மஞ்சம்-48

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
ஜானகி அர்ஜுனையும் நான்சியையும் அழைத்துக் கொண்டு தனது ரூமிற்கு செல்ல,

அங்கே தனது லேப்டாப்பை எடுத்து வைத்து ஆபீஸ் சம்பந்தமான வேலைகளை செய்து கொண்டிருந்த பிரதாப்,

“இந்த நேரத்துல இப்ப இந்த பொண்ண எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்க?” என்று கேட்க,

“இந்த பொண்ணு தாங்க நம்மகிட்ட ஏதோ பேசணும்னு சொல்லுச்சு.

அதான் அவ என்னதான் சொல்றான்னு கேட்கலாம்ன்னு கூட்டிட்டு வந்தேன்.” என்ற ஜானகி நான்சியை பார்த்து,

“ஏதோ சொல்லணும்னு வந்துட்டு ஏன் பேசாமையே நிக்கிற?

அதான் அர்ஜுனும் இங்க வந்து வெயிட் பண்ணிட்டு இருக்கான்ல..

என்னன்னு சீக்கிரம் சொல்லுமா.” என்று கேட்டாள்.

பிரதாபின் கூர்மையான கண்களும், அர்ஜுனின் குழப்பமான பார்வையும் தன்னையே நோட்டமிட்டு கொண்டிருப்பதை கண்டு ஒரு நொடி பயந்துப்போன நான்சி,

சில நொடிகள் தயங்கிவிட்டு பின் தனது ஹேண்ட் பேக்கில் உள்ள மெடிக்கல் ரிப்போர்ட் ஒன்றை நடுங்கிய கைகளுடன் எடுத்து ஜானகியின் முன்னே நீட்டி,

“நான் ப்பிரெக்னெண்டா இருக்கேன் மேடம். என் வயித்துல வளர்றது அர்ஜுன் சாரோட பேபி.

ப்ளீஸ் என்னையும் என் குழந்தையையும் ஏத்துக்கோங்க!

நான் மிஸ்ஸஸ் அர்ஜுனுக்கு போட்டியா வரணும்னு நினைக்கல.

இந்த பெரிய பேலஸ்ல எனக்கும், இந்த வீட்டு வாரிசுக்கும் வாழ்வதற்கு நீங்க கொஞ்சமா இடம் குடுத்தா கூட போதும்.

நான் பெருசா வேற எதுக்கும் ஆசைப்படல” என்று திக்கி திணறி சொன்னாள்.

தன் மடியின் மீது இருந்த லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு பிரதாப் வேகமாக எழுந்து நிற்க,

தேன்மொழிக்கும் அர்ஜுனுக்கும் திருமணம் செய்து வைத்து அவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்வதை தானும் கண்டு மகிழலாம் என்று நல்ல மனநிலையில் வந்திருந்த ஜானகி,

நான்சி சொன்னதைக் கேட்டு ஸ்டனாகி நின்றிருந்தாள்.

கோபமாக அவளை எரித்து விடும் பார்வை பார்த்தபடி நின்று கொண்டிருந்த அர்ஜுன் அவள் கையில் இருந்த ரிப்போர்ட்டை பிடுங்கி பார்த்தான்.

“நெஜமாவே இது உங்க குழந்தை தான் மிஸ்டர் அர்ஜுன்.

உங்களுக்கு என் மேல சந்தேகமா இருந்துச்சுன்னா, நீங்க டி.என்‌.ஏ டெஸ்ட் கூட எடுத்து பாருங்க.

என் வயத்துல வளர்ற குழந்தை மேல சத்தியமா நான் பொய் சொல்லல.” என்று நான்சி பயந்த குரலில் சொல்லிக் கொண்டிருக்க,

கோபமாக அவள் அருகில் சென்ற பிரதாப் “என் பையனே ரெண்டு வருஷமா கோமால இருந்துட்டு இப்பதான் நார்மலாகி வந்திருக்கான்.

அவனுக்கு சரியாகி முழுசா பத்து நாள் கூட ஆகல.

அதுக்குள்ள அவன் குழந்தைக்கு நீ அம்மா ஆகிட்டேன்னு எங்ககிட்ட வந்து கதை விட்டுட்டு இருக்கியா?

நீ என்ன சொன்னாலும் அத நம்புற அளவுக்கு நாங்க முட்டாளா இருப்போம்னு நீ நினைக்கிறியா?

எனக்கு வர்ற கோபத்துக்கு நான் உன்ன இங்கயே கொன்னு போட்டுடுவேன்.
மரியாதையா இங்க இருந்து ஓடி போயிடு.” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு சொல்ல,

அவர்களுக்கு நடுவில் தரையில் மண்டியிட்டு அமர்ந்த நான்சி,

“ப்ளீஸ் எல்லாரும் என்னை நம்புங்க.. நான் சொல்றது உண்மைதான்.

இது நிஜமாகவே மிஸ்டர் அர்ஜுனோட பேபி தான்.‌

லாஸ்ட் டூ இயர்சா நான் தான் அதிக நாள் அவர் கூட கேர் டேக்கரா இருந்து அவரை நல்லா பாத்துகிட்டு இருந்தேன்.

இவர மாதிரி ஒரு ஹாண்ட்சமான ஆளை யாருக்குத்தான் பிடிக்காது?

தினமும் இவரை பார்க்கும்போது, இவருக்கு டவல் பாத் பண்ணும்போது, எனக்கே தெரியாம எனக்கு இவர் மேல ஃபீலிங்ஸ் வந்துருச்சு.

தேன்மொழி மேடம் இங்க வர்றத்துக்கு முன்னாடியே எப்படியாவது மிஸஸ் அர்ஜுன் ஆகணும்ன்ற ஆசையில நான் என் ஃபிரண்ட்டை வச்சு யாருக்கும் தெரியாம இவரோட spermஐ கலெக்ட் பண்ணிட்டேன்.‌

அப்புறம் சீக்கிரம் நானே எனக்கு தெரிந்த இன்னொரு டாக்டரை வச்சு எனக்கு artificial insemination பண்ணிக்கிட்டேன்.

சத்தியமா அர்ஜுன் சார் மேல இருந்த லவ்ல தான் அப்படி பண்ணேன்.

மத்தபடி எனக்கு வேற எந்த ஆசையும் இல்ல.‌ தேன்மொழி மேடம் வந்ததுக்கப்புறம் நான் இதை பத்தி எல்லாம் மறந்தே போயிட்டேன்.

அவங்க எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட். சோ அவங்களும் அர்ஜுன் சாரும் சேர்ந்து ஹாப்பியா வாழந்தா நல்லா இருக்குமுன்னு தான் எனக்கும் தோணுச்சு.

அதுல நான் இந்த வேலையை பண்ணதையே மறந்துட்டேன். இப்போ நான் டூ மந்த்ஸ் பிரக்னண்டா இருக்கேன்.

நான் பண்ணது தப்புதான். அதுக்காக இந்த குடும்பத்தோட வாரிசை நீங்க தண்டிச்சுடாதீங்க." என்று கண்ணீருடன் கெஞ்சினாள்.

அவளது தத்ரூபமான பேச்சில் கரைந்து போன ஜானகிக்கு உண்மையாகவே அது தங்கள் வீட்டு வாரிசாக இருந்தால்,

அதை கஷ்டப்பட விட மனம் வரவில்லை. அதனால் அர்ஜுனை பார்த்து “இவ சொல்ற மாதிரி ஒரு தடவை நம்ம டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பார்த்திடலாமா அர்ஜுன்? அது உன் குழந்தையா இருந்தா என்ன பண்றது?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை மாம்.” என்ற அர்ஜுன் அவனது சட்டையின் கையை மேலே உயர்த்திவிட்டு,

அவள் அருகில் சென்று அவள் முடியை பிடித்து இழுத்து அவளை நேராக நிற்க வைத்தவன் பளார் பளார் என்று அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான்.

“டேய் அர்ஜுன், நீ என்ன பண்ற? அவ ப்பிரெக்னெண்டா இருக்கா டா!

அது உன் குழந்தையா இருந்தா என்ன பண்றது?” என்று ஜானகி பதட்டத்துடன் கேட்க,

“இப்படி ஒரு கேடுகெட்டவ வயித்துல என் குழந்தை எதுக்கு வளரனும்?

ஆல்ரெடி எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. அவங்க போதும்.

இதுக்கு மேல எனக்கு இன்னொரு குழந்தை வேணும்னாலும், அத பெத்துக்குடுக்க என் ஹனி பேபி இருக்கா.

என் குழந்தைக்கு அம்மா ஆகுர தகுதி இவளுக்கு இல்ல.” என்ற அர்ஜுன் நான்சியின் கழுதை இறுக்கிப்பிடித்து அவளை சுவற்றுடன் வைத்து அழுத்தினான்.

அந்த கொடூர காட்சியை பார்க்கவே ஜானகிக்கு ஏதோ போலிருக்க,

“டேய் வேணா டா அர்ஜுன் இதெல்லாம் பாவம் டா.

நமக்கு தெரியாத டாக்டரா? யாரையாவது வர வச்சு இவளுக்கு அபார்ஷன் பண்ணிடலாம்.” என்று சொல்லி புலம்ப,

அர்ஜுன் செய்வது தான் சரி என்று நினைத்த பிரதாப் “என்ன பண்ணனும்னு முடிவு எடுக்கிற அளவுக்கு உன் பையன் பெரியவன் ஆயிட்டான்.

நீ வா, நம்ம ரெண்டு பேரும் வெளிய போய் வெயிட் பண்ணலாம்.” என்று ஜானகியிடம் சொல்லிவிட்டு,

பின் அர்ஜுனை பார்த்தவர்,

“டேய் இது நாங்க வாழ்ற இடம் டா. இங்க எதையும் பண்ணிட்டு இருக்காத.

அப்புறம் உங்க அம்மா அதே ஞாபகமாவே இருப்பா.” என்று சொல்லிவிட்டு சென்றார்.

சரி என்பதைப் போல அர்ஜுன் தலையாட்ட, பிரதாப் தன் மனைவியை அழைத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டார்.

அந்த அறையில் உள்ள இன்டர்காம் மூலமாக கிளாராவையும், பிரிட்டோவையும் வரச் சொல்லி அழைத்த அர்ஜுன்,

யாருக்கும் தெரியாமல் நான்சியை குண்டு கட்டாக தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்கு செல்ல சொன்னான்.

பணத்தாசை பிடித்து எப்படியாவது அர்ஜுனனின் மனைவியாகி விட வேண்டும் என்று திட்டம் போட்டு அவன் குழந்தைக்கு தாயான நான்சி,

அவள் எடுத்தது தவறான முடிவு என்று உணர்ந்து “ப்ளீஸ் என்னை எதுவும் பண்ணிடாதீங்க. இந்த குழந்தை தானே உங்களுக்கு பிரச்சனை!

நீங்களே வேணும்னாலும் இதை அபார்ஷன் பண்ணிடுங்க.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.

இத பத்தி எப்பயும் நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.

தயவு செஞ்சு என்னை உயிரோட விட்ருங்க!” என்று அழுது கதறி கெஞ்சினாள்.

அவளது சத்தம் யாருக்கும் கேட்டு விடக்கூடாது என்பதற்காக கிளாரா அவள் வாயிலேயே ஒரு குத்து விட,

தன் வாயை மூடிக் கொண்டாள் நான்சி.

கிளாராவும், பிரிட்டோவும் நான்சியை மொட்டை மாடியில் கட்டி போட்டுவிட்டு அர்ஜுனின் வருகைக்காக காத்திருந்தார்கள்.

மேலே சென்ற அர்ஜுன் அவனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த சிகரெட் ஒன்றை எடுத்து புகைக்க தொடங்கியவன்,

தன்னைப் பார்த்து உயிர் பிச்சை கேட்டு கெஞ்சி கொண்டிருந்த நான்சியை பார்த்தான்.

“இவ மிஸ்ஸஸ் அர்ஜுன் ஆகணும்னு ஆசைப்பட்டு எல்லாத்தையும் பிளான் போட்டு பக்காவா தான் பண்ணிருக்கா.

சோ இவ வயித்துல வளர்றது கண்டிப்பா என் குழந்தையா தான் இருக்கும்.

இவளை நான் கொடுமைப்படுத்திக் கொன்னா, அது என் குழந்தையையும் நான் கொடுமை படுத்துற மாதிரி ஆயிடும்.

அண்ட் எதையும் நான் என் கையால செய்ய விரும்பல.

சிம்பிளா பாய்சன் குடுத்து இவள முடிச்சு விடுங்க.

இவ செத்த உடனே எங்கயாவது கொண்டு போய் போட்டு எரிச்சு பாடிய டிஸ்போஸ் பண்ணிடுங்க.” என்ற அர்ஜுன் அவன் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை கீழே தூக்கிப் போட்டுவிட்டு லிஃப்ட் வழியாக கீழே சென்றான்.

பின்‌ அவனது அறைக்கு சென்று குளித்துவிட்டு டிரஸ் மாற்றிக்கொண்டு சென்று தேன்மொழியின் அருகில் படுத்தான்.

குழப்பமான முகத்துடன் அவனைப் பார்த்த தேன்மொழி “ஆபீஸ்ல இருந்து வந்தவுடனே குளிச்சிட்டு தானே கீழ சாப்பிட வந்தீங்க..

அப்புறம் எதுக்கு இப்ப மறுபடியும் குளிச்சிட்டு வந்தீங்க?" என்று கேட்க,

“சும்மா தான்.. கசகசன்னு இருந்துச்சு. அதான் குளிச்சிட்டு வந்தேன்.” என்ற அர்ஜுன் வழக்கம்போல் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு தன் கண்களை மூடினான்.

அப்போதும் தூங்காமல் இருந்த தேன்மொழி திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாக,

“ஆமா நான்சி உங்க கிட்ட என்னமோ சொல்லணும்னு சொல்லி உங்க எல்லாரையும் கூட்டிட்டு போனாங்களே! என்ன சொன்னாங்க?” என்று ஆர்வமாக கேட்க,

“அவளா? அவ குடும்பத்துல ஏதோ கஷ்டமாம். கிளம்பறதுக்கு முன்னாடி ஏதாவது காசு குடுத்து ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டா.

சரி போனா போய் தொலையுதுன்னு அவ கேட்கிற காசை குடுத்து அனுப்புங்கன்னு மம்மி கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்.” என்றான் அர்ஜுன்.

“அதுக்கா இவ்ளோ நேரம்?” என்று மறுபடியும் அவள் இன்னொரு கேள்வி கேட்க,

“சப்பா.. எத்தனை கொஸ்டின் டி கேப்ப?

நிம்மதியா தூங்கலாம்னு வந்தா ஒரு மனுசன நீ தூங்க விடுறியா?

இதுக்கு மேல நீ என்ன கேட்டாலும் உனக்கு நான் அன்சர் பண்ண மாட்டேன்.

எனக்கு தூக்கம் வருது நான் தூங்குறேன், பாய் குட் நைட்." என்றான் அர்ஜுன்.

அதனால் அதற்கு மேல் அவள் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.

ஒரு வாரத்திற்கு பிறகு..

இன்று அர்ஜுனின் பிறந்தநாள். ஈவினிங் தெரிந்தவர்கள், சொந்தக்காரர்கள், அவர்களது பிசினஸ் வட்டாரத்தில் உள்ளவர்கள் என அனைவரையும் அழைத்து ஒரு பிரம்மாண்டமான பார்ட்டியை அரேஞ்ச் செய்திருந்தான் அர்ஜுன்.

விடியற்காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் தேன்மொழியும், அவனும் குளித்து கிளம்பி ‌அவர்களது திருமணத்திற்காக புது மணமக்களாய் தயாராகி அவர்களது வீட்டில் உள்ள தங்க கோயிலுக்கு சென்றார்கள்.

இதற்கு முன் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த அதே ஐயர் மணமேடையில் அமர்ந்து மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருக்க,

பட்டு வேட்டி சட்டையில் கலக்கலாக இருந்த அர்ஜுன் அழகு சிலையாய் புது பட்டுப் புடவையில் தலை முதல் கால் வரை ஏராளமான தங்க வைர ஆபரணங்கள் பூட்டி அழகாய் ஜொலித்த தேன்மொழியின் கையைப் பிடித்து மணமேடைக்கு அழைத்து சென்றான்.

சிரித்த முகமாக அவனுடன் சென்று அங்கே ‌அமர்ந்த தேன்மொழி,

வெட்கத்துடன் தலை குனிந்தவாறு “எப்பயும் இருக்கிறதை விட நீங்க இன்னைக்கு ரொம்ப handsomeஆ இருக்கீங்க அர்ஜு.” என்று சொல்ல,

“ம்ம்.. தெரியும் தெரியும்.. கிளம்பும்போது நானும் என் மூஞ்சிய ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடில பாத்துட்டு தானே வந்தேன்!” என்றான் அர்ஜுன் நக்கலாக.‌

உடனே அவனை கோப விழிகளோடு முறைத்து பார்த்த தேன்மொழி “உங்கள போய் பாராட்டி பேசினேன் பாத்தீங்களா.. அது என் தப்புதான்..

உங்களுக்கு மத்தவங்கள தான் மனசுவிட்டு பாராட்ட தெரிய மாட்டேங்குதுன்னு பார்த்தா,

மத்தவங்க உங்கள பாராட்டினா கூட அவங்களுக்கு properஆ எப்படி ரிப்ளை பண்ணனும்னு கூட தெரியாதா?” என்று கேட்க,

“எனக்கு அதெல்லாம் தெரியாதுடி. ஆனா உன்ன உனக்கு பிடிச்சது எல்லாத்தையும் செஞ்சு எப்படி சப்ரைஸ் பண்றதுன்னு நல்லா தெரியும்.

நான் உனக்கு ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் அரேஞ்ச் பண்ணி இருக்கேன்.

அது என்னன்னு guess பண்ணு பாக்
கலாம்.” என்று உற்சாகமான குரலில் சொன்னான் அர்ஜுன்.

அவன் மீது கோபத்தில் இருந்த தேன்மொழி,

“உங்க கிஃப்ட் ஒன்னும் எனக்கு தேவையில்லை.” என்று சொல்லிவிட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

- மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-48
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.