நாயகன் 96

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 96

அமுதாவை பார்க்க இன்னும் தான் இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டுமா? என நினைத்து வருத்தப்பட்ட விஜய் எப்போது சூட்டிங் முடியும் என்று காத்துக் கொண்டே இருந்து அன்று பார்த்து டைரக்டர் ஸ்ரீகாந்த் இரவு 7 மணியை கடந்தும் ஷூட்டிங் எடுத்துக் கொண்டே இருந்ததால் கடுப்பாகி‌ மானிட்டரில் மோனிஷா நடித்துக் கொண்டிருந்த சீனை பார்த்துக் கொண்டிருந்தபோது “பேக்கப்!” என்று மைக்கில் கத்தினான்.

அவனது குரல் அந்த சூட்டிங் ஸ்பாட் எங்கும் திடீரென இடியென முழங்க, அங்கிருந்த அனைவரும் “என்ன ஆச்சு? ஏதாவது ப்ராப்ளமா? ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும்போது பாதியிலேயே எதுக்கு விஜய் சார் பேக்கப்னு கத்துறாரு? யாராவது ஏதாவது தப்பு பண்ணிட்டாங்களா?” என தங்களுக்குள் கிசுகிசுத்தவாரு கலவரமான முகத்துடன் இருந்தார்கள்.

அதை கண்டு கொள்ளாமல் எழுந்து தனது கார் இருக்கும் இடத்தை நோக்கி நடக்க தொடங்கி விட்டான் விஜய். “பாஸ் பாஸ்... நில்லுங்க.. இப்படி ஷூட்டிங்கை பாதில ஸ்டாப் பண்ணிட்டு இந்த டைம்ல எங்க போக போறீங்க?” என்று அவன் பின்னே ஓட்டமும் நடையுமாக சென்ற தினேஷ் கேட்க, ஒரு நொடி நின்று அவனை முறைத்து பார்த்த விஜய் “I am not answerable to you.” என்று சொல்லிவிட்டு தனது காரில் எறி அமர்ந்தான்.

“நீங்க என் கிட்ட எதுவும் சொல்லலன்னா கூட பரவால்ல. தனியா மட்டும் எங்கயும் போய்டாதீங்க பாஸ்.” என்று அவசரமான குரலில் சொன்ன தினேஷ் விஜய் காரை ஸ்டார்ட் செய்து கிளம்புவதற்குள் ஓடி சென்று எப்படியோ காரில் ஏறி அவன் அருகில் உள்ள சீட்டில் அமர்ந்து கொண்டான்.

விஜய் தனது காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்ப, “பாஸ்..!!” என இழுத்தான் தினேஷ். விஜய் மீண்டும் அவனைப் பார்த்து முறைக்க, “அட சும்மா சும்மா முறைச்சு என்னை பயமுறுத்தாதீங்க பாஸ். இப்படி டிரஸ் கூட சேஞ்ச் பண்ணாம சூட்டிங் காஸ்டியூம்ல எப்பயுமே நீங்க எங்கயும் வெளிய போக மாட்டீங்களே.. இப்ப என்ன ஆச்சு உங்களுக்கு? இப்ப நம்ம எங்க பாஸ் போயிட்டு இருக்கோம்?” என்று அவனிடம் கேட்ட தினேஷ் எப்போதும் போல இப்போதும் சொல்லாமல் கொள்ளாமல் போய் ஏதேனும் பிரச்சனையில் விஜய் மாட்டிக் கொண்டால் தங்களை காப்பாற்றிக் கொள்ள உடன் ஆட்கள் இருக்க வேண்டும் என நினைத்து அப்படியே செக்யூரிட்டி டீமில்மில் உள்ளவர்களுக்கு தங்களை பின் தொடர்ந்து வரும்படி மெசேஜ் அனுப்பினான்.

அமைதியாகவே இருந்த விஜய் சில நிமிடங்கள் அப்படியே கார் ஓட்டி சென்று ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு முன்னே காரை நிறுத்தி, “போய் நல்லா ஃப்பிரஷா இருக்குற costly-யான fruits-ஆ பாத்து வாங்கிட்டு வா.” என்று கட்டளையிட்டான்.

“ஷூட்டிங்கை பாதியில நிறுத்திட்டு நைட்டு ஏழரை மணிக்கு இவர் எதுக்கு போய் என்ன ஃப்ரூட்ஸ் வாங்கிட்டு வர சொல்றாரு?” என்று யோசித்து குழம்பிய தினேஷுக்கு ஏதோ புரிவதைப் போல இருக்க, “ஓஹோ நீங்க அப்படி வரீங்களா? எனக்கு புரிஞ்சிருச்சு புரிஞ்சுருச்சு பாஸ். இருங்க, இப்பவே போய் நான் விதவிதமா நல்ல ஃப்ரூட்ஸா பார்த்து வாங்கிட்டு வரேன். நீங்க வெயிட் பண்ணுங்க. 10 மினிட்ஸ்ல நான் ஃப்ரூட்ஸ்ஸோட வரேன்.” என்று சொல்லிவிட்டு கிண்டலாக அவனை பார்த்து சிரித்தபடி பழம் வாங்குவதற்காக சென்றான்.

தினேஷும் அடுத்த பத்து நிமிடத்தில் அவன் சொன்னதைப் போல பழங்களுடன் வந்து காரில் ஏற, தானே காரை ஓட்டிக் கொண்டு சென்ற விஜய் ‌ அடுத்த 40 நிமிடத்தில் அமுதாவை அவன் அட்மிட் செய்த ஹாஸ்பிடலின் வாசலில் சென்று நின்றான்.‌ விஜயை பார்த்து நக்கலாக சிரித்த தினேஷ் “கண்டிப்பா நீங்க இங்க தான் வருவீங்கன்னு எனக்கு ஏற்கனவே தெரியும் பாஸ். அதான் நம்ம பசங்களுக்கு மெசேஜ் பண்ணி இங்க பக்கத்துல பெருசா கிரவுட் இல்லாம பாத்துக்க சொன்னேன். உங்களுக்கு யூஸ் ஆகுமேனு வரும்போது உங்களுக்காகவே ஸ்பெசலா இந்த மாஸ்க் கூலிங் கிளாஸை எல்லாம் வாங்கிட்டு வந்தேன். இந்தாங்க பாஸ்.. இதை போட்டுட்டு யாருக்கும் தெரியாம போய் அமுதாவை பாருங்க.” என்று சொல்லி விட்டு ஒரு கவரை அவன் கையில் கொடுத்தான்.

அதை வெடுக்கென்று பிடுங்கிய விஜய் தன்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ள கூடாது என்பதற்காக மாஸ்க், கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுக் கொண்டு காரை விட்டு கீழே இறங்கினான். தினேஷும் அவனுடன் செல்ல, அவர்கள் இருவரையும் பாதுகாவலர்கள் சூழ்ந்து கொண்டு பத்திரமாக மருத்துவமனைக்குள் அழைத்து சென்றார்கள்.

அமுதா இப்போது ஜெனரல் வார்ட்டிற்க்கு மாற்றப்பட்டு இருந்தாள். இருப்பினும் விஜய் அவளது ட்ரீட்மென்ட்டுக்காக தினேஷை அனுப்பி ஒரு பெரிய தொகையை அந்த ஹாஸ்பிடலுக்கு கட்ட சொல்லி இருந்ததால் அவளுக்கு என்று பிரத்தியேகமான ஒரு தனி அறை கொடுக்கப்பட்டது.‌ அங்கே அவள் மாத்திரையின் விளைவால் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, அவளது குடும்பத்தினர்கள் எல்லாம் வெயிட்டிங் ஏரியாவில் அமர்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அமுதாவிற்கு தன்னால் தான் இப்படி ஆகிவிட்டதோ என நினைத்து அந்த நொடியில் இருந்து இப்போது வரையிலும் குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டு இருந்த மணிகண்டன் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஹாஸ்பிடலுக்கு வந்து அமுதாவின் அருகிலேயே இருந்தார். தினேஷ் உடன் அங்கே சென்ற விஜய் வெளியில் அமர்ந்திருந்த அவர்களை பார்த்துவிட்டு நின்றான்.

அவர்களை கவனித்துவிட்ட வெற்றி தினேஷ் வந்திருக்கிறான் என்றால் அவனுக்கு அருகில் நிற்பது விஜய் தான் என்னை தெரிந்து கொண்டு “விஜய் சார்.. நீங்களா? இந்த டைம்ல நீங்க இங்க வருவீங்கன்னு நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. நாங்களே அமுதாவுக்கு உடம்பு சரியாகி அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போனதுக்கு அப்புறமா உங்களை பார்த்து தேங்க்ஸ் சொல்லலாம்னு இருந்தோம். நீங்களே நேர்ல வந்துட்டீங்க.” என்றான்.

அவன் அங்கிருக்கும் மற்ற பொது மக்களின் கவனத்தை பெற்று விடக் கூடாது என்று கொஞ்சம் மெதுவாக பேசி இருந்தாலும், அவனுக்கு அருகில் இருந்த அமுதாவின் குடும்பத்தினருக்கு அது நன்றாகவே கேட்டது. விஜய் வந்திருக்கிறான் என்று தெரிந்தவுடன் மணிகண்டன் அன்னபூரணி உட்பட அனைவரும் எழுந்து அவன் அருகில் வந்தார்கள்.

தான் வாங்கி வந்த பழங்களை வெற்றிடம் கொடுத்த விஜய் “இதை அமுதா கிட்ட கொடுத்துடு.” என்று சொல்லிவிட்டு நேராக மணிகண்டனின் அருகில் சென்று “என்னால தான் உங்க வீட்டு பொண்ணோட கல்யாணம் நின்னு போயிடுச்சுன்னு நீங்க எல்லாரும் என் மேல கோவமா இருக்கீங்கன்னு எனக்கு தெரியும்.. அன்னைக்கே அதுக்காக உங்க கிட்ட நான் மன்னிப்பு கேட்கலாம்ன்னு நெனச்சேன்.

நான் ஒன்னு நினைச்சு வந்தா, கடைசில அங்க வேற ஒன்னு நடந்து அமுதாவுக்கு இப்ப இப்படி ஆயிடுச்சு. நான் அங்க வராம இருந்திருந்தா எல்லாமே நல்லபடியா நடந்திருக்குமோன்னு நினைக்கும்போது எனக்கே கொஞ்சம் கில்ட்டியா இருந்துச்சு. அதான் உங்கள பாத்து சாரி சொல்லிட்டு போலாம்னு வந்தேன் சார்.” என்று நிதானமான குரலில் சொன்னான் விஜய்.

அவனைப் பற்றி அங்கிருக்கும் அனைவருக்கும் ஒரு அளவிற்கு தெரியும் என்பதால், “இது நிஜமாவே விஜய் தானா? இவனா இப்படி எல்லாம் பேசுறான்?” என்ற கேள்வியுடன் அவனை ஆச்சரியமாக பார்த்தார்கள். தினேஷ் உட்பட விஜயின் ஆட்கள் கூட அதே ஷாக்கில் தான் இருந்தார்கள்.

அடாவடியாக பேசுபவர்களிடம் நாமும் பதிலுக்கு நம் திமிரை காட்டி ஏதேனும் பேசலாம். ஆனால் இப்படி தனது கௌரவத்தை விட்டுக் கொடுத்து வந்து பெரிய இடத்தில் இருக்கும் ஒருவன் மன்னிப்பு கேட்கும் போது‌ அவனிடம் என்ன சொல்ல முடியும்? மணிகண்டனுக்கு அந்த நொடி இதற்கு முன்பு விஜயின் மீது இருந்த வருத்தங்கள் கூட அந்த நொடியில் மறைந்து போய்விட,

“பரவால்ல.. பரவால்ல சார். நீங்க எவ்ளோ பெரிய மனுஷன்! நீங்க போய் எதுக்கு என் கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க? நியாயமா உங்களுக்கு தெரியாம எங்க அமுதாவுக்கு கல்யாணம் பண்ண நினைச்சதுக்கு நாங்க தான் உங்க கிட்ட மன்னிப்பு கேக்கணும்.

எங்களுக்கு என்ன போராத காலமோ தெரியல. நாங்க நல்லதுன்னு நினைச்சு எது பண்ணாலும் சரியா வரமாட்டேங்குது. அமுதாவுக்கும் இந்த கல்யாணத்துல முன்னாடியில இருந்தே பெருசா விருப்பமில்ல. அவளும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லிட்டு தான் இருந்தா. நான் தான் கூறு கெட்டவன்.

கூறுகெட்ட தனமா எதையோ எதையோ எல்லாத்தையும் நினைச்ச உடனே செஞ்சுப்புடனும்னு பிடிவாதமா இருந்துட்டேன். அன்னைக்கு எல்லாம் எங்க ஆத்தா அமுதாவை கோவத்துல கைய நீட்டி வேற அடிச்சுப்புட்டேன். இப்ப கூட அதை நினைச்சா எனக்கு மனசே ஆர மாட்டேங்குது சார். நாங்க எல்லாரும் உங்கள புரிஞ்சுக்காம உங்க கூட அன்னைக்கு சண்டை கட்டிட்டோம். தயவு செஞ்சு எங்களை மன்னிச்சுக்கோங்க.” என்று மணிகண்டனும் விஜயிடம் மன்னிப்பு கேட்டார்.

“பரவால்ல விடுங்க சார். நான் தான் அந்த படத்தோட மெயின் ப்ரொடியூசரா இருந்தாலும், என்னோடது ஒரு பக்கா கார்ப்பரேட் கம்பெனி. அதுக்குன்னு சில rules and regulations இருக்கு. நானே நெனச்சாலும் அதை எதுவும் பண்ண முடியாது. உங்களுக்கு அத பத்தி எல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. அதான் இப்படி பண்ணிட்டீங்க. சோ நான் அத பெருசா எடுத்துக்கல, நீங்க விடுங்க.” என்று விஜய் மிகவும் தன்மையாக பேச, அங்கே இருந்த அனைவருக்கும் அவன் மீது மரியாதை கூடியது.

“அமுதா இப்ப எப்படி இருக்கா?” என்று அவளை காணும் ஆர்வத்துடன் விஜய் கேட்க, “அவ இப்ப நல்லா தான் இருக்கா சார். நாளைக்கு செக் பண்ணிட்டு டாக்டர் பிஸ்சார்ஜ் பண்றதா என்னன்னு சொல்றேன்னு சொல்லி இருக்காரு. இப்ப தான் மாத்திரை போட்டுட்டு தூங்குனா. நீங்க வாங்க உள்ள போய் நம்ம அவளை பார்க்கலாம். இப்ப தான் தூங்குனா. எழுப்புனா அவ பேசுவா.” என்ற வெற்றி அமுதாவை பார்க்க வரச் சொல்லி விஜய்யை அழைத்தான்.

தனது இதயம் அவளை பார்க்க வேண்டும் என்று அவளுக்காக ஏங்கி துடித்தாலும், “நேத்து அனாமிகா கூட அப்படி எல்லாம் இருந்துட்டு இப்ப என்னால போய் எப்படி அமுதா முகத்தில முழிக்க முடியும்?” என்று நினைத்த விஜய் அமுதாவை பார்க்க போகலாமா வேண்டாமா? என தனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான்.

- காதல் மலரும் 🌹

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)
 

Author: thenaruvitamilnovels
Article Title: நாயகன் 96
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.