உதயாவை அவனுடைய வீட்டு வாசலில் இறக்கிவிட்டு தங்களுடைய மாளிகைக்கு குழந்தைகளுடன் சென்று சேர்ந்தாள் தேன்மொழி. ஆருத்ராவையும், சித்தார்த்தையும் ஜானகி தனது ரூமில் படுக்க வைத்துக் கொள்வதாக சொன்னதால் அவர்களை அங்கே சென்று விட்டு வந்த தேன்மொழி “இன்னைக்கு அவனுக்கு இருக்கு. என்ன தான் நினைச்சுட்டு இருக்கான் அவன்? அவனை போய் பேசிக்கிறேன்.” என்று தனக்குள் முணுமுணுத்த படி அவளது ரூமிற்கு சென்றாள்.
அங்கே சாப்பிடாமல் கூட நன்றாக குடித்துவிட்டு போதையில் உறங்கிக் கொண்டு இருந்தான் அர்ஜுன். “சாப்பிடாம கூட தூங்குறத பாரு.. ஆளும்.. மூஞ்சியும்.. எருமை!” என்று முனுமுனுத்தபடி தனது ரூமின் டோரை லாக் செய்த தேன்மொழி அவளுடைய ஆடைகளை மாற்றி விட்டு ரெஃப்ரெஷ் ஆவதற்காக சென்றாள். அவள் திரும்பி வந்து பார்க்கும்போதும் அர்ஜூன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.
அதனால் தனது ரூமில் இருந்த sticky notes-ஐ எடுத்து அதில் “நீ இப்ப தூங்கிட்டு இருக்கிறதுனால போனா போகுதுன்னு நான் உன்னை எழுப்பாம விட்டா, மார்னிங் எல்லாருக்கும் முன்னாடியே தூங்கி எந்திரிச்சு நீ வெளிய ஓடி போய்ட கூடாது.
நான் உன் கிட்ட பேசணும். அதுவும் இல்லாம நாளைக்கு நம்ம வீட்ல பங்க்ஷன் இருக்கு.
என் ஃபிரண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ்ன்னு நான் நிறைய பேர இன்வைட் பண்ணி இருக்கேன்.
இந்த ஃபங்சன்ல இல்லாம நீ எங்கேயாவது வெளியே போனா எனக்கு செம கோவம் வரும் அர்ஜுன். அப்புறம் உன்கிட்ட பேசவே மாட்டேன் பாத்துக்கோ!” என்று எழுதி அவன் ஒருவேளை வெளியில் செல்ல முயற்சி செய்தால் அப்போது அவன் கண்களில் இது பட வேண்டும் என நினைத்து கதவின் பின் பக்கத்தில் அதை ஓட்டி வைத்தாள்.
“நாளைக்கு உனக்கு முன்னாடியே நான் சீக்கிரமா தூங்கி எந்திரிக்கிறேன் பாரு!” என்று அவன் அருகில் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டு முனுமுனுத்த தேன்மொழி அவளுடைய மொபைல் ஃபோனில் காலை 5:00 மணிக்கு அலாரம் வைத்தாள். பின் மொபைல் ஃபோனை ஒரு ஓரமாக வைத்துவிட்டு அவன் அருகில் சென்று படுத்தாள். அவன் முகத்தையே குறுகுறுவென்று பார்த்த தேன்மொழி, “குடிச்சா எல்லாருக்கும் மூளை வேலை செய்யாதா என்ன? லூசு மாதிரி தூங்கப் போகும் போது எதுக்கு இவன் இவ்ளோ பெரிய கூலிங் கிளாஸ் போட்டு இருக்கான்?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டு அவன் கண்களில் இருந்த பெரிய கூலிங் கிளாசை மெல்ல உருவினாள்.
மூடி இருந்த அவனுடைய ஒரு பக்க கண் சிவந்து போய் காணப்பட, கண்களுக்கு கீழே கன்னி சிவந்து வீங்கி போயிருந்தது. அதைக் கண்டு பயந்து போன தேன்மொழி “ஐயையோ என்ன இப்படி அடிபட்டு இருக்கு! யார் கூடயாவது சண்டை போட்டு இருப்பானா இவன்? என்ன ஆச்சுன்னு எதுவுமே தெரியலையே.. இந்த காயத்தை மறைக்குறதுக்கு தான் ரெண்டு நாளா என் கூட இவன் கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்கானா? எனக்கு வர்ற கோபத்துக்கு இவன..!!” என்று நினைத்தவள், இதற்கு மேல் அவன் தூங்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்காமல் அவனுடைய தோள்களில் தட்டி “அர்ஜுன்... அர்ஜுன்.. கண்ண தொறந்து பாரு. நான் கூப்பிடுறது கேக்குதா இல்லையா அர்ஜூன்?” என்று கேட்டு அவனை எழுப்ப முயற்சி செய்தாள்.
சரமரியாக குடித்திருந்த அர்ஜூன் “ஏய் யாரு டி அது.. போடி அந்த பக்கம். எனக்கு தூக்கம் வருது. சும்மா வந்து நொய் நொய்யின்னு பேசி டிஸ்டர்ப் பண்ணிட்டு இருந்தீனா கடுப்பாயிடுவேன்.” என்று தன் கண்களை கூட திறக்காமல் போதையில் உளறிவிட்டு வேறு புறமாக திரும்பிப் படித்துக் கொண்டான். “என்னது நான் யாரா? உன் ரூம்ல இந்த டைம்ல என்ன தவிர வேற யாரு இருப்பாங்கன்னு நீ எதிர்பார்க்கிற? டேய் அர்ஜுன்.. எரும மாடு.. ஒழுங்கா எந்திரிச்சு உட்காரு. நான் உன் கிட்ட பேசணும். உனக்கு எப்படி அடிபட்டுச்சுன்னு சொல்லு. அர்ஜுன்.. இப்படி கத்திக்கிட்டு இருக்கேன்.. எப்படி நீ பாட்டுக்கு தூங்குற? எந்திரிச்சு உட்காரு டா டேய்!” என்ற தேன்மொழி தொடர்ந்து தன் பலத்தை போட்டு அவனை அவளால் முடிந்தவரை உலுக்கி பார்த்தாள்.
ஆனால் அவன் அவள் பேசுவதை காதிலேயே வாங்காமல் “டேய் பிரிட்டோ யாரு டா இந்த பொம்பள.. என்ன தூங்கவே விட மாட்டேங்குறா.. முதல்ல இவள இங்க இருந்து துரத்தி விடு! சும்மா.. காதுக்கிட்ட வந்து நொய் நொய்யின்னு..!! ச்சீ.. போ.. அந்த பக்கம்.” என்று மீண்டும் போதையில் உலரிய அர்ஜுன் தன் அருகில் இருந்த தலையணையை எடுத்து இருக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டு கண்களை மூடி உறங்கி விட்டான்.
அவனை ஆத்திரம் போங்க அங்கே அவனுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த தேன்மொழி பத்ரகாளி போல கோபம் நிறைந்த கண்களுடன் அவனை பார்த்தபடி அமர்ந்து இருக்க, அதை கண்டுகொள்ளாமல் அர்ஜுன் நன்றாக குறட்டை விட்டு தூங்கினான். இருக்கும் கடுப்பில் அவன் குறட்டை சத்தத்தை கேட்க கேட்க அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
“இனிமே நீ இருக்கிற ரூம்ல நான் இருக்கவே மாட்டேன்.” என்று ஆத்திரம் பொங்க கத்தி சொன்ன தேன்மொழி வேகமாக எழுந்து கதவை திறந்து அதை அடித்து சாத்திவிட்டு வெளியில் சென்று விட்டாள். பின் ஹாலில் உள்ள சோஃபாவில் வந்து கொஞ்ச நேரம் அமர்ந்து அர்ஜுனை பற்றி யோசித்தாள். அவனுடைய அழகான முகத்தில் அப்படி ஒரு பெரிய காயம் இருப்பதை அவளால் பார்க்கவே முடியவில்லை. அவனைவிட அவளுக்குத் தான் அதை பார்க்கும்போது அதிகமாக வலித்தது.
அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல கொட்ட, “நீ என்கிட்ட பொய் சொல்லிட்டியா அர்ஜுன்? மறுபடியும் இந்த அடிதடி, உனக்குன்னு ஒரு கூட்டம்.. அவங்கள வச்சு தேவையில்லாத வேலை பாக்குறதுன்னு எல்லாத்தையும் ஸ்டார்ட் பண்ணிட்டியா? அதை என் கிட்ட இருந்து மறைக்கிறதுக்கு தான் பொய் மேல பொய் சொன்னியா?
நீ எனக்காக மாறிட்டேன்னு நினைச்சு நான் சந்தோஷப்பட்டேன். பட் அப்படி இல்லல்ல! எனக்கு தெரிஞ்சு வந்த பிரச்சனைன்னு என் கிட்ட இருந்து எல்லாத்தையும் மறைச்சு பண்ணனும்னு முடிவு பண்ணிட்ட அப்படித் தானே!” என்று தனக்குள் அவனிடம் பேசியபடி அப்படியே சோகமாக சோஃபாவில் படுத்திருந்தாள் தேன்மொழி. அப்போது யாரோ கிச்சன் பக்கம் நடந்து செல்வதைப் போல இருக்க, “நம்ம இங்க இருக்கிறத யாராவது பாத்தா என்ன ஏதுன்னு கேட்பாங்க. எதுக்கு எல்லார் கிட்டயும் உண்மையை சொல்லி அவங்கள கஷ்டப்படுத்தணும்?" என்று நினைத்து தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்து நின்ற தேன்மொழி மீண்டும் தனது ரூமிற்கு சென்றாள்.
அர்ஜுன் அவன் முகத்தில் போட்டிருந்த கூலிங் கிளாஸை மீண்டும் மெதுவாக அவனுக்கு மாட்டிவிட்ட தேன்மொழி “நீ இன்னும் எவ்ளோ நாள் தான் என் கிட்ட நடிக்கிறேன்னு நானும் பாக்கிறேன்.” என்று நினைத்துக் கொண்டு அந்த ரூமை விட்டு வெளியேறி அருகில் இருந்த கெஸ்ட் ரூமில் சென்று படுத்துக் கொண்டாள்.
காலை 5 மணிக்கு அவள் வைத்த அலாரம் சரியாக அடித்து அவளை எழுப்பி விட்டது. அதனால் உடனே எழுந்து கொண்ட தேன்மொழி தனது ரூமிற்கு சென்று போதையில் இருந்த அர்ஜுன் எழுந்து கொள்வதற்குள் அவள் அவன் பார்க்க வேண்டும் என்பதற்காக எழுதி கதவில் ஒட்டி வைத்திருந்த sticky notes-ஐ எடுத்து கசக்கி குப்பையில் எறிந்தாள். வேகமாக குளித்து ஜானகி அவளுக்காக வாங்கி கொடுத்த பட்டுப்புடவையை கட்டிக் கொண்டு அவளிடம் இருந்த அழகிய தங்க வைர ஆபரணங்களை எல்லாம் அணிந்து கொண்டு வெளியில் சென்றாள்.
பங்க்ஷன் நடக்கப் போகிறது என்பதால் அந்த அழகிய மாளிகையை வேலை ஆட்கள் விடிய விடிய இன்னும் அழகாக பலவண்ண மலர்கள் மற்றும் லைட்டுகள் எல்லாம் வைத்து இன்னும் அதன் அழகை மெருகேற்றிக் கொண்டு இருந்தார்கள். அனைத்தையும் பார்வையிட்டபடி தன்னுடைய கெஸ்ட் லிஸ்ட்டை சரி பார்த்த தேன்மொழி தனது அம்மாவின் ரூமிற்கு சென்று அவளை எழுப்பி லிஸ்டில் விட்டு போனவர்கள் பெயரை சேர்த்து அவர்களுக்கும் இன்விடேஷன் அனுப்பி வரச் சொல்லி அழைத்தாள்.
பின் மற்ற ஏற்பாடுகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செக் செய்து பார்த்தாள். எப்போதும் இந்த வீட்டில் சும்மா இருப்பதற்கு பதிலாக ஜானகி மற்றும் லிண்டாவை போல வீட்டு விஷயங்களை தானும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டாள். சித்தார்த், ஆருத்ரா இருவரையும் எழுப்பி கிளப்பினாள். எட்டு மணிக்கு மேல் பங்க்ஷன் தொடங்கவிருக்கும் நிலையில், முக்கியமானவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக வர தொடங்கினார்கள்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அர்ஜுனை அவன் இன்னும் கீழே வராததால் பிரிட்டோ சென்று எழுப்பினான். எழுந்தவுடன் முதலில் தனது கூலிங் கிளாஸை தான் தொட்டுப் பார்த்தான் அர்ஜுன். அது இன்னும் அவன் கண்களில் இருந்ததால், “நல்லவேளை நேத்து அவ வீட்டுக்கு லேட்டா வந்ததுனால என்ன கவனிக்காம டயர்ட்ல தூங்கிட்டா போல இருக்கு. இன்னும் ரெண்டு மூணு நாள்ல டாக்டர் இந்த வீக்கம் சரியாயிடும்னு சொல்லி இருக்காங்க. அதுவரைக்கும் மட்டும் இதை அவ கிட்ட இருந்து மறைச்சிட்டா போதும்.” என்று நினைத்து பெருமூச்சு விட்டுவிட்டு தயாராவதற்காக சென்றான்.
அவன் ரெடியாகி பிரிட்டோவுடன் கீழே வரும் போது, தேன்மொழி அவளுடைய பெயரில் அர்ஜுன் வாங்கிய அப்பார்ட்மெண்டின் மேனேஜரிடம் அது சம்பந்தமான மெயின்டனன்ஸ் பற்றி பேசிக்கொண்டிருந்தாள். “நீங்க உங்களுக்கு அங்க பிளாட் எத்தனை ஃப்ரீயா வேணும்னு சொன்னீங்கன்னா அதை மட்டும் விட்டுட்டு மத்தது எல்லாத்தையும் நான் ரெண்டுக்கு விடறதுக்கு அரேஞ்ச் பண்ணிடுவேன் மேடம். நம்மளோட luxury apartment-ல stay பண்றதுக்கு இப்பவே நிறைய பேர் அட்வான்ஸ் கொடுக்க ரெடியா இருக்காங்க.” என்று மேனேஜர் சொல்ல, “எங்க வீட்ல அடுத்தடுத்து பங்க்ஷன் நடக்கப்போகுது. முதல்ல அதெல்லாம் முடியட்டும். வர்ற கெஸ்ட் எல்லாரும் ஸ்டே பண்றதுக்கு அந்த அப்பார்ட்மெண்ட் இப்போதைக்கு தேவைப்படுது. ஒரு ரெண்டு மூணு மாசம் போகட்டும். அதுக்கு அப்புறமா அங்க என்ன பண்ணலாம்னு நம்ம டிசைட் பண்ணிக்கலாம். நீங்க உங்களோட கான்டக்ட் நம்பர் என் கிட்ட குடுத்துட்டு போங்க. மெயின்டனன்ஸ் எல்லாத்தையும் நீங்களே பாத்துக்கோங்க. பட் அப்பப்ப என்ன நடக்குதுன்னு எனக்கு ரிப்போர்ட் மட்டும் பண்ணுங்க. எனக்கு இதெல்லாம் எப்படி மெயின்டெயின் பண்ணனும்னு ப்ராப்பரா தெரியாது. நீங்க எதுவா இருந்தாலும் என் கிட்ட டைரக்டா சொல்லிருங்க. எனக்கு தெரியலனாலும், நான் வீட்ல இருக்கறவங்க கிட்ட கேட்டு உங்களுக்கு எது தேவையினாலும் அரேஞ்ச் பண்ணி குடுக்கிறேன்.” என்றாள் தேன்மொழி.
நேற்று உதயா உடன் தேன்மொழி வெளியில் சென்றதால் கடுப்பில் இருந்த அர்ஜூன் இப்போது அதையெல்லாம் மறந்துவிட்டு பட்டுப் புடவையில் தகதகவென்று மின்னிக் கொண்டு இருந்த தேன்மொழியின் அழகில் மெய் மறந்து அவளை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது எதிரில் கையில் ஒரு பெரிய பிளவர் பொக்கே உடன் உள்ளே வந்த உதயா அர்ஜுன் அவளை நெருங்குவதற்குள் அவள் அருகில் சென்று “கங்கிராஜுலேஷன் தேன்மொழி! இந்த மாதிரி ஃபங்சனுக்கு என்ன கிப்ட் கொடுக்கணும்னு எனக்கு தெரியல. உனக்கு பொதுவாவே பிளவர்ஸ்னா புடிக்கும் இல்ல.. அதான் பொக்கே வாங்கிட்டு வந்துட்டேன். பட் இதையே முன்னாடி இருக்கிற செக்யூரிட்டி டீம் கிட்ட காட்டி அவங்க இதை நாலு தடவை செக் பண்ணி உள்ள கொண்டுட்டு வரதுக்குள்ள எனக்கு போதும் போதும்ன்னு ஆயிடுச்சு.” என்றான்.
அவனைப் பார்த்து நட்புடன் புன்னகைத்த தேன்மொழி “இங்க எல்லாமே அப்படித் தான் இருக்கும். போக போக உனக்கு பழகிரும்.” என்று சொல்லிவிட்டு அவன் கையில் இருந்த ஃபிளவர் பொக்கேவை வாங்கிக் கொண்டு “தேங்க்ஸ்” என்றாள்.
- மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல்
பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-110
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.