சாப்பிட செல்வதாக சொன்ன தேன்மொழி எழுந்து டைனிங் ஹாலை நோக்கி சென்றாள்.
அப்போது வெளியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த சித்தார்த்தும், ஆதவனும் அவள் கண்களில் தென்பட்டார்கள்.
அதனால் வெளியில் சென்ற தேன்மொழி தன் தம்பி சகஜமாக சித்தார்த்துடன் பேசுவதை பார்த்து மகிழ்ந்தாள்.
அப்போது அவள் மனதில் “ஆதி காலேஜ்ல படிக்கிற பையன்.. திடீர்னு என்னால அவர் இவனையும் சேர்த்து இங்க கூட்டிட்டு வந்துட்டாரு.
இதுக்கப்புறம் இவன் இங்கயே இருக்கப் போறானா, இல்ல மறுபடியும் இந்தியா போய் படிக்க போறானா?
என்னன்னு ஒண்ணுமே தெரியலையே.. நானும் இத பத்தி அவர்கிட்ட எதுவும் பேசல.
எங்க.. அந்த மனுஷன் கொஞ்ச நேரமாவது டைம் ஸ்பென்ட் பண்ணி என் கூட பேசினா தானே நான் ஏதாவது கேட்க முடியும்?
வரட்டும் அந்த ஆளுக்கு இருக்கு!” என்று தோன்ற, அந்த சிந்தனைகளை ஓரம் கட்டி விட்டு அவர்கள் அருகில் சென்றாள்.
அவளைப் பார்த்தவுடன் சித்தார்த் அவள் அருகில் சென்று “மம்மி நீங்களும் விளையாட வரீங்களா?
நாங்க ரெண்டு பேர் மட்டும் விளையாடுறது ரொம்ப போர் அடிக்குது.
ஆருத்ராவுக்கு இந்த மாதிரி கேம்ஸ் எல்லாம் பிடிக்காது.
ஆதி மாமா வந்ததுனால எனக்கு ரொம்ப ஜாலியா இருக்கு.
எனக்கு ஒரு தம்பி இருந்தா நான் அவன் கூட ஜாலியா விளையாடி இருப்பேன்.
இந்த மகிழன் ரொம்ப சின்ன பையனா இருக்கான்.
லிண்டா சித்தி அவன வெயில்ல இந்த மாதிரி விளையாடவே விட மாட்டாங்க.” என்று அவளிடம் குறையாக சொல்ல,
“நான் கிரிக்கெட் விளையாடுறதா? எனக்கு கிரிக்கெட் டிவில ஓடுச்சுன்னா அதை கரெக்டா பார்த்து கூட யார் என்ன பண்றாங்கன்னு கண்டுபிடிக்க தெரியாது சித்து.
நீ என்ன போய் கிரிக்கெட் விளையாட வர சொல்லி கூப்பிடுற பாத்தாயா?” என்று சொல்லிவிட்டு சிரித்த தேன்மொழி அங்கே ஏராளமான கருப்பு உடை அணிந்த பாடிகார்டுகள் அவர்களுக்கு பாதுகாப்பாக சுற்றி அங்கும் இங்கும் நிற்பதை கவனித்தாள்.
பின் சித்தார்த்திடம் “இங்க இத்தனை பேர வச்சுக்கிட்டு நீ ஏன் விளையாட ஆள் இல்லைன்னு ஃபீல் பண்ற?
இவங்க எல்லாரும் இங்க சும்மா தானே நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க..
இவங்களையும் உன் டீம்ல சேர்த்துக்கோ. நீங்க எல்லாரும் சேர்ந்து ஜாலியா விளையாடுங்க.” என்றாள்.
“ஆனா அது ரூஸ்ல இல்லையே!” என்று சித்தார்த் வேகமாக சொல்ல,
“என்ன பெரிய ரூல்ஸ்சு? இது எல்லாம் நம்ம நமக்காக போட்டுகிறது தானே!
நீ போய் அவங்க கூட விளையாடு. யாராவது கேட்டா நான் தான் சொன்னேன்னு சொல்லு பாத்துக்கலாம்.” என்ற தேன்மொழி அவனிடம் பேசிவிட்டு உள்ளே செல்வதற்காக தங்களது மாளிகையை நோக்கி நடந்தாள்.
அப்போது பார்க்கிங் ஏரியாவில் இருந்த மகேஷ் மெல்லிய குரலில் தேன்மொழியிடம் “ஓய் தேனு.. நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்..
நான் அப்படியே அந்த பக்கம் போறேன், நீ வா.” என்று சொல்லிவிட்டு கேஷுவலாக அப்படியே நடந்து உள்ளே சென்றான்.
தன் குடும்பத்தினரை தொடர்புக்கொள்ள அவன் உதவியதால் இப்போதும் தன்னிடம் ஏதோ முக்கியமாக பேசுவதற்காக தான் இவன் தன்னை வரச் சொல்லி அழைக்கிறான் என்று நினைத்த தேன்மொழி,
அவளும் கேஷுவலாக பார்க்கிங் ஏரியாவில் உள்ள விதவிதமான சொகுசு கார்களை பார்ப்பதைப் போல பாவலா செய்து உள்ளே சென்றாள்.
அவள் வந்தவுடன் “அர்ஜுன் சார் எங்க போயிருக்காருன்னு தெரியுமா உனக்கு?” என்று அவசரமான குரலில் கேட்க,
“அவர் என்ன என் கிட்ட சொல்லிட்டா போனாரு?
எப்பயும் போல நான் தூங்கி எந்திரிக்கிறதுக்கு முன்னாடியே அவர் கிளம்பி போயிட்டாரு.” என்றாள் அவள்.
“அது சரி, அவர் தான் இன்னைக்கு ரொம்ப சீக்கிரமாவே கிளம்பி போயிட்டாரே..
பட் அவர் எங்க போறாரு, என்ன பண்றாருன்னு உனக்கு தெரியுமா?” என்று மகேஷ் அவளிடம் கேட்க,
தன்னைப் பற்றிய அனைத்து ரகசியங்களையும் அர்ஜுன் அவளிடம் சொல்லி இருந்தான்.
இருப்பினும் இவன் குறிப்பாக இப்போது எதைப்பற்றி கேட்கிறான் என்று தெரியாததால் தானாக எதையும் சொல்லி மாட்டிக்கொள்ள கூடாது என்று நினைத்த தேன்மொழி,
“அவர் எங்க போனாருன்னு உனக்கு தெரியுமா?
கிளம்பும்போது உன் கிட்ட ஏதாவது சொல்லிட்டு போனாரா?” என்று மட்டும் அவனிடம் கேட்க,
“அவர் என் கிட்ட எதுவும் சொல்லல.
பட் early morning 5 1/4 மணிக்கு அவர் அவரோட அசிஸ்டன்ஸ் கூட ஃபுல்லா ஏதோ போருக்கு போற மாதிரி soldiers costumeல கைல துப்பாக்கி வச்சுட்டு எல்லாரும் சேர்ந்து பின் வாசல் வழியா எங்கயோ போறத நான் பார்த்தேன்.
எப்பயும் ஆகாஷ் சாரும் அவங்க கூட கிளம்பி போயிருவாரு.
ஆனா இன்னைக்கு என்னன்னு தெரியல.. அர்ஜுன் சார் அவரை விட்டுட்டு போயிட்டாரு போல.
இந்த வயசுல இவ்ளோ வசதியான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கும்போது இவருக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை சொல்லு?
அவர் என்ன மாஃபியா கூட்டத்து தலைவனா? இல்லிகளா இந்த மாதிரி அவர் நிறைய வேலை பாக்கிறாருன்னு முன்னாடியே எனக்கு தெரியும்.
நானும் அவர் கூட சேர்ந்து இந்த விஷயத்துக்கெல்லாம் ஹெல்ப் பண்ணிருக்கேன்.
ஆனா கரெக்டா அவர் என்ன பண்றாருன்னு எனக்கு தெரியாது.
இதுக்கு முன்னாடி அவர் இப்படி இருந்தாரு பரவாயில்ல.
பட் இதனால தானே ஏற்கனவே சியா மேடம் இறந்துட்டாங்க!
இப்ப தான் அவர் உன்ன கல்யாணம் பண்ணி இருக்காரு.
இனிமேலாவது கொஞ்சம் பொறுப்பா இருக்கலாம் இல்ல?
கொஞ்சம் கூட அவர் மேல அக்கறை இல்லாம இப்படி துப்பாக்கிய தூக்கிக்கிட்டு சண்டைக்கு போறதெல்லாம் நல்லா இருக்கா சொல்லு?
அவர் கிட்ட இங்க என்ன இல்லாம இருக்கு?
ஆல்ரெடி இவங்க கிட்ட இருக்கிற சொத்தை எல்லாம் இவங்க மேனேஜ் பண்ணி கொண்டு போனாலே போதும்.
இன்னும் எத்தனை தலைமுறை வந்தாலும் நீங்க கோடீஸ்வரங்களாவே இருக்கலாம்.
அப்படி இருக்கும்போது இவ்வளவு ரிஸ்க் எடுத்து ஏன் அவர் இதையெல்லாம் பண்ணனும்?
உன்னை பத்தி கூட யோசிக்க மாட்டாரா அவரு?
ஜானகி மேடம்ல இருந்து பிரசாத் சார் வரைக்கும் எல்லாரும் அவரை கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணிட்டாங்க.
ஆனா யார் சொல்லியும் அவர் கேட்கல. எல்லாருக்கும் தெரியாம அவர் என்னமோ பண்ணிட்டு இருக்காரு தேன்மொழி.
அது யாருக்கும் நல்லது இல்ல. எனக்கு அது மட்டும் தெரியும்.
நீதான் அவர்கிட்ட இதை பத்தி பக்குவமா பேசி இதெல்லாம் வேண்டாம்னு சொல்லணும்.
இத நான் உன் மேல இருக்கிற அக்கறையில தான் சொல்றேன்.
அவர் ஒவ்வொரு தடவ வெளிய போகும் போதும் வரும்போதும், பத்திரமா வீடு வந்து சேரனுமேன்னு எப்பவுமே உன்னால பயந்துகிட்டே இருக்க முடியுமா?” என்று அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து கேட்டான் மகேஷ்.
அர்ஜுன் அவளிடம் அவன் black shadow squad (BSS) ஐ பற்றி சொல்லும்போதே தேன்மொழியின் மனதில் இந்த பயம் வந்தது.
இருப்பினும் அவன் தொடர்ந்து தனது ஃப்ளாஷ்பாக் கதையை அவளிடம் சொல்லிக் கொண்டிருந்ததால் அப்போது அதை அவள் பெரிது படுத்தவில்லை.
அதன் பிறகும் அவர்களுக்கு மனம் விட்டு பேச நேரம் கிடைக்கவில்லை.
ஆனால் இப்போது மகேஷ் நிதர்சனத்தை நேருக்கு நேராக அவளிடம் சொன்னவுடன் அவளது பயம் அதன் எல்லையை கடந்தது.
இதற்கு முன் எப்படியோ... இப்போது மனதாலும், உடலாலும், அவள் அவனை தன் கணவனாக ஏற்றுக் கொண்டு விட்டாள்.
இந்த நிலையில் அவனுக்கு ஏதாவது ஒன்று தவறாக நடந்தால், அதை எப்படி அவனால் தாங்க முடியும்?
பதட்டமான முகத்துடன் அவனைப் பார்த்த தேன்மொழி “நீ நெஜமா தான் சொல்றியா மகேஷ்? அவர் துப்பாக்கிய எடுத்துட்டு கிளம்பி போனாரா?” என்று பயந்த குரலில் கேட்க,
“ஆமா பின்ன.. நான் என்ன பொய்யா சொல்றேன்? நீ வேணா நம்பிக்கை இல்லைன்னா போய் surveillance roomல செக் பண்ணு.
நான் இத உன் மேல இருக்கிற அக்கறையில தான்
சொல்றேன்..
எது எப்படியோ உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு.
நீ அவர் கூட சேர்ந்து வாழணும்னு முடிவு பண்ணிட்ட.. அப்புறம் உன் லைஃப் நல்லா இருக்கனும்ல?” என்று அக்கறையுடன் கேட்டான் மகேஷ்.
புரிந்தது என்று தலையாட்டிய தேன்மொழி, “நான் அவர்கிட்ட பேசி பார்க்கிறேன்.” என்று சொல்லிவிட்டு அங்கே இருந்து நேராக மகேஷ் சொன்னது போல surveillance roomற்க்கு சென்று அங்கே இருந்தவர்களிடம் மகேஷ் சொன்னதை மனதில் வைத்து காலை 5 மணி அளவில் ரெகார்ட் ஆன அனைத்து சிசிடிவி footageகளையும் ப்ளே செய்து காட்டச் சொன்னாள்.
12 மணி நேரங்களுக்கு பிறகு..
நடுக்கடலில் ஏராளமான சரக்கு கப்பல்கள் கப்பல்கள் சென்று கொண்டு இருந்தன.
அப்போது வானத்தில் 4,5 ஜெட் விமானங்கள் அந்த இடத்தை நோக்கி பறந்து வர,
அந்த சரக்கு கப்பல்களை சுற்றி தரை வழியிலும் ஏராளமான கப்பல்கள் அதை தாக்குவதற்கு தயாராக சுற்றி வளைத்தது.
அதனால் அந்த கொள்ளை கூட்டத்து தலைவன் பயத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு நடுநடுங்கினான்.
இருப்பினும் அர்ஜுனிடம் இருந்து இப்படி ஒரு தாக்குதலை அவன் ஏற்கனவே எதிர்பார்த்து காத்திருந்ததால்,
இந்த வாழ்வா சாவா போராட்டத்தில் அவர்கள் தங்களால் முடிந்தவரை போராடி பார்த்து விடுவது என்ற மனநிலையில் இருந்தார்கள்.
அர்ஜுனின் ஆட்கள் தங்களது தாக்குதலை ஸ்டார்ட் செய்ய அவளிடம் இருந்து சிக்கல் வருவதற்காக காத்திருந்தார்கள்.
இந்த தாக்குதலில் வெளிநம்பர்கள் வேறு யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சுற்றி ஐந்து கிலோ மீட்டருக்கு வேறு ஏதாவது சரக்கு கப்பல்களோ, நீர்மூழ்கி கப்பல்களோ இருக்கிறதா? என்று தன் ஆட்களுடன் சேர்ந்து ரேடார் கருவிகள் மூலம் செக் செய்து கொண்டு இருந்தான்.
அந்த கொஞ்ச நேரத்தை பயன்படுத்திக் கொண்ட கொள்ளை கூட்டத் தலைவன் எப்படியாவது அர்ஜுனை கொன்றுவிட்டால்,
இந்த பிரச்சனையில் இருந்து தங்களால் தப்பிக்க முடியும் என்று நினைத்து அவர்களிடம் இருந்த மீசைலை வானில் பறந்து கொண்டு இருந்த ஜெட் விமானங்களில் மீது எய்து தாக்குதல் நடத்தினார்கள்.
மற்றவர்கள் ரேடார் கருவியில் தங்களது கவனத்தை செலுத்தி கொண்டு இருந்தாலும், எதிரிகளின் தாக்குதல்களை கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்த கிளாரா அவர்கள் தங்களை தாக்குவதை கவனித்து அர்ஜுனிடமும், பிரிட்டோவிடமும் தெரிவித்தாள்.
இவ்வளவு ரிஸ்கான ஆபரேஷன் நடக்கும்போது இது மாதிரியான திடீர் தாக்குதல்களுக்கு எல்லாம் வாய்ப்பிருக்கிறது என்று ஏற்கனவே அவர்களுக்கு தெரியும் என்பதால்,
அவர்கள் அனைவருமே life jacket அணிந்து தயாராகத்தான் அங்கே வந்திருந்தார்கள்.
அதனால் ஒரு நொடியும் தாமதிக்காமல் கிளாரா ப்ளூடூத் மூலமாக “உடனே எல்லாரும் கீழ குதிங்க.” என்று இன்பர்மேஷன் கொடுத்தவுடன் அனைவரும் என்ன ஏது என்று ஒரு நொடி கூட யோசிக்காமல் எமர்ஜென்சி exist வழியாக கடலுக்குள் குதித்தார்கள்.
எதிரிகளின் தாக்குதலால் அவர்களது ஜெட் விமானங்கள் வானத்திலேயே வெடித்து சுக்குநூறாக சிதறி அதன் பாகங்கள் எல்லாம் கடலுக்குள் வந்து விழுந்தது.
கடலுக்குள் குதித்தவர்களை கப்பலில் சுற்றி வளைத்திருந்த ஆட்கள் காப்பாற்றினார்கள்.
வந்த கோபத்தில் இதற்கு மேலும் யாரைப் பற்றியும் கவலைப்படக்கூடாது என்று நினைத்த அர்ஜூன்,
அவர்களிடம் இருந்த சக்திவாய்ந்த வெடி குண்டுகளை அந்த கப்பல்களின் மீது எறிந்து அவர்களை ஒரேடியாக அளிக்கும்படி கட்டளையிட்டான்.
அந்த கொள்ளை கூட்டத்து தலைவன் தனது அடுத்த மீசைலை தயார் செய்து அவர்களின் மீது ஏவுவதற்குள் அர்ஜுனின் ஆட்கள் தங்களிடம் இருந்த வெடிகுண்டுகளை அவர்கள் மீது மழையாக பொழிய தொடங்கினார்கள்.
அதனால் டமால் டுமீல் என்று பலத்த சத்தத்துடன் வெடித்த குண்டினால் ஒரு பக்கம் அவர்கள் அனைவரும் கூண்டோடு கைலாசம் செல்ல,
அவர்கள் கொண்டு வந்த பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கொகைன் தீயில் கருகி அவர்களுடன் சேர்ந்து ஜெல சமாதியானது.
கிட்டத்தட்ட 10, 15 கப்பல்களை அவர்கள் அப்படி வெடி குண்டு வைத்து தகர்த்து இருந்ததால், அந்த இடம் முழுவதும் தகதகவென தீக் குழம்புகளுடன் பிரம்மாண்ட நெருப்பு ஜுவாலையாக அந்த இரவு நேரத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
இந்த குண்டுவெடிப்பு எந்த முன் அறிவிப்பும் இன்றி கணப்பொழுதில் நடத்தப்பட்டது என்பதால்,
எதிரிகளின் கப்பல்களை சுற்றி வளைத்திருந்த BSS Squadஇன் கப்பல்களும் அதில் கடும் பாதிப்பை சந்தித்தது.
எது எப்படி இருந்தாலும், முதலில் தங்களது Cheif-ஐ அங்கே இருந்து காப்பாற்றி வேறு எங்காவது அனுப்புவது தான் அவர்களது தலையாய கடமை என்பதால்,
சேதம் அடையாமல் இருந்த இரண்டு பிரைவேட் ஜெட்டுகள் அங்கே வந்து முதலில் அர்ஜுனையும், அவனுடன் வந்தவர்களையும் காப்பாற்றி அழைத்து சென்றது.
மகேஷின் பேச்சைக் கேட்டு அர்ஜுனுடன் BSS பற்றி பேச வேண்டும் என்ற முடிவில் இருக்கும் தேன்மொழிக்கு இந்த விஷயம் தெரிந்தால் என்னவாகும்?
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-55
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.