உதயா தேன்மொழிக்காக ஒரு பூ கொத்துடன் அர்ஜுனின் மாளிகைக்குள் நுழைந்தான். அதைப் பெற்றுக் கொண்ட தேன்மொழி அவனுடன் பேசிக் கொண்டு இருக்க, அவர்களைப் பார்த்தபடி இருந்த அர்ஜுன் அவர்களை நோக்கி சென்றான். அர்ஜுனை பார்த்தவுடன் ஸ்டன்னாகி நின்று விட்டான் உதயா. மற்ற நேரங்களில் சாதாரணமாக இருப்பதைப் போல அல்லாமல் இன்று தங்கள் வீட்டு பங்க்ஷனுக்கு ஏராளமானவர்கள் வருவதால் கோட் சூட் எல்லாம் அணிந்து இப்போது வீட்டிற்குள்ளேயே கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு பார்ப்பதற்கு டிபிக்கல் பிசினஸ்மேன் போல ஆரரை அடி உயரத்தில் ஆளுமை நிறைந்த தோற்றத்தில் கெத்தாக அவர்களை நோக்கி நடந்து வந்தான் அர்ஜூன்.
தன்னிடம் பேசிக் கொண்டு இருந்த உதயா சைலன்டாகி எங்கேயோ பார்ப்பதை உணர்ந்த தேன்மொழி உடனே திரும்பி பார்த்தாள். பல நாட்களுக்கு பிறகு அர்ஜுனை இப்படி பார்ப்பதால் அவளைக்கும் சந்தோஷமாக தான் இருந்தது. அவன் மீது இருக்கும் கோபத்தையும் மறந்து அவனைப் பார்த்து சைட் அடித்தாள். அதை கவனித்த உதயாவின் வயிறு வழக்கம் போல எரிந்தது.
தேன்மொழியின் அருகில் சென்ற அர்ஜுன் “you look so pretty today Honey baby!” என்று ஆசையாக சொல்ல, “தெரியும் தெரியும். கண்ணாடியை பார்த்து தானே ரெடியானேன்.. கண்ணாடிய கழட்டிட்டு நல்லா பாருங்க அர்ஜுன். உங்க கண்ணுக்கு இன்னும் அழகா தெரியுவேன்.” என்று சிரித்துக் கொண்டே அவனிடம் சொன்னாள் தேன்மொழி. “இப்ப எதுக்கு இவ கண்ணாடியை கலட்ட சொல்றா! இவளுக்கு என் மேல டவுட் வந்துருச்சா?” என்று யோசித்த அர்ஜுன், “இந்த மாதிரி எல்லாரையும் கூப்பிட்டு பங்க்ஷன் ஆர்கனைஸ் பண்ணா, பர்சனலா ஃபோட்டோஸ் எடுக்கக் கூடாதுன்னு நம்ம ரெஸ்ட் பண்ணா கூட கேட்காம நமக்கே தெரியாம நம்மள நிறைய பேர் ஃபோட்டோ எடுப்பாங்க. அதான் எதுக்கும் இருக்கட்டுமேன்னு சன் கிளாஸ் போட்டு இருக்கிறேன்.” என்றான் அர்ஜூன்.
உடனே அவனைப் பார்த்து கிண்டலாக புன்னகைத்த தேன்மொழி “பழைய படத்துல எல்லாம் மீசையை பெருசா வச்சுக்கிட்டா, மருவு வச்சுக்கிட்டா மாறு வேஷம்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி இருக்கு நீங்க சொல்றது!” என்று சொல்ல, “இவன் முன்னாடி தான் இவ இப்படி எல்லாம் என்னை அசிங்கப்படுத்தணுமா? எல்லாம் என் நேரம்.” என்று நினைத்த அர்ஜுன் அப்போதும் “லைட்ஸ் சுத்தி நிறைய இருக்கும்போது அது நம்மள அஃபெக்ட் பண்ணாம இருக்கக்கூட சன் கிளாஸ் போடலாம் தப்பில்ல.” என்று சொல்லி சமாளித்தான்.
“அது சரி.. யார் என்ன சொன்னாலும் நீங்க உங்களுக்கு எது கரெக்ட்னு படுதோ அதைத்தானே செய்வீங்க! உங்களை யார் கேட்க முடியும்? இங்க உங்களோட பிசினஸ் சர்க்கிள்ல இருந்து நிறைய பேர் வந்திருக்காங்க. மார்னிங்ல இருந்து என் கிட்ட நிறைய பேர் உங்கள பத்தி தான் கேட்டுக்கிட்டே இருந்தாங்க. ஃபர்ஸ்ட் வந்திருக்கிற கெஸ்ட்டை போய் அட்டென்ட் பண்ணுங்க.” என்று அர்ஜுனிடம் சொன்ன தேன்மொழி “நீ இவரையும், குழந்தைகளையும் மட்டும் தானே பார்த்து இருக்க.. எங்க ஃபேமில இருக்கிற மத்தவங்க எல்லாரையும் இன்னிக்கு நான் உனக்கு இன்டர்வியூஸ் பண்ணி வைக்கிறேன் வா..!!” என்று உதயாவிடம் சொல்லிவிட்டு அவனை அழைத்துக் கொண்டு அங்கே இருந்து சென்று விட்டாள்.
அவளது நடவடிக்கைகளில் அவள் நேரடியாக எதையும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் கூட தன் மீது அவள் கோபமாக இருக்கிறாள் என்று அவனால் கண்டுபிடிக்க முடிந்தது. “நேத்து நம்ம குடிச்சிட்டு சும்மா இருக்காம அவளுக்கு செல்ஃபி எல்லாம் எடுத்து அனுப்பி லூசு தனமா வாய்ஸ் மெசேஜ் போட்டோமே! அதுக்குத் தான் இவ நம்ம மேல கோவமா இருக்கா போல இருக்கு! எதுவா இருந்தாலும் நைட்டு பேசிக்கலாம்.” என்று நினைத்த அர்ஜுன் தேன்மொழி சொன்னதைப் போல வந்திருக்கும் விஐபி கெஸ்டுகளை கவனிப்பதற்காக சென்று விட்டான்.
சாதாரண நாட்களிலேயே பாதுகாப்பு பற்றி அதிகம் யோசித்து கவலைப்படும் பிரிட்டோ இப்போது ஏராளமான முக்கிய விருந்தாளிகள் வீட்டிற்கு வந்திருப்பதால் அனைவரின் பாதுகாப்பிற்கான பொறுப்பும் அவன் கைகளில் இருந்தது. அதனால் அவன் சாதாரண உடையை கூட அணிந்து கொள்ளாமல் வழக்கம்போல் யூனிபார்ம் அணிந்து மற்ற பாடிகார்டுகளுடன் சேர்ந்து அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தான்.
அப்போது ஜனனியின் குழந்தைகளில் ஒன்றை கையில் தூக்கிக் கொண்டு அவளுடன் சேர்ந்து படிகளில் இறங்கி வந்து கொண்டு இருந்த கிளாரா அவன் கண்களில் தென்பட்டாள். இன்று அந்த வீட்டில் உள்ள அனைத்து பெண்களும் ஒரே கலரில் தான் பட்டுப்புடவை கட்டி இருந்தார்கள். அதே கலரில் கிளாராவிற்கும் ஜானகி பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்திருந்ததால், அதை அழகாக இந்தியன் ஸ்டைலில் சேரி கட்டி இருந்த கிளாரா மற்ற நாட்களைப் போல இல்லாமல் அவளுக்கு இருக்கும் சிறிதளவு கூந்தலையும் பின்னி அதில் பூ வைத்து இருந்தாள்.
அவளது நிறத்திற்கு மேகப்பே தேவை இல்லை என்றாலும் கூட, லேசான ஓப்பனையில் கையில் குழந்தையை கொஞ்சியபடி அவள் அழகாக கட்டியிருந்த பட்டு புடவையில் வருவதை கண்டு வாயடைத்து போய் நின்று விட்டான் பிரிட்டோ. அவன் கால்கள் அவனையும் மீறி அவள் அருகில் நடந்து சென்றது. அவனை கவனித்த கிளாரா தன் புருவங்களை உயர்த்தி “என்ன?” என்று கேட்க, அங்கே யார் இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என்றெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவள் அருகில் சென்று பச்சாக் என்று அவளுடைய இதழ்களில் ஒரு அழுத்தமான முத்தத்தை கொடுத்த பிரிட்டோ “சாரி பேபி! I can't control myself.. you look so pretty today!” என்று சொல்லிவிட்டு கோபப்பட்டு கிளாரா அவனை அடிப்பதற்குள் அங்கே இருந்து ஓடி விட்டான்.
“டேய் பிரிட்டோ நில்லு!” என்று கிளாரா செல்பவனை பார்த்து கத்த, “அட விடுங்க! இப்ப எதுக்கு அவர் மேல கோவப்படுறீங்க? நான் சந்தோஷை லவ் பண்ண ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடில இருந்தே நீங்களும் பிரிட்டோவும் லவ் பண்ணிட்டு இருக்கீங்க. இத்தனை வருஷம் ஆகியும் அதே இன்ட்ரஸ்ட்டோட அவர் உங்க பின்னாடி ஆசையா சுத்திட்டு இருக்காரு.
இந்த மாதிரி ஹஸ்பண்ட் கிடைக்கிறதுக்கு எல்லாம் நீங்க கொடுத்து வச்சிருக்கணும். நானும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். பட் கல்யாணத்துக்கு அப்புறம் என் ஹஸ்பண்ட் என பெருசா கண்டுக்கவே இல்ல. இப்ப கூட பாருங்க சந்தோஷ் இந்த வீட்ல தான் இருக்கான். ஆனா அவன் எங்க இருக்கான்னே எனக்கு தெரியல. நைட்டு தூங்குறதுக்கு மட்டும் தான் ரூமுக்கு வருவான். அதுவும் சம்டைம்ஸ் லேட்டா வருவான். பிரிட்டோ இந்த மாதிரி எல்லாம் உங்க கிட்ட பிஹேவ் பண்றதுக்கு நீங்க சந்தோஷப்படணும். இந்த மொமண்டை கிடைக்கும்போதே என்ஜாய் பண்ணுங்க.” என்று கொஞ்சம் ஏக்கங்களுடன் அவளிடம் சொன்னாள் ஜனனி.
“கரெக்டு தான் ஜனனி. பட் இது ரஷ்யாவா இருந்தா எந்த பிராப்ளமும் இல்ல. இந்தியால இதெல்லாம் பப்ளிக்கா பண்ணா தப்புன்னு சொல்லுவாங்க இல்ல.. வீட்டுக்கு இத்தனை பேர் வந்திருக்கும்போது யாராவது பார்த்து ஏதாவது பிராப்ளம் ஆகிவிட்டா என்ன பண்றதுன்னு நான் கொஞ்சம் பயந்தேன். இப்ப மட்டும் இல்ல அவன் எப்ப என் பக்கத்துல வந்தாலும் வேணுமேன்னே நான் அவனை நிறைய தடவை துரத்தி விட்டு இருக்கேன். பட் நான் என்ன பண்ணாலும், எவ்வளவு தடவை அவன விட்டு தூரமா போனாலும் அவன் மறுபடியும் மறுபடியும் என்னை தேடி எனக்காக வருவான். அதான் என் பிரிட்டோ. Really I am so lucky to have him.” என்று கிளாரா பெருமையுடன் சொல்ல, “என் சந்தோஷும் பிரிட்டோ மாதிரியே இருந்தா நல்லா இருக்கும்.” என்று நினைத்துக் கொண்டாள் ஜனனி.
அந்த பிரம்மாண்ட பங்களா வீட்டின் மொட்டை மாடியில் தனியாக நின்று கொண்டு இருந்த சந்தோஷ் யாரிடமோ சீரியஸ் ஆன முகத்துடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான். “அந்த பிளான இப்பயாவது எக்ஸிக்யூட் பண்ணு. இது ஒரு நல்ல ஆப்பர்சூனிட்டி.” என்று அவனிடம் லைனில் இருந்தவன் சொல்ல, “என்ன விளையாடுறீங்களா? இங்க வச்சு நாங்க ஏதாவது பண்ணா நானும் சேர்ந்து தான் மாட்டுவேன். என்னால இந்த டைம்ல ரிஸ்க் எடுக்க முடியாது. நான் எப்ப அதை எக்ஸிக்யூட் பண்ணனும்னு வெயிட் பண்ணி பார்த்துக்கிட்டே தான் இருக்கேன். கரெக்டான டைமர் வரும்போது நானே ஏதாவது பண்றேன்.” என்றான் சந்தோஷ்.
“என்ன சந்தோஷ் இப்படி பேசிட்டு இருக்க? கல்யாணம் பண்ணி பொண்டாட்டி குழந்தைன்னு ஜாலியா செட்டில் ஆனதுக்கு அப்புறமா உனக்கு அங்க என்ன வேலைன்னு மறைந்து போயிடுச்சா?” என்று லைனில் இருந்தவன் கோபமாக கேட்க, “நான் எதையும் மறக்கல. நீங்க தான் அர்ஜுன் யாருன்னு மறந்துட்டு பேசுறீங்க. என்னை விட அவன பத்தி உங்களுக்கு நல்லா தெரியும். எல்லாமே தெரிஞ்சும் அவசரப்பட்டு என்னைப் போய் மாட்டிக்க சொல்றீங்களா? இப்ப தான் இந்த வீட்ல நான் ஓரளவுக்கு செட்டில் ஆகி இருக்கேன். எனக்கு மத்தவங்க எல்லாரும் முக்கியமா இல்லையோ, எனக்கு ரெண்டு பொண்ணு இருக்கு. என் குழந்தைங்க எனக்கு முக்கியம். என் குழந்தைகளுக்கு அவங்களோட அம்மா முக்கியம். எல்லாரையும் சேர்த்து என்னால ரிஸ்க்ல தள்ள முடியாது. எப்ப என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும். இனிமே என் ஆர்டர் பண்ற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க.” என்று பதிலுக்கு தானும் கோபமாக சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான்.
வந்த விருந்தாளிகளிடம் அர்ஜுன் பேசிக் கொண்டு இருக்க, அவனை நோக்கி ஒரு அழகிய இளம் பெண் நடந்து வந்தாள். தற்செயலாக அவள் வருவதை கவனித்த அர்ஜூன் “இவளை யாரு இங்க இன்வைட் பண்ணது?” என்று நினைத்து குழப்பமான முகத்துடன் அவளை பார்த்தான். அவன் தன்னை கவனித்தவுடன் அவனைப் பார்த்து ஒரு பெரிய விரிந்த புன்னகையை சிந்திய அந்த இளம் பெண் தன்னுடைய ஹில்ஸ் ஸ்லிப்பரில் வேகமாக டொக் டொக் சத்தத்துடன் அவன் அருகில் சென்று அவனை கட்டிப்பிடித்து “I miss you so much Arjun! நான் லாஸ்ட்டா உன்னை எப்படி பார்த்தேனோ இப்பயும் நீ அப்படியே தான் இருக்க. உன்னோட charmness and energy-ஐ யாராலையும் beat பண்ணவே முடியாது. You are such a Charismatic
figure.” என்று சொல்லிவிட்டு அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
- மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-111
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.