மஞ்சம்-49

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அவர்கள் இருவரின் செல்ல சண்டையை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த ஆகாஷ்,

“என்ன அண்ணா நான் அண்ணியோட ஸ்பெஷல் கிஃப்ட்டை கொண்டு வர சொல்லட்டுமா?

அண்ணி அத மட்டும் பார்த்தாங்கன்னா உடனே குசியாகி உங்களை கட்டிப்பிடிச்சு இங்கயே எல்லார் முன்னாடியும் lip to lip அடிப்பாங்க பாருங்க..!!” என்று கிண்டலாக சொல்ல,

“அண்ணனுக்கும் தம்பிக்கும் கொஞ்சம் கூட வெட்கமே இல்ல போல.

நாலு பேருக்கு முன்னாடி எப்படி நடந்துக்கணும்னு இவ்ளோ வளர்ந்தும் கொஞ்சம் கூட பேசிக் மேனர்ஸ் மட்டும் வரமாட்டேங்குது.” என்று நினைத்து மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொண்ட தேன்மொழி,

“அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.” என்று சத்தமாக சொன்னாள்.

“ஓஹோ அப்படியா? அதையும் பார்த்திடலாம்.” என்ற அர்ஜுன் ஆகாஷை பார்க்க,

அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட ஆகாஷ் உடனே சத்தமாக விசில் அடித்தான்.

“அண்ணனும் தம்பியும் சேர்ந்துக்கிட்டு என்னென்ன சேட்டை பண்றானுங்க!” என்று நினைத்த தேன்மொழி சுற்றி முற்றி பார்க்க,

விஜயாவை வீழ்ச்சாரில் அமர வைத்து தள்ளிக்கொண்டு அங்கே வந்தான் ஆதவன்.

அவனைப் பார்த்து அப்படியே வாயடைத்து போய் அமர்ந்திருந்த தேன்மொழி நடப்பதெல்லாம் உண்மை தானா? என்பதைப் போல அர்ஜுனை திரும்பி பார்த்தாள்.

உடனே அவள் தோள்களில் உரிமையாக கை போட்ட அர்ஜுன்,

“என்ன என் கிஃப்ட் புடிச்சிருக்கா உனக்கு?

இவங்க இல்லாம தானே இத்தனை நாளா நீ நிம்மதி இல்லாம தவிச்சிட்டு இருந்த..

இனிமே உன் அம்மாவும், தம்பியும் நம்ம கூட இங்க தான் இருக்க போறாங்க.

நீ என்ன கேட்டாலும் நான் செய்வேன்னு சொன்னேன். ஞாபகம் இருக்கா..

இப்ப சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டேன் பாத்தியா..

அதான் இந்த அர்ஜுன்.” என்றான் திமிராக.

தேன்மொழியைப் பார்த்த சந்தோஷத்தில் இருந்த விஜய்யாவும், ஆதவனும் அதை வெளிப்படுத்தக் கூட முடியாமல் சுற்றி இருந்த விசித்திரமான நபர்களாலும், அந்த தங்க கோயிலின் பிரம்மாண்டத்தினாலும் வியப்பில் ஆழ்ந்து எப்படி ரியாட் செய்வது என்று தெரியாமல் அப்படியே அவர்களை நோக்கி நோக்கி வந்தார்கள்.

‌எமோஷனலான தேன்மொழி “அம்மா!” என்று கத்திக் கொண்டு எழுந்து நிற்க,

“மணமேடையில உட்கார்ந்துக்துக்கு அப்புறம் பொண்ணு எந்திரிக்க கூடாது மா." என்று ஐயர் சொன்னதால் மீண்டும் அவளை மனவறையில் அமர வைத்து விட்டாள் ஜானகி.

அதனால் கண்ணீருடன் தேன்மொழி தன் குடும்பத்தினரை பார்த்துக் கொண்டிருக்க,

ஆகாஷிடம் அவர்களை மேடைக்கு அழைத்து வரச் சொன்னான் அர்ஜுன்.

தேன்மொழியை அருகில் கண்டவுடன் ஓடி சென்று அவளை அணைத்துக்கொண்ட ஆதவன்,

“அக்கா நீ நல்லா தான் இருக்கியா? நெஜமாவே உனக்கு எதுவும் ஆகலையா?

நானும் அம்மாவும் உன்னை நினைச்சு எவ்ளோ பயந்து போயிட்டாம் தெரியுமா?” என்று கண்ணீருடன் கேட்க,

“எனக்கு ஒன்னும் இல்ல டா நான் நல்லா தான் இருக்கேன்.

நீங்க ரெண்டு பேரும் இங்க இல்லைன்றது மட்டும்தான் இத்தனை நாளா எனக்கு குறையா இருந்துச்சு.

அதையும் இன்னைக்கு உன் மாமா சரி பண்ணி வச்சிட்டாரு." என்ற தேன்மொழி விஜயா வீல்சாரில் அமர்ந்திருந்ததால்,

“அம்மாவுக்கு என்னடா ஆச்சு? ஏன் இப்படி வீல்சேர்ல உக்காந்துட்டு இருக்காங்க?" என்று கண்ணீருடன் கேட்டாள்.

அப்போது கிளாரா விஜயாவை வீல்சேரில் வைத்து மேடைக்கு தள்ளிக் கொண்டு வர,

“அம்மா ரோட்ல போயிட்டு இருக்கும்போது தெரியாம ஆக்சிடன்ட் ஆயிடுச்சு.

நானும் உதையா அண்ணனும் தான் அம்மாவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி பார்த்துக்கிட்டோம்.

இப்பதான் ரெண்டு நாளைக்கு முன்னாடி டிஸ்டார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்.

எனக்கு இங்க என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியல அக்கா.

உன் கழுத்துல ஏற்கனவே தாலி இருக்கு.

ஆனா இப்ப மறுபடியும் உனக்கு கல்யாணம் நடக்க போகுதா?

அது சரி, நாங்க எப்படி இங்க வந்தோம்?

நேத்து நைட் எப்பயும் போல நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு படுத்துட்டோம்.

காலையில கண்ணு முழிச்சு பார்த்தா இந்த கருப்பு டிரஸ் போட்டிருக்காங்க எல்லாரும் எங்கள ஒரு ரூம்ல அடைச்சு வச்சிருந்தாங்க.

இப்ப இங்க கூட்டிட்டு வந்து உன்ன காமிக்கிறாங்க.

இதே மாதிரி தான் இவங்க உன்னையும் கடத்திட்டு வந்தாங்களா?

எனக்கு இவங்களை எல்லாம் பார்த்தாலே பயமா இருக்கு.

அம்மாவும் பாரு அழுதுட்டே இருக்காங்க!

இவங்க எல்லாரும் எதுக்கு கைல துப்பாக்கி எல்லாம் வச்சிருக்காங்க? நம்மள சுட்டுறுவாங்களா?” என்று பயத்துடன் கேட்டான் ஆதவன்.

“இல்ல டா இவங்க நம்மள சுட மாட்டாங்க.

இது நம்ம வீடு தான் பயப்படாத. இவங்க பாடிகார்ட்ஸ். சும்மா நம்ம பாதுகாப்புக்காக இருக்காங்க.

அண்ட் உங்கள யாரும் கடத்திட்டு வரல. எனக்காக என் ஹஸ்பண்ட் உங்க ரெண்டு பேரையும் இங்க வர வச்சுருக்காரு.” என்றாள் தேன்மொழி.

அப்போது வீழ்ச்சாரில் அவள் அருகில் வந்து நின்ற விஜயா மங்களகரமாக கோவிலில் இருக்கும் அம்மனைப் போல ஆடம்பரமான அலங்காரத்தில் அழகாக ஜொலித்த தன் மகளைப் பார்த்து,

“தேனு.. இது நீ தானாடி? என்னால என் கண்ணையே நம்ப முடியல..

நான் பெத்த மகளே..‌ இத்தனை நாளா இங்கதான் இருந்தியா?

உன்ன காணோம்னு நான் பைத்தியக்காரி மாதிரி தெருத்தெருவா தேடிட்டு இருந்தேன் தெரியுமா?

தேனு.. நல்லா இருக்கியா டி? இங்க இருக்கிறவங்க யாராவது உன்னை ஏதாவது பண்ணாங்களா?” என்று கண்ணீருடன் கேட்க,

தன் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு கதறி அழுத தேன்மொழி “இல்லம்மா என்னை யாரும் எதுவும் பண்ணல.

நான் இத்தனை நாளா இங்க மகாராணி மாதிரி நல்லா தான் இருந்தேன்.‌

இந்த வீட்ல இருக்குறவங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்க.

அவங்க என்ன நல்லா பாத்துக்கிட்டாங்க.

நீ எப்படி இருக்க மா? ரோட்ல போனா பார்த்து போக மாட்டியா?

கால்ல, கைல எல்லாம் இவ்ளோ பெரிய கட்டு போட்டு இருக்காங்களே!

வலிக்குதா மா?” என்று அழுது கொண்டே அம்மாவின் முகத்தை தன் இரு கைகளாலும் ஏந்திக்கொண்டு கேட்டாள்.

இல்லை என்று தலையாட்டிய விஜயா, “இதெல்லாம் எனக்கு ஒரு வலியாடி?

நீ காணாம போய் எங்க கிடந்து எப்படி எல்லாம் கஷ்டப்பட்டுட்டு இருக்கியோன்னு நினைச்சு தினமும் கஷ்டப்பட்டு நான் செத்துட்டிருந்தேன் பாரு.. அதுதான் தாங்க முடியாத வலி.

உன்னை நேருல பாத்ததுக்கு அப்புறம் தான் எனக்கு போன உசுரு மறுபடியும் வந்த மாதிரி இருக்கு.

நான் கும்பிட்ட சாமி எல்லாம் எனக்கு கருணை காட்டிடுச்சுடி..

கருணை காட்டிடுச்சு.. இனியாவது எந்த பிரச்சனையும் இல்லாம நீ நிம்மதியா வாழனும் தேனு. எனக்கு அது போதும்.

இனிமே அம்மா உன்னை தனியா விடவே மாட்டேன்.” என்று சொல்ல,

“இனிமே உங்க பொண்ணுக்கு எந்த கஷ்டமும் வராது அத்தை.

அவள பத்திரமா பாத்துக்க நான் இருக்கேன்.

நீங்களும் ஆதவனும் இனிமே எப்பயும் உங்க பொண்ணு கூட இங்க சந்தோஷமா இருக்கலாம்.” என்றான் அர்ஜுன்.‌

விஜயாவின் அருகில் சென்று நின்ற ஜானகி அவளைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு,

“தயவு செஞ்சு எங்களை மன்னிச்சிருங்க மா. நாங்கதான் என் பையன் கோமாவுல இருக்கும்போது அவனுக்கே தெரியாம இந்தியாவுல இருந்து தேன்மொழியை கடத்திக் கொண்டு வந்து அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்.

அவளால தான் இப்ப எங்க பையன் சரியாகி நல்லா இருக்கான். இன்னைக்கு என் பையனுக்கு பர்த்டே.

இன்னிக்கு நாளும் நல்லா இருந்துச்சு. அதான் இன்னைக்கே தேன்மொழிக்கு தாலி பிரிச்சு கோக்கறதை அப்படியே கல்யாணம் மாதிரி பண்ணிடலாம்னு இந்த பங்க்ஷன் அரேஞ்ச் பண்ணி இருக்கோம்.

இந்த டைம்ல நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்.

நாங்க செஞ்ச தப்ப மனசுல வச்சுக்காதீங்க. தேன்மொழி எங்க வீட்டு பொண்ணு.‌

இது உங்க வீடு. இனிமே நாங்க உங்க எல்லாரையும் நல்லபடியா பாத்துக்குவோம்.

உங்களுக்கும் தேன்மொழிக்கும் நாங்க காலத்துக்கும் கடமை பட்டு இருக்கிறோம்.” என்றாள்.

அவள் சொல்லும் எதையும் புரிந்து கொள்ளும் மனநிலையில் விஜயா இல்லை.

இருப்பினும் சரி சரி என்று தலையாட்டி வைத்தாள். ஆனால் அந்த பிரம்மாண்ட தங்க கோயிலையும், அங்கே இருந்த பணக்கார ஆடம்பரமான மனிதர்களையும் பார்க்கும்போது,

இந்த வீட்டிற்கு தன் மகள் மருமகளாக வந்திருக்கிறாளா? இது நான் கனவிலும் நினைக்காத ஒன்று என்று நினைத்து ஆச்சரியப்பட்டாள் விஜயா.

அர்ஜுனையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த ஆதவன் தேன்மொழியிடம் “அக்கா மாமா சூப்பரா இருக்காரு.” என்று சொல்ல,

“தேங்க்ஸ் குட்டி மச்சான். நீயும் தாண்டா handsomeஆ இருக்க.

உனக்கும், அம்மாவுக்கும் டிரஸ் எல்லாம் அரேஞ்ச் பண்ணி வச்சிருந்தனே.. நீங்க சேஞ்ச் பண்ணிட்டு வரலையா?” என்று கேட்டான் அர்ஜுன்.

“இல்ல மாமா. திடீர்னு இவங்க எல்லாரையும் பார்த்த பதட்டத்துல நாங்க பயந்துட்டோம்.” என்று ஆதவன் சொல்ல,

“ஓகே அப்ப நீங்க போய் ரெடி ஆகிட்டு வாங்க நாங்க வெயிட் பண்றோம்.” என்ற அர்ஜுன் வேலை ஆட்களை அழைத்து அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தான்.

சில நிமிடத்திற்கு பிறகு தேன்மொழியின் குடும்பத்தினர்கள் தயாராகி மேடைக்கு கீழே போடப்பட்டிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தார்கள்.

அவர்களை அத்தனை விலை உயர்ந்த ஆடைகளில் அலங்காரங்களுடன் பார்க்கவே தேன்மொழிக்கு மன நிறைவாக இருந்தது.

அதனால் அவள் சிரித்த முகமாக அமர்ந்திருக்க, chainல் கோர்க்கப்பட்டு இருந்த புது தாலியை ஐயர் மந்திரங்கள் சொல்லி எடுத்து அர்ஜுனின் கையில் கொடுக்க,

அதை வாங்கி அவன் அவளது கழுத்தில் மாட்டினான். இம்முறை அவன் தாலி கட்டும்போது சிரித்த முகமாக அவனை பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழி,

ஆகாஷ் சொன்னதைப் போலவே அர்ஜுன் எதிர்பார்க்காத தருணத்தில் அனைவரின் முன்னிலையிலும் தன் மனதை புரிந்து கொண்டு அவன் தனக்கு கொடுத்த பரிசுக்கு பதில் பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவனது இதழ்களில் முத்தம் கொடுத்தாள்.

இன்னும் அவளுக்கு சரியாக முத்தம் கொடுப்பது எப்படி என்று தெரியவில்லை. இருப்பினும் அவளுக்கு மனதில் இருந்த சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் அப்படி வெளிப்படுத்தினாள்.

கீழே அமர்ந்திருந்த ஆதவனும் விஜயாவும் இது தங்கள் தேன்மொழி தானா? என்று நம்ப முடியாமல் அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆகாஷ் உடனே சத்தமாக விசில் அடித்து கைத்தட்ட, உடனே பயந்துப்போன தேன்மொழி அர்ஜுனை விட்டு பிரிந்தாள்.

அந்த காட்சியை பார்த்துக் கொண்டு இருந்த ஜானகி கண் கலங்க பிரதாப்பிடம் “நான் இந்த பொண்ண கூட்டிட்டு வந்து அர்ஜுனுக்கு கல்யாணம் பண்ணி வச்சது தப்புன்னு சொன்னீங்க!

இப்ப பாருங்க.. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப வருஷம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணவங்க மாதிரி எவ்ளோ ஜாலியா என்ஜாய் பண்றாங்க!

யாருக்கு யாருன்னு அந்த கடவுள் எப்பயோ எழுதி வச்சிருப்பாரு.

அவர் என்ன கருவியா யூஸ் பண்ணி இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சுட்டாரு. அவ்ளோ தான்.

ஒருவேளை அர்ஜுனும் தேன்மொழியும் சேர்ந்து வாழனும்ன்றதுக்காகவே கடவுள் சியாவை நம்ம தேன்மொழி மாதிரி படிச்சிருக்கலாம்.

யாருக்கு தெரியும்? கடவுள் நடத்துற நாடகத்துல நம்ம எல்லாரும் சாதாரண பொம்மை தானே!

அவர் ஆட்டி வைக்கிற மாதிரி நம்ம ஆட வேண்டியது தான்.” என்று சொல்ல, அதுவும் சரிதான் என்று நினைத்த பிரதாப் ஆமாம் என்று தலையாட்டினார்.

-மீண்டும் வருவாள்
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-49
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.