மஞ்சம் 121

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
தேன்மொழி அர்ஜுனை பார்க்க வேண்டும் என்று ஜானகியிடம் சொல்ல, “உன்னோட பாடி கண்டிஷன் கொஞ்சம் poor-ஆ இருக்குன்னு டாக்டர் இப்ப தான் அர்ஜுன் கால்ல இருக்கும்போது சொன்னாங்க. உன்ன அடிக்கடி டிராவல் பண்ண விடக் கூடாதுன்னு நாங்க வரும்போது எங்க கிட்டயும் பர்சனலா சொன்னாங்க. இங்க இருந்து அர்ஜுன் ஜூலிய அட்மிட் பண்ணி இருக்கிற ஹாஸ்பிடலுக்கு போய் அங்க அவங்களை பார்த்துட்டு அப்புறமா நம்ம வீட்டுக்கு போனா உனக்கு அலைச்சல் தானே! நான் வேணா டாக்டர் கிட்ட இன்னொரு தடவை கேட்டுவிட்டு வரேன்.” என்றாள் ஜானகி.

தன் அருகில் நின்று கொண்டு இருந்த கிளாராவை திரும்பி ஒரு பார்வை பார்த்த தேன்மொழி, “அவரை காப்பாத்த போய் தான் ஜூலிக்கு இப்படி ஆச்சு. அவங்க இப்ப ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்கும்போது நான் போய் அவங்கள எப்படி பாக்காம இருக்க முடியும் அத்தை? அதுவும் இல்லாம இன்னைக்கு பிரிட்டோ அண்ணா அண்ட் கிளாராவோட மேரேஜ். அவங்க மேரேஜ் முடிஞ்சு கொஞ்ச நேரம் கூட சந்தோஷமா இருந்திருக்க மாட்டாங்க.

அதுக்குள்ள இப்படி எல்லாம் நடந்துருச்சு. எனக்கு இதையெல்லாம் நினைச்சு பார்த்தாலே கஷ்டமா இருக்கு. கொஞ்ச நேரம் கூட நம்ம சந்தோஷமாவே இருக்க கூடாதுன்னு யாரோ எல்லாத்தையும் பின்னாடி இருந்து வேணும்னே பண்ற மாதிரி எனக்கு தோணுது. இதை எப்படி எடுத்துக்கறதுன்னு எனக்கு தெரியல அத்தை. நான் இப்போ பிரக்னண்ட் ஆகியிருக்கேன். இந்த சந்தோஷத்தை கூட என்னால மனசார அனுபவிக்க முடியல.” என்று சொல்ல,

அவள் கையைப் பிடித்துக் கொண்ட கிளாரா “நீங்க எங்களுக்காக கில்டியா ஃபீல் பண்ண வேண்டிய அவசியம் இல்ல. நீங்க எல்லாரும் நல்லா இருந்தா ஹாப்பியா இருந்தா அதுவே எங்களுக்கு போதும். உங்க கூட இருக்கும்போது தான் நாங்களும் சந்தோஷமா இருப்போம். எப்படியோ நாங்க ஆசைப்பட்ட மாதிரி இப்ப எங்களுக்கு நல்லபடியா மேரேஜ் நடந்து முடிஞ்சிடுச்சு. அதுவே போதும். நடந்த கெட்டதை பத்தி யோசிக்காம, அதுலையும் இன்னிக்கி செண்டு நல்ல விஷயம் நடந்திருக்கு. Chief அவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து தப்பிச்சிருக்காரு. நீங்க இப்ப பிரக்னண்டா இருக்கீங்க. இந்த டைம்ல நீங்க ஹாப்பியா இருக்கணும். இந்த பிரக்னன்சிய நீங்க செலிப்ரேட் பண்ணனும்.” என்றாள்.

அவள் சொன்னதையே தான் பிரிட்டோவும் தேன்மொழியிடம் சொன்னான். அவர்கள் என்ன சொன்னாலும் தங்களால் தொடர்ந்து இவர்கள் வாழ்க்கையில் நடக்க வேண்டிய அனைத்து நல்ல விஷயங்களும் தடைப்பட்டு போகிறதே என்று நினைத்து கவலைப்பட்ட தேன்மொழி, “அப்போ ஸ்டாப் ஆன உங்களோட மேரேஜ் செலிப்ரேஷன் பார்ட்டியும், ஈவினிங் நடக்க இருந்த ரிசப்ஷனும் இன்னைக்கு கண்டிப்பா நடக்கணும். உங்களுக்காக நாங்க எல்லாத்தையும் பார்த்து பார்த்து அரேஞ்ச் பண்ணி வச்சிருக்கோம். எல்லாரோட மைண்ட் செட்டும் இதனால கண்டிப்பா மாறும்.” என்று சொல்லிவிட்டு பர்மிஷன் கேட்பதைப் போல ஜானகியையும், பிரசாத்தையும் பார்த்தாள்.

“கண்டிப்பா இன்னிக்கி செலிப்ரேஷன் நடக்கணும் மா தேன்மொழி. நீ எங்களுக்கு எங்க பையன் அர்ஜுனை கோமாவுல இருந்து மீட்டு குடுத்தது மட்டும் இல்லாம அவனுக்கு ஒரு புது வாழ்க்கையை குடுத்திருக்க. உங்களோட இந்த நியூ லைஃப்க்கு அடையாளமா உங்களுக்குன்னு ஒரு பேபி வரப்போகுது. இன்னைக்கு பிரிட்டோ அண்ட் கிளாரா ஓட மேரேஜ் நடந்திருக்கு. அதோட சேர்த்தி இந்த நல்ல விஷயத்தையும் கண்டிப்பா நம்ம செலிப்ரேட் பண்ணி தான் ஆகணும். .

அதேசமயம் இன்னைக்கு ஜூலி அர்ஜுன்காக பண்ணதையும் நம்மளால மறக்க முடியாது. நான் இப்ப தான் அர்ஜுனுக்கு கால் பண்ணி அந்த பொண்ண பத்தி விசாரிச்சேன். அவ உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்களாம். இதுக்கு அப்புறம் ஜூலிய நம்ம கண்டிப்பா நல்லா பாத்துக்கலாம். சோ இனிமே எத பத்தியும் யோசிக்காம எல்லாரும் ஹாப்பியா இருங்க

ஜூலியை பக்கத்துல இருந்து பாத்துக்கிற மாதிரி ஒரு பர்சனல் அப்பாயின்ட் பண்ணிட்டு நான் அர்ஜுனையும் கிளம்பி வர சொல்றேன்.” என்று பிரசாத் சொல்ல, “ஆமாங்க அந்த பொண்ணுக்கு நம்ம குடும்பத்துல இருக்குற எல்லாரும் கடமைப்பட்டு இருக்கிறோம்.. அவ ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்டார்ஜ் ஆகி வந்ததுக்கப்புறம் நம்ம வீட்டிலேயே வச்சு அவள பாத்துக்கலாம்.” என்றாள் ஜானகி.

எப்படியோ சோகமாக இருந்த அனைவரும் மீண்டும் செலிப்ரேஷன் மூடிற்கு இப்போது வந்து நடந்து அனைத்தையும் மறந்து விட்டு ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பி மேரேஜ் செலிப்ரேஷன் நடக்கவிருந்த பீச் resort-ற்கு சென்றார்கள். அந்த பார்ட்டிக்கு மிகவும் முக்கியமானவர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.

ஆகாஷ், பிரிட்டோ இருவருமே இப்போது அந்த ரிசார்ட்டில் மற்றவர்களுடன் இருந்ததால் ஜூலியை அட்மிட் செய்திருந்த ரூமிற்கு வெளியே தனது ஆட்கள் இருவருடன் தனியாக அமர்ந்திருந்தான் அர்ஜுன். அவன் மனதிற்குள் ஆயிரம் சிந்தனைகள். பெரும்பாலானவை தேன்மொழி, சியா, அவனுடைய குழந்தைகளை பற்றியதாக இருந்தது.

மற்ற அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் குறிப்பாக பிரிட்டோ மற்றும் கிளாரா இருவரும் தங்களுடைய திருமண நாளை கொண்டாட வேண்டும் என்பதற்காக மீண்டும் செலிப்ரேஷனை துவக்கி வைத்த தேன்மொழி கொஞ்சம் கூட அந்த சூழ்நிலைக்கு தகுந்தார் போல் மகிழ்ச்சியுடன் இருக்காமல் “ஒரு நர்ஸ் அரேஞ்ச் பண்ணிட்டு வர்றதுக்கு இவனுக்கு இவ்வளவு நேரமா? இன்னும் ஏன் அங்கயே இருக்கான் இவன்! டாக்டர்ஸ் அந்த பொண்ணுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருப்பாங்க.

இவரன் அங்க ரூமுக்கு வெளியத் தானே உட்கார்ந்துட்டு இருக்கணும்.. அங்க சும்மா உக்காந்து இருக்குறதுக்கு இங்க வந்து என்ன ஒரு தடவ பாத்துட்டு போகணும்னு கூட அவனுக்கு ஏன் தோன மாட்டேங்குது? என் லைஃப்ல இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் கன்சீவ் ஆகிறது, குழந்தை பிறக்கிறது எல்லாம் நடக்க போகுது‌.

இந்த விஷயத்தை முதலில் வந்து அர்ஜுன் என் கிட்ட சொல்லி இருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்? சரி சுச்சுவேஷன் சரியில்ல எனக்கு புரியுது. ஆனா இவ்வளவு நேரம் ஆனதுக்கு அப்புறம் கூடவா எனக்காக வரணும்னு அவனுக்கு தோணல? ஜூலி முக்கியம்தான். அதே மாதிரி நானும் முக்கியம் தானே! இந்த குழந்தை.. இது கூட அவனுக்கு முக்கியம் இல்லையா? ஒருவேளை ஃபர்ஸ்ட் பேபியா இருந்திருந்தா என்ன மாதிரி ரொம்ப எக்சைட் ஆகியிருப்பானோ என்னமோ..

இது இரண்டாவது கூட இல்ல அவனுக்கு மூணாவது குழந்தை. அதனால புதுசா பெருசா இத பத்தி யோசிக்கிறதுக்கு என்ன இருக்குன்னு நினைச்சிட்டான் போல இருக்கு!” என நினைத்து சோகமே உருவாக அமர்ந்திருந்தாள்.

இன்று முக்கியமான நட்சத்திரங்களாக பிரிட்டோ மற்றும் கிளாரா இருவரும் இருந்ததால் அவர்கள் ஒரு ராஜா மற்றும் ராணியை போல மேல்நாட்டு பாணியில் ஆடை அணிந்து கொண்டு அந்த தீம் பார்ட்டிக்கு வந்து சேர்ந்தார்கள். ப்ளூ நிற லாங் கவுனில் தலையில் கிரீடம் எல்லாம் வைத்துக் கொண்டு பார்ப்பதற்கே சிண்டரெல்லா படத்தில் வரும் ஹீரோயின் போல அழகாக இருந்தாள் கிளாரா. அவள் அருகில் அவளுடைய Prince charming ஆக coat suit-ல் ஸ்டைலாக நின்றிருந்தான் பிரிட்டோ.

அவர்கள் இருவரையும் பார்த்து ரசித்த தேன்மொழி “நெஜமாவே அந்த மூவில வர ஹீரோயின் மாதிரி நீங்க ரெண்டு பேரும் சூப்பரா இருக்கீங்க!” என்று மனதார பாராட்டினாள். கிளாராவை போல வெட்டிங் டிரஸ் அணிய வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜனனி கிறிஸ்டியன் பெட்டிங்கில் அணியும் வெள்ளை நிற கௌனை அறிந்து கொண்டு மாப்பிள்ளை போல தயாராகி வந்திருந்த சந்தோஷ் உடன் சேர்ந்து டான்ஸ் ஃப்ளூரில் ஒன்றாக நடனம் ஆடினாள்.

மகிழன் ஒரு அழகான fairy கெட்டப்பில் ப்ளூ நிற இறக்கைகள் பொருத்தப்பட்ட வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு வர, “நீ பாக்குறதுக்கு அப்படியே ஒரு க்யூட்டான குட்டி cupid மாதிரியே இருக்க மகிழ்!” என்றாள் தேன்மொழி. அவனைத் தொடர்ந்து ஒரு சாத்தானைப் போல கருப்பு நிற றெக்கைகள் பொருத்தப்பட்டிருந்த விகாரமான ஆடையை அணிந்து கொண்டு ஆகாஷ் வர, அவனுக்கு பின்னே ஏஞ்சல் டிரெஸ்ஸில் தோன்றினாள் கிளாரா.

அது ஒரு சாதாரண தீம் பார்ட்டி போல அல்லாமல் ஏதோ fancy dress competition போல இருந்தது. அங்கே இருந்த அனைவரும் மாடல் போல தயாராகி அழகாக ramp walk செய்தார்கள். அனைத்தையும் ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்த ஆருத்ராவும், சித்தார்த்தும் தேன்மொழியின் அருகில் சென்று “மம்மி எல்லாருமே இங்க சூப்பர் சூப்பரான காஸ்ட்யூம்ல வந்து கலக்கிட்டு இருக்காங்க.. நம்மளோட காஸ்ட்யூம் என்னாச்சு? நமக்கும் இந்த மாதிரி டிஃபரண்டா ஏதோ ரெடி பண்ணி இருக்கிறதா சொன்னீங்க! இது எல்லாமே டடியோட ஐடியா தானே!

சித்தப்பா கேட்டதுனால டாடியும் பிரிட்டோ வாங்கலும் சீக்ரெட்டா இத ரெடி பண்ணதா கிலாரா ஆன்ட்டி சொன்னாங்க. எல்லாரும் இங்க என்ஜாய் பண்ணிட்டு இருக்கும் போது டாடி மட்டும் எங்க போனாரு? அவருக்கு கால் பண்ணி அவரை வர சொல்லுங்க மம்மி! உங்களையும் டாடியையும் இன்னிக்கு ஒரு டிஃபரண்டான காஸ்டியூம்ல பார்க்கணும்னு நாங்க ரெண்டு பேருமே எவ்ளோ நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்தோம் தெரியுமா?” என்று மாறி மாறி கேட்டார்கள்.

“நானும் தான் உங்க அப்பா கூட சேர்ந்து இவங்கள மாதிரி அந்த காஸ்டியூம் போட்டுக்கிட்டு அவர் கைய புடிச்சுகிட்டு ramp walk பண்ணனும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு உங்க டாடி இங்கே வரணுமே!” என்று தேன்மொழி சோகமாக செல்ல, குழந்தைகளை மகிழ்விப்பதற்காக Chhota Bheem கெட்டப்பில் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருந்த ஆதவன் தேன்மொழியின் அருகில் சென்று “ஏன் கா நம்ப என்ன சுச்சுவேஷன்ல இருக்கோம்னு சின்ன பிள்ளைகளுக்கு எப்படி புரியும்? மத்தவங்க எல்லாரும் ஜாலியா அவங்க அம்மா அப்பா கூட என்ஜாய் பண்ணிட்டு இருக்கும் போது, இவங்க மட்டும் ஓரமா நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தா அவங்களுக்கு கஷ்டமா இருக்காதா?

மாமா வரும்போது வரட்டும். அவருக்கு சிம்பிள் கெட்டப் தான். சீக்கிரம் ரெடியாகிவிடலாம். நீ கிளம்ப தான் டைம் ஆகும். நீ இவங்கள கூட்டிட்டு போய் கிளம்பு. மேக்கப் ஆர்டிஸ்ட் எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. காஸ்டியூம் கூட ரெடியா இருக்கு.‌ எல்லாரும் ஹாப்பியா இருக்கணும்னு சொல்லிட்டு நீ வந்து இப்படி தனியா சோகமா உக்காந்து இருந்தா நல்லாவா இருக்கு?” என்று அவளிடம் கேட்டான்.

“இவன் சொல்றதும் கரெக்ட் தான். நான் சோகமா இருக்கேன்னு இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து எதுக்கு கஷ்டப்படுத்தணும்? அர்ஜுன் தான் யாரைப் பத்தியும் யோசிக்க மாட்டான். அதுக்காக நானும் அப்படி இருக்க முடியாது.” என்று நினைத்த தேன்மொழி ஆருத்ரா, சித்தார்த் இருவரையும் அழைத்துக் கொண்டு ‌ கிளம்புவதற்காக சென்றாள்.

ஜானகியும், பிரதாப்பும் கூட பண்டைய கால அரசன் அரசியை போல தயாராகி ஜோடியாக அவர்களுக்கான சிம்மாசனத்தில் வந்து அமர்ந்தார்கள். அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த விஜயாவிற்கு சந்தோஷமாக இருந்தாலும் கூட உள்ளுக்குள் “இந்த நேரத்துல தேனு கூட மாப்பிள்ளையும் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.” என்று நினைக்கும் போது கஷ்டமாக இருந்தது. அதேசமயம் சோட்டா பீம் போல வேடம் அணிந்து அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருந்த ஆதவனை பார்க்கும்போது அவளுக்கு சிரிப்பாக இருந்தது.

- மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம் 121
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi