மஞ்சம்-102

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
ஓரக்கண்ணால் ஆகாஷை பார்த்தபடி குறும்பாக சிரித்த லிண்டா “இது மட்டும் இல்ல மகிழ்.. உன் டாடி ‌ எனக்காக நிறைய பண்ணி இருக்காரு. ஒரு நாள் நான் ஹாஸ்டல்ல இருக்கும்போது, திடீர்னு கால் பண்ணி அவர் கிட்ட எனக்கு பசிக்குதுன்னு சொன்னேன். எனக்காக சமைச்சு கொடுங்கன்னு கேட்டேன். அதுக்கு உங்க டாடி என்ன பண்ணாரு தெரியுமா?" என்று கேட்டுவிட்டு சிரித்தாள்.

உடனே சட்டென்று எழுந்து சென்று அவள் வாயை மூடிய ஆகாஷ் “இப்ப எதுக்கு அதெல்லாம்? ரெண்டு பேரும் சாப்டீங்கள்ல.. கம்முனு படுத்து தூங்குங்க. மிட் நைட்ல எழுந்துக்கிற மாதிரி இருக்கும். அதுவரைக்கும் கொஞ்ச நேரம் எல்லாரும் தூங்க. நான் லைட் ஆஃப் பண்ண போறேன்.” என்று சொல்ல, “டாடி நீங்க என்ன பண்ணிங்கன்னு மம்மி சொல்லக் கூடாதுன்னு தானே எல்லாரையும் தூங்க சொல்றீங்க?‌ நான் அவங்க சொல்றத கேட்காம தூங்கவே மாட்டேன். நீங்க முதல்ல மம்மி வாயில இருந்து கைய எடுங்க. அவங்க பேசட்டும்.” என்றான் மகிழன்.

“உன் டீச்சர் சொல்லிக் குடுக்கிறத என்னைக்காவது இவ்ளோ இன்ட்ரஸ்ட்டோட கேட்டு இருக்கியா டா நீ? ஒழுங்கா போய் தூங்குறியா இல்லையா?” என்று ஆகாஷ் அவனை மிரட்ட, அதுவரை தந்தை மகன் இருவரையும் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டு இருந்த லிண்டா ஆகாஷின் கையில் லேசாக கடித்து வைத்தாள்.

உடனே தன் கையை எடுத்துக் கொண்ட ஆகாஷ் “ஓய் எதுக்கு டி கடிக்கிற?” என்று கேட்க, “சும்மா தான். என் ஹாண்ட் டேஸ்டா இருக்கான்னு செக் பண்ணி பார்த்தேன்.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் லிண்டா. உடனே அவளது மடியில் சென்று படுத்துக் கொண்டு அவள் முகத்தை அண்ணாந்து பார்த்த மகிழன் “டாடியோட ஹேண்ட் டேஸ்ட்டா இருந்துச்சா மம்மி? நல்லா இருக்குன்னா சொல்லுங்க. நானும் டேஸ்ட் பண்ணி பார்க்கிறேன்.” என்று சொல்லிவிட்டு சிரித்தான்.

“ம்ம்‌.. டேஸ்ட் கொஞ்சம் சுமாரா தான் இருந்துச்சு. பட் ஒன்ஸ் ட்ரை பண்ணி பார்க்கலாம்." என்று கிண்டலாக சொல்லிவிட்டு லிண்டா சிரிக்க, “டாடி உங்க கைய குடுங்க.. மம்மி என்ன டேஸ்ட் பண்ணி பாக்க சொன்னாங்க!” என்ற மகிழன் ஆகாஷின் கையைப் பிடித்து இழுத்து தன் வாய்க்கு கொண்டு சென்றான்.

உடனே தன் மகனை அப்படியே குண்டு கட்டாக தூக்கி தனது தோள்களில் போட்டுக் கொண்ட ஆகாஷ் “என் கையவே கடிச்சு டேஸ்ட் பண்ண போறியா நீ? உன் மம்மி பண்ண வேலைக்கு அப்புறமா நான் அவளுக்கு பனிஷ்மெண்ட் கொடுத்து இருக்கிறேன். இப்ப உன்னை நான் விண்டோ வழியா வெளிய தூக்கி போட போறேன். அதுக்கப்புறம் எலி மாதிரி உன்னால என் கையையும் கடிக்க முடியாது.. காலையும் கடிக்க முடியாது." என்று சொல்லிவிட்டு சிரித்த முகமாக தனது அறையில் இருந்த ஜன்னலை நோக்கி நடந்தான்.

தன்னுடைய அப்பா கண்டிப்பாக தன்னை வெளியில் தூக்கி போட மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தாலும், தனது கை கால்களை உதறியபடி “ஐயோ டாடி என்ன விடுங்க எனக்கு பயமா இருக்கு. மம்மி.. மம்மி.. ஹெல்ப் மீ! டாடி என்ன கீழே போடப்போறாரு. மம்மி!” என்று வேண்டுமென்றே சத்தமாக அலறினான் மகிழன். “நீங்க விளையாடினது எல்லாம் போதும். லேட் ஆகுது வாங்க தூங்கலாம். எனக்கு டயர்டா இருக்கு.” என்ற லிண்டா அப்படியே கட்டிலில் படுத்துக் கொள்ள, மகிழன் தொடர்ந்து ஆகாஷிடம் “டாடி என்ன விடுங்க டாடி.. ப்ளீஸ்.. leave me!” என்று சொல்லி கத்தி விளையாடிக் கொண்டே இருந்தான்.

“டேய் பக்கத்து ரூம்ல தான் உங்க பாட்டி தூங்கிட்டு இருக்காங்க. சத்தம் போட்டு கத்தி அவங்களை எழுப்பி விட்றாத." என்ற ஆகாஷ் மகிழனின் வாயை பொத்தி அவனை தூக்கிக் கொண்டு வந்து அவனுடன் சேர்ந்து கட்டிலில் விழுந்தான். மகிழன் எப்போதும் லிண்டாவுக்கு அருகில் தான் தூங்குவான் என்பதால் அவன் சுவற்றின் ஓரமாக அவள் அருகில் சென்று படுத்துக்கொள்ள, ஆகாஷ் வழக்கம்போல லிண்டாவை அணைத்துக் கொண்டு படுத்தான்.

தானும் ஒரு பக்கம் கணவனையும் இன்னொரு பக்கம் மகனையும் அணைத்துக் கொண்டு தனது கண்களை மூடிய லிண்டா ‌ ஆகாஷின் காதுகளில் “எப்படியோ லாஸ்ட் வரைக்கும் எனக்கு கரெக்டா நெயில் பாலிஷ் போட்டு விடாம தப்பிச்சிட்ட!” என்று சொல்ல, “என்ன ஆனாலும் என்னால உங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியாதே மேடம்! நாளைக்கு உங்களோட 10 ஃபிங்கர்ஸ்ளையும் 10 டிப்ரண்ட் கலர்ஸ்ல நான் நெயில் பாலிஷ் போட்டு விடுறேன். ஓகேவா?” என்று ஹஸ்கி வாய்ஸில் சொன்ன ஆகாஷ் அவளது காது மடல்களில் முத்தமிட்டான்.

லேசாக கூச்சத்தில் நெளிந்த லிண்டா “பத்து விரல்லையும் வேற வேற கலர்ல நெயில் பாலிஷ் போட்டுட்டு நான் ஜோக்கர் மாதிரி தெரியனுமா உனக்கு?” என்று கேட்க, “இல்லையே நீ எனக்கு ஏஞ்சல் மாதிரி தெரியுற பேபி.. கிளாராவுக்கு மேரேஜ் ஆகும் போது அவ ஒயிட் கவுன் போடுவாள்ல.. அதே மாதிரி நான் உனக்கு ஒரு ஒயிட் கவுன் வாங்கி தரேன். பின்னாடி விங்க்ஸ் மட்டும் செட் பண்ணா.. அப்படியே நீ ஹெவன்ல இருந்து வந்த ஏஞ்சல் மாதிரி இருப்ப லின்.. உனக்கு ஏஞ்சல் கெட்டப். எனக்கு டெவில் கெட்டப். மகிலுக்கு fairy கெட்டப். அப்படியே நம்ம எல்லாரும் ஒரு ஃபேமிலி போட்டோ எடுத்தா எப்படி இருக்கும்?” என்று ஆர்வமாக கேட்டான் ஆகாஷ்.

“ம்ம்.. பண்ணலாமே.. அப்ப தான் ஃபேமிலியா நம்ம எல்லாரும் லூசு மாதிரி தெரிவோம். உடனே பிரசாத் குரூப்ஸ் ஃபேமிலில இருக்கிறவங்களுக்கு பைத்தியம் புடிச்சிருச்சுன்னு நியூஸ் போட்டு நம்மள ட்ரெண்ட் ஆக்கி விட்டுருவாங்க. அதுவும் சூப்பரா இருக்கும் இல்ல!” என்று லிண்டா கிண்டலாக கேட்க, “ஹேய்.. உனக்கு கொஞ்சம் கூட ட்ரெண்டிங்கில் என்ன இருக்குன்னு தெரியவே மாட்டேங்குது. நீ எல்லாம் என்ன தான் அமெரிக்காவுல
பிறந்து வளர்ந்தியோ தெரியல.. தமிழ் ஃபேமிலியில கல்யாணம் பண்ணிட்டு வந்ததுனால டிபிகல் தமிழ் பொண்ணு மாதிரி யோசிக்க ஆரம்பிச்சுட்டியா? இப்போ ட்ரெண்டிங்ல தீம் வெட்டிங் எவ்ளோ ஃபேமஸா இருக்கு தெரியுமா? ஆளுக்கு ஒரு கேரக்டர்ல ரெடியாகி எல்லாரும் சேர்ந்து வெட்டிங்க்கு போய் என்ஜாய் பண்ணா எவ்ளோ ஹாப்பியா இருக்கும்? நம்ம வீட்ல குழந்தைங்க இருக்காங்கல்ல எல்லாருக்கும் இது பிடிக்கும்.” என்று ஆர்வமான கலந்த முகத்துடன் சொன்னான் ஆகாஷ்.

“நீ சொல்றது எல்லாம் ஓகேதான்.. பட் அர்ஜுன் ப்ரோ இதுக்கு ஓகே சொல்லுவாரான்னு தெரியலையே! என்ன தான் மேரேஜ் நடக்கப்போற சந்தோஷம் உள்ளுக்குள்ள இருந்தாலும், பிரிட்டோவும் கிளாராவும் எப்பையுமே கொஞ்சம் சோகமா தான் இருக்காங்க. குழந்தைகளுக்காக இல்லனாலும் அவங்களுக்காக கண்டிப்பா நம்ம இந்த வெட்டிங்கை முடிஞ்ச அளவுக்கு ஃபெஸ்டிவல் மாதிரி ஜாலியா செலபிரேட் பண்ணனும்.” என்று லிண்டாவும் சந்தோஷமாக சொல்ல, “சூப்பர் மம்மி.. டாடியோட இந்த பிளான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் தான் உங்களுடைய குட்டி fairy. நம்ம இந்தியா ஃபோன உடனே முதல் வேலையா எல்லாருக்கும் காஸ்டிம் ரெடி பண்ணி குடுங்க. I am so excited.” என்றான் மகிழன்.

“டேய் இன்னும் தூங்கலையா நீ? நாங்க ரெண்டு பேரும் பர்சனலா பேசுறத ஒட்டு கேக்குறியா?” என்று ஆகாஷ் கேட்க, “பர்சனலா பேசணும்னா, நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது பேசணும் டாடி. என்னை பக்கத்துல வச்சுக்கிட்டு தூங்கவிடாம நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டே இருந்தா எனக்கு கேட்காதா? நான் ஒன்னும் ஒட்டு கேக்கல.” என்றான் மகிழன்.

“ஓகே ஓகே, இனிமே யாரும் பேச வேண்டாம். எல்லாரும் தூங்கலாம். இந்த தீம் வெட்டிங் பத்தி நாளைக்கு பாட்டி கிட்டயும், உங்க பெரியப்பா கிட்டயும் பேசிக்கலாம்.” என்ற லிண்டா மகிழினை தன்னுடன் சேர்த்து அனைத்து பிடித்துக் கொண்டு தூங்க வைத்தாள். ஆகாஷ் அடுத்து திருமணத்தில் வேறு புது விதமாக என்னென்ன செய்யலாம்? என்று யோசிக்க தொடங்கினான்.‌

அவனுக்கு ஜானகி வேறு ஒரு பெண்ணை பார்த்து வைத்திருக்கும் போது, யாரிடமும் சொல்லாமல் தான் காதலித்த லிண்டாவை ரகசியமாக ரிஜிஸ்டர் ஆபீஸில் திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான் ஆகாஷ். அதனால் நிறைய பிரச்சனைகள் நடந்ததால் இறுதியில் அர்ஜுன் தான் தனது குடும்பத்தினரை சமாளித்து அவர்களுக்கு ஒரு ரிசப்ஷன் அரேஞ்ச் செய்தான். அதை தாண்டி அவர்களது திருமணத்தில் பெரிதாக எந்த நிகழ்வுகளும் நடக்கவில்லை. அதனால் “என்னோட மேரேஜும் ப்ராப்பர் செலிப்ரேஷன் இல்லாம முடிஞ்சிருச்சு. அர்ஜுனுக்கு உடம்பு சரி இல்லாதப்ப ஜனனிக்கு மேரேஜ் ஆனதனால அதயும் சிம்பிளா பண்ணியாச்சு. பிரிட்டோ கிளாரா மேரேஜ்ல எல்லாமே சூப்பரா இருக்கணும். நாளைக்கு அர்ஜுன் கிட்ட இதைப் பத்தி கண்டிப்பா பேசணும்.” என்று நினைத்த ஆகாஷ் அதைப்பற்றி யோசித்தவாறு உறங்கிப் போனான்.

ஆருத்ராவுடன் தனது ரூமில் புதிதாக அவர்கள் குடியேறி இருக்கும் பங்களா வீட்டில் உள்ள பிரீமியம் பஞ்சு மெத்தையில் படுத்து இருந்தால் தேன்மொழி. அவர்கள் படுத்து இன்னும் முழுவதாக ஐந்து நிமிடங்கள் கூட ஆகி இருக்கவில்லை. அதற்குள் ஆருத்ரா ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தாள். “படுத்த உடனே எப்படித் தான் இவ்வளவு சீக்கிரமா தூங்குறாளோ இவ.. அது சரி.. குழந்தைகளுக்கு என்ன கவலை இருக்கப் போகுது? அதான் இவ்ளோ சீக்கிரம் இவளால தூங்க முடியுது. பேசாம நம்மளும் இவள மாதிரியே குழந்தையாவே இருந்திருக்கலாம். கல்யாணம், ஹஸ்பண்ட்ன்னு என்ன மெண்டல் டார்ச்சர் இல்லாம லைஃப் ஜாலியா இருந்திருக்கும்.” என்று நினைத்த தேன்மொழி சோகமாக விட்டத்தை பார்த்திருந்தாள்.

அர்ஜுன் இல்லாமல் அவளால் தூங்க முடியவில்லை. அவனுக்கு கால் செய்யலாம் என்று யோசித்தாலும், “அவன் தான் ஏற்கனவே நான் வர லேட் ஆகும், நீ தூங்குனு சொல்லிட்டானே! மறுபடியும் நான் கால் பண்ணா, பிஸியா இருக்கேன் அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லி கட் பண்ணிட்டான்னா எனக்கு தான் கஷ்டமா இருக்கும்.” என்று நினைத்து அந்த எண்ணத்தை விட்டு விட்டாள்.

ஆனால் அப்போதும் அவன் எங்கே இருக்கிறான், என்ன செய்து கொண்டு இருக்கிறான் என்று தெரியாமல் அவளால் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை. அதனால் உடனே தனது மொபைல் ஃபோனை எடுத்து “ஹாய், என்ன பண்ணிட்டு இருக்க?” என்று அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள். ஹாஸ்பிடலில் இருந்த அர்ஜுன் அவளது மெசேஜை எடுத்து பார்த்தான்.

- மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதி
லிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-102
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi