அத்தியாயம் 11: இதயம் உன்னை தேடுதே
அர்ஜுனின் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்த தேன்மொழி “என்னமோ உங்களால தான் இந்த பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி காப்பாத்த முடியும்னு எல்லாரும் பெருசா பில்டப் பண்ணி சொல்றாங்க.
நீங்க அவ்ளோ பெரிய ஆளா இருந்தா, இந்த சாதாரண பொண்ண உங்க வீட்ல இருக்கிறவங்க நான் உங்க வைஃப் மாதிரி இருக்கேன் என்ற ஒரே காரணத்துக்காக ஏன் கல்யாணம் பண்ணி வைக்கணும்? உங்களுக்கு என்ன ஆச்சு?
ஏன் நீங்க கோவமாக்கு போனீங்க? நீங்க ஏதோ ஒரு கில்ட்டி ஃபீலிங்ல இருக்கிறதுனால தான் கோமாள இருந்து எழுந்திருக்க மனசு வராம அப்படியே ரெண்டு வருஷமா படுத்த படுக்கையா இருக்கீங்கன்னு டாக்டர் சொன்னதா ஜனனி சொன்னாங்க.
அப்போ நீங்க ஏதோ தப்பு பண்ணிட்டீங்கன்னு தானே அர்த்தம்..!! அப்படி என்ன பண்ணிங்க? அந்த சின்ன பையன் உங்க வைஃப் சாமி கிட்ட போய்ட்டாங்கன்னு சொன்னானே..
அப்படின்னா, அவங்க இறந்துட்டாங்கன்னு தானே அர்த்தம்! அவங்களுக்கு என்ன ஆச்சு? இந்த கேள்விக்கு எல்லாம் பதில் தெரியாம, நான் இங்க எதுக்கு இருக்கேன்னு புரியாம, எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு சார்.
ப்ளீஸ் அட்லீஸ்ட் எனக்காகவாவது நீங்க சீக்கிரம் சரியாயிடுங்க. நீங்க தான் என்னோட லாஸ்ட் ஹோப். இந்த கோல்ட் ஃப்ரிசன்ல இருந்து உங்களால
மட்டும் தான் என்னை காப்பாத்த முடியும்.” என்று தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டு அழுதாள்.
அங்கே அந்த ஜீவனைத் தவிர அவளுக்கு ஆறுதலாக வேறு யாரும் இல்லை என்பதால், ஏதோ டெடி பியர் என்று நினைத்து அவனுக்கு இது தெரிவா போகிறது? என்ற தைரியத்தில் அவன் மீது சாய்ந்து கொண்டு லேசாக அனைத்து கொண்ட தேன்மொழி நன்றாக அவன் காதுகளில் கேட்கும் படி “ப்ளீஸ் என்ன காப்பாத்துங்க அர்ஜுன்!
நான் பேசுறது உங்களுக்கு கேக்குதா இல்லையா என்று கூட எனக்கு தெரியல. ஆனா இப்ப உங்கள தவிர இப்படி என் மனசுல இருக்குறத சொல்லி புலம்ப கூட எனக்கு வேற யாரும் இல்ல.
என்னமோ நான் ஜெயில்ல இருக்கிற மாதிரியும், இங்க இருக்கிறவங்க எல்லாரும் என்ன எப்பவும் சூப்பர்வைஸ் பண்ணிக்கிட்டே இருக்கிற மாதிரியும் இருக்கு.
மத்தவங்களுக்கு மட்டும் தான் இது வீடு, எனக்கு இல்ல. நீங்க கண் முழிச்சதுக்கு அப்புறம் எப்படியாவது என்ன காப்பாத்துவீங்கன்னு நான் நம்புறேன்.
நீங்களும் உங்க அப்பா மாதிரி என் நம்பிக்கையை உடைச்சுராதீங்க. தயவு செஞ்சு என்னை காப்பாத்துங்க. நான் எங்க அம்மாவையும் என் தம்பியையும் பாக்கணும்.
அவங்க ரெண்டு பேரும் பாவம். அவங்களுக்கு நான் மட்டும் தான் இருக்கேன். அவங்க கிட்ட இருந்து மொத்தமா என்ன பிரிச்சுடாதீங்க.” என்றாள்.
அவளது கண்ணீர் துளிகள் அவன் சட்டையை நினைக்க, அவள் அவனை அணைத்துக் கொண்டு படித்திருந்ததால், அவளது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலி அவன் நெஞ்சில் உருத்தி கொண்டிருந்தது.
அப்போது அர்ஜுனின் கண்கள் லேசாக கலங்கி அதில் இருந்து வழிந்த ஒரு சொட்டு கண்ணீர் அவனது மூடி இருந்த கண்களையும் தாண்டி கீழே விழுந்தது.
அதை தேன்மொழி கவனிக்கவில்லை. ஆனால் இதன் மூலம் ஒன்று மட்டும் உறுதியானது. அவள் பேசிய அனைத்தையும் அர்ஜுன் கேட்டுக் கொண்டு தான் இருந்திருக்கிறான்.
அங்கே விஜயாவை தூங்க வைத்துவிட்டு தொடர்ந்து ஆதவன் தேன்மொழியை நினைத்து புலம்பிக் கொண்டே இருந்ததால் அவனை தன் அருகில் படுக்க வைத்துக் கொண்ட உதையா அவனுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் தன்னையும் ஆறுதல் படுத்திக் கொண்டு கண்களை மூடினான்.
அவனுக்கு தேன்மொழியின் சிரித்த முகம் தான் ஞாபகம் வந்தது. அந்த முகம், எத்தனை நாட்களாக நித்தமும் அவன் பார்க்க ஏங்கிய முகம்...
ஆனால் இப்போது இன்னொரு முறை அவனால் அவளை பார்க்க முடியுமா முடியாதோ? என்று ஆகிவிட்டதே! அதனால் அவன் மனம் உடைந்து போக, அவன் கண்களில் இருந்து வழிந்தது கண்ணீர்.
அப்போது தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஒரு சிறிய பெட்டியை எடுத்த உதையா “எனக்கு தெரிஞ்சு இதுவரைக்கும் நீ யாரையும் லவ் பண்ணதே இல்ல டி. என்ன கூட நீ ஜஸ்ட் ஃப்பிரண்டா தான் பார்த்த.
ஆனா நான் உன்ன அப்படி பாக்கலையே! என் மனசுல நீ மட்டும் தான் டி இருக்க! உங்க வீட்டில உனக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு நீ சொன்னத கேட்கும்போது, எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?
அப்ப தான் என்ன ஆனாலும் யாருக்காகவும் எதுக்காகவும் உன்ன விட்டுக் கொடுக்கவே கூடாது என்று முடிவு பண்ணேன்.
உனக்காக ஆசையா இந்த கோல்டன் ரிங்க வாங்கிக்கிட்டு ஜுவல்லரி ஷாப்ல இருந்து வெளிய வரும்போது, ஆதவன் எனக்கு கால் பண்ணி நீ காணாம போயிட்டன்னு சொல்றான்!
அப்ப என் ஹார்ட் ஒரு செகண்ட் ஸ்டாப் ஆன மாதிரி இருந்துச்சு தெரியுமா? ஏன் டி உனக்கு போய் இப்படி நடக்கணும்?
உன்னை கடத்திட்டு போனது யாருன்னு எனக்கு தெரியாது. ஆனா நான் என்னைக்கு அவனுங்கள கண்டுபிடிச்சு உன்ன காப்பாத்துறனோ, அன்னைக்கு உன்ன என் கிட்ட இருந்து பிரிச்சிட்டு போனவங்க எல்லாரையும் நான் என் கையால கொல்லுவேன்.
நியூ இயர் அன்னைக்கு உன் கிட்ட இந்த ரிங்கைக் கொடுத்து ப்ரபோஸ் பண்ணி எப்படியாவது உன்னை கன்வின்ஸ் பண்ணி ஓகே வாங்கி, அம்மா கிட்ட உன்னை கூட்டிட்டு வந்து எப்படியும் யாரோ ஒருத்தனுக்கு உங்க பொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்க தானே போறீங்க எனக்கு குடுக்க மாட்டீங்களா அம்மான்னு கேட்கலாம் என்று நினைத்தேன்.
அதுக்குள்ள இப்படி எல்லாம் நடந்துருச்சு. எப்படியாவது உன்னை கண்டுபிடிச்சிடனும்ன்னு தோணுது. ஆனா அது எப்படின்னு தான் தெரியல தேனு.
எல்லாருக்கும் நான் தைரியம் சொன்னாலும், உனக்கு தப்பா எதுவும் நடந்திட கூடாதுன்னு உள்ளுக்குள்ள எனக்கு பயமா இருக்கே! நான் என்ன டி பண்றது?
நீதான் ரொம்ப தைரியமான ஆளாச்சே... ப்ளீஸ் எப்படியாவது அவனுங்க கிட்ட இருந்து தப்பிச்சு எங்க கிட்ட வந்துரு. இந்த ஒரு தடவை நான் உன்னை பத்திரமா பாத்துக்காம போனதுக்கு என்ன மன்னிச்சிடு.
அப்படி நீ திரும்ப வந்துட்டா, இனிமே உனக்கு எதுவும் ஆகாம நான் பாத்துக்குறேன். உன்ன யாருக்கும் கொடுக்க மாட்டேன் ப்ராமிஸ்!” என்று தனக்குள் அவளிடம் பேசினான். தொடர்ந்து அவன் கண்களில் இருந்து அறிவிப்போல கொட்டியது கண்ணீர்.
மறுநாள் காலை நன்றாக உறங்கிக் கொண்டு இருந்த தேன்மொழி திடீரென தன் மீது ஏதோ கனமாக இருப்பதைப் போல உணர்ந்து திடுக்கிட்டு தன் கண்களை திறந்து பார்த்தாள்.
அப்போது அவளது பழைய ஆங்காங்கே சிதளம் அடைந்திருந்த அவளது காங்கிரீட் வீட்டிற்கு பதிலாக பல பலவென்று மின்னிக் கொண்டிருந்த சென்ட்ரலைஸ்ட் ஏசி பொருத்தப்பட்டிருந்த அழகிய சீலிங் தெரிந்தது.
அவளது இடுப்பை யாரோ இறுக்கி பிடித்துக் கொண்டு தன் மீது படுத்திருப்பதை போல அவளுக்கு ஒரு உணர்வை ஏற்பட்டது. அதனால் அவள் உடனே எழுந்து கொள்ள முயற்சி செய்ய, அவளால் அது முடியவில்லை.
அதனால் பயத்துடன் அவள் தன் தலையை லேசாக மேலே தூக்கி பார்க்க, ஆருத்ரா அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு அவள் மீது படுத்திருந்தாள்.
ஒரு நொடி தன் மீது கிடப்பது அர்ஜுன் தான் என்று நினைத்து பயந்து போயிருந்த தேன்மொழி “நல்லவேளை அவர் இல்ல. நான் கூட ஒரு செகண்ட் பயந்துட்டேன்.” என்று நினைத்து பெருமூச்சு விட்டுவிட்டு “இந்த பொண்ணு எதுக்கு இங்க வந்து படுத்து இருக்கா?” என்று யோசித்தவாறு ஆருத்ராவை தன்னை விட்டு விலக்கி கொஞ்சம் தள்ளி படுக்க வைத்தாள்.
அப்போது தான் அவளுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆருத்ராவை விளக்கி படுக்க வைத்த பிறகு தான் இத்தனை நேரம் அவள் தன் ஒற்றை காலை தூக்கி அர்ஜுனின் மீது போட்டுக் கொண்டு படித்திருந்தது அவளுக்கு தெரிந்தது.
அதனால் உடனே ஷாக் ஆகி அவனை விட்டு விலகி படுத்தவள் “அய்யோ பாவம் இவரே கோமால படுத்திருக்காரு. நான் போய் இவர் மேல விடிய விடிய காலை போட்டு தூங்கிருக்கேன்.
வீட்ல டெடி பியர கட்டிப்புடிச்சு தூங்குற நினைப்புல இவர் மேல கைய கால தூக்கிப்போட்டு தூங்கி இருக்கேன் போல.” என்று நினைத்தவளுக்கு அப்போது தான் அவள் மண்டையின் மேலே இருந்த கொண்டையைப் பற்றிய ஞாபகம் வந்தது.
அதான் சிசிடிவி கேமரா. உடனே “அய்யய்யோ.. இது வேறயா? நான் தூங்கின லட்சணத்தை இவங்க வேற கேமராவில பார்த்திருப்பாங்களே..!!
எனக்கு இவர் கூட வாழ பிடிக்கல. இங்க இருக்க பிடிக்கலை. அப்படி இப்படின்னு பேசிட்டு, கடைசில அவர் கூடையே சேர்ந்து இப்படி தூங்கி இருக்கனே..
அத பாத்தா அவங்க என்ன நினைப்பாங்க? இதுல இந்த சின்ன பொண்ணு வேற.. என்னை இவ அம்மான்னு நினைச்சு எப்ப பாத்தாலும் என் கிட்ட வந்து ஓட்டிக்கிறா.” என்று தனக்குள் புலம்பிய தேன்மொழி ஆருத்ராவை திரும்பி பார்த்தாள்.
அவர்கள் இருப்பது ஏற்கனவே குளிர் பிரதேசம். இதில் அவள் வேறு போர்வை எதுவும் போர்த்தாமல் படுத்திருந்ததால் குளிரில் நடுங்கிக் கொண்டு தன் உடலை குறுக்கி படுத்திருந்தாள்.
அவளைப் பார்த்தவுடன் தேன்மொழியின் மனம் இறங்கியது. அதனால் உடனே எழுந்து மெல்ல நகர்ந்து முன்னே சென்று போர்வையை எடுத்து வந்து அவளுக்கு போர்த்தி விட்டாள்.
பின் அவளது பார்வை கோமாவில் அசைவின்றி கிடந்த அர்ஜுனை நோக்கி சென்றது.
“கோமால இருந்தாலும், இவருக்கும் குளிரும் தானே! அவரால அத உணர முடியுதோ இல்லையோ... கண்ணுக்கு முன்னாடி ஒரு மனுஷன் இப்படி படுத்து கிடக்கும் போது, அவர எப்படி கண்டுக்காம இருக்க முடியும்?” என்று நினைத்த தேன் மொழி கபோர்ட்டில் இருந்த வேறு ஒரு போர்வையை எடுத்துக் கொண்டு வந்து அவனுக்கு போர்த்தி விட்டாள்.
அப்போது அங்கே வந்த நான்சி அவளைப் பார்த்து அழகாக புன்னகைத்து “ஹலோ மேம் குட் மார்னிங்!
நேத்து நைட் நல்லா தூங்குனீங்களா? நான் அப்பவே எந்திரிச்சிட்டேன்.
ஜானகி மேடம் உங்கள எழுப்பி டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு சொல்லிட்டாங்க. அதான் உங்கள நான் எழுப்பல.” என்று சொல்ல,
“ஏங்க நீங்க வேற கடுப்பேத்துறீங்க? நான் என்ன இங்க ஜாலியா என் ஃபேமிலியோட ட்ரிப் வந்துருக்கேனா?
நிம்மதியா தூங்கி சந்தோஷமா இருக்கிறதுக்கு.. நானே என்ன வாழ்க்கையோ இதுன்னு தலையெழுத்தேன்னு வாழ்ந்துட்டு இருக்கேன்.
இப்படியெல்லாம் ஏதாவது சொல்லி காலங் காத்தாலையே என்னை இரிடேட் பண்ணாதீங்க ப்ளீஸ்.” என்று சளிப்புடன் சொன்ன தேன்மொழி ரெப்ரெஷ் ஆவதற்காக சென்று விட்டாள்.
- மீண்டும் வருவாள்..

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-11
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.