நாயகன் 95

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 95

குளித்துக் கொண்டிருந்த விஜய்க்கு தொடர்ந்து அமுதா அனாமிகா என இருவரின் ஞாபகமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்க, அவனுக்கு பைத்தியம் பிடிப்பதைப் போல இருந்ததால் தன் தலையை பிடித்துக் கொண்டு “ஆஆஆஆ!” என்று அழறினான். அவனது சத்தம் வெளியில் இருந்த தினேஷ் வரையிலும் கேட்க,

“என்ன ஆச்சு நம்ம பாஸுக்கு? திடீர் திடீர்னு டிஃப்ரண்ட் டிஃபரண்டா கத்துறாரு! சம் டைம்ஸ் அவர் பண்றது எல்லாத்தையும் பாக்கும்போது லைட்டா அவர் மண்டையில நெட்டு லூசான மாதிரி தான் இருக்கும். ஆனா இப்ப முழுசா லூசான மாதிரி தெரியுதே! நம்ம போய் என்னன்னு பாக்கலாமா?” என்று ஒரு நொடி யோசித்த தினேஷ், “இல்ல வேணாம் வேணாம் சும்மா இருந்தாலே அவர் ஆடு ஆடுன்னு ஆடுவார். பாஸ் இப்ப நல்லா form-ல அவர் கிட்ட இப்ப போய் நம்ம வாலண்டியரா சிக்கனா கைமா தான். எதுக்கும் கொஞ்ச நேரத்துக்கு அவர் கண்ணுல படாமையே இருப்போம்.” என நினைத்து தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

விடியற்காலையில் விஜயின் வீட்டில் இருந்து கிளம்பிய அனாமிகா தனது அப்பாவிற்கு தகவல் சொல்லிவிட்டு நேராக தானே கார் ஓட்டிக் கொண்டு சென்னை சென்றாள். தனது அப்பா, அம்மாவுடன் அவர்களது ஃபேமிலி டாக்டர் வைத்திருக்கும் ஹாஸ்பிடலுக்கு சென்று சேர்ந்த அனாமிகா பத்திரப்படுத்தி தான் கொண்டு வந்த டப்பாவை டாக்டரிடம் கொடுத்தாள்.

“நீங்க சொன்னதை வச்சு பாத்தா நேச்சுரலாவே நீங்க கன்சீவ் ஆகுறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு அனாமிகா. சோ நம்ம ஒரு 20 டேஸ் வெயிட் பண்ணி பார்க்கலாம். அப்பயும் எந்த ரிசல்ட்டும் தெரியலைனா அப்பா வேணும்னா நம்ம இதை யூஸ் பண்ணலாம். அதுவரைக்கும் இதை நாங்க பத்திரமா ஸ்டோர் பண்ணி வைக்கிறோம்.” என்று டாக்டர் சொல்ல, “என்னது நீங்க ஸ்டோர் பண்ணி வைக்க போறீங்களா? நோ டாக்டர், நான் 1 பர்சன்ட் கூட ரிஸ்க் எடுக்க தயாரா இல்லை. எதுக்கு 20 டேஸ் வெயிட் பண்ணிக்கிட்டு? நீங்க இப்பவே நான் கொண்டு வந்ததை வச்சு உங்க ப்ரொசீஜரை ஸ்டார்ட் பண்ணுங்க. இதை யாருக்கும் தெரியாம கொண்டு வரதுக்கு நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும். என்னால இதை ஸ்டோர் பண்ணி வச்சுட்டு 20 டேஸ் ஆகுற வரைக்கும் வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியாது.” என்று அவசரமான குரலில் சொன்னாள் அனாமிகா.

தன் மகள் சொல்வது தான் சரி என்று நினைத்த அவளது அப்பாவும் “அனாமிகா சொல்றது தான் கரெக்ட்டு டாக்டர். விஜய் கொஞ்சம் கொஞ்சமா இவள விட்டு விலகி போயிட்டு இருக்கான்.. இந்த டைம்ல 20 நாள் ஆகட்டும் 30 நாள் ஆகட்டும்னு நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது.. நீங்க இப்பவே ப்ரொசீஜரை ஸ்டார்ட் பண்ணுங்க. அடுத்த மாசம் இந்நேரம் எல்லாம் என் பொண்ணு வயித்துல விஜயோட குழந்தை வளரனும்.‌ கோர்ட்டுல நெக்ஸ்ட் ஹியரிங் நடக்கும்போது இதை ஒரு ரீசனா சொல்லி அந்த டிவர்ஸ் கேசை தள்ளுபடி பண்ண சொல்லி நாங்க கேட்க போறோம். அதுக்கு இந்த குழந்தை ரொம்ப முக்கியம்.” என்று சொல்லி டாக்டரை சமாதானப்படுத்தினார்.

“ஓகே then, நீங்க இந்த விஷயத்துல இவ்வளவு சீரியஸா இருக்கும்போது என்னால என்ன பண்ண முடியும்? நம்ம இன்னும் கொஞ்ச நேரத்துல ப்ரோசிஜரை ஸ்டார்ட் பண்ணிடலாம். எல்லாத்தையும் நான் ரெடி பண்றதுக்கு மட்டும் எனக்கு டைம் கொடுங்க. நீங்களும் எல்லாத்துக்கும் ரெடியா இருங்க அனாமிகா.” என்று அவளிடம் சொன்ன டாக்டர்.

அனைத்திற்கும் ஏற்கனவே தயாராகவே இருந்த அனாமிகா தங்களது திட்டம் வெற்றியடைந்தால் போதும் என்ற எண்ணத்தில் அனைத்திற்கும் சரி சரி என்றாள். எல்லாவற்றையும் பேசிவிட்டு குடும்பமாக அவர்கள் டாக்டர் கேபினில் இருந்து வெளியில் வர, “இத பத்தி நம்ம வனிதா ஆன்ட்டி கிட்ட எதுவும் சொல்ல வேணாமா டாடி? நான் உங்க கிட்ட கேட்டு எதையும் கன்பார்ம் பண்ற வரைக்கும் அவங்க கிட்ட டைரக்டா எதுவும் சொல்லக் கூடாதுன்னு அமைதியாவே இருந்துட்டேன்.” என்றாள் அனாமிகா.

“லூசு லூசு! உனக்கு அறிவில்லையா? அவ கிட்ட இத பத்தி ஏதாவது உளறி வச்சியா?” என்று அவள் அப்பா ஆத்திரம் பொங்க கேட்க, “இப்ப எதுக்கு டாடி என் கிட்ட கத்துறீங்க? நான் தான் எதுவும் சொல்லல.. உங்க கிட்ட கேட்டுட்டு சொல்லலாம்னு இருந்தேன்னு சொல்றேன்ல அப்புறம் என்ன?” என்று கேட்டபடி தன் முகத்தை சுளிதாள் அனாமிகா.

சுற்றும் முற்றும் யாராவது தங்களை கவனிக்கிறார்களா என்று ஒரு முறை பார்த்த அவளுடைய அப்பா தனது மகளையும் மனைவியையும் ஒரு ஓரமாக அழைத்து சென்று “சப்பா.. எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு. அந்த வனிதா நம்ம எல்லாரையும் விட மோசமானவ. அவ உன்னை எதுக்கு விஜய்க்கு கல்யாணம் பண்ணி வச்சான்னு நீ நினைக்கிற?

அவளுக்கு நம்ம உதவியா இருப்போம். நம்மள வச்சு அவ காரியத்தை சாதிக்கலாம்ன்றது மட்டும் அவளோட என்ன இல்ல. முன்னாடியில இருந்தே அந்த விஜய்க்கு உன்ன பிடிக்காதுன்னு அவளுக்கு நல்லா தெரியும். குருமூர்த்தி சொன்ன கண்டிப்பா விஜய் உன்னை கல்யாணம் பண்ணிக்குவான். அதனால வேற எவளும் நேரடியா விஜய் வாழ்க்கைக்குள்ள வரக்கூடாது .

அதேசமயம் விஜய்க்கு உன்னை பிடிக்காததுனால உன் கூட சேர்ந்து வாழ மாட்டான். அப்படியே வாழ்ந்தாலும், உன் மூலமா அந்த குடும்பத்துக்கு ஒரு வாரிசு எப்பயும் வராதுன்ற நம்பிக்கையில் தான் அந்த பொம்பள பெரிய மாஸ்டர் பிளான் போட்டு உன்ன அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கா.

நீ நெஜமாவே பிரக்னண்டா இருந்தாலும் கூட குழந்தை பிறக்கிற வரைக்கும் அது அவளுக்கு தெரியாம பார்த்துக்கிறது தான் நமக்கு நல்லது. அந்த வனிதாவை பொறுத்த வரைக்கும் குருமூர்த்தியோட பரம்பரை சொத்து மட்டும் இல்லாம இப்ப விஜய் சம்பாதிக்கிறது மொத்தமும் அவ பிள்ளைகளுக்கு தான் போகணும்னு நினைக்கிறா. அதுக்கு விஜய்க்கு வாரிசு இருக்கக் கூடாது.

அவளோட பிளான் ஸ்பாயில் ஆகுதுன்னு தெரிஞ்சா, அவ உன்னை கொல்ல கூட தயங்க மாட்டா. விஜயை கூட நீ நம்பி ஏதாவது செய்யலாம். ஆனா என்னைக்கும் அந்த வனிதாவை மட்டும் நம்மிடவே நம்பிடாத.” என்று பெரிதாக தன் மகளுக்கு அட்வைஸை போட்டு அவளை ஆஃப் செய்தார் அனாமிகாவின் அப்பா.

“ஓஹோ எங்களை விட இந்த வனிதா அண்டி பெரிய தில்லாலங்கடியா! இனிமே அவங்கள ஒரு லிமிட்ல வைக்கணும்.” என்று தன் மனதிற்குள் குறிப்பெடுத்துக் கொண்ட அனாமிகா தன் அனைத்தும் புரிந்தது என்றாள்.

சூட்டிங் ஸ்பாட்டிற்க்கு கிளம்பி சென்ற விஜய் அரை மனதாக கேரவனில் அமர்ந்து சீன் பேப்பரை படித்துக் கொண்டிருந்தான். அனைத்தும் தயாராக இருக்கிறது என்று சொல்லி அசிஸ்டன்ட் டைரக்டர் வந்து அவனை அழைத்தவுடன், வெளியில் சென்றான் விஜய்.

உள்ளுக்குள் அவனது மனநிலை எத்தனை மோசமாக இருந்தாலும் அவன் எப்போது கேமராவின் முன்னே சென்று நிற்கிறானோ, அப்போது மொத்தமாக வேறு ஒரு ஆளாக மாறி ப்ரொபஷனல் ஆக வழக்கம் போல் இப்போதும் அவன் நடிக்க தொடங்கினான். இடையில் அவனுக்கு கொஞ்சம் பிரேக் கிடைக்க, அமுதாவின் கேரவன் நிற்கும் இடம் இப்போது காலியாக இருப்பதை ஒருவித ஏக்கத்துடன் பார்த்த விஜய் மரத்தடியில் நின்று சைடு கேரக்டரில் நடிக்கும் பெண்களிடம் கடலை போட்டுக் கொண்டிருந்த தினேஷை கால் செய்து வரச் சொன்னான்.

“சொல்லுங்க பாஸ்.. உங்களுக்கு சாப்பிட ஏதாவது வேணுமா? நம்ம கிளம்பும்போது கூட நீங்க சரியாவே சாப்பிடல.” என்று தினேஷ் அக்கறையுடன் விசாரிக்க, “அதெல்லாம் ஒரு ஈர வெங்காயமும் வேண்டாம். நான் இந்த மூவி தீபாவளி ரிலீஸ்ன்னு சொன்னேன் அது உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கா இல்லையா?

அமுதாவோட ஹெல்த் கண்டிஷன் என்ன நிலைமையில இருக்குன்னு விசாரிச்சீங்களா? அவ எப்ப ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்டார்ஜ் ஆகுறா, எப்ப சூட்டிங் வர்றான்னு ஏதாவது இன்ஃபர்மேஷன் வந்துச்சா?” என்று கடுகடுவென தன் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் விஜய்.

“அப்படியா விஷயம்.. அப்ப நீங்க அமுதாவை பத்தி கேக்க தான் என்ன கூப்பிட்டீங்களா? இப்ப எல்லாம் நீங்க அடிக்கடி அந்த பொண்ண பத்தி யோசிக்கிறதா உங்களுக்கு தோணலையா பாஸ்?” எங்கே அவன் தன் மீது கோபப்படுவானோ என்ற பயம் இருந்தாலும் கூட ஆர்வமாக தினேஷ் அவனிடம் கேட்க, அவனை ஏகத்திற்கும் முறைத்து பார்த்த ‌ விஜய் ”நான் கேட்கிற கொஸ்டினுக்கு ஆன்சர் பண்றது தான் உன் வேலை. இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட கொஸ்டின் பண்ணிட்டு இருந்த பேசுறதுக்கு அப்புறம் வாய் இருக்காது பாத்துக்கோ.” என மிரட்டும் தோரணையில் சொன்னான்.

“சாரி பாஸ் சாரி பாஸ்..!! இனிமே நான் இப்படி எல்லாம் பேசவே மாட்டேன். உங்களுக்கு ஷூட்டிங் டைமுக்கு முடியனும். அப்புறம் போஸ்ட் ப்ரொடெக்ஷன் ஒர்க் எல்லாம் பாக்கணும்ன்ற டென்ஷன் தானே.. மத்தபடி நீங்க ஏன் அந்த அமுதாவை பத்தி எல்லாம் யோசிக்க போறீங்க? நான் கூட உங்களுக்கு திடீர்னு அந்த பொண்ணு மேல ஏதோ ஃபீலிங்ஸ் வந்துவிட்டதுன்னு நினைத்தேன். இனிமே நான் உங்க கிட்ட அந்த பொண்ண பத்தி பேசவே மாட்டேன் பாஸ்.” என்று வேண்டுமென்றே ‌ தினேஷ் பேச, அவனை முறைத்துப் பார்த்த விஜய் “நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல.” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு சொன்னான்.

“ஐயோ ஆமா ஆமா மறந்துட்டேன். ஒரே ஒரு நிமிஷம் இருங்க பாஸ்.. அந்த பொண்ணு அமுதாவோட அத்தை பையன் வெற்றிக்கு கால் பண்ணி அவ எப்ப சூட்டிங் வருவான்னு நான் கேட்டு சொல்றேன்.” என்ற தினேஷ் ஓரமாக சென்று வெற்றிக்கு கால் செய்தான். அவன் வரும் வரையிலும் அமுதாவை பற்றிய யோசித்துக் கொண்டிருந்த விஜய் ” நேத்து அனாமிகா கூட நடந்ததை யோசிச்சு பார்த்தா உன் மூஞ்சில எப்படி முழிக்கிறதுன்னு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு. ஆனா உன்ன பாக்காம இருக்கிறது அதைவிட கஷ்டமா இருக்கு. திடீர்னு எனக்கு ஏன் இப்படி எல்லாம் இருக்குன்னு ஒன்னும் புரியல.

ஒருவேளை தினேஷ் சொல்ற மாதிரி நெஜமாவே எனக்கு உன் மேல ஃபிலிம்ஸ் இருக்கா அமுதா? ஆனா அது எப்படி முடியும்? நீ ஒரு சாதாரண பொண்ணு. என்ன மாதிரி ஒருத்தனுக்கு உன் மேல எப்படி ஃபீலிங்ஸ் வரும்? அப்படி உன் கிட்ட என்ன இருக்குன்னு நான் உன்ன லவ் பண்றேன்?” என்று தனக்குத் தானே மனதிற்குள் அமுதாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அந்நேரம் அவன் மூளை அமுதாவை பற்றிய ஞாபகங்களை அவனுக்கு படம் போல ஓட்டி காட்ட, வெற்றிடம் பேசிவிட்டு அங்கே வந்த தினேஷ் “அவன் கிட்ட பேசிட்டேன் பாஸ். அமுதாவை ஹாஸ்பிடல்ல இருந்தே நாளைக்கு தான் டிஸ்டார்ஜ் பண்றாங்களாம். அதுவும் கன்ஃபார்மா தெரியலைன்னு சொல்றான். எப்படியும் ஹாஸ்பிடல்ல இருந்து வந்ததுக்கப்புறம் ஒரு ரெண்டு மூணு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் தான் அந்த பொண்ணை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிட்டு வர முடியும்னு சொல்றான்.” என்றான்.

“அப்படின்னா இன்னும் 4, 5 நாளைக்கு என்னால அவளை பார்க்க முடியாதா?” என்று நினைத்து சோகமானான் விஜய்.

- காதல் மலரும் 🌹

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)
 

Author: thenaruvitamilnovels
Article Title: நாயகன் 95
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.