மஞ்சம்-66

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
தேன்மொழி உதயா உடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அவளுக்கு சித்தார்த்திடம் இருந்து வீடியோ கால் வந்தது. தெரியாத நம்பரில் இருந்து தனக்கு யார் கால் செய்து இருப்பார்கள்? என்று யோசித்தவாறு தேன்மொழி அந்த அழைப்பை ஏற்க, ஸ்கிரீனில் அவள் முகத்தை பார்த்த உடனேயே உற்சாகமான குரலில் சித்தார்த் அவளை “மம்மி!” என்று அழைத்தான்.

ஏற்கனவே இங்கே ஒரு சிறிய பெண் தேன்மொழியை தனது அம்மா என்று சொல்லி எப்போது பார்த்தாலும் அவளுடனே சுற்றிக் கொண்டு இருக்கிறாள். இப்போது பார்ப்பதற்கு எட்டாம் வகுப்பு படிக்கும் அளவிற்கு பெரிய பையனாக இருக்கும் ஒருவன் தனது தேன்மொழியை அம்மா என்று அழைப்பதை உதயாவால் கொஞ்சம் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை.


அவன் தேன்மொழிக்கு அருகில் அமர்ந்து இருந்ததால் அவளது மொபைல் ஸ்க்ரீனை அவனால் தெளிவாக பார்க்க முடிந்தது. சித்தார்த் முதல் முறையாக தனக்கு கால் செய்து பேசுகிறான் என்பதால் ஆர்வமுடன் ஸ்கிரீனில் தெரிந்த அவன் முகத்தை தேன்மொழி “சித்தார்த் செல்லம் நீயா? மம்மி கிட்ட பேசணும்னு இப்ப தான் உனக்கு தோணுச்சா?” என்று உரிமையாக அவனிடம் கேட்க, அதற்குள் சித்தார்த் கான்ஃபரன்ஸ் காலில் அர்ஜுனை இணைத்ததால் சட்டென்று ஸ்கிரீனில் அவளுக்கு அர்ஜுனனின் முகம் தெரிந்தது.

அதனால் ஷாக் ஆன தேன்மொழி “இவரும் நம்ம கிட்ட பேசுறதுக்கு தான் கால் பண்ணி இருக்காரா?” என்று யோசித்தவாறு அதற்கு மேல் எதுவும் பேசாமல் அர்ஜுனின் முகத்தையே குறுகுறு என்று பார்த்துக் கொண்டிருந்தாள். “போங்க மம்மி நான் உங்க மேல கோவமா இருக்கேன். நீங்க என்ன விட்டுட்டு ருத்ராவை மட்டும் எதுக்கு இந்தியா கூட்டிட்டு போனீங்க? நான் போகலாமா வேண்டாமா டிசைட் பண்ணி சொல்றதுக்குள்ள நீங்க அவ கூட கிளம்பியே போயிட்டீங்க! நான் உங்கள எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா? நீங்க என்ன மிஸ் பண்ணவே இல்ல தானே! ஆருத்ராவும், நீங்களும் அந்த ஜாலியா இருக்கீங்க தானே!” என்று சித்தார்த் தன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு சொல்ல, “அச்சச்சோ அப்படி எல்லாம் இல்ல.. உன்னை விட்டுட்டு வரணும்னு மம்மி எப்படி நினைப்பேன் சொல்லு? நான் இந்தியாவுக்கு போறேன்னு சொல்லும்போது நீ என் கிட்ட எதுவுமே சொல்லல. அதான் நான் மட்டும் ஆருத்ராவை கூட்டிக்கிட்டு கிளம்பி வந்துட்டேன். நீ வரேன்னு சொல்லி இருந்தா கண்டிப்பா மம்மி உன்னையும் கூட்டிட்டு வந்திருப்பேன் சித்து.” என்றாள் தேன்மொழி.

தொடர்ந்து தாயும், மகனும் ஒரு பக்கம் அவர்கள் பாட்டிற்கு வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்க, “நானும் தானே கால்ல இருக்கேன் என்னை கண்டுக்காம இவ என்ன அவன் கிட்ட மட்டும் பேசிட்டு இருக்கா? அவ்வளவு திமிரா இவளுக்கு? என் மேல இருந்த பயம் எல்லாம் போயிடுச்சு அதான் இவ ஓவரா பண்றா.. எல்லாத்துக்கும் காரணம் மிஸ்டர் பிரதாப் தான்‌. இன்னிக்கி வீட்டுக்கு போய் அவரை நல்லா கவனிக்கணும். அப்ப தான் இவ என் வழிக்கு வருவா.” என்று நினைத்த அர்ஜுன் தேன்மொழியை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

தேன் மொழியின் ஃபோனை பார்த்தபடி அவள் அருகில் அமர்ந்திருந்த உதயா ஸ்கிரீனில் திடீரென்று தெரிந்த அர்ஜுனை பார்த்து ஷாக்காகி “யார் இவரு? பாக்குறதுக்கு நல்லா தான் இருக்காரு. ஆனா ரொம்ப டயர்டா இருக்குற மாதிரி இருக்காரு.. கோட் சூட் எல்லாம் போட்டுட்டு ஏதோ ஆபீஸ்ல உட்கார்ந்து வொர்க் பண்ற மாதிரி தெரியுது. இந்த பையன் தேன் மொழியை மம்மின்னு கூப்பிடுறான். அப்ப இவரு ஒருவேளை அந்த பையனோட அப்பாவ இருப்பாரா?” என்று யோசித்தவாறு அர்ஜுனனின் முகத்தையே உற்றுப் பார்த்தான்‌.


அவன் நினைத்தது உண்மையாக இருந்தால் இவ்வளவு பெரிய பையனுக்கு அப்பாவாக தேன்மொழியின் கணவன் இருக்கிறான் என்றால், கண்டிப்பாக அவளை விட அவனுக்கு வயது அதிகமாக இருக்கும். ஆனால் அவனைப் பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லையே! ஏதோ ஹாலிவுட் ஹீரோ போல அல்லவா அழகாக இருக்கிறான்? முக்கியமாக தன்னை‌ விட மிகவும் அழகாக இருக்கிறான் என்று நினைக்கும் போது உதயாவிற்கு வயிறு எரிந்தது.

“இது எல்லாம் எப்படி நடந்துச்சு? கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணவன எப்படி இவ ஏத்துக்கிட்டான்னு புரியாம இவ்ளோ நேரமா நான் கன்பியூசன்ல இருந்தேன். என்ன தான் அவன் பணக்காரனா இருந்தாலும் கூட, பாக்குறதுக்கு இவ்ளோ அழகா இருந்தா எந்த பொண்ணுக்கு தான் பிடிக்காது? இவன் அழகிலயே அவ மயங்கிட்டா போல இருக்கு!” என்று நினைத்த உதயா அர்ஜுனை பார்த்து முறைத்துக் கொண்டிருக்க, அவன் மைண்டில் திடீரென்று “அது சரி.. இவர் தான் இவளோட ஹஸ்பண்டா இருந்தா ஏன் இவர் கிட்ட பேச மாட்டேங்குறா? அப்போ இவங்களுக்குள்ள ஏதாவது பிராப்ளமா? இல்ல இவர் அவளோட ஹஸ்பண்ட் இல்லையா? ச்சே.. என்ன இது ஒண்ணுமே புரிய மாட்டேங்குது!” என்று ஏதேதோ யோசித்து தனக்குள் குழம்பிக் கொண்டிருந்தான்.

அதுவரை தேன்மொழியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் திடீரென்று அவள் அருகில் அமர்ந்திருந்த உதயாவை கவனித்தான். அவனைப் பார்த்தாலே கண்டிப்பாக அவனுக்கும் தேன்மொழிக்கும் ஒரே வயது தான் இருக்கும் என்று அவனால் நிச்சயமாக சொல்ல முடிந்தது. அதனால் கொஞ்சம் பொசசிவ் ஆகி உதயாவை எரித்து விடும் பார்வை பார்த்த அர்ஜுன் தேன்மொழிக்கும் தனக்கும் நடுவில் சண்டை இருக்கிறது, இப்போது தான் அவளிடம் பேசுவது இல்லை என்பதையெல்லாம் மறந்துவிட்டு “அந்த பையன் யாரு?” என்று தன் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு தனது கனீர் குரலில் கேட்டான்.

“ஓஹோ.. இப்ப என் கூட உதயா இருக்கிறது தான் உனக்கு பிரச்சனையா இருக்கு. மத்தபடி இவ்ளோ நேரமா லைன்ல இருந்துட்டு என் கூட பேசணும்னு உனக்கு தோணவே இல்லல்ல.. கல்நெஞ்சகாரா.. இன்னைக்கு உன்னை எப்படி எல்லாம் வெறுப்பேத்துறேன் பாரு.” என்று நினைத்த தேன்மொழி “இவன் என் ஃபிரண்டு உதயா. நாங்க ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல தான் படிச்சோம். எனக்கு இருக்கிற ஒரே ஒரு பெஸ்ட் ஃபிரண்ட் இவ மட்டும் தான்.” என்று தனக்கும் எதுவும் தெரியாது என்பதைப் போல தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு அர்ஜுனை பார்த்து சிரித்த முகமாக சொல்ல தேன்மொழி உரிமையாக உதயாவின் தோள்களில் கை போட்டாள்.

அதைப் பார்க்க பார்க்க அர்ஜுனின் கோபம் அதன் எல்லையை கடக்க அவன் முகம் தக்காளி பழத்தை போல சிவக்க தொடங்கி இருந்தது. அதைக் கண்டு தேன்மொழி தனக்குள் குஷியாகி சிரித்துக் கொண்டிருக்க, உதயாவை பார்த்து நட்புடன் சிரித்த சித்தார்த் “ஹாய் அங்கிள்! I am Siddharth. Nice to meet you!” என்றான். உடனே பதிலுக்கு தானும் அவனை பார்த்து புன்னகைத்த உதயா “ஹாய் சித்தார்த்.. I am Udaya.. nice to meet you too!” என்று வேண்டா வெறுப்பாக சொன்னான்.

இன்னும் தேன்மொழிக்கு திருமணமானதையே அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதில் இவன் எல்லாம் அவன் கண் முன்னேயே தேன்மொழியை மம்மி மம்மி என்று அழைத்து பேசுவதை கேட்க அவனுக்கு காதல் ஈயத்தை காய்சி ஊத்துவதை போல இருந்தது.

அர்ஜுன் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல தேன்மொழி அதற்கு மேல் அவனை கண்டுக் கொள்ளாமல் தொடர்ந்து சித்தார்த்திடம் மட்டும் பேசிக் கொண்டிருக்க, அவளை ஆத்திரம் பொங்க முறைத்து பார்த்த அர்ஜுன் “என் குட்டச்சி.. இந்தியால இருக்கிற தைரியத்துல என்னால உன்னை எதுவும் பண்ண முடியாதுன்னு வேணும்னே இப்படி எல்லாம் பண்றியா? உனக்கு இருக்கிற ஒரே ஒரு பெஸ்ட் ஃபிரண்டு இவன் தானா? ஏன் பொண்ணுங்கள எல்லாம் ஃபிரண்டா வெச்சுக்க மாட்டியா நீ? இவன் ஆளும் மண்டையும்..

இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு இவன் உனக்கு ஃபிரண்டா? அது சரி.. என் கிட்ட மட்டும் இவன் உன் ஃபிரண்டுன்னு சொல்ல தெரிஞ்சதுல்லை.. அப்ப அவன் கிட்டயும் நான் உன் ஹஸ்பண்ட்ன்னு சொல்லி இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்கணும்ல! ஏன் டி பண்ணல? உனக்கு மேரேஜ் ஆனத அவன் கிட்ட இருந்து மறைக்க பார்க்கிறாயா? எதுவுமே நடக்காத மாதிரி அப்படியே கோச்சிக்கிட்டு இந்தியா போய் அங்கே செட்டில் ஆகிடலாம் உன்னை பாக்குறியா? தான் இருக்கிற வரைக்கும் அதெல்லாம் எப்பவும் நடக்காது.” என நினைத்து கோபத்தில் தன் கைகளை இறுக்கமாக மூடி திறந்தான்.

அப்போது அவனுக்கு திடீரென்று இருமல் வர, லேசாக இரும்பிய அர்ஜுனுக்கு அவனுக்கு தொடர்ந்து விக்கல் வந்து கொண்டே இருக்கும்போது அவனிடம் வேலை பார்க்கும் சர்வெண்ட் அவனை மிகவும் பிடித்த யாரோ ஒருவர் தொடர்ந்து அவனை நினைத்து கொண்டிருப்பதாக சொன்னது இப்போது அவர்களுக்கு ஞாபகம் வந்தது. அதனால் வந்த இருமலை அப்படியே பிடித்துக் கொண்டு வலுக்கட்டாயமாக அதை விக்கலாக மாற்றி வேண்டுமென்றே அவர்களது கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காக தனக்கு விக்கல் எடுப்பதைப் போல நடிக்க தொடங்கினான்.

அவனது மட்டமான நடிப்பை பார்த்த தேன்மொழிக்கு சிரிப்பு வந்துதே தவிர இதற்காக எல்லாம் தன் கோபத்தை விடுத்து அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றவில்லை. அதனால் அவள் வேண்டுமென்றே அவனை புறக்கணித்துவிட்டு சித்தார்த்திடம் “நைட் ரொம்ப லேட் ஆயிடுச்சு.. இன்னுமா நீ சாப்பிடாம இருக்க?” என்று கேட்க, “அட போங்க மம்மி.. எனக்கு தனியா போய் டைனிங் டேபிள்ல உக்காந்து சாப்பிடவே பிடிக்கல. டாடியும் இப்ப எல்லாம் வீட்டுக்கு வரவே மாட்டேங்குறாரு. என்ன டாடி எனக்காக மம்மி கிட்ட பேசுறேன்னு சொல்லிட்டு நீங்க சைலண்டாவே இருக்கீங்க..!! மம்மியை மறுபடியும் இங்கே வந்து என்ன கூட்டிட்டு போ சொல்லுங்க. இல்லனா நீங்க என்ன கூட்டிட்டு போங்க.” என்றான் சித்தார்த்.

இப்போது மற்ற மூவரும் அர்ஜுனை போக்கஸ் செய்ய, தனக்கு விக்கல் எடுப்பதை போல நடித்துக் கொண்டிருந்த அர்ஜுன் “போலாம் போலாம் சித்து.. இந்தியாவுக்கு நம்ம நினைச்சா போக முடியாதா என்ன? டாடிக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு. உங்க பாட்டி தான் இந்தியா போறேன் இந்தியா போறேன்னு குதிச்சிட்டு இருக்காங்க.. நீ வேணா அவங்க கூட போ.

இங்கே இருந்து எல்லாரும் இந்தியா போகணும்னு கிளம்பி போயிட்டு அப்புறம் அங்க இருந்துகிட்டு என்னயே நெனச்சு ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க.. இங்கே ஆபீஸ்ல இருக்கும்போது எனக்கு அப்படி இதே மாதிரி தான் விக்கலாம் வந்துட்டு இருக்கு. என் staffs எல்லாரும் உங்க வைஃப் தான் உங்களை நினைச்சுட்டு இருக்காங்க அதான் உங்களுக்கு இவ்வளவு நேரமாகியும் விக்கல் நிக்கவே மாட்டேங்குதுன்னு என்ன கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க!” என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தான்.

அவன் சொன்னதை கேட்டு சிரித்த சித்தார்த் “என்ன மம்மி நீங்க டாடியவே நெனச்சிட்டு இருக்கீங்களா?” என்று கிண்டலாக கேட்க, “சேச்சே.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நான் இங்கே வந்ததுல இருந்து எனக்கு நிறைய work இருந்துச்சு. எனக்கு யாரைப் பத்தியும் யோசிக்க டைமே கிடைக்கல.” என்று வேண்டுமென்றே சொன்னாள் தேன்மொழி.

அதனால் அர்ஜுன் அவளை முறைத்து பார்க்க, அவனைப் பார்த்து விளையாட்டாக புன்னகைத்தாள் தேன்மொழி. இப்படி அவர்கள் மூவரும் குடும்பமாக பேசிக் கொண்டிருக்கும்போது நடுவில் கரடி போல தான் அங்கே தேவை இல்லாத ஒரு ஆளாக இருப்பதாக உணர்ந்த உதயா தேன்மொழியைப் பற்றி யோசிக்கும் போது அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்ததால், “நீ பேசிட்டு வா தேனு.. நான் போய் ஆதி என்ன பண்றான்னு பார்க்கிறேன்.” என்று சொல்லி டிசென்ட்டாக அந்த இடத்தை காலி செய்து சென்று விட்டான்.

-மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-66
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.