தேன்மொழி அர்ஜுனிடம் கோபமாக தனக்கு அவன் இப்படி எல்லாம் செய்வது பிடிக்கவில்லை என்று சொல்லி விட,
“இப்ப இவள என்ன சொல்லி சமாளிக்கிறது?” என்று யோசித்தபடி குழப்பமான முகத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
அவன் அமைதியாக இருக்க இருக்க அவளுடைய கோபம் அதன் எல்லையை கடந்து கொண்டிருந்தது.
“இவனுக்கு நம்ம மேல கொஞ்சம் கூட அக்கறை இல்ல. நம்ம வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கறது இல்ல.
நம்ம ஊர்ல பொண்டாட்டி பேச்சை கேட்டுகிட்டு பொண்டாட்டிக்கு பயந்து இருக்கிற எத்தனை ஆம்பளைங்கள பார்த்திருப்போம்!
இவன் பணக்காரனாக இருக்கிறதுனால ரொம்ப திமிரா இருக்கான்.
இவனுக்கு பிடிச்சதை மட்டும் தான் செய்யணும்னு நினைக்கிறான்.
இதெல்லாம் என்ன மாதிரியான ஆட்டிட்யூட்? எனக்கு சுத்தமா பிடிக்கல.” என்று நினைத்த தேன்மொழி,
“இப்படி நான் எமோஷனல் ஆகி கத்திக்கிட்டு இருக்கேன்!
நீங்க அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?
நீங்க இப்படி பண்றது எனக்கு புடிக்கலைன்னு சொல்லிட்டு இருக்கேன்.
நீங்க அமைதியா இருக்கிறத பாத்தா, நீ என்ன வேணாலும் சொல்லு.
நான் எனக்கு புடிச்சதை மட்டும் தான் செய்வேன்னு சொல்ற மாதிரி இருக்கு.” என்று சிவந்த கண்களுடன் கோபமாக சொன்னாள்.
“அட முடியலடா சாமி!” என்று நினைத்த பெருமூச்சு விட்ட அர்ஜுன், “ஏய்... அப்படி எல்லாம் இல்ல ஹனி. நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா?
எனக்கு நீதாண்டி இம்பார்டன்ட். நான் நீ சொல்றத கேக்காம வேற யார் சொல்றத கேட்க போறேன்?” என்று கெஞ்சலாக கேட்டுவிட்டு அவள் கன்னங்களை பிடித்து விளையாட்டாக கிள்ளினான்.
அவன் கைகளை தட்டிவிட்ட தேன்மொழி, “சும்மா இப்படி எல்லாம் பேசி உருட்டாதீங்க. எனக்கு நீங்க இப்படி பண்றது புடிக்கல.
இது எல்லாத்தையும் இப்பவே ஸ்டாப் பண்ணிக்கோங்க.
டெய்லியும் உங்க அப்பா கூடையும் தம்பி கூடையும் சேர்ந்து ஆபீஸ் கிளம்பி போங்க.
நைட்டு 8, 9 மணி ஆனா வீட்டுக்கு வந்துருங்க. சண்டே ஆபீஸ் போக கூடாது.
ஃபேமிலி கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும். என் ஹஸ்பண்ட் இப்படி இருக்கணும்னு தான் நான் நினைக்கிறேன்.
உங்களுக்கு நான் சொல்றத கேட்கணும்னு தோணுதா இல்லையா?
நீங்க கேப்பீங்களா மாட்டீங்களா?” என்று விடாப்பிடியாக கேட்டாள்.
அவள் இந்த விஷயத்தில் சீரியஸாக இருக்கிறாள் என்று உணர்ந்த உடன் அர்ஜுனின் முகமும் சீரியஸாக மாறியது.
அவள் மீது தன் கையை எடுத்துவிட்டு நேராக அமர்ந்த அர்ஜுன்,
“அப்படியெல்லாம் ஈஸியா நானே நினைச்சாலும்; எதுக்குள்ள இருந்து என்னால உடனே வெளியே வர முடியாது தேன்மொழி.
இது எல்லாம் ஒரு நாள்ல நடக்கிற விஷயம் கிடையாது.
இப்பதான் ஒரு பெரிய பிராப்ளம்ல இருந்து நான் வெளியே வந்து இருக்கேன்.
நான் இப்போ செஞ்சிட்டு வந்த வேலையால, அடுத்து என்ன வேணாலும் நடக்கலாம்.
அது எல்லாத்தையும் சமாளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு.
இந்த டைம்ல நீ சொல்றேனு என்னால அப்படியே எல்லாத்தையும் விட்டுட்டு வர முடியாது.
நான் எனக்கு வாலண்டரி ரிட்டயர்மென்ட் வேணும்னு கேட்கணும்னா கூட அதுக்குன்னு புரொசீஜர் இருக்கு.
நான் ஸ்டார்ட் பண்ணி வச்ச எல்லா மிஷனையும் முடிக்கணும்.
எனக்கு அடுத்து வரப்போற லீடரை நான் சூஸ் பண்ணனும்.
அவனுக்கு ட்ரெய்னிங் குடுக்கணும், அவனுக்கே டெஸ்ட் வச்சு மொத்தமா அவன பத்தி ரிப்போர்ட் கலெக்ட் பண்ணனும்.
இப்படி எவ்ளோ வேலை இருக்கு தெரியுமா? நீ என்னமோ ஈஸியா ஒரே நாள்ல எல்லாத்தையும் விட்டுட்டு வான்னு சொல்ற?” என்று கேட்க,
உடனே கோபம் குறைந்து கொஞ்சம் சாந்தமான தேன்மொழி, “okay fine, எனக்கு புரியுது. உடனே எதுவும் செய்ய முடியாது தான்.
நான் உங்களுக்கு டைம் கொடுக்கிறேன். இப்ப நீங்க சொன்னது எல்லாத்தையும் செஞ்சு முடிக்கிறதுக்கு உங்களுக்கு எவ்வளவு டைம் ஆகும்?
மேக்ஸிமம் ஒன் மந்த் இல்லனா டூ மன்த்ஸ் இருந்தால் போதுமா?” என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்த்து அவன் முகத்தை பார்க்க,
ஷாக் ஆகி அவளை பார்த்த அர்ஜுன் “1 or 2 months? Are you joking or what? என்ன நெனச்சிட்டு இருக்க இந்த சீக்ரெட் சொசைட்டி பத்தி?
நான் இந்த பொசிஷனை விட்டு போகணும்னா, அடுத்த லீடரை சூஸ் பண்றதுக்கு அட்லீஸ்ட் 3 இயர்ஸ் ஆவது ஆகும்.
அண்ட் முதல்ல நான் எதுக்கு இந்த பொசிஷனை விட்டு போகணும்?
இந்த பொசிஷனுக்கு வருவதற்கு கிட்டத்தட்ட நான் 20 வருஷம் வொர்க் பண்ணி இருக்கேன்.
என் லைஃப்ல எவ்வளவோ ரிஸ்க் எடுத்து இருக்கேன்.
அப்படி கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துட்டு, ஒரே நாள்ல எப்படி என்னால எல்லாத்தையும் தூக்கிப் போட முடியும்?
இந்த பொசிஷனுக்கு வரணும்னு இந்த உலகத்தில இருக்கிற எத்தனையோ பேர் அதுக்காக என்ன வேணாலும் பண்ண ரெடியா இருக்காங்க!
இது எவ்வளவு பெரிய பொசிஷன், இத வச்சுக்கிட்டு என்னென்ன பண்ண முடியும்ன்னு உனக்கு நான் சொன்னாலும் புரியாது தேன்மொழி.
இதுல எனக்கு அடுத்து வர்ற ஒருத்தன் ஒரே ஒரு தப்பான டெசிஷன் எடுத்தாலும் கூட, இந்த வேர்ல்டுல எவ்வளவு பெரிய சேஞ்சஸ் நடக்கும்னு உன்னால இமேஜின் கூட பண்ணி பாக்க முடியாது.
அப்படி ஈசியா என்னோட பொசிஷன இன்னொருத்தனுக்கு தூக்கி குடுத்துட்டு என்னால வர முடியாது.
அப்படி பண்ணா, என்னை நம்பி இந்த பொசிஷனுக்கு சூஸ் பண்ண என் சீஃப்-க்கு நான் துரோகம் பண்ற மாதிரி ஆயிடும்.” என்று உறுதியாக சொல்லிவிட,
உடனே வேகமாக எழுந்து நின்ற தேன்மொழி “அப்ப என்ன ஆனாலும் நீங்க இந்த பொசிஷனை விட்டுக் கொடுக்க ரெடியா இல்ல அப்படித் தானே!
இதனால சியா அக்கா இறந்து போன மாதிரி ஒருவேளை நானே செத்துப்போன கூட நீங்க அப்பயும் கவலைப்பட மாட்டீங்க..
எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு. உங்களுக்கு அதிகார போத புடிச்சிருக்கு.
அதனால தான் இப்படி வெறி புடிச்ச மாதிரி இந்த பொசிஷனுக்காக என்ன வேணாலும் பண்ணலாம்னு உங்க இஷ்டத்துக்கு என்னென்னமோ பண்ணிக்கிட்டு இருக்கீங்க!
சத்தியமா இதெல்லாம் நல்லதுக்கே கிடையாது.” என்று அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டே போக,
ஆத்திரம் பொங்க சட்டென்று எழுந்து நின்ற அர்ஜுன் பளார் என்று அவள் கன்னத்தில் ஒன்றை விட்டு,
“நானும் குழந்தைக்கு சொல்ற மாதிரி பொறுமையா அவசரப்படாத.. இது எல்லாத்தையும் ஹேண்டில் பண்றதுக்கு டைம் ஆகும்.
என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் வெயிட் பண்ணுன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்..
அத கேக்காம நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே இருக்க?
முதல்ல என்ன வயசாகுது உனக்கு? உன் வயசுக்கு நீ எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டியா?
முதல்ல நான் சொல்றத புரிஞ்சிக்கிற கெப்பாசிட்டி உனக்கு இருக்கா?
எனக்கு என்ன தோணுதோ நான் அதை தாண்டி செய்வேன்.
என்னை கேள்வி கேட்கிற ரைட்ஸ் உனக்கு மட்டும் இல்ல, இந்த உலகத்தில இருக்கிற வேற யாருக்குமே இல்லை.
உன்ன பார்த்துக்குறது என் ரெஸ்பான்சிபிலிட்டினா, என்னை நம்பி எனக்கு ஓட் பண்ணி என்ன இந்த பொசிஷனுக்கு கொண்டு வந்தவங்களுக்காக நான் லாயிலா இருக்கிறதும் என் ரெஸ்பான்சிபிலிட்டி தான்.
உனக்கு ஒரு கேடும் வராம நான் பாத்துக்குறேன் போதுமா?
இந்த வீட்ல உனக்கு ஏதாவது குறைச்சலா இருந்தா சொல்லு.
நான் உடனே சரி பண்றேன். நான் இருந்தாலும் இல்லேன்னாலும் நீ நல்லா தான் இருப்ப போதுமா?
இனிமே சும்மா இதை பத்தி என்கிட்ட வந்து பேசிட்டு இருக்க கூடாது.
அப்புறம் உனக்கு அவ்வளவு தான் மரியாதை!” என்று கோபமாக சொன்ன அர்ஜுன் வலித்துக் கொண்டிருந்த தனது கால்களை மெல்ல சண்டி சண்டி நடந்து வெளியே சென்று ஸ்டடி ரூமிற்க்குள் நுழைந்தான்.
அவன் பலமாக அறைந்ததில் தன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு தரையில் விழுந்து கிடந்த தேன்மொழி,
“நீ என்னையே அடிச்சுட்டல! இதை நான் எப்பயும் மறக்கவே மாட்டேன் டா.
நீ ஒரு சைக்கோ புடிச்சவன் தெரிஞ்சும் உள்ள போய் லவ் பண்ண பாரு.. என்னை நானே செருப்பால அடிச்சுக்கணும்.
உன்ன கேள்வி கேக்குறதுக்கு எனக்கு எந்த ரைட்ஸ்-ம் இல்லையா?
நீ போடுறதை தின்னுட்டு உனக்கு வேணுங்கிறதை செஞ்சுகிட்டு உன் பின்னாடி வாலா ஆட்டிட்டு திரியறதுக்கு நான் என்ன நாயா?
எனக்கு ஏதாவது குறை இருந்தா உன்கிட்ட வந்து சொல்லனுமா?
அந்த பெரிய குறையை நீ தாண்டா.. உன்கிட்ட சொன்னா உடனே நீ கேட்டு உன் கிட்ட இருக்குற தப்பு எல்லாத்தையும் திருத்திப்பியா?
உன் அளவுக்கு ஒரு திமிரு புடிச்சவன நான் என் வாழ்க்கையில பார்த்ததே இல்லை.
உனக்கு அவ்ளோ திமிரு அகங்காரம் இருக்குன்னா, நான் உன் பொண்டாட்டி..
எனக்கு அதுல பாதி கூட இருக்காதா? இன்னும் மூணு வருஷம் ஆனாலும் சரி 30 வருஷமானாலும் சரி..
என் பேச்சைக் கேட்டு, ஒழுங்கா இல்லாத உன் கூட அதுவரைக்கும் உன்ன நெனச்சு பயந்துகிட்டு உசுர கையில பிடிச்சுகிட்டு நான் எதுக்கு வாழனும்?
எனக்கு இங்க இருந்து அப்படியெல்லாம் கஷ்டப்படணும்னு தலையெழுத்து இல்ல.
உனக்கு அங்க லீடரா இருக்குறது தானே முக்கியம்..
எனக்கு புருஷனா இருக்கிறத பத்தி நீ கவலைப்படல இல்ல..
நீ என்னமோ பண்ணு.. எனக்கு என்ன? நான் இப்பவே இங்க இருந்து போறேன்.” என்று நினைத்தவள்,
தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.
அவள் முகத்தில் அப்படி ஒரு உறுதி தெரிந்தது. தன்னை மதிக்காத அர்ஜுனிடம் அவள் இனி எதைப்பற்றியும் பேச விரும்பவில்லை.
அதனால் நேராக தனது அறையில் இருந்து ஹாலுக்கு சென்ற தேன்மொழி அங்கே ஜானகி இருக்கிறாளா? என்று சுற்றும் முற்றும் தன் கண்களை சுழல விட்டு தேடினாள்.
அங்கே எங்கேயும் அவள் தென்படாததால், “அத்தை அவங்க ரூம்ல தான் இருப்பாங்க.” என்று நினைத்து நேராக ஜானகியின் ரூமிற்கு சென்றாள்.
அர்ஜுன் மீண்டும் வீட்டுக்கு வந்திருப்பதை கேள்விப்பட்டு அவனுடைய அப்பா பிரசாத் கூட மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்திருந்தார்.
அவர்கள் இருவரையும் பார்த்தபடி கண்ணீருடன் அந்த அறைக்குள் நுழைந்த தேன்மொழி,
“எனக்கு உங்களோட ஹெல்ப் வேணும். நீங்க பண்ணுவீங்களா மாட்டீங்களா?” என்று உரிமையாக அவர்களிடம் கேட்டாள்.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-58
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.