சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் கான்ஸ்டபளிடம் என்ன பிரச்சனை என்று விசாரித்துவிட்டு, தேன்மொழியின் கேஸ் பைலை கொண்டு வந்து கொடுக்கச் சொன்னான்.
“உங்க அக்காவை பத்தி இவர் கிட்ட சொல்லு.
கண்டிப்பா சார் அந்த பொண்ண சீக்கிரம் கண்டுபிடிச்சுருவாரு.” என்று கான்ஸ்டபிள் ஆதவனிடம் சொல்லிவிட்டு சென்றதால், அவன் நம்பிக்கையுடன் சதிசை பார்த்தான்.
அவர்கள் பேசியதை கவனித்துக் கொண்டு இருந்த உதையா “சார் நாங்க நேத்து நைட்டே வந்து கம்ப்ளைன்ட் கொடுத்துட்டோம்.
என் ஃப்பிரண்டு தேன்மொழிய நேத்து இவ்னிங்ல இருந்து காணோம்.
அவளை யாரோ அவங்க ஏரியா பக்கத்துல இருக்கிற பஸ் ஸ்டாப்பிங் கிட்ட கார்ல வந்து கடத்திட்டு போயிருக்காங்க.
பக்கத்துல இருந்த வீட்டுக்காரங்க கிட்ட சிசிடிவி ஃபுட்டேஜ் எல்லாம் நாங்க கேட்டு வாங்கிட்டு வந்துட்டோம்.
பட் இன்ஸ்பெக்டர் இந்த கேசை ப்ராப்பரா ஹேண்டில் பண்ண மாட்டேங்குறாரு.
ப்ளீஸ் சார் எப்படியாவது எங்க தேன்மொழிய கண்டுபிடித்து கொடுத்துடுங்க.
அவ இங்க இல்லாத ஒவ்வொரு செகண்டும் அவளுக்கு என்ன ஆச்சோன்னு நினைச்சு நாங்க எல்லாரும் பயந்து செத்துட்டிருக்கோம்.” என்று கலங்கிய கண்களுடன் சொன்னான்.
அமைதியாக அவன் முகத்தை உற்று நோக்கிய சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் “இவன் அந்த பொண்ண ஃப்பிரெண்டுனு சொல்றான்..
ஆனா இவன் கண்ண பார்த்தா அதையும் தாண்டி லவ் தெரியுதே.. ஒருவேளை இவனும் அந்த பொண்ணும் லவ் பண்ணி இருப்பாங்களோ..??” என்று யோசித்துக் கொண்டு இருக்க, கான்ஸ்டபிள் அவனிடம் தேன்மொழியின் கேஸ் பயிலை கொண்டு வந்து கொடுத்தார்.
அதை திறந்தவுடன் உள்ளே இருந்த தேன்மொழியின் போட்டோவை பார்த்து அதிர்ந்த சதீஷ் கேஸ் டீடைல்சை கூட படித்து பார்க்காமல் அவளது போட்டோவை கையில் எடுத்து உற்றுப் பார்த்தான்.
அவனது இதழ்கள் அவனையும் மீறி “தேன்மொழி” என்று அவள் பெயரை சொல்ல, அதை கவனித்த உதையா “உங்களுக்கு தேனை தெரியுமா சார்?” என்று ஷாக் ஆகி கேட்டான்.
தெரியும் என்பதைப் போல தலையாட்டிய சதீஷ் கண்கள் கலங்க தன்னை பார்த்துக் கொண்டிருந்த விஜயாவை தன் முன்னே இருந்த சாரில் அமரச் சொல்லிவிட்டு,
“ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஜோசியர் கொடுத்ததா சொல்லி இந்த பொண்ணு போட்டோவ எங்க அம்மா என் கிட்ட காட்டுனாங்க.
எனக்கு அரேஞ்ச் மேரேஜ்ல எல்லாம் பெருசா இன்ட்ரஸ்ட் இல்ல.
இருந்தாலும் அம்மா சொன்னதுக்காக சும்மா இவங்களோட டீடைல்ஸை பார்த்தேன்.
அதுக்கப்புறம் என்னமோ தெரியல இவங்கள பத்தி தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சு.
சோ ஈவினிங் டைம்ல ரெண்டு மூணு தடவை இவங்க ஒர்க் பண்ற ஸ்கூல் பக்கம் இவங்களை பாக்குறதுக்காகவே போயிருக்கேன்.
பட் ஒரு தடவை தான் பார்க்க முடிஞ்சது. நான் இவங்கள பாத்து ஒரு ரெண்டு மூணு நாள் இருக்கும்.
எங்க அம்மா கிட்ட நான் நேத்து மார்னிங் தான் தென்மொழி வீட்டுக்கு அவங்கள பொண்ணு பாக்க நேர்ல போலாம்னு சொல்லிட்டு இருந்தேன்.
இப்போ ஸ்டேஷன்ல நீங்க அந்த பொண்ண காணோம்னு என் கிட்டயே வந்து கம்ப்ளைன்ட் குடுக்குறீங்க.
என்னால இத நம்பவே முடியல. அவங்களுக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கக் கூடாது.” என்றான்.
அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் அவன் பேசியதை கேட்ட பிறகு அருவி போல விஜயாவின் கண்களில் இருந்து கொட்டத் தொடங்கி விட,
“ஆமா தம்பி தரகர் கூட என் கிட்ட போலீஸ்காரர் மாப்பிள்ளை ஒருத்தர் இருக்காரு.
அவங்க வீட்ல நேர்ல வந்து பொண்ணை பார்க்கிறேன்னு சொல்றாங்க.
அவங்கள எப்ப வர சொல்லட்டும்னு என் கிட்ட கேட்டாரு.
நான் என் பொண்ணு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் அவ கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லிக்கலாம்னு இருந்தேன்.
அதுக்குள்ள இப்படி எல்லாம் நடந்துருச்சு.
எப்படியாவது தயவு செஞ்சு நீங்களாவது என் பொண்ண கண்டு பிடிச்சு கொடுங்க தம்பி உங்களுக்கு புண்ணியமா போகும்!
நித்தமும் அவளுக்கு என்ன ஆச்சுன்னு நினைச்சு நினைச்சு மனசு படுற வேதனையை தாங்க முடியல.” என்ற விஜயா கண்ணீருடன் அவனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.
உடனே எமோஷனலான சதீஷ் எழுந்து நின்று “அச்சோ ப்ளீஸ் மா! என்னால உங்க சிச்சுவேஷனை புரிஞ்சிக்க முடியுது.
பட் அதுக்காக எமோஷனலாகி கையெடுத்து எல்லாம் கும்பிடாதீங்க.” என்று சொல்லிவிட்டு உதையாவை பார்த்து “உங்க கிட்ட சிசிடிவி ஃபுட்டேஜ் இருக்குன்னு சொன்னீங்க இல்ல அதை குடுங்க.
அதுல அவங்கள பத்தி ஏதாவது இன்பர்மேஷன் கிடைக்குதான்னு பார்க்கலாம்.” என்றான் சதீஷ்.
உடனே தன்னிடம் இருந்த பென்டிரைவை அவனிடம் கொடுத்த உதையா,
“இவன் தான் தேன்மொழிக்கு அம்மா பார்த்த மாப்பிள்ளையா?
பார்க்க நல்லவனா தான் இருக்கான். இவன் கூட வேலை செய்றவங்களே இவன பத்தி நல்ல விதமா சொல்றாங்க.
ஒருவேளை எனக்கு முன்னாடி இவன் தேன்மொழிய கண்டுபிடிச்சிட்டா, இவனே கூட அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டும்.
எனக்கு அவ என் கூட இருக்கிறத விட, அவ சேஃப்பா சந்தோஷமா இருந்தாலே போதும்.” என்று நினைத்து தன் கண்ணீரை துடைத்து கொண்டான்.
சதிசும் அதையெல்லாம் கவனிக்கத் தான் செய்தான்.
ஆனால் இப்போது தேன்மொழியை கண்டுபிடிப்பது தான் முக்கியமானது என்பதால், அவன் உதையவை பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு சிசிடிவி ஃபுட்டேஜை ஆராய்ந்தபடி அவர்களிடம் அவளைப் பற்றி விசாரித்தான்.
பாவமாக சதீஷை பார்த்த ஆதவன் “அந்த கார்ல நம்பர் பிளேட்டே இல்ல சார்.
அப்புறம் எப்படி இந்த வீடியோவை வச்சு எங்க அக்காவை கடத்திட்டு போனது யாருன்னு கண்டுபிடிக்க முடியும்?
அந்த வீடியோல தெரியுற பொண்ணை கண்டுபிடிச்சா மட்டும் தான் எங்க அக்காவ கண்டுபிடிக்க முடியும்.
ஆனா அந்த பொண்ண பாத்தா நம்ம ஊரு பொண்ணு மாதிரியே தெரியல.
ஃப்பாரினர் மாதிரி இருக்காங்க. எங்கேயோ வெளிநாட்டுல இருந்து வந்தவங்க எதுக்கு எங்க அக்காவை கடத்தனும்?
எனக்கு ஒண்ணுமே புரியல. ஒருவேளை பொண்ணுங்களை எல்லாம் கடத்தி வெளிநாட்டுக்கு விக்கிற மாதிரி ஏதாவது ஒரு கும்பல் கிட்ட அவ மாட்டிக்கிட்டாளான்னு எனக்கு பயமா இருக்கு.” என்று கண்கள் கலங்க சொல்ல,
“இந்த பொண்ண பாத்தா ஃப்பாரினர் மாதிரி தான் இருக்கு.
அவங்க வந்திருக்கிற காரும் இந்தியால கிடைக்கிறது இல்ல.
நீ சொல்ற மாதிரி யாராவது வெளிநாட்டுக்காரங்க அவளை கடத்திட்டு போயிருக்கலாம்.
பட் அத நெனச்சு நீங்க பயப்படத் தேவையில்லை.
இந்த மாதிரி இல்லிகளான வேலையை பண்றவங்க எல்லாம் மோஸ்ட்லி Sea ways தான் யூஸ் பண்ணுவாங்க.
சோ தேன்மொழிய அதுக்குள்ள அவங்க சென்னையை விட்டு வேற எங்கயும் கொண்டு போயிருக்க வாய்ப்பு இல்லை.
அந்த பொண்ணு எங்க இருந்தாலும் அவளை நான் கண்டுபிடிக்கிறேன்.
மார்க் மை வேர்ட்ஸ்.. ஷீ இஸ் மை ரெஸ்பான்சிபிலிட்டி. சீக்கிரமா அவங்களை கண்டுபிடிச்சு உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறேன்.” என்று உறுதியாக சொன்னான் சதீஷ்குமார்.
ஒரு இளைஞனிடம் அங்கே தேன்மொழி பேசிக் கொண்டு இருக்க, அந்த இடத்திற்கு கரடி போல வந்த மகிழன் அவர்களது கான்வர்சேஷனை இடையில் நிறுத்தினான்.
அதனால் உடனே அவனை அங்கே இருந்து அனுப்பி விட வேண்டும் என்று நினைத்த தேன்மொழி “வாவ் சூப்பர் நான் சொன்ன மாதிரி 100 கவுன்ட் பண்ணி முடிக்கறதுக்குள்ள நீ என்ன புடிச்சிட்ட.
சோ உனக்கு நீ ஆசைப்பட்ட மாதிரி சீக்கிரம் புதுப் பல்லு வந்துடும்.
போய் God கிட்ட நல்லா Pray பண்ணிக்கோ. அப்ப தான் மூணு பல்லும் சீக்கிரம் வரும்.” என்று சொல்ல,
“ஓகே Big mummy, நான் இப்பவே போய் சாமி கிட்ட வேண்டுகிறேன்.” என்ற மகிழன் அங்கிருந்து வேகமாக அவர்கள் வீட்டிற்குள் இருந்த கோவிலை நோக்கி ஓடினான்.
அதனால் பெருமூச்சு விட்ட தேன்மொழி தன் முன்னே நின்று கொண்டு இருந்தவனை பார்த்து “உங்க பேர் என்ன?” என்று கேட்க,
“என் பேரு மகேஷ்.” என்றான் அவன்.
“நீங்க இங்க ஒர்க் பண்றீங்களா?” என்று அவள் கேட்க,
“ம்ம்.. எஸ் மேடம். எங்க அம்மா ரொம்ப வருஷமா இங்க வொர்க் பண்றாங்க.
ரொம்ப வருஷமா நான் என் தாத்தா பாட்டி கூட இந்தியால தான் இருந்தேன்.
அவங்க ரீசண்டா இறந்துட்டாங்க. சோ நானும் இங்கயே வந்து செட்டில் ஆயிட்டேன்.
இப்ப கார் டிரைவரா இங்க வொர்க் பண்ணிட்டு இருக்கேன். ஜனனி மேடமும், லிண்டா மேடமும் வெளிய போகணும்னு சொன்னாங்க.
அவங்கள டிராப் பண்ணிட்டு வரேன் மேடம்.” என்றான் மகேஷ்.
“பார்றா.. இவன் கார் டிரைவரா?
பரவால்லையே.. இவன் தான் நம்மளை வெளிய கூட்டிட்டு போக சரியான ஆளு.
இவன் கூட எப்படியாவது ஃபிரண்ட் ஆகணும்.” என்று நினைத்த தேன்மொழி,
“ஓ.. ஓகே மகேஷ்!
நான் தான் என் பேரு தேன்மொழி என்று ஆல்ரெடி சொன்னேனே..
என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்க. நீங்க மேடம்னு எல்லாம் கூப்பிட தேவையில்லை.
அந்த அளவுக்கு நான் ஒன்னும் பெரிய ஆள் இல்ல.
நானும் உங்கள மாதிரி சாதாரண பொண்ணு தான்.
எனக்கே தெரியாம என்ன இங்க கடத்திக் கொண்டு வந்து இப்படி ஒரு ஆசாதாரண வாழ்க்கைகுள்ள தள்ளி விட்டுட்டாங்க.
அது என் தலையெழுத்து என்னமோ அதுபடி நடக்கட்டும்.
பட் இங்க இருக்கிறவங்கள்ளயே நீங்க மட்டும் தான் பார்க்க நம்ம ஊருக்கார பையன் மாதிரி இருக்கீங்க.
எனக்கு இங்க இருக்கவே பயமா இருக்கு. எங்க பாத்தாலும் துப்பாக்கியும் கையுமா பாடிகார்ட்ஸ் சுத்திட்டே இருக்காங்க.
இவங்களுக்கு எல்லாம் நடுவுல ரொம்ப வசதியான பேலஸ் மாதிரி இருக்கிற ஜெயில்ல கைதியா வாழ்ற மாதிரி இருக்கு எனக்கு.
நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன்னே தெரியல. இங்க வந்து மாட்டிக்கிட்டேன்.” என்று கண்கள் கலங்கச் சொன்னாள்.
அவளைப் பார்க்கவே அவனுக்கும் பாவமாக தான் இருந்தது. கண்டிப்பாக தேன்மொழிக்கு தன்னை விடவே வைத்து கம்மியாகத் தான் இருக்கும் என்று அவளை பார்த்தாலே அவனுக்கு தெரிந்தது.
இப்படி ஒரு சிறிய பெண்ணை கூட்டி வந்து கட்டாய திருமணம் செய்து வைத்தால், அவள் இந்த இடத்தையும் இங்கே இருக்கும் மனிதர்களையும் கண்டு பயப்படுவது நார்மல் தானே! என்று நினைத்தான் மகேஷ்.
அதனால் அவள் மீது அவனுக்கு இரக்கம் வந்துவிட,
“நீங்க இப்ப என்ன மைண்ட் செட்டில இருக்கீங்கன்னு எனக்கு நல்லா புரியுது.
பட் இது ஒன் வே மாதிரி. இங்க உள்ள வர மட்டும் தான் முடியும்.
மறுபடியும் இங்க இருந்து போக முடியாது மா.
எங்க அம்மாவே இங்கே ஜஸ்ட் வேலை செய்யறதுக்கு தான் வந்தாங்க.
எங்க அம்மாவோட அப்பா அர்ஜுன் சாரோட அப்பா கிட்ட வொர்க் பண்ணிட்டு இருந்தாரு.
அப்படியே எங்க அம்மாவும், அப்பாவும் இங்க வந்து செட்டில் ஆயிட்டாங்க.
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க அப்பா இறந்துட்டாரு.
நான் படிச்சிட்டு இருந்ததுனால என்ன இந்தியாவிலயே விட்டுட்டு வந்துட்டாங்க.
நான் வளர்ந்து பெரியவன் ஆகி இங்க வர்ற வரைக்கும், நானே இத்தனை வருஷமா எங்க அப்பா அம்மாவை பாக்கல.
பட் அங்க நான் தங்கி படிக்கிறதுக்கு, நான் போடுற டிரஸ்ல இருந்து தினமும் செலவுக்கு யூஸ் பண்றதுக்குன்னு எனக்கு தனித்தனியா இங்க இருந்து எவ்வளவோ அர்ஜுன் சார் ஃபேமிலி எங்களுக்கு ஹெல்ப் பண்ணி இருக்காங்க.
அவங்க நல்லவங்க தான். உங்களுக்கு futureல எந்த ஹெல்ப் தேவைப்பட்டாலும் அவங்க செய்வாங்க.
ஆனா, நீங்க உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சு என்பதை மனசுல வச்சுக்கிட்டு இந்த வாழ்க்கைய ஏத்துக்கிட்டு வாழ பழகிக்கோங்க.
அதான் எல்லாருக்கும் நல்லது. அர்ஜுன் சார் ரொம்ப நல்லவரு.
கண்டிப்பா அவர் கூட உங்க லைஃப் நல்லா இருக்கும்.
என்ன தான் இருந்தாலும், நான் ஜஸ்ட் இங்க டிரைவர் தான் மேடம்.
சோ என்னால ரொம்ப நேரம் உங்க கிட்ட பேசிட்டு இருக்க முடியாது.
நான் கிளம்புறேன் எனக்கு வேலை இருக்கு.” என்ற மகேஷ் அங்கிருந்து சென்று விட்டான்.
அதுவரை மகேசை நம்பிக்கை நட்சத்திரமாக பார்த்த தேன்மொழிக்கு அவன் பேசியவுடன், தனது ஒரே நம்பிக்கையும் உடனே மறைந்து விட்டதை போல இருந்தது.
- மீண்டும் வருவாள்..

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-16
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.