ஹலோ ஃபிரண்ட்ஸ்..
“சாபமாய் வந்த என் உயிரே” நாவல் நம்மளோட தேனருவி தமிழ் நாவல்ஸ் youtube சேனல்ல அப்லோட் பண்ணி இருக்கோம். இப்பவே அதைக் கேட்டு என்ஜாய் பண்ணுங்க ❤️ அடுத்தடுத்த நாவல்களின் அப்டேட்களை பெறுவதற்கு சேனல சப்ஸ்கிரைப் பண்ணி வச்சிக்கோங்க. உங்களுடைய கருத்துக்களை மறக்காம கமெண்ட் செக்சன்ல சொல்லுங்க ⚡
நன்றி 🙏
அத்தியாயம் 108 💕
தேன்மொழி உதயாவை காண்பதற்காக கிளம்பி வெளியில் சென்று கொண்டு இருந்தாள். அப்போது ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்த சித்தார்த்தும் ஆருத்ராவும் அவள் அருகில் “மம்மி நீங்க வெளிய போறீங்களா?” என்று கோரசாக கேட்டார்கள். “ஆமா நான் என் ஃபிரண்ட பாக்க போறேன். நைட்டு தான் வருவேன்.” என்று தேன்மொழி சொன்னவுடன் அவர்கள் இருவரும் அவளது கையைப் பிடித்துக் கொண்டு “மம்மி நாங்களும் உங்க கூட வந்து உங்க ஃபிரண்ட பாக்கறோம். எங்களையும் கூட்டிட்டு போங்க. இங்க எல்லாரும் பிசியா இருக்காங்க. எங்க கூட யாருமே விளையாட வர மாட்டேங்கிறாங்க போர் அடிக்குது.” என்று சொல்லி அடம் பிடித்தார்கள்.
அதனால் வேறு வழி இல்லாமல் அவர்களையும் அழைத்துக் கொண்டு கிளம்பினாள் தேன்மொழி. அவளுக்காக ஆட்டோ பிடித்து சீக்கிரமாகவே வடபழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று சேர்ந்து இருந்த உதயா உற்சாகமான முகத்துடன் கோவில் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கே ஒரு கார் வந்து நின்றது.
அந்தக் காரை தேன்மொழியின் வீட்டில் பார்த்த ஞாபகம் அவனுக்கு இருந்ததால் வந்திருப்பது அவளாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் நடந்து அந்த காரின் அருகே சென்றான் உதயா. அவன் தேன்மொழியை எதிர்பார்த்து காத்திருக்க, அவனுக்கு சர்ப்ரைஸ் ஆக காரின் இரு பக்க கதவுகளையும் திறந்து கொண்டு ஆருத்ராவும் சித்தார்த்தும் உள்ள இருந்து இறங்கினார்கள்.
பின் சீட்டில் அமர்ந்திருந்த தேன்மொழி கடைசியாக வெளியில் வர, “இவ கூட இன்னைக்கு ஒரு நாளாவது நான் ஆசைப்பட்ட மாதிரி time spend பண்ணலாம்னு நினைச்சேன். வேணும்னே இவ என்னை வெறுப்பேத்துறதுக்காகவே இந்த குட்டி பிசாசுங்க இரண்டையும் கையோட கூட்டிட்டு வந்திருக்கா! என்னமோ இந்த குழந்தைங்க இவளுக்கே பிறந்த மாதிரி இவளுக்கு ஒரு நினைப்பு.. ரொம்ப ஓவரா பண்ற தேன்மொழி.. வர வர.. எனக்கு நீ பண்றதை எல்லாம் பாக்க பாக்க டென்ஷன் ஆகுது.” என்று நினைத்து உள்ளுக்குள் கடுப்பானாலும் வெளியில் தன் முகத்தை சிரித்தபடி வைத்துக் கொண்டு அவர்கள் மூவரையும் பார்த்து “ஹாய்” என்றான் உதயா.
உடனே பதிலுக்கு தேன்மொழியை முந்திக் கொண்டு அவனுக்கு கோரசாக குழந்தைகள் இருவரும் ஹாய் சொன்னார்கள். “ஹலோ அங்கிள்! நீங்க தான் எங்க மம்மியோட ஃபிரண்டா?” என்று சித்தார்த் அவனை பார்த்து கேட்க, “அம்மா சித்து இவர் தான் மம்மியோட ஃபிரண்டு. இந்த அங்கிள் நம்ம பாட்டி வீட்டுக்கு வந்துருக்காரு. இவரை நான் முன்னாடியே பார்த்து இருக்கேன்.” என்று சொன்ன ஆருத்ரா உதயாவை பார்த்து “அங்கிள் உங்க பேரு உதயா தானே!” என்று கேட்டாள்.
ஆருத்ரா தனது குட்டி தலையை ஆட்டி ஆட்டி பேசும்போது அவளுடைய போனி டைலும் சேர்ந்து ஆட, பார்ப்பதற்கே மிகவும் க்யூட்டாக இருந்தாள் அவள். அவளுடைய இனிமையான குரலையும், அழகான தோற்றத்தையும் பார்த்து ஒரு நொடி தன்னையும் மீறி ஆருத்ராவை ரசிக்க தொடங்கிய உதயா சிரித்த முகமாக அவளிடம் “ஓய்.. என் நேம் இன்னும் ஞாபகம் இருக்கா உனக்கு?” என்று கேட்க, அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்த ஆருத்ரா “yes uncle, நீங்க எங்க மம்மியோட ஃபிரண்டு. அப்ப எங்களுக்கும் ஃபிரண்ட் தானே.. நான் எப்படி உங்களை மறைப்பேன்?” என்று கேட்டாள்.
உடனே சிரித்தபடி அவளுடைய கொழுகொழு கண்ணத்தை பிடித்து விளையாட்டாக கிள்ளிய உதயா “நீ க்யூட்டா பேசுற. நீ பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலயே!” என்று கேட்க, பதிலுக்கு தானும் அவன் கன்னத்தைப் பிடித்து கிள்ளிய ஆருத்ரா “ஆமா, நான் எங்க மம்மி மாதிரியே ரொம்ப ஸ்வீட். இதோ எங்க அண்ணன் இருக்கானே.. இவன் தான் எங்க அப்பா மாதிரியே சரியான டெரர் பீஸ்.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
உடனே தன் முகத்தை சுருக்கிக் கொண்ட சித்தார்த் “என்ன பாத்தா உனக்கு டெரர் பீஸ் மாதிரியா இருக்கு? புதுசா யாரையாவது மீட் பண்ணும்போது அவங்க கிட்ட இப்படித் தான் என்ன இன்டர்வியூஸ் பண்ணி வைப்பியா? இரு, நான் உன்ன டாடி கிட்ட சொல்லி வைக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு தன் உதட்டை சுழிக்க, “போய் சொல்லிக்கோ, நான் டாடியோட cute little princess. அவர் என்னை எதுவும் சொல்ல மாட்டாரு. என் கூட சண்டை போடக் கூடாதுன்னு உன்ன தான் திட்டுவாரு.” என்று கிண்டலாக சொல்லிவிட்டு சிரித்தாள் ஆருத்ரா.
அந்த அழகான அண்ணன் தங்கையை ஆர்வமுடன் உதயா பார்த்துக் கொண்டு நிற்க, டிரைவரிடம் “நாங்க உள்ள போய் சாமி கும்பிட்டுட்டு வர்றோம். நீங்க வெயிட் பண்ணுங்க.” என்று சொல்லிவிட்டு தனது குழந்தைகளை பார்த்த தேன்மொழி “நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு முடிச்சிட்டீங்கன்னா நம்ம உள்ள போய் சாமி கும்பிடலாமா?” என்று கேட்டாள். “நான் அவ கூட சண்டை போடவே இல்ல மம்மி.” என்ற சித்தார்த் அவள் அருகில் சென்று அவள் கையை பிடித்துக் கொள்ள, “எனக்கு சண்டை போடவே தெரியாது மம்மி.” என்ற ஆருத்ரா தேன்மொழியின் அருகில் சென்று அவளுடைய மற்றொரு கையை பிடித்துக் கொண்டாள்.
“அச்சோ போதும், வாங்க உள்ள போலாம்." என்று சொல்லி அவர்கள் இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்ட தேன்மொழி உதயாவின் அருகில் சென்று “இப்ப தெரியுதா என்னோட டைமை எல்லாம் யார் திருடுறாங்கன்னு.. இவங்க ரெண்டு பேரையும் சமாளிக்கிறதுக்கு எனக்கு 24 மணி நேரம் பத்த மாட்டேங்குது. இப்ப கூட நான் கிளம்பும்போது நாங்களும் உங்க கூட வரோம் மம்மின்னு அடம் பிடித்து கிளம்பி வந்துட்டாங்க. இவங்க ரெண்டு பேரும் எனக்கு ஸ்வீட் டார்ச்சர்." என்றாள்.
அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அவர்களைப் பார்த்து சிரித்த உதயா அவர்களுடன் கோவிலுக்குள், “மம்மி உங்களுக்கு நாங்க மட்டும் தான் டார்ச்சரா அப்ப டாடி?” என்று சித்தார்த் தேன்மொழியிடம் கேட்டான். “நீங்களாவது எனக்கு ஸ்வீட் டார்ச்சர். உங்க daddy horrible torture. உங்களை கூட நான் ஈசியா ஹேண்டில் பண்ணிடுவேன். உங்க டாடியை எப்படி கரெக்ட் பண்றதுனு தான் இப்ப வரைக்கும் எனக்கு தெரியல.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் அவள்.
அவர்களுடன் தனது நேரத்தை செலவிட தொடங்கிய உதயாவிற்க்கே ஒரு கட்டத்திற்கு மேல் ஆருத்ராவையும் சித்தார்த்தையும் பிடிக்க தொடங்கியது. குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? முதலில் இவர்கள் ஏன் வந்தார்கள் என்று நினைத்த அவனே, அவர்களுடன் சேர்ந்து ஜாலியாக விளையாட தொடங்கினான். குழந்தைகளுடன் இருப்பதால் தேன்மொழி அனைவரையும் கோவிலில் இருந்து தீம் பார்க் ஒன்றிற்கு அழைத்துச் சென்றாள். அங்கே அனைவருமே ஜாலியாக என்ஜாய் செய்தார்கள்.
தேன்மொழியுடன் தனது நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காகவே மணி அடித்ததை போல சரியாக 6:30க்கு தன்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்த அர்ஜுன் “ஹனி பேபி.. ஏய் ஹனி பேபி!” என்று ஹாலில் இருந்தே அவளை அழைத்தவாறு தங்களது ரூமிற்கு சென்றான். அங்கே அவள் இல்லாததால் அவளைத் தேடிக் கொண்டு லிவிங் ஏரியாவிற்கு வந்த அர்ஜூன் டிவி பார்த்துக் கொண்டு இருந்த தன் அம்மாவையும், மாமியாரையும் பொதுவாக பார்த்து “தேன்மொழி எங்க? வீட்ல யாரும் இருக்கிற மாதிரியே தெரியல!” என்று கேட்டான்.
“என் மருமக அவ ஃபிரண்டு கூட வெளிய போயிருக்கா. ஆருத்ராவும், சித்தார்த்தும் நானும் வரேன் மம்மின்னு அவ பின்னாடியே போயிட்டாங்க. எங்கேயோ தீம் பார்க்ல விளையாடிட்டு இருக்காங்க. இப்பதான் தேனு எங்களுக்கு ஃபோட்டோஸ் எல்லாம் எடுத்து அனுப்புனா.” என்று ஜானகி சொல்ல, “ஃபிரண்டா.. எந்த ஃபிரிண்ட்? டான்ஸ் டீச்சர் அனிதாவா?” என்று கேட்டான் அர்ஜுன்.
“அனிதா இல்ல மாப்ள. நம்ம உதயா தம்பி கூட தான் போயிருக்கா. எல்லாரும் சந்தோஷமா பார்க்கல விளையாடிட்டு இருக்காங்க. இப்ப நீங்க வர்றதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நான் அவ கூட வீடியோ கால் பேசினேன். அவங்க வீட்டுக்கு வர லேட் ஆகுமாம். போகும்போது அவ உங்க கிட்ட சொல்லிட்டு போகலையா? இவளுக்கு இதே வேலையா போச்சு. கொஞ்சம் கூட நமக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு பொறுப்பே வர மாட்டேங்குது. நான் எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டேங்கறா மாப்பிள.” என்று விஜயா வழக்கம் போல தேன்மொழியை குறை கூற தொடங்கி விட, “அட விடுங்க சம்பந்தி. இவன் எப்ப வீட்டுக்கு வருவான் வெளிய போவான்னு யாருக்குமே தெரியாது. அப்புறம் இவன் கிட்ட எதுக்கு அவ சொல்லணும்? வீட்ல இருக்கிற பெரியவங்க கிட்ட சொல்லிட்டு தானே போயிருக்கா.. அப்புறம் என்ன? அது போதும்.” என்றாள் ஜானகி.
“அது சரி நல்ல மாமியார் நல்ல மருமக! ஏதோ என் மாமியார் மட்டும் தான் எனக்கு அப்பப்ப சப்போர்ட் பண்ற மாதிரி பேசுறாங்க. இந்த மம்மி இடையில புகுந்து அவங்களையும் ஆஃப் பண்ணி விட்டுடறாங்க.” என்று நினைத்து பெருமூச்சு விட்ட அர்ஜுன் “அந்த குட்டச்சி வீட்டுக்கு வரட்டும் அவளுக்கு இருக்கு... என்ன பாக்காம இருக்க முடியல.. என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு கிட்டத்தட்ட அழுகிற மாதிரி அப்படி ஃபீல் பண்ணி பேசிட்டு.. இப்ப ஜாலியா அவ ஃப்ரெண்ட் கூட fun பண்றதுக்கு சித்தார்த்தையும் ஆருத்ராவையும் கூட்டு சேர்த்து கூட்டிட்டு போய்ட்டா! அவளுக்காக தானே நான் சீக்கிரமா வந்தேன் இதெல்லாம் வேஸ்ட்டா போச்சு இப்ப!” என்று யோசித்தவாறு தனது ரூமை நோக்கி நடக்க தொடங்கினான்.
அவனை கிராஸ் செய்து தனது ரூமிற்கு சென்று கொண்டு இருந்த ஜனனி “என்ன அண்ணா ஈவினிங் டைம்ல வீட்டுக்குள்ளயே கூலிங் கிளாஸ் போட்டுட்டு சுத்துறீங்க! அதுவும் இவ்ளோ பெருசா இருக்கு! அண்ணி கூட அவுட்டிங் போகலாம்னு இன்னைக்கு சீக்கிரமா வந்துட்டீங்களா?” என்று கேட்டுவிட்டு சிரிக்க, “உங்க அண்ணி தான் என்ன விட்டுட்டு சித்தார்த்தையும் ஆருத்ராவையும் கூட்டிக்கிட்டு அவ ஃபிரண்டு கூட அவுட்டிங் போய் இருக்கா.” என்று சலிப்பாக சொன்னான் அர்ஜுன்.
“சரி விடுங்க அண்ணா அவங்களாவது என்ஜாய் பண்ணட்டும். என்ன பாருங்க.. எப்ப பார்த்தாலும் என் பேபீஸ் ரெண்டு பேரையும் பார்த்துக்கிட்டு நான் வீட்டுக்குள்ளயே இருக்க வேண்டியதா இருக்கு! டைம் கிடைக்கும்போதே என்ஜாய் பண்ணா தான் உண்டு.” என்று ஜனனி கொஞ்சம் சோகமாக சொல்ல, அவள் மனதில் இருக்கும் ஏக்கங்களை புரிந்து கொண்ட அர்ஜுன் “வீட்ல இத்தனை பேர் இருக்கும்போது நீயே குழந்தைங்கள பாத்துக்கணும்னு எந்த அவசியமும் இல்லை ஜனனி. பிரிட்டோ மேரேஜ் முடியட்டும். குழந்தைகளை அப்பப்ப தேன்மொழி கிட்ட குடுத்து பழக்கிரு. அவங்க ஹனி கூட செட் ஆயிட்டாங்கன்னா, நீ குழந்தைங்க இரண்டு பேரையும் எங்க கிட்ட விட்டுட்டு சந்தோஷ் கூட எங்கையாவது ட்ரிப் போயிட்டு வா. ஆகாஷை டிரிப் அரேஞ்ச் பண்ணி குடுக்க சொல்லு.” என்றான்.
அதைக் கேட்டு மகிழ்ந்த ஜனனி உடனே ஓடிச் சென்று அர்ஜுனை அணைத்துக் கொண்டு “தேங்க்ஸ் அண்ணா! என் பேபிஸ் ரெண்டு பேரையும் நான் இல்லாமையும் அவங்கள அழ வைக்காம யாராவது பாத்துக்கிட்டாங்கன்னா அதைவிட எனக்கு சந்தோஷம் வேற எதுவுமே இல்ல. அண்ணி கூட இருக்கும்போது அவங்க அழுகிறது இல்ல. கண்டிப்பா தேன்மொழி அண்ணி என்னை விட அவங்கள நல்லா பாத்துப்பாங்க.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள்.
- மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-108
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.