மஞ்சம்-100

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் திருப்தியாக அமர்ந்து அர்ஜுன் தேன்மொழியின் கல்யாண வீடியோவை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தங்களுக்கும் திருமணம் ஆகப்போகிறது என்பதால் கிளாரா உள்ளுக்குள்ள இருக்கும் சோகத்தை மறந்து விட்டு ஆர்வமாக அதை பார்த்துக் கொண்டிருக்க, அவளையே ஏக்கம் நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்த பிரிட்டோ “இதே மாதிரி நீ எப்பயும் ஹாப்பியா இருக்குன்னு கிளாரா. அதுக்கு என்னால என்ன பண்ண முடியும்னு தெரியல. பட் என்னால முடிஞ்ச எல்லாத்தையும் நான் உனக்காக பண்ண ரெடியா இருக்கேன்.” என்று தன் மனதிற்குள் அவளிடம் சொன்னான்.

என்றாவது ஒரு நாள் திடீரென அவள் தன்னை பிரிந்து சென்று விடுவாளா? என்று யோசித்தால் இப்போதும் அவன் இதயம் கனத்தது. கலங்கிய தன் கண்களை அவளுக்கு தெரியாமல் மறைத்துக் கொண்ட பிரிட்டோ எழுந்து வெளியில் சென்றான். அப்போது பாதுகாப்பிற்காக இருந்த பாடிகார்டுகள் அவனிடம் ஏதோ சொல்லிவிட்டு செல்ல, உள்ளே வந்த பிரிட்டோ அர்ஜுனின் அருகில் சென்று “chief நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றான்.

உடனே எழுந்து அவனுடன் தனியாக சென்று மொட்டை மாடியில் நின்று பேச தொடங்கிய அர்ஜுன் “எல்லாம் ஓகே தானே?" என்று கேட்க, “எல்லாம் ஓகே மாதிரி தான் தெரியுது சீஃப். பட் எனக்கு அப்படி தோணல. யாரோ நம்மள ஃபாலோ பண்ணிக்கிட்டு இந்தியா வரைக்கும் வந்து உங்களை டாக்கெட் பண்றாங்கன்னு தோணுது.” என்றான் பிரிட்டோ.

“அப்படித் தான் நடக்குதுன்னு சொல்ற அளவுக்கு சாலிடா எந்த ரீசனும் இல்ல. But still, என்னமோ தெரியல எனக்கும் அப்படித் தான்டா தோணுது. அந்த லாரிய பத்தி விசாரிக்க சொன்னேனே அது என்ன ஆச்சு?” என்று அர்ஜுன் கேட்க, “நம்ம ஆளுங்க டைரக்ட்டாவே அந்த லாரியை பூட்டிட்டு வந்தவன புடிச்சு விசாரிச்சு இருக்காங்க சீஃப். அவன் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனிக்காக லாரி ஓட்டிட்டு இருக்கான். அவன் எப்பயும் போற ரூட்ல இன்னைக்கு டிராபிக் அதிகமா இருந்ததுனால, சீக்கிரமா போகணும்னு ஷார்ட் கட்ல நீங்க வந்த பக்கம் தெரியாம வந்துட்டதா சொல்லி இருக்கான்.

உங்க காரை இடிக்கிற மாதிரி வரும்போது அவன் அவனோட ஒய்ஃப் கிட்ட போன்ல பேசிட்டு இருந்திருக்கான். அவனுக்கும் அந்த பொண்ணுக்கும் ஏதோ சண்டையாம். ஃபோன்ல பேசிக்கிட்டே போனதுல கவனிக்காம இருக்கிற மாதிரி வந்துட்டேன்னு பயந்துக்கிட்டே சொல்லி இருக்கான். நம்ம சைடுல இருந்து அவன் சொன்னது உண்மையான்னு verify பண்ணியாச்சு. எல்லாம் கரெக்டா தான் இருக்கு. But I think, something is there. மேபி நிறைய தப்பா நடக்கிறத பாத்து பழகுனதுனால நமக்கு அப்படி தோன்றலாம். சம்டைம்ஸ் நம்மளோட இன்னர் ஃபீலிங்ஸ் சொல்றது கரெக்டாவும் இருக்கலாம். சோ எனக்கு இந்த விஷயத்தை எப்படி எடுத்துக்கறதுன்னு கரெக்ட்டா தெரியல சீஃப். நம்ம careless-ஆ மட்டும் இருந்திட கூடாதுன்னு தோணுது chief.” என்றான் பிரிட்டோ.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும்போது திடீரென எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு கிரிக்கெட் பால் அர்ஜுனின் முகத்தில் அடித்தது. சரியாக அது அவன் கன்னத்தில் பட்டு இருந்ததால், கண்களோடு சேர்த்து கன்னம் வரை நன்றாக காயம் பட்டு உரை நொடியில் அவனுக்கு சிவந்து போய்விட்டது. கடும் வலிகளை எல்லாம் கடந்து வந்திருந்த அர்ஜுன் தனக்கு வலிப்பதை பொருட்படுத்தாமல் “எவன் டா இந்த டைம்ல விக்கெட் விளையாடறான்? அதுவும் கரெக்டா என் மூஞ்சில வந்து பால் அடிக்கிறான்?” என்று கோபமாக கத்தி கேட்டுவிட்டு ‌ தன் மீது ஃபோர்சாக வந்து விழுந்த ‌ பாலை கையில் எடுத்து ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் அருகில் சென்று அவனுக்கு ஏதேனும் பெரிதாக காயம் பட்டிருக்கிறதா என்று சோதித்து பார்த்த பிரிட்டோ உடனே சுற்றி முற்றி அந்த பாலை அர்ஜுனின் மீது எறிந்தது யார் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். அவர்களுக்கு 50 மீட்டர் தொலைவில் ஒரு கிரவுண்ட் இருந்தது. அங்கே சில மாணவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை அவர்கள் அடித்த பால் அர்ஜுனனின் மீது வந்து விழுந்திருக்கலாம் என்று அவன் எடுத்துக் கொண்டாலும், அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவே அவருக்கு தோன்றியது.

அதனால் ‌“சீஃப் நீங்க கீழ போங்க. பால் கண்ணிலேயே பட்டு இருக்கு. சோ டாக்டரை பார்க்கிறது நல்லது. நான் சஸ்பிசியஸா ஏதாவது இருக்கான்னு நம்ம ஆளுங்க கூட போய் செக் பண்ணிட்டு வந்துடறேன்.” என்ற பிரிட்டோ வேகவேகமாக படிகளில் இறங்கி கீழே சென்றான். தன்னை தாக்கிய பாலை கையில் இறுக்கமாக பிடித்துக் கொண்ட அர்ஜுன் சிவந்த கண்களோடு “நான் இதுவரைக்கும் என்னோட எலிமைஸ் யாரையும் விட்டு வச்சதே இல்ல. ஆனா ஏதோ ஒன்னு மிச்சம் இருக்குன்னு நினைக்கிறேன். அதான் இவ்வளவு தூரம் என்ன துரத்திட்டு வந்துட்டே இருக்கு. பிரிட்டோ சொன்ன மாதிரி இது என்னோட ஓவர் இமாச்சுனேஷனா கூட இருக்கலாம். பட் திஸ் டைம் எதையும் நான் சாதாரணமாக எடுத்துக்க மாட்டேன்.” என்று நினைத்து வேக எட்டுக்கள் வைத்து கீழே சென்றான்.

அவன் தேன்மொழியிடம் இருந்து தன் முகத்தை மறைப்பதற்காகவே நேராக தலையை குனிந்தவாறு அவர்களது ரூமை நோக்கி செல்ல, “ஏங்க.. ஒரு நிமிஷம் நில்லுங்க. நானும், கிளாராவும் சேர்ந்து அவங்க ரிசப்ஷன் ஹால் டெக்கரேஷன் ஃபிக்ஸ் பண்ணிட்டோம். இது நல்லா இருக்கான்னு ஒன்ஸ் பாத்து சொல்றீங்களா?” என்று கேட்க, “நான் அத பாத்து என்ன பண்ண போறேன்? எனக்கு கொஞ்சம் இம்பார்டன்ட் ஒர்க் இருக்கு. கிளாராவுக்கு புடிச்சிருந்தா ஓகே தான். நீங்க பார்த்து எல்லாத்தையும் டிசைட் பண்ணுங்க." என்று திரும்பி நின்றவரே சொன்ன அர்ஜுன் வீட்டில் இருந்தால் கண்டிப்பாக தேன்மொழி தன்னையே சுற்றி வந்து கொண்டிருப்பாள்.


அவள் கண்களில் இருந்து தப்புவது கடினம் என்று நினைத்து தனது பேன்ட் பாக்கெட்டில் சொருகி வைத்திருந்த கூலிங் கிளாஸ்ஸை எடுத்து அணிந்து கொண்டு “நான் கொஞ்சம் பெரிய போக வேண்டிய வேலை இருக்கு. போயிட்டு அப்புறமா வரேன். நீ வீடு ஷிப்ட் பண்ற ஒர்க் எல்லாம் பாத்துக்கோ.” என்று தேன்மொழியிடம் சொன்னபடியே அங்கே இருந்து வெளியேறத் தொடங்கி விட்டான்.

அர்ஜுன் தனியாக வெளியில் செல்வதை கவனித்த பிரிட்டோ “சீஃப் நில்லுங்க.. நானும் உங்க கூட வரேன்.” என்றபடி ஓட்டமும் நடையுமாக அவனுடன் சென்றான். தனது காரில் சென்று அமர்ந்த அர்ஜுன் அவனுக்கு அருகில் வந்து அமர்ந்த பிரிட்டோவிடம் “ஏதாவது சந்தேகப்படுற மாதிரி இருந்துச்சா?” என்று கேட்க, “no chief, பட் என்னோட சந்தேகம் இப்ப தான் அதிகமாகி இருக்கு. ஒரே நாள்ல எப்படி இப்படி நடக்கிறது எல்லாத்தையும் நம்ம coincidence-ன்னு எடுத்துக்க முடியும்? We have to be careful. இப்படி சுத்தி சுத்தி வீடா இருக்கிற இடத்துல உங்கள safe-ஆ வச்சுக்கிறது ரொம்ப கஷ்டம். சோ நம்ம சீக்கிரம் நியூ வில்லாவுக்கு போறது தான் நல்லது. செக்யூரிட்டி ரிசல்ஸ்காக அந்த வில்லாவை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சரௌண்டிங்ல எல்லா பக்கமும் நான் கேமரா பிக்ஸ் பண்ண சொல்லி இருக்கேன்.” என்றான் பிரிட்டோ.

அர்ஜுன் காரை ஸ்டார்ட் செய்து அங்கே இருந்து கிளம்ப, “இப்ப நம்ம எங்க போறோம் சீஃப்?” என்று கேட்டான் பிரிட்டோ. “அது தெரியல, நீ வீட்ட சுத்தி புரொடக்ஷனை‌ இன்க்ரீஸ் பண்ணு. சீக்ரெட்டா மெசேஜ் பண்ணி கிளாராவை அலர்ட் பண்ணு. அவளை யாரையும் விட்டுவிட்டு எதுக்காகவும் வெளிய போகாம பார்த்துக்க சொல்லு.‌ இந்தியாவுக்கு நான் வந்து ரொம்ப வருஷம் ஆகுது. சோ இங்க விட்ட குறை தொட்ட குறை ஏதாவது இருக்கான்னு முதல்ல நான் கண்டுபிடிக்கணும்." என்ற அர்ஜுன் அவன் மனம் போன போக்கில் காரை செலுத்த தொடங்கினான்.

ஆதவன் காலேஜில் இருந்து வந்த பிறகு அவனுடன் சேர்ந்து தங்களுக்கு தேவையான முக்கியமான பொருட்களை மட்டும் பேக் செய்து காரில் ஏற்றினாள் தேன்மொழி. அவர்கள் அனைவரையும் கையில் பெரிய பிஸ்டலுடன் கிளாரா காரில் ஏற்ற, “இப்ப நம்ம புது வீட்டுக்கு தானே போக போறோம்! என்னமோ போருக்கு போக போற மாதிரி எதுக்கு நீங்க கண்ணெல்லாம் எடுத்துட்டு வரீங்க? எனக்கு இப்படி உங்களை பார்த்து பழகிருச்சு. பட் மத்தவங்க பயந்துட போறாங்க! முதல்ல துப்பாக்கிய உள்ள வைங்க.” என்று அவள் காதுகளில் கிசுகிசுத்தாள் தேன்மொழி.‌

அனைவரும் பத்திரமாக காரில் ஏறியவுடன் அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டு பாடிகார்ட் ஒருவனை காரை ஸ்டார்ட் செய்ய சொன்ன கிளாரா, “நைட் டைம்ல எங்க வெளிய போனாலும், நாங்க யூசுவலா கண்ணோட தான் இருப்போம். ஆபத்து எப்ப எங்க இருந்து வரும்னு நம்மளால பிரிடிக்ட் பண்ண முடியாது தேன்மொழி. உங்க ஃபேமிலில இருக்கிறவங்க இது எல்லாத்துக்கும் இனிமே பழகிக்க வேண்டியது தான் வேற வழி இல்ல. ஒருவேளை நம்ம திரும்ப ரஷ்யா கிளம்பி போனதுக்கு அப்புறம் அவங்க இங்கயே இருந்தாலும், அவங்களுக்கும் இதே மாதிரி ப்ரொடக்ஷன் தினமும் கொடுப்போம். எங்க chief-ஓட ஃபேமிலி மெம்பெரா இருக்கிறது அவ்ளோ ஈசி இல்ல.” என்றாள்.

‌ அவளை ஆச்சரியமாக பார்த்த தேன்மொழி “அர்ஜுன் அந்த ஸ்குவாட்ல இருந்து வெளிய வந்துட்டா எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும்னு நினைச்சேன். ஆனா ஏன் எனக்கு என்னமோ இப்ப தான் பிரச்சனை ஆரம்பிக்கிற மாதிரி இருக்கு! கடவுளே.. நீங்க தான் என் குடும்பத்தில இருக்கிறவங்க எல்லாரையும் பத்திரமா பாத்துக்கணும்.” என நினைத்து வேண்டிக் கொண்டாள்.

அவர்கள் சில நிமிட பயணத்திற்கு பிறகு அந்த பங்களாவிற்கு சென்று சேர்ந்தார்கள். விஜயாவும், ஆதவனும் இனி இது தான் தங்களுடைய வீடா? என ஆச்சரியத்துடன் இப்படி ஒரு மாளிகையில் தாங்கள் தங்க போவதை நினைத்து உற்சாகமாக அனைத்தையும் சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். நேராக தனது ரூமிற்கு சென்ற தேன்மொழி ஜானகிக்கு கால் செய்து “நாங்க நம்ம புது வீட்டுக்கு வந்துட்டோம் அத்தை. நீங்க வர்றத்துக்கு இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்? டைரக்டா நீங்க இங்கயே வந்துடுவீங்களா?” என்று கேட்க,

“ம்ம்.. நாங்க நேரா அங்கயே வந்துருவோம் மா. பட் நாங்க வர்றதுக்கு mid nights ஆயிடும்னு நினைக்கிறேன்.” என்றாள் ஜானகி. “என்னாச்சு அத்தை? ஏழு எட்டு மணிக்கு எல்லாம் வந்துருவேன்னு சொன்னீங்க! அப்புறம் ஏன் இப்ப இவ்வளவு லேட் ஆகுது?” என்று தேன்மொழி விசாரிக்க, “அதுவா இங்க கிளைமேட் சரி இல்ல மா. ஜெட்ல ஸ்பீடா போறது இப்ப சேஃப் இல்லை. மழை வேற வர்ற மாதிரி இருக்கு. ரூட்டு கிளியரா இல்லனா பக்கத்துல இருக்குற ஹேலிபோர்ட்டுல லேண்ட் பண்ணிட்டு கிளைமேட் கொஞ்சம் நார்மலான அதுக்கப்புறம் தான் மறுபடியும் ஜட்ட எடுப்பாங்க.

அதனால நாங்க எல்லாரும் சாப்பிட்டு இப்ப தூங்க போறோம். நீங்களும் எங்களுக்காக வெயிட் பண்ணாம போய் நிம்மதியா சாப்பிட்டு தூங்குங்க. அர்ஜுன் என்ன பண்றான்?” என்று கேட்டாள் ஜானகி. “அவர் ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லி ஆறு மணிக்கு டேய் கிளம்பி போயிட்டாரு அத்தை. நானே அங்க இருந்த பொருள் எல்லாத்தையும் எடுத்துட்டு இங்க வந்துட்டேன். அவர் இன்னும் வீட்டுக்கு வரல.” என்று சோகமாக சொன்னாள் தேன்மொழி.

- மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதி
லிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-100
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi