தேன்மொழி மகேஷிடம் லிவிங் ரூமில் உள்ள சோஃபாவில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டு இருந்தாள். அப்போது வாசலில் நின்று கொண்டு இருந்த பாடிகார்டுகள் சிலர் கையில் ஒரு பெரிய மரப்பெட்டியை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தார்கள். அதை பார்த்தவுடன் எழுந்து நின்ற தேன்மொழி அவர்கள் தன்னை நோக்கி வந்ததால் “இதுல என்ன இருக்கு? யாராவது ஏதாவது ஆர்டர் பண்ணி இருக்காங்களா?” என்று கேட்டாள்.
அதற்கு அந்த பாடிகார்டுகளின் சீஃப் “அர்ஜுன் சார் உங்களுக்காக தான் இந்த ஸ்பெஷல் கிஃப்ட் அவரோட ஆபீஸ்ல இருந்து அனுப்பி இருக்காரு மேம்.” என்று சொல்ல, அதைக் கண்டு சந்தோஷப்படுவதற்கு பதிலாக உடனே தேன்மொழியின் முகம் வாடிவிட்டது. அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த மகேஷ் எழுந்து அவள் அருகில் செல்ல, “பெரிய கிஃப்ட் அனுப்புறானாம் கிஃப்ட்! இப்ப யார் கேட்டது இவன் கிட்ட கிஃப்ட் வேணும்னு? நான் இவ மேல கோபமா இருக்கிறத தெரிஞ்சுக்கிட்டு தானே இப்படி கிஃப்ட் கொடுத்து என்னை கன்வின்ஸ் பண்ணனும்னு பார்க்கிறான்! ஆனா அப்ப கூட நேர்ல வந்து ஒரு பத்து நிமிஷம் என்ன பார்த்துட்டு போக முடியல இவனால..
அப்ப இன்னும் இவன் ஜூலி கூட ஹாஸ்பிடல்ல தான் இருக்கானா? அதான் லிண்டா இங்க இருந்து அவங்களை பார்த்துக்கிறேன்னு கிளம்பி போயிருக்காங்கள்ல! அப்புறம் என்ன? எனக்கு என்ன வேணும்னு இவனுக்கு என்னைக்கும் புரியாது. இவனா ஏதாவது ஒன்னு பண்ணுவான். அதை நான் அக்சப்ட் பண்ணிக்கிட்டு இவன் கூட சந்தோஷமா வாழணுமா? என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது.” என்று நினைத்த தேன்மொழி வந்து கோபத்தில்,
“நான் யார் கிட்டயும் எனக்கு கிஃப்ட் வேணும்னு கேட்கவே இல்லை. நான் வேண்டாம்னு சொன்னேன்னு இதை அவரோட ஆபிஸ்க்கே திருப்பி அனுப்புங்க.” என்று சொல்லிவிட்டு தனது ரூமை நோக்கி நடக்க திரும்பினாள்.
அவளை செலவிடாமல் ஒருவன் “பட் மேம்! உங்க கிட்ட இத குடித்தே ஆகணும்னு எங்களுக்கு chief கிட்ட இருந்து ஆர்டர்.” என்று சொல்ல, திரும்பி அவனை அனல் கக்கும் பார்வை பார்த்த தேன்மொழி “உங்க chief-ஐ உங்களுக்கு ஆர்டர் போடுறதோட நிறுத்திக்க சொல்லுங்க. என்னை ஆர்டர் பண்ற வேலை வேண்டாம். சும்மா என்ன டென்ஷன் பண்ணாம இதை எடுத்துட்டு போய் அவர் கிட்டயே குடுங்க. உங்க chief-க்கு என் மேல அவ்ளோ அக்கறை இருந்துச்சுன்னா இதை அவரையே நேர்ல கொண்டு வந்து என் கிட்ட குடுக்க சொல்லுங்க. அதுவரைக்கும் இது இந்த வீட்டிலேயே இருக்கக் கூடாது. இது என்னோட ஆர்டர்.” என்று சொல்லிவிட்டு வேக எட்டுகள் வைத்து நடந்தாள்.
செல்லும் அவளை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மகேஷ் “அம்மாடியோவ்! இது அதே தேன்மொழி தானா? இப்படி ஆளே டோட்டலா மாறிட்டா! இந்த வீட்ல அர்ஜுன் சாரை தவிர வேற யாரும் இந்த அளவுக்கு அதிகாரமா பேசி நான் பார்த்ததே இல்லை. இவ என்னன்னா அவர் வந்து குடுக்க சொன்னாருன்னு சொல்லியும் இவ்ளோ தைரியமா திமிரா பேசுறா!
இதுக்கு முன்னாடி நான் பார்த்த தேன்மொழிக்கும் இப்ப இருக்கிற தேன்மொழிக்கும் நிறைய டிஃபரென்ஸ் இருக்கு. டிஃபரென்ஸ் என்ன டிஃபரென்ஸ்.. இவ டோட்டலா ஆளே மாறிட்டா. விட்டா அர்ஜூன் சாரயே மிரட்டி ஒரு ஓரமா உட்கார வச்சிருவா போல இருக்கு! இவ இந்த அளவுக்கு பேசுறானா, அந்த அளவுக்கு இவளுக்கும் அவருக்கும் நடுவுல இருந்த ரிலேஷன்ஷிப் ஸ்ட்ராங்கா இருக்குனு அர்த்தம்.” என்று நினைத்தவன் தேன்மொழியிடம் பேசுவதற்காக அவளது ரூமை நோக்கி சென்றான்.
வாசலில் நின்று கொண்டு “நான் உள்ள வரலாமா?” என்று மகேஷ் மெல்லிய குரலில் கேட்க, ஒரு ஓரமாக நின்று அழுது கொண்டிருந்த தேன்மொழி அவசரமாக தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு அவனை திரும்பி பார்த்து “உள்ள வா மகேஷ்!” என்றாள் உடைந்த குரலில். அவள் முகத்தை பார்த்தாலே அவள் அழுதிருக்கிறாள் என்று அவனுக்கு நன்றாக தெரிய, “இங்க என்ன தான் நடந்துட்டு இருக்கு! எனக்கு ஒண்ணுமே புரியல! அர்ஜுன் சார் உங்களுக்கு ஆசையா ஏதோ கிஃப்ட் அனுப்பி இருக்காரு..
நியாயமா அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்! அதை விட்டுட்டு அவங்கள எனக்கு வேண்டாம்னு சொல்லி திருப்பி எடுத்துட்டு போக சொல்லிட்டீங்க. சரி ஏதோ அவர் மேல இருக்குற கோவத்துல அப்படி பண்ணீங்கன்னு வச்சுக்கலாம். பண்றதையும் பண்ணிட்டு இங்க எதுக்கு மேடம் தனியா வந்து நின்னு ஃபீல் பண்ணி அழுதுட்டு இருக்கீங்க?” என்று கேட்டான்.
“முதல்ல இந்த மேடம் கீடம்ன்னு எல்லாம் ஃபார்முலா பேசாம நீ என் கிட்ட எப்பயும் போல சாதாரணமா பேசு. அப்ப தான் நான் சொல்லுவேன்.” என்ற தேன்மொழி அந்த அறையில் உள்ள சோஃபா ஒன்றில் சென்று அமர, அவளுக்கு எதிரில் இருந்த மினி சோஃபாவில் அமர்ந்து கொண்ட மகேஷ் “சரி மா நான் சாதாரணமாகவே பேசுறேன். நீதான் இப்ப பிரக்னண்டா இருக்கேல்ல! இந்த டைம்ல இப்படி எல்லாம் தனியா அழுது ஃபீல் பண்ணிட்டு இருக்கலாமா? உங்களுக்கு மேரேஜ் ஆனதுக்கு அப்புறமா நீயும் அர்ஜுன் சாரும் அடிக்கடி சண்டை போட்டாலும் இப்ப சந்தோஷமா தான் வாழ்ந்துட்டு இருக்கீங்கன்னு நெனச்சேன்.
உன் லைஃப் என்ன ஆகும்னு உன்னை விட அதிகமா நான் நிறைய உனக்காக யோசிச்சு வருத்தப்பட்டு இருக்கின்றேன் தேன்மொழி. ஜானகி மேடம், நீ பிரக்னட்டா இருக்கேன்னு எங்க அம்மாவுக்கு கால் பண்ணி சொல்லும்போது, நெஜமாவே உங்களுக்குள்ள இருக்கிற பிராப்ளம் எல்லாம் சரியாகி நீங்க ஹாப்பியா இருக்கீங்கன்னு நான் சந்தோஷப்பட்டேன். இங்க வந்து பார்த்தா நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல.” என்றான்.
லாஸ்ட் ஆக மகேஷ் தேன்மொழியிடம் அர்ஜுன் அவர்களது முதல் இரவு முடிந்து விடுவதற்குள் கிளம்பி எங்கேயோ துப்பாக்கியுடன் வெளியில் சென்றதை போட்டுக் கொடுத்ததில் இருந்து இன்று நடந்தது வரை அனைத்தையும் சுருக்கமாக மகேஷிடம் சொன்ன தேன்மொழி “அவர் எனக்காக மாறிட்டேன்னு எப்பயும் வந்து சொல்றாரு. ஆனா அதை நான் நம்புறதுக்குள்ள அவர் இன்னும் மாறலைன்னு prove பண்ற மாதிரி ஏதாவது ஒன்னு பண்றாரு. நெஜமாவே எனக்கு அவரை எப்படி ஹாண்டில் பண்றதுன்னு தெரியல மகேஷ். அதான் கடைசியா நாங்க பேசும்போதெல்லாம் நீங்க என்னமோ பண்ணுங்க. நான் எதையுமே கேட்க மாட்டேன் சொல்லிட்டேன்.
இப்பயும் அதனால தான் அவர் கிட்ட டைரக்டா எதையும் கேட்டு பேசி சண்டை போடாம அந்த கிஃப்ட்டை மட்டும் வேண்டாம்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டேன். அதைக் கூட நான் கோபத்தில பண்ணல. நான் அப்படி பன்னாலாவது எனக்காக அவர் இங்க வருவாரான்னு ஒரு சின்ன ஆசை அவ்வளவுதான்! எனக்கு அவர் கூட ஹேப்பியா டைம் ஸ்பென்ட் பண்ணனும் தான் தோணுது. ஆனா அவர் இப்படி ஏதாவது ஒன்னு பண்ணி அடிக்கடி சண்டை போடற மாதிரி சிச்சுவேஷன் கிரியேட் பண்ணிடறாரு. நான் என்ன தான் பண்றது நீயே சொல்லு!” என்று சோகமாகச் சொன்னாள்.
“நீ ரொம்ப சாதாரணமான பொண்ணு தேன்மொழி. அதான் உன்னோட ஆசையும் எதிர்பார்ப்பும் ரொம்ப சாதாரணமா இருக்கு. நீ எதிர்பார்க்கிறது ஒரு சாதாரண உன்னை லவ் பண்ற, எப்பயும் உன் கூடயே இருக்கிற ஒரு அன்பான ஹஸ்பண்ட். பட் உனக்கு வாச்சவாரு மாதிரி இல்லாததுனால உனக்கு கஷ்டமா இருக்கு.
இதுல நீ புரிஞ்சுக்க வேண்டிய விஷயம் என்னன்னா, நீ ஏதோ ஒரு சாதாரண ஆளை கல்யாணம் பண்ணிக்கல. அவர் அர்ஜுன் பிரதாப். அதை விட “AK.” அவரோட பெயருக்கு எவ்ளோ பவர் இருக்குன்னு நேர்ல பாக்குற வரைக்கும் உனக்கு யார் சொன்னாலும் புரியாது. அவரோட உலகம் வேற தேன்மொழி. அந்த உலகத்துல நீயும் இந்த ஃபேமிலில இருக்குறவங்களும் அவர் கூட இருக்கீங்க அவ்வளவுதான்.
அதுக்காக நீயே அவரோட உலகமா இருக்கணும்னு ஆசைப்பட்டா அது நடக்காது. அவரை சேஞ்ச் பண்ணனும்னு நினைக்கிறத விட்டுட்டு, அவர் இப்படித் தான்னு அக்செப்ட் பண்ணிட்டு அவர் கூட ஹாப்பியா சேர்ந்து வாழப்பழகிக்கோ. அப்ப தான் உன்னால நிம்மதியா இருக்க முடியும். சியா மேடம் அப்படித்தான் இருந்தாங்க. அவங்களுக்குன்னு தனியா ஒரு பிசி லைஃப் அவங்க கிரியேட் பண்ணிக்கிட்டாங்க. சோ அவங்களுக்கும் அர்ஜுன் சாருக்கும் நடுவுல இருந்த ரிலேஷன்ஷிப் ஸ்மூத்தா இருந்துச்சு.
சியா மேடம்க்கும் அவருக்கும் நடுவுல இருந்த அந்த அண்டர்ஸ்டாண்டிங் உனக்கு வந்தது ஆகணும். நான் சொல்றது உனக்கு இப்ப புரியாம கூட இருக்கலாம். நல்லா யோசிச்சு பாரு. சும்மா எல்லாத்துக்கும் கேள்வி கேட்டு சண்டை போடாம, முக்கியமா நீ டென்ஷன் ஆகாம நடக்கிறது நடக்கட்டும்னு விட்டுடு.” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு லேசாக புன்னகைத்த தேன்மொழி “நீயும் ஒரு ஆம்பள தானே.. அதான் ஒரு ஆம்பளைனா இப்படித்தான் இருப்பான். பொண்ணுங்க அவங்கள அட்ஜஸ்ட் பண்ணி வாழ்ந்தே ஆகணும்னு பொதுவா எல்லாரும் பேசுற மாதிரி பேசுற. ஆனா ஒரு விதத்துல நீ சொல்றது கரெக்ட் தான். இந்த வீட்ல நான் நிம்மதியா வாழனும்னா அப்படி இருந்தா மட்டும் தான் வர முடியும்.” என்றாள்.
இப்படியே அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, மகேஷுக்கு மகாலட்சுமியிடம் இருந்து கால் வந்தது. அதனால் அவன் பிறகு வந்து பேசுவதாக சொல்லிவிட்டு வெளியில் சென்று விட, தனது ரூமில் தனியாக அமர்ந்திருந்த தேன்மொழி அவளது மொபைல் ஃபோனை எடுத்து பார்த்தாள். அர்ஜுனிடம் இருந்து அவளுக்கு பத்திற்க்கும் மேற்பட்ட மிஸ்டு கால்கள் வந்திருந்தது. லாஸ்ட் ஆக “ஹேய்.. நான் ஆபீஸ்ல ஒரு இம்பார்டன்ட் மீட்டிங்ல இருக்கேன் டி. அதான் உன்ன வந்து நேர்ல பாக்குறதுக்கு முன்னாடி சர்ப்ரைஸா உனக்கு ஏதாவது பண்ணனும்னு நினைச்சு அந்த கிஃப்டை சென்ட் பண்ணேன். இப்ப அதை எதுக்கு நீ திருப்பி அனுப்பின?
நானும் மார்னிங்ல இருந்து உன் கிட்ட பேச ட்ரை பண்ணிட்டு இருக்கேன். நீ வேணும்னே கோபத்துல என்ன அவாய்ட் பண்றேன்னு நல்லா தெரியுது. அட்லீஸ்ட் என் மேல இருக்கிற கோபத்தை உன் மேலயும், என் குழந்தை மேலயும் காட்டி ஒழுங்கா சாப்பிடாம இருந்து தொலையாத. நான் மீட்டிங் முடிஞ்ச உடனே அங்க கிளம்பி வரேன்.
இந்த நேச்சுரல் டிசாஸ்டர்னால கொஞ்சம் லாஸ் ஆயிடுச்சு. அதனால ஒரே கிளைமேட் மீட்டிங், ஷேர் ஹோல்டர்ஸ் மீட்டிங்ன்னு இம்சையா இருக்கு. நானும் முடியும் முடியும்னு பார்க்கிறேன் முடிய மாட்டேங்குது. ப்ளீஸ் டி! இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சுடு. இருக்கிற stress-ல உன்னை எப்படி சமாதானப்படுத்தறதுன்னு யோசிச்சா கூட ஒரு ஐடியாவும் வரமாட்டேங்குது. உன் புருஷன் பாவம் டி. PLEASE FORGIVE ME HOMEY BABY 😭😭😭” என பக்கம் பக்கமாக டைப் செய்து அவன் அனுப்பி இருந்த மெசேஜை ஆர்வத்துடன் படித்துப் பார்த்தாள் தேன்மொழி.
இவ்வளவு நேரமாக மகேஷ் அவளுக்கு புத்திமதி சொல்லும் விதமாக பேசியது அவள் மனதிற்குள் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க, அதன் விளைவாக அர்ஜுன் அனுப்பிய மெசேஜை பார்த்து தனது இறுக்கம் மனநிலையை கொஞ்சம் மாற்றி லேசாக புன்னகைத்தாள் அவள். அப்போதும் அவனுக்கு ரிப்ளை அனுப்ப அவளது கல் நெஞ்சம் இடம் கொடுக்காததால், கண்டும் காணாமல் அந்த மெசேஜை அப்படியே விட்டு விட்டாள்.
ஆனால் தனக்காக அவன் கண்டிப்பாக வீட்டிற்கு சீக்கிரம் வருவான் என்ற நம்பிக்கை மட்டும் அவளுக்குள் ஏற்பட, அதே மகிழ்ச்சியுடன் சென்று அவனுக்காக அழகாக தயாராக தொடங்கினாள் தேன்மொழி.
- மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: மச்சம் 125
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.