அர்ஜுன் தேன்மொழியை அணைத்துக் கொண்டு நிம்மதியாக படுத்து உறக்கத் தொடங்கினான். அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற தருணம், அந்த வீட்டு வாசலில் அவனுடைய குடும்பத்தினர்கள் காரில் வந்து இறங்கினார்கள். அவர்கள் வருவதைப் பற்றி ஏற்கனவே பிரிட்டோ செக்யூரிட்டி டீமிடம் இன்பார்ம் செய்து வைத்திருந்ததால், மற்றவர்களை எழுப்பி தொந்தரவு செய்யாமல் வாசலில் பாதுகாப்பிற்காக இருந்தவர்கள் ரஷ்யாவில் இருந்து வந்தவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று தங்க வைத்தார்கள்.
அரை தூக்கத்தில் எழுந்து வந்திருந்த சித்தார்த் “சித்தப்பா டாடி ரூம் எங்க இருக்கு? நான் போய் மம்மி கூடியும் அவர் கூடையும் தூங்குறேன்.” என்று தனது கண்களை தேய்த்தபடி கேட்க, “அவங்க தூங்கிட்டு இருப்பாங்க சித்தார்த். இப்ப போய் அவங்கள நீ டிஸ்டர்ப் பண்ணாத. நீ இன்னைக்கு நைட் எங்க கூட வேணா தூங்கு. நம்ம ரூம்ல எக்ஸ்ட்ரா பேட் போட சொல்லலாம். நீயும் மகிழனும் ஒன்னா தூங்குங்க.” என்ற ஆகாஷ் அவனை அழைத்துக் கொண்டு யாரும் தங்களை டிஸ்டர்ப் செய்யக் கூடாது என்பதற்காக இரண்டாவது மாடியில் ஒரு அறையை தேர்வு செய்து தனது மகன் மற்றும் மனைவியுடன் சித்தார்த்தையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
பயணக் களைப்பில் இருந்ததால் மற்றவர்களும் ஆளாளுக்கு ஒரு ரூமை எடுத்துக் கொண்டு சென்று படுத்து விட்டார்கள். தூங்கிக் கொண்டு இருந்த கிளாராவின் அருகில் படுத்திருந்த பிரிட்டோ “வெட்டிங் டிரஸ்ல நீ எப்படி இருக்கனு பாக்குறதுக்கு நான் ரொம்ப கியூரியஸா இருக்கேன் கிளாரா. நம்ம மேரேஜ் நடக்கிறதுக்காக நீயும் நானும் ரொம்ப வருஷமா வெயிட் பண்ணிட்டு இருந்தோம். இப்ப அது நடக்கப்போகுது. அதை நினைச்சு சந்தோஷமா இருந்தாலும், என்னவோ தெரியல எனக்குள்ள ஏதோ ஒரு கவலை இருந்துகிட்டே இருக்கு. நீ என் கூட இருக்கும்போது கூட, என்னவோ நீ என்ன விட்டு கொஞ்சம் கொஞ்சமா தூரமா போயிட்டு இருக்குற மாதிரி ஒரு ஃபீல் வருது.
ப்ளீஸ் பேபி.. என்னால தாங்க முடியாத அளவுக்கு ஒரு கஷ்டத்தை குடுத்துட்டு என்னை தனியா விட்டுட்டு போயிடாத. உனக்கு அப்படி என்ன தான் அவசரம்? இந்த விஷயம் தெரியறதுக்கு எல்லாம் முன்னாடியும், நீயும் நானும் லவ் பண்ணிட்டு இருந்தாலும் ஒன்னா சேர்ந்து சந்தோஷமா வாழாம சும்மா வீம்புக்கு சண்டை போட்டுட்டு ஜாலியா ஃபன் பண்ணிட்டு இருந்தோம்!
உனக்கு இப்படி ஆனதுனால அதுக்கப்புறம் நீ என்ன விட்டு விலகிப் போகணும்னு டிசைட் பண்ணி உன்னையும் கஷ்டப்படுத்திக்கிட்டு என்னையும் டார்ச்சர் பண்ணிட்டு இருந்த! இப்ப தான் எல்லாமே கரெக்டா நடந்துட்டு இருக்கு. எப்பயும் சொதப்பர மாதிரி இந்த தடவையும் சதைப்பிடாத. எனக்கு அத தாங்குற ஸ்ட்ரென்த் இல்ல கிளாரா.” என்று அவள் முகத்தை பார்த்து தனக்குள் பேசிக் கொண்டிருந்தான்.
அந்நேரம் அவள் உடல் நிலையை பற்றி யோசிக்கும்போது துக்கம் அவன் தொண்டையை அடைக்க, அவனையும் இது அவன் கண்களில் இருந்து அருவி போல கொட்டியது கண்ணீர். வெளியில் இறுக்கமாக எதையும் தாங்க கூடியவனாக ஒரு கம்பீரமான ஆளாக இருந்தாலும், எந்த ஒரு ஆணும் தனக்கு மிகவும் பிடித்த பெண்ணை பிரிய வேண்டும் என்ற சூழ்நிலைக்கு வந்தால் மட்டும் உடனே தாயைப் பிரியக் கூடாது என்று நினைத்து அழுகும் குழந்தையாகி விடுகிறான். பிரிட்டோவும் அப்படித் தான்.
அவன் தூங்கும்போது கூட, கிலாராவை இழுத்து தன் மீது தூக்கிப் போட்டுக் கொண்டு அவளுடைய இதயத்துடிப்பை உணர்ந்தபடி தன் கண்களை மூடினான் பிரிட்டோ. அவன் வாழ்க்கையின் ஒட்டுமொத்த சந்தோஷமாக இருக்கும் கிளாராவை ஒருபோதும் அவன் இழக்கத் தயாராக இல்லை.
காலை 10 மணி அளவில் அர்ஜுன் தன் கண்களை திறந்து பார்க்கும் போது, அப்போதும் தேன்மொழி அவனை அணைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டு இருப்பதை கவனித்தான். அது அவனுக்கு வசதியாக போய்விட, “இவ கண்ணுல படாம சீக்கிரம் எந்திரிச்சு குளிச்சு கிளம்பி வெளிய போயிடனும்.” என்று நினைத்து மெதுவாக தன் மீது இருந்த அவளுடைய காலையும் கையையும் எடுத்து விட்டான்.
அதில் கொஞ்சம் நகர்ந்து படுத்த தேன்மொழி அர்ஜுன் சரியாக எழுந்து கொள்ளும்போது மீண்டும் அவன் மீது தன் கையை தூக்கி போட்டாள். “அட இவ கிட்ட இருந்து தப்பிக்கிறது எவ்வளவு கஷ்டமா இருக்கு!” என்று நினைத்து பெருமூச்சு விட்ட அர்ஜுன் அவளது கையை மெதுவாக எடுத்துக் கொண்டு இருக்க, தன் காலை தூக்கி அவன் மீது போட்டாள் தேன்மொழி.
உடனே “போச்சு டா!” என்று நினைத்தவன் அவள் தூக்கம் கலையாமல் எப்படி அவளை நகர்த்திவிட்டு எழுந்து செல்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது சரியாக தேன்மொழியின் மொபைல் ஃபோன் ஒலித்தது. அதனால் துடிக்கிட்டு எழுந்து அமர்ந்த தேன்மொழி தன் அருகில் அர்ஜுன் படித்திருப்பதை கவனிக்காமல் தனது மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்தாள்.
அனிதாவிடம் இருந்து அவளுக்கு கால் வந்திருந்தது. அதை அட்டென்ட் செய்து தூக்க கலக்கத்தில் இருந்த தேன்மொழி “சொல்லு டி அனிதா.. என்ன இந்த டைம்ல கால் பண்ணி இருக்க?” என்று கேட்க, “எனது இந்த நேரமா? இப்ப டைம் என்னன்னு பாக்கலையா நீ? ஆல்ரெடி 10 ஓ கிளாக் ஆயிடுச்சு. இன்னும் ஆருத்ரா கிளாஸ்க்கு வரலையே... அதான் என்ன ஆச்சுன்னு கேட்கலாம்னு கால் பண்ணேன். இப்ப தான் தூங்கி எந்திரிக்கிறியா நீ?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“ஓ அவ்ளோ டைம் ஆயிடுச்சா? நான் அது தெரியாம நல்லா தூங்கிட்டேன் அனிதா. நாங்க முன்னாடி எங்க வீட்ல இருக்கும்போது அம்மா சீக்கிரம் எழுந்துருவாங்க. என்னையும் எழுப்பி விட்ருவாங்க. நாங்க இப்ப புது வீட்ல இருக்கோம். சோ யாரும் என்னை எழுப்பல, நல்லா தூங்கிட்டேன். ஆருத்ரவும் நல்லா தூங்கிட்டு இருக்கா. இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு நாங்க கொஞ்சம் பிஸியா இருப்போம். அவளால கிளாசுக்கு வர முடியாது. உன் கிட்ட சொல்லலாம்னு இருந்தேன் சாரி மறந்துட்டேன்." என்று சொல்ல,
“என்ன டி சொல்ற? கல்யாணம் ஆனதுக்கப்புறம் எப்படி உன்னால இவ்வளவு நேரம் ஜாலியா தூங்க முடியுது? உன் ஹஸ்பண்ட் உன்னை எதுவும் கேட்க மாட்டாரா?” என்று ஆர்வம் குறையாமல் கேட்டாள் அனிதா. “என் ஹஸ்பண்ட்..!!” என்று எதையோ சொல்ல தன் வாயை திறந்த தேன்மொழி அப்போது தான் தன் அருகில் வந்து படுத்து இருக்கும் அர்ஜுனை கவனித்தாள்.
“இவர் எப்ப வீட்டுக்கு வந்தாரு?” என்று நினைத்து அவள் அர்ஜுனிடம் ஏதோ கேட்பதற்குள், அவள் தன்னை பார்த்து விடக் கூடாது என்பதற்காக சட்டென திரும்பி படுத்து கொண்டான் அவன். லைனில் இருந்த அனிதா “ஹலோ தேன்மொழி! நான் பேசுறது கேக்குதா?" என்று கேட்க, “ம்ம்.. கேக்குது கேக்குது.. என் மாமியார் வீட்ல என் ஹஸ்பண்ட் மட்டும் இல்ல.. நான் எவ்ளோ நேரம் தூங்கினாலும் யாரும் ஏன்னு கேக்க மாட்டாங்க. என்னை எழுப்பி டிஸ்டர்ப் பண்ணவும் மாட்டாங்க. நான் எங்க அம்மா கூட இருந்தா தான் அவங்க ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க. இங்கே நான் ஃபுல்லாவே ஃப்ரியா தான் இருப்பேன். எல்லா வேலையும் செய்றதுக்கு ஆளுங்க இருக்காங்க. அப்புறம் நான் தூங்கி எந்திரிச்சு மட்டும் சீக்கிரமா போய் அங்க என்ன பண்ண போறேன் சொல்லு!” என்று கேட்டாள் தேன்மொழி.
“பார்றா இப்படி ஒரு யாருக்கு கிடைக்கும்? சின்ன வயசுல இருந்தே இவளும் நானும் ஒரே மாதிரி தான் வளர்ந்தோம். இவ இப்போதைக்கு நான் கல்யாணமே நான் பண்ண மாட்டேன்னு ஸ்கூலுக்கு வேலைக்கு போயிட்டு இருந்தா. இதுல எந்த கேப்ல இவளுக்கு இப்படி ஒரு பணக்காரர் மேல லவ் வந்துச்சோ தெரியல..
இவளுக்கு அவரைப் பிடிச்சதுல கூட ஆச்சரியம் ஒன்னும் இல்ல. அவர் கிட்ட அழகு, ஆஸ்தி அதிகாரம்ன்னு எல்லாம் இருக்கு! ஆனா இவ கிட்ட அப்படி ஸ்பெஷலா என்ன இருக்குன்னு இவளை அவர் எப்படி லவ் பண்றாரோ தெரியல!” என்று நினைத்து வழக்கம் போல தேன்மொழியை கண்டு பொறாமைபட்ட அனிதா “ஓகே தேன்மொழி நீ தூங்கு. நான் தான் தேவை இல்லாம கால் பண்ணி உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேன் நினைக்கிறேன். நீங்க ஃப்ரீயானதுக்கு அப்புறமா ஆருத்ராவ கிளாசுக்கு அனுப்புங்க. நான் வச்சிடறேன்.” என்று சொல்லிவிட்டு தன் அழைப்பை துண்டித்தாள்.
உடனே தனது மொபைல் ஃபோனை கீழே வைத்துவிட்டு தூங்கிக் கொண்டு இருந்த ஆருத்ராவை தட்டி எழுப்பிய தேன்மொழி “ஓய் ஆருத்ரா லேட் ஆகுது எந்திரி! பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுற டைம் ஆயிடுச்சு. உனக்கு தூக்கம் வந்துச்சுன்னா சாப்பிட்டு வந்து அப்பறமா தூங்கு." என்று சொல்ல, தூக்க கலக்கத்தில் இருந்த ஆருத்ரா வேறுபுறமாக திரும்பிப் படித்துக் கொண்டு “எனக்கு பசிக்கவே இல்ல. என்ன விடுங்க மம்மி ப்ளீஸ்.. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்.” என்று தன் கண்களை கூட திறக்காமல் சொன்னாள்.
“என்ன நீ எனக்கு மேல தூங்குற? டைமுக்கு சாப்பிடணும். எனக்கு இன்னும் தூக்கம் வருது! இருந்தாலும் நான் எந்திரிச்சன்ல! நீ வா நம்ப போய் ரெப்ரெஷ் ஆகிட்டு சாப்பிட்டுட்டு வந்துடலாம்.” என்ற தேன்மொழி ஆருத்ராவை பிடித்து இழுத்து எழுப்பினாள். சினிங்கியபடி தன் கண்களை கசக்கி கொண்டு எழுந்த ஆருத்ரா அர்ஜுனை பார்த்துவிட்டு “டாடி மட்டும் இன்னும் தூங்கறாரு.. நீங்க அவரை எதுவும் சொல்லல.. என்னை மட்டும் ஏன் எழுப்பி விடுறீங்க? அவரையும் எந்திரிக்க சொல்லுங்க. நம்ம எல்லாருமே ரெப்ரெஷ் ஆகிட்டு சாப்பிடலாம். டாடி தூங்குனா நானும் தூங்குவேன்.” என்று சொல்லி அடம் பிடித்தாள்.
“இந்த அடம் பிடிக்கிற ஹாபிட் எல்லாம் உனக்கு புதுசா எங்க இருந்து வந்ததுச்சு? உங்க டாடி நைட்டு லேட்டா தான் வீட்டுக்கு வந்து இருக்காரு. அதான் இவ்வளவு நேரமா தூங்கிட்டு இருக்காரு. இப்ப அவரை எதுக்கு எழுப்பி டிஸ்டர்ப் பண்ணணுங்கற? நீ வா நம்ப போலாம். பக்கத்து ரூம்ல போய் குளிச்சுக்கலாம். அவர் தூங்கட்டும்.” என்ற தேன்மொழி குண்டுக் கட்டாக ஆருத்ராவை தூக்கிக் கொண்டு கதவை சாத்திவிட்டு வெளியில் சென்றாள்.
அவள் சென்ற பிறகு பெருமூச்சு விட்ட அர்ஜுன் “நல்லவேளை எப்படியோ ஆருத்ரா என்ன காப்பாத்திட்டா.” என்று நினைத்தான். அவர்கள் அந்த பக்கம் சென்றவுடன் அவனும் சட்டென எழுந்து குளித்து கிளம்பி தயாரானான். பின் பிரிட்டோவிற்கு கால் செய்து தேன்மொழி எங்கே இருக்கிறாள் என்று விசாரித்தான். “தேன்மொழி மேடம் ஜனனி மேடம் கூட இருக்காங்க சீஃப்!” என்றான் அவன். உடனே ஜனனியின் ரூம் எங்கே இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்ட அர்ஜுன் அவள் கண்களில் படாமல் வெளியில் சென்று தன் காரில் ஏறிக் கொண்டான்.
அவனை தனியாக வெளியில் செல்ல விடக் கூடாது என்று நினைத்த பிரிட்டோ தானும் அவனுடன் சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டான். அவர்கள் இருவரும் இப்போது அந்த பங்களா வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்கள். “இப்ப நம்ம எங்க போயிட்டு இருக்கோம் சீஃப்?" என்று பிரிட்டோ வழக்கம் போல கேட்க, “வேற எங்க சாப்பிட தான். எனக்கு செமையா பசிக்குது. என் பொண்டாட்டி கண்ணு படக் கூடாதுன்னு தூங்கி எழுந்து தண்ணி கூட குடிக்காம கிளம்பி வெளியே ஓடி வந்துட்டேன்.” என்றான் அர்ஜுன்.
“எப்படியும் அவங்களுக்கு தெரிய போகுது தானே.. உங்கள பார்த்தா கண்டுபிடிச்சிடுவாங்க. அப்புறம் ஏன் இப்படி அவங்க கூட hide and seek விளையாடிட்டு இருக்கீங்க chief?” என்று அவனிடம் கேட்டான் பிரிட்டோ.
-மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல்
பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-104
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.