி எல்லாம் பேசுறதுக்கு சான்ஸ் கிடைச்சிருக்குன்னு இஷ்டத்துக்கு பேசுறீங்க.. பட் நீங்க அக்செப்ட் பண்ணாலும் இல்லைனாலும், அர்ஜுன் இல்லைனா இங்க எதுவுமே நடக்காதுன்றது தான் உண்மை. என் பொண்டாட்டிய எப்படி ஹாப்பியா வச்சுக்கணும்னு எனக்கு தெரியும். இன்னும் ஒரு வாரத்துல நான் அவளை சமாதானப்படுத்தி இங்கே வரவேற்கிறேன் பாருங்க!” என்று சேலஞ்ச் செய்வதைப்போல சொல்ல, அவனை குறுகுறுவென்று பார்த்த பிரசாத் “எங்களுக்கும் அது தானே வேணும்!” என நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டு வெளியில் தன் முகத்தை இறுக்கமாக வைத்தபடி “அது சரி.. நீ அப்படியே வரியா? Then.. நான் இதை உன் சேலஞ்சா எடுத்துக்கிறேன். இன்னும் ஒரு வாரத்துல தேன்
மொழியை நீ சமாதானப்படுத்தி இங்க ரஷ்யா வர வைக்கலனா, உங்க அம்மாவ இந்தியா அனுப்பி வச்சுருவேன். சித்தார்த் போகணும்னு ஆசைப்பட்டாலும் போகட்டும். நீங்க இரண்டு பேரும் எத்தனை வருஷம் சண்டை போடுவீங்களா போடுங்க. சித்தார்த்தையும் ஆருத்ராவையும் சென்னையிலேயே ஒரு நல்ல ஸ்கூல்லா பார்த்து சேர்த்து விட்டுடலாம். என்ன ஓகே தானே!” என்று அவனிடம் கேட்டார்.
“நான் ஒரு பேச்சுக்கு சொன்னா, இவர் என்ன அதையே பிடிச்சுக்கிட்டு ஒரு வாரத்துக்குள்ள தேன்மொழி சமாதானம் ஆகலனா இவரே இந்தியால என் ஃபேமிலில இருக்கிறவங்க எல்லாரும் செட்டில் பண்ணி விட்டுடுவாரு போல!” என்று நினைத்த அர்ஜுன் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல அப்போதும் தன் கௌரவத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காக “ம்ம்.. சேலஞ்ச் சேலஞ்ச்.. அவளை எப்படி கரெக்ட் பண்றதுன்னு எனக்கு தெரியும். நான் என்ன பண்ண போறேன்னு நீங்க வெயிட் பண்ணி பாருங்க.” என்று திமிராக சொன்னான்.
உடனே பிரசாத் “ம்ம்.. பார்க்கிறேன் மை சன்..!!” என்று சொல்லிவிட்டு சாப்பிட தொடங்கி விட, அவர்கள் பேசியதை எல்லாம் கவனித்தபடி அங்கே வந்த ஜனனி “என்ன எல்லாரும் அண்ணி கிளம்பினதுல இருந்து இந்தியாவுக்கு போறத பத்தி பேசிட்டு இருக்கீங்க! எனக்குமே இப்ப இந்தியா போகணும்னு ஆசையா தான் இருக்கு. என்ன பண்றது.. என் குட்டி பேபிஸ் ரெண்டு பேரையும் வச்சுக்கிட்டு அவ்வளவு தூரம் எப்படி டிராவல் பண்ணி போறதுன்னு தான் யோசிக்கிறேன். அவங்களுக்கு இந்தியாவோட ஹாட் க்ளைமேட் செட் ஆகுமான்னு வேற தெரியல.” என்றபடி தன் அப்பாவின் அருகில் அமர்ந்தாள்.
“இன்னும் கொஞ்ச நாள்ல ஆகாஷ் லிண்டா மேரேஜ் அனிவர்சரி வரப்போகுதுல அப்போ அவங்க கூட இந்தியாக்கு ட்ரிப் போறதா பேசிட்டு இருந்தாங்க.. என்ன பண்ண போறாங்கன்னு தெரியல.” என்று ஜானகி சொல்ல, “என்ன டா நடக்குது இந்த வீட்ல? இத்தனை வருஷமா இந்தியாவுக்கு போகணும்னு யாருமே நினைக்கல. இப்ப அவ போனதுக்கு அப்புறம் எல்லாருமே அவ பின்னாடியே இந்தியா போகணும்னு ஒவ்வொருத்தரா ஆசைப்பட்டு கிளம்புறாங்க.. விட்டா இந்த தேன்மொழி எல்லாரையும் கரெக்ட் பண்ணி கைக்குள்ள போட்டுக்கிட்டு என் குடும்பத்தில இருந்து என்னையே பிரிச்சு வச்சுருவா போல! விடக்கூடாது அர்ஜூன்.. எல்லாமே உன் கைய மீறி போய்க்கிட்டே இருக்கு. உனக்கு ஜஸ்ட் செவன் டேஸ் தான் டைம். அதுக்குள்ள நீ அவளை சமாதானப்படுத்தி இங்கே வரவைக்கலனா இந்த ஓல்ட் மேன் நடுவுல புகுந்து இன்னும் அவளை குழப்பிவிட்டு ஏதாவது பண்ணி விட்டுருவாரு. இன்னைல இருந்து மிஷன் ஸ்டார்ட் ஆகுது. உன் பொண்டாட்டிய கரெக்ட் பண்றது உனக்கு என்ன அவ்ளோ கஷ்டமா? உன்னால எல்லாமே முடியும். All the best!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் அர்ஜூன்.
தேன்மொழி தன்னிடம் அப்படி முகத்தில் அரைவதை போல பேசிவிட்டு கீழே சென்றப் பின் அப்படியே மனதளவில் சுக்குநூறாக உடைந்து போன உதயா இரவு முழுவதும் தூங்காமல் மொட்டை மாடியிலேயே நின்று கொண்டு இருந்தான். காலையில் எழுந்தவுடன் தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு தேன்மொழி கிளம்பிவிடு என அவனிடம் நேற்று இரவு சொல்லி இருந்ததால் “நான் ஒரு வார்த்தை உன் புருஷனை குறை சொல்லிட்டேன்னு என்னையே மூஞ்சில அரஞ்ச மாதிரி இந்த வீட்டை விட்டு காலையில வெளியே போய்விடுனு சொல்லாம சொல்லிட்டல்ல.. நீ இந்த அளவுக்கு மாறுவன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல தேனு.
இப்பயும் நீதான் இப்படி எல்லாம் என் கிட்ட பேசினியான்னு நான் நம்பவே முடியல. நான் உன் மேல இருக்கிற அக்கறையில தானே அப்படி எல்லாம் பேசினேன்! அது கூட புரிஞ்சுக்காம எப்படி டி என் கிட்ட இப்படி பேசுற? அந்த அளவுக்கு அர்ஜுன் மேல பைத்தியமா இருக்கியா நீ? எனக்கு தெரிஞ்சு அவன் உன்கிட்ட பணத்தையும், பவரையும் அவனோட அழகான பாடியையும் காட்டி மயக்கி வச்சிருக்கான் நினைக்கிறேன். அதான் கொஞ்சம் கூட யோசிக்க தெரியாம நீ அவன் வலையில விழுந்து கிடக்கிற..!!” என்று தனக்குள் தனியாக புலம்பிய உதயா மற்றவர்கள் அனைவரும் தூங்கி எழுவதற்குள் யாரையும் இனிமேல் இங்கே இருந்து தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து கிளம்பி தன் வீட்டிற்கு செ
ன்று விட்டான்.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-71
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.