ஜனனியிடம் பேசிவிட்டு தனது ரூமிற்கு சென்ற அர்ஜுன் ரெப்ரெஷ் ஆகிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்து தனது மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்தான். அவன் ஆர்வமுடன் தேன்மொழி இடம் இருந்து தனக்கு ஏதாவது கால் வந்திருக்கிறதா என்று பார்க்க, அப்படி எதுவும் வராததால் அவன் முகம் சுருங்கி போனது. அப்படியே அவன் சென்று whatsapp பக்கம் பார்க்க உதயா ஆருத்ரா மற்றும் சித்தார்த்துடன் சேர்ந்து தேன்மொழி விதமாக போட்டோக்களை எடுத்து அதில் ஸ்டேட்டஸ் போட்டு ட்ரெயின் விட்டிருந்தாள்.
“இந்த மாதிரி நம்ம ஃபேமிலியா வெளிய போய் ஹாப்பியா இருந்திருக்க வேண்டிய மொமென்ட் இது. உனக்காக சீக்கிரமா வீட்டுக்கு வந்து நான் இங்க தனியா நம்ப ரூம்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நீ உன் ஃபிரண்டு கூட போய் என்ஜாய் பண்ணிட்டு இருக்கியா? நான் உன்ன ரெண்டு நாளா இக்னோர் பண்ணதுக்கு, என்னை பழிவாங்கனும்னே இப்படி எல்லாம் பன்றியாடி நீ?” என்று கேட்ட அர்ஜுன் தேன்மொழிக்கு கால் செய்தான்.
தீம் பார்க்கில் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த தேன்மொழி தனது ஹேண்ட் பேக்கை உதயா விடம் கொடுத்துவிட்டு சென்றிருந்தாள். அதனால் கால் வந்தது அவளுக்கு தெரியவில்லை. அவள் குழந்தைகளுடன் விளையாடும் அழகை கண்டு ரசித்துக் கொண்டிருந்த உதயாவும் அர்ஜுன் கால் செய்ததை கவனிக்கவில்லை. தொடர்ந்து 3,4 முறை அவளுக்கு கால் செய்து பார்த்த அர்ஜுன் அவள் எடுக்காததால் “உங்க அம்மாவுக்கு மட்டும் வீடியோ கால் பண்ணி உனக்கு பேச தெரியுது.. நான் கால் பண்ணா மட்டும் நீ எடுக்க மாட்டியா? ரொம்ப பண்ற டி நீ!” என்று நினைத்து “உனக்காக இன்னிக்கு நான் சீக்கிரமா வீட்டுக்கு வந்தேன். பட் நீ குழந்தைகளை கூட்டிட்டு வெளியே போய் என்ன நல்லா சப்ரைஸ் பண்ணிட்ட. இன்னைக்கு நாள் முழுக்க உன்ன பத்தியே யோசிச்சிட்டு இருந்துட்டு இருக்கிற வேலையை எல்லாம் பாதியிலேயே விட்டுட்டு வந்தேன்ல.. எனக்கு இதெல்லாம் தேவை தான். Thank you so much 😏” என்று அவளுக்கு வேக வேகமாக டைப் செய்து அனுப்பிவிட்டு அப்படியே கட்டிலில் விழுந்தான்.
அவள் இல்லாத அந்த ரூம் அவனுக்கு ஏதோ ஜெயில் போல இருந்தது. அவனால் அங்கே இருக்க முடியவில்லை. இப்போது அவன் எங்கேயாவது வெளியில் சென்றால், உடனே அவனது பாதுகாப்பிற்காக பிரிட்டோ அவன் வாழை பிடித்துக் கொண்டு வந்து விடுவான். அதனால் அவனும் கிளாராவும் அவர்களுடைய நேரத்தை கெடுத்து கொள்வதைப் போல இருக்கும் என்று நினைத்த அர்ஜுன் வேலை ஆள் ஒருவனை வரச் சொல்லி அவனுக்கு மிகவும் பிடித்த மதுபாட்டில் ஒன்றை வாங்கி வரச் சொன்னான்.
அவனும் அடுத்த அரை மணி நேரத்தில் அதை வாங்கிக் கொண்டு வந்து அவன் கையில் கொடுக்க, அதை எடுத்துக் கொண்டு நேராக மொட்டை மாடிக்கு சென்ற அர்ஜுன் தனியாக வானத்தில் இருந்த நிலாவை பார்த்து இறந்து போன மனைவியையும், இப்போது தன் அருகில் இல்லாத மனைவியையும் நினைத்து ஃபீல் செய்தவாறு குடித்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு தேன்மொழி இப்போது அவன் அருகில் இல்லாததை நினைக்கும் போது ஒரே கடுப்பாக இருந்தது. அதனால் குடித்துக் கொண்டிருப்பதைப் போல ஃபோட்டோ எடுத்து அவளுக்கு அனுப்பி வைத்தான். “நீ அங்க என்ஜாய் பண்ற மாதிரி நானும் இங்க என்ஜாய் பண்ணிட்டு தான் டி இருக்கேன். நான் ஒன்னும் தனியா ஃபீல் பண்ணிட்டு மூளையில உட்கார்ந்து இருக்கல. இந்த அர்ஜுன் யார் இருந்தாலும் இல்லைன்னாளும் எப்பயும் ஹாப்பியா தான் இருப்பான்.” என்று போதையில் எதையெதையோ பேசி அவளுக்கு வாய்ஸ் மெசேஜ் வேறு அனுப்பினான்.
அனைத்தையும் செய்துவிட்டு போதை தலைக்கு ஏறியதால் தள்ளாடியபடி மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த அர்ஜுன் இப்போது அவனுக்கு தூக்கம் வருவதைப் போல இருந்ததால் லிஃப்டில் கீழே சென்று தனது ரூமில் படுத்துக் கொண்டான். குழந்தைகள் கோரசாக “மம்மி இன்னைக்கு நம்ம ஏதாவது நல்ல ரெஸ்டாரண்ட்ல இங்கயே சாப்பிட்டு போகலாம். வீட்டுக்கு போனாலும் செஃப் நல்லா தான் சமைச்சு கொடுப்பாங்க. இருந்தாலும் ரெஸ்டாரண்ட்ல சாப்பிடுற மாதிரி வராது." என்று சொல்லி அடம் பிடித்ததால், ஒரு உயர்தர ஏழு நட்சத்திர உணவகத்திற்கு அனைவரையும் அழைத்துச் சென்றாள் தேன்மொழி.
“ஓய் என்ன பண்ற? இங்க புட் எல்லாம் ரொம்ப காஸ்ட்லியா இருக்கும். நான் ஏதோ சும்மா ஒரு பேச்சுக்கு தான் இன்னைக்கு உன்னோட ட்ரீட்னு சொன்னேன். அதுக்காக காலையில இருந்து நீ ரொம்ப செலவு பண்ணிட்டு இருக்க. இங்க நம்ம இத்தனை பேர் சாப்பிட்டா எவ்ளோ ஆகுமோ! எதுக்கு தேவை இல்லாம இவ்ளோ செலவு பண்ற நீ?” என்று உதயா தேன்மொழியிடம் மெல்லிய குரலில் கேட்க, “என் மாமனார் செலவுக்கு வச்சுக்கோமான்னு சொல்லி நான் இந்தியாவுக்கு வரும்போது ஒரு பிளாட்டினம் கிரெடிட் கார்டு கொடுத்தாரு. அதோட லிமிட்ல 1% கூட இப்ப வரைக்கும் நான் செலவு பண்ணல. உன் ஹஸ்பண்ட் நான் குடுக்கிற காசுல தான் நீ செலவு பண்ணனும்னு அர்ஜுன் ஒரு கார்ட் கொடுத்தாரு. அதோட லிமிட் எவ்ளோன்னு கூட எனக்கு தெரியாது. இதுல நான் வேணும்னே அவர் கொடுத்த காசை செலவு பண்ண மாட்டேங்கிறேன்னு அர்ஜுனுக்கு என் மேல கோபம் இருக்கு. இப்படி எங்கயாவது வெளியே வந்தா தான் நான் செலவு பண்ண முடியும். அவர் கூட எங்கேயாவது போனா அவரே பே பண்ணிடுவாரு எனக்கு அந்த ஆப்பர்சுனிட்டியும் கிடைக்காது. இன்னைக்கு நம்மளோட டே உதயா. நம்ம என்ன வேணாலும் பண்ணலாம். மணி ஒரு ப்ராப்ளமே இல்ல. உனக்கு என்ன பிடிக்குதோ ஆர்டர் பண்ணிக்கோ.” என்று தேன்மொழி சொன்னதைக் கேட்டு வாயடைத்து போய்விட்டான் உதயா.
அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு காரில் வீடு திரும்பும் போது தான் அர்ஜுன் தனக்கு அனுப்பி இருந்த வாய்ஸ் மெசேஜ், ஃபோட்டோஸ் மற்றும் அவனிடம் இருந்து தனக்கு வந்த மிஸ்டுகால்கள் என அனைத்தையும் கவனித்த தேன்மொழி “என்ன இவன் சரியான லூசா இருப்பான் போல! இவன் எனக்காக இன்னைக்கு சீக்கிரம் வருவான்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்? நான் தான் அவ்ளோ நேரம் கால் பண்ணி புலம்பிட்டு இருந்தேனே.. அப்பவே இன்னைக்கு சீக்கிரம் வரேன். நம்ம எங்கேயாவது போகலாம் வெயிட் பண்ணுன்னு சொல்லி இருக்கலாம் இல்ல! திடீர்னு இவன் பாட்டுக்கு கிளம்பி வந்துட்டு இப்ப என்னால தான் இவன் பிளான் கேன்சல் ஆச்சுன்னு என்ன குறை சொல்லிட்டு இருக்கான்!” என்று நினைத்து கொஞ்சம் சோகமாக அமர்ந்திருந்தாள்.
அவள் முகத்தை கவனித்துக் கொண்டிருந்த உதயா “என்ன ஆச்சு? நல்லா தானே இருந்த.. திடீர்னு ஏன் ஒரு மாதிரியா ஆயிட்ட? ஏதாவது ப்ராப்ளமா? நீ என் கூட வெளிய வந்ததுக்கு அர்ஜுன் கோச்சிக்கிட்டாரா?" என்று கரெக்டாக கேட்க, “சேச்சே.. இதுக்காக எல்லாம் அவர் எதுக்கு கோவிச்சுக்க போறாரு ? அத்தை தான் சித்தார்த்தும், ஆருத்ராவும் தூங்குற டைம் ஆச்சு சீக்கிரம் வீட்டுக்கு வாங்கன்னு மெசேஜ் பண்ணி இருக்காங்க. அதான் ரொம்ப லேட் ஆயிடுச்சோன்னு யோசிச்சிட்டு இருந்தேன். வேற ஒன்னும் இல்ல.” என்று சொல்லி சமாளித்தாள் அவள்.
மீண்டும் அவள் தனது மொபைல் ஃபோனை பார்க்க, ஜானகி நாளை நடக்கவிருக்கும் ஹவுஸ் வார்மிங் ஃபங்ஷனுக்கான இன்விடேஷனை அவளுக்கு அனுப்பி “இப்ப தான் இன்விடேஷன் பைனல் ஆகிய வந்துச்சு மா. இந்தியால இருக்கிற நம்மளோட பிசினஸ் பார்ட்னர்ஸ் யாரையுமே நம்ம அடிக்கடி மீட் பண்றது இல்ல.
அதனால இந்த ஃபங்ஷனை சாக்கா வச்சு எல்லாரையும் இன்வைட் பண்ணலாம்னு அர்ஜுன் டிசைட் பண்ணி இருக்கான். உங்க மாமா கூட நாளைக்கு இந்தியா வர்றாரு. உனக்கு தெரிஞ்சவங்க, உன் ஃபிரண்ட்ஸ் யாரை வேணும்னாலும் நீ இன்வைட் பண்ணு. எல்லாருக்குமே டிஜிட்டல் இன்விடேஷன் தான். பட் ஒவ்வொருத்தருக்கும் அவங்க பேர் போட்டு தனியா கோட் ஒன்னு ஜெனரேட் ஆகும். இந்த வெப்சைட் லிங்ல நீ யாரை இன்வைட் பண்ணனுமோ அவங்களோட ஃபோட்டோ அண்ட் டீடைல்ஸ் எல்லாத்தையும் அப்லோட் பண்ணி தனித்தனியா அவங்களுக்கு இன்விடேஷன் அனுப்பிடு. நீ எத்தனை பேரை வேணாம்னு கூப்பிடு ஒன்னும் பிரச்சனை இல்ல. பக்கத்துல தானே நம்ம அப்பார்ட்மெண்ட்டும் இருக்கு. அதுக்கும் கையோட கிரகப்பிரவேசம் பண்ணிடலாம்.” என்று அவளுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தாள்.
அதைப் பார்த்தவுடன் மகிழ்ந்த தேன்மொழி “இதுவரைக்கும் என்னோட பங்க்ஷன்னு எனக்கு தெரிஞ்சவங்க யாரையுமே நான் இன்வைட் பண்ணது இல்லை. இதுக்காவது எல்லாரையும் கூப்பிடுவோம்.” என்று நினைத்து ஜானகிக்கு “தேங்க்ஸ் அத்தை” என்று ரிப்ளை அனுப்பினாள். பின் முதல் வேலையாக உதயாவின் ஃபோட்டோவை அந்த லிங்கில் அப்லோட் செய்து அவனுடைய டீடைல்ஸ்களை என்டர் செய்து பிரத்யோகமான இன்விடேஷனை உருவாக்கி அவனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தாள்.
அதை பார்த்த உதயா “என்ன சொன்ன மாதிரியே அதுக்குள்ள இன்விடேஷன் எல்லாம் அனுப்பிட்ட! நான் தான் ஆல்ரெடி வரேன்னு சொல்லிட்டேன்?” என்று கேட்க, “இந்த ஃபங்ஷனுக்கு நிறைய பேர் வருவாங்க. செக்யூரிட்டி டீம் கிட்ட இன்விடேஷன் காட்டி வெரிஃபிகேஷன் பண்ணதுக்கு அப்புறம் தான் உள்ள வர முடியும். அதான் எல்லாருக்கும் அவங்க டீடெயில்ஸ் போட்டு அத்தை தனித்தனியா இன்விடேஷன் அனுப்ப சொன்னாங்க." என்றாள் தேன்மொழி.
தேன்மொழிகள் புகுந்த வீட்டில் உள்ளவர்கள் வசதி படைத்தவர்கள் என அவனுக்கு நன்றாக தெரிந்திருந்தாலும், அவர்களுடைய ஆளுமையும் செல்வாக்கும் போகப்போகத் தான் அவனுக்கு புரிந்தது. அதனால் “தேன்மொழி எனக்கு ஃபிரண்டா இருக்கிறதுனால தான் அர்ஜுன் மாதிரி ஒருத்தர் கிட்ட என்னால சாதாரணமா பேச முடியுது. பெரிய பெரிய பணக்காரங்களுக்கே அவரோட அப்பாயிண்ட்மெண்ட் வேணும்னா பல மாசம் வெயிட் பண்ண வேண்டியது இருக்கும்னு நான் கேள்விப்பட்டு இருக்கேன். இப்படி ஒரு ஃபேமிலில மருமகளா போகுதுன்னா, சும்மா இல்லையே... நான் பார்த்த வரைக்கும் அவளோட ஃபேமில இருக்குற எல்லாரும் அவ கிட்ட நல்ல மாதிரி தான் பிஹேவ் பண்றாங்க! எந்த ஆங்கில்ல யோசித்து பார்த்தா தேன்மொழி லக்கினு தான் தோணுது. பட் என்ன இருந்தாலும் அர்ஜுன் வயசானவராச்சே.. அவரால இன்னும் எத்தனை வருஷம் இவ கூட ஹேப்பியா வாழ முடியும்?" என்று யோசித்த உதயா கலவையான உணர்ச்சிகளுடன் தேன்மொழியை பார்த்தான்.
அர்ஜுனை பற்றிய சிந்தனைகளில் மூழ்கி இருந்த தேன்மொழி உதயாவை கவனிக்காமல் இருந்தால் பிறகு whatsappல் இன்விடேஷன் அனுப்பும் வேலைகளை பார்க்க தொடங்கினாள்.
-மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-109
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.