உதயவை தங்களுடன் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டாள் தேன்மொழி. அவர்கள் அனைவரும் முதல் வேலையாக சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் வேலை செய்யும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்கள். தேன்மொழியை நேரில் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்த சதீஷ் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு “ஃபோட்டோல இருந்ததை விட இப்ப இவ ரொம்ப அழகா இருக்கா. அதான் எவனோ ஒரு பணக்காரன் இவளை பிடிச்சுப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டான் போல!” என்று நினைத்தவன், “சோ நீங்க உங்களை யாரும் கடத்தலை. நீங்களாவே இங்க இருந்து விருப்பப்பட்டு போனதா சொல்றீங்க அப்படித் தானே!” என்று கேட்டுவிட்டு அவளை குறுகுறுவென்று பார்த்தான்.
“எஸ்.. சார் அதானே இப்ப சொல்லிட்டு இருக்கேன்..!! நானும் என் ஹஸ்பண்ட் மிஸ்டர் அர்ஜுனும் பேஸ்புக்ல லவ் பண்ணோம். எங்க லவ்வுக்கு ஸ்டார்டிங்ல அவங்க வீட்டு சைடு கொஞ்சம் பிரச்சனை இருந்துச்சு. அதனால தான் திடீர்னு நாங்க கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி ஆயிடுச்சு. இப்ப எல்லாம் ஓகே தான். அவங்க என்ன ஏத்துக்கிட்டாங்க. அதனால தான் நான் இந்தியா வந்தேன். என் ஃபேமிலில இருக்கிறவங்களுக்கும் இப்போ எங்க மேரேஜ் எந்த பிரச்சனையும் இல்ல. சோ அவங்க என்னை காணோம்னு குடுத்த கம்ப்ளைன்ட் நான் வாபஸ் வாங்குகிறேன்.” என்று தேன்மொழி சொல்ல,
அவள் இப்படி சுதந்திரமாக இந்தியா வரை வந்திருக்கிறாள் என்றாலே அவளை அந்த குடும்பம் நன்றாகத் தான் வைத்திருக்கிறார்கள் என்று அவனுக்கும் புரிந்தது. இருப்பினும் அவனுக்கு அவள் வாழ்க்கை குறித்து கொஞ்சம் அக்கறை இருந்ததால் வேண்டுமென்றே “நீங்க அப்படி சொல்றீங்க மேடம்.. அதுக்காக போலீஸ் நாங்க உடனே எல்லாத்தையும் நம்ப முடியுமா? உங்க மாமியார் வீட்ல இருந்து உங்களை மிரட்டி இப்படி எல்லாம் சொல்ல சொன்னா எங்களுக்கு எப்படி தெரியும்?
நீங்க உங்க விருப்பத்தோட இந்தியாவை விட்டுப் போனதா சொல்றீங்க. பட் உங்க கூடவே வந்திருக்கிற இந்த ஃபாரின் லேடி எங்க ஸ்கூல்ல இருந்து ரிட்டர்ன் உங்க வீட்டுக்கு போயிட்டு இருக்கும்போது உங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து உங்களை கடத்திட்டு போனத prove பண்றதுக்கான CCTV footage எங்ககிட்ட இருக்குதே! அந்த எவிடன்ஸ் போதுமே.. உங்களை இவங்க கடத்திட்டு போயிருக்காங்கன்னு சொல்றதுக்கு!” என்று அவளிடம் பாயிண்டாக கேள்வி கேட்டான்.
“ஐயோ கிளாரா.. எது பண்ணாலும் கரெக்டா பண்ண மாட்டியா? இப்படி பொய் வகையா மாட்டி இருக்கியே! இன்ஸ்டன்ட்டா நான் எத்தனை பொய் தான் ரெடி பண்ணி சொல்றது?” என்று நினைத்து மானசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்ட தேன்மொழி “உங்க கொஸ்டின் நியாயமானது தான் சார். பட் இதுவுமே எங்களோட பிளான் தான். என் ஹஸ்பண்டுக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆயிடுச்சு. அவரோட வைஃப் இறந்துட்டாங்க. சோ நான் எங்க லவ் மேட்டரை எங்க வீட்டிலேயே சொன்னாலும், ஏத்துக்க மாட்டாங்க. அதனால தான் அவர் கூட சேர்ந்து பிளான் பண்ணி அப்படி ஒரு செட்டப் பண்ணிட்டு நான் இங்க இருந்து தப்பிச்சு ரஷ்யா போயிட்டேன். அங்க எங்களுக்கு லீகலா மேரேஜ் நடந்திருக்கு. உங்களுக்கு மேரேஜ் சர்டிபிகேட் வேணும்னு கேட்டீங்கன்னா கூட, நான் என் ஹஸ்பண்ட் கிட்ட கேட்டு வாங்கி சென்ட் பண்றேன். ஒன்னும் பிராப்ளம் இல்ல.” என்று நிதானமாக சொன்னாள்.
அவள் அப்படி சொன்ன பிறகு அவளிடம் என்ன கேட்பது என்று சதீஷுற்க்கு தெரியவில்லை. அதனால் அவன் தேன்மொழியின் ரெக்வெஸ்ட்டை பரிசீலனை செய்து அவள் காணாமல் போனதாக நிலுவையில் உள்ள கேசை அவளிடம் கையெழுத்து வாங்கிவிட்டு நிரந்தரமாக க்ளோஸ் செய்தான். அது சம்பந்தமான டாகுமெண்ட்களை பெற்றுக் கொண்டு பெருமூச்சு விட்ட தேன்மொழி மற்றவர்களுடன் தங்கள் வீட்டை நோக்கி பயணித்தாள்.
தேன்மொழியின் வீட்டில் இருந்து அவளது அம்மாவையும் தம்பியையும் கடத்திய பிறகு அவர்களது வீட்டை தாங்கள் கொண்டு வந்த பூட்டை வைத்து கிளாராவும், பிரிட்டோவும் பூட்டிவிட்டு சென்றிருந்தார்கள். அது நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டது என்பதால் இதுவரையிலும் யாராலும் அதை திறந்து பார்க்க முடியவில்லை.
இப்போது அவர்களை அதை வந்து மீண்டும் திறந்து விட்டதால், அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளே சென்றார்கள். வீடு சில நாட்களாக பயன்படுத்தப்படாததால் கொஞ்சம் தூசியாக இருக்க, தேன்மொழி தன் அம்மாவுடன் சேர்ந்து அதை சுத்தம் செய்ய தொடங்கினாள்.
இது மாதிரியான இடத்தை முதல் முறையாக பார்ப்பதால் ஆச்சரியத்தில் இருந்த ஆருத்ரா தேன்மொழி செய்வதை போலவே தன் முகத்தில் ஒரு துணியை கட்டிக் கொண்டு அவளுக்கு உதவுவதாக சொல்லி அவளுடன் சேர்ந்து அவளும் அந்த வீட்டை சுத்தம் செய்ய தொடங்கினாள். குட்டி தேவதை போல க்யூட்டாக இருந்த ஆருத்ரா தேன்மொழியுடன் சேர்ந்து வேலை பார்ப்பதை கவனித்த ஆதவன் “என் அக்காவுக்கு இப்படி ஒரு அழகான குட்டி பொண்ணு இவ்ளோ சீக்கிரம் வருவான்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல.” என நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.
தேன்மொழியின் வாழ்க்கையில் என்ன ஆனது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்த உதயா அவளிடம் அது பற்றி விசாரிக்க, “ஆமா, நான் அவர லவ் பண்ணல தான் நீ சொல்றது உண்மை தான். பட் அது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு நான் இப்ப அவரை லவ் பண்றேன்றதும் உண்மை. மறுபடியும் இரண்டாவது தடவை நான் அவரை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என் மேரேஜ் லைஃப் ஒரு பெரிய ஸ்டோரி உதயா. அதை இப்ப சொல்ல டைம் இல்ல. நீ இங்க தானே இருக்க போற.. நான் ஃப்ரீ ஆகிட்டு என்ன நடந்துச்சுன்னு உன் கிட்ட எல்லாத்தையும் கிளியரா நைட் சொல்றேன்.” என்றாள் அவள்.
அப்போது அவளுக்கு ஜானகியிடம் இருந்து வீடியோ கால் வந்தது. அதனால் ஆருத்ராவுடன் சேர்ந்து அவளிடம் பேசத் தொடங்கிய தேன்மொழி அதற்கு மேல் உதயாவை கண்டுக் கொள்ளவில்லை.
விடாமல் ராப்பகலாக ஆபீஸில் அமர்ந்து வேலை செய்து கொண்டு இருந்த அர்ஜுன் ஒருவழியாக தனது வேலைகளை முடித்துவிட்டு சோர்வாக இருந்ததால் தனது அசிஸ்டன்ட் இடம் காபி கொண்டு வரச் சொன்னான். அதை வாங்கி அவன் குடித்துக் கொண்டிருக்கும் போது அவனுக்கு சித்தாத்திடம் இருந்து வீடியோ கால் வந்தது.
உடனே தனது காபி கப்பை கீழே வைத்துவிட்டு காலை அட்டென்ட் செய்த அர்ஜுன் “என்ன டா டின்னர் டைம் ஆயிடுச்சு.. சாப்பிட போகலையா நீ? இந்த டைம்ல எனக்கு கால் பண்ணி இருக்க?” என்று கேட்க, “இல்ல டாடி, நான் சோகமா இருக்கேன். அதான் சாப்பிடல.” என்றான் அவன்.
உடனே அவளை சீரியஸாக பார்த்த அர்ஜுன் “ஏன் டா என்ன ஆச்சு? வீட்ல யார் கூடயாவது சண்டை போட்டியா? நீ ரொம்ப நேரமா ப்ளே ஸ்டேஷன்ல விளையாடிட்டு இருந்தேன்னு பாட்டி உன்னை திட்டுனாங்களா?” என்று கேட்க, இல்லை என்று தலையாட்டிய சித்தார்த் “இப்ப எனக்கு ஹாலிடேஸ் தானே டாடி.. பாட்டி எதுக்கு என்ன கேம் விளையாட திட்ட போறாங்க! என்னை யாரும் எதுவும் சொல்லல. But still I'm sad.” என்றான்.
அவன் அப்படி தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொல்வதைப் பார்க்க அர்ஜுனிற்க்கும் கஷ்டமாக இருந்தது. அதனால் அவன் சில நொடிகள் “இப்ப எதுக்கு இவன் இப்படி இருக்கான்?” என்று யோசித்து விட்டு எதையோ கண்டு பிடித்து விட்டவனாக, “என்ன ஆருத்ரா ஃபர்ஸ்ட் டைம் நீ இல்லாம தனியா வெளிய போய் இருக்கான்னு ஃபீல் பண்ணி அவளை மிஸ் பண்றியா?” என்று அவனிடம் கேட்டான்.
“நோ டாடி, அவ இங்க இருந்தா எப்ப பாத்தாலும் என்னோட திங்ஸ் எல்லாத்தையும் பர்மிஷன் இல்லாம கெடுத்து யூஸ் பண்ணி என்னை டென்ஷன் பண்ணிக்கிட்டே இருப்பா.. அவ இல்லாதது எனக்கு ஜாலியா தான் இருக்கு. கொஞ்ச நாள் அவ அங்கேயே இருக்கட்டும்.. அவ டார்ச்சர் இல்லாம நான் நிம்மதியா இருப்பேன்.” என்று சித்தார்த் வேகமாக செல்ல, “அப்புறம் அதுவும் ரீசன் இல்லனா உனக்கு வேற என்ன தான் டா பிரச்சனை? இப்ப எதுக்கு நீ சோகமா இருக்க?” என்று சலிப்புடன் அவனிடம் கேட்டான் அர்ஜுன்.
“அட போங்க டாடி.. உங்களுக்கு எதுவுமே புரிய மாட்டேங்குது..!! மம்மி என்னை விட்டுட்டு ஆருத்ராவை மட்டும் அவங்க கூட கூட்டிட்டு போனதுனால தான் சோகமா இருக்கேன். ஏன் அவங்க அவ கிட்ட ஜாலியா பேசுற மாதிரி, அவ கூட விளையாடுற மாதிரி என் கூட விளையாட மாட்டேங்கிறாங்க?
முதல்ல நான் அவங்க கிட்ட சரியா பேசல. அதனால அவங்க என் மேல கோவத்துல இருக்காங்களா என்னனு தெரியல. இப்போ அவங்க என் கிட்ட பேச மாட்டேங்கிறாங்க. நான் மம்மிய ரொம்ப மிஸ் பண்றேன். அவங்க ஆருத்ரா கூட இருக்கிற மாதிரி என்கூடயும் இருக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு. நீங்க மம்மி கிட்ட சொல்லி என்னையும் இந்தியா கூட்டிட்டு போக சொல்றீங்களா? ப்ளீஸ் டாடி நான் இன்னும் இந்தியா 1 டைம் கூட போனதில்ல..!! நீங்க எனக்காக அவங்க கிட்ட பேசுங்களேன்!” என்று சித்தார்த் அவனிடம் கெஞ்சும் குரலில் கேட்க,
“நானே உங்க மம்மிய ரொம்ப மிஸ் பண்றேன் சித்து. அதை எப்படி அவ கிட்ட சொல்றதுன்னு தெரியாமத் தான் நானே முழிச்சிட்டு இருக்கேன். நீ வேற ஏண்டா அதை ஞாபகப்படுத்தி என்ன மறுபடியும் அவளை நினைக்க வைக்கிற? முன்னாடில இருந்து ஆருத்ரா சியான்னு நெனச்சு தேன்மொழி மேல ரொம்ப பாசமா இருக்கா.
சோ தேன்மொழிக்கு நேச்சுரலாவே அவ மேல பாசம் வந்துருச்சு. நீ அவளைப் பார்த்தாலே போயை பாக்குற மாதிரி ரெண்டு வார்த்தைக்கு பேசிட்டு எங்கேயாவது போயிருவ.. அப்புறம் எப்படி அவளுக்கு உன் கிட்ட அட்டாச்மெண்ட் வரும்?” என்று நினைத்த அர்ஜுன் “உங்க மம்மி உன் மேல எதுக்கு டா கோபப்பட போறா? அவளுக்கு ஆருத்ரா மாதிரி உன்னையும் பிடிக்கும். நீ வேணா அப்படியே அவளுக்கு கான்ட்ரன்ஸ் கால் போடு.. நம்ம எல்லாரும் சேர்ந்து வீடியோ கால் பேசலாம். நான் உங்க மம்மி கிட்ட உனக்காக பேசுறேன். என்ன ஏதுன்னு அவளை கேட்கிறேன்.” என்றான்.
அவள் இங்கே இருந்து சென்றதில் இருந்தே அவனுக்கு அவள் ஞாபகமாகவே இருந்தது. கண்டிப்பாக அவன் தனது இகோவை விட்டுக் கொடுத்து அவளிடம் பேச தயாராக இல்லை. அதனால் இப்போது சித்தார்த் வாலண்டியராக வந்து அவளுடன் பேச ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து இருப்பதால், அதை பயன்படுத்திக்கொள்ள நினைத்த அர்ஜுன் தேன்மொழியின் முகத்தை பார்க்க ஆர்வமுடன் லைனில் காத்திருந்தான்.
உதயா உடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த தேன்மொழி ஏதோ ஒரு தெரியாத எண்ணில் இருந்து தனக்கு வீடியோ கால் வருவதை பார்த்துவிட்டு குழப்பமான முகத்துடன் அதை அட்டென்ட் செய்தாள்.
-மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-65
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.