மஞ்சம் 122

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அர்ஜுன் வர தாமதமானதால் அவனுக்காக காத்திருக்க வேண்டாம் என்று நினைத்த தேன்மொழி குழந்தைகளுக்காக தானும் தயாராவதற்கு சென்றாள். தன்னுடன் சேர்த்து குழந்தைகளையும் தயார்படுத்தினாள். சில நிமிடங்களுக்கு பிறகு தேன்மொழி ராதை கெட்டப்பில் அழகாக தோன்ற, அவளது இரு பக்கமும் இளவரசன், இளவரசியை போல பழங்கால ஆடைகளை அணிந்து கொண்டு சித்தார்த்தும், ஆருத்ராவும் மேடையில் தோன்றினார்கள்.

“அர்ஜுன் வர்றவரைக்கும் வெயிட் பண்ணா இந்த செலிப்ரேஷன் பார்டியே முடிஞ்சு போயிடும் போல இருக்கு.” என்று நினைத்த தேன்மொழி சித்தார்த், ஆருத்ரா இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு அவர்களுடன் சேர்ந்து மேடையில் ramp walk செய்தாள். அந்த காட்சியை சில ஃபோட்டோக்களாகவும் வீடியோக்களாகவும் தனது மொபைல் ஃபோனில் எடுத்த ஆகாஷ் உடனே அதை அர்ஜுனிற்கு அனுப்பி வைத்தான்.

ஜூலி கண் விழிப்பதற்காக இன்னும் ஹாஸ்பிடலில் காத்துக் கொண்டிருந்த அர்ஜுன் அதை பார்த்துவிட்டு “இவங்க மூணு பேரும் இந்த frame-ல ரொம்ப அழகா இருக்காங்க. ஆகாஷோட இந்த ஐடியா நெஜமாவே நல்லா இருக்கு. இப்ப அவனால எல்லாருமே ஹாப்பியா இருக்காங்க. முக்கியமா தேன்மொழி இந்த சமயத்துல முன்னாடி இருந்ததை விட ரொம்ப சந்தோஷமா இருக்கணும்.

கண்டிப்பா அவளும் மத்தவங்க கூட சேர்ந்து என்ஜாய் பண்ணி இருப்பான்னு நம்புறேன். பட் இப்ப என்னால தான் அவங்க கூட இருக்க முடியாம போயிடுச்சு. நான் மட்டும் என் ஹனி பேபிய இந்த கெட்டப்ல first பார்த்திருந்தா, அப்படியே அவளை தூக்கி சுத்தி அவ face full-ஆ கிஸ் பண்ணி லவ் டார்ச்சர் பண்ணி இருப்பேன். ச்சே‌... எல்லாம் மிஸ் ஆயிடுச்சு.” என்று தனக்குள் பேசிக் கொண்டு இருந்தான்.

அப்போது ஜூலி இருந்த அறையில் இருந்து வெளியில் வந்த நர்ஸ் “சார் ஜூலி மேடம்க்கு மயக்கம் தெளிஞ்சுருச்சு. சர்ஜரி இப்ப தான் முடிந்திருக்கிறதுனால நான் போய் முதல்ல டாக்டரை வர சொல்லி அவங்க ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்குன்னு செக் பண்ண சொல்றேன். டாக்டர் அலோ பண்ணா நீங்க அவங்கள உள்ள போய் பார்க்கலாம்.” என்று சொல்லிவிட்டு டாக்டரை அழைத்து வருவதற்காக அவருடைய கேபினுக்கு சென்றாள்.

அங்கே வந்து ஜூலியை மீண்டும் சோதித்து பார்த்த டாக்டர் வெளியில் வந்து அர்ஜுனிடம் “அவங்களோட ஹெல்த் கண்டிஷன் ஸ்டேபிளா தான் இருக்கு மிஸ்டர் அர்ஜுன். பட் அவங்க ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்க கூடாது. அவங்களோட ஃபேமிலில இருந்து யாராவது வந்திருக்காங்களா?” என்று கேட்க, “இவங்க ரஷ்யன் சிட்டிசன். அங்க கிளைமேட்டும் சரி இல்ல. சுச்சுவேஷனும் சரியில்ல. நான் அவங்க ஃபேமிலிய காண்டாக்ட் பண்றதுக்கு ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன்‌. இன்னும் என்னால அவங்களை ரீச் பண்ண முடியல. அவங்களோட எக்ஸ் ஹஸ்பண்ட் கிட்ட இத பத்தி பேசிணோம். இவங்க ரெண்டு பேருக்கும் டிவர்ஸ் ஆகிட்டதுனால அவர் இனிமே ஜூலிக்கு நான் ரெஸ்பான்சிபல் இல்லைன்னு சொல்லிட்டாரு.

சோ இப்போதைக்கு நாங்க தான் இவங்கள பாத்துக்கிட்டாக்கனும். நீங்க எதுவா இருந்தாலும் யோசிக்காம என் கிட்டயே சொல்லிடுங்க. She is my best friend.” என்றான் அர்ஜுன்.

“இப்ப தான் அவங்களுக்கு சர்ஜரி முடிஞ்சிருக்கு. அட்லீஸ்ட் த்ரீ டேஸ் அவங்க ஹாஸ்பிடல்ல இருக்கணும். நீங்க அதுக்கு அப்புறமா அவங்களை டிஸ்டார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம். ஒன் வீக் கழிச்சு அவங்கள கூட்டிட்டு வந்தீங்கன்னா, அவங்களோட கண்டிஷன் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு நெக்ஸ்ட் என்ன பண்றதுன்னு டிசைட் பண்ணலாம்.” என்று டாக்டர் சொல்ல, “தேங்க்ஸ் டாக்டர்!” என்றான் அர்ஜுன்.

சில நிமிடங்களுக்கு பிறகு அவன் உள்ளே சென்று அரை மயக்கத்தில் இருந்த ஜூலியை பார்த்தான். எப்போதும் அவள் முகத்தில் இருக்கும் அதிகப்படியான ஒப்பனைகள் எல்லாம் இல்லாமல் எப்போது பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாக அவளை பார்த்து நிலையில் இப்ப அடிபட்ட இந்த நிலையில் கிடந்த ஜூலியை பார்க்கவே அர்ஜுனிற்கு கஷ்டமாக இருந்தது. அவன் தன் அருகில் வந்து நிற்பதை உணர்ந்த ஜூலி தன் கண்களை முழுவதாக திறந்து “அர்ஜுன்!” என்று மெல்ல அழைத்தாள்.

அவள் அருகில் சென்று நின்று கொண்ட அர்ஜுன் “நான் இங்க தான் இருக்கேன் ஜூலி. உனக்கு எதுவும் ஆகல டோன்ட் வரி. ட்ரீட்மெண்ட் முடிஞ்சு நீ இப்ப safe-ஆ இருக்க. கொஞ்ச நாள் கழிச்சு உன்ன டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு டாக்டர் இப்ப தான் சொல்லிட்டு போனாரு.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அவன் கைகளை தனது ட்ரிப்ஸ் போட்ட கையால் மெதுவாக பிடித்த ஜூலி தாழ்மையான குரலில், “பெயிண் ரொம்ப அதிகமா இருக்கு அர்ஜுன். எனக்கு இப்ப டிரவுசியா இருந்தாலும் என்னால அந்த பேயினை ஃபீல் பண்ண முடியுது.

எனக்கு கண்ணை மூடினாலே அந்த இன்சிடென்ட் தான் ஞாபகம் வருது‌. அத நெனச்சாலே எனக்கு ரொம்ப பயமா இருக்கு அர்ஜூன். ப்ளீஸ்.. நீ என்ன விட்டுட்டு போயிடாத.. உன் கூட கடைசி வரைக்கும் ஒன்னா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுதான் முடியல. அட்லீஸ்ட் எனக்கு சரியாகற வரைக்கும் நீ என் கூட இரேன் ப்ளீஸ்!” என்று மூச்சு வாங்க கேட்டாள்.

அங்கே இருந்த நர்ஸ் “மேடம் இப்ப நீங்க ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்க கூடாது. ரொம்ப நேரம் பேச ட்ரை பண்ணாதீங்க. சார் நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க. பேஷண்ட டிஸ்டர்ப் பண்ணாதீங்க.” என்று சொல்ல, “நீ உன் கூட யாரும் இல்லை என்று நினைச்சு பயப்படாத ஜூலி. நான் இங்க தான் இருக்கேன். உன் பக்கத்துல இந்த ரூமுக்கு வெளிய தான் இருக்கேன். Take Care.” என்று சொல்லிவிட்டு அந்த ரூமை விட்டு வெளியேறினான்.

அவன் வந்து தனது மொபைல் ஃபோனை எடுத்து பார்க்கும்போது “எல்லாரும் இங்க ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கும்போது நீ மட்டும் அங்க என்ன டா பண்ணிட்டு இருக்க? அந்த பொண்ணுக்கு இன்னுமா கான்ஷியஸ் வரல? அப்படியே வரலன்னாலும், அவங்களுக்குன்னு ஒரு கேர் டேக்கர் அரேஞ்ச் பண்ணிட்டா அவங்க கூட இருந்து எல்லாத்தையும் பாத்துட்டு போறாங்க! இங்க எல்லாரும் இருந்தாலும் அண்ணி உன்ன தான் தேடிக்கிட்டே இருக்காங்க.

அவங்க டைரக்டா உன் கிட்ட பேசி உன்ன இங்க வர சொல்ல முடியாம பாக்குறவங்க எல்லார்கிட்டயும் நீ எப்ப வருவன்னு கேட்டுகிட்டே இருக்காங்க. அவங்களுக்காகவாவது இங்க வந்தா என்ன? அட்லீஸ்ட் ஒரு மணி நேரம் வந்துட்டு போ! அதனால என்ன ஆயிடப்போகுது இப்ப?” என்று கேட்டு ஆகாஷ் அவனுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான்.

அதை பார்த்து பெருமூச்சு விட்ட அர்ஜுன் “என்னால இப்ப ஜூலியை இந்த நிலைமையில விட்டுட்டு அங்க போகவும் முடியல. உடனே போய் என் ஹனி பேபியை பாக்கணும்ன்னும் தோணுது. இப்ப நான் என்ன பண்றது?” என்று யோசித்து குழம்பினான். அவன் சர்ச்சில் இருந்து கிளம்பியதில் இருந்து இப்போது வரையிலும் சாப்பிடவில்லை என்பதால் அவன் வயிறு ஒரு பக்கம் சாப்பாடு போட சொல்லி கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது.

அதனால் முதல் வேலையாக அந்த ஹாஸ்பிடலில் இருந்த கேண்டினில் சென்று சாப்பிட்டு முடிதான் அர்ஜுன். அவன் திரும்ப வரும்பொழுது ஜூலிக்கு ஏதோ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்லி அவளை வீல்சேரில் அமர வைத்து 2 நர்ஸ்கள் அவளை அழைத்து சென்று கொண்டிருந்தார்கள். அதை கவனித்த அர்ஜுன் அவர்களுடன் சென்றான்.

பின் திரும்ப வந்து ஜூலி அவன் கையைப் பிடித்துக் கொண்டு அவனை ஒரு நொடி கூட தனியாக விட மறுத்து விட்டதால் அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டான் அர்ஜுன். நேரம் செல்ல செல்ல தேன்மொழிக்கு அர்ஜுன் தனக்காக வருவான் என்ற நம்பிக்கை காற்றில் வைத்த கற்பூரமாய் கரைந்து கொண்டிருந்தது. அதனால் “நீ இங்க வர்றதும் வராம போறதும் உன்னோட இஷ்டம். ஆல்ரெடி நான் டிசைட் பண்ண மாதிரி இனிமே உன் கிட்ட நான் எந்த கொஸ்டினும் கேட்க போறது இல்ல அர்ஜுன். உன் இஷ்டத்துக்கு நீ என்னமோ பண்ணு.” என்று நினைத்து மற்றவர்களுடன் தனது நேரத்தை செலவிட தொடங்கினாள்.

அந்த செலிப்ரேஷன் பார்ட்டி முடிந்து அனைவரும் இரவு 7 மணிக்கு மேல் நடக்கும் ரிசெப்ஷனுக்கு தயாராகிக் கொண்டு இருந்தார்கள். தேன்மொழியை தன் அருகில் வைத்து கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்த ஜானகி அவளை தனியாக விடாமல் தனது காரில் ஏற்றிக் கொண்டு விழா நடக்கும் ஹோட்டலுக்கு சென்றார்கள்.

இது அர்ஜுன் வீட்டு திருமணம் என்பதால் காலையில் திருமணத்திற்கு வராதவர்கள், அங்கே நடந்த கலவரத்தால் பாதியில் வெளியில் அனுப்பப்பட்டவர்கள் எல்லாம் இப்போது அந்த மேரேஜ் ரிசப்ஷனுக்கு வந்து சேர்ந்தார்கள். இம்முறை எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு பணியில் நேரடியாக ஈடுபட்டு இருந்த ஆகாஷ் பிஸியாக அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தான்‌.

இரவு 11 மணிக்கு மேல் ரிசப்ஷன் முடிந்து அனைவரும் ஹனி பேலஸிற்கு வந்து சேர்ந்தார்கள். மொத்தத்தில் இன்றைய நாள் தேன்மொழிக்கு கலவையான உணர்ச்சிகளுடன் இருந்தது. அவள் மனம் அர்ஜுனை தேட, அவள் மூளை “எப்ப பாத்தாலும் நீ மட்டும் தான் அவன பத்தி யோசிச்சுக்கிட்டே இருக்க. அவன் வேணும், எப்பவும் அவன் கூடவே இருக்கணும்னு ஆசைப்படுற. ஆனா அவனுக்கு அந்த மாதிரி எல்லாம் எந்த எண்ணமும் இருக்கிற மாதிரி தெரியல.” என்று சொல்லி அவளை ஏற்றிவிட்டு கொண்டு இருந்ததால், தனது வயிற்றில் உள்ள குழந்தையைப் பற்றி நினைத்துப் பார்த்த தேன்மொழி “யார் எப்படி இருக்காங்களோ.. இப்ப நான் அத பத்தி யோசிக்க கூடாது. என்ன மட்டுமே நம்பி இந்த குழந்தை பிறக்கப்போகுது. இத பத்திரமா பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு. இத்தனை நாள் தெரியாம எப்படியோ careless-ஆ இருந்துட்டேன். பட் இனிமே அப்படி இருக்கக் கூடாது.” என நினைத்து நேரத்திற்கு முதலில் தூங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களது ரூமிற்கு சென்று படுத்து உறங்கினாள்.

அன்று இரவு ஜூலியுடன் ஹாஸ்பிடலில் தங்கிவிட்ட அர்ஜுன் மறுநாள் காலை ரெப்ரெஷ் ஆவதற்காக வீட்டிற்கு வந்தான். அவன் வரும்போதும் தேன்மொழி உறங்கிக் கொண்டு தான் இருந்தாள். “அவளை எழுப்பி வெளிய போறோம்ன்னு சொல்லிட்டு போகலாமா?” என்று நினைத்த அர்ஜுன், “இல்ல வேண்டாம், இந்த டைம்ல தேவை இல்லாம அவளை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு? பிரக்னண்டா வேற இருக்கா... இவ நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். நம்ம ஈவினிங் வந்து பார்க்கலாம்.” என்று யோசித்து விட்டு அவளை தொந்தரவு செய்யாமல் குளித்து கிளம்பி மீண்டும் வெளியில் சென்று விட்டான்.

- மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம் 122
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi