மஞ்சம்-70

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
தேன்மொழி தனக்கு திருமணமான கதையை உதயாவிடம் சொல்கிறாள். அதைக் கேட்டு டென்ஷனான உதயா “எப்படி உன்னால ஒரு வயசான கிழவன் கூட போய் சந்தோஷமா வாழ முடியும்? என்னால உன்னை இப்படி எல்லாம் பார்க்கவே முடியல தேனு.“ என்று உரத்த குரலில் சொல்ல, அவன் சொன்னதைக் கேட்டு அவனுக்கு மேல் கடுப்பான தேன்மொழி “வாய மூடு உதயா. நீ பேசிட்டு இருக்கிறது என் ஹஸ்பண்டை பத்தி.. அத மறந்துட்டு என்கிட்டயே இப்படி எல்லாம் உன்னால எப்படி பேச முடியுது? இப்போ என் முன்னாடி நிக்கிறது என் மேல ரொம்ப அக்கறை காட்டுற என் ஃபிரண்டா இருக்கிறதுனால மட்டும் தான் உனக்கு இன்னும் முகம் கொடுத்து நான் பொறுமையா பேசிட்டு இருக்கேன். இதுவே இப்படி பேசுறது வேற யாராவதா இருந்தா நான் அவங்கள வேற மாதிரி டீல் பண்ணிருப்பேன்.

நான் அவரை பற்றி இவ்வளவு சொன்னதுல உனக்கு அவரோட ஏஜ் மட்டும்தான் பெருசா தெரியுதா? நான் அவரை லவ் பண்றேன்னு சொன்னேனே... அதை எல்லாம் காதுலையே வாங்கலையா நீ? அவர் கூட சேர்ந்து வாழ்ற எனக்கே அவர பிடிச்சிருக்கு.. அவர் ஏஜ்ல எந்த பிரச்சனையும் இல்லைன்னு இருக்கும்போது, நடுவுல இருக்கிற உங்களுக்கு என்ன பிரச்சனை? இந்த லைஃப்ல எனக்கு அவர் தான் ஹஸ்பண்ட். எனக்கு அவரை மட்டும் தான் பிடிச்சிருக்கு. சாகுற வரைக்கும் நான் அவர்கூட தான் வாழ்வேன். இனிமே அவர பத்தி என் கிட்ட மட்டும் இல்ல.. வேற யார் கிட்டயும் எதுவும் பேசுற வேலை வெச்சுக்காத. நீ எனக்கும், என் ஃபேமிலில இருக்கிறவங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்க. அதுக்கு உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு நினைச்சேன். அதுக்கு தான் உன்ன வர சொன்னேன். ஒரு ஃபிரண்டா என் லைஃப்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கற உரிமை உனக்கு இருக்குன்னு நினைச்சேன். அதனால தான் உன் கிட்ட எல்லாத்தையும் சொன்னேன். இதுக்கு அப்புறம் உன் கிட்ட பேச எதுவும் இல்ல. நீ ஆல்ரெடி சாப்பிட்டு இருப்பேன்னு நினைக்கிறேன்.. ஆதியோட ரூம்ல போய் படுத்துக்கோ. மார்னிங் அம்மா தூங்கி எந்திரிச்ச உடனே அவங்க கிட்ட சொல்லிட்டேன் அப்புறமா கிளம்பி போ. ஆருத்ரா தூங்குற டைம் ஆயிடுச்சு. நான் கீழ போறேன்.” என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அங்கே நின்று அவனிடம் பேச பிடிக்காததால் அவனை திரும்பி கூட பார்க்காமல் அந்த இடத்தை விட்டு வேகமாக சென்றாள்.

அவள் மாடிப்படிகளில் கீழே இறங்கி வருவதை பார்த்துவிட்டு வேகமாக அவள் அருகில் ஓடி சென்று அவளை கட்டி பிடித்துக் கொண்ட ஆருத்ரா “மம்மி எனக்கு தூக்கம் வருது.. நம்ம தூங்கலாமா?” என்று கேட்க, “ம்ம்.. தூங்கலாமே.. எனக்கும் தூக்கம் வருது. சென்னை ரொம்ப ஹாட்டா இருக்கும். இவ்வளவு நேரம் நீ எப்படித் தான் எதுவும் சொல்லாம இங்க இருந்தியோ தெரியல.. நாளைக்கு மம்மி நம்ம ரூம்ல ஏசி வாங்கி ஃபிக்ஸ் பண்ணிடறேன். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ!” என்றாள் தேன்மொழி.

உடனே அவளைப் பார்த்து கியூட்டாக புன்னகைத்த ஆருத்ரா “நீங்க பொறந்ததுல இருந்து இங்க தான் இருந்ததா விஜி பாட்டி சொன்னாங்க.. இங்க இவ்ளோ நாளா உங்களால இருக்க முடியும்னா என்னால மட்டும் இருக்க முடியாதா? எனக்கு இங்க இருக்கிறது ஒரு டிஃபரென்ட் எக்ஸ்பீரியன்ஸா இருக்கு மம்மி. அதுவும் இல்லாம உங்க கூட இருக்கிறது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க எங்க இருக்கீங்களோ நானும் அங்க தான் இருப்பேன். Place is not a problem mummy. நீங்க நடுவுல டாடி கோமால இருக்கும்போது பிசினஸ் ஹாண்டில் பண்றதுக்காக ட்ரிப் போயிட்டு ரொம்ப நாள் கழிச்சு தானே வந்தீங்க.. அந்த டைம் தான் உங்களை எவ்வளவு மிஸ் பண்ண தெரியுமா? நீங்க எப்பயும் என் கூடவே இருங்க எனக்கு அதுவே போதும்.” என்று சொல்லிவிட்டு தேன் மொழியின் கால்களை அவள் உயரத்திற்கு கட்டிப்பிடித்துக் கொள்ள,

அவள் பேசியதில் நெகழ்ந்துப்போன தேன்மொழி ஆருத்ராவை தூக்கி தன்னுடன் சேர்த்து அனைத்து பிடித்துக் கொண்டு, “என் மேல இவ்வளவு பாசமா இருக்கிற குழந்தைக்கு அம்மாவா இருக்கிறதுல நான் ரொம்ப பெருமைப்படுகிறேன். எவ்ளோ வயசாகி இருந்தாலும் ஒரு அம்மாவோட point of view-ல அவங்க குழந்தைங்க எப்பயும் குழந்தைகளா தான் தெரிவாங்க. உங்க அப்பாவ நான் எப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டனோ, அப்பவே மனசார நான் உங்களுக்கு அம்மாவாகிட்டேன். நீயும், சித்தார்த்தும் எனக்கு பொரக்களைனாலும் எப்பயும் என் பிள்ளைங்க தான்.” என்று நினைத்து கண்கலங்கியவள், “நான் எப்பவும் உன் கூடவே தான் இருப்பேன் ருத்ரா. Mummy loves you more!” என்று மனதாரச் சொன்னாள்.

ஆருத்ராவை தூக்கிக் கொண்டு தன் ரூமை நோக்கி நடந்த தேன்மொழி “அம்மா நீங்களும் என் ரூம்லயே வந்து படுத்துக்கோங்க. கிளாராவும், பிரிட்டோவும் உங்க ரூம்ல தங்கிக்கட்டும். உதயா ஆதி கூட தூங்கட்டும்.” என்று சொல்ல, அவளை முறைத்து பார்த்த விஜயா “ஏய் என்ன டி சொல்ற? அந்த பையனுக்கும், பொண்ணுக்கும் இன்னும் கல்யாணம் ஆகல இல்ல.. அப்புறம் அவங்க ரெண்டு பேரும் எப்படி ஒரே ரூம்ல தூங்குவாங்க?” என்று கேட்டாள்.

“ச்ச்.. அவங்க லைஃப் பத்தி உங்களுக்கு என்ன மா தெரியும்? நான் நிறைய தடவை பாத்திருக்கேன்.. அவங்க ரெண்டு பேரும் ஒரே ரூம்ல தான் தூங்குவாங்க. அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். டேய் ஆதி.. அம்மா ரூமை அவங்களுக்கு ரெடி பண்ணி கொடுத்துறு. நாளைக்கு எல்லா ரூம்லயும் ஏசி வாங்கி போட்டுடலாம்.” என்று தேன்மொழி சொல்ல, “ஏசி வாங்குறதுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஆனா எல்லா ரூமுக்கும் போடணும்னா, லட்சக்கணக்கில ஆகுமே.. காசுக்கு என்ன பண்ணுவ நீ?” என்று அவளிடம் கேட்டான் உதயா.

“ம்ம்.. அவளோட பணக்கார புருஷன் கோடி கோடியா இவ கிட்ட கொடுத்து வச்சிருக்காரு இல்ல.. அதை எடுத்து இஷ்டத்துக்கு செலவு பண்ணுவா..!!” என்று விஜயா வழக்கம் போல நக்கலாக பேச, “உண்மை தான் மா.. நான் கேட்டா அவர் எத்தனை கோடி வேணாலும் யோசிக்காம எடுத்து குடுப்பாரு தான்.. அதுக்காக இப்படி எல்லாத்துக்கும் அவர் கிட்ட போய் நிக்க முடியாது. நான் காலேஜ் படிக்கும்போதுல இருந்து பார்ட் டைம் ஜாப் போறேன். இத்தனை வருஷமா எனக்கு தேவையானத நான் சம்பாதித்து வைத்திருக்கிறேன். இவங்க எல்லாரும் நம்ம வீட்டுக்கு கெஸ்ட்டா வந்து இருக்காங்க.. சோ இவங்கள நல்லா பாத்துக்க வேண்டியது நம்மளோட கடமை. எவ்ளோ செலவு ஆனாலும் நானே பண்ணிக்கிறேன். இந்த வீட்டையே டோட்டலா நான் எப்படி மாத்த போறேன்னு நாளைக்கு பாருங்க.” என்ற தேன்மொழி ஆருத்ராவுடன் தங்களது ரூமிற்கு சென்றாள்.

அங்கே நடக்கும் அனைத்தையும் தனக்கு அப்டேட் கொடுக்க வேண்டும் என்று அர்ஜுன் பிரிட்டோவிடம் சொல்லி இருந்ததால், மற்றவர்கள் தமிழில் பேசிக் கொண்டு இருக்கும்போது தனக்கு அது புரியாது என்பதற்காக டிரான்ஸ்லேட்டரை ஆன் செய்துவிட்டு அனைத்தையும் மொழிபெயர்த்து தெரிந்து கொண்ட பிரிட்டோ அப்படியே அனைத்தையும் அர்ஜுனுக்கு மெசேஜ் அனுப்பி தெரிவித்தான். “பரவால்ல எவ்ளோ கோவம் இருந்தாலும் என் பொண்டாட்டிக்கு என் மேல அதை விட அதிகமா பாசம் இருக்கு. அதான் யார் கிட்டயும் என்னை விட்டுக் கொடுக்க மாட்டேங்குறா! ஹனி பேபினா என் ஹனி பேபி தான்..!!” என்று நினைத்து பெருமைப்பட்டுக்கொண்ட அர்ஜூன் “இந்த அர்ஜுனோட வைஃப் பணத்த பத்தி எல்லாம் யோசிச்சு எதுக்கு கவலைப்படணும்? இப்போதைக்கு நீங்க ரெகுலர் எக்ஸ்பென்சஸ் மெயின்டைன் பண்றதுக்கு ஒரு கிரெடிட் கார்டு வச்சிருப்பீங்க இல்ல அதை கிளாரா கிட்ட கொடுத்து தேன்மொழி கிட்ட கொடுக்க சொல்லு. நாளைக்கு என் வைஃப்க்கு சர்ப்ரைஸா நான் சேமியம் இன்டர்நேஷனல் டெபிட் கார்ட் கிரெடிட் கார்ட் எல்லாமே அரேஞ்ச் பண்ணி கொரியர் போட்டு விடுறேன்.” என்று பிரிட்டோவிற்கு மெசேஜ் அனுப்பினான்.

உடனே அவனும் கிளாராவிடம் விஷயத்தை சொல்லி கார்டை கொடுத்து தேன்மொழியின் ரூமிற்கு அனுப்பினான். அவளும் உள்ளே சென்று அதை தேன்மொழியிடம் நீட்டி விஷயத்தை சொல்ல, அந்த கார்டை கிளாராவின் கையில் இருந்து கூட வாங்காமல் “இப்போ எதுக்கு திடீர்னு நீங்க இத கொண்டு வந்து என்கிட்ட கொடுக்குறீங்க? நாங்க தமிழ்ல பேசுறத கூட எப்படியோ டிராக் பண்ணி புரிஞ்சுகிட்டு இங்க இருந்து உங்க பாஸ்க்கு ஸ்பை வேலை பார்த்து போட்டு குடுக்கிறீங்களா?” என்று கேட்டுவிட்டு குறுகுறுவென்று அவளையே பார்த்தாள் தேன்மொழி.

“கோபப்படாதீங்க மேடம்.. நான் எப்பயும் சொல்றது தான்.. இது தான் எங்க டியூட்டி.. நாங்க எங்க சீஃப் சொல்றத செஞ்சு தான் ஆகணும். அவருக்கு உங்க மேலை நிறைய லவ் இருக்கு. நீங்க அத அண்டர்ஸ்டாண்ட் பண்ண ட்ரை பண்ணீங்கன்னா நல்லா இருக்கும். எப்படி இருந்தாலும், உங்க கிட்ட சேவிங்ஸ் இருந்தாலும் கூட எத்தனை நாளைக்கு உங்களால எல்லா செலவையும் மேனேஜ் பண்ண முடிய சொல்லுங்க? நீங்க ஆருத்ராவை இங்கே கம்பர்டபிலா இருக்க வைக்கணும்னு நினைக்கிறீங்க.‌ பட் அதுக்காக நிறைய சேஞ்சஸ் பண்ண வேண்டியது இருக்கு மேம். அதையும் பண்றதுக்கு சீஃப் எங்களுக்கு ஆர்டர் கொடுத்திருக்காரு.” என்று வழக்கம்போல கிளாரா சொல்ல, ஒரு நொடி அமைதியாக யோசித்துப் பார்த்த தேன்மொழி “கிளாரா சொல்றதும் பிரட்டி தானே.. இங்க அடிக்கடி பாடிகார்ட்ஸ் வேற
வந்துட்டு போறாங்க.. எல்லாருக்கும் வேண்டிய எல்லாத்தையும் கரெக்டா செய்யணும்னா அதுக்கு முதல்ல கணக்கு பார்க்காமல் பணத்தை செலவு பண்ணி ஆகணும். அப்படி செலவு பண்ற அளவுக்கு நான் என்ன கோடீஸ்வரியா? பட் அவர் கிட்ட சண்டை போட்டுட்டு நான் இங்க கிளம்பி வந்திருக்கும்போது, அவர் காச வாங்கி செலவு பண்ணா நல்லா இருக்காது. நம்மளால முடியல வரைக்கும் பார்ப்போம். அதுக்கப்புறம் முடியலன்னா அத்தை கிட்ட சொல்லி என்ன பண்றதுன்னு கேட்கலாம்.

அவங்களும் எனக்கு அம்மா மாதிரி தான். Infact நான் சொல்றதை அம்மாவை விட அவங்க தான் நல்லா புரிஞ்சுபாங்க. சோ அப்படியே எனக்கு தேவைப்பட்டாலும் இவர் கிட்ட கேக்குறதுக்கு நான் டைரக்டா அத்தைக் கிட்டயே கேட்கலாம்.” என்று நினைத்தாள்.

அப்போது அவளுக்கு அவள் இந்தியா கிளம்பும்போது பிரசாத் ஆருத்ரா மற்றும் அவளுடைய செலவுகளுக்காக பயன்படுத்திக்கொள்ள சொல்லி அவளிடம் கொடுத்த இன்டர்நேஷனல் டெபிட் கார்டு பற்றிய ஞாபகம் வந்தது. உடனே “இல்ல கிளாரா பரவால்ல.. நான் கிளம்பும்போது மாமா என் கிட்ட செலவுக்கு யூஸ் பண்ண சொல்லி ஒரு கார்டு கொடுத்தாரு. நான் அதவே இன்னும் யூஸ் பண்ணல. எனக்கு தேவைப்பட்டா அத்தை கிட்ட சொல்லிட்டு நான் அதை யூஸ் பண்ணிக்கிறேன். இத நீங்களே வச்சுக்கோங்க எனக்கு வேண்டாம்.” என்றாள் தேன்மொழி.

உடனே அந்த கார்டுடன் மீண்டும் தங்களது ரூமிற்கு சென்ற கிளாரா பிரிட்டோவிடம் விஷயத்தை சொல்ல, அதை அவன் அப்படியே அர்ஜுனுக்கு அப்டேட் ஆக அனுப்பினான். வீட்டிற்கு வந்தும் இரவு நேரத்தில் தூங்காமல் அங்கே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கொட்ட கொட்ட விழித்திருந்த அர்ஜூன் பிரிட்டோ அனுப்பிய மெசேஜை பார்த்துவிட்டு, “எனக்கு எதிரி வேற எங்கேயும் இல்ல.. என் சொந்த வீட்டுக்குள்ளயே தான் இருக்காரு. இந்த டாடிக்கு என் மேல இத்தனை வருஷமா இருந்த எல்லா கோபத்துக்கும் மொத்தமா இப்ப சான்ஸ் கிடைச்சுருச்சுன்னு நல்லா என்னை பழி வாங்குறாரு. ‌ நானே ஏதாவது ஒரு ஆபர்சுனிட்டி கிரியேட் பண்ணி என் பொண்டாட்டி கிட்ட அகைன் பேச ட்ரை பண்ணா, நான் போற பக்கம் எல்லாம் இவர் குறுக்க வந்து கட்டைய போடுறாரு.. இந்த டாடிக்கு ஒரு ஐடியா பண்ணனும் முதல்ல..!! அவரை ஏதாவது பண்ணி டென்ஷனாக்கி பிஸியா சுத்த விடணும். அப்ப;தான் என்ன பத்தி யோசிக்க மாட்டாரு.” என்று நினைத்து தன் அப்பாவை எப்படி சமாளிப்பது என்று யோசிக்க தொடங்கினான்.

- மீண்டும் வருவான் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-70
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.