மஞ்சம்-105

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
“எப்படியும் அவங்களுக்கு தெரிய போகுது தானே.. உங்கள பார்த்தா கண்டுபிடிச்சிடுவாங்க. அப்புறம் ஏன் இப்படி அவங்க கூட hide and seek விளையாடிட்டு இருக்கீங்க chief?” என்று அர்ஜுனிடம் கேட்டான் பிரிட்டோ. “எவ்வளவு நேரம் முடியுதோ அவ்ளோ நேரம் மறைக்க வேண்டியது தான். கொஞ்ச நேரத்துல தானா சரியாயிடுச்சுன்னா நல்லது தானே! நம்மளோட பார்ட்னர்ஸ் கம்பெனி இங்க நிறைய இருக்கு. இதுவரைக்கும் அதுல எல்லாத்துலயும் இன்வெஸ்ட் பண்ணதோட சரி. எதிலயும் நம்ம டைரக்ட்டா போய் விசிட் பண்ணவே இல்ல. இன்னைக்கு இன்ஸ்பெக்சன் போகலாம்.” என்றான் அர்ஜுன்.

“ஓகே சீஃப்!” என்ற பிரிட்டோ சென்னையில் உள்ள அவர்களது நிறுவனத்திற்கு கீழ் வரும் மற்ற நிறுவனங்களை பார்வையிடுவதற்காக அர்ஜுனை அழைத்து சென்றான். அவர்கள் இருவரும் காரில் சென்று கொண்டு இருக்கும் போது, அர்ஜுனிற்க்கு கால் செய்தாள் தேன்மொழி.

“பார்றா.. அதுக்குள்ள நான் வீட்ல இல்லைன்னு கண்டுபிடிச்சிட்டாளா இவ?” என்று நினைத்த அர்ஜுன் இப்போதும் அவன் அவளிடம் சரியாக பேசவில்லை என்றால் சாந்தமாக இருக்கும் தேன்மொழி பத்ரகாளியாக உடனே மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று நினைத்து உடனே அவள் காலை அட்டென்ட் செய்து “ஹலோ” என்றான்.

“என்ன நீ எல்லாத்தையும் வேணும்னே பண்ணிட்டு இருக்கியா அர்ஜூன்? ஒழுங்கா உண்மையை சொல்லு.. என் கிட்ட இருந்து எதையாவது மறைக்கிறியா? எதுக்கு என் கண்ணுல படாம ஓடி புடிச்ச கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்க? உனக்காக நேத்து நைட் அவ்ளோ நேரம் நான் வெயிட் பண்ணேன்‌. நான் தூங்குனதுக்கு அப்புறமா நீ வந்திருக்க. சரி மார்னிங் உன் கிட்ட பேசிக்கலாம்னு நினைச்சா, ரொம்ப நேரம் தூங்குற மாதிரி சீன் போட்டுட்டு நான் இந்த பக்கம் எந்திரிச்சு வந்த உடனே யார்கிட்டயும் சொல்லாம நீ பாட்டுக்கு பிரிட்டோம கூட்டிட்டு கிளம்பிட்ட!” என்று அவனை அதற்கு மேல் எதுவும் பேசவிடாமல் தொடர்ந்து கேள்விகளாக கேட்டுக் கொண்டே இருந்தாள் தேன்மொழி.

“போச்சு இவ திட்ட ஸ்டார்ட் பண்ணிட்டா.. இனிமே இவள நிறுத்துறது கஷ்டம்.” என்ற நினைத்த அர்ஜுன் உடனே பதிலுக்கு அவளிடம் எதுவும் பேசாமல் தொடர்ந்து லொக் லொக் என்று இரும்பி கொண்டே இருந்தான். அவன் அப்படி செய்ததால் அவனுக்கு ஏதோ உடல்நிலை சரியில்லை என்று நினைத்த தேன்மொழி “அய்யோ அர்ஜுன் என்ன ஆச்சு? ஏன் இப்படி இரும்பிக்கிட்டே இருக்க? நைட்டு வீட்டுக்கு லேட்டா வந்ததுக்கு அப்புறம் ஜிலுஜிலுனு இருக்கிற தண்ணில குளிச்சியா? அது சேராம சளி புடிச்சிருச்சா?” ஈ
என்று பதட்டத்துடன் கேட்டாள்.

“சூப்பர் பிளான் வொர்க் அவுட் ஆகுது!” என்று நினைத்து சந்தோஷப்பட்ட அர்ஜுன் “ஆமா ஆமா.. ஹீட்டர் போடாமலேயே மார்னிங் குளிச்சிட்டேன். அதான் சேரல. நான் இங்க சென்னை வந்து ரொம்ப நாளாச்சு ஹனி. அதான் இங்க நம்ம கூட டையப் பண்ணி இருக்கிற கம்பெனிஸ் கூட ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணி இருக்கேன்.

அது முடிஞ்ச உடனே இன்ஸ்பெக்ஷன் போலாம்னு இருக்கேன். எனக்கு ஒர்க் இருக்கு. அதான் தூங்கி எந்திரிச்ச உடனே கிளம்பி வந்துட்டேன். உன் கிட்ட சொல்லிட்டு வரனும் தான் நினைச்சுக்கிட்டே இருந்தேன் பேபி. நான் கிளம்பும்போது கிளைன்ட் ஒருத்தர் கால் பண்ணாரு. சோ அவர் கிட்ட பேசிக்கிட்டே வந்ததுனால உன் கிட்ட சொல்லிட்டு வர மறந்துட்டேன்.” என்று ஒரு பிட்டை போட்டான்.

அவன் சொன்ன விதத்தில் அதை உண்மை என்று நம்பிய தேன்மொழி “ஓஓ.. ஓகே ஓகே, அது சரி.. நேத்து நைட்டு எங்க போன? வீட்டுக்கு வரதுக்கு எதுக்கு அவ்ளோ நேரம் ஆச்சு? நீங்க ரெண்டு பேரும் எங்கயாவது நைட் கிளப் போய் சுத்திட்டு வந்தீங்களா? எங்கய்யா இருந்தாலும் என் கிட்ட சொல்லிட்டு போக வேண்டியது தானே! இங்க தான் போக போறேன்னு என் கிட்ட சொன்னா, நான் என்ன போக வேண்டாம்னா தான் சொல்ல போறேன்?” என்று கேட்டு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தாள்.

“அடேங்கப்பா இவ கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது போல இருக்கு. மறக்காம எல்லாத்தையும் கொஸ்டின் பண்றா!” என்று நினைத்த அர்ஜுன் “அதுவா.. நீ சொன்ன மாதிரி நாங்க ரெண்டு பேரும் நைட் கிளப்புக்கு தான் போனோம். பட் நீ நினைக்கிற மாதிரி என்ஜாய் பண்றதுக்கு இல்ல. இங்க ப்ரீமியம் லெவல்ல எந்த கிளப்பும் இல்லைன்னு பிரிட்டோ நேத்து என் கிட்ட சொல்லிட்டு இருந்தான். அதான் பேசாம இங்க ரெண்டு மூணு நைட் கிளப் ஸ்டார்ட் பண்ணா என்னன்னு யோசிச்சிட்டு இருந்தோம். லோக்கல்ல இருக்கிற கிளப் எல்லாத்தையும் விசிட் பண்ணி பார்த்தோம். அப்படியே நாங்க ரெண்டு பேரும் அதை பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்ததுல டைம் போனதே தெரியல! உனக்கு நான் சொல்றதுல நம்பிக்கை இல்லனா நீ வேணா பிரிட்டோ கிட்ட கேட்டு பாரேன்!” என்றான்.

“சீஃப் என்ன எதுக்கு இப்ப தேன்மொழி மேடம் கிட்ட கோத்து விடுறீங்க?” என்று பிரிட்டோ மெல்லிய குரலில் கேட்க, “டேய் வாய மூடிக்கிட்டு சும்மா இரு டா!” என்று அவனிடம் மெல்லிய குரலில் சொன்ன அர்ஜுன் ‌“என்ன ஹனி பேபி சைலன்டா இருக்க? பிரிட்டோ கார் டிரைவ் பண்ணிட்டு இருக்கான். நான் ஃபோனை அவன் கிட்ட குடுக்கிறேன். நீ பேசுறியா? நீயே நாங்க எங்க இருந்தோம்னு அவன் கிட்ட கேளு.” என்றான்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் உன்னை நம்புறேன். அதுக்காக நீ இப்படி அடிக்கடி என் கிட்ட சொல்லாம எங்கையாவது கிளம்பி போய்கிட்டே இருக்க கூடாது. வெளிய போனா வீட்ல இருக்கவங்க கிட்ட சொல்லிட்டு போகணும் ஓகேவா?” என்று கேட்க, “ம்ம்.. Sure baby! எங்க அம்மா கிட்ட சொல்றனோ இல்லையோ கண்டிப்பா உன் கிட்ட சொல்லிட்டு தான் போவேன் ப்ராமிஸ்.” என்றான் அர்ஜுன்.

“ம்ம்.. சாப்டியா?” என்று அவள் கேட்க, “இன்னும் இல்ல, ஆபீஸ் போய் தான் சாப்பிடணும். அங்கே கேன்டீன் இருக்கும். சோ நோ ப்ராப்ளம். நீ போய் சாப்பிடு. எனக்காக வெயிட் பண்ணாத. நான் வர்றத்துக்கு நைட் ஆயிடும்.” என்றான் அர்ஜுன். அவன் இரவு தான் திரும்ப வருவான் என்று சொல்வதைக் கேட்டவுடன் தேன்மொழியின் முகம் வாடி விட்டது.

“இந்த ஆபீஸ் வொர்க் எல்லாத்தையும் ஒரே நாள்ல தான் பார்க்கணுமா? டெய்லியும் கொஞ்சம் கொஞ்சமா பார்த்து ஆகாதா? நான் உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நினைக்கும்போது எல்லாம் நீ என்னை விட்டு தூரமாவே போயிட்டு இருக்க அர்ஜுன். நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.

எனக்கு உன் கூட இருக்கணும். உன் கிட்ட நிறைய பேசணும். என்ன தவிர உன்ன பத்தி வேற யாருக்கும் அதிகமா தெரியாது என்ற அளவுக்கு உன்னை நான் நிறைய தெரிஞ்சுக்கணும். என் மனசுல நான் என்ன நினைக்கிறேன்னு எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லணும்.

ஆனா எல்லாத்தையும் கரெக்டா ஹேண்டில் பண்ற உனக்கு என் கூட ஸ்பென்ட் பண்ண டைம் இல்லல்ல! இதுக்காக கோபப்படுறதா இல்ல வருத்தப்படுறதான்னே தெரியல. எனக்கு கஷ்டமா இருக்கு. நாளைக்கு கிளாராவுக்கும் பிரிட்டோவுக்கும் மேரேஜ் நடக்க போகுது.

நீங்க என்னன்னா ஆபீஸ் வொர்க்ன்னு சுத்திட்டு இருக்கீங்க. நான் உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு ஆசைப்படுற மாதிரி தானே கிளாராவும் பிரிட்டோ கூட இருக்கணும்னு ஆசைப்படுவாங்க! அவர் வேறு எங்கேயாவது ஒர்க் பண்ணி இருந்தா கூட மேரேஜ்ன்னு சொல்லி ஒன் பிக் லீவு வாங்கிட்டு அந்த பொண்ணு கூட ஜாலியா இருப்பாரு.

உன் கூட சேர்ந்த பாவத்துக்கு அவரையும் கூட்டிகிட்டு நீ வெளிய சுத்திட்டு இருக்க. என்னமோ போ! எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. உன் இஷ்டம் போல என்னமோ பண்ணு.” என்று உடைந்த குரலில் தேன்மொழி சொல்ல, “இவ சொல்றதும் கரெக்ட் தான். நான் இவ கண்ணுல படக் கூடாதுன்னு ஓடி ஒளிஞ்சிட்டு இருக்கேன். என்ன தனியா விட முடியாம பிரிட்டோ என் கூடயே வந்துட்டு இருக்கான். சோ அவனுக்கும் கிளாராவுக்குமான குவாலிட்டி டைம் என்னால ஸ்பாயில் ஆகுது. வர வர மத்தவங்கள பத்தி நான் யோசிக்கிறதே இல்லை போல இருக்கு! சரி ஹனி பேபி! எனக்காக வெயிட் பண்ணு. நான் சீக்கிரம் வந்துருவேன்.” என்று நினைத்தான் அர்ஜுன்.

அவன் அமைதியாக இருந்ததால் “ஹலோ.. லைன்ல இருக்கியா?” என்று கேட்டாள் தேன்மொழி. “ம்ம்.. இருக்கேன்.” என்ற அர்ஜுன் சட்டென என நினைத்தானோ “சாரி ஹனி பேபி!” என்றான். “எதுக்கு சாரி?” என்று அவள் கேட்க, “எல்லாத்துக்கும் தான். டுடே நைட் நான் சீக்கிரம் வர ட்ரை பண்றேன். I miss you! Bye baby love you!” என்ற அர்ஜூன் ஃபோனிலேயே அவளுக்கு ச்ச் என்று முத்தம் கொடுத்துவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான்.

“என்ன சீஃப் கொஞ்சம் கூட யோசிக்காம லைனா பொய் சொல்றீங்க! நம்ம எப்ப சென்னையில நைட்ல ஸ்டார்ட் பண்றத பத்தி டிஸ்கஸ் பண்ணோம்? தேன்மொழி மேடம் எப்ப ஸ்டார்ட் பண்ண போறீங்க.. பிளான் எல்லாம் ரெடியானு கேட்டா என்ன சொல்றது?” என்று பிரிட்டோ கேட்க, “அதெல்லாம் ஒரு விஷயமா? சொன்ன பொய்யை உண்மையாகிற வேண்டியது தான். சென்னையில நைட் கிளப் ஸ்டார்ட் பண்றது எல்லாம் ஒரு மேட்டரே இல்ல. புதுசா நம்மளே கட்டுனாதான் லேட் ஆகும். ‌ ஆல்ரெடி ஃபேமஸா இருக்கிற ஏதாவது ஒரு கிளப்ப வாங்கிரு. அதை நம்ம ஆல்டர்னேட் பண்ணிக்கலாம்.” என்றான் அர்ஜுன்.

“பார்றா.. மேடம்காக நீங்க இந்த அளவுக்கு யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா? எனக்கு உங்கள மேரேஜ்க்கு முன்னாடி நீங்க சியா மேடமை லவ் பண்ணிட்டு இருக்கும்போது பார்த்தப்ப இருந்த மாதிரியே இருக்கு. எப்படி லவ் பண்றதுன்னு நான் உங்கள பாத்து தான் கத்துக்கிட்டேன் சீஃப்.

எனக்கு இருக்கிறது எல்லாம் ஒரே ஒரு ஆசை தான். அப்படி வாழனும் இப்படி வாழனும்னு எல்லாம் இல்ல. கடைசி வரைக்கும் நான் என் கிளாரா கூட வாழ்ந்தா போதும். அவளுக்கு எதுவும் ஆகக் கூடாது. எனக்கு அது போதும்.” என்று உற்சாகமாக தொடங்கி இறுதியில் தன் காதல் வாழ்க்கையை பற்றி நினைத்து சோகமாக முடித்தான் பிரிட்டோ.

உடனே ஆதரவாக அவனது தோள்களில் தட்டிய அர்ஜுன் “நம்ம கிளாராவுக்கு எதுவும் ஆகாது. நான் ஆகவும் விட மாட்டேன், டோன்ட் வரி. உங்க ‌மேரேஜ் முடியட்டும். கிளாராவோட ட்ரீட்மென்ட் பத்தி ஆல்ரெடி நம்ம டிசைட் பண்ண மாதிரி டாக்டர் கிட்ட டிஸ்கஸ் பண்ணலாம்.” என்று சொல்ல, கலங்கிய கண்களுடன் சரி என்று தலையாட்டினான் பிரிட்டோ.

- மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காம
ல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-105
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi