மஞ்சம்-51

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
சித்தார்த் வந்து அர்ஜுன் அனைவரையும் சாப்பிட அழைப்பதாக சொல்லி தேன்மொழியையும், அவளது குடும்பத்தினரையும் டைனிங் ஏரியாவிற்கு அழைத்து சென்றான்.

வழக்கமாக அவர்கள் பயன்படுத்தும் டைனிங் ஏரியா இல்லாமல் இப்போது அவர்கள் வீட்டில் பங்க்ஷன் arrange செய்யப்பட்டு இருப்பதால்,

இரண்டாவது மாடியில் உள்ள விசாலமான டைனிங் ஏரியாவிற்கு அவர்கள் அனைவரும் சாப்பிட சென்றார்கள்.

இப்போது அர்ஜுனின் குடும்பத்தினர்கள் மட்டுமே அங்கே இருந்ததால் அவர்களுக்காக buffetல் விதவிதமான உணவு வகைகள் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தது..

தனித்தனியான food கோர்ட்டுகளில் இந்திய உணவுகள், சிற்றுண்டிகள், கேண்டி shop, ஐஸ்கிரீம் பார்லர், துரித உணவு ஸ்டால், பாரம்பரிய ரஷ்ய உணவுகள் என்று அங்கே ஏராளமாக அரேஞ்ச் செய்யப்பட்டு இருந்தது.

தேன்மொழியுடன் தன் அம்மாவை வீழ்ச்சாரில் தள்ளிக் கொண்டு வந்த ஆதவன் அதை எல்லாம் தன் வாயை பிளந்து கொண்டு சுற்றி பார்த்துவிட்டு,

“அக்கா இங்க மொத்தமாவே ஒரு 25 பேர் கூட இருக்க மாட்டாங்க.

இங்க வேலை பாக்குறவங்களோட சேர்த்துனா கூட கிட்டத்தட்ட 100 பேர் இல்லனா 200 பேர் இருப்பாங்க.

அதுக்கு எதுக்கு அக்கா இத்தனை அரேஞ்ச் பண்ணி இருக்காங்க?

எனக்கு என்னமோ இங்க ஃபுட் பெஸ்டிவல் நடக்குற மாதிரியே இருக்கு.

அங்க கூட இத்தனை வகையான ஐட்டம்ஸ் இருக்குமானு தெரியல.

இதெல்லாம் நான் பார்த்ததே இல்லை." என்று ஆச்சரியமாக சொல்ல,

“முதல்ல இதை எல்லாம் பார்க்கும்போது எனக்கும் இப்படித்தான் இருந்துச்சு.

ஒரு நாள் உங்க மாமா என்ன வெளிய கூட்டிட்டு போய் நாங்க ரெண்டு பேர் சாப்பிடுறதுக்கு என்னமோ பத்து பேர் சாப்பிடற மாதிரி ரெஸ்டாரண்டிலயே அவ்ளோ டிஷ் விதவிதமா ஆர்டர் பண்ணாரு.

இன்னைக்கு எங்க மேரேஜ் நடந்திருக்கு.

ஈவினிங் செலிப்ரேஷன் பார்ட்டி ஆர்கனைஸ் பண்ணி இருக்காங்க.

அதுக்காகவும் சேர்த்து தான் இவ்ளோ அரேஞ்ச்மெண்ட்ஸ் பண்ணி இருக்காங்கன்னு நினைக்கிறேன்.

இன்னைக்கு நம்ம இங்க இருக்கிற எல்லா டிஷ்சையும் ட்ரை பண்ணி பார்க்கலாம் ஓகேவா?

இந்த மாதிரி நான் விதவிதமா இங்க சாப்பிடும் போதெல்லாம், அங்க நீயும் அம்மாவும் சாப்டீங்களா இல்லையான்னு நினைச்சு எனக்கு மனசுக்குள்ள கஷ்டமாவே இருக்கும்.

இன்னைக்கு தான் அந்த ஃபீலிங் இல்லாம நான் நிம்மதியா உங்க கூட சாப்பிட போறேன்.

எனக்கு இங்க வந்ததுக்கப்புறம் தினமும் ரஷ்யன் ஃபுட் சாப்பிட்டு பழகிருச்சு.

இருந்தாலும் எனக்காக தனியா இந்தியன் ஃபுட்டும் செய்வாங்க.‌

இங்க சமைக்கிறதுக்காகவே நிறைய செஃப் வொர்க் பண்றாங்க ஆதி.

அவங்க சும்மா ஒரு காபி போட்டு கொடுத்தாலே செம டேஸ்டா இருக்கும் தெரியுமா?"

என்று தேன்மொழி அங்கே இருக்கும் உணவுகளை பற்றி பேச பேச, எதிரில் இருந்த உணவுகள் அனைத்தையும் ஒரே ஆளாக இப்போதே சாப்பிட்டு காலி செய்ய வேண்டும் ‌ என்ற அளவிற்கு ஆதவனிற்க்கு எச்சில் ஊரியது.

உண்மையில் விஜயாவிற்கு கூட அப்படித்தான் இருந்தது.

இருப்பினும் தன் ஆசையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு,

“நேத்து ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி ஏதோ அரைகுறையா சாப்பிட்டது.

நாங்க சாப்பிட்டு எவ்ளோ நேரம் ஆகுது! அக்காவும் தம்பியும் இப்படியே எவ்ளோ நேரம் நின்னு பேசிட்டு இருப்பீங்க?

எப்பயும் சாப்பாடு பசிக்கு சாப்பிடணும் ருசிக்கு சாப்பிடக்கூடாது.

வயித்துக்கு எது நல்லதோ அதை மட்டும் சாப்பிட்டா போதும்.” என்று சொல்ல,

“அட போம்மா, இது என் கல்யாண சாப்பாடு.‌

அதுல கூட கணக்கு பார்த்து சாப்பிடனுமா? டேய் ஆதவா அம்மா சாப்பிட்டாலும் சரி சாப்பிடலன்னாலும் சரி.

இன்னைக்கு நீயும் நானும் சேர்ந்து ஒரு புடி புடிக்கலாம் வா!" என்ற தேன்மொழி ஆதவனின் தோள்களில் கை போட்டு அவனை அழைத்துச் சென்றாள்.

அவர்கள் இருவரும் தங்களுக்கு பிடித்தமான உணவுகளை சாப்பிட,

விஜயாவின் கைகளிலும் ஒரு தட்டையும் ஸ்பூனையும் எடுத்துக் கொடுத்த தேன்மொழி “நாங்க அப்படியே லைனா எல்லா ஃபுட்டையும் டேஸ்ட் பண்ண போறோம் மா.

உங்களுக்கு எது வேணுமோ அதை மட்டும் நீங்க கேட்டு வாங்கி சாப்பிடுங்க.” என்றாள்.

முதலில் வீம்பிற்காகவே எதுவும் வேண்டாம் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்த விஜயா,

அங்கே இருந்த அட்ராக்டிவான உணவு வகைகளை பார்த்தவுடன் குழந்தையாகவே மாறி தன் விருப்பம் போல் பிடித்த அனைத்தையும் கேட்டு வாங்கி சாப்பிடத் தொடங்கினாள்.

அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு தேன்மொழி சாப்பிட வந்திருப்பாள் அவளுடன் சேர்ந்து தானும் சாப்பிடலாம் என்ற ஆசையில் அங்கே வந்த அர்ஜுனுக்கு தேன்மொழி அவள் அம்மா மற்றும் தம்பி உடனே சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் புஷ் என்று போய்விட்டது.

இருப்பினும் மனம் தளராமல் அவன் அவளை பார்த்து “ஒய் ஹனி!

ஹனி பேபி! இங்க பாருடி!” என்று சொல்லி அழைக்க,

தன் தம்பியுடன் சேர்ந்து அந்த உணவுகளை ருசித்து சாப்பிடுவதில் பிஸியாக இருந்த தேன்மொழி அவனை கண்டுகொள்ளவே இல்லை.

அதனால் கடுப்பான அர்ஜுன் “அடிப்பாவி! உன் ஃபேமிலில இருக்கிறவங்க வந்ததுக்கு அப்புறம் உன் புருஷனை கண்டுக்கவே மாட்டேங்குறியா நீ?

இன்னைக்கு நைட்டு உனக்கு இருக்கு‌‌ டி.

நீ என்ன இக்னோர் பண்ணி டார்ச்சர் பண்றதுக்கு எல்லாம் சேர்த்து உன்னை விடிய விடிய வச்சு செய்றேன்.” என்று நினைத்து ஆகாஷிடம் பேசுவதற்காக அவனைத் தேடி தன் கண்களை சுழல விட்டான்.

அப்போது லிண்டாவின் வாயில் ஒரு குலாப் ஜாமுனை ஊட்டி விட்ட ஆகாஷ் அதை அவள் சாப்பிடுவதற்கு முன்பாகவே தானே அவள் வாயில் இருந்து ‌ அதை கடித்து எடுத்து ‌ சாப்பிடுவதை கண்டு எரிசலடைந்த அர்ஜுன்,

“அடப்பாவி டேய்.. இன்னைக்கு எனக்கு தான்டா மேரேஜ்.‌

என் பொண்டாட்டி என்ன கண்டுக்கவே மாட்டேங்குறா..‌

பட் நீ கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகியும் ‌ எல்லார் முன்னாடியும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம லிண்டா கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கியா?

நல்லா வாழ்றடா! இதுதான் கொடுத்து வச்ச வாழ்க்கை.‌

ஆனா இதெல்லாம் எனக்கு என்னைக்கு நடக்கப்போகுதோ தெரியல!” என்று தனக்குள் புலம்பியவன்,

தன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு பிரிட்டோபிடம் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களைப் பற்றி கேட்பதற்காக அவனைத் தேடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அப்போது கையில் ஒரு பெரிய கோன் ஐஸ்கிரீமை வைத்திருந்த பிரிட்டோ ‌ அதை கிளாராவுக்கு அருகில் கொண்டு சென்று,

“இப்ப இந்த ஐஸ்கிரீமை நம்ம ரெண்டு பேரும் போட்டி போட்டு சாப்பிட போறோம்.‌

லாஸ்ட்டா யார் சாப்பிட்டும்போது ஐஸ்கிரீம் காலியாகுதோ, அவங்கதான் வின்னர்.

யார் ஜெயிக்கிறாங்களோ இந்த மாசம் ஃபுல்லா அவங்க சொல்றதை தோக்குறவங்க கேக்கணும்.

இதுதான் கேம். நல்லா இருக்கா? உன் கூட சேர்ந்து விளையாடுறதுக்காக நான் இதை கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சேன்.‌

வா சீக்கிரம் ஐஸ்கிரீம் உருகுறதுக்குள்ள விளையாடலாம்." என்று சொல்லி அந்த ஐஸ்கிரீமில் இருந்து ஒரு பைட் கடித்து சாப்பிட தொடங்கினான்.

உடனே அந்த போட்டியில் எப்படியாவது ஜெயித்து இந்த ஒரு மாதம் முழுக்க பிரிட்டோவை ஆட்டி வைக்க வேண்டும்.‌

கிடைத்த இந்த அரிய வாய்ப்பை தவற விட்டுவிடக் கூடாது என்று நினைத்த கிளாரா ‌ தானும் வேகமாக அந்த ஐஸ்கிரீமை சாப்பிட தொடங்கினாள்.

இப்படி அவள் ஒரு பக்கம் சாப்பிட, அவன் ஒரு பக்கம் சாப்பிட,

அந்தக் குழுமையான ஐஸ்கிரீம்க்கு நடுவில் அவர்களின் இதழ்கள் நான்கும் அவ்வப்போது சந்தித்துக் கொண்டன.

தன் ஒற்றை கையை அவளது முதுகில் வைத்து அவளை தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்ட பிரிட்டோ,

அந்த போட்டியில் ஜெயிக்கும் எண்ணம் எல்லாம் இல்லாமல் அவனால் முடிந்த‌ வரை கிளாராவுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தான்.

‌ அதை பார்த்து வாயடைத்து நின்று விட்ட அர்ஜுன்,

“டேய் டேய்.. இது எல்லாம் விளையாட்டா டா?

ஓரமா அவள கூட்டிட்டு வந்து நல்லா விளையாடுற டா நீ..

என்னடா நடக்குது இங்க? இன்னைக்கு எனக்கு தான் மேரேஜ்.

ஆனா என்ன தவிற மத்த எல்லாரும் அவங்க ஆள் கூட ஜாலியா இருக்கீங்க!

ஆனாலும் ஒரு மனுசனை இப்படி எல்லாம் புண்படுத்தக் கூடாதுடா!

போங்கடா போங்க! போய் எல்லாரும் நல்லா இருங்க.

இப்ப நான் தான் இங்க வெட்டி ஆஃபிசர்.‌

நானே எல்லா வேலையையும் பார்க்கிறேன்.” என்று நினைத்து தன் வேலைகளை பார்க்க சென்று விட்டான் அர்ஜுன்.

அப்போதில் இருந்து ஈவினிங் பார்ட்டி முடியும் வரையிலும் அர்ஜுன் பிஸியாகவே இருந்தான்.

வெளியில் வேறு எங்கேயாவது பார்ட்டி வைத்தால் அனைத்து பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளும் தங்களது கண்ட்ரோலில் இருக்காது என்பதால்,

அர்ஜுன் அதையும் அரண்மனை போன்ற தன் வீட்டிலேயே அரேஞ்ச் செய்து விட்டான்.

பார்ட்டிக்கு அழகிய ப்ளூ நிற லெகங்காவில் மார்டனாக தேன்மொழி தயாராகி கீழே வர,

அர்ஜுன் அவள் ஆடைக்கு மேட்ச் ஆக அவனும் ப்ளூ நிறத்தில் கோட் சூட் அணிந்திருந்தான்.

அவனது இதயத்திற்கு அருகில் ஒரு பெரிய தங்கத்தாலேயே வடிவமைக்கப்பட்டிருந்த ஃபீனிக்ஸ் பறவை புரூச் ஒன்றை அணிந்து டிப்டாப் ஆக தயாராகி இருந்தான் அர்ஜுன்.

அவர்கள் இருவரையும் தவிர அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் வெள்ளை மற்றும் ஸ்கை ப்ளூ நிறத்தில் ஒரே மாதிரியாக ஆடை அணிந்து இருந்தார்கள்.

அங்கே வந்திருந்த பெரும் பணக்காரர்கள், அர்ஜுனின் பிசினஸ் பார்ட்னர்கள், நண்பர்கள் என்று அனைவரும் அவனது திருமணத்திற்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு தங்களது திருமண பரிசை அதற்கான கவுண்டரில் கொடுத்துவிட்டு சென்றார்கள்.

பங்க்ஷன் நடந்து முடிந்து அனைவரும் சாப்பிட்டு முடித்து அவரவர் அறைக்கு செல்ல கிட்டத்தட்ட மணி 11 ஆகிவிட்டது.

அதனால் முதலிரவிற்கு தனியாக ஜானகி அரேஞ்ச் செய்து வைத்திருந்த பட்டுப்புடவையை கட்டிக் கொள்ளாமல்,

“ஐயோ அத்தை ஆல்ரெடி எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.

அங்க ரிசப்ஷன் நடக்கும்போது நின்னுக்கிட்டே இருந்தது கால் வேற வலிக்குது.

இதுக்கு மேல இன்னொரு டிரஸ் சேஞ்ச் பண்ணி ரெடியாகறதுக்கு எல்லாம் என் பாடில ட்ரெண்ந்த் இல்ல.

என்ன விட்ருங்க ப்ளீஸ்!” என்று அவளிடம் காலில் விழாத குறைகயாக கெஞ்சி இறுதியில் தனக்காக காத்திருந்த மேக்கப் ஆர்டிஸ்ட் வந்து லேசாக டச்அப் மட்டும் செய்தவுடன் தனது நீண்ட லெகங்காவை தூக்கிப் பிடித்துக் கொண்டு தங்களது அறையை நோக்கி நடந்து சென்றாள் தேன்மொழி.

காலையில் இருந்து நடக்கும் அனைத்தையும் ஒரு ஓரமாக சைலன்டாக நின்று எதிலும் தலையிடாமல் கவனித்துக் கொண்டிருந்த மகேஷ் அவளைப் பார்த்துவிட்டு அவள் அருகில் சென்றான்.

அவனை கவனித்த தேன்மொழி நின்று அவனை திரும்பி பார்த்து,

“ஓய் மகேஷ் எங்க போயிட்ட நீ?

எல்லாரும் இங்கதான் இருக்காங்க ஆனா உன்ன மட்டும் ஆளையே காணோம்!

இன்னைக்கு எவ்ளோ இம்பார்டன்ட் ஆன டே!

அர்ஜுன் எனக்காக என் அம்மாவையும், தம்பியையும் இங்க கூட்டிட்டு வந்துட்டாரு.

நான் அவங்க கிட்ட உன்னை இன்ட்ரோ பண்ணி வைக்கலாம்னு நினைச்சேன்.

பட் எவ்ளோ தேடிப் பார்த்தும் என்னால உன்னை கண்டுபிடிக்கவே முடியல.

கிளாரா கிட்ட உன்ன பத்தி கேட்கலாம்னு நினைச்சேன்.

கரெக்டா நீயே வந்துட்ட!” என்று உற்சாகமான குரலில் சொல்ல,

தூரத்தில் இருந்து பார்த்ததை விட இப்போது மிக அருகில் அந்த ஜொலிக்கும் தங்க எம்பிராய்டரி வேலைப்பாடுகள் உள்ள ப்ளூ நிற ஆடம்பர லெகங்காவில் தேன்மொழி பேரழகியாக ஜொலித்தால்,

அப்படியே அவளை மெய் மறந்து பார்த்த மகேஷ், “இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க!” என்று தன்னையும் மீறி அவளிடம் சொல்லிவிட்டான்.

அவனை தன் நண்பனாக ஏற்றுக் கொண்ட தேன்மொழி அவனது வார்த்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்,

“தேங்க்ஸ் மகேஷ்! என்ன கண்ணாடில பாக்கும்போது எனக்கே அப்படி தான் தோணுச்சு.

இதுக்கு எல்லா credits-ம் அர்ஜுனுக்கு தான் கிடைக்கணும்.

அவர்தான் நான் என்ன டிரஸ் போடணும், எப்படி ஹேர் ஸ்டைல் பண்ணனும்னு கூட எல்லாத்தையும் பார்த்து பார்த்து சூஸ் பண்ணி கொடுத்தாரு.” என்று பெருமிதத்துடன் சொல்ல,

அவனைக் கண்டாலே பயந்து ஓடிக் கொண்டிருந்த தேன்மொழி இப்போது வாய்க்கு வாய் அர்ஜுன் அர்ஜுன் என்று என்னமோ இவள் தான் அவனுக்கு பெயர் வைத்ததைப்போல,

ஆசையாக அவன் பெயரை சொல்லி அழைப்பதை பார்க்கவே அவனுக்கு எரிச்சலாக இருந்தது.

அவர்கள் இருவருக்கும் நடுவில் நெருக்கம் கூடிக் கொண்டே செல்வதை அவனால் உணர முடிந்தது.

அதனால் எப்போதும் இவளை விட்டு இரண்டு அடி தள்ளி நிற்பது தான் தனக்கு நல்லது என்று நினைத்த மகேஷ்,

“நீ ஹாப்பியா இருக்கியா தேனு?” என்று கேட்டுவிட்டு அவள் முகத்தை காதல் ஏக்கங்களை கண்களில் தேக்கி வைத்து பார்க்க,

“ம்ம்.. எனக்கென்ன! நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.

என்னை பைத்தியக்காரத்தனமா லவ் பண்ற அர்ஜுன் மாதிரி எனக்கு ஒரு நல்ல ஹஸ்பண்ட் கிடைச்சிருக்காரு.

என் ஃபேமிலி என் கூட இல்லாதது மட்டும்தான் எனக்கு குறையா இருந்துச்சு.

இப்ப அவங்களும் இங்க வந்துட்டாங்க.

இதுக்கு மேல எனக்கு என்ன வேணும் சொல்லு மகேஷ்?

கடவுள் கடைசில என்ன ஆசிர்வாதிச்சுட்டாரு.

நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.

என் லைஃப்ல இதுவரைக்கும் நான் எப்பயும் இந்த மாதிரி சந்தோஷமா இருந்ததே இல்ல.” என்று புன்னகை ததும்பும் முகத்துடன் சொன்னாள் தேன்மொழி.

-மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-51
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.