உதயா தேன்மொழியை தன்னுடன் ஈவினிங் வெளியில் வர சொல்லி அழைக்கிறான். அதற்கு “கண்டிப்பா போகலாம், இன்னைக்கு என்னோட ட்ரீட்.” என்று உடனே உற்சாகமான குரலில் சொன்னாள் தேன்மொழி. அவள் தன்னுடன் வெளியில் வருவதற்கு இவ்வளவு விரைவில் சம்மதிப்பாள் என்று எதிர்பார்த்து இருக்காத உதயா உடனே குஷியாகி “சூப்பர்.. இப்பயாவது என்னையும் ஒரு ஆளா மதிச்சு நான் கேட்டதுக்கு ஓகே சொல்லி என் கூட வரேன்னு சொன்னியே அதுவரைக்கும் சந்தோஷம். பாக்கலாம் இன்னைக்காவது நீ என் ஃபிரண்டு தேன்மொழி மாதிரி நடந்துக்கிறியான்னு!” என்று சொல்ல, அதைக் கேட்டு சிரித்த தேன்மொழி “என்ன பேசுற நீ! எப்பயுமே நான் உன் ஃபிரண்டு தான். நமக்குள்ள எதுவுமே மாறாது. எனக்கு எவ்ளோ ஏஜ் ஆனாலும் நான் இப்படித் தான் இருப்பேன்.” என்றாள்.
அப்போது தூங்கிக் கொண்டு இருந்த தன்னுடைய ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு அவளது ரூமிற்குள் நுழைந்த ஜனனி “அண்ணி பிஸியா இருக்கிங்களா? என் பேபிஸ் ரெண்டு பேரும் நல்லா தூங்கிட்டு இருந்தாங்க. திடீர்னு ஒருத்தி மட்டும் என்னனு தெரியல கத்தி அழுக ஆரம்பிச்சிட்டா. அவ பக்கத்துல இருந்தா இவளும் உடனே அந்த சவுண்டை கேட்டு அழ ஸ்டார்ட் பண்ணிடுவா. அதான் நான் மெதுவா இவளை தூக்கிட்டு வந்துட்டேன்.
நீங்க இவ தூங்கி எந்திரிக்கிற வரைக்கும் இவளை இங்க வச்சு பாத்துக்குறீங்களா? நான் போய் அழுதுட்டு இருக்கிறவளை சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறேன்.” என்று கேட்டபடி தேன்மொழியின் அருகில் சென்றாள். உடனே திரும்பி அவளைப் பார்த்த தேன்மொழி “ஓகே ஓகே நான் இவளை பாத்துக்குறேன். நீங்க போய் அழுகிற பாப்பாவ பாருங்க.” என்று ஜனனியிடம் சொல்லிவிட்டு லைனில் இருந்த உதயாவிடம் “ஓகே நம்ம ஈவினிங் மீட் பண்ணலாம். இப்ப நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன். உனக்கு ஹவுஸ் வார்மிங் இன்விடேஷன் ரெடியான அதுக்கப்புறம் சென்ட் பண்றேன் பாய்!” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தாள்.
அவள் தன் அண்ணனுடன் சேர்ந்து ஈவினிங் அவுட்டிங் செல்லப் போகிறாளா? என்று ஜனனி கேட்க நினைத்தாலும் அங்கே அவள் குழந்தை அழுது ஊரை கூட்டிக் கொண்டு இருப்பது அவள் மண்டையில் ஓடிக் கொண்டே இருந்ததால், பால்பாட்டிலை தேன்மொழியின் கையில் கொடுத்துவிட்டு “அவ அழுதா பாலை கொடுத்து தூங்க வச்சிருங்க. இவங்க ரெண்டு பேரும் தூங்குற டைம்ல மட்டும் தான் நான் ரெஸ்ட் எடுக்க முடியும். நைட்டு ஃபுல்லா மாறி மாறி இரண்டு பேரும் அழுதுகிட்டே இருந்தாங்க. என்னால தூங்கவே முடியல. ப்ளீஸ் அண்ணி இன்னைக்கு மட்டும் இவளை நீங்க பாத்துக்கோங்க.” என்றாள்.
“எதுக்கு ப்ளீஸ் எல்லாம் சொல்றீங்க ஜனனி? எனக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும். இப்படி க்யூட்டா இருக்கற பாப்பாவ பாத்துகிட்டே இருக்கிறது எவ்ளோ ஜாலியா இருக்கும் தெரியுமா? நான் தினமும் வீட்டில சும்மா தானே இருக்கேன்.. நீங்க வேணும்னா நைட்டு ஃபுல்லா உங்க பேபிஸ் ரெண்டு பேரையும் பார்த்துக்கோங்க. மார்னிங் அர்ஜூன் வெளிய கிளம்பி போனதுக்கு. அப்புறமா என் கிட்ட கொண்டு வந்து விட்டுடுங்க நான் பாத்துக்குறேன். சித்தார்த், ஆருத்ரா ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு போய்ட்டாங்கன்னா எனக்கு வீட்ல தனியா இருக்க ரொம்ப போர் அடிக்கும்.” என்று தேன்மொழி சொல்ல, “சீக்கிரம் உங்களுக்கும் இந்த மாதிரி ஒரு குட்டி பேபி பொறந்திருச்சுன்னா, அப்புறம் நீங்களும் என்னை மாதிரி பிஸி ஆயிடுவீங்க அண்ணி. அதுவரைக்கும் நீங்களே என் பேபிஸ் ரெண்டு பேரையும் பார்த்துக்கோங்க. இவங்கள வச்சு ட்ரெய்னிங் எடுத்துக்கோங்க. ஓகே, நான் போய் அவ என்ன பண்றான்னு பார்க்கிறேன் பாய்! இவளை சமாளிக்க முடியலேன்னா எனக்கு கால் பண்ணுங்க. நான் உடனே வந்து தூக்கிட்டு போறேன்.” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள் ஜனனி.
அவள் அப்படி சொன்ன பிறகு தன் முன்னே அழகாக தூங்கிக் கொண்டு இருந்த பிஞ்சு குழந்தையின் முகத்தை ஆசையுடன் பார்த்த தேன்மொழி “எனக்கும் இந்த மாதிரி ஒரு குழந்தை பிறக்குமா? அதுவும் இவ்ளோ சீக்கிரமாவா? அம்மாவும் சரி அத்தையும் சரி சீக்கிரம் எனக்கு குழந்தை பிறக்கணும்னு தான் சொல்லிட்டு இருக்காங்க. ஆனா இதுவரைக்கும் அர்ஜுன் குழந்தை வேணும்னு எல்லாம் பெருசா எதுவும் சொன்னதே இல்லையே!
ஒருவேளை ஆல்ரெடி ரெண்டு குழந்தைங்க இருக்காங்க இன்னொன்னு எதுக்குன்னு கூட நினைக்கலாம். பட் நிறைய குழந்தை பெத்துக்கிட்டா வளர்க்க முடியாதுன்னு நினைச்சு ஃபீல் பண்றவங்க அப்படி யோசிக்கலாம். இங்க அந்த பிரச்சனையே இல்லையே.. வீட்ல நிறைய பேர் இருக்காங்க. யார் வேணும்னாலும் குழந்தையை பாத்துக்குவாங்க. அர்ஜுன் மைண்ட்ல என்ன இருக்குனு தான் தெரியல.
பாக்கலாம் நம்ம என்ன நினைச்சாலும் கடவுள் நினைக்கிறது தானே நடக்கும்.. என் லைஃப்ல அப்படி ஒரு மேஜிக் நடந்தா நல்லா இருக்கும்னு தான் தோணுது. என்ன தான் சித்தார்த்தும், ஆருத்ராவும் என் அம்மானு கூப்பிட்டாலும், ஒரு குழந்தை வைத்துல வந்ததுக்கு அப்புறமா டெலிவரி ஆகிற வரைக்கும் அந்த எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருக்கு.. குறைந்த குழந்தையா இருக்கும்போது அதை நம்ம வளர்க்கிறப்போ அதுக்கும் நமக்கும் இருக்கிற பாண்டிங் எப்படி இருக்கும்னு எல்லாம் வளர்த்து பார்த்தாலே தெரியும்! அதுக்கு நானே குழந்தை பெத்துக்கிட்டா தான் உண்டு.” என்று நினைத்தாள்.
அந்த குழந்தையை பார்க்க பார்க்க அவளுக்கு தானும் ஒரு குழந்தைக்கு தாயாகி தாய்மையின் பூரிப்பை அனுபவித்து பார்க்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது. அதனால் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை பார்த்து கொஞ்சியபடி அதன் அருகில் படுத்துக் கொண்ட தேன்மொழி நேற்று இரவு முழுவதும் அவள் அர்ஜுனை பற்றி யோசித்துக் கொண்டு சரியாக தூங்காததால் தன் கண்களை மூடி உறங்க தொடங்கினாள்.
அப்போது அவளை தேடிக் கொண்டு அங்கே வந்த சித்தார்த் அவள் தனது அத்தை மகளுடன் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு “நான் இன்னைக்காவது மம்மி கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு நினைச்சேன். பட் நான் தூங்கி எந்திரிச்சு வரும்போது மம்மி தூங்கிட்டு இருக்காங்களே! இப்ப என்ன பண்றது? நம்ம போய் அவங்கள எழுப்பினா, அவங்களையும் பாப்பாவையும் டிஸ்டர்ப் பண்ண மாதிரி ஆயிடும்.” என்று நினைத்து வாடிய முகத்துடன் தேன்மொழியை பார்த்துக் கொண்டிருந்தான்.
சியாவை அர்ஜுன் மற்றவர்களுடன் சேர்ந்து தோட்டத்தில் புதைப்பதை அவன் தன் கண்களால் மாடியில் இருந்து பார்த்தான். அதனால் உண்மையில் தன் அம்மா இறந்து விட்டதாக நம்பிக் கொண்டிருந்த சித்தார்த் இனி ஒருபோதும் அவள் தன்னை தேடி வர போவதில்லை என்று நினைத்தான். ஆனால் மீண்டும் இப்போது அவள் தன் முன்னே இருக்கிறாள் என்பதை முதலில் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இப்போது தன் அம்மாவை அமானால் பிரிந்து இருக்க முடியவில்லை. ஒருவேளை தான் அவளை விட்டு தூரமாக இருந்தால் மீண்டும் தன் அம்மா தன்னை விட்டு ரொம்ப தூரம் சென்று விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவனுக்குள் இருந்தது. அதனால் தன் அம்மா தங்களுடன் இல்லாத அந்த இரண்டு வருடங்களை பற்றி நினைத்து பார்த்த சித்தார்த் கலங்கிய கண்களுடன் சென்று தேன்மொழியை அணைத்துக் கொண்டு அவள் அருகில் படுத்துக் கொண்டான்.
ஒரு குட்டி கை தன் மீது வந்து விழுவதை தூக்கத்திலும் உணர்ந்த தேன்மொழி வழக்கமாக அவள் இதுபோல ஆருத்ராவுடன் தூங்கி பழகி இருப்பதால் சித்தார்த் பக்கம் திரும்பி அவனை அணைத்துக் கொண்டு படுத்துக் கொண்டாள். அதனால் மகிழ்ந்த சித்தார்த் தனக்குள் “லவ் யூ மம்மி” என்று சொல்லிக் கொண்டான். அவன் தேன் மொழியை தன் சொந்த அம்மாவாக பார்த்துக் கொண்டு இருப்பதால், அவளுடன் இருப்பது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
காலையில் இருந்து தேன்மொழியை பார்க்காததால் அவளை தேடிக் கொண்டு அந்த ரூமிற்கு வந்த ஜானகி சித்தார்த் தேன்மொழியுடன் தூங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து மகிழ்ந்தாள். “ஆருத்ரா எப்படியோ இவ கூட செட்டாயிட்டா. ஆனா இந்த சித்தார்த் பையன் மட்டும் தேனு கூட ஒட்டவே மாட்டேங்குறானேன்னு எனக்கு கவலையா இருந்துச்சு. இப்ப தான் மனசுல இருந்த பாரமே இறங்கின மாதிரி இருக்கு. ஆனா ஒரே ஒரு கவலை என்னன்னா, இந்த புள்ளைங்க ரெண்டும் தேன்மொழிய சியான்னு நினைச்சு பாசமா பழகிட்டு இருக்காங்க. இவங்க வளரும்போது சியா செத்துப் போயிட்டா. இவங்க கூட இருக்கிறது தேன்மொழின்னு தெரிஞ்சா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோ தெரியல! தேன்மொழியோட உண்மையான பாசம் கண்டிப்பா உங்களுக்கு புரியும்னு நான் நம்புறேன்.” என்று நினைத்தாள்.
பின் தான் கண்ட இந்த அழகிய காட்சியை தன் மகனிடம் காட்ட வேண்டும் என்று நினைத்து தூங்கிக் கொண்டு இருப்பவர்களை அப்படியே ஃபோட்டோ எடுத்து அர்ஜுனிற்க்கு அனுப்பி வைத்தாள் ஜானகி.
வெகு நேரமாக தூங்கிக் கொண்டு இருந்த தேன்மொழி குழந்தை அழுத சத்தத்தை கேட்டு கண் விழித்தாள். ஜனனி கொடுத்துவிட்டு சென்ற பால்பாட்டினை எடுத்து குழந்தைக்கு கொடுத்து அதை சமாதானப்படுத்த தொடங்கினாள். அவள் சத்தம் கேட்டு அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த சித்தார்த் கண் விழித்தான். அழுது கொண்டிருந்த குழந்தை தேன்மொழி பால் கொடுத்தவுடன் குடித்துவிட்டு அமைதியாகிவிட்டது. ஆனால் மீண்டும் தூங்கவில்லை. அதனால் தேன்மொழி குழந்தையை தூக்கிக் கொண்டு அதனுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்க, சித்தார்த்தும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
ஆருத்ராவைப் போல தேன்மொழி சித்தார்த்தையும் தன் குழந்தையாக தான் நினைத்தாள். ஆனால் அவன் ஆருத்ரா அளவிற்கு தன்னிடம் குளோசாக இருக்காதால் தனக்கும் அவனுக்கும் நடுவில் ஒரு கேப் இருக்கிறது என்று நினைத்தாள். இன்று அந்த கேப் கொஞ்சம் கொஞ்சமாக மறைவதை போல தேன்மொழி சித்தார்த் இருவருமே உணர்ந்தார்கள். “மம்மி மம்மி” என்று அவன் அவளை அழைக்கும் போது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.
அப்படியே அன்றைய நாள் அவர்களுக்கு இனிமையாக கிடக்க, வழக்கம்போல தன்னை பற்றி மறந்துவிட்டு தேன்மொழி ஏதாவது காரணம் சொல்வாள் என்று நினைத்த உதயா “ஓய் நான் ஆபீஸ்ல பர்மிஷன் சொல்லிட்டு கிளம்பிட்டேன். வீட்டுக்கு போயிட்டு ரெஃப்ரெஷ் ஆயிட்டு வந்துருவேன். நீ என்ன பண்ற ரெடியா?” என்று கேட்டு அவளுக்கு கால் செய்தான். “ம்ம்.. நான் ரெடி தான். நீ எங்க வரேன்னு சொல்லு. நான் டைரக்டா அங்க வந்துடறேன். எப்படியும் நான் கார்ல தான் வருவேன். சோ நீ பைக்ல வராம ஆட்டோ புடிச்சு வந்துரு.” என்று தேன்மொழி சொல்ல, “ஐயையோ ரொம்பத் தான்.. அப்படியே இவ கார்லயே பிறந்து கார்லயே வளர்ந்தாளோ! கார் இல்லாம மேடம் டிராவல் பண்ண மாட்டாங்களா?” என்று நினைத்து சலித்துக் கொண்ட உதயா “நான் வடபழனி முருகன் கோயிலுக்கு வந்துடுறேன். நீயும் அங்க வந்துரு. அப்புறம் நீ எங்க சொல்றியோ நம்ப அங்க போகலாம்.” என்றான். சரி என்று விட்டு அந்த அழைப்பை துண்டித்தாள் தேன்மொழி.
- மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலி
ப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-107
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.