அர்ஜுன் அப்படியே தன் வாயை பிளந்து கொண்டு அவனுடைய மொபைல் ஸ்க்ரீனை வெறித்து பார்த்துக் கொண்டு இருக்க, தன் புடவையை கழட்டி மொபைல் ஃபோனின் மீது தூக்கிப்போட்டு இருந்த தேன்மொழி தனது ஆடைகளை மாற்ற தொடங்கி இருந்தாள். அவளது சிறிய உருவம் கேமராவிற்கு மேலே கிடந்த புடவையையும் தாண்டி நிழல் போல லேசாக தெரிய, “ஐயோ மிஸ் ஆயிடுச்சே.. கொஞ்சமாவது தெரிஞ்சா நல்லா இருக்குமே!” என்று நினைத்து ஏக்கத்துடன் அதயே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆடயை மாற்றி முடித்த பிறகு பெட்டில் வந்து அமர்ந்த தேன்மொழி மொபைல் ஃபோனின் மீது கிடந்த புடவையை எடுத்து விட்டு அர்ஜுனின் சிவந்து போன முகத்தை பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டு ” நான் கோவிச்சுக்கிட்டு இந்தியா போன போகட்டும்னு என்னை விட்டில.. உனக்கு இதெல்லாம் தேவை தாண்டா. நான் இல்லாம இன்னும் நீ எத்தனை நாள் சமாளிக்கிறேன்னு நான் பார்க்கிறேன்.” என்று நினைத்தவள், சீப்பை எடுத்து தனது நீண்ட கூந்தலை சீவ தொடங்கினாள்.
அவள் வேண்டுமென்றே தன்னிடம் விளையாடிக் கொண்டு இருப்பது அவனுக்கு இப்போது தான் புரிந்தது. அதனால் கோபத்தில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட அர்ஜுன் “ஆனாலும் அநியாயம் பன்ற டி குட்டச்சி நீ.. என்னைக்காவது ஒரு நாள் இது எல்லாம் சரியாகி நீயும் நானும் ஒண்ணா இருந்து தானே ஆகணும்.. அன்னைக்கு எல்லாத்துக்கும் சேர்த்து வைத்து நான் உன்னை எப்படி பழி வாங்குகிறேன் பாரு! எதுக்கும் அசராத இந்த அர்ஜுன் உன்ன என்னென்ன பண்ண போறேன் பாரு.” என்று முணுமுணுத்து விட்டு தன் முஸ்டிகளை இறுக்கினான்.
அப்போது தேன்மொழியின் மொபைல் ஸ்க்ரீனில் சுவரில் மாட்டப்பட்டு இருந்த அவளுடைய சிறு வயது புகைப்படத்தை பார்த்தான். அதில் சிவப்பு நிறத்தில் பட்டு பாவாடை சட்டை போட்டிருந்த தேன்மொழிக்கு கிட்டத்தட்ட மூன்று வயது இருக்கும். அவளை அவளுடைய அப்பா தூக்கி தனது தோள்களில் அமர வைத்திருக்க, விஜயா தன் கணவனின் கையை இறுக்கிப்பிடித்தபடி அந்த ஃபோட்டோவில் நின்று கொண்டிருந்தாள்.
ஸ்கிரீனை ஜூம் செய்து அந்த ஃபோட்டோவை பார்த்த அர்ஜுன் “என் மாமியார் வீட்டுக்கு நானும் வந்திருந்தா இந்த ஃபோட்டோவை எல்லாம் நேர்ல பார்த்திருப்பேன். ஆன இந்த கோவக்காரி தான் சண்டை போட்டுட்டு என்கூட பேசவே கூடாதுன்னு இருக்காளே.. இவளை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. சியா கூட இந்த அளவுக்கு என்ன டார்ச்சர் பண்ணது இல்லை. எப்படியோ போன்னு இவள விட்டுட்டு இருக்கவும் முடியல.. இவ சொல்றது எல்லாத்தையும் கேட்டு அடங்கி போகவும் முடியல. என்ன தான் பண்றதோ தெரியல!” என்று நினைத்தவன்,
அந்த ஃபோட்டோவில் இருந்த தேன்மொழியை ஜூம் செய்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொண்டான். அந்த பழைய மங்கிய போட்டோவிலும் கூட அவனுக்கு அவனுடைய தேன்மொழி அழகாகத் தெரிந்தாள். ஒருவேளை தனக்கும் இவளுக்கும் பெண் குழந்தை பிறந்தால், அவள் இப்படி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று யோசித்துக் கொண்டு இருந்த அர்ஜூனுக்கு “ஆருத்ராவோட facial features நல்லாவே தேன்மொழி கூட மேட்ச் ஆகுது. அவ ஆருத்ராவோட உண்மையான அம்மா இல்லைன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க.” என்று நினைத்தான்.
அவன் குறுகுறுவென்று ஃபோனையே பார்த்துக் கொண்டு இருந்ததால் “நான் தல தானே சீவீட்டு இருக்கேன்.. என்ன எதுக்கு இவன் இப்படி குறுகுறுன்னு பார்க்கிறான்? ஒருவேளை நான் இவன் முன்னாடியே டிரஸ் சேஞ்ச் பண்ணதுனால பையன் வந்துச்சே ஃபீலிங்ஸ்ன்னு காஜியா இப்படி பாக்குறானா? ஆனா அப்படியே ஒன்னும் தெரியலையே!” என்று யோசித்து குழம்பிய தேன்மொழி மீண்டும் அவன் முகத்தை பார்த்தாள்.
உண்மையில் அவன் எங்கேயோ மிஷனுக்கு சென்று அடிபட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகு திரும்பி வரும்போது இருந்ததை விட, இப்போது மிகவும் சோர்வாகவும், கொஞ்சம் எடை குறைந்ததைப் போலவும், சரியாக சாப்பிடாமல் தூங்காமல் உடல்நிலை சரி இல்லாதவனை போலவும் காணப்படுவதாக அவளுக்கு தோன்றியது. அதனால் உடனே அவளுக்கு இவை எல்லாம் தன்னால்தானோ என்று கஷ்டமாக இருக்க, அவளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வருவதை போல இருந்தது.
உடனே தன் உதட்டை கடித்து “இல்ல தேனு இவர் முன்னாடி நீ அழக் கூடாது. நீ இப்ப அழுது அவர் இல்லாம நீ ரொம்ப சோகமா இருக்கேன்னு அவருக்கு காமிச்சு கொடுத்துட்டேனா, எப்படியும் நீயே திரும்பி வந்துருவேன்னு அவர் திருந்தவே மாட்டாரு. அவரை கஷ்டபடுத்தனும்னா நீ இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க?
அவர மாதிரியே உனக்கும் தானே அவரை பிரிஞ்சு இங்க இருக்கிறது கஷ்டமா இருக்கு.. அதை அவரும் புரிஞ்சுக்கணும் இல்ல.. என்னை சமாதானப்படுத்த கூட ட்ரை பண்ணாம கிளம்பி இவர் அன்னைக்கு ஸ்டடி ரூமுக்குள்ள போய் கதவை சாத்தினவர் தான். இன்னைக்கு தான் இவர் முகத்தையே நான் பார்க்கிறேன். அதுவும் சித்தார்த் வீடியோ கால் பண்ணதுனால.. இல்லனா இதுக்கும் வாய்ப்பில்லாம போயிருக்கும். நீ மட்டும் தான் அவரை பார்க்க கூட முடியாமல் தவிச்சிட்டு இருந்து இருக்கணும். இவருக்கு அவ்வளவு அக்கறை இருந்துச்சுன்னா, இப்ப கூட எதுக்கு வாய்ல எதோ வச்சிருக்க மாதிரி எல்லாத்தையும் பாத்துட்டு சைலன்டாவே இருக்காராம்? சரியான கல்நெஞ்சக்காரன். சைக்கோ பிடிச்சவன்.. மெண்டல் மண்டையன்.” என்று முணுமுணுத்துவிட்டு தன் முகத்தை திருப்பி கொண்டாள்.
அவளையே பார்த்துக் கொண்டு இருந்த அர்ஜூன் அவளது உதட்டின் அசைவுகளை வைத்து இறுதியாக அவள் தன்னை திட்டியதை கண்டு பிடித்து தனக்கும் அவளுக்கும் நடுவில் உள்ள சண்டையை மறந்துவிட்டு சட்டென “ஓய் இப்ப எதுக்கு டி என்னை இப்படி திட்டுற? நானா உன்னை கிளம்பி இந்தியா போக சொன்னேன்? நீதானே பெரிய இவ மாதிரி உங்க மாமனார் கிட்ட கேட்டு பர்மிஷன் வாங்கிட்டு கிளம்பி போயிருக்க..!! எனக்கு இருக்கிற கோவத்துக்கு நான் தான் உங்க எல்லாரையும் வண்ட வண்டையா திட்டனும்.” என்று ஒரு வேகத்தில் சொல்லி விட்டான்.
அப்போது திடீரென்று அவன் மனசாட்சி “டேய் டேய் என்ன டா பண்ற? நீதான் அவ மேல கோவத்துல இருக்கியே! என்ன ஆனாலும் அவ கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டு இருந்த.. அப்புறம் போய் எதுக்கு டா நீயே முதல்ல பேசுற? இதுக்கு தான் வீம்புக்கு இவ்வளவு நேரம் சும்மா இருந்தியா?” என்று கேட்க, உடனே பசை போட்டு ஒட்டியதைப் போல எதுவும் பேசக் கூடாது என நினைத்து தன் இதழ்களை இறுக்கமாக மூடி ஒட்டிக் கொண்டான் அர்ஜுன்.
அதுவரை அவள் சிரமப்பட்டு கட்டுப் படுத்தி வைத்திருந்த கண்ணீர் அவனது குரலை கேட்டவுடன் மடை திறந்த வெள்ளம் போல மடமடவென்று அறிவிப்போல கொட்டத் தொடங்கி விட, வந்த கோபத்தில் சிவந்த கண்களுடன் அவனைப் பார்த்த தேன்மொழி “போதும் வாய மூடுங்க அர்ஜுன். இதுக்கு மேல நீ ஏதாவது பேசினா இருக்கிற கோவத்துல நானே ஏதாவது சொல்லிடுவேன். எங்க அம்மாவும், தம்பியும் இந்தியாவுல இருக்கும்போது கூட, அவங்கள நான் போய் பாக்கணும் இந்தியாவுக்கு போகணும்னு நான் உன் கிட்ட கேட்டதே இல்லை. எனக்கே தெரியாம ஒரு டைம்க்கு மேல அங்க இருக்குறதுக்கு நான் செட்டாயிட்டேன்.
இதுதான் நம்ம லைஃப்னு ஏத்துக்கிட்டு நான் வாழ்ந்துட்டு இருக்கும்போது, அந்த லைஃப் ஒரு நாள் இல்லாம போயிடுச்சுன்னா என்ன பண்றதுன்னு ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு பயந்து வாழ்ந்துகிட்டே இருக்கணும்னா எப்படி என்னால முடியும்? உனக்காக உன்னால மட்டும் தான் நான் இப்ப இந்தியாவுக்கே வந்தேன். உனக்கு நான் இப்படி பண்றதுனால நான் எப்படி தெரியுறேன்? கோவக்காரியாகவா? இல்ல சும்மா சண்டை போடுறவளவா? இல்ல திமிரு புடிச்ச பிடிவாதக்காரியாவா? எனக்கு ஒன்னும் என் புருஷன் கிட்ட நான் தான் பெரிய இவனு ப்ரூவ் பண்ணனும்னு ஈகோ கிடையாது.
எனக்கு நான் என் புருஷன் குழந்தைங்கன்னு நிம்மதியா வாழனும் அவ்வளவு தான். எனக்கு வேற எதுவும் வேண்டாம். அப்ப சொன்னதைத் தான் நான் இப்பவும் சொல்றேன்.. உன்னை சுத்தி இருக்கிற எல்லா பிரச்சனையையும் முடிச்சுட்டு என் கிட்ட வா. உன் கைய புடிச்சுகிட்டு நீ எங்க கூப்பிட்டாலும் கண்ண மூடிட்டு நான் உன் பின்னாடி வரேன். பட் அதுவரைக்கும் என்ன ஆனாலும் சரி, நான் உன் கிட்ட பேசவே மாட்டேன். திரும்பி ரஷ்யா வரவும் மாட்டேன். நான் இப்படி சொல்றதுனால நீ என்ன பத்தி என்ன நினைச்சாலும் எனக்கு கவலை இல்லை அர்ஜுன்.” என்று சொல்லிவிட்டு அழுதாள்.
துக்கம் அவள் தொண்டையை அடைத்தது. பேச வார்த்தைகள் வராமல் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு கண்ணீரை துடைத்த மொழி மூச்சு வாங்க “I love you Arjun.. And I miss you so much. But I don't like to talk to you now. Bye.” என்று தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டு அவனது அழைப்பை துண்டித்து விட்டாள். இதற்கு மேலும் இந்த தொலைதூர உரையாடல் நகர்த்த அவளால் நடத்த முடியவில்லை.
திருமணம் ஆன பிறகும் இப்படியெல்லாம் ஃபோனில் பேசி நாட்களைக் கடத்த வேண்டும் என்று அவளுக்கு என்ன தலையெழுத்தா? அவள் தன் கணவனுடன் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ நினைப்பது ஒன்றும் தவறில்லையே! அதனால் அர்ஜுன் விஷயத்தில் கொஞ்சம் கூட இறங்கி போகவே கூடாது என்று தெளிவாக இருந்த தேன்மொழி சில நிமிடங்கள் அழுது கரைந்து விட்டு தனது கண்ணீரை துடைத்துவிட்டு எழுந்து வெளியில் சென்றாள்.
அங்கே விஜயா, ஆதவன், ஆருத்ரா மூவரும் பிரிட்டோ மற்றும் கிளாராவுடன் சேர்ந்து ராஜா, ராணி, திருடன், போலீஸ் யார் என கண்டுபிடிக்கும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு ஓரமாக எதையோ பறிகொடுத்தவனை போல அமர்ந்திருந்த உதயா அவனது மொபைல் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தான். தேன்மொழி இப்போது சோகமாக இருந்ததால் யாரிடமாவது பேசினால் நன்றாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றியது.
அதனால் உதயாவின் அருகில் சென்று “நீதான் என் கிட்ட முன்னாடி இருந்தே பேசணும்னு சொல்லிட்டு இருந்தியே.. நான் இப்ப தான் ஃப்ரீயா இருக்கேன். வா நம்ம மாடிக்கு போய் பேசலாம். அவங்க மூணு பேரும் விளையாடட்டும்.” என்று சொல்ல, அதற்காகவே காத்திருந்தவனை போல உடனே எழுந்து அவள் பின்னே சென்றான் உதயா. மொட்டை மாடிக்கு சென்ற அவர்கள் இருவரும் பேச தொடங்கினார்கள்.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-68
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.