நாயகன் 94

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 94 ‌

மதியம் சூரியன் உச்சிக்கு வந்த நேரத்தில் தனது அறையில் பிறந்த மேனியாக ஒரு போர்வைக்குள் புகுந்து கிடந்த விஜய் சுகமாக பஞ்சு மெத்தையில் தலையணையை கட்டிப்பிடித்து குப்புறப்படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது ஜன்னல் வழியாக வந்த சூரிய கதிர்கள் அவன் முகத்தில் லேசாக தட்டி “எப்பா விஜய்.. இன்னுமா ராசா உனக்கு பொழுது விடியல? உன்ன சுத்தி என்ன நடக்குதுன்னு எந்திரிச்சு பாருப்பா!” என்று சொல்வதைப்போல அவனை எழுப்பி விட்டது.

தன் கண்களை தேய்த்தவாறு நேராக திரும்பிப் படுத்த விஜய் “ச்ச்.. வெயில் பொடனியில அடிக்குது. டைம் என்னன்னே தெரியலையே.. இன்னைக்கு ஷூட்டிங் வேற இருக்கு. அமுதாவுக்கு லீவ் கொடுத்து அனுப்பிட்டேன்.. ஆனா நான் போய் நடிச்சாக்கணுமே! இந்த தினேஷுக்கு கொஞ்சம் கூட ரெஸ்பான்சிபிலிட்டியே இல்ல. என்னை டைமுக்கு எழுப்பி விடுறானா பாரு இடியட்!” என்று முணுமுணுத்தவாறு எழுந்து அமர்ந்தான் விஜய். ‌

அவனுக்கு எதிரில் உள்ள சுவரில் மாட்டப்பட்டு இருந்த கடிகாரத்தில் நேரம் மதியம் 2:30 என்று காட்ட, அதைக் கண்டு பதறிய விஜய் “ஷிட்.. இவ்வளவு நேரமா தூங்கிருக்கேன்! அந்த முட்டா பையன் என்ன பண்ணிட்டு இருக்கான்?” என யோசித்து கடுப்பாகி “டேய் தினேஷ்.. தினேஷ்!” என்று அவனை அழைத்தபடி தன் மீது கிடந்த போர்வையை தூக்கி கிடாசி விட்டு எழுந்து நின்றான்.

அவன் குரலைக் கேட்டு தினேஷ் அவனது ரூமை நோக்கி வந்து கொண்டிருக்க, ரெப்ரெஷ் ஆகலாம் என்று நினைத்து ஒரு அடி எடுத்து வைத்த விஜயின் கால்களில் சிக்கியது அவனுடைய உள்ளாடை. குனிந்து அதை பார்த்த விஜய் ஓரக் கண்ணால் காஃபி டேபிளில் இருந்த காலியான சரக்கு பாட்டில்களை கண்டான். அதை பார்த்தவுடன் அவனுக்கு நேற்று இரவு நடந்த சம்பவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகம் வரத் தொடங்க, கதவை திறந்து கொண்டு அந்த ரூமிற்குள் நுழைந்த தினேஷ் விஜய் ஆடைகள் இன்றி நிற்பதை பார்த்துவிட்டு “ஐயோ எனக்கு கண்ணு கூசுது பாஸ்! ஏன் எப்ப பாத்தாலும் குடிச்சிட்டு காலையில தூங்கி எந்திரிக்கும்போது எனக்கு மட்டும் இப்படி ஸ்பெஷல் ஷோ காட்டுறீங்க? நான் ஏதோ பொண்ணா இருந்திருந்தா கூட உங்களை இப்படி பார்த்து குஷி ஆகி இருப்பேன். நான் பையனா பிறந்து தொலைஞ்சிட்டேனே என்ன பண்றது!” என்று புலம்பியவாறு ‌ தனது இரு கைகளாலும் கண்களை மூடிக் கொண்டு திரும்பி நின்றான்.‌

ஏற்கனவே நேற்று தான் செய்த ராஜ லீலைகளை எல்லாம் நினைத்து பார்த்து தன் மீதே கடுப்பில் இருந்த விஜய் ‌ தினேஷ் பேசியதை கேட்டு பெருமூச்சு விட்டு விட்டு மீண்டும் சென்று போர்வையை எடுத்து தன் மீது சுற்றிக் கொண்டு தலை மேல் கைவைத்தபடி சோகமாக கட்டிலில் அமர்ந்து விட்டான்.

“பாஸுக்கு என்ன ஆச்சு இன்னிக்கி.. எப்பயுமே நான் இந்த மாதிரி ஏடாகூடமா ஏதாவது சொன்னா என்ன திட்டி துரத்திதானே விடுவாரு.. இன்னைக்கு என்ன சோகமா தலை மேல கைய வச்சிட்டு குடி மூழ்கி போன மாதிரி உட்கார்ந்து இருக்காரு..!! இன்னும் எத்தனை வருஷம் இவர் கூட குப்பை கொட்டினாலும் நம்மளால இவரை புரிஞ்சுக்கவே முடியாது போல இருக்கு!” என்று நினைத்து தானும் பெருமூச்சு விட்ட தினேஷ் “பாஸ்!” என்று இழுத்தபடி விஜயின் அருகில் சென்றான்.

வலித்துக் கொண்டு இருந்த தன் தலையை இறுக்கிப்பிடித்தபடி எரிச்சலுடன் அவனைப் பார்த்த விஜய் “டேய்.. நானே செம கடுப்புல இருக்கேன்.. ஒழுங்கா ஓடி போயிரு.” என்று சொல்ல, “நீங்க தானே பாஸ் என்ன வர சொன்னிங்க! இப்ப போக சொல்றீங்க.. இப்ப நான் இங்க இருக்கவா இல்ல வெளிய போகவா?” என்று எதுவும் தெரியாதவனை போல கேட்டான் தினேஷ்.

அப்படியே எங்கேயாவது சென்று முட்டிக் கொள்ளலாமா என்று நினைத்த விஜய் “எப்ப சாமி உயிரை வாங்காதடா .. நான் தான் ஏதோ போதையில தெரியாம ஏதேதோ உளறிட்டேன். நீ இங்க தானே இருந்த.. எதுக்கு டா அந்த அனாமிகா பிசாசை வீட்டுக்குள்ள விட்ட.. நான்தான் ஏற்கனவே நான் இருக்கிற இடம் அவளுக்கு தெரியக்கூடாதுன்னு சொன்னேன்ல.. அப்படி இருந்தும் நேத்து நைட்டு அவ எப்படி இங்க வந்தா?” என்று கேட்டு அனைத்து பழியையும் தூக்கி அப்படியே தினேஷின் மீது போட்டான்.

“ஐயோ பாஸ் என்ன ஆச்சுன்னு நீங்க என்னைய கேட்டா நான் என்ன சொல்றது? நான் உங்கள பாக்கும்போது நீங்க தானே அனாமிகா மேடம் வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்தீங்க.. என்ன தான் இருந்தாலும் அவங்க உங்க வைஃப். ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்க்குள்ள ஆயிரம் இருக்கும்.‌ நீங்களே அவங்களை வீட்டுக்குள்ள கூட்டிட்டு வரும்போது, நான் என்ன செய்ய முடியும்?

சரி விடுங்க, இப்படி நடக்கிறது என்ன புதுசா? இதுக்கு எல்லாம் எதுக்கு டென்ஷன் ஆக்குறீங்க? நீங்களும் சைத்தானே அப்பாலே போனு அனாமிகா மேடம் துரத்தி விட்டுகிட்டே இருக்கீங்க.. ஆனா அவங்க சரியான கில்லாடி தான். ஏதாவது பண்ணி உங்கள கடைசில அவங்க நினைக்கிற மாதிரி கரெக்ட் பண்ணிடுறாங்க. She is very talented boss.” என்று தினேஷ் அனாமிகாவை பாராட்டி பேச,

கையில் கிடைத்த தலையணையை தூக்கி அவன் முகத்தில் அடித்த விஜய் “எருமை எருமை... என் முன்னாடியே அவளை பாராட்டி பேசுறியா? அதுவும் இங்கிலீஷ்ல ஒரு தடவை தமிழ்ல ஒரு தடவைன்னு ஏழு தடவை அவள உனக்கு பாராட்டியாகனுமா? ஆளையும் மூஞ்சியையும் பாரு!

ஒரு அசிஸ்டன்ட்டா உன்னோட முக்கிய கடமை என்ன டா? எனக்கு எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்கிறது தானே.. நானே சனியனை தூக்கி பனியன்குள்ள போட்டுட்டு போனாலும் பாஸ் இது தப்பு செய்யாதீங்கன்னு நீ வந்து சொல்லி இருக்கணுமா இல்லையா?

நேத்து வேற ஒரு விஷயத்தை யோசிச்சுக்கிட்டே இருந்ததுல இந்த அனாமிகாவை பத்தி நான் பெருசா நினைக்காம விட்டுட்டேன். அவ வழக்கம் போல வந்து பூந்து விளையாடிட்டு போயிட்டா. ச்சீ‌... அவளாம் என்ன ஜென்மமோ.. நான் சோகமா இருக்கும்போது எனக்கு புடிச்ச சரக்கை வாங்கி கொடுத்து என்னை கரெக்ட் பண்ணிட்டா!

இப்ப தான் அமுதா வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் என்ன கொஞ்சம் மரியாதையா நினைக்க ஆரம்பிச்சிருக்காங்க. அவ டிஸ்டார்ஜ் ஆகி ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு போனதுக்கு அப்புறமா, அங்கயே போய் அவளை பார்க்கலாம்னு நினைச்சேன். இப்ப இதெல்லாம் நடந்ததுக்கு அப்புறமா நான் போய் எப்படி அவ மூஞ்சில முழிப்பேன்? என்னை நெனச்சா எனக்கே அசிங்கமா இருக்கு.” என்று ஆத்திரம் பொங்க சொல்லிவிட்டு எழுந்த விஜய் எதிரில் இருந்த சுவற்றில் வெறும் கையால் நங் நங்கென்று 3,4 முறை குத்தான்.

நல்ல வேலையாக அவன் அப்படி குத்தி தன் கையை உடைத்துக் கொள்வதற்குள் தினேஷ் சென்று அவனை தடுத்து விட்டான். “என்னால உங்க மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சிக்கவே முடியல பாஸ். நேத்து என்னனா அனாமிகா மேடமை நீங்களே தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க. இப்ப என்னமோ நேத்து தான் சடங்கான பெண்ணை ‌ யாரோ கெடுத்துட்ட மாதிரி போச்சே போச்சேன்னு பதர்றிங்க..

இதுல அந்த பொண்ணு அமுதா எங்க இருந்து வந்தா? அனாமிகா மேடம் என்ன இருந்தாலும் உங்க வைஃப் தானே! உங்களுக்கும் அனாமிகா மேடம்க்கும் நடுவுல என்னமோ இருந்துட்டு போகுது. இதுல அந்த பொண்ணுக்கு என்ன வந்துச்சு? இப்படி நடந்ததனால அவ மூஞ்சில முழிக்க முடியாதுன்னு சொல்லிட்டு இருக்கீங்க!” என்று லாஜிக்காக கேட்டான் தினேஷ்.

தனக்குள் ஏற்படும் இந்த கலவையான உணர்ச்சிகளுக்கு என்ன அர்த்தம் என்று தானே புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருந்த விஜய் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் “ச்ச்.. அது என்ன எழவோ விட்டுத்தொல. ஷூட்டிங் என்ன ஆச்சுன்னு அந்த ஆள் டைரக்டருக்கு கால் பண்ணி கேளு. நான் போய் ரெடியாகறேன். நான் வர்றதுக்குள்ள இந்த ரூமை கிளீன் பண்ணி வைக்க சொல்லு. எனக்கு இந்த இடத்தை பார்த்தாலே நேத்து நடந்தது தான் ஞாபகம் வருது. எனக்கு அப்படியே பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு. முதல்ல நான் இங்க இருந்து எங்கேயாவது போகணும்.” என்று புலம்பியபடி ரெப்ரெஷ் ஆவதற்காக சென்றான்.

அப்போது மேஜையின் ஓரமாக அனாமிகா எழுதி வைத்துவிட்டு சென்ற நோட்ஸ் தினேஷின் கண்களில் பட, அருகில் சென்று அதை எடுத்து படித்துப் பார்த்தான் அவன். அவனுக்கு படிக்க படிக்க சிரிப்பு‌ தான் வந்தது.‌ “பாஸ் இங்க பாருங்க.. உங்க வைஃப் உங்க பெர்ஃபார்மன்ஸ் செமையா இருந்துச்சுன்னு உங்கள பாராட்டி நோட்ஸ் எழுதி வெஸ்ட் போயிருக்காங்க! மறுபடியும் உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்றதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்காங்களாம்.” என்று சிரிப்பை அடக்கி கொண்டு தினேஷ் கத்தி சொல்ல,

வந்த கடுப்பில் அவனை திரும்பிப் பார்த்த விஜய் அருகில் இருந்த flower vase-ஐ எடுத்து தினேஷை நோக்கி வீசி எறிந்தான். “ஐயோ மண்டை!” என்று அலறிய தினேஷ் சட்டென்று அப்படியே தரையில் அமர்ந்து கொண்டான். அதனால் பாவம் அவன் தலை தப்பித்தது. அவனை நோக்கி வந்த flower vase அவனை கடந்து சென்று பின்னே தரையில் விழுந்து பலத்த சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது.

“என்ன பாஸ் பேசிட்டு இருக்கும்போதே பொசுக்குன்னு அட்டாக் பண்றீங்க!” என்று தினேஷ் பயந்த குரலில் கேட்க, “வர வர நீ ரொம்ப பண்ணிட்டு இருக்க டா.. ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் எனக்கு அனாமிகா மேல இருக்கிற கடுப்புல உனக்கு பால் ஊத்த போறேன் பாரு.. அன்னைக்கு நீ மொத்தமா அடங்கிருவ.” என்று சொல்லி அவனை மிரட்டி விட்டு சென்றான் விஜய்.

“சப்பா தலை தப்பிச்சது.‌ இனிமே இவர் கிட்ட வாயே கொடுக்கக் கூடாதுடா சாமி.” என்று நினைத்த தினேஷ் எழுந்து வெளியில் ஓடிச் சென்று விட்டான்.

நேராக பாத்ரூம் இருக்கு சென்றிருந்த விஜய் சவரை திறந்து குளுகுளுவென்று கொட்டும் நீருக்கு அடியில் என்றான். அவனது கண்கள் மூடி இருக்க, அவன் அமுதாவை நேற்று சந்திக்க சென்றபோது அவளை முத்தமிட்ட காட்சி அவன் கண்களுக்குள் தோன்றி மறைந்தது. அதை நினைத்து எண்ணம் முழுவதும் அமுதாவை நிரப்பி விஜய் அவளுக்காக உருகி கொண்டிருந்த தருணம், “ஆஆஆ... மம்மி.. விஜய்.. ஆஆஆஆ.. சூப்பர் பேபி.. yeah.. அப்படித் தான்.. நல்லா fastஆ பண்ணு.. இன்னும்.. இன்னும்!” என்று நேற்று அவனுடன் மோக கடலில் சேர்ந்து மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தபோது அனாமிகா அவளது போதை ஏறிய குரலில் உளறியது எல்லாம் அவன் காதில் கேட்டது.

அந்த காட்சியும் கூட அவனது கண்களுக்குள் வந்து மறைய, அப்படியே விஜய்க்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தன் கைகள் இரண்டையும் இறுக்கி மூடிக் கொண்டு “ஆஆஆஆ!!” என்று பைத்தியம் பிடித்தவனை போல கத்தினான்.

‌ அவன் சத்தம் ஹாலில் அமர்ந்து மதிய உணவை ஆர்டர் செய்து கொண்டிருந்த தினேஷ் வரையிலும் கேட்டது.

- காதல் மலரும் 🌹

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)
 

Author: thenaruvitamilnovels
Article Title: நாயகன் 94
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.