மஞ்சம்-54

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
யாருக்கும் தெரியாமல் தனது ஆட்களுடன் ஏ.கே பேலஸில் இருந்து வெளியேறிய அர்ஜுன் தனது சீக்ரெட் சொசைட்டியின் Central spot-ற்க்கு சென்றான்.

அவன் தனது ஐடியை லாகின் செய்து பார்க்கும்போது, ஏராளமானவர்கள் இவர்களுக்கு தெரியாமல் சட்டவிரோதமாக நடக்கும் கொக்கையின் பரிமாற்றத்தை பற்றி இன்பர்மேஷன் கொடுத்திருப்பது அதில் நோட்டிபிகேஷன் ஆக வந்தது.

அந்த விஷயம் தனக்கு ஏற்கனவே தெரியும் என்று பதிவிட்ட அர்ஜுன்,

“நம்மளோட பர்மிஷன் இல்லாம இந்த பூமி சுத்துறது கூட நடக் கக்கூடாது.

இப்பவே near by லொகேஷன்ல இருக்குறவங்க ஸ்ட்ரெயிட்டா அந்த ஹார்பருக்கு போய் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த ஷிப் எல்லாத்தையும் சுத்தி வளைங்க.

இன்னைக்கு நம்ம யாருன்னு மறுபடியும் எல்லாருக்கும் once prove பண்ண வேண்டிய டைம் வந்துடுச்சு.

இந்த உலகத்துல நல்லது கெட்டது எல்லாமே சரிசமமா இருக்கணும்.

அந்த சமநிலை குறையும் போதெல்லாம் நம்ம வேலையை நம்ம காட்டணும்னு அர்த்தம்.

But யார் எங்க எது பண்ணாலும், நமக்கு தெரியாம பண்ணக்கூடாது.

நமக்கு சேர வேண்டிய கமிஷன் வராம எந்த illegal ட்ரான்ஸாக்ஷனும் நடக்கக் கூடாது.

இந்த மிஷன்ல டைரக்டா நானே இன்வால்வ் ஆகுறேன்.” என்று சொல்லிவிட்டு உடனே அங்கிருந்து தனது பிரைவேட் heliport-ற்க்கு சென்று தனது பிரைவேட் ஜெட்டில் ஏறினான் அர்ஜுன்.

அவர்கள் அதிவேகமாக வேறொரு நாட்டை நோக்கி வானத்தில் சீறிப்பாய்ந்து பறந்து கொண்டிருந்தார்கள்.

அங்கே பல்லாயிர கணக்கான டன்கள் கொண்ட cocaine அடங்கிய கப்பலை வழிநடத்தி சென்று கொண்டிருந்த மாஃபியா கூட்டத்து தலைவன் அவனிடம் ஆர்டர் கொடுத்து இருந்தவனிடம்,

“யோவ் என்னய்யா நடக்குது இங்க? SS SQUAD டம்மி ஆயிடுச்சு.

இனிமே அவனுங்களால எந்த பிரச்சனையும் வராது. அவர்களுக்கு கமிஷன் கொடுக்க தேவையில்லை.

இனிமே அவனுங்கள கண்டுக்காம நம்ம இஷ்டத்துக்கு எதை வேணாலும் எங்க வேணாலும் எக்ஸ்போர்ட் பண்ணிட்டு போகலாம்னு நீ பாட்டுக்கு பேசி என்னை உசுப்பேத்தி விட்டதுனால தானே,

நான் ரிஸ்க் எடுத்து நாலஞ்சு பார்ட்டிஸ் கிட்ட இருந்து கலெக்ட் பண்ணி இவ்ளோ cocaine-னையும் உனக்கு டெலிவரி பண்ண ரெடி பண்ணேன்!

நான் இன்னும் ‌ எங்க ஹார்பர்ல இருந்து கிளம்ப கூட இல்ல.

பட் அவனுங்களுக்கு அதுக்குள்ள விஷயம் தெரிஞ்சிருச்சு.

அவனுங்க ஆளுங்க தனியா வந்தாலே நம்மளால சமாளிக்க முடியாது.

இப்ப டைரக்ட்டா அவங்களோட chief-ஏ இந்த விஷயத்துல இன்வால்வ் ஆகுறானாம்.

எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல அவனுங்க இங்க வந்து இந்த இடத்தை சுத்து போட்டுருவாங்க.

சரக்க இங்க இருந்து safeஆ கொண்டு போறத விட நான் உயிரோட எந்த சேதாரமும் இல்லாம வீட்டுக்கு போகணுமே!

இப்ப என்ன பண்றது? எனக்கு என்னமோ இன்னைக்கு மொத்தமா நம்ம அவனுங்க கிட்ட மாட்டி சட்னியாக போறோம்னு தோணுது.” என்று ஆங்கிலத்தில் கால் செய்து சொல்ல,

“டேய் டேய்.. வாய மூடு டா. தொட நடுங்கி பையா!

அவனுங்க இன்ஃபர்மேஷன் கிடைச்சு இங்க வர்றதுக்குள்ள நீதான் எப்படியாவது அங்க இருந்து கிளம்பனும்.

நீ ஹார்பர விட்டு எஸ்கேப் ஆகிட்டா மட்டும் போதும். அவனுங்களால எதுவும் பண்ண முடியாது.

ஏற்கனவே நம்ம இங்க இருந்து அந்த கண்ட்ரிக்குள்ள அதை எடுத்துட்டு போறதுல இருந்து லோக்கல் மார்க்கெட்ல டிஸ்ட்ரிபியூட் பண்ற வரைக்கும் ஒவ்வொருத்தனுக்கும் கமிஷன் குடுக்கிறோம்.

இதுல நடுவுல இவனுங்களுக்கும் வேற கமிஷன் கொடுக்கணும்னா நமக்கு எவ்ளோ லாஸ் ஆகும்னு யோசிச்சு பாத்தியா இல்லையா?

இந்த சிஸ்டம்ம எவன் கொண்டு வந்ததுன்னு எனக்கு தெரியல.

பட் இத முடிச்சு வைக்க போறது நீயும் நானுமா தான் இருக்கணும்.

இப்படி ஒவ்வொருத்தனையும் பார்த்து பயந்துட்டு இருந்தா முதல்ல நம்மளால இப்படி illegalஆ டிரக்ஸ் சேல் பண்ண முடியுமா?

இல்ல ஒரு கண்ட்ரில இருந்து இன்னொரு கண்ட்ரிக்கு எக்ஸ்போர்ட் பண்ற அளவுக்கு பெருசா வளர்ந்திருக்க முடியுமா?

நான் சொல்றத கேட்டு பக்காவா செஞ்சா யார் கிட்டயும் மாட்டாம எந்த பிரச்சனையும் வராம நீ இந்த பக்கம் வந்துடலாம்.

நீ எங்க பாடர் கிட்ட வந்துட்டா மட்டும் போதும் மத்தது எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.” என்று சொல்லி அவன் தன் அழைப்பை துண்டித்து விட்டான்.

என்ன தான் தன்னுடைய நண்பன் ஆறுதல் சொன்னாலும் கூட,

அந்த உலகப் புகழ்பெற்ற SS SQUADஐ பற்றி நினைத்து அவனால் பயப்படாமல் இருக்க முடியவில்லை.

ஆனால் இப்போது பல்லாயிரக் கணக்கான சரக்குகளை கொண்டு வந்து சரக்கு கப்பலில் ஏற்றிய பிறகு அவன் பின் வாங்கினாலும் இழப்பு அவனுக்குத்தான்.

அதனால் இந்த வாழ்வா சாவா போராட்டத்தில் தைரியமாக சண்டையிடுவதை தவிர தனக்கு வேறு வழியில்லை என்று நினைத்த மாஃபியா கும்பலிளின் தலைவன்,

அந்த நாட்டிற்குள் உள்ள சிறிய கிராமத்தில் பதுங்கி இருந்த தனது குடும்பத்தினருக்கு எங்கேயாவது யாருக்கும் தெரியாத வேறொரு இடத்தில் சென்று பதுங்கி இருங்கள் என்று கால் செய்து இன்ஃபர்மேஷன் கொடுத்துவிட்டு,

தனது ஆட்களுடன் பொருட்களை நாடு கடத்தும் பணியில் ஈடுபட தொடங்கினான்.

அர்ஜுனிடம் இருந்து ஆர்டர் கிடைத்த உடனேயே அந்த லொகேஷனுக்கு அருகில் உள்ள SS SQUADல் உள்ள MARINE TEAMஐ சேர்ந்த ஆட்கள்,

தங்களிடம் உள்ள பிரம்மாண்ட நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் கடற்படை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் அதிரவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்ட போர்ப்படை கப்பல்கள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு அந்த ஹர்பருக்கு வந்தார்கள்.

அவர்கள் இவனை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி அவனது சரக்கு கப்பல்களை தங்கள் வசப்படுத்துவதற்குள்,

இதை அவன் முன்பே எதிர்பார்த்து இருந்ததால் யாருக்கும் தெரியாத வேறு ஒரு பாதையை பயன்படுத்தி தன் கப்பல்களுடன் நடுக் கடலை நோக்கி பயணிக்க தொடங்கினான் மாஃபியா குழு தலைவன்.

அந்த செய்தி அந்த நாட்டை நோக்கி தனது ஜெட் விமானத்தில் பறந்து வந்து கொண்டிருந்த அர்ஜுனுக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனே தங்கள் சார்பாக அந்த லீடருக்கு “நீ இங்க இருந்து தப்பிச்சிடா, உன்னால இவ்வளவு கொக்கைணையும் அந்த கண்ட்ரிக்கு எடுத்துட்டு போயிட முடியும்னு கனவு காணாத டா.

நாங்க நினைச்சா நடுக் கடல்ல வச்சு கூட எங்களால உன்னை தூக்க முடியும்.

உனக்கு நான் லாஸ்ட்டா ஒரே ஒரு சான்ஸ் குடுக்கிறேன்.

நீ எங்களுக்கு குடுக்க வேண்டிய கமிஷனை விட டென் டைம்ஸ் அதிகமா குடுத்துட்டு... உன்னையும், உன் ஆளுங்களையும், நீங்க கொண்டு போற சரக்கையும், எதுவும் பண்ணாம விட்டுடறேன்.

இத உங்க ஃபைனல் வார்னிங்கா எடுத்துக்கோங்க!” என்று ஒரு அபிஷியல் நோட்டீஸ் அனுப்பினான்.

ஏற்கனவே அந்த லீடரும் அவனது நண்பனும் சேர்ந்து கொண்டு இப்படி இவர்களுக்கு நடுவில் எதற்கு கமிஷன் கொடுக்க வேண்டும்?

தலைமை தள்ளாடும் போது நாம் தனியாக செயல்படக் கூடாதா? என்று நினைத்து தான் இந்த வேலையையே பார்த்திருக்கிறார்கள்.

இப்போது அர்ஜுன் பத்து மடங்கு அதிகமாக கமிஷன் தொகையை கேட்கும் போது,

அவன் எப்படி அதை கொடுக்க தயாராக இருப்பான்?

அப்படி அவனிடம் 10 மடங்கு கமிஷன் கொடுத்து அந்த பொருளை சந்தைப்படுத்தி விற்பதற்கு பதிலாக,

அந்த பல்லாயிரம் கோடி மதிப்புடைய கொக்கைன் அனைத்தையும் கடலில் கொட்டி கரைத்துவிட்டு வெறும் கையோடு அவன் வீடு திரும்பி விடலாம்.

அதனால் என்ன ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்திருந்த மாஃபியா குழு தலைவன்,

“Do you are best. And I will F**k the rest.” என்று அவனுக்கு ரிப்ளை அனுப்பினான்.

தன்னை மதிக்காமல் அவன் உண்டாக்கினப்படுத்தி பேசி விட்டதால்,

அர்ஜுனின் கோபம் அதன் எல்லையை கடந்து விட்டது.

அதனால் அவனது பொகைன் மட்டுமல்ல, அதை அவன் கொண்டு செல்லும் கப்பலின் கடைசி பாகம் கூட கரை தாண்டக் கூடாது என்று முடிவெடுத்து விட்டான்.

எப்படியும் அவன் கரையைக் கடக்க குறைந்தது மூன்று நாட்களாவது ஆகும் என்பதால்,

அதற்குள் தன்னால் சுலபமாக அங்கே சென்று விட முடியும் என்று நினைத்த அர்ஜுன் அவர்களது மோசமான தலைவிதியை தன் ஸ்டைலில் எழுதுவதற்கான ஆர்டர்களை அவனது டீமில் உள்ளவர்களுக்கு பிறப்பிக்க தொடங்கினான்.

5 மணி நேரங்களுக்கு பிறகு..

அர்ஜுனின் பேலசில் ‌ சாவகாசமாக தூங்கி எழுந்த தேன்மொழி முதலில் அர்ஜுனை தான் தேடினாள்.

வழக்கம்போல அவன் அங்கே இல்லாமல் போக, “நாங்க ரெண்டு பேருமே லேட்டா தானே தூங்குனோம்!

இன்னைக்கு கூட இவர் சீக்கிரமா எழுந்திருச்சு ஆபீஸ் போயிட்டாரா?

அதுக்குள்ள என்ன அவசரம்? என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போய் இருக்கலாம் இல்ல!” என்று நினைத்த தேன்மொழி வாடிய முகத்துடன் எழுந்து சென்று ரெப்ரஷ் ஆகிவிட்டு கீழே சென்றாள்.

ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து ஜானகியும், விஜயாவும் டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருக்க,

அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்த ஆருத்ரா டிராயிங் புக்கை வைத்து ஏதோ வரைந்து கொண்டு இருந்தாள்.

அங்கே ஆதவன் இல்லாததால் தன் அம்மாவின் அருகில் சென்று அமர்ந்த தேன்மொழி,

“ஆதி எங்கம்மா ஆளைக் காணோம்!” என்று கேட்க,

அர்ஜுனுக்கும் தேன்மொழிக்கும் நடுவில் நேற்று இரவு நடந்திருக்க வேண்டியது எல்லாம் சரியாக நடந்ததா? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மேலும் கீழும் அவளை பார்த்துக் கொண்டிருந்தாள் ஜானகி. ‌

அப்போது என்ன தான் தேன்மொழி மேக்கப் போட்டு மறைத்திருந்தாலும் கூட,

அவளது கழுத்தோரம் இருந்த அர்ஜுனின் பல் தடத்தை எப்படியோ ஸ்கேன் செய்து கண்டுபிடித்த ஜானகிக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது.‌

“அவனா? ஏதோ சின்ன பையன் மாதிரி அங்க தான் நம்ம ஊர்ல போய் கிரவுண்ட்ல எப்ப பார்த்தாலும் விளையாடிட்டே இருக்கான்னு பார்த்தா..

இங்க வந்தும் உன் புருஷனோட பெரிய பையன் கூட வெளியே கார்டன்ல கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கான்.” என்று விஜயா தன் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு சொல்ல,

சித்தார்த்தை விஜயா அர்ஜுனின் மகனாக மட்டுமே பார்ப்பதை நினைத்து ஜானகிக்கு கஷ்டமாக இருந்தது.

அவளது முக மாற்றத்தை கவனித்துக் கொண்டிருந்த தேன்மொழி,

“இந்த அம்மாவுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியவே மாட்டேங்குது.

அதென்ன என் புருஷனோட பையன்?

அப்ப அவன் ஏன் பையன் இல்லையா?” என்று நினைத்து கோபப்பட்டு,

“ஓஹோ.. என் பையன் கூட சேர்ந்து விளையாடுறானா?

மாமனும், மச்சானும் இப்போல இருந்து நல்லா பேசி பழகட்டும்.

அப்ப தான் பியூச்சர்ல அவங்க ரிலேஷன்ஷிப் நல்லா இருக்கும்.” என்று சொல்லிவிட்டு சிரித்து சமாளித்தாள்.

“அவங்க அம்மா வந்ததுக்கு அப்புறம் தேன்மொழி முன்னாடி மாதிரி இல்லாம சேஞ்ச் ஆகிடுவாளோனு நெனச்சு மனசுல உறுத்திட்டே இருந்துச்சு.

பரவால்ல என் மருமக எது நடந்தாலும் மாறாம ஒரே மாதிரியே இருக்கா.

இவ தான் அர்ஜுனுக்கு கரெக்டா இருப்பான்னு நான் நெனச்சத எப்பயும் தேன்மொழி பொய்யாக்கினதே இல்லை.

என்னோட புள்ளைங்க எல்லாரும் ஹாப்பியா இருக்காங்க.

இவங்க எல்லாரும் எப்பயும் இதே மாதிரி இருந்தா எனக்கு அதுவே போதும்.” என்று நினைத்த ஜானகி நிம்மதி போய் மூச்சு விட்டுவிட்டு,

“அர்ஜுன் எத்தனை மணிக்கு கிளம்பி ஆபீஸ் போனான்?

உன் கிட்ட சொல்லிட்டு போனானா மா?

நான் தூங்கி எந்திரிச்சு பார்க்கும்போதே அவன் வீட்ல இல்ல.

ஆகாஷ் கிட்ட கேட்டா அவனும் தெரியலன்னு சொல்றான்.” என்று தேன்மொழியிடம் கேட்டாள்.

“நானே இப்ப தான் அத்தை தூங்கி எந்திரிச்சேன்.

அவர் எப்போ என் கிட்ட சொல்லிட்டு வெளிய கிளம்பி போய் இருக்கிறாரு? நீங்களே சொல்லுங்க!

நான் தூங்கி எந்திரிக்கிறதுக்கு முன்னாடியே எப்பயும் அவர் எங்கேயாவது கிளம்பி போயிடராரு.

அப்புறம் கரெக்டா தூங்க போற டைம்க்கு தான் திரும்ப வர்றாரு.

என் கூட ஸ்பென்ட் பண்றதுக்கு கூட அவருக்கு டைம் இருக்க மாட்டேங்குது.

அந்த அளவுக்கு உங்க பையன் பிஸி மேன்!” என்று தேன்மொழி சலிப்புடன் சொல்ல,

“நானும் பல வருஷமா அவன் கிட்ட சொல்லி பார்த்துட்டேன் தேன்மொழி.

நான் என்ன சொன்னாலும் அவன் கேட்க மாட்டேங்கிறான்‌.

நீதான் அவன் கிட்ட பேசி பார்க்கணும். அம்மா சொல்லி கேக்கலைன்னாலும், பொண்டாட்டி சொன்னா கேட்டுதானே ஆகணும்?” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் ஜானகி.

“இன்னைக்கு அவர் வீட்டுக்கு வரட்டும்.

எனக்கு அவர் கிட்ட பேசுறதுக்கு நிறைய இருக்கு.

சரிங்க அத்தை நான் போய் சாப்பிட்டுட்டு வரேன். எனக்கு பசிக்குது.” என்ற தேன்மொழி சாப்பிடுவதற்காக எழுந்து டைனிங் ஹாலை நோக்கி சென்றாள்.

- மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-54
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.