“தேன்மொழி மாதிரி ஒரு so called low class பொண்ணை விட நான் பெட்டர் உனக்கு ப்ரூவ் பண்ணாம இங்க இருந்து போக மாட்டேன் அர்ஜூன்.” என்று தனியாக நின்று கொண்டிருந்த அர்ஜுனிடம் சொன்னாள் ஜூலி. அவளை எரித்து விடும் பார்வை பார்த்த அர்ஜுன் “Mind your tongue... you b**h. ஏதோ ஒரு காலத்துல தெரியாம உன் கூட பழகுன பாவத்துக்கு உன்ன இந்த ஒரு தடவை போனா போகுதுன்னு மன்னிச்சு விட்டுடறேன். இதே மாதிரி இன்னொரு தடவை என் பொண்டாட்டிய பத்தி என் கிட்டேயை கேவலமா பேசிட்டு இருந்தினா, பேசுறதுக்கு உனக்கு இந்த வாய் இருக்காது. நீ எனக்கும் அவளுக்கும் நடுவுல வரணும்னு நினைச்சினா, அப்புறம் நீயே இருக்க மாட்ட. நமக்குள்ள இருந்த எல்லாத்தையும் நான் மறக்க வேண்டியதா இருக்கும். என்னை அப்படியெல்லாம் செய்ய force பண்ணாத. தேன்மொழியை விட என்ன பத்தி உனக்கு நல்லா தெரியும்னு நினைக்கிறேன். உன் place எதுன்னு தெரிஞ்சு நடந்துக்கோ.” என்று வந்த கோபத்தில் தன் பற்களை கடித்துக் கொண்டு அவளை மிரட்டினான்.
அவனுடைய கனீர் குரலில் ஒரு நொடி பயந்து போன ஜூலி “எப்படி உனக்கு இப்படி எல்லாம் என் கிட்ட பேச மனசு வருது அர்ஜூன்? இந்த தேன்மொழி, செத்துப் போனாளே சியா அவ இவங்க எல்லாருமே உன் லைஃப்ல வரதுக்கு முன்னாடியே, உனக்குன்னு இருந்தது நான் மட்டும்தானே அர்ஜூன்! I was crazy about you. அது உனக்கே நல்லா தெரியும்.
நான் இப்பயும் அப்படி தான் இருக்கேன். உன்னால வேணும்னா ஈஸியா என்ன தூக்கி போட முடியலாம். பட் என்னால அது முடியாது அர்ஜுன். நீ என்னை போட்டு கன்பியூஸ் பண்ணி என்னென்னமோ பேசி என்ன விட்டு போயிட்ட. அதான் என்ன பண்றதுன்னு தெரியாம நான் அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்னால அவன் கூட ஹேப்பியா வாழவே முடியல. அதான் டிவர்ஸ் பண்ணிட்டேன். நீ என்ன அக்செப்ட் பண்ணிக்கோன்னு கூட நான் கேட்கல. நான் உன் மேல வச்சிருக்கற ஃபீலிங்ஸ் உண்மைன்னு சொல்றேன். அது கூட மதிக்க மாட்டியா நீ?” என்று கண்கள் கலங்க பாவமாக அவனை பார்த்து கேட்டாள்.
“உன் கிட்ட எல்லாம் பேசுறதே வேஸ்ட். நீ எதுக்காக இங்க வந்தாயோ அந்த வேலை முடிஞ்சிருச்சு. உனக்கு வேணும்னா இந்தியால தங்கியே ஆகணும்னா, எங்களோட அப்பார்ட்மெண்ட்ல போய் ஸ்டே பண்ணிக்கோ. நீ எவ்ளோ நாள் வேணாலும் அங்கு இருந்து தொல. யாரும் உன்னை கேட்க மாட்டாங்க. பட் ப்ளீஸ் என் முன்னாடி வந்து நின்னு என்னை இரிடேட் பண்ணிட்டு இருக்காதே . எனக்கு உன் மூஞ்சிய பாத்தாலே கடுப்பாகுது.” என்று சொன்ன அர்ஜுன் மேடையை விட்டு கீழே இறங்குவதற்காக படிக்கட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
நடக்கும் அனைத்தையும் விஜயாவின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழி “இவங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ பிராப்ளம் இருக்கும்னு நினைக்கிறேன். அந்த பொண்ணு கிட்ட பேசும்போது அர்ஜுனோட முகமே சரியில்ல. இவனா ஏதாவது நம்மகிட்ட சொன்னா தானே நமக்கு தெரியும்! இவன் தான் சரியான கல்லூனி மங்கனாச்சே.. நம்மளே கேட்டாலும் இவன் வாயில இருந்து எந்த உண்மையும் வராது.” என்று நினைத்தவள், “பக்கத்துல இருக்கிற ஹோட்டல்ல தானே ரிசப்ஷன் நடக்க போகுது.. இவங்க இங்க இருந்து எப்ப கிளம்புவாங்கன்னு தெரியல. காலைல இருந்து யாருமே சரியா சாப்பிடல. இன்னும் கொஞ்ச நேரத்துல ஹோட்டல்ல ரிசப்ஷன் இருக்கு. டைரக்டா அங்கயே போய் முதல்ல சித்தார்த்தையும், ஆருத்ராவையும் சாப்பிட வைக்கணும். எனக்கும் பசிக்குது. நம்ம சரியா பேசாததுனால எப்படியும் இவனும் சாப்பிட்டு இருக்க மாட்டான்.” என்று அர்ஜுனை பார்த்தபடி யோசித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது திடீரென்று அவள் கண்களில் ஏதோ ஒன்று பட்டது. அதில் அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிய, “அர்ஜுன்!” என்று உச்ச ஸ்தூதியில் தனது தொண்டை கிழிய அழறினாள் தேன்மொழி. அதனால் அவள் அருகில் இருந்த அனைவரும் அவளைப் பார்க்க, அவளோ யாரையும் கண்டுகொள்ளாமல் அர்ஜூனை நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருந்தாள்.
தேன்மொழி வர சொல்லி இருந்ததால் அந்த திருமணத்திற்கு வந்திருந்த உதயா அப்படி பயந்து முகத்துடன் தேன்மொழி அர்ஜுனனை நோக்கி ஓடி செல்வதை பார்த்துவிட்டு ஏதோ பிரச்சனையை நினைத்து அவனும் அவளை பின் தொடர்ந்து ஓடினான். அவன் ஓடுவதை பார்த்துவிட்டு ஆதவன், சித்தார்த், ஆருத்ரா மற்றும் அங்கே வேலை பார்க்கும் இன்னும் சிலர் என அனைவரும் மேடையை நோக்கி ஓடினார்கள்.
இவை அனைத்தும் ஒரு சில நொடியில் நடந்து கொண்டிருக்க, அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் அர்ஜூன் தேன்மொழியை திரும்பி பார்த்தான். தேன்மொழியையும், அர்ஜுனை நெருங்குவதற்கும் முன் அவன் அருகில் நின்று கொண்டிருந்த ஜூலி அதை கவனித்து விட்டாள். அதனால் எதைப்பற்றியும் யோசிக்காமல் அவளும் சத்தமாக “அர்ஜுன்” என்று கத்தியபடி அவன் அருகில் சென்று அவனை தள்ளிவிட்டு தரையில் விழுந்தாள்.
அவள் பெரிய ஹில்ஸ் ஸ்லிப்பர் அணிந்திருந்ததால் வேகமாக அப்படி ஓடும் போது அவள் கால் தடுக்கி கீழே விழுந்திருந்தாள். அதில் அர்ஜுனின் மீது விழுந்து அவனுடைய உயிரை குடிக்க தயாராக இருந்த அதிக எடை உள்ள chandelier விளக்கு இப்போது ஜூலியின் மீது விழுந்தது. நல்ல வேலையாக அவனை தள்ளிவிடும்போது அவளும் கொஞ்சம் தள்ளி கீழே விழுந்திருந்ததால், மொத்தமாக அந்த பிரம்மாண்ட சரவிளக்கு முழுவதாக அவள் மீது விடாமல் அவளுடைய கால்களில் மட்டுமே விழுந்தது.
அதில் இருந்த கண்ணாடி லைட்டுகள் எல்லாம் அவள் கால்களுக்குள் இறங்கி அந்த இடத்தில் ரத்தம் வழிந்தது வலி “ஆஆஆ!!” என்று அலறிய ஜூலி அப்படியே மயங்கி விழுந்தாள். அப்போது சரியாக அர்ஜுனின் அருகில் வந்திருந்த தேன்மொழி பதட்டமான முகத்துடன் அர்ஜுனை கட்டி அணைத்துக் கொண்டு “உனக்கு ஒன்னும் ஆகலையே!” என்று கேட்க, ஆச்சரியத்தில் விரிந்த விழிகளுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த ஜூலியை பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனின் கண்களில் இருந்து அவனையும் மீறி ஒரு சொட்டு கண்ணீர் வந்தது.
அது அவனை அனைத்து இருந்த தேன்மொழியின் முதுகில் விழ, அவளது தோள்களில் கை வைத்து அவளை தன்னை விட்டு விலகி நிறுத்திய அர்ஜூன் “ஜூலி! ” என்று கத்திக் கொண்டு அவளுக்கு என்ன ஆனது என்று பார்ப்பதற்காக எழுந்து ஓடி சென்றான். அவனைத் தொடர்ந்து பிரிட்டோ, மற்றும் அர்ஜுனின் பாடிகார்டுகள் என அனைவரும் ஜூலியை காப்பாற்றுவதற்காக சென்றார்கள்.
அவர்கள் அனைவரும் சேர்ந்து ஜூலியின் மீது விழுந்து கிடந்த chandelier விளக்கை அப்புறப்படுத்தினார்கள். அவளது கால்களில் நேரடியாக குத்தி இருந்த கண்ணாடி பீசுகளை அர்ஜுன் தன் கைகளால் வெளியில் எடுக்க தொடங்கி விட, அவனுடன் சேர்ந்து பிரிட்டோ, ஆகாஷ் இருவரும் அவசர அவசரமாக ஜூலியின் உடலில் பாய்ந்திருந்த வெளியில் தெரிந்த பெரிய கண்ணாடி துண்டுகளை மெல்ல தங்களுடைய கைகளை கொண்டு அகற்றினார்கள்.
அவளது உடலில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்ததால் தனது கோட்டை கழட்டி அவள் மீது போட்டு சுற்றிய அர்ஜுன் அவளை தனது கைகளில் ஏந்தி கொண்டு அவசர அவசரமாக அந்த சர்ச்சை விட்டு வெளியேறினான். நடக்கும் அனைத்தையும் ஒரு வித மிராட்சியுடன் இன்னும் அர்ஜுனுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயம் குறையாமல் அப்படியே ஷாக் ஆகி நடுங்கிய உடலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
அர்ஜுன் தன் காரில் ஜூலியை ஆகாஷ் மற்றும் பிரிட்டோ உடன் அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு செல்வதை பார்த்துவிட்டு உள்ளே வந்து ஆதவனும் உதயாவும் அதை தேன்மொழியிடம் சொன்னார்கள். “அர்ஜுனுக்கு எதுவும் ஆகலயே!” என்று கலங்கிய கண்களுடன் தேன்மொழி கேட்க, “இல்ல அவருக்கு ஒன்னும் இல்ல. நல்லா தான் இருக்காரு.” என்று உதயா சொல்லிக் கொண்டு இருக்கும்போதே “அர்ஜுனை கொல்லனும்னு யாரோ வேணும்னு இப்படி பிளான் பண்ணி இருக்காங்கன்னு எனக்கு தோணுது.” என்று உடைந்த குரலில் சொல்லிக் கொண்டு இருந்த தேன்மொழி அப்படியே தன் தலையைப் பிடித்துக் கொண்டு மயங்கி கிழே விழப்போனாள்.
அவள் அருகில் நின்று கொண்டு இருந்த உதயா அப்படியே அவளை பிடித்து தன் மீது சாய்த்துக் கொண்டு அவளது கன்னத்தில் தட்டியவாறு “தேனு.. தேனு என்னாச்சு? கண்ண தொறந்து பாரு டி!” என்று பதட்டத்துடன் சொல்லிக் கொண்டிருந்தான். சித்தார்த், ஆருத்ரா இருவரும் அர்ஜுனை பின் தொடர்ந்து சென்றதால் மகிழனுடன் சென்று சமாதானப்படுத்தி மீண்டும் அவர்களை உள்ளே அழைத்து வந்த லிண்டா தேன்மொழி மயங்கி கிடப்பதை பார்த்துவிட்டு அவள் அருகில் அவசர அவசரமாக சென்றாள்.
பிரிட்டோ இல்லாத நேரத்தில் பிரசாத் குடும்பத்தின் மொத்த பாதுகாப்பின் பொறுப்பும் கிளாரா உடையது என்பதால் அவள் இன்று தனது திருமணம் என்பதை கூட மறந்துவிட்டு அவளுடைய பெரிய வைட் கவுனை தூக்கிப்பிடித்துக் கொண்டு வேகமாக அங்கும் இங்கும் நடந்து அந்த சர்ச்சை சுற்றி தங்களுடைய ஆட்களை நிற்க வைத்து விட்டு திருமணத்திற்கு வந்திருந்த கெஸ்டுகளை எல்லாம் ஹோட்டலுக்கு செல்லுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டு அங்கே வந்தாள்.
உதயா தேன்மொழியை தூக்கிக் கொண்டு போய் ஒரு பென்சில் படுக்க வைத்து விட, ஆதவன் தண்ணீர் கொண்டு வந்து அவள் முகத்தில் தெளித்து பார்த்தான். அப்போதும் அவளுக்கு மயக்கம் தெரியவில்லை. அதனால் அவள் கையைப் பிடித்துக் கொண்டு “ஐயோ என் பொண்ணுக்கு என்ன ஆச்சு தெரியலையே! இப்ப தான் மாப்பிள்ளை உயிருக்கு ஆபத்து வந்துச்சு. சப்பா அவருக்கு ஒன்னும் ஆகலேன்னு நினைச்சு பெருமூச்சு விட்றதுக்குள்ள என் பொண்ணு இப்படி பேச்சு மூச்சு இல்லாம கிடக்கிமூச்சு இல்லாம கிடக்கிறாளே!” என்று சொல்லிவிட்டு விஜயா கதறி அழ தொடங்கி விட்டாள்.
ஜானகி “கிளாரா நீ போய் லிண்டா கிட்ட சாவி வாங்கி ஆகாஷோட கார ஸ்டார்ட் பண்ணு. நம்ம தேன்மொழியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிடலாம்.” என்று சொல்ல, அவளும் சரி என்று சாவியை வாங்கிக் கொண்டு வெளியில் சென்றாள். தேன்மொழியின் கையை பிடித்து பார்த்த பிரசாத் “பல்ஸ் நார்மலா தான் இருக்கு. அர்ஜுனுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு நினைச்சு பயந்துல தான் இவ மயக்கம் போட்டு விழுந்திருக்கான்னு நினைக்கிறேன். யாரும் பதட்ட படாதீங்க. கொஞ்ச நேரத்துல நார்மல் ஆயிடுவா. ஜானகி சொன்ன மாதிரி எதுக்கும் நம்ம ஹாஸ்பிடல் போய் ஒரு செக்கப் பண்ணிடலாம்.” என்றார்.
தேன்மொழியின் அருகில் நின்று கொண்டு சித்தார்த், ஆருத்ரா இருவரும் “மம்மி எந்திரிங்க மம்மி..!!” என்று சொல்லி அழுது கொண்டே இருந்தார்கள்.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-118
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.