தேன்மொழியை யாரும் டிஸ்டர்ப் செய்யாததால் அவள் வழக்கம் போல மதியவேளையில் தான் கண் விழித்தாள். அப்போது நேரம் என்ன ஆகிறது என்றெல்லாம் அவளுக்கு தெரியவில்லை. அவள் தன் கண்களை திறந்தவுடன் அங்கே அர்ஜுன் இருக்கிறானா என்று தான் சுற்றி முற்றி தேடினாள். அவன் அங்கே இல்லாமல் போகவே, நேரத்தை கவனித்த தேன்மொழி “என்ன இவ்வளவு நேரம் ஆயிடுச்சு.. யாருமே என்ன எழுப்பாமாயே விட்டு இருக்காங்க! டாக்டர் என்னை டைமுக்கு சாப்பிடணும்னு சொன்னாங்களே.. இப்படி தூங்கி எந்திரிக்கும்போதே ஸ்ட்ரெயிட்டா லஞ்ச் டைமுக்கு எந்திரிச்சா, அப்புறம் எப்படி நான் மார்னிங் ப்ரேக்பாஃஸ்ட் சாப்பிடுவது?
அது சரி.. டைமுக்கு சாப்பிடணும்னு எனக்கு அக்கறை இருந்தா நான் தான் அலாரம் வைத்து எந்திரிச்சு ரெடியாகி கீழ போய் கரெக்டா சாப்பிடணும். மத்தவங்க அதையெல்லாம் செய்வாங்கன்னு எதிர்பார்த்த முடியுமா? அதுவும் என் புருஷன்னு ஒருத்தன் இருக்கானே.. அவனை எல்லாம் எந்த லிஸ்ட்ல சேர்க்கறதுன்னே தெரியல!” என்று நினைத்த தேன்மொழி எழுந்து அவசர அவசரமாக சென்று ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு வந்தாள்.
பின் முதல் வேலையாக டைனிங் ஏரியாவிற்கு சென்று டாக்டர் சொன்னதைப்போல சத்தான உணவுகளாக சமையல்காரரிடம் ஆர்டர் செய்து வரவழைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள். விஜயாவுடன் பேசியபடி கிச்சனில் இருந்து வந்து கொண்டிருந்த ஜானகி தேன்மொழியை பார்த்தவுடன் சிரித்த முகமாக அவள் அருகில் சென்று, “பார்றா.. இப்ப தான் தூங்கி எந்திரிக்கையா நீ? நாங்க மார்னிங் டிஃபன் சாப்பிடும்போது உன்ன வந்து நானே எழுப்பலாம்னு இருந்தேன். அர்ஜுன் தான் நீ டயர்டா இருக்கேன்னு உன்னை எழுப்ப வேண்டாம்ன்னு கிளம்பும்போது சொல்லிட்டு போனான். சரி, நல்லா தூங்கிட்டு இருக்கிறவளை எதுக்கு எழுப்பி டிஸ்டர்ப் பண்ணனும்னு நானும் விட்டுட்டேன்.” என்றாள்.
“பரவாயில்லை விடுங்க அத்தை. இனிமே நான் கரெக்ட் டைம்க்கு டெய்லியும் அலாரம் வச்சு எந்திரிச்சிக்கிறேன்.” என்று தேன்மொழி சொல்ல, “அது சரி மாப்ள வரும்போது கூட நீ தூங்கிட்டு இருந்தியா?” என்று கேட்ட விஜயா அவளை கேள்வியாக பார்த்தாள்.
அதற்கு தன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்ட தேன்மொழி “அவர் வீட்டுக்கு வந்தாருன்னு தெரிஞ்சா தானே நான் அவரை பார்த்து ஏதாவது பேச முடியும்! லாஸ்ட்டா அவர் அந்த பொண்ணை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகும் போது நான் அவரை பார்த்தது. அதுக்கப்புறம் அவர் என்ன பார்க்க வரவும் இல்ல. என்கிட்ட கால் பண்ணி கூட அவர் ஒரு வார்த்தைகூட பேசல.” என்று கொஞ்சம் சோகமாக சொல்ல, “ஆனா அர்ஜுன் இயர்லி மார்னிங் வீட்டுக்கு வந்தானே மா! அப்புறம் மறுபடியும் ரெப்ரெஷ் ஆகி வெளிய கிளம்பி போயிட்டான். இப்ப எங்க ஆபீஸ் போய் இருக்கானா இல்ல அந்த பொண்ணு பாக்க ஹாஸ்பிடல் போய் இருக்கானான்னு தெரியல! நான் வேணும்னா நீ தூங்கி எந்திரிச்சிட்டேனு சொல்லி அவன கால் பண்ணி வர சொல்லட்டுமா?” என்று அவளிடம் கேட்டாள் ஜானகி.
“இல்ல அத்தை, வேண்டாம். அவருக்கா எப்ப என் கிட்ட பேசணும்னு தோணுதோ அப்ப அவர் என் கிட்ட பேசுனா போதும். நீங்க ரெக்கமண்டேஷன் பண்ணி அவர் என் கிட்ட பேச வேண்டாம்.” என்று தேன்மொழி சொல்லிவிட, “இவ அர்ஜுன் மேல கோவமா இருக்கான்னு நினைக்கிறேன். அந்த லூசு பையன் பொண்டாட்டி பிரக்னண்டா இருக்கான்னு தெரிஞ்சும், இவளை நடுவுல ஒரு தடவை வந்து பாத்துட்டு போனால் என்னவாம்? இந்த டைம்ல அவன் தானே கூட இருந்து இவ்ளோ நல்லா பாத்துக்கணும்! நீயே வேண்டாம்னு சொன்னாலும், கண்டிப்பா நான் உனக்காக என் பையன் கிட்ட பேசுவேன் தேன்மொழி. அது ஒரு மாமியாரா என்னோட கடமை.” என்று நினைத்தாள் ஜானகி.
அந்த நேரத்தில் தேன்மொழியின் எண்ணிற்கு கால் செய்தான் அர்ஜுன். “Hubby ❤️” என்ற நம்பரில் இருந்து கால் வந்ததை பார்த்தவுடன் முதலில் ஒரு நொடி சந்தோஷப்பட்ட தேன்மொழி, “இப்ப தான் உனக்கு என் கிட்ட பேசணும்னு தோணுதா? நிஜமாவே உனக்கு என் மேல அக்கறை இருந்தா நீ என்னை தேடி வா அர்ஜுன். எனக்கு உன்ன பாக்கணும் இப்பவே! உனக்கும் அப்படி தோணுதா இல்லையான்னு நான் இன்னைக்கு தெரிஞ்சுக்கணும்.” என்று நினைத்து உடனே தனது மொபைல் ஃபோனை சைலண்டில் போட்டு விட்டாள்.
தொடர்ந்து அவளுக்கு இரண்டு மூன்று முறை கால் செய்து பார்த்த அர்ஜுன் “இன்னுமா அவ தூங்கிட்டு இருக்கா?” என்று யோசித்துக் கொண்டிருக்க, அவனுக்கு அவனுடைய ரஷ்யன் கம்பெனியின் மேனேஜ்மென்ட் டீமில் இருந்து கால் வந்தது. அது முக்கியமான அழைப்பு என்பதால் தேன்மொழியை பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு அந்த அழைப்பை ஏற்ற அர்ஜுன் அவர்களிடம் தொடர்ந்து ஆபீஸ் சம்பந்தமாக பேச தொடங்கினான்.
சாப்பிட்டு முடித்துவிட்டு தனது மொபைல் ஃபோனை எடுத்துக் கொண்டு அவளுடைய ரூமிற்கு சென்ற தேன்மொழி அர்ஜுனிடம் இருந்து மீண்டும் தனக்கு ஏதேனும் கால் வருகிறதா என்று பார்த்தாள். அவள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை அப்படி வெயிட் செய்து பார்த்தும், அவனிடம் இருந்து அவளுக்கு ஒரு கால் அல்லது மெசேஜ் கூட வரவில்லை. அப்படி சொல்வதைவிட, அவன் பிஸியாக இருந்ததால் அவனால் இவளிடம் பேச முடியாமல் போய்விட்டது என்று சொல்லலாம்.
ஆனால் அவன் வருகைக்காக காத்துக் கொண்டிருந்த தேன்மொழிக்கு அவனுடைய இந்த செயல் கோபத்தை வரவழைத்தது. அதனால் “இப்போ என் கிட்ட பேசறதை விட உனக்கு மத்தது எல்லாம் இம்பார்டன்ட் ஆயிடுச்சு இல்ல! நான் உன் காலை அட்டென்ட் பண்ணாம இருந்தா, எனக்கு என்ன ஆச்சுன்னு யோசிச்சு பயப்பட மாட்டியா நீ? நீ நேர்ல வந்து கூட என்ன பார்க்க வேண்டாம். என்ன பத்தி மத்தவங்க கிட்ட கூட கால் பண்ணி கேக்க மாட்டியா? பாக்குற அர்ஜுன்.. நானும் வெயிட் பண்ணி பாக்குறேன். இன்னும் எவ்வளவு நேரம் தான் நீ இப்படி இருக்கேன்னு!” என்று நினைத்த தேன்மொழி தனது மொபைல் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து ஒரு ஓரமாக வைத்து விட்டாள்.
கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே ஆருத்ரா டான்ஸ்பிளஸ் செல்லாததால் அனிதாவிற்கு வீட்டில் உள்ள ஃபோனில் இருந்து கால் செய்து செய்து கேட்டுவிட்டு அவளை கூட்டிக் கொண்டு சென்று டான்ஸ் கிளாஸுல் விட்டு விட்டு வந்தாள். அவள் வருகைக்காக காத்திருந்த சித்தார்த் ஓடி சென்று அவளை கட்டிப்பிடித்துக் கொண்டு “நீங்க எங்க மம்மி போனீங்க? நான் இவ்ளோ நேரமா உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா!” என்று அன்புடன் கேட்க,
“நான் ரொம்ப நேரமா இங்க வீட்ல தான் இருந்தேன் சித்து. நீதான் என்ன வந்து பாக்கவே இல்ல. இப்ப தான் ருத்ரா குட்டிய டான்ஸ் கிளாஸ்ல விட்டுட்டு வீட்டுக்கு வரேன். எதுக்கு நீ மம்மியை தேடிட்டு இருந்த? உனக்கு ஏதாவது வேணுமா? நம்ம ரெண்டு பேரும் வெளிய ஷாப்பிங் வேணா போயிட்டு வரலாமா? நான் இப்ப ஃப்ரீயா தான் இருக்கேன்!” என்றாள் தேன்மொழி.
“இல்ல மம்மி எனக்கு எதுவும் வேண்டாம். ஆல்ரெடி என் கிட்ட எல்லாமே இருக்கு. அப்படியே எனக்கு ஏதாவது வேணும்னாலும் கிளாரா ஆன்ட்டி கிட்ட சொன்னா உடனே ஆர்டர் பண்ணி வாங்கி வச்சிருவாங்க. நீங்க எனக்கு வேற ஒரு ஹெல்ப் பண்ணனும். பண்ணுவீங்களா?” என்று அவள் கையை பிடித்துக் கொண்டு சித்தார்த் கேட்க, அவளுடன் சென்று ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்த தேன்மொழி, “ஆஹான்.. என் கிட்ட கேள்வி கேக்குற அளவுக்கு பெரிய ஆளாகிட்டியா நீ? இப்படி ஹெல்ப்ன்னு ரெக்வஸ்ட் பண்ணி கேட்காம நீ நார்மலாவே மம்மி கிட்ட உனக்கு என்ன வேணும்னு கேட்கலாம் சித்து. You have all the rights to ask me anything!” என்று அன்புடன் சொன்னாள்.
“நீங்க டாடி கிட்ட கேட்டு ஆருத்ராவை மட்டும் அவளுக்கு இங்க போர் அடிக்க கூடாதுன்னு டான்ஸ் கிளாஸ் சேர்த்து விட்டீங்கள்ல.. அதே மாதிரி என்னை கராத்தே கிளாஸ்ல ஜாயின் பண்ணி விடுங்க மம்மி. ஆல்ரெடி டாடி எனக்கு fight பண்றதுக்கு நிறைய ட்ரைனிங் குடுத்து இருக்காரு. இருந்தாலும் எனக்கு வெளிய போய் கராத்தே, லுடோ, பாக்சிங் எல்லாம் கத்துக்கணும்னு ஆசை. அப்ப தானே மத்தவங்க கூட fight பண்ணி ப்ராக்டிஸ் பண்ண முடியும்!
நான் கேட்டா டாடி வெளிய போய் fight பண்றது எல்லாம் safe இல்லைன்னு சொல்லிடுவாரு. ரஷ்யால இருக்கும் போது தான் எங்களை டெய்லி ஸ்கூலுக்கு கூட போக விடாம வீட்டுக்குள்ளேயே வச்சிருந்தாங்க. எங்கயாவது என்னை ஏதாவது ஒரு கிளாஸ்ல சேர்த்து விடுங்க மம்மி! வர வர என்னோட ஃபிரெண்ட்ஸ் கவுன்ட் குறைஞ்சுகிட்டே போகுது. எங்கயும் வெளியே போகாமயே இருந்தா மத்தவங்க கூட நான் எப்படி ஃப்ரெண்ட் ஆகிறது?” என்று சித்தார்த் தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்க,
“நீ சொல்றது எல்லாம் சரிதான். இந்த வயசுல வெளிய போய் எல்லார் கிட்டயும் நல்லா பழகினா தான் future-ல உனக்கு சொசைட்டிய ஃபேஸ் பண்ணும் போது ஈசியா இருக்கும். ஆருத்ரா மாதிரி நீயும் டான்ஸ் கிளாஸ் போறேன்னு சொன்னா ஒன்னும் பிரச்சனை இல்ல.. உன்னையும் எதாவது ஒரு கிளாஸ் பார்த்து உடனே சேர்த்து விட்டுருவேன்.
ஆனா நீ சண்டை போட கத்துக்கணும்னு சொல்றியே.. அங்க போய் உனக்கு ப்ராக்டிஸ் பண்ணும்போது அடிபட்டா என்ன பண்றது? எனக்கு அதை யோசிச்சா தான் பயமா இருக்கு. நீ போய் இத பத்தி முதல்ல உங்க டாடி கிட்ட பேசு. பட் அவர் இப்போதைக்கு யாருக்கும் available-ஆ இருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன். சோ உங்க தாத்தா பாட்டி கிட்ட பேசி பாரு. அவங்க உன்னை அந்த மாதிரி கிளாஸ்ல சேத்து விடுறதுக்கு ஓகே சொன்னாங்கன்னா, நான் இன்னைக்கே கூட உன்னை கூட்டிட்டு போய் நல்ல கிளாஸா பார்த்து சேர்த்துவிடுறேன்.” என்றாள் தேன்மொழி.
“Wow.. thank you mummy.. I love you so much!” என்று சொல்லிவிட்டு தேன்மொழியின் கன்னத்தில் முத்தமிட்ட சித்தார்த் “நான் இப்பவே போய் தாத்தா கிட்டயும் பாட்டிகிட்டயும் பர்மிஷன் கேட்டுட்டு வரேன். அவங்க ஓகே சொல்லிட்டா, நீங்க நோ சொல்லாம இன்னைக்கு என்னை கிளாஸ்க்கு கூட்டிட்டு போகணும் ஓகேவா?” என்று உற்சாகமான குரலில் கேட்க, அவனைப் பார்த்து அன்புடன் புன்னகைத்த தேன்மொழி “ஓகே!” என்றாள்.
உறுதி செய்து கொள்வதற்காக அவன் முன்னே தன் கையை நீட்டிய சித்தார்த் “ப்ராமிஸ்?” என்று கேட்க, அவன் கையின் மீது தன் கையை வைத்த தேன்மொழி “உங்க அப்பாவும், மத்தவங்களும் ஓகே சொன்னா கண்டிப்பா நான் உன்னை கிளாசுக்கு அனுப்புறேன். ஆனா நீ அங்க போய் சும்மா அடிபட்டு வரக்கூடாது. அந்த மாதிரி நடந்துச்சுன்னா, யார் என்ன சொன்னாலும் நான் உன்னை கிளாசுக்கு போக அனுப்ப மாட்டேன். அது உனக்கு ஓகேவா?” என்று அவனிடம் கேட்டாள்.
“ம்ம்.. double ok mummy! நான் தான் மத்தவங்கள அடிப்பேன். என்னை எல்லாம் யாராலையும் அடிக்க முடியாது. டாடி மாதிரி நானும் ரொம்ப ஸ்ட்ராங்கான பையன். You don't worry!” என்ற சித்தார்த் அவளை கட்டிப்பிடித்து மீண்டும் ஒருமுறை தேங்க்ஸ் சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடி சென்று விட்டான்.
செல்லும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்த தேன்மொழி “நான் பிரக்னண்டா இருக்கிறது இவனுக்கும் ஆருத்ராவுக்கும் தெரியுமா இல்லையான்னு தெரியலையே! அது தெரிஞ்சா இவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க?” என்று யோசிக்க தொடங்கினாள்.
- மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம் 123
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.