மஞ்சம் 128

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
தேன்மொழியை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டிருந்த அர்ஜுன் “மத்தவங்க கிட்ட இருந்து தப்பிச்சு இங்க வர்றதுக்குள்ள நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என்று அவளிடம் கேட்க, நிமிர்ந்து அவனைப் பார்த்த தேன்மொழி “அது சரி, உனக்கு flute 🪈 இவ்வளவு சூப்பரா வாசிக்க தெரியுமா? எப்ப கத்துக்கிட்ட? எனக்காக இவ்ளோ சீக்கிரமா இந்த அளவுக்கு வாசிக்க கத்துக்கிட்டியா என்ன? என்னால நம்பவே முடியல.” என்றாள்.

“எனக்கு மத்தவங்க கூட இருக்கிறத விட முன்னாடி எல்லாம் தனியா இருக்கறது ரொம்ப பிடிக்கும். அப்ப போரடிக்குதுன்னு கொஞ்சம் music கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் பிசினஸ் அண்ட் அதர் வரக்ஸ்ல பிஸியாகி ப்ராக்டிஸ் பண்ண டைம் கிடைக்காம போயிடுச்சு.

ரொம்ப வருஷம் ஆகுது எந்த அளவுக்கு வரும்னு யோசிச்சேன். பரவால்ல என் பொண்டாட்டியோட அழக பார்த்து அப்படியே மெய் மறந்து ஃபீல் பண்ணி வாசிச்சதுல நான் எக்ஸ்பெக்ட் பண்ணதை விட நல்ல வந்துருச்சு.” என்று அர்ஜுன் சொல்ல, “இதெல்லாம் நல்லா பேசு. நேத்து மட்டும் நீ டைமுக்கு வீட்டுக்கு வந்திருந்த எவ்ளோ நல்லா இருந்திருக்கும்! நேத்து ஃபங்ஷன்ல எல்லாரும் ஃபேமிலியா ஜோடியா நிக்கும்போது, நான் மட்டும் தனியா குழந்தைகளோட நின்னுட்டு இருந்தேன். உன் கூட சேர்ந்து அந்த ராதா கேட்டப்பில ஃபோட்டோ எடுத்தா சூப்பரா இருக்குமேன்னு நான் எவ்ளோ ஆசைப்பட்டேன் தெரியுமா.. எல்லாமே உன்னால போச்சு.. போடா! நான் பிரக்னண்டா இருக்கிறது தெரிந்தும் கூட நீ உடனே வந்து என்ன பாக்கல இல்ல! இன்னும் அதுக்காக நான் உன் மேல கோவமா தான் இருக்கேன் அர்ஜுன்.” என்றாள் தேன்மொழி.

“ஹேய் சாரி டி! எனக்கும் உன்னை வந்து உடனே பாக்கணும்னு தான் இருந்துச்சு. ஜூலி என்ன காப்பாத்த போய் அடிபட்டு ஹாஸ்பிடல்ல கிடக்கிறா.‌ அவளை அங்க அப்படியே விட்டுட்டு எப்படி வர முடியும் சொல்லு? எனக்கு கில்டியா இருந்துச்சு. நீ சித்தார்த் ஆருத்ரா கூட அந்த ராதா கேட்டப்பில இருக்கிற ஃபோட்டோஸ் எல்லாத்தையும் நான் பார்த்தேன்.

செமையா இருந்துச்சு. அதுக்கப்புறம் தான் அந்த மொமென்டை மிஸ் பண்ணிட்டோம்னு எனக்கு இன்னும் கஷ்டமா இருந்துச்சு. அதான் உடனே கிருஷ்ணர் கெட்டப்ல கிளம்பி வந்துட்டேன் இங்க! And I have one more surprise for you.” என்ற அர்ஜுன் அவளை அழைத்து சென்று சோஃபாவில் அமர வைத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்தான்.

அங்கே உள்ள காஃபி டேபிளில் கிஃப்ட் ராப்பிங் செய்யப்பட்டு இரண்டு பொருட்கள் இருந்தது. அதை எடுத்து ஆசையுடன் தேன்மொழி திறந்து பார்க்க, அதில் ராதா கெட்டபில் தேன்மொழியுடன் கிருஷ்ணர் கெட்டபில் அர்ஜுன் இருப்பதைப் போல இருந்தது. இன்னொரு போட்டோவில், அவர்கள் இருவருக்கும் அருகில் ஆருத்ரா மற்றும் சித்தார்த் இருப்பதைப் போல ஒரு குடும்ப புகைப்படம் இருந்தது.

அதை பார்த்து ஆச்சரியப்பட்ட தேன்மொழி “பார்றா.. நேர்ல வரலைன்னாலும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸை யூஸ் பண்ணி இந்த அளவுக்கு ரியாலிஸ்டிகா ஃபோட்டோ ரெடி பண்ணிட்டியா நீ? இப்படி ஒரு ஃபோட்டோ இல்லையேன்னு நான் ரொம்ப ஃபீல் பண்ணிட்டு இருந்தேன். பரவாயில்லை, என்னை இம்ப்ரஸ் பண்றதுக்கு எதையோ யோசிச்சு கடைசில உனக்கும் கொஞ்சம் அறிவு இருக்குன்னு ப்ரூவ் பண்ணிட்ட. நேத்து முழுக்க பொண்டாட்டிய பத்தி யோசிக்க தெரியாத முட்டாப் பையன்னு உன்ன நெனச்சிட்டு இருந்தேன்.” என்று சொல்லிவிட்டு சிரிக்க,

அவளை முறைத்து பார்த்த அர்ஜுன் “இதுக்கு நீ நல்லா இருக்குன்னு சொல்லாமயே இருந்திருக்கலாம். ஆள பாரு..!! உன் கிட்ட தான் appreciation கேட்டு நிக்கணும் நல்லா பண்ணுவ டி!” என்றான். உடனே அவனது தாடயை பிடித்து செல்லமாக இழுத்து விளையாடிய தேன்மொழி “கோச்சுக்காதீங்க புருஷ்! உங்க கிட்ட நான் நாலு நாள் நல்ல மாதிரி பேசி நம்ம ஜாலியா இருந்தா, அடுத்த ஒரு வாரத்துக்கு நீங்க என்னை கடுப்பேத்துற மாதிரியே பண்றீங்க! சோ இனிமே எல்லாத்தையும் balancedஆ மெயின்டைன் பண்ணனும்னு நான் முடிவு பண்ணிட்டேன்.” என்றாள்.

“ம்ஹும்.. நல்ல முடிவு. நீ இப்படியே இரு, நம்ம லைஃப் சூப்பரா இருக்கும்.” என்று தன் முகத்தை ஒரு மாதிரி வேண்டா வெருப்பாக வைத்துக் கொண்டு சொன்ன அர்ஜுன் “நான் போய் மேக்கப் ரிமோவ் பண்ணிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்.” என்று விட்டு எழுந்து நின்றான்.

அவனை மேலும் கடுப்பேற்றுவதற்காகவே “உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா பேபி?” என்று ஜூலி அவனிடம் கேட்பதைப் போலவே அதே ஸ்லாங்கில் கேட்க, “ஒரு மண்ணும் தேவையில்லை. நீ உன் வேலையை பாரு.” என்ற அர்ஜூன் வாஷிங் ஏரியாவை நோக்கி சென்றான்.

அவன் கோபமாக செல்வதை பார்த்து சத்தமாக சிரித்த தேன்மொழி “இது என்னோட ரிவெஞ் டைம் அர்ஜூன்! உன் கூட சண்டை போட்டு பேசாம இருந்தாலும் எனக்கு தான் கஷ்டமா இருக்கு. அதனால இனிமே உன் கூட சமாதானமாகவும் போக கூடாது. சும்மா சும்மா சண்டை போட்டு பேசாமயும் இருக்கக் கூடாது. சோ பேசி பேசி உன்ன டார்ச்சர் பண்ணலாமே முடிவு பண்ணிட்டேன்.” என்று அவனைப் பார்த்து கத்தி சொல்ல,

கட்டிலில் கிடந்த தலையணையை எடுத்து அவள் மீது தூக்கி எறிந்த அர்ஜுன் “நீ வர வர ஓவரா பண்ற டி. இரு, வந்து உன்ன வெச்சிக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு சென்றான். அதற்கும் கிண்டலாக “வச்சுக்கோ வச்சுக்கோ!” என்று கத்தி சொன்ன தேன்மொழி “ஆமா ஜனனி தானே என்னை இங்கே கூட்டிட்டு வந்தாங்க! ரெட் கலர் saree வேணும்னு கேட்டாங்களே!

அவங்க அர்ஜுன் சொல்லித் தான் என்னை கூட்டிட்டு வந்தாங்களா? இல்ல நெஜமாவே அவங்களுக்கு அந்த saree வேணுமானு தெரியலையே! நேத்து நாங்க காஸ்டியூம் சேஞ்ச் பண்ணிட்டு இருக்கும்போது அவங்க அந்த saree-ய பாத்துட்டு அப்பவே நல்லா இருக்குன்னு சொன்னாங்க. சோ அவங்களுக்கு அது புடிச்சிருக்கு தானே.. அதை அவங்க கிட்டயே கொடுத்திடலாம்.” என்று நினைத்தவள், ஜனனி கேட்ட ஃபேன்ஸி ரெட் டிசைனர் சாரியை எடுத்துக் கொண்டு ஜனனியின் ரூமை நோக்கி நடந்தாள்.

அங்கே வழக்கம்போல தனது ரூமில் குழந்தைகளுடன் இருந்த ஜனனி அவளுடைய மகள்கள் இருவரிடமும் “ஒய் குட்டீஸ்! உங்களுக்கு உங்க மம்மியை பார்த்தா பாவமாவே இருக்காதா? என்னால உங்களை விட்டுட்டு ஒரு ரெண்டு நிமிஷம் ரெஸ்ட் ரூம் கூட போக முடியல. இப்படி போட்டி போட்டு அழுகாதீங்கப்பா!” என்று சொல்லி கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.

அந்தக் காட்சியை கண்டு லேசாக புன்னகைத்த தேன்மொழி “நல்லவேளை எனக்கு ஜனனி மாதிரி ட்வின்ஸ் இல்லை. சும்மாவே குழந்தைகளை பார்த்துக்கிறது ரொம்ப கஷ்டம். கூட எத்தனை பேர் இருந்தாலும், யார் குழந்தையை பார்த்துக்கிறேன்னு சொன்னாலும் எந்த அம்மாவுக்கும் குழந்தையை அப்படி விட மனசு வராது. சோ கடைசியில அவங்களே தான் பார்த்துக்கணும்.” என்று நினைத்தவள், ஜனனியின் பெயரைச் சொல்லி அவளை அழைத்தபடி உள்ளே சென்றாள்.

“வாங்க அண்ணி! நீங்க இந்நேரம் அண்ணா கூட பிஸியா இருப்பீங்கன்னு நினைச்சேன்.. என்ன என் ரூமுக்கு வந்திருக்கீங்க!” என்று கேட்டுவிட்டு அவள் கிண்டலாக சிரிக்க, “இந்த சாரியை குடுத்துட்டு போக தான் வந்தேன்.” என்று சொல்லிவிட்டு அவளிடம் தான் கொண்டு வந்த புடவையை கொடுத்த தேன்மொழி அழுது கொண்டு இருந்த குழந்தைகளில் ஒருத்தி தூக்கி தனது தோள்களில் போட்டு சமாதானப்படுத்த தொடங்கினாள்.

“ஓஹோ இதுக்காக தான் வந்தீங்களா? இதுக்கு என்ன அவசரம் அண்ணி? நான் அண்ணா உங்களுக்கு சர்ப்ரைஸ் பண்ணனும்னு சொன்னதுனால தான் இந்த சாரிய ரீசணா சொல்லி உங்கள அங்க இருந்து கூட்டிட்டு வந்தேன்.” என்று ஜனனி சொல்ல, “பரவால்ல ஜனனி, உங்களுக்கு இந்த saree புடிச்சிருக்கு தானே.. இதை நீங்களே வச்சுக்கோங்க!” என்றாள் தேன்மொழி.

அவள் அங்கே வரும்வரை அழுது கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் இப்போது அழுகையை நிறுத்தி விட, அவர்களை அருகருகில் படுக்க வைத்த தேன்மொழி “பரவால்லையே.. இவங்க ரெண்டு பேர் கூடையும் அப்பப்ப டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு இருந்தனால குழந்தைங்க அழுதா எப்படி சமாதானப்படுத்துறதுன்னு நானும் கத்துக்கிட்டேன் போல இருக்கு.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

“பாத்திங்களா அண்ணி.. நீங்க எல்லாம் முன்னாடியே உஷாரா டிரைனிங் எடுத்துக்கிட்டீங்க.‌‌.. எங்க அண்ணா ரெண்டு பேருக்கும் குழந்தை பிறக்கும் போது நான் காலேஜ் படிச்சுட்டு இருந்தேன். அந்த வயசுல எனக்கு இப்படி எல்லாம் ட்ரைனிங் எடுக்கனும்னு அறிவில்லாம போயிடுச்சு. அதான் இப்ப ஒன்னுக்கு ரெண்டு குழந்தைகளை வெச்சிக்கிட்டு சமாளிக்க தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்.” ‌ என்று ஜனனி சொல்ல,

சிரித்த தேன்மொழி “உங்களுக்கு இவங்க ரெண்டு பேரையும் ஒரே டைம்ல ஹேண்டில் பண்றதுக்கு கஷ்டமா இருந்துச்சுன்னா எங்க ரூம்ல கொண்டு வந்து குடுங்கன்னு நான் நிறைய தடவை சொல்லிட்டேன். நீங்க தான் கேட்க மாட்டேங்கிறீங்க. ஆமா மணி எட்டுக்கு மேல ஆகுதே.. இன்னும் சந்தோஷ் வீட்டுக்கு வரலையா?” என்று கேட்க,

தன் கணவனை நினைத்து பெருமூச்சு விட்ட ஜனனி “அவனைப் பத்தி ஏன் அண்ணி கேட்கிறீங்க! அவன் எல்லாம் எதுக்கு தான் கல்யாணம் பண்ணிகிட்டானோ தெரியல.. டெய்லி நாங்க மூணு பேரும் தூங்குனதுக்கு அப்புறம் தான் சார் வீட்டுக்கே வராரு. நாங்க மார்னிங் தூங்கி எந்திரிக்கறதுக்குள்ள எங்கேயோ கிளம்பி போயிடறான்.

நான் ஏதாவது கேட்டா ஆபிஸ் ஒர்க் ஆஃபீஸ் வொர்க்ன்னு சொல்றான். சம்டைம்ஸ் அர்ஜுன் அண்ணா, ஆகாஷ் அண்ணா கூட ஃப்ரீயா தான் இருக்காங்க. ஆனா இவன் அப்படி என்ன தான் வேலை செய்றானோ தெரியல.. வைஃப் கூடையும், எங்க பேபிஸ் கூடயும் கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாத அளவுக்கு பிசியாவே இருக்கான்.

நீங்களே சொல்லுங்க அண்ணி! அவன் கூட இருந்தா தானே குழந்தைகளுக்கு இவர் தான் நம்ம அப்பான்னு face ரிஜிஸ்டர் ஆகும்! இவன் இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி? நானே சந்தோசப் பத்தி அர்ஜுன் அண்ணா கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணனும் தான் இருந்தேன். கரெக்டா நீங்களே அவன பத்தி கேட்டுட்டீங்க!” என்று சலிப்புடன் சொன்னாள்.

அப்போது ஏனோ திடீரென்று தேன்மொழிக்கு விஜயா அவளிடம் “எப்பயுமே ஆம்பளைங்களோட நடத்த எப்படி இருக்குன்னு வீட்ல இருக்குற பொண்டாட்டி கவனிச்சுக்கிட்டே இருக்கணும். அவன் வெளிய எங்கயாவது போனா, எப்படா வீட்டுக்கு போவோம் நம்ம பொண்டாட்டி முகத்தையும் குழந்தை முகத்தையும் பார்க்க முடியும்னு நினைக்கணும். அப்படி இல்லாம, வீட்டு பக்கமே தலை காட்டாம யார் எப்படி போனா எனக்கு என்னனு அவன் இஷ்டத்துக்கு திரிஞ்சுக்கிட்டு இருந்தான்னா, அவனுக்கு குடும்பத்து மேல இருக்கிற பிடிப்பு குறைஞ்சுகிட்டு இருக்குனு அர்த்தம்.

பொம்பளைங்க உஷாரா இல்லைனா குடும்பம் சின்னா பின்னமா போய்டும். இந்த ஆம்பள புத்திய கணிக்கவே முடியாது. எவ்வளவு நல்லவனா இருந்தாலும், நம்ம யோசிக்காதப்ப திடீர்னு ஏதாவது தப்பு பண்ணிட்டு வந்து நின்னா அவனால பாதிக்கப்பட போறது நம்மளும் தானே! இதுக்கு மேலயாவது எனக்கு என்னனு இருக்காம, உன் புருஷன் எப்ப எங்க போறாரு என்ன பண்றாருன்னு நீ கவனிச்சுக்கிட்டே இரு.” என்று சொன்னது நியாபகம் வந்தது.

அவள் எப்படி யோசித்துப் பார்த்தாலும் அவளுக்கு அர்ஜுனின் மீது சந்தேகம் வரவில்லை. ஆனால் சந்தோஷ் பற்றி ஜனனி சொல்வதை அவளால் சாதரமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் “நம்மலே அர்ஜுன் கிட்ட சந்தோஷை பத்தி பேசணும். எனக்கும் அர்ஜுனுக்கும் மேரேஜ் ஆகி கிட்டத்தட்ட ஆறு மாசம் ஆகப்போகுது. அர்ஜுனும் சரி, ஆகாசம் சரி வீட்ல இருக்குறவங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு எப்பயுமே நினைக்கிறாங்க.

ஆனா சந்தோஷ் அந்த மாதிரி இருந்து நான் பார்த்ததில்லை. ஏன் இத்தனை மாசத்துல ஒரே வீட்டுக்குள்ள இருந்தும் நானே அவரை இரண்டு மூன்று தடவை தான் பார்த்து இருக்கேன். பாவம் ஜனனி அவர் கூட இல்லாததை நினைச்சு ரொம்ப ஃபீல் பண்றாங்க. அவர் நிஜமாவே பிசியா கூட இருக்கலாம். அதுக்காக எல்லாம் நம்மளால அவர் மேல சந்தேகப்பட முடியாது. இருந்தாலும் அவர் ஜனனியை கஷ்டப்படுத்தக் கூடாது இல்ல! அதுக்காகவாவது அர்ஜூன் கிட்ட அவர பத்தி பேசணும்.” என்று நினைத்துக் கொண்டாள் தேன்மொழி.

- மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம் 128
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.