மஞ்சம்-103

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
தூக்கம் வராமல் அர்ஜுனை பற்றி யோசித்துக் கொண்டு இருந்த தேன்மொழி அவனுக்கு ‌“ஹாய்... என்ன பண்ற?” என்று மெசேஜ் அனுப்பினாள். ஹாஸ்பிடலில் இருந்த அர்ஜுன் அதை நோட்டிபிகேஷனில் பார்த்தான். “நான் தான் இவளை தூங்க சொன்னேன்ல.. இவ்வளவு நேரம் தூங்காம இருந்து என்ன பண்றேன்.. ஏது பண்றேன்னு கேட்டு மெசேஜ் பண்ணிட்டு இருக்கா!” என்று நினைத்த அர்ஜுன் அவளுக்கு ரிப்ளை செய்யாமல் டாக்டர் அவனை உள்ளே வரச் சொல்லி அழைத்ததால் தனது மொபைல் போனை பிரிட்டோவிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றான்.

அர்ஜுன் தனது மெசேஜ்க்கு ரிப்ளை அனுப்பாததால் மொபைல் ஃபோனை பார்த்தபடி அப்படியும் இப்படியுமாக புரண்டு படுத்த தேன்மொழி “பிஸியா இருந்தா வீட்டுக்கு தான் வர மாட்டேங்குற. அட்லீஸ்ட் என் மெசேஜ்க்கு ரிப்ளை பண்ணலாம் இல்ல!" என்று கேட்டு சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.

அப்போது தான் டாக்டரை பார்த்துவிட்டு வெளியில் வந்த அர்ஜுனிடம் பிரிட்டோ அவன் மொபைல் ஃபோனை கொடுத்தான். சரியாக அந்நேரத்தில் தேன்மொழியின் மெசேஜ் வர, “நான் ஃபோனை கைல வாங்குன உடனே கரெக்டா மெசேஜ் பண்றா!" என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்ட அர்ஜுன், “நான் ஒரு பக்கம் பிசியா இருக்கும்போது, சியாவும் இன்னொரு பக்கம் பிசியா இருப்பா. நான் ஃப்ரீயா இருக்கும்போது அவ அவைலபிலா இருக்க மாட்டா. அவ என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நினைக்கும்போது நான் பிஸியா இருப்பேன்.

அவ கூட என் லைஃப் அப்படியே போயிடுச்சு. பட் என் ஹனி பேபி ஒவ்வொரு செகண்டும் என்ன பத்தியே யோசிச்சுகிட்டு நான் எப்ப வீட்டுக்கு வருவேன்னு எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கா.. ஒரு பக்கம் இதையெல்லாம் பார்க்கும் போது சந்தோஷமா இருந்தாலும், அவள போய் ஏமாத்திட்டு இருக்கேன்னு நினைக்கும் போது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.” என்று நினைத்தான்.

அவனை அழைத்துக் கொண்டு காரில் சென்ற பிரிட்டோ “இப்ப நம்ம எங்க போக போறோம் chief?” என்று கேட்க, “தெரியல டா, எங்கேயாவது போ. தேன்மொழி தூங்குற வரைக்கும் நம்ம வீட்டுக்கு போக கூடாது.” என்ற அர்ஜூன் அவள் மெசேஜுற்க்கு “நான் டிரைவிங்ல இருக்கேன் ஹனி. நீ தூங்கு. எனக்காக வெயிட் பண்ணாத. நான் வர லேட் ஆகும்.” என்று ரிப்ளை அனுப்பினான்.

அவனிடம் இருந்து ரிப்ளை வரவில்லை என்றாலும் கூட தூக்கம் வராததால் இவ்வளவு நேரமாக ஃபோனை சைலண்ட்டில் போட்டு கேம் விளையாடிக் கொண்டிருந்த தேன்மொழி அவனிடம் மெசேஜ் வந்திருப்பதாக நோட்டிபிகேஷன் வந்தவுடன் உடனே ஆர்வமான முகத்துடன் உள்ளே சென்று பார்த்தாள். அவன் வர லேட் ஆகும் என்று அனுப்பி இருந்த மெசேஜை பார்த்தவுடன் அவள் முகம் மாறிவிட்டது.

“அட போயா.. உன்ன மாதிரி பிசினஸ்மேன் எல்லாம் எதுக்கு தான் கல்யாணம் பண்ணிக்கிறீங்களோ தெரியல! அங்க இருந்தா தான் வேலை வேலைன்னு எப்பயும் இருப்ப.. இங்க இந்தியா வந்து உனக்கு என்ன வேலை? அதுவும் இவ்வளவு நேரம் நைட்ல வெளியே இருக்கிற மாதிரி வேலை?

ஒருவேளை ஏதாவது பொண்ணு கூட சுத்திட்டு இருக்கியா? நீ அப்படி எல்லாம் பண்ற ஆள் இல்லையே! அப்புறம் இந்தியாவுக்கு வந்து இந்த நேரத்துல இவனுக்கு அப்படி என்ன முக்கியமான வேலை? என் கிட்ட டைரக்ட்டாவும் எங்க இருக்கான்னு சொல்ல மாட்டேங்கிறான்! ஒருவேளை அவனும், பிரிட்டோவும் சேர்ந்து எங்கயாவது நைட் கிளப் போய் குடிச்சிட்டு இருக்காங்களா?

இருந்தாலும் இருக்கும், அவன் எங்கயோ போய் ராத்திரி முழுக்க வெளிய சுத்திட்டு வருவான். நான் தூங்காம அவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கனுமா? தேவை இல்லாம கண்ணுல டார்க் ஸ்ர்கள்ஸ் வந்து நான் எதுக்கு கவலைப்படணும்? அவன் வரும்போது வரட்டும். அவனை காலையில பாத்துக்குறேன்.” என்று நினைத்த தேன்மொழி அவளுக்கு தூக்கம் தூக்கமாக வந்ததால் அவனிடம் எதுவும் பேசாமல் மொபைல் ஃபோனை ஓரமாக வைத்துவிட்டு தூங்க சென்று விட்டாள்.

காரில் பிரிட்டோ உடன் தனியாக சென்று கொண்டிருந்த அர்ஜுன் அவனது மொபைல் ஃபோனில் இருந்த போட்டோக்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்க்கத் தொடங்கினான். இதற்கு முன் சியா மற்றும் தன்னுடைய குழந்தைகளின் புகைப்படங்கள் நிறைந்து இருந்த அவனுடைய கேலரியில் இப்போது தேன்மொழியின் ஃபோட்டோக்களும் இடம்பெற்று இருந்தது. அதை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்த அர்ஜுன் “இந்த லைஃப் எவ்ளோ டிஃபரண்டா இருக்கு! திடீர்னு நம்மள ஆச்சரியப்பட வைக்கிற மாதிரி அப்பப்ப ஏதாவது நடக்குது! கடைசில எல்லாம் நல்லதா நடந்தா சரிதான்." என்று நினைத்தான்.‌

“chief” என்று பிரிட்டோ அழைக்க, தனது என்ன ஓட்டத்தில் இருந்து வெளியில் வந்த அர்ஜுன் “ம்ம்..!!" என்றான். “ஆகாஷ் சார் நம்ம குரூப்ல மெசேஜ் போட்டு இருக்காரு பாத்தீங்களா?” என்று பிரிட்டோ கேட்க, உடனே எடுத்து அதை ஓப்பன் செய்து பார்த்த அர்ஜுன் “உன் வெட்டிங்கே அவசர அவசரமா பிளான் பண்ணி நடக்குது.. இதுல எப்படி டா தீம் வெட்டிங்லாம் பண்ண முடியும்?” என்று கேட்டான்.

“எனக்கு கிளாரா கூட மேரேஜ் ஆனாலே போதும்டு தான் இருக்கு chief, அதான் இந்தியாவுலயே சிம்பிளா பண்ணிக்கலாம்னு நாங்க டிசைட் பண்ணிட்டோம். பட் இந்த மாதிரி கான்செப்ட் ஆகாஷ் சார் சொன்ன மாதிரி குழந்தைகளுக்கு கண்டிப்பா பிடிக்கும். அவங்க என்ஜாய் பண்ணுவாங்க. நம்ம வேணும்னா வெட்டிங் முடிச்சதுக்கு அப்புறமா ரிசப்ஷன் அப்போ அவர் சொன்ன மாதிரி காஸ்ட்யூம்ஸ் அரேஞ்ச் பண்ணி ஃபோட்டோ செட் பண்ணி பாக்கலாம்.

நீங்க கோமாவுல இருக்கும்போது தான் ஜனனி மேடம்க்கும் மேரேஜ் ஆச்சு. குழந்தையும் பொறந்துச்சு. பட் அப்ப எதையுமே ப்ராப்பரா யாருமே செலிபரேட் பண்ணல. இப்படி சின்னதா ஒரு ஃபோட்டோஷூட் நடந்தா எல்லாரும் என்ஜாய் பண்ணுவாங்க.” என்று பிரிட்டோ சொல்ல, “அதுவும் கரெக்ட் தான். டைம் கம்மியா இருந்தா என்ன? நம்ம பண்ணனும்னு நினைச்சா பண்ண முடியாதா? 24/7 ஓப்பன்ல இருக்குற மாதிரி ஏதாவது இவன் மேனேஜ்மென்ட் கம்பெனி இருக்கான்னு செக் பண்ணு. நம்ம உன் மேனேஜை கம்ப்ளீட்டா பிளான் பண்ணலாம். ஆல்ரெடி கிளாராவும், தேன்மொழியும் சேர்ந்து இங்க லோக்கல்ல யாரோ ஒரு காஸ்டியூம் டிசைனரை ஹையர் பண்ணி இருக்காங்களாம்.

அவங்களோட கான்டக்ட் நம்பரை கிளாரா கிட்ட கேட்டு வாங்கு. இப்பவே சர்ப்ரைஸா நம்ம எல்லாத்தையும் ரெடி பண்ணிடலாம். பட் ஆகாஷ் கிட்ட சும்மா இதெல்லாம் வேண்டாமே நான் சொல்ல போறேன்.” என்றான் அர்ஜுன். “ஓகே சீஃப்” என்று சிரித்த முகமாக சொன்ன பிரிட்டோ காரை ஓரம் கட்டிவிட்டு கிளாராவிற்கு கால் செய்து பேசினான்.

இது பல லட்சங்கள் மதிப்பிலான ப்ராஜெக்ட் என்பதால் அவன் இரவு நேரத்தில் தொடர்பு கொண்டாலும் கூட, அர்ஜுன் குடும்பத்திற்காக வேலை பார்க்க அனைவரும் தயாராக இருந்தார்கள். அவர்களுடன் பிரிட்டோ ஒரு மீட்டிங்கை அணைந்து செய்ய, அவனுடன் அங்கே சென்ற அர்ஜுன் பிரிட்டோ கிளாராவின் திருமண ஏற்பாடுகளை தனது சர்ப்ரைஸ் பிளான்களுடன் இணைத்து ஒரு வழியாக செய்து முடித்துவிட்டு விடியற்காலை 4:00 மணி அளவில் அங்கே இருந்து கிளம்பினான்.

அவர்கள் தங்களது வில்வாவிற்கு வந்து சேர ‌ கிட்டத்தட்ட 4: 35 மணி ஆகிவிட, வேறொரு ரூமிற்கு சென்று ரெப்ரெஷ் செய்துவிட்டு தனது உடையை மாற்றிய அர்ஜுன் பூனை போல பதுங்கி பதுங்கி தனது ரூமிற்குள் நுழைந்து தெ
தேன்மொழியின் தூக்கம் கலையாதவாறு சத்தம் எழுப்பாமல் ‌ மெல்ல அவள் அருகில் சென்று படுத்துக் கொண்டான்.

இவ்வளவு நேரம் ஆகியும் அவனுக்கு என்னவோ என்று தூக்கம் வரவே இல்லை. அதனால் அங்கே தெரிந்து கொண்டு இருந்த மங்களான லைட் லேம்பின் வெளிச்சத்தில் அரைகுறையாக தெரிந்த தேன்மொழியின் முகத்தை பார்த்து ரசித்த அர்ஜுன் “தூங்கும் போது கூட எதையோ யோசிக்கிற மாதிரி எதுக்குத்தான் இவன் மூஞ்சிய சீரியஸா வச்சிருக்காளோ தெரியல! ஒருவேளை கனவுல கூட நான் ஏன் லேட்டா வீட்டுக்கு வந்தேன்னு கேட்டு என் கூட சண்டை போட்டுட்டு இருக்கா போல இருக்கு! கண்டிப்பா அப்படித் தான் இருக்கும்.. இவளுக்கு தான் சண்டை போடுறதுனா ரொம்ப பிடிக்குமே!” என நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.

அப்போது அவன் பக்கமாக திரும்பி படுத்த தேன்மொழி அவன் மீது தன் காலை தூக்கி போட, அவளை குறுகுறுவென்று பார்த்த அர்ஜுன் “ஆருத்ரா பக்கத்துல படுத்தா மட்டும் அழகா பொம்மை மாதிரி அவளை கட்டிப்புடிச்சுட்டு கம்முனு தூங்குறா.. நான் வீட்டுக்கு வந்தது கூட இவளுக்கு தெரியாது. கரெக்டா நான் பக்கத்துல வந்து படிச்சதுக்கு அப்புறம் எப்படி தான் என் மேல மட்டும் ‌ இவ காலை போடுறாளோ தெரியல! இவ கூட இருக்கும்போது எல்லாம் இப்படியே எனக்கு தூங்கி பழகிருச்சுன்னா, திடீர்னு நான் பிசினஸ் ட்ரிப் எங்கேயாவது ஒன் மந்த் ‌ போனா என்ன பண்றது? இவ கூட இருந்தாலும் இந்த குட்டி பிசாசு ஏதாவது பண்ணி நம்மளை இம்சை பண்ணிட்டே இருக்கா.. இவ இல்லாமையும் நம்மளால இருக்க முடிய மாட்டேங்குது!” என்று நினைத்தான்.

எங்கே சுற்றிக் கொண்டு இருந்தாலும் இறுதியில் வீட்டிற்கு தானே வந்து சேர வேண்டும்! இப்போது அவள் அருகில் படுத்து இருந்த அர்ஜுனுக்கு அவளது அருகாமை தான் அனைத்தையும் விட முக்கியமானதாக இருந்தது. அதனால் “சாரி பேபி” என்று சொல்லிவிட்டு ஆருத்ராவின் கையை அவள் மீது இருந்து எடுத்துவிட்டு ஆருத்ராவை கொஞ்சம் தள்ளி சுவற்றின் ஓரமாக படுக்க வைத்து விட்ட அர்ஜுன் தேன்மொழியின் இருப்பில் கை வைத்து அவளை தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டு படுத்தான்.

தேன்மொழியை பொறுத்தவரை அவள் தூக்கம் வரவில்லை என்று எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் முழித்திருப்பாள். ஆனால் கண்களை மூடி ஒரு நொடி தூங்கிவிட்டாலும் கூட, அதற்கு மேல் இடி இடித்து மழை பெய்து பூமியே இரண்டாக பிளந்தால் கூட, அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல ‌ கும்பகர்ணனுக்கு டஃப் கொடுக்கும் எண்ணத்தில் அசராது தூங்குவாள். அதனால் அர்ஜுன் அங்கே அவள் அருகில் வந்து படுத்து இருப்பது கூட அவளுக்கு தெரியவில்லை.

- மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பி
ரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-103
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi