“அவர் ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லி ஆறு மணிக்கு டேய் கிளம்பி போயிட்டாரு அத்தை. நானே அங்க இருந்த பொருள் எல்லாத்தையும் எடுத்துட்டு இங்க வந்துட்டேன். அவர் இன்னும் வீட்டுக்கு வரல.” என்று சோகமாக சொன்னாள் தேன்மொழி. “இந்தியா வந்தும் கூட அவன் வேலைன்னு தான் சுத்திட்டு இருக்கானா? உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி இத்தனை நாள் ஆகுது ஹனிமூன் போற ஐடியா எல்லாம் இல்லையா? லைஃபை என்ஜாய் பண்ண கத்துக்கோங்க.
அர்ஜுன் எப்பயுமே இப்படித் தான் இருப்பான். நீதான் ஏதாவது பண்ணி அவன மாத்தணும் தேன்மொழி. நானே அத்தனை தடவை உன் கிட்ட பிடிவாதத்த விட்டுடுன்னு சொல்லும் போதும் நீ கேக்காம அவன் கிட்ட அடம் பிடிச்சதுனால தான் இப்ப அவன் ஒழுங்கா இருக்கான். சோ உனக்கு என்ன வேணுமோ அவன் கிட்ட நீ அடம் புடிச்சு சண்டை போட்டு கேட்டு வாங்கு. உனக்கு புடிச்ச மாதிரி அவனை இருக்க சொல்லு. அவனை அவன் போக்குல ப்ரீயா விட்டா சரிப்பட்டு வராது மா.” என்று ஜானகி சொல்ல, “நீங்க தான் இப்படி எல்லாம் சொல்றீங்க. ஏதோ அந்த ஒரு விஷயத்துல நான் பிடிவாதமா இருந்ததுனால அவர் சரின்னு கேட்டுகிட்டாரு. அதுக்காக எல்லா விஷயத்துலயும் நான் சொன்னா கேட்பாரான்னு தெரியல. ஹனிமூன் போகிறது பத்தி எல்லாம் நான் மறந்தே போயிட்டேன். அவர் முன்னாடி ட்ரிப் அரேஞ்ச் பண்றேன்னு சொல்லிட்டு இருந்தாரு. அதுக்கப்புறம் அப்படியே விட்டுட்டாரு. என்ன பண்ணுவாருன்னு தெரியல.” என்றாள் தேன்மொழி.
“அவன் எப்படி இருந்தாலும், நீதான் காரியத்துல கண்ணா இருக்கணும். இல்லைனா பிசினஸ்மேன் கூட எல்லாம் வாழ முடியாது. நான் அங்க வந்து அவனை பேசுகிறேன். நீ சீக்கிரம் சாப்பிட்டு தூங்கு மா. அவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காத. நீ சாப்பிடும் போதே ஆருத்ராவை சாப்பிட வச்சா தான் அவ ஒழுங்கா சாப்பிடுவா.” என்று தேன்மொழியிடம் சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தாள் ஜானகி.
உடனே அர்ஜுனிற்க்கு கால் செய்தாள் தேன்மொழி. ரிங் முழுவதாக சென்று கட்டான பிறகும் அர்ஜுனிடம் இருந்து எந்த ரெஸ்பான்ஸும் வரவில்லை. அதனால் மீண்டும் அவள் அவனுக்கு கால் செய்ய, இம்முறை அதை கட் செய்த அர்ஜுன் “நான் இப்ப பிஸியா இருக்கேன். வீட்டுக்கு வர லேட் ஆகும். எனக்காக வெயிட் பண்ண வேண்டாம். நீ சாப்பிட்டு தூங்கு, குட் நைட்.” என்று அவளுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பினான்.
அதைப் பார்த்து எரிச்சல் அடைந்த தேன்மொழி “நான் கால் பண்ணலைனா எனக்கு நீயே கால் பண்ணி வெளியே போனா இந்த டைம்ல வீட்டுக்கு வருவேன், இங்க இருக்கேன், இத பண்ணிக்கிட்டு இருக்கேன்னு எதையும் சொல்றதில்ல. நானே கால் பண்ணாலும் அட்டென்ட் பண்ணி ஒரு ரெண்டு நிமிஷம் பேசிட்டு வைக்கலாம் இல்ல! லேட் ஆகும் வீட்டுக்கு வர மாட்டேன்னு பெரிய இவன் மாதிரி மெசேஜ் பண்றான்! நீ வீட்டுக்கு வா உன்ன வச்சிக்கிறேன்.” என்று நினைத்து தனது உதட்டை சுழித்துவிட்டு அனைவரையும் சாப்பிட அழைப்பதற்காக சென்றாள்.
பிரிட்டோ கிளாராவின் திருமணத்திற்காக தனது குடும்பத்தினருடன் பிரைவேட் ஜெட்டில் இந்தியாவை நோக்கி பயணித்துக் கொண்டு இருந்த ஜனனி அவளுடைய குழந்தைகளில் ஒருத்தி தூங்க வைத்துவிட்டு இன்னொருத்தி மட்டும் தூக்கம் தெளிந்து லேசாக அழ தொடங்கியதால் அவள் சத்தம் கேட்டு இன்னொருத்தத்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என நினைத்து அந்த குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு தனது ரூமை விட்டு வெளியில் வந்தாள்.
அப்போது அவள் கணவன் சந்தோஷ் ஒரு ஓரமாக நின்று யாரிடமோ மும்மரமாக ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான். “எந்த நேரம் பார்த்தாலும் யார் கிட்டயாவது ஃபோன்ல பேசிட்டு இருக்கிறதே இவன் வேலையா போச்சு.” என்று நினைத்த ஜனனி தனது குழந்தையை தோளில் போட்டு “சரி மா சரி மா.. அழாத.. அம்மா இங்கதான் இருக்கேன்! அழக் கூடாது.” என்று அதன் முதுகில் தட்டி அதை சமாதானப்படுத்தியவாறு அவன் அருகில் சென்றாள்.
குழந்தை அழும் சத்தத்தை வைத்து ஜனனி தன் அருகில் வருவதை உணர்ந்த சந்தோஷ் உடனே லைனில் இருந்தவனிடம் “I will call you back! Until that, don't call me again.” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான். சென்று அவன் தோள்களில் கை வைத்த ஜனனி “ஓய்.. சீக்கிரமா சாப்பிட்டு தூங்கு ஐடியா இல்லையா உனக்கு? மற்ற நாள்ல தான் ஆபீஸ் வொர்க்ன்னு பிஸியாவே சுத்திட்டு இருக்க! நமக்கு பேபிஸ் பிறந்ததுக்கு அப்புறம் இன்னிக்கு தான் நாம எல்லாரும் சேர்ந்து ஃபேமிலியா டிராவல் பண்றோம்.
இப்ப கூட நம்ம பேபிஸ் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நினைக்க மாட்டியா நீ? நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா, நீதான் அவங்களோட அப்பான்னு உன் ஃபேஸ் கூட அவங்களுக்கு ரிஜிஸ்டர் ஆகாது.” என்று கோபம் கலந்த வருத்தத்துடன் சொன்னாள். உடனே நெருங்கி சென்று அவளது கன்னங்களை தனது கைகளில் ஏந்திக் கொண்ட சந்தோஷ் “சாரி டா ஜனனி, நான் வேணும்னு இப்படி எல்லாம் பண்ணல. சீஃப் திடீர்னு கிளம்பி இந்தியா போயிட்டாரு. சோ பெண்டிங் வர்க் எல்லாம் நிறைய இருந்துச்சு. ஆகாஷ் சரும் லிண்டா மேம் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு இப்ப லீவ்ல இருக்காரு. சோ எல்லாத்தையும் நான் தானே மேனேஜ் பண்ணியாகனும்! இப்ப பிரிட்டோவுக்கு தான் மேரேஜ். நான் இப்ப போய் சீனியர் கிட்ட எல்லாத்துக்கும் ஹெல்ப் கேட்க முடியுமா? அவரும் கிலாரா சிஸ்டர் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு ஆசைப்படுவாருல்ல!” என்று மென்மையான குரலில் கேட்டான்.
உடனே கண் கலங்கிய ஜனனி “அப்போ இந்த வீட்ல என்ன தவிர மத்த எல்லாரும் அவங்க பார்ட்னர் கூட ஹேப்பியா இருக்காங்க. நான் மட்டும் என் ஹஸ்பண்ட்டை மிஸ் பண்ணனும். என் குழந்தைங்க அப்பா பாசம் கிடைக்காம வளரணுமா? இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல சந்தோஷ்.
கொஞ்ச நாள் தான் பாப்பேன். எல்லாமே இப்படியே போயிட்டு இருந்துச்சுன்னா, இதுக்கு மேல முடியாதுன்னு டைரக்டா நானே அர்ஜுன் அண்ணா கிட்ட போய் சந்தோஷ் இனிமே ஆபீஸ் வொர்க் எதுவும் பார்க்க மாட்டான். நீங்க வேற யாரையாவது வச்சு மேனேஜ் பண்ணிக்கோங்க. எனக்கு என் ஹஸ்பண்ட் எப்பயும் என் கூடயே இருக்கணும். அவன் கூட நான் டைம் ஸ்பென்ட் பண்ணனும் எனக்கு அதுதான் முக்கியம்னு சொல்லிடுவேன். நான் சொன்னா அவர் கண்டிப்பா கேட்பாரு." என்று அழுது கொண்டே சொல்ல, “நீ சொன்னா அவர் கண்டிப்பா கேட்பாரு. ஆனா உங்களால என் வேலை வீனா போயிருமே!” என்று நினைத்த சந்தோஷ், “ஐயோ ரிலாக்ஸ் ஜானு. உன் எமோஷன்ஸ் எனக்கு புரியுது. பட் அதுக்காக சுச்சுவேஷனை அண்டர்ஸ்டாண்ட் பண்ணாம ஓவர் ரியாக்ட் பண்ணாத.
நீ போய் அப்படி சொன்னா, சீஃப் நம்மள பத்தி என்ன நினைப்பாரு? அவங்க எல்லாரும் திடீர்னு இப்போ பிரேக் எடுத்திருக்காங்க அவ்வளவு தான்.. அதுக்காக அவங்க யாருமே நம்ம கம்பெனிக்காக ஒர்க் பண்றது இல்லன்னு உன்னால சொல்லிட முடியுமா? In fact என்ன விட நம்ம வீட்ல இருக்கிற மத்தவங்க தான் ஓவர் டைம் ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க.
நீ நினைக்கிற மாதிரியே தேன்மொழி சிஸ்டரும், லிண்டா சிஸ்டரும் நினைச்சா, நம்ம பிசினஸ் என்ன மா ஆகுறது? சீஃப், ஆகாஷ் சார் ரெண்டு பேருமே கப்புல் ட்ரிப் பிளான் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க ட்ரிப் போகும்போது நம்மளும் ஒரு ஃபேமிலி ட்ரிப் போகலாம். ஓகேவா? நம்ம இந்தியாவுல இருக்கிற வரைக்கும் எல்லாருக்குமே ரெஸ்ட் தான். எப்பயுமே நான் உன் கூடையும், நம்ம பேபீஸ் கூட இருந்தா இருப்பேன்.” என்று சொல்லிவிட்டு அவளது தோள்களில் படுத்துக் கொண்டு அழுதபடி இருந்த தனது குழந்தையை அவளிடம் இருந்து வாங்கி கொஞ்ச தொடங்கினான்.
அவன் குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டு இருக்க, அவன் அருகில் சென்று அவன் மீது சாய்ந்தபடி நின்று கொண்ட ஜனனி, “எனக்கு எப்பயும் இதே மாதிரி உன் கூட உன் பக்கத்திலேயே இருக்கணும்னு ஆசையா இருக்கு சந்தோஷ். நீ சொல்றது எல்லாம் எனக்கு புரிஞ்சாலும், மனசார என்னால ஏத்துக்க முடியல. நம்ம லவ் பண்ணும் போதும் இதே மாதிரி தான் நீ ஏதாவது வேலைன்னு எங்கையாவது கிளம்பி போயிட்டு ஒரு மாசம் ரெண்டு மாசம் கழிச்சு வருவ.
சோ மோஸ்ட்லி நம்ம ரிலேஷன்ஷிப் லாங் டிஸ்டன்ஸ்ல தான் இருந்துச்சு. உனக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருக்கிறதே என் வாழ்க்கையா இருந்துச்சு. அட்லீஸ்ட் நம்ம மேரேஜ் ஆனதுக்கப்புறம் ஆவது எல்லாம் மாறிடும். நீ என் கூடயே இருப்பேன்னு நெனச்சேன். இப்பயும் அப்படி நடக்கலைங்க போது தான் எனக்கு கஷ்டமா இருக்கு.” என்று உடைந்த குரலில் சொல்ல, தன் குழந்தையோடு சேர்த்து அவளையும் அணைத்துக் கொண்ட சந்தோஷ் “நான் எங்க இருந்தாலும் என் மனசு உன்ன தான் சுத்திட்டு இருக்கும் ஜானு. ஐ லவ் யூ.” என்றான்.
பதிலுக்கு அவளும் அவனை அணைத்துக் கொண்டு “ஐ லவ் யூ டூ சந்தோஷ்.” என்றாள். அப்படியே அவர்கள் இருவரும் சில நிமிடங்கள் அங்கே நின்று பேசிவிட்டு, தங்களுடைய மற்றொரு குழந்தை ரூமில் தனியாக தூங்கிக் கொண்டிருக்கிறது என்பதால் மீண்டும் ரூமிற்கு சென்றார்கள்.
ஆகாஷின் அறையில் லிண்டா தன் மகன் மகிழனுடன் அமர்ந்து டிவியில் ஏதோ ஒரு ஆங்கில படத்தை பார்த்துக் கொண்டு இருக்க, அவளது கால்களை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு அவளுக்கு அருகில் சோஃபாவில் அமர்ந்து இருந்த ஆகாஷ் அவளுடைய கால் நகங்களில் நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தான்.
தன் கையில் இருந்த சிவப்பு நிற நெயில் பாலிஷை ஒருவழியாக போட்டு முடித்த ஆகாஷ் “ஹெ லின்.. இது கரெக்டா இருக்கா பாரு!" என்று சொல்ல, அவனை திரும்பி பார்க்காமல் தன் மகனுடன் டிவி பார்ப்பதில் முமரமாக இருந்த லிண்டா “இல்ல இல்ல.. நீ கரெக்டாவே போட மாட்ட எனக்கு தெரியும். ஒழுங்கா நெயில் பாலிஷ் ரிமூவரை வச்சு அதை ரிமூவ் பண்ணிட்டு மறுபடியும் போடு.” என்றாள் அவள். உடனே “ஏய் இதெல்லாம் அநியாயமா இல்லையா டி? பாக்காமையே நான் ஒழுங்கா போட்டு இருக்க மாட்டேன்னு நீ எப்படி சொல்ற? ஒழுங்கா திரும்பி என்ன பாரு." என்று ஆகாஷ் கத்த, “அதை பார்க்காமையே என்னால அது நல்லா இல்லைன்னு சொல்ல முடியும் ஆகாஷ். நான் கேட்கிறேன்ல... எனக்காக இன்னொரு தடவை நெயில் பாலிஷ் கூட போட மாட்டியா நீ? நம்ம லவ் பண்ணிட்டு இருக்கும்போது எனக்காக நீ என்ன எல்லாம் பண்ணி இருக்கேன்னு மறந்துட்டியா?" என்று பதிலுக்கு கேட்டாள் லிண்டா.
அவர்கள் பேசிக் கொள்வதை கவனித்தபடி இருந்த மகிழன், “நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணும் போது கூட டாடி உங்களுக்கு இப்படி எல்லாம் நெயில் பாலிஷ் போட்டு விடுவார மம்மி?" என்று ஆர்வமாக கேட்டான். உடனே ஓரக்கண்ணால் ஆகாஷை பார்த்தபடி குறும்பாக சிரித்த லிண்டா “இது மட்டும் இல்ல மகிழ்.. உன் டாடி எனக்காக நிறைய பண்ணி இருக்காரு. ஒரு நாள் நான் ஹாஸ்டல்ல இருக்கும்போது, திடீர்னு கால் பண்ணி அவர் கிட்ட எனக்கு பசிக்குதுன்னு சொன்னேன். எனக்காக சமைச்சு கொடுங்கன்னு கேட்டேன். அதுக்கு உங்க டாடி என்ன பண்ணாரு தெரியுமா?" என்று கேட்டுவிட்டு சிரித்தாள்.
- மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதி
லிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-101
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.