நாயகன் 93

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 93 ‌

மோகம் தலைக்கு ஏறிய நிலையில் ‌ அனாமிகாவுடன் கட்டிலில் படுத்து உருண்டு கொண்டிருந்த விஜய் “இன்னொரு ரவுண்ட் சரக்கு அடிக்கலாமா?” என்று கேட்க, “இந்த டைம்ல அதை கண்டினியூ பண்ணியே ஆகணுமா பேபி? நமக்கு பண்றதுக்கு எவ்ளோ வேலை இருக்கு! அது தான் உனக்கு முக்கியமா?” என்று தேன் ஒழுக ஹஸ்கி வாய்ஸில் கேட்ட அனாமிகா அவனை வாயடைக்க செய்வதற்காக அவன் மீது ஏறி அமர்ந்து கொண்டு அவனை ஆக்கிரமிக்க தொடங்கினாள்.

அவளது ஒவ்வொரு தொடுகைக்கும் தனது உடல் முழுவதும் கரண்ட் ஷாக் அடிப்பதை போல உணர்ந்த விஜய் அவன் உச்சத்தை அடைந்து கொண்டிருந்ததால் தன் உடலின் தவிப்பை தாங்க முடியாமல் அவளை தன் மீது கட்டிலில் தள்ளி அவள் மீதம் அணிந்திருந்த அரைகுறை அடையையும் பிய்து எரிய தொடங்கினான். அதற்காகவே காத்திருந்த அனாமிகா அவனுக்கு இசைந்து கொடுக்க, அவளுடன் கூடலில் ஈடுபட்டு குதுகுழித்துக் கொண்டிருந்த விஜய் மூச்சு வாங்க வியர்த்து வடிய அவள் மீது படுத்துக் கொண்டு அவளை இறுக்கிப்பிடித்தபடி “எனக்கு இப்பயும் சரக்கு அடிக்கணும்னு தான் தோணுது டி. அந்த ஒயின்ல ஸ்பெஷலா ஏதோ ஒன்னு இருக்கு... அது என்னை டெம்ப்ட் பண்ணிக்கிட்டே இருக்கு!” என்று போதை ஏறிய குரலில் ஒரு கிரகத்துடன் சொன்னான்.

“இருக்காதா பின்ன? அந்த ஒயினோட பவர் தெரிஞ்சு தானே உனக்காக அவ்ளோ செலவு பண்ணி வாங்கி இருக்கேன்! நான் போட்ட பிளான் இப்ப தான் கரெக்டா ஒர்க் அவுட் ஆகுது. இவ்வளவு நேரம் நம்ம ரெண்டு பேரும் ஹெவியா பர்பாமன்ஸ் பண்ணதுல ‌ எல்லாம் சக்சஸ் ஆகி இருக்கும்ன்னு தான் நினைக்கிறேன். இருந்தாலும் எதுக்கும் சேஃப்டிக்கு டப்பால கலெக்ட் பண்ணிட்டு போயிடனும். அதுக்கு விஜய் கான்சியஸ்ல இருக்கக் கூடாது. சோ இந்த டைம்ல அவன் மட்டையாகிறது நமக்கு நல்லது தான்.” என்று நினைத்து தனக்கு சிரித்துக் கொண்ட அனாமிகா,

விஜய் உச்சத்தில் இருந்ததால் அவனுடைய கட்டு மஸ்தான தேகம் சிவந்து இருப்பதை பார்த்து ரசித்தபடி தனது நகங்களால் அவனது மார்பில் மெல்லிய கோடுகளை போட்டபடி “கண்டிப்பா பேபி! அங்க அந்த ஒயின் பாட்டில் உனக்காக தான் அங்க வெயிட் பண்ணிட்டு இருக்கு. விடிய விடிய நீ அதை ஃபுல்லா குடிச்சு என்ஜாய் பண்ணலாம். பட் அதுக்கு முன்னாடி, இன்னும் கொஞ்ச நேரம் நீ என்னை டேஸ்ட் பண்ணா நம்ம ரெண்டு பேருக்கும் எக்ஸ்ட்ரா கிக்கா இருக்கும்ல! ப்ளீஸ் பேபி.. ரொம்ப நாள் ஆயிடுச்சுல்ல.. I crave for you!” என்று குலைவான குரலில் சொன்னபடி அவனை எதுவும் இதற்கு மேல் பேச விடக் கூடாது என நினைத்து தன் கைகள் இரண்டையும் அவனது தோள்களில் மாலையாக போட்டு அவனை தன் பக்கம் இழுத்து அவன் முகத்தை தன் மார்பில் புதைத்து அவனுடன் சேர்ந்து கட்டிலில் உருண்டாள்.


அவன் இது வேண்டாம் என்று ஒரு நொடி நிறைந்தாலும் கூட, அவனை மீண்டும் மீண்டும் வேண்டும் என்று தனது உடலுக்காக ஏங்க வைக்கும் பொருட்டு அனாமிகா அவனை விடாமல் சீண்டிக் கொண்டே இருக்க, அது தெரியாமல் அவளது ஒவ்வொரு செயலிலும் மயங்கி போன விஜய் மேகக் தீயில் அவளுடன் சேர்ந்து வெந்து முத்தாடிக் கொண்டிருந்தான்.

அப்படியும் இப்படியும் ஆக ஒரு 15 நிமிடங்கள் கடந்து விட, அவர்கள் இருவரும் சில முறை உச்சம் பெற்று பின் கலைப்பில் அப்படியே ஒருவரை ஒருவர் அணைத்தபடி போர்வைக்குள் படுத்திருந்தார்கள். “இது தான் கரெக்டான டைம்!” என்று நினைத்த அனாமிகா “வா பேபி.. நம்ம இப்ப போய் மறுபடியும் சரக்கு அடிக்கலாம். அந்த ஹாட்டி ரெட் ஒயின் ரொம்ப நேரமா நீ எப்ப வந்து அவளை குடிச்சு காலி பண்ணுவேன்னு ஏக்கமா உன்னையே பாத்துட்டு இருக்கு. அதுவும் இந்த கண்டிஷன்ல நீயும் நானும் சேர்ந்து குடிச்சா.. ம்ம்ம்.. செம போதையா இருக்கும்.. நீதான் எப்பயும் என்ன மயக்குற பெரிய போத. That's why I am addicted to you.” என்று சொல்லி அவனது கீழ் உதட்டை பிடித்து ஆட்டினாள்.

இன்று விஜயை கோபப்படுத்தி விடவே கூடாது என்று தெளிவாக இருந்ததால் அனாமிகா அவனை இரிட்டேட் செய்யும்படி எதுவும் பேசாததால் உண்மையாகவே மனதளவில் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தான் அவன். அதனால் எப்போதாவது பூக்கும் மலர் போல அதிசயமாக திடீரென்று அரும்பிய மெல்லிய புன்னகையுடன் அவளைப் பார்த்த விஜய் “சரி வா குடிக்கலாம். என்னமோ அதிசயமா எனக்கு இன்னைக்கு உன் கூட டைம் ஸ்பென்ட் பண்றது புடிச்சிருக்கு.” என்று போதையில் உளறிய விஜய் எழுந்து அமர்ந்தான்.

அப்படியே அவர்கள் இருவரும் பிறந்த மேனியாக சென்று போதையில் தள்ளாடியபடி மீண்டும் சோஃபாவில் அமர்ந்தார்கள்.‌ மீதமுள்ள முழு பாட்டிலையும் அவன் குடித்தால் தான் அவள் எதிர்பார்க்கும்படி அவன் போதையில் மட்டையாகி விழுவான் என்று நினைத்த அனாமிகா தான் குடிக்காமல் அவன் அருகில் அமர்ந்துக் கொண்டு அவனிடம் நயனமாக பேசி அவனுக்கு ஊற்றி கொடுத்துக் கொண்டே இருந்தாள்.

அவளது திட்டங்களைப் பற்றி எதையும் அறிந்திருக்காத விஜய் சில மணி நேரங்களுக்கு முன்பு வரையிலும் அவன் எதையெதையோ நினைத்து சோகமே உருவாக இருந்ததால், இப்போது அனாமிகா அவனை வாலண்டீராக வந்து சந்தோஷப்படுத்தி கொண்டிருக்கும் நிலையில் அனைத்தையும் மருந்து அவளுடம் உல்லாசமாக இருந்தான்.

ஒருவழியாக முழு பாட்டிலையும் அவனுக்கு ஊற்றி கொடுத்து காலி செய்த அனாமிகா விஜய் அரை போதையில் கண்கள் சொருகிய நிலையில் சோஃபாவில் அப்படியே மல்லாக்க சாய்ந்து கிடப்பதை கண்டாள். கலைந்த கேசம், சோர்வான உடல். போதையில் இருப்பதால் அவன் அவ்வப்போது எதையோ முனக, பார்ப்பதற்கு பக்கா குடிகாரன் என்று சொல்லும் அளவிற்கு பத்து பொருத்தங்களும் அவனுக்கு பக்காவாக இருந்தது.

இருப்பினும் எவருடனும் ஒப்பிட முடியாத அவனது அழகும், ஆளுமையும், ஆண்மை ததும்பும் கட்டுடலும் அவனை அப்போதும் கவர்ச்சியானவனாகவே காட்ட, ஆசை தீர அவனை அங்குலம் அங்குலமாக பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் அனாமிகா. ஏனோ எத்தனை முறை கண்டாலும், அவனுடன் காமம் கொண்டு கட்டிலில் பல மணி நேரங்களை செலவிட்டாலும் கூட, அவளுக்கு அவன் மீது இருந்த போதை தீர்ந்தபாடில்லை.

அப்படியே நேரம் செல்வது தெரியாமல் தன்னை மறந்து அனாமிகா அவனையே பார்த்துக் கொண்டிருக்க, “ஏய் இடியட்.. நீ இவனை சைட் அடிக்கவா இங்க வந்த? முதல்ல வந்த வேலைய பாத்துட்டு இங்க இருந்து கிளம்புற வழியை பாரு. அவனுக்கு மட்டும் ஒன்ஸ் போதை தெளிஞ்சுருச்சுன்னா, அவன் எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு யாருக்குமே தெரியாது.” என்று அவளை திட்டி அவள் செய்ய வேண்டிய கடமையை அவளுக்கு ஞாபகப்படுத்தியது அவள் மூளை.

“ஆமா.. ஆமா.. நமக்கு முதல்ல அது தான் முக்கியம். அதுக்காக தானே இவன் என்னை எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும், வெக்கமே இல்லாம இவன் முன்னாடி வந்து இத்தன நாளா நின்னுட்டு இருந்தேன்!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்ட அனாமிகா அவளது ஹேண்ட் பேக்கில் இருந்த ஒரு சிறிய டப்பாவை கையில் எடுத்துவிட்டு விஜயை பார்த்து ஒரு மர்ம புன்னகை சிந்தினாள்.

பின் அவன் அருகில் சென்று தனக்கு தேவையானவற்றை அந்த டப்பாவில் எடுத்துக் கொண்டு அதை தனது ஹேண்ட் பேக்கில் பத்திரப்படுத்தி வைத்தாள் அனாமிகா. பின் அவசர அவசரமாக தனது ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு டேபிள் ஓரமாக கிடந்த நோட்பாட் ஒன்றில் “இந்த நைட்டை நான் எப்பவும் மறக்கவே மாட்டேன் பேபி. Thanks for everything! I hope, you too enjoyed well! என் லைஃப்ல எனக்கு இருக்கிற ஒரே ஒரு ஆசை இன்னைக்கு நைட் மாதிரி ஒவ்வொரு நைட்டையும் நான் உன் கூட ஸ்பென்ட் பண்ணனும் அது மட்டும் தான். I love you so much.” என்று எழுதிய அனாமிகா இறுதியில் அனாமிகா விஜய் குருமூர்த்தி என்று அதில் சைன் போட்டாள்.

பின் தனது ஹேண்ட்‌ பேக்கை ‌ எடுத்துக் கொண்டு சத்தம் இன்றி அந்த அறையை விட்டு வெளியேறிய அனாமிகா தனது காரை தானே ஓட்டிக் கொண்டு அங்கே இருந்து கிளம்பினாள்.

மறுநாள் மதியம் 2 மணி அளவில் ஹாஸ்பிடலில் அமுதாவை செக் செய்த டாக்டர் அவளது உடல்நிலை முன்னேறி வருவதாக மணிகண்டன் மற்றும் அவளது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.‌ அதைக் கேட்டு மகிழ்ந்த அமுதா “ரொம்ப தேங்க்ஸ் டாக்டர். எப்படியோ கரெக்ட்டான டைம்ல ட்ரீட்மென்ட் குடுத்து நீங்க என்ன காப்பாத்திட்டீங்க. நீங்க சொன்ன மாதிரி நான் இப்ப முன்னாடி விட ரொம்ப நல்லாவே இருக்கேன்.

எனக்கு இதுக்கு மேலயும் ஹாஸ்பிடல்ல இருக்க சுத்தமா பிடிக்கல. ப்ளீஸ் என்ன டிஸ்டார்ஜ் பண்ணிடுங்க. அகைன் எப்ப நாங்க செக்கப்புக்கு வரணும்னு ‌மட்டும் சொல்லுங்க. நான் கண்டிப்பா வந்து பார்த்துட்டு போறேன்.” என்று டாக்டரிடம் சொல்ல,

“என்ன டி விளையாடுறியா நீ? தலையில தையல் எல்லாம் போட்டு இருக்காங்க.. நேத்து உனக்கு எவ்ளோ ரத்தம் வந்துச்சுன்னு ஞாபகம் இருக்கா இல்லையா? அதுக்குள்ள எப்படி உன்னை டிஸ்டார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியும்?” என்று அவசரமான குரலில் கேட்டான் வெற்றி.

அதனால் இப்போது ‌டாக்டரின் பதிலை எதிர்பார்த்து அனைவரும் டாக்டரை பார்க்க, “உங்களோட காயம் கொஞ்சம் பெருசு தான். இருந்தாலும் நாங்க எதிர்பார்த்ததை விடவே நீங்க சீக்கிரமா ரெக்கவர் ஆகிட்டு இருக்கீங்க அமுதா. அதுக்காக இன்னைக்கே உங்கள டிஸ்டார்ஜ் பண்ண முடியாது. வேணும்னா நாளைக்கு உங்க கண்டிஷன் எப்படி இருக்குன்னு பாத்துட்டு, ஈவினிங் மேல எடுக்க வேண்டிய டெஸ்ட் எல்லாமே எடுத்துட்டு எல்லாம் பாசிட்டிவா இருக்கான்னு பாக்கலாம். அதுல எந்த பிரச்சனையும் இல்லைனா, தாராளமா நீங்க இங்க இருந்து டிஸ்டார்ஜ் ஆகி போகலாம்.” என்றார் அவர்.

இங்கே ஹாஸ்பிடலில் இருந்து கொண்டு நிம்மதியாக விஜய் உடன் ஃபோனில் கூட பேச முடியவில்லை.‌ அதற்கு வீட்டிற்கு சென்று விட்டால் தனது ரூமில் நிம்மதியாக நேரத்தை கடத்தலாம் என்று கணக்கு போட்டிருந்த அமுதாவிற்கு டாக்டர் சொன்னதை கேட்டு சோகமாக இருக்க, அவள் எதுவும் சொல்லாமல் தன் தலையை மட்டும் குனிந்து கொண்டாள்.

அவளையே கவனித்துக் கொண்டிருந்த வெற்றி “இப்ப என்ன புள்ள பிரச்சனை உனக்கு? வீட்டுக்கு போய் அப்படி என்ன முக்கியமான வேலையை செய்ய போற நீ? விஜய் சாரே உனக்கு எவ்வளவு நாள் வேணும்னாலும் லீவ் தர ரெடியா இருக்கிறதா சொல்லிட்டாரு. அதனால இப்போதைக்கு நம்ம ஷூட்டிங்குக்கும் போகத் தேவையில்லை. அப்புறம் வேற என்ன?

கம்முனு ஹாஸ்பிடல்ல ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே! உனக்கு போர் அடிச்சதுனா சொல்லு. நம்ம எல்லாரும் ஃபோன்ல ஏதாவது கேம் விளையாடலாம். இல்லேன்னா எவ்ளோ நேரம் வேணாலும் கதை பேசிக்கிட்டே இருக்கலாம். பேசுறதுக்கு விஷயமா இல்ல? என்னையெல்லாம் விட்டா உன் காதுல இருந்து ரத்தம் வர அளவுக்கு நான் பேசிக்கிட்டே இருப்பேன் உன் கிட்ட!” என்று சொல்லிவிட்டு சிரித்தான்.

“உனக்கு என்ன டா? நீ வாய் இருக்குன்னு இஷ்டத்துக்கு பேசுவ. அதை நான் கேட்கணும்ல!” என்று நினைத்த அமுதா அவனை பாவமாக பார்த்தாள்.

- காதல் மலரும் 🌹

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)
 

Author: thenaruvitamilnovels
Article Title: நாயகன் 93
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.