“இதுக்கு முன்னாடி இருந்தது இல்லைன்னு ஆகிறதுல்ல!” என்று தன்னுடைய தேன் குரலில் அர்ஜுனிடம் கேட்ட ஜூலி அவளுடைய விரல்களை நளினத்துடன் அவனுடைய சட்டை காலருக்கு கொண்டு சென்று அதை இறுக்கமாக பிடித்து அதனுடன் சேர்த்து அவனையும் தன் பக்கம் இழுத்தாள். அதனால் ஷாக் ஆகி அர்ஜுன் அவளை பார்க்க, ஜூலியும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் அவ்வளவு நெருக்கத்தில் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் பார்ப்பதை தூரத்தில் இருந்து பார்க்கும் தேன்மொழிக்கு என்னவோ அவர்கள் இருவரும் முத்தமிட முயற்சி செய்வதை போல இருந்தது.
இருப்பினும் மானசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்டவள், “சேச்சே அப்படியெல்லாம் இருக்காது. தேவை இல்லாம உதயா பேசினத கேட்டு நம்மளே அர்ஜுனை சந்தேகப்படக் கூடாது. அவங்க எங்கேயாவது தனியா போய் மீட் பண்ணி பேசிட்டு இருந்தா தானே தப்பு! எல்லார் முன்னாடியும் நார்மலா நின்னு ஏதோ பேசிட்டு இருக்காங்க.. நம்ம அது தப்பா பாத்தா நம்ம கண்ணுக்கு எல்லாம் தப்பா தான் தெரியும். பட் பூஜை ஸ்டார்ட் பண்ண டைம் ஆகும்போது இவங்க ரெண்டு பேரும் இன்னும் எவ்ளோ நேரம் பேசிட்டு இருப்பாங்க?” என்று நினைத்து அர்ஜுனிற்கு கால் செய்தாள்.
தனது மொபைல் ஸ்க்ரீனில் “ஹனி பேபி!” என்று வந்த நம்பரை பார்த்தவுடன் சட்டென்று ஜூலியை விட்டு இரண்டடி விலகி பின்னே சென்ற அர்ஜுன் “எனக்கு உன் கிட்ட பேசுறதுக்கு எல்லாம் டைம் இல்ல. பங்ஷனை அட்டென்ட் பண்றதுக்கு தானே வந்திருக்க! வந்த வேலையை பார்த்துட்டு மத்த கெஸ்ட் மாதிரி இங்க இருந்து கிளம்பி போயிரு. எனக்கு லேட் ஆகுது பாய்.” என்று அவளிடம் சொல்லிவிட்டு டிரஸ் சேஞ்ச் செய்வதற்காக தனது ரூமிற்கு சென்றான்.
அவன் தனது அழைப்பை ஏற்காததால் மீண்டும் மீண்டும் அவனுக்கு கால் செய்தாள் தேன்மொழி. வேறு வழி இல்லாமல் அதை அட்டென்ட் செய்த அர்ஜூன் “நான் டிரஸ் சேஞ்ச் பண்ண ரூமுக்கு தான் போயிட்டு இருக்கேன். சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன் டி. ஒரு பைவ் மினிட்ஸ் மட்டும் வெயிட் பண்ணு.” என்று சொல்லிவிட்டு அவளுடைய பதிலுக்காக கூட காத்திருக்காமல் அந்த அழைப்பை துண்டித்து விட்டான்.
“கண்டவ கிட்ட நின்னு பேசுறதுக்கு எல்லாம் இவனுக்கு டைம் இருக்கும். என்னமோ என் கிட்ட பேசும்போது தான் லேட் ஆகுற மாதிரி ஓவரா பண்றான்.” என்று நினைத்த தேன்மொழி பூஜைக்கு தேவையான சில பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க அய்யர் அவளை அழைத்ததால் மேடைக்கு சென்று விட்டாள்.
அந்த பூஜையைக் காண ஏராளமானவர்கள் வந்திருந்ததால் லிவிங் ஏரியாவிலும், சைடில் உள்ள இரண்டு பெரிய டைமிங் ஏரியாவிலும் அவர்களுக்கான சீட்டிங் அரேஞ்ச்மெண்ட்ஸ் செய்யப்பட்டிருந்தது. நடக்கும் பூஜை அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதால் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டு பெரிய பெரிய ஸ்கிரீன்களில் லைவாக வீடியோ ஓடிக் கொண்டிருந்தது. விஐபிகள் அனைவரும் ஸ்பெஷல் வரிசையில் அமர வைக்கப்பட்டிருக்க, குடும்பத்தினருக்கான வரிசையில் தனது நெருங்கிய சொந்தக்காரர்களுடன் அமர்ந்து இருந்த விஜயாவிற்கு வாயெல்லாம் ஒரே பல்லாக இருந்தது.
விஜயாவிற்கு திருமணமான காலத்தில் சென்னையில் தங்களுடைய மாதாந்திர செலவுகளை செய்யவே அவர்கள் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது. தேன்மொழி பிறக்கும்போது கூட முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்து விட்டதே இவளை எப்படி வளக்க போகிறோம்? என்று நினைத்து அவர்கள் வருத்தப்பட்ட காலம் எல்லாம் உண்டு. அவர்கள் இருக்கும் வீடு பரம்பரை பரம்பரையாக அவர்களுக்காகவே அவர்களுடைய குடும்பத்தினர் விட்டு வைத்த ஒரே சொத்து.
அது மட்டும் இல்லை என்றால் வாடகை வீட்டிற்கு கூட காசு கொடுக்க வழியில்லாமல் அவர்கள் நடுத்தெருவில் தான் நின்று இருப்பார்கள். அதனால் அவர்களுடைய சொந்த பந்தங்களுக்கு நடுவில் தேன்மொழியின் குடும்பத்தினருக்கு பெரிய மதிப்பு மரியாதை எல்லாம் இல்லை. ஆனால் தேன்மொழி அர்ஜுனை திருமணம் செய்து கொண்ட பிறகு அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. அவர்களை ஏளனமாக பார்த்தவர்களுக்கு முன்னே தனது மருமகன் தங்களை தலை நிமிரச் செய்து விட்டான் என்று நினைத்தாலே விஜயாவிற்கு அத்தனை பெருமையாக இருந்தது.
தேன்மொழியை தன் மகனுக்கு விஜயா கட்டி வைத்து விட்டால் என்ன செய்வது? என்று யோசித்து பல வருடங்களாக விஜயாவிடம் கூட பேசாமல் இருந்த அவள் கணவனின் தங்கை மீண்டும் மீண்டும் அவளிடம் “நீங்க உண்மைய சொல்லுங்க அண்ணி. நெஜமாவே இந்த வீட்ட உங்க மாப்பிள்ளை நம்ம தேனு பேர்ல தான் வாங்கி இருக்காரா?” என்று நம்ப முடியாமல் கேட்டாள்.
“ஆமா பின்ன நான் என்ன பொய்யா சொல்லப் போறேன்? உள்ள வரும்போது வாசல்ல பாக்கலையா நீ? அங்க ஹனி பேலஸ்னு எழுதி இருக்கு இல்ல... ஹனின்னா தமிழ்ல தேனாம். எங்க மாப்பிள்ளை என் பொண்ண ஹனி பேபி ஹனி பேபின்னு கூப்பிடுவாரு. அதுக்கு அர்த்தம் என்னன்னு இன்னைக்கு தான் என் பையன் கிட்ட நான் கேட்டேன். நம்ம தேன்மொழி பேர செல்லமா இப்படி கூப்பிட்டு இருக்காரு. அவ பேர்ல வீடு வாங்குனதுனால இந்த வீட்டுக்கு தேன்மொழி பேரையே எங்க மாப்ள வச்சுட்டாரு.” என்று பெருமையாக சொன்னாள் விஜயா.
அதேபோல விஜயாவை சுற்றிக் கொண்டு அவளிடம் நல்ல பெயர் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சொந்த பந்தங்கள் எல்லாம் ஓவராக உறவாடிக் கொண்டிருந்தார்கள். இது எல்லாம் பணத்திற்காக தான் என்று தெரிந்திருந்தாலும், “இன்னைக்கு ஒரு நாள் நம்ம பேரைச் சொல்லி இவங்க எல்லாரும் இதையெல்லாம் அனுபவிச்சிட்டு போகட்டும். எல்லாருக்கும் ஒரு காலம் வரும்னு சொல்லுவாங்க இல்ல!! கடவுள் மாதிரி என் பொண்ணுக்கு ஒரு மாப்பிள்ளை கிடைச்சதனால எங்களுக்கு அந்த காலம் இப்ப வந்திருக்கு. எங்களை கேவலமா பேசினா உங்களுக்கு முன்னாடி இப்ப நாங்க நல்லா வாழறோம்னு எல்லாருக்கும் காட்டணும். அதுக்கு தான் இவங்களை எல்லாம் வர சொன்னேன்.” என்று நினைத்த விஜய் அனைவரிடமும் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தாள்.
தேன் மொழியின் அத்தை “என் பையனுக்கு நம்ம தேனை கட்டலாம்னு நான் ரொம்ப வருஷமா நெனச்சிட்டு இருந்தேன் அண்ணி. படிச்சு முடிச்சு அவ சீக்கிரமாவே வேலைக்கு போயிட்டா. என் பையனும் வெளிநாட்டுக்கு வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு இருந்தான். அதான் கொஞ்ச நாள் போகட்டும்னு இருந்தேன். அதுக்குள்ள அர்ஜுன் தம்பி எடையில பூந்து நம்ம தேன்மொழியை கொத்திக்கிட்டு போயிட்டாரு. சரி அது தான் முடிஞ்சு போயிடுச்சு.. அதான் நம்ம ஆதவன் இருக்கானே.. அவன் இப்ப தானே காலேஜ் படிக்கிறான் அவன் படிச்சு முடிக்குறதுக்குள்ள என் பொண்ணு வளர்ந்து பெரியவலாயிடுவா. கண்டிப்பா ஆதவனுக்கு தான் என் பொண்ண நான் கட்டிக் குடுப்பேன்.” என்று இப்போதே அட்வான்ஸ் ஆக ஒரு பிட்டை போட,
“உன் பையனுக்கு என் பொண்ண கட்ட கூடாதுன்னு நினைச்சுட்டு இப்போ எங்க தகுதி தராதரம் எல்லாம் உயர்ந்ததுக்கு அப்புறமா என் பையனுக்கு உன் பொண்ண கட்டி கொடுத்து இங்க வந்து ஒட்டிக்கலாம்னு பாக்குறியா நீ?” என்று நினைத்த விஜயா, “எங்க வீட்ட பொருத்தவரைக்கும் எல்லாமே எங்க மாப்பிள்ளை தான். அவருக்கும் தேன்மொழிக்கும் எந்த பொண்ண புடிச்சிருக்கோ அந்த பொண்ணத் தான் என் பையனுக்கு நான் கட்டி வைப்பேன். அதை தாண்டி இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் எப்ப யார இழுத்துட்டு வந்து லவ் பண்றேன்னு சொல்லுமோ தெரியாது.. என் பையனுக்கு அந்த மாதிரி ஏதாவது பொண்ணை பிடிச்சிருந்துச்சுன்னா, அவன் விருப்பத்துக்கு நான் குறுக்க நிக்கவே மாட்டேன். இந்த விஷயத்துல நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல.“ என்று சொல்லி விட்டாள்.
இப்படி அவர்கள் பேசிக் கொண்டே இருக்கும்போது பட்டு வேட்டி சட்டை அணிந்து பார்ப்பதற்கு வேட்டி விளம்பரத்தில் வரும் மாடல் போல ஸ்டைலாக கூலிங் கிளாஸ் போட்டு லிப்டில் இருந்து கீழே இறங்கி வந்த அர்ஜூன் மேடைக்கு சென்று தேன்மொழியின் அருகில் நின்றான். அவனை மேலும் கீழும் பார்த்த தேன்மொழி “பூஜை பண்ணும்போது கூட கண்ணாடி போட்டே ஆகணுமா!” என்று நக்கலாக கேட்க, “ஆமா இப்ப தான் கண்டிப்பா போடணும். பூஜை பண்ணும்போது புகை வரும் இல்ல! அந்தப் புகை கண்ணுல படுல அதான் போட்டு இருக்கேன்.” என்று சொல்லிவிட்டு அவளை பார்த்து அழகாக புன்னகைத்த அர்ஜுன் “உன்ன இந்த புடவைல பார்த்தவுடனே உன் கூட சேர்ந்து ஒரு செல்ஃபி எடுக்கணும்னு நினைச்சேன். அதுக்கு சான்சே கிடைக்காம போயிடுச்சு டி. இப்பயாச்சும் வா நம்ம ஃபோட்டோ எடுத்துக்கலாம்.” என்று சொல்லிவிட்டு அவள் இடுப்பில் கை வைத்து அவளை தன் பக்கம் இழுத்தான்.
அவன் கையை எடுத்துவிட்டு விலகி நின்ற தேன்மொழி “இத்தனை பேர் சுத்தி நின்னுட்டு இருக்கும்போது என்ன பண்ற நீ? லைவா இங்கே என்ன நடக்குதுன்னு இத்தனை கேமரா ரெக்கார்ட் பண்ணி எல்லாருக்கும் டெலிகாஸ்ட் பண்ணி காமிச்சிட்டு இருக்கு. தனியா வேற நம்ம ஃபோட்டோ எடுக்கணுமா? பங்க்ஷன் முடிஞ்ச உடனே எடுத்த போட்டோ குடுப்பாங்க அதுல பாத்துக்கலாம்.” என்றாள்.
“எவனோ உன்னை ஃபோட்டோ எடுக்குறதுக்கும் என் பொண்டாட்டி கூட ஆசையா நான் செல்ஃபி எடுத்துக்கிறதும் ஒன்னா? ஒரு செல்ஃபிக்கு எதுக்கு டி இவ்ளோ பேசுற? டீச்சரா இருந்தா ஓவரா பேசணும்னு ஏதாவது இருக்கா என்ன?” என்று அவன் கிண்டலாக அவளை பார்த்து கேட்க, அவனை பார்த்து முறைத்தாள் தேன்மொழி. அதை கண்டு கொள்ளாமல் இம்முறை அவளது தோள்களில் கை போட்டு அவளை தன் பக்கம் இழுத்துக் கொண்ட அர்ஜுன் ”say cheese!” என்று சொல்லிவிட்டு அழகாக தனது மொபைல் கேமராவை தங்களுக்கு முன்னே நீட்டிவிட்டு அதை பார்த்து புன்னகைத்தான்.
தங்களை பல நூறு கண்கள் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதால் தேவையில்லாமல் இங்கே சீன் க்ரியேட் செய்ய வேண்டாம் என்று நினைத்த தேன்மொழி கேமராவை பார்த்து சிரித்தபடி போஸ் கொடுத்தாள். அதை செல்பியாக படம் பிடித்தான் அர்ஜுன். அதன் பிறகு அவர்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டு தம்பதியாக அக்னி குண்டத்திற்கு முன்னே அமர்ந்தார்கள். ஐயர் மந்திரங்களை சொல்ல, பூஜை நடக்க தொடங்கியது.
ஜனனி, சந்தோஷ் இருவரும் குழந்தைகளை வைத்துக் கொண்டு முதல் வரிசையில் அமர்ந்திருக்க; ஆகாஷ், லிண்டா, மகிலன், ஜானகி, பாட்டி அனைவரும் மேடையில் நின்று கொண்டிருந்தார்கள்.
வி.ஐ.பி ஏரியாவில் தனக்கான இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த ஜூலி ஸ்கிரீனில் தெரிந்த அர்ஜுன் மற்றும் தேன்மொழியை சிவந்த கண்களுடன் பார்த்தபடி, “ஆல்ரெடி எத பத்தியும் யோசிக்காம முட்டாள்த் தனமா உன்ன விட்டுக்கொடுத்து தப்பு பண்ணிட்டேன் அர்ஜூன். என்னோட இத்தனை வருஷ லைஃப்ல உன்ன மாதிரி கண்டிப்பா இந்த உலகத்துல இன்னொருத்தன் இருக்க முடியாதுன்னு நான் நல்லா புரிஞ்சுகிட்டேன். இந்த தடவை என்ன ஆனாலும் நான் உன்னை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.” என்று நினைத்து விழத்தனமாக புன்னகைத்தாள்.
- மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-113
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.