அத்தியாயம் 89
விஜய் தனது திட்டத்தை அமுதாவின் அருகில் இருந்த நர்ஸ் வெண்மனியிடம் விளக்க, அவனது குரலை கேட்டதிலேயே ஒருவித கிரக்கத்தில் நின்று கொண்டிருந்த அந்த பெண் “ஓகே சார் ஓகே சார்! நீங்க சொல்றது. எனக்கு நல்லா புரியுது. நான் அதே மாதிரியே பண்றேன்.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள்.
பின் அவள் அமுதாவிடம் அவளுடைய மொபைல் ஃபோனை திருப்பிக் கொடுக்க, “நீங்க என்ன சார் பண்ண போறீங்க? எனக்கு மறுபடியும் இன்னொரு பிரச்சனையான்னு யோசிச்சாலே பயமா இருக்கு. இப்ப தான் எங்க வீட்ல இருக்கறவங்க எல்லாரும் நான் சினிமால நடிக்கிறதை அக்செப்ட் பண்ணிக்கிட்டு எனக்கு சரியானா போதும். எனக்கு பிடிச்சதை பண்ணிட்டு நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறாங்க. இப்போ மாட்டினா, எல்லாத்தையும் மறுபடியும் முதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ற மாதிரி ஆயிடும்.” என்று அவனிடம் தயக்கத்துடன் சொன்னாள் அமுதா.
“ச்ச்.. கொஞ்சம் வாய மூடிட்டு நீ சும்மா இருக்கியா?” என்று விஜய் எரிச்சலுடன் தன் குரலை உயர்த்தி கேட்க, கப்சிப் என்று தன் வாயை மூடிக் கொண்டாள் அமுதா. சில நொடிகள் கடந்து இருந்தும் அவள் எதுவும் பேசாததால் “குட் கேர்ள், இப்படித் தான் இருக்கணும். கம்முனு நான் சொல்றதை மட்டும் கேளு.” என்றான் விஜய். அதற்கும் வாயை திறக்காமல் ம்ம் என்றாள் பயந்த குரலில் அவள்.
விஜய் அந்த ஹாஸ்பிடலின் இரண்டாவது ப்ளோரில் உள்ள ஸ்கேன் சென்டருக்கு சென்று யாருக்கும் தெரியாமல் மறைந்து ஒரு சாரில் அமர்ந்து கொள்ள, அமுதாவிற்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் அதனால் தான் அவளை அழைத்து செல்வதாக விஜய் சொல்லிக் கொடுத்ததைப் போல அவளுடைய குடும்பத்தினர்கள் அனைவரிடமும் சொன்ன நர்ஸ் தன்னுடன் அவளை அழைத்துக் கொண்டு அந்த ரூமில் இருந்து கிளம்பினாள்.
“நானும் உன் கூட வரேன் கண்ணு. ஸ்கேன் எடுக்குறதுக்கு இரண்டாவது மாடிக்கு போகணும். வா நான் உன்னை பத்திரமா கூட்டிட்டு போறேன்.” என்று சொன்ன அன்னபூரணி எழுந்து நிற்க, “ஐயோ அண்ணி வேண்டாம்!” என்று பதட்டத்தில் இருந்த அமுதா அவசரமான குரலில் சொன்னாள்.
அவள் சொன்ன விதம் சந்தேகம் படும்படியாக இருந்ததால் “ஏன்.. இப்ப உங்க அண்ணி உன் கூட வந்தா என்ன பிரச்சனை உனக்கு?” என்று மணிகண்டன் தன் புருவங்களை உயர்த்தி அவளைப் பார்த்து கேட்க, தன் அண்ணனின் குரலில் ஏற்கனவே பயத்தில் இருந்த அமுதாவிற்கு இப்போது உடல் நெடுங்க தொடங்கியது. வார்த்தைகள் தந்தி அடிக்க அவள் “அது வந்து அண்ணா!” என்று இழுத்தாள்.
“ஐயையோ என்ன இந்த பொண்ணுக்கு ஒரு பொய் கூட சொல்ல தெரியல.. இவள நம்பி விஜய் சார் கிட்ட இந்த பொண்ண பத்திரமா நான் கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டேனே!” என்று நினைத்த நர்ஸ் எங்கே அமுதா காரியத்தை கெடுத்து விடுவாளோ என நினைத்து பயந்து, “அது ஒன்னும் இல்ல சார். அமுதா மேடம்க்கு இங்க ஒரே ரூம்லயே இருந்து ஒரு மாதிரி இருக்குன்னு சொன்னாங்க. அதான் அப்படியே லிஃப்ட்ல ஸ்கேன் சென்டருக்கு கூட்டிட்டு போயிட்டு பக்கத்துல இருக்கிற பேபிஸ் டேக் கேர் சென்டருக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னேன்.
அங்க குழந்தைங்க நிறைய பேர் இருப்பாங்க. அவங்களைப் பாத்தாலே மனசுக்கு நிம்மதியா இருக்கும். அங்க எல்லாரும் வர்றதுக்கு அலோவ்டு இல்ல. அதான் அமுதா மேடம் அவங்க கூட வேற யாரும் வர வேண்டாம்னு சொல்றாங்க. நீங்க யாரும் கவலைப்படாதீங்க. நான் இவங்கள பத்திரமா கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வந்துடறேன்.” என்று சொல்லி இதற்கு மேல் அமுதாவை வாயையே திறக்க விடக் கூடாது என நினைத்து வேகமாக அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
தனது குடும்பத்தினரை திரும்பிப் பார்த்தபடி அந்த நர்சுடன் சென்ற அமுதா ஸ்கேனிங் ரூமில் யாருக்கும் தெரியாமல் மறைந்து அமர்ந்திருந்த விஜயை பார்த்தாள். அவன் தன் முகத்தை மாஸ் போட்டு மறைந்திருந்தாலும் கூட, அவன் உருவத்தை கண்ட உடனேயே அவளது மனம் அவனை அடையாளம் கண்டு கொள்ள, அப்படியே சகலமும் மறந்து இமைக்க மறந்து அவனையே பார்க்க தொடங்கினால் அமுதா. அவனும் அவளையே பார்த்தபடி தன் முகத்தில் இருந்த பாஸ்கை கழட்டினான்.
விஜயை பார்க்கும் ஆர்வத்தில் அமுதாவுடன் வந்திருந்த நர்ஸ் “சார் நீங்க எவ்வளவு நேரம் வேணாலும் அமுதா மேடம் கூட பேசிட்டு இருங்களாம். யாரும் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க. இவங்க ஃபேமிலி கிட்டையும் நான் கிளியரா பேசிட்டேன்.” என்று தான் எதையோ சாதித்து முடித்து விட்ட சந்தோஷத்தில் உற்சாகமான குரலில் சொன்னாள்.
அவள் குரலை கேட்ட பிறகு தான் அங்கே ஒருத்தி நிற்பதையே உணர்ந்த விஜய் தன் பார்வையை அவள் பக்கம் செலுத்த, “இவர் என்ன நீதான் பெரிய டிஸ்டர்பன்ஸ்.. முதல்ல இங்க இருந்து போன்னு சொல்ற மாதிரியே நம்மள பாக்குறாரு!” என்று நினைத்த நர்ஸ் “சாரி சார்! இதோ இப்பவே நானும் இங்க இருந்து போயிடுறேன்.
அதுக்கு முன்னாடி எனக்கு ஒரே ஒரு ஆட்டோகிராப் மட்டும் போட்டு கொடுக்கிறீர்களா ப்ளீஸ்? நான் உங்களோட பெரிய fan. உங்களை இப்படி நேர்ல பாக்க முடியும்னு எல்லாம் நான் கனவுல கூட நினைச்சதில்ல. நீங்களே யாருக்கும் தெரியாம தான் சீக்ரட்டா இங்கே வந்து இருக்கீங்க. இந்த டைம்ல உங்க கூட ஃபோட்டோ வேணும்னு கேட்டா நல்லா இருக்காதுன்னு தான் ஆட்டோ காப் கேட்கிறேன். ப்ளீஸ் சார்!” என்று கேட்டபடி ஒரு நோட் பாடையும் பெண்ணையும் நீட்டினாள்.
அவள் தனக்கு உதவி இருப்பதால் தானும் பதிலுக்கு அவளுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்த விஜய் அவளிடம் இருந்து அதை வாங்கியடி “உங்க பேர் என்ன?” என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண் வாய் எல்லாம் பல்லாக “என் பேரு மாதவி சார்.“ என்று சொல்ல, “பெஸ்ட் விஷஸ் மாதவி” என்று எழுதி விஜய் குருமூர்த்தி என்று அதில் கையெழுத்து போட்டு அவளிடம் கொடுத்த விஜய் “எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு தேங்க்ஸ்.” என்றான்.
எவ்வளவு பெரிய சினிமா ஸ்டார் தன்னிடம் இத்தனை கனிவாக நடந்து கொள்கிறாரே என்று நினைத்து அவனை கண்டு ஒவ்வொரு நொடியும் உருகிக் கொண்டு இருந்த மாதவி அங்கேயே இன்னும் கொஞ்ச நேரம் அவனுடன் இருக்க வேண்டும் என்று அவளுக்கு ஆசையாக இருந்தாலும் கூட, தான் அப்படி செய்தால் அது மரியாதையாக இருக்காது என நினைத்து பதிலுக்கு அவனுக்கு தேங்க்ஸ் சொல்லிவிட்டு அவன் சைன் போட்டு கொடுத்த நோட் பேடை தன் நெஞ்சோடு சேர்த்து அனைத்து பிடித்துக் கொண்டு சிரித்த முகமாக வெளியில் சென்றாள்.
அவள் சென்ற பிறகு அமுதா கலங்கிய கண்களுடன் விஜயை பார்க்க, அவன் தனது வெங்கல குரலில் கொஞ்சம் இனிமையாக “அமுதா!” என்று அவள் பெயரை சொன்னது தான் தாமதம். வேகமாக சென்று அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு தன் கண்ணீரால் அவன் சட்டையை ஈரமாக்கிய அமுதா “தேங்க்ஸ் சார்! நீங்க மட்டும் இல்லேன்னா, நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன்.” என்று துக்கம் தொண்டையை அடைக்க சொன்னாள்.
அவளது திடீர் அணைப்பால் ஒரு நொடி தடுமாறிய விஜய் தானும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு “நீ இப்படி அழுகிறதை பார்க்கிறதுக்கு நான் இவ்ளோ தூரம் வந்தேன்?” என்று கேட்க, அவன் இப்போது இவ்வளவு ரிஸ்க் எடுத்து எதற்காக தன்னை பார்க்க வந்திருக்கிறான்? என்ற கேள்வி அவளுக்குள் இருந்ததால் அப்போதும் அவனை விட்டு விலக மனம் வராமல் தன் தலையை மட்டும் தூக்கி கேள்வியாக அவனைப் பார்த்தாள் அமுதா.
“என்ன டி இப்படி பாக்குற?” என்று விஜய் அவளது பார்வையின் தாக்கத்தை தாங்க முடியாமல் கேட்க, “உங்கள தான் பார்க்கிறேன். நீங்க எவ்ளோ பெரிய ஆளு.. எனக்காக ஏன் இந்த அளவுக்கு பண்றீங்கன்னு பார்க்கிறேன். என்னால இப்ப கூட அன்னைக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்ததை எல்லாம் மறக்கவே முடியல.” என்றாள் அமுதா. அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாலும், அவர்கள் கைகள் நான்கும் மற்றொருவரை விலக விடாமல் இறுக்கமாக பிடித்துக் கொண்டு தான் இருந்தது.
“இப்போ நான் அதை செஞ்சதுனால என்ன ஆயிடுச்சு உனக்கு? என் நான் உனக்கு ஒன்னுனா வந்து நிக்க கூடாதா? உனக்காக பேசுறதுக்கு எனக்கு உரிமை இல்லையா?” என்று அவன் கேட்க, “நம்ம சொன்னதை இவர் தப்பா நினைச்சுக்கிட்டாரு போல!” என்று நினைத்து பதட்டப்பட்ட அமுதா “அச்சச்சோ.. அப்படியெல்லாம் இல்ல சார். தாராளமா நீங்க எனக்காக எல்லாமே செய்யலாம். உங்களுக்கு அந்த உரிமை இருக்கு. நான் அப்படி மீன் பண்ணல. சில விஷயங்களை எதுக்கு நம்ம செய்யணும்னு எல்லாரும் பிரச்சனையை கண்டால் ஒதுங்கி தான் போவாங்க.
அதுவும் உங்க விஷயத்துல என்ன நடந்தாலும் உடனே நியூஸ் ஆயிடும். ஆனா நீங்க உங்க பேர பத்தி கூட கவலைப்படாம எனக்காக நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கீங்க. அத நெனச்சா எனக்கு நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் அதைத் தான் சொல்ல வந்தேன்.” என்று அமுதா அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டே செல்ல, அவள் தனது குட்டி கண்களை சிமிட்டி சிமிட்டி இனிமையான குரலில் அப்படி பேசிக் கொண்டு இருப்பதை அத்தனை அருகில் பார்த்து ரசித்த விஜய் தன்னையும் அறியாமல் அவளது பின் கழுத்தில் கை வைத்து அவளை இன்னும் நெருக்கமாக தன் பக்கம் இழுத்து அவளது இதழ்களில் தனது இதழ்களை பதித்தான்.
அவனிடம் மும்மரமாக பேசிக் கொண்டு இருந்த அமுதா திடீரென்று அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்த்து இருக்காதால், விழிகள் விரிய அவனைப் பார்த்தபடி அவனுடைய தோள்களில் இருந்த தனது கைகளின் அழுத்தத்தை கூட்டினாள். அவள் அப்படி பயத்தில் செய்ய, அவனுக்கு என்னவோ தான் கொடுக்கும் முத்தத்தை அவள் தொடர விரும்புகிறாள் போல என்று தான் தோன்றியது.
அதனால் அவளுடைய கீழ் உதட்டை கடித்து இழுத்து சுவைக்க தொடங்கிய விஜய் தன் முத்தத்தை நொடிக்கு நொடி ஆழமாக்கிக் கொண்டே சென்றான். அதில் தன்னை மறந்து நடக்கும் எதையும் நம்ப முடியாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அமுதா.
- காதல் மலரும் 🌹
(என்னை மறக்காமல்
பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: நாயகன்-89
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.