அத்தியாயம் 97
அமுதாவை சென்று பார்க்கலாமா வேண்டாமா? என யோசித்து தயங்கி நின்று கொண்டிருந்த விஜய். இன்று விஜயின் செய்கைகள் அனைத்தும் விசித்திரமாக இருப்பதால் தினேஷ் ஒரு பக்கம் அவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க, “என்ன சார் ஏதோ யோசிச்சிட்டு அப்படியே நிக்கிறீங்க? நீங்க அமுதாவை பார்க்க வரலையா?” என்று கேட்டான் வெற்றி.
“இல்ல பரவால்ல, அவ தூங்கிட்டு இருக்கான்னு நீ தானே சொன்ன.. அவள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். அப்புறமா நான் வந்துட்டு போனேன்னு மட்டும் அவ கிட்ட சொல்லுங்க போதும்.” என்ற விஜய் மற்ற அனைவரிடமும் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி தலைமறைவாக ஹாஸ்பிடல்ல விட்டு வெளியேறினான்.
வாடிய முகத்துடன் விஜய் சென்று காரின் பின் சீட்டில் அமர, “ என்ன பாஸ் இப்ப உங்களுக்கு டிரைவ் பண்ற மூடு இல்லையா?” என்று கேட்டபடி சென்று டிரைவிங் சீட்டில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான் தினேஷ். அவனையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்த விஜய் “ எனக்கு இப்ப யாரையாவது போட்டு அடிச்சு பொளக்கணும்னு தோணுது. நீ என்ன நினைக்கிற? அதுக்கு எவனாவது இளிச்சவாயன் இன்னைக்கு சிக்குவானா மாட்டானா?” என்று கேட்டான்.
“ ஐயையோ இவர் சொல்றத பார்த்தா நான் தான் அந்த இளிச்சவாயனா இருப்பேன் போல இருக்கு. பாஸ் இன்னைக்கு அடிச்ச வெயிலை விட ரொம்ப ஹாட்டா இருக்காரு. தேவை இல்லாம அவர் கிட்ட வாயை கொடுத்து நம்ம வாங்கி கட்டிக்க கூடாது.” என்று நினைத்த தினேஷ், “ எதுக்கும் நல்லா யோசிச்சு பாருங்க பாஸ்.. என்ன மாதிரி நீங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறதுக்கு நாலு பேர் இருந்தாலும், இந்த வேர்ல்டுல உங்களை கடுப்பேத்துறதுக்குன்னு நிறைய பேர் இருக்காங்க. நீங்க அதுல இருந்து யாராவது ஒரு ஆள சூஸ் பண்ண நல்லா இருக்கும்.” என்றான்.
“அதுக்கெல்லாம் டைம் இல்ல. நீ மூடிட்டு டிரைவ் பண்ணு.” என்று விஜய் மிரட்டும் தோரணையில் சொல்ல, “ஓகே பாஸ் நான் எல்லாத்தையும் முடிக்கிறேன். நீங்க டென்ஷன் ஆகாதீங்க.” என்ற தினேஷ் கார் ஓட்டியபடி அடுத்த சில நொடிகள் கழித்து மீண்டும் “ பாஸ்..!!” என இழுத்தான்.
“Shit… உனக்கு என்ன தான் டா பிரச்சனை? இன்னைக்கு என் கையால அடி வாங்கி பரலோகம் போயே ஆகணும்னு இருக்கியா?” என்று விஜய் தன் பற்களை கடித்துக் கொண்டு கேட்க, “ இல்லை இல்லை பாஸ்.. நான் பாட்டுக்கு காரை ஸ்டார்ட் பண்ணிட்டேன். எங்க போறதுன்னு தெரியாம பத்து நிமிஷமா அந்த பொண்ணு அட்மிட் ஆகி இருக்கிற ஹாஸ்பிடல் இருக்கிற தெருவையே சுத்திக்கிட்டு இருக்கேன். இப்ப நம்ம எங்க போறோன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.” என்று அவசரமான குரலில் சொன்னான் தினேஷ்.
“ம்ம்… மதுரையில நம்ம பார் இருக்குல்ல அங்க போ. அப்புறம்..” என்று சொல்லிவிட்டு சில நொடிகள் எதையோ யோசித்த விஜய், “ அண்ட் வளக்கமா அரேஞ்ச் பண்ற எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிடு.” என்றான் ஒரே மூச்சாக. “ என்ன இன்னைக்கு நம்ம பாஸ் என்னமோ படத்துல ஒரே டைம்ல வேற வேற கேரக்டர்ல டபுள் ஆக்சன் ட்ரிபிள் ஆக்சன்னு நடிக்கிற மாதிரி ஒரே நாள்ல நல்லவனாவும், கெட்டவனாவும் மாறி மாறி perform பண்றாரு! வருஷகணக்கா இவர் கூடையே குப்பை கொட்டியும் இவர் கேரக்டர் என்னன்னு இன்னும் நம்மளால புரிஞ்சுக்க முடியல.” என்று நினைத்த தினேஷ் அப்போதும் உறுதி செய்து கொள்வதற்காக, “எல்லாத்தையுமே அரேஞ்ச் பண்ணனுமா பாஸ்?” என்று தயக்கத்துடன் கேட்டான்.
“நான் அப்படி தானே சொன்னேன்!” என்று விஜய் அவனை மிரட்டும் தோரணையில் கேட்க, அவனது கடுமையான குரலில் பயந்து போன தினேஷ் பதட்டத்துடன் அவசரமாக “சாரி பாஸ்.. சாரி பாஸ்.. நீங்க சொல்லிட்டீங்கல்ல.. நான் எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிடுறேன்.” என்றான். அதற்கு மேல் அவர்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
கார் ஓட்டிக் கொண்டு சென்ற தினேஷ் தனது ஆட்களுக்கு மெசேஜ் மூலம் அடுத்தடுத்து அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று instructions கொடுத்தான். அனைத்தும் ரெடியாக இருக்கிறது என்று அவனுக்கு தகவல் கிடைத்தவுடன், வழக்கமாக அவர்கள் செல்லும் பாருக்கு விஜயுடன் சென்றான் தினேஷ்.
விஜய் தனக்கென்று அங்கே எப்போதும் ரிசர்வ் செய்யப்பட்டு இருக்கும் பிரைவேட் அறையில் சென்று அமர்ந்து மூச்சு முட்ட குடிக்க தொடங்கினான். அப்படியே ஒரு 10 நிமிடங்கள் கடக்க, அவன் இருந்த ரூமிற்குள் இருபதுகளின் தொடக்கத்தில் இருந்த அட்வர்டைஸ்மென்ட்களில் நடிக்கும் மாடல் ஒருத்தி தனது மேல் அழகின் வளைவு நெழிவுகளை கவர்ச்சியாக காட்டும் படியான ஒரு டிரான்ஸ்பரென்ட் வெள்ளை நிற சட்டையையும், கருப்பு நிற குட்டை பாவாடை ஒன்றையும் அணிந்து கொண்டு உள்ளே வந்தாள்.
விஜயை பார்த்தவுடன் அவளது கண்கள் சாசர் போல ஆர்வத்தில் விரிய, “ லாஸ்ட் டைம் நீங்களும் நானும் 2 days வரைக்கும் என்ஜாய் பண்ணும் போதே நான் உங்களுக்கு எவ்ளோ பெரிய fan ஆகிட்டேன் தெரியுமா விஜய் சார்? உங்களோட மத்த girl fansக்கு கிடைக்காத ஆப்பர்சூனிட்டி எனக்கு கிடைச்சது
நான் நிஜமாகவே மாடலிங் இண்டஸ்ட்ரிக்கு வந்ததுக்கு அன்னைக்கு தான் ரொம்ப லக்கியா feel பண்ணேன். இப்ப வரைக்கும் அன்னைக்கு நடந்த எதையும் என்னால மறக்கவே முடியல. That night was like a magic.
உங்க ஞாபகம் வரும்போது எல்லாம் அன்னைக்கு நடந்தத நான் நினைச்சு பார்ப்பேன் தெரியுமா? உங்களுக்காகன்னு சொல்லி எனக்கு கால் வந்த உடனே, நான் எவ்ளோ பேமென்ட்னு கூட கேட்காம உடனே ஓகே சொல்லிட்டேன் தெரியுமா sir? அந்த அளவுக்கு I am crazy about you. Even நீங்க எனக்கு pay பண்ணாம இருந்தா கூட, நீங்க எப்ப கேட்டாலும் நான் உங்களுக்காக கண்டிப்பா வருவேன்.” என்று தனது குலைவான குரலை இன்னும் குலைத்துக் குலைத்து பேசியபடி அவன் அருகில் சென்றாள்.
அவள் பேசியதை எல்லாம் காதில் வாங்காமல் குடித்துக் கொண்டு இருந்த விஜய் தரையை பார்த்தபடி ஏதோ யோசனையில் மூழ்கி இருக்க, “என்ன சார் என்ன பாக்கவே மாட்டேங்கிறீங்க? நான் இன்னைக்கு ஹாட்டா இல்லையா? இல்ல, உங்களுக்கு இந்த டிரஸ் புடிக்கலையா? நம்மளோட private spacela தேவை இல்லாம டிரஸ் எதுக்கு? நான் இப்பவே எல்லாத்தையும் ரிமூவ் பண்ணிடவா?” என்று கேட்டபடி கவர்ச்சியான புன்னகையுடன் அந்த இளம் பெண் சென்று அவனது மடியில் அமர்ந்து அவனது சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக கழட்ட தொடங்கினாள்.
ஹாஸ்பிடலில் தனது வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து செட்டில் ஆகி இருந்த அனாமிகா தன் அப்பா வாங்கி கொடுத்திருந்த பிரசிடெண்டின் மகள் அபிநயாவின் நம்பருக்கு கால் செய்தாள். அப்போது நேரம் கிட்டத்தட்ட இரவு 9 மணி ஆகி இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது வெளியில் உள்ளவர்களுக்கும் ஓரளவிற்கு தெரிந்திருந்ததால் அவளையும், அவளது அப்பாவையும் பொதுமக்கள் ஏளனமாக பார்க்கத் தொடங்கி விட்டதால் வாழ்க்கையையே வெறுத்த நிலையில் தனது ரூமை விட்டு வெளியில் வராமல் அங்கேயே அடைந்து கிடந்தாள் அபிநயா.
அவளது மொபைல் போன் ரிங் ஆக, “இந்த டைம்ல நமக்கு யார் கால் பண்றது? அதுவும் unknown number ah இருக்கே… ஒருவேளை நான் தான் அமுதாவுக்கு எதிரா எல்லா வேலையையும் பாக்கிறேன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சா? அதான் தெரியாத நம்பர்ல இருந்து என்ன திட்டறதுக்காக கால் பண்றாங்களா?” என்று யோசித்தவரே கொஞ்சம் பயத்துடன் அந்த அழைப்பை ஏற்ற அபிநயா நடுங்கிய குரலில், “ ஹலோ யாரு?” என்று கேட்டாள்.
“ ஹலோ அபிநயா.. இது நீங்க தானே? நான் விஜயோட வைஃப் அனாமிகா பேசுறேன். இந்த டைம்ல உங்களுக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்றதுக்கு சாரி. உங்களுக்கு நடந்தது எல்லாத்தையும் நான் கேள்விப்பட்டேன்.
எனக்கு உங்களை பத்தி நினைச்சாலே பாவமா இருந்துச்சு. அதான் உங்களுக்கு ஆறுதல் சொல்லிட்டு அப்படியே உங்க கிட்ட some இம்போர்ட்டண்ட் matters-ஐ பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்னு கால் பண்ணேன். இப்ப நம்ம பேசலாமா? நீங்க பிஸியா இருந்தீங்கன்னா பரவால்ல, நம்ம மார்னிங் கூட பேசிக்கலாம்.” என்று தனது இனிமையான குரலில் சொன்னாள் அனாமிகா.
அனாமிகா part time வில்லி என்றால், அபிநயா பரம்பரை வில்லி. தன்னிடம் அனாமிகா பேசிய விதத்தை வைத்தே அவள் தன் பக்கம் தான். தன்னிடம் அனாமிகாவிற்கு ஆக வேண்டிய காரியம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று புரிந்து கொண்ட அபிநயா தனக்குள் இருந்த பயத்தை விட்டுவிட்டு இப்போது சந்தோஷமாக “ ஹலோ மேடம்.. நீங்க எனக்கு கால் பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல.
என்ன தான் நாங்க எங்க மேல தப்பு இல்லைன்னு prove பண்ணி இருந்தா கூட, விஜய் சார் எங்க மேல கோவப்படுறதுனால எல்லாரும் நாங்க தான் தப்புன்னு நினைச்சுட்டு இருக்காங்க. But நீங்க என்ன புரிஞ்சிக்கிட்டிங்கன்னு நினைக்கும்போது எனக்கு ஹேப்பியா இருக்கு.” என்று எதற்கும் இருக்கட்டுமே என நினைத்து நல்லவளை போலவே முதலில் நடித்துக் கொட்டினாள் அபிநயா.
“ம்ம்… எனக்கு புரியுது அபிநயா. பட் நான் விஜய் மாதிரி இல்ல. என்ன பொறுத்த வரைக்கும் இங்க சரி தப்புன்னு எதுவுமே இல்ல. எல்லாமே நமக்கு எது தேவை இல்லைன்றத பொறுத்து தான். எல்லாத்துக்கும் நல்லவங்களா வாழ்றதுக்கு கடவுளால கூட முடியாது. After all we are just human beings. நம்மளால என்ன பண்ண முடியும் சொல்லுங்க?” என்று கேட்டு அனாமிகாவும் safer side-ல் இருந்து கோல் போட்டாள்.
“அதுவும் சரி தான் மேடம். மத்தவங்கள பத்தியே யோசிச்சுக்கிட்டு இருந்தா நம்ம எப்ப வாழ்றது? எல்லாருக்கும் ஒரே ஒரு லைஃப் தானே.. அதை நமக்கு புடிச்ச மாதிரி வாழனும். நமக்கு என்ன வேணுமோ அதை நம்மளே எடுத்துக்கணும். வேற யாராவது தானா வந்து அதை நமக்கு கொடுப்பாங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருப்பதெல்லாம் எனக்கு பிடிக்காது.” என்று அபிநயா இப்போது நேரடியாக ஒரு பிட்டை போட,
“சூப்பர் நானும் அப்படித் தான் அபி. நம்ம ரெண்டு பேருக்குள்ள நிறைய விஷயங்கள் ஒத்துப் போகுது. சோ நம்ம சேர்ந்து வொர்க் பண்ணா or friends-ஆ இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள் அனாமிகா.
அதற்காகவே காத்திருந்த அபிநயா வாய் எல்லாம் பல்லாக “கண்டிப்பா மேடம்.” என்று ஆர்வத்துடன் சொன்னாள்.
- காதல் மலரும் 🌹
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

Author: thenaruvitamilnovels
Article Title: நாயகன் 97
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.