குளித்து கிளம்பி டைனிங் ஏரியாவிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்த தேன்மொழி தெம்பாக இன்று அர்ஜூனுடன் சண்டை போட்டு அவனை தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டிலுக்கு அருகில் உள்ள சோஃபாவில் அமர்ந்து அவன் தூங்கி எழுவதற்காக காத்திருந்தாள்.
கிட்டத்தட்ட மதியம் 12:00 மணி அளவில் கண் விழித்த அர்ஜுன் தன் அருகில் தேன்மொழி இருக்கிறாளா என்று தான் தேடினான்.
அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்த தேன்மொழி “நான் இங்க இருக்கேன்.” என்று எரிச்சலுடன் சொல்ல,
அவளுக்கு பின்னே சுவரில் மாட்டுப்பட்டு இருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்தபடி எழுந்த அர்ஜுன்,
“அதுக்குள்ள Afternoon ஆயிடுச்சா? நான் ஆபீஸ் போகணும். எனக்கு எவ்ளோ வேலை இருக்கு தெரியுமா?
நீ மட்டும் முன்னாடியே எந்திரிச்சு ஃப்பிரஷ்ஷா ரெடியாகி வந்து உக்காந்திருக்க..
என்னையும் எழுப்பி விட்டு இருக்கலாம்ல” என்று கேட்டபடி எழுந்து சென்று அவளை ஆசையுடன் அணைத்துக் கொண்டான்.
அவன் தோள்களில் கை வைத்து அவனை தன்னை விட்டு விளக்கி நிறுத்திய தேன்மொழி,
“என்ன நெனச்சிட்டு இருக்கீங்க நீங்க? உங்க இஷ்டத்துக்கு வரீங்க..
உங்க இஷ்டத்துக்கு கிளம்பி போறீங்க!
கிட்டத்தட்ட அஞ்சு நாளைக்கு அப்புறம் நான் இப்பதான் உங்களை பார்க்கிறேன்.
இப்ப வரைக்கும் நீங்களும் நானும் மனசு விட்டு முழுசா ஒரு மணி நேரம் கூட பேசி பழகி இருக்க மாட்டோம்.
உடனே கிளம்பி ஆபீஸ் போகணும்னு சொல்றீங்க!
என்ன பாத்தா எப்படி தெரியுது உங்களுக்கு?
உங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழனும்னா, நீங்க ஜாலியா சிங்கிளா இருக்க வேண்டியது தானே..
என்ன எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க?
இந்த ஃபேமிலில இருக்கிற யாரையாவது ஒருத்தரை பத்தியாவது நீங்க யோசிச்சு கவலைப்படுறீங்களா?
நீங்க எப்பயும் எது பின்னாடியாவது ஓடிக் கிட்டே இருந்தீங்கன்னா, நாங்களும் அது பின்னாடி உங்களுக்காக ஓடி வந்துட்டே இருக்கணுமா?
எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல அர்ஜுன்.” என்று தன் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு சொன்னாள்.
அவள் இதுவரை இவ்வளவு கோபப்பட்டு அர்ஜுன் பார்த்ததில்லை என்பதால், “இன்னைக்கு என்ன இவ பிரஷர் குக்கர் மாதிரி இவ்ளோ ஹாட்டா இருக்கா?
இப்ப என்ன சொல்லி இவளை சமாதானப்படுத்துறது? இவ பேசுறத எல்லாம் பாத்தா நான் என்ன சொன்னாலும் கேட்கவே கூடாதுன்ற மைண்ட் செட்ல இருக்கிற மாதிரி இருக்கு.” என்று நினைத்து பெருமூச்சு விட்டுவிட்டு அவள் அருகில் மீண்டும் சென்றான்.
“எதுவா இருந்தாலும் நீங்க தள்ளி நின்னே பேசுங்க.
நான் பாட்டுக்கு தூங்கிட்டு இருக்கும்போது அப்படியே என்னை விட்டுட்டு கிளம்பி போயிட்டீங்க..
நீங்க போனதும் எனக்கு தெரியல, இப்ப வந்ததும் எனக்கு தெரியல..
இந்த கல்யாணமான பொண்ணுங்க எல்லாம் யாருக்கும் தெரியாம கள்ளத்தனமா பாய் ஃபிரண்ட் வச்சிருந்தா இப்படித்தான் அவன் அவளைப் பார்க்க எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறம் வந்துட்டு போவான்.
அதே மாதிரி தான் நீங்களும் பண்ணிட்டு இருக்கீங்க..
பேருக்குத்தான் நீங்களும் நானும் husband and wife. ஆனா நம்ம ரிலேஷன்ஷிப் எனக்கு அப்படி ஃபீல் ஆகவே இல்லை.
என்னமோ நான் உங்களுக்கு பார்ட் டைம்ல பொண்டாட்டியா வேலை பாத்துட்டு இருக்குற மாதிரி இருக்கு.
நீங்க உங்களுக்கு ஃப்ரீ டைம் கிடைக்கும்போது மட்டும் இந்த வீட்டு பக்கம் வந்துட்டு போறீங்க!” என்று high pitchல் சொன்ன தேன்மொழி மார்புக்கு குறுக்காக தன் கைகளை கட்டிக் கொண்டு சென்று சோஃபாவில் பொத்தென்று அமர்ந்தாள்.
அவள் முகம் கோபத்தில் சிவந்து போய் பின்க் நிறத்தில் இருந்தது.
“இவ சரியான கோபக்காரியா இருப்பா போல!” என்று நினைத்த அர்ஜுன் வலித்துக் கொண்டு இருந்த தன் காலை பிடித்தபடி மெல்ல நடந்து அவள் அருகில் சென்று சோஃபாவில் அமர்ந்தான்.
உடனே அவள் கொஞ்சம் நகர்ந்து அமர்ந்து கொண்டு தன் முகத்தை வேறு புறமாக திருப்பிக் கொண்டாள்.
ஆனால் அப்போதும் அவள் அருகில் நகர்ந்து சென்று அமர்ந்து கொண்ட அர்ஜுன் அவள் மீது சாய்ந்து கொண்டு,
“நான் சின்ன பையனா இருக்கும்போது, எங்க அப்பா அடிக்கடி அம்மா கிட்ட கோவப்படுவாரு.
அத பார்க்கும்போது ஏன் அப்பா அம்மாவ புரிஞ்சுக்காம இப்படி அவங்க கூட சண்டை போட்டுட்டே இருக்காரு!
அவருக்கு அவங்க மேல பாசமே இல்லையான்னு தோணும்.
இத பத்தி நான் எங்க அப்பா அம்மா இரண்டு பேர் கிட்டயுமே கேட்டு இருக்கேன்.
எங்க அப்பா, நான் எங்க உங்க அம்மா மேல கோபப்பட்டேன்? எனக்கு அவ மேல கோபமே வராதுன்னு சொன்னாரு.
எங்க அம்மா, உங்க அப்பா என் நல்லதுக்காக சொல்ற நிறைய விஷயத்தை நான் நம்ம ஃபேமிலியை பத்தியே யோசிச்சுகிட்டே இருந்து செய்யாம விட்டுடுவேன்.
அதான் உங்க அப்பா என் மேல கோவப்படுறாரு. ஃபேமிலிகுள்ள ஒருத்தருக்கு இன்னொருத்தர் மேல வர்ற கோபம் மோஸ்ட்லி நம்ம அவங்க மேல வச்சிருக்க அன்பால தான் வரும்.
சம்டைம்ஸ் இப்படி எல்லாம் அவர் என் மேல கோவப்படுறது எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னாங்க.
இப்ப நீ என் மேல கோபப்படுறத பார்க்கும்போது எனக்கு அம்மா சொன்னது தான் ஞாபகம் வருது.
உன்கிட்ட எதுவும் சொல்லாம நான் திடீர்னு எங்கேயோ கிளம்பி போயிட்டேன்.
சோ எனக்கு என்ன ஆச்சோன்னு நினைச்சு நீ பயந்து இருக்க..
இப்போ நான் இப்படி அடிபட்டு உன் முன்னாடி வந்து நிற்கிறத பார்க்கும்போது உனக்கு அந்த பயம் அதிகமாகி இருக்கு.
நம்ம ஒருத்தர ஒருத்தர் பேசி புரிஞ்சு லவ் பண்ணி அப்புறம் எல்லாம் கல்யாணம் பண்ணிக்கல.
ஏதோ ஒரு accidental-லா நமக்கு மேரேஜ் நடந்துச்சு. அதுக்கப்புறம் நான் உன் கூட பிராப்பரா டைம் ஸ்பென்ட் பண்ணல.
சோ நீ என்ன மிஸ் பண்ற.. இது எல்லாத்தையும் இப்படி சொல்லாம மேடம் கோபமா காட்டுறிங்க கரெக்ட்டா?” என்று நிதானமாக அவளை அணைத்துக் கொண்டு கேட்டான்.
இம்முறை அவனை விட்டு விலகிச் செல்ல மனம் வராமல் தன் முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டு அழுத தேன்மொழி,
“நீங்கதான் ரொம்ப புத்திசாலியானவராச்சே.. உங்களுக்கு எல்லாமே தெரியுது.
நான் சொல்லாமையே என் மனசுல இருக்குற எல்லாத்தையும் அப்படியே படிச்ச மாதிரியே சொல்றீங்க!
அப்புறம் ஏன் இப்படி எல்லாம் பண்ணி என்னை கஷ்டப்படுத்துறீங்க?” என்று உடைந்த குரலில் கேட்க,
அவளது தலை முடியை ஒதுக்கிவிட்ட அர்ஜுன் அன்புடன் அவள் தலையை வருடியவாறு அவள் கண்ணீரை துடைத்து விட்டு,
“ஏய் ஹனி.. அழாத டி! அதான் நான் வந்துட்டேன் இல்ல.. அப்படியெல்லாம் உன்ன தனியா கஷ்டப்பட விட்டுட்டு அவ்ளோ சீக்கிரம் நான் போயிட மாட்டேன் டி.
இப்படி பயந்து சாகாத.. அர்ஜுன் பொண்டாட்டி கெத்தா இருக்க வேண்டாமா?” என்று கேட்டான்.
உடனே அவன் பக்கம் திரும்பி அமர்ந்த தேன்மொழி, “முதல்ல அதுக்கு நான் அர்ஜுன் பொண்டாட்டியா வாழ வேண்டாமா?
நீங்க அதுக்கு எங்க எனக்கு டைம் குடுக்குறீங்க?
நான் முதல்ல இங்க வரும்போது, எனக்கு எதுவுமே பிடிக்கல. எல்லாமே புதுசா இருந்துச்சு.
எனக்கு யாரை பார்த்தாலும் பயமா இருந்துச்சு.
இப்ப நான் உங்க கூட சேர்ந்து ஹாப்பியா வாழனும்னு ஆசைப்படுறேன்.
ஆனா நீங்க ஏன் இப்படி பண்றீங்க? நீங்க பண்றதெல்லாம் என்ன ஹர்ட் பண்ணுதுன்னு தெரிஞ்சுமே நீங்க இப்படி பண்றது எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?
ப்ளீஸ் இப்படி பண்ணாதீங்க அர்ஜுன்!” என்று கண்ணீருடன் சொல்லிவிட்டு அவனை இறுக்கமாக அணைத்துக்கொள்ள,
தானும் அவளை அணைத்துக் கொண்ட அர்ஜுன் அவள் முதுகில் தட்டியபடி, “ஓகே ஓகே ரிலாக்ஸ்.. அன்னைக்கு எமர்ஜென்சி சுச்சுவேஷன்.
அதான் உன்கிட்ட சொல்லாம கிளம்பி போயிட்டேன். இப்படி எல்லாம் நடக்கும்னு நானும் எதிர்பார்க்கல.
அதான் நான் பத்திரமா திரும்பி வந்துட்டேன் இல்ல.. அப்புறம் ஏன் அதையே நெனச்சு ஃபீல் பண்ற?
இங்கே திரும்பி வந்து உன்ன பாக்குற வரைக்கும் நானும் உன்னை மட்டும் தான் டி நினைச்சிட்டு இருந்தேன்.
இன்னிக்கி ஆபீஸ்ல கொஞ்சம் இம்பார்டன்ட் ஒர்க் இருக்கு.
அதை முடிச்சுட்டு உன் கூட தனியா எங்கயாவது ஹனிமூன் ட்ரிப் ப்ளான் பண்ணி போகலாம்னு நினைச்சேன்.
அதுக்குள்ள இவ்வளவு அழுகை! என்ன சொன்ன நீ?
நீ எனக்கு பார்ட் டைம் பொண்டாட்டியா? இன்னைக்கு ஏதோ எமோஷனலா இருக்கறதுனால இப்படி எல்லாம் தெரியாம உளறிட்டன்னு உன்ன போனா போகுதுன்னு விடுறேன்.
ஆல்ரெடி எனக்கு வயசாயிடுச்சு டி.. நீ என் லைஃப்ல ரொம்ப லேட்டா வந்திருக்க..
அட்லீஸ்ட் நானாவது இந்த 40 வருஷத்துல என் லைஃப்ல நிறைய பார்த்திருக்கேன்..
ஆனா நீ இன்னும் எதையுமே அனுபவிக்கல. உனக்கு என்னால கொடுக்க முடிஞ்ச எல்லா சந்தோஷத்தையும் நான் குடுக்கனும்னு நினைக்கிறேன் தென்மொழி.
என்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ டைம் நான் உன்கூட ஸ்பென்ட் பண்ணனும்னு நினைக்கிறேன்.
பட் எனக்குன்னு சில responsibilities இருக்கு.. அதை என்னால இக்னோர் பண்ண முடியாது.
நீ அதை மட்டும் எனக்காக புரிஞ்சுக்க ட்ரை பண்ணு ப்ளீஸ்!” என்று கெஞ்சும் குரலில் கேட்டான்.
அதுவரை மறைந்திருந்த அவளுடைய கோபம் இப்போது மீண்டும் தலை தூக்க,
சட்டென்று அவனை விட்டு விலகி நேராக அமர்ந்து அவனை முறைத்து பார்த்த தேன்மொழி,
“நான் என்ன புரிஞ்சிக்கணும்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க?
முதல்ல எது உங்களுக்கு ரெஸ்பான்சிபிலிட்டி? நானும், நம்ம குழந்தைகளுமா, இந்த ஃபேமிலில இருக்கிறவங்கள பத்திரமா பாத்துக்கிறதா?
இல்ல எங்கேயோ போய் யார் யாருக்காகவோ தேவையில்லாத ரிஸ்க் எல்லாம் எடுத்து இப்படி அடிபட்டு வந்து நிற்கிறதா?
எது உங்க ரெஸ்பான்சிபிலிட்டி? நீங்க இப்படி தான் திடீர் திடீர்னு எங்கேயாவது போவீங்க.
இப்படி அடிபட்டு பாதி உசுரா திரும்பி வருவீங்க. இதை நான் புரிஞ்சுகிட்டு நீங்க எப்ப வருவீங்கன்னு வாசலை பார்த்த மாதிரி உசுர கைய புடிச்சிட்டு உக்காந்து இருக்கணுமா?
என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது அர்ஜுன். நீங்க எதிர்பாக்குற அந்த புரிதல் எனக்கு இல்ல.
அதுக்காக நான் ஒரு முட்டாள்னு கூட நினைச்சுக்கோங்க. நான் ரொம்ப சாதாரணமான பொண்ணு.
நீங்க என்ன காரணம் சொன்னாலும் இப்படி எல்லாம் நீங்க பண்றத என்னால ஏத்துக்கவே முடியாது.
நமக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கை இருக்கு. நீங்க சொன்ன மாதிரி நான் இதுவரைக்கும் எந்த சந்தோஷத்தையும் அனுபவிச்சது கிடையாது.
இப்ப எனக்குன்னு நீங்க இருக்கீங்க. நமக்குன்னு ஒரு ஃபேமிலி இருக்கு.
இங்க என்ன குறை இருக்கு சொல்லுங்க? இருக்கிறத வச்சுக்கிட்டு நம்மளால சந்தோஷமா வாழ முடியாதா?
தேவையில்லாத ப்ராப்ளம்குள்ள போய் தலையை விட்டு ஏன் ரிஸ்க் எடுக்கணும்?
இப்படி எல்லாம் பண்றதுனால உங்களுக்கு என்ன கிடைச்சிற போகுது?
அப்படி இதையெல்லாம் பண்ணி நீங்க இந்த உலகத்தையே உங்க கைக்குள்ள வச்சிருக்கேன்னு சொன்னா கூட எனக்கு அதை பத்தி எல்லாம் எந்த கவலையும் இல்லை அர்ஜுன்.
நான் சந்தோஷமா வாழ்றதுக்கு இந்த வீடோ, நீங்க அப்படி போய் கஷ்டப்பட்டு சேர்க்கிற பணமோ, இந்த ஆடம்பர வாழ்க்கையோ எதுவுமே எனக்கு தேவையில்லை.
எனக்கு நிம்மதியா என் புருஷன், குழந்தைகளோட வாழனும்.
அந்த நிம்மதியான சிம்பிளான வாழ்க்கையை கூட நான் ஆசைப்படக் கூடாதா சொல்லுங்க?” என்று கண்ணீருடன் அவனைப் பார்த்து கேட்டாள்.
இவளிடம் எதையும் மறைக்க கூடாது என்று நினைத்து அனைத்து உண்மையையும் சொல்லி, இப்போது அதுவே தனக்கு வினையாக மாறிவிட்டதே!
இப்போது என்ன சொல்லி இவளை சமாளிப்பது? என்று புரியாமல் குழப்பமான முகத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-57
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.