அமுதாவிடம் அவளுடைய குடும்பத்தை பற்றி விசாரித்து தெரிந்து கொண்ட விஜய் தனது குடும்பத்தை பற்றி யோசித்துப் பார்த்தான். அவனுக்கு அனைவரும் இருந்தும் யாரும் இல்லாததை போலவே இருக்க, “நீ ரொம்ப லக்கி தான்!” என்று உணர்ச்சிவசப்பட்டு சொன்னான். “ஆமா சார், இந்த விஷயத்துல மட்டும் நான் ரொம்ப லக்கி தான்.” என்று மனதார அமுதா சொல்ல, “அதென்ன இந்த விஷயத்துல மட்டும்? மத்ததுல எல்லாம் நீ ரொம்ப unlucky-ஆ இருக்கேன்னு உனக்கு தோணுதா?” என்று கேட்டான் விஜய்.
“சேச்சே.. அப்படியெல்லாம் இல்ல சார்! இப்ப தான் என் லைஃப்லயும் நிறைய நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்குதே! நீங்க எவ்ளோ பெரிய சினிமா ஸ்டார்.. எனக்கு உங்க கூட சேர்ந்து நடிக்கறதுக்கு சான்ஸ் கிடைச்சதே பெரிய விஷயம். இதோ இப்ப உங்க கூட நான் ஃபோன்ல பேசிட்டு இருக்கேன்.
நடக்கிறது எல்லாம் உண்மைன்னு இப்ப கூட என்னால நம்ப முடியல. இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கும்போது நான் ஏன் என்னை unlucky-ன்னு நினைக்க போறேன்? இப்போதைக்கு மேரேஜ் மட்டும் வேணாமேன்னு எனக்கு தோணுச்சு. கடவுள் நான் ஆசைப்பட்ட மாதிரியே இந்த கல்யாணத்தை நடத்தியே தீருவேன்னு சொல்லிட்டு இருந்த எங்க பெரியண்ணன் வாயாலயே இப்போதைக்கு இந்த கல்யாண பேச்சு வேண்டாம்.
முதல்ல இப்ப நான் நடிச்சிட்டு இருக்கிற படம் முடியட்டும். மத்தது எல்லாத்தையும் அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாரு. சோ இப்ப நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சார். என் லைஃப்ல எல்லாம் நல்லதும் உங்களால தான் நடந்துச்சு. தேங்க்யூ சார்!” என்று உற்சாகமான குரலில் அமுதா செல்ல,
இதுவரை பெரிதாக மற்றவர்களுக்காக என்று ஒருபோதும் யோசித்து இருக்காத விஜய்க்கு தனக்கு அவள் இவ்வளவு மரியாதை கொடுப்பது உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது. அதனால் என்னவோ அவளைக் காக்கும் பொறுப்பு தனக்கு இருக்கிறது என்று தானாகவே நினைத்துக் கொண்ட விஜய் “ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும். நீ என் கம்பெனி ஆர்டிஸ்ட். உனக்கு எதுவும் ஆகாம உன்ன பத்திரமா பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. இந்த மாதிரி உனக்கு எந்த பிராப்ளம் வந்தாலும் நீ தாராளமா வந்து என் கிட்ட சொல்லலாம்.” என்று பெருந்தன்மையுடன் சொல்ல, மீண்டும் அவனுக்கு நன்றி சொல்லி அவனை தனது அன்பு மழையில் மரியாதையுடன் நனைய வைத்துக் கொண்டிருந்தாள் அமுதா.
விஜய் வீட்டிற்கு வருவான் என்று வாசலை பார்த்தபடி ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்து வெகுநேரமாக காத்துக் கொண்டிருந்த அனாமிகா நேரம் இரவு 11 மணி கடந்து சென்று கொண்டிருந்தும் அவன் வராததால் “நீ சொன்ன மாதிரியே டோட்டலா என்ன அவாய்ட் பண்ண ட்ரை பண்றியா விஜய்? அந்த அளவுக்கு உனக்கு நான் வேண்டாதவளா போயிட்டனா? அப்படியே அந்த அமுதாவுக்கு ஏதாவது ஒன்னுனா மட்டும் பறந்திடுச்சுக்கிட்டு போற! நான் உன் வைஃப் விஜய்.
உனக்கு என் மேல ஃபீலிங்சோ பாசமோ இல்லைன்னா கூட பரவால்ல. என் இடத்துல வேற எந்த பொண்ணாவது இருந்திருந்தா நீ இவ்வளவு டார்ச்சர் பண்ணதுக்கு எப்பயோ நீயும் வேண்டாம் உன் கிட்ட இருக்கிற காசு, பணமும் வேண்டாம்னு உன்னை விட்டுட்டு ஓடிப்போயிருப்பா. நான் உன்னை நெஜமாவே லவ் பண்றேன் விஜய். எனக்கு நீ எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு உன்னோட ப்ராப்பர்ட்டீஸ் அண்ட் மணி also முக்கியம் தான்.
அதுக்காக நான் நிறைய தப்பு பண்ணியிருக்கிறேன் தான் ஒத்துக்கிறேன். பட் உன்னை ஏமாத்துற மாதிரி அந்த பிரியா பண்ணாளே.. அப்படி எதுவும் நான் பண்ணலையே! எத்தனை தடவை நான் உன்னையே சுத்தி சுத்தி வந்தாலும் கூட உனக்கு என்ன பாத்தா ஒரு ஆளாவே தெரிய மாட்டேங்குதுல! நீ இப்படி இருக்கிறது ஒன்னும் எனக்கு புதுசு இல்ல. இந்த அமுதாவை பார்த்ததுக்கு அப்புறமா நீ இன்னும் ஓவரா பண்ணிட்டு இருக்க. அதைத் தான் என்னால டாலரேட் பண்ண முடியல.” என்று தனக்கு தானே பேசிக் கொண்டு இருந்தாள்.
பின் தன் அப்பாவிற்கு கால் செய்து அமுதாவைப் பற்றி சொல்லி “டாட் நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. இனிமே அமுதா விஜயை பத்தி யோசிக்கவே கூடாது அந்த மாதிரி ஏதாவது ஒன்னு பண்ணனும். நானே டைரக்ட்டா போய் ஏதாவது பண்ணா கண்டிப்பா மாட்டிக்குவேன். அண்ட் விஜய் என் மேல இருக்கிற கடுப்புக்கு கொஞ்சம் கூட யோசிக்காம என்ன சொன்னாலும் கொன்னுடுவான்.
சோ அமுதாவை டார்கெட் பண்ணிட்டு இருக்க பிரசிடெண்ட் பொண்ணு அபிநயாவை வச்சு நான் ஏதாவது பண்ணலாம்னு யோசிக்கிறேன். நீங்க எப்படியாவது மார்னிங்க்குள்ள அந்த பொண்ணோட ஃபோன் நம்பரை எனக்கு வாங்கி கொடுங்க. அவளை யூஸ் பண்ணி நான் அமுதாவை மொத்தமா முடிக்க போறேன்.” என்றாள் அனாமிகா.
அனாமிகாவின் அப்பா ராஜேந்திரனும் அவளுடைய திட்டத்தைக் கண்டு வியந்து “அந்த பொண்ணை வச்சு மூவ் பண்ணா, கண்டிப்பா நம்ம மாட்டமாட்டோம். அவ ஃபோன் நம்பர் தானே வேணும்.. நான் உனக்கு அத அரேஞ்ச் பண்ணி குடுக்கிறேன்! நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது அனாமிகா.
கோர்ட்டுல கொடுத்த ஒன் இயர் டைம் முடியிற வரைக்கும் எல்லாம் விஜய் சும்மா இருப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்ல. நம்மளால டைரக்ட்டா போய் அவன் கிட்ட மோதவும் முடியாது. நீ எப்படியாவது இன்னும் ஒரு மாசத்துக்குள்ள அவனை கரெக்ட் பண்ணி ப்ரெக்னன்ட் ஆகுற.. அவனை இழுத்து பிடிக்கிறதுக்கு நமக்கு இருக்கிற ஒரே ஆப்ஷன் அது மட்டும் தான். உங்க அம்மா கிட்ட வேணும்னா ஏதாவது ஐடியா கேளு. பட் நீ இன்னும் ஒரு மாசத்துக்குள்ள ப்ரெக்னன்ட் ஆகிய ஆகணும். நமக்கு வேற வழியில்ல.” என்றார்.
“நானும் அதுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் டாடி. ஆனா அவன் என் கிட்ட மாட்டாம தப்பிச்சுக்கிட்டே இருக்கான். இன்னைக்கு கூட இங்க கெஸ்ட் ஹவுஸ்க்கு வராம வேற எங்கேயோ போய் தங்கிவிட்டான். அவனோட லொகேஷனை எவ்வளவோ ட்ரை பண்ணியோ என்னால கண்டுபிடிக்கவே முடியல. நாளைக்கு டைரக்டா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய் அவன் கிளம்பும்போது எங்க போறான்னு அவனை ஃபாலோ பண்ணி பார்த்தா தான் தெரியும்.” என்ற அனாமிகா தன் அப்பாவிடம் இன்னும் சில முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தாள்.
அமுதாவிடம் பேசிக் கொண்டு இருந்த விஜய்க்கு அவன் அவளை ஹாஸ்பிடலில் பாதியில் விட்டுவிட்டு வந்ததால் என்னவோ மீண்டும் சென்றும் பார்க்க வேண்டும் போல இருந்தது. அதனால் இதற்கு முன் செய்ததை போலவே இப்போதும் அவளிடம் பேசிக் கொண்டே அவனாக ஒரு மாஸ்கை எடுத்து மாட்டிக் கொண்டு தன் காரில் அமுதா இருக்கும் ஹாஸ்பிடலை நோக்கி பயணித்தான்.
“ஏன் சார் திடீர்னு என் பேரன்ட்ஸை பத்தி எல்லாம் கேட்டீங்க? நீங்க இப்படி வெளியூர்ல வந்து வொர்க் பண்றதுனால உங்க ஃபேமிலில இருக்கிறவங்கள நீங்க மிஸ் பண்றீங்களா?” என்று அமுதா கேட்க, “ம்ம்.. அப்படித் தான் நினைக்கிறேன்.” என்றான் அவன். அவன் சொன்ன விசித்திரமான பதிலை கேட்டு சிரித்த அமுதா “மத்தவங்க எல்லாரும் சொல்றதை விட நீங்க ரொம்ப டிஃபரண்டா இருக்கீங்க சார். பட் அதே சமயம் ரொம்ப ரியலா இருக்கீங்க. அதான் எனக்கு உங்க கிட்ட ரொம்ப பிடிச்சதே. மத்தவங்கள பாத்து இப்படி செஞ்சா நல்லா இருக்கும்னு நீங்க ஆக்டிங்லயும் சரி பர்சனல் லைஃப்லயும் சரி எதையுமே காப்பி அடிச்சு பண்ணதில்லை. That's why you are a only single signing star.” என்று பெருமையாக சொன்னாள்.
இப்படியே அவளிடம் பேசியவாறு சென்று ஹாஸ்பிடலின் பின் வாசலில் காரை நிறுத்திய விஜய் மாஸ்க் போட்டு தன் முகத்தை கவர் செய்து விட்டு மெயின் என்ட்ரன்ஸ் வழியாக ஃபோனை காதில் வைத்து பேசியபடி உள்ளே சென்று கொண்டிருந்தான். அவன் நடந்து செல்லும் போது லேசாக அவனுக்கு மூச்சு வாங்க, “என்னாச்சு சார்? நடந்துகிட்டே பேசுறீங்களா என்ன?” என்று அமுதா கேட்க, “ம்ம்.. ஆமா. இப்ப நீ அட்மிட் ஆகி இருக்க ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன். எமர்ஜென்சி வார்டுல இருந்து உன்னை ஷிப்ட் பண்ணிட்டாங்க போல! இப்ப எந்த ரூம்ல இருக்க?” என்று கேட்டான் விஜய்.
“ஐயோ என்ன சார் சொல்றீங்க? நெஜமாவே நீங்க என்ன பாக்க என் ரூமுக்கு தான் வந்துட்டு இருக்கீங்களா?” என்று அமுதா பதட்டத்துடன் கேட்க, “ஏன் நான் வரக்கூடாதா?” என்று கூலாக கேட்டான் விஜய். “ஆமா சார் ஆமா இப்ப நீங்க வரவே கூடாது. வெளியே எங்க பெரிய அண்ணனும், அண்ணியும் வெயிட்டிங் ஏரியால உக்காந்திருக்காங்க. வெற்றி இவ்ளோ நேரம் என் பக்கத்துலயே தான் உக்காந்து இருந்தான். இப்ப தான் ரொம்ப லேட் ஆயிடுச்சுன்னு கலைச்செல்வியை அவ வீட்ல விட்டுட்டு வரேன்னு கிளம்பி போனான். அவனும் கொஞ்ச நேரத்துல திரும்பி வந்துருவான். எல்லாரும் இங்கே இருக்கும்போது நீங்க வந்தா ஏதாவது ப்ராப்ளம் ஆயிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு சார்.” என்று பதட்டமான குரலில் சொன்னாள்.
“ஓஹோ... நான் தானே அங்க வரக்கூடாது! நான் இருக்கிற இடத்துக்கு நீ வரலாமே..!!” என்று விஜய் கேட்க, “நானா? சுத்தி இத்தனை பேர் இருக்கும் போது என்னால எப்படி சார் அவங்க எல்லாரையும் மீறி வர முடியும்?” என்று அவனிடம் குழப்பத்துடன் கேட்டாள் அமுதா. “உன் பக்கத்துல உன் ஃபேமிலி மெம்பர்ஸ் தவிர வேற யாராவது இருக்காங்களா?” என்று அவன் கேட்க, “இப்போ என் ரூம்ல ஒரே ஒரு நர்ஸ் மட்டும் தான் இருக்காங்க சார்.” என்றாள் அவள்.
“குட், அப்போ ஒன்னும் பிரச்சனை இல்ல! நான் விஜய் பேசுறேன்னு சொல்லி அவ கிட்ட ஃபோன் குடு. என்ன பண்ணனும்னு நான் அவ கிட்ட சொல்லிக்கிறேன்.” என்று விஜய் சொல்ல, “சார் எனக்கு பயமா இருக்கு!” என்று மெல்லிய குரலில் சொன்னாள் அமுதா. “அட நான் தான் அந்த பொண்ணு கிட்ட பேசுறேன் சொல்றேன்ல.. நான் இருக்கும்போது உனக்கு என்ன பயம்? நீ முதல்ல அந்த பொண்ணு கிட்ட ஃபோனை குடு.” என்று விஜய் அழுத்தி சொன்னதால், தன் அருகில் நின்று கொண்டு தான் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்த நர்சை திரும்பி பார்த்த அமுதா “விஜய் சார் உங்க கிட்ட பேசணும்னு சொல்றாரு!” என்று சொல்லிவிட்டு அவளிடம் ஃபோனை கொடுத்தாள்.
“என்னது விஜய் சார் என் கிட்ட பேசணும்னு சொல்றாரா? ஐயோ என்னால இதை நம்பவே முடியலையே.. குடுங்க குடுங்க மேடம்.. நான் பேசுறேன்.” என்ற அந்த ஆவலுடன் அமுதாவின் ஃபோனை வாங்கி பேசினாள். விஜயின் குரல் தன் காதில் கேட்டவுடன் ஏதோ ஒரு பரவச நிலைக்கு இருந்த சந்தோஷத்தில் சென்றுவிட்ட அந்த பெண் அவன் என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்யும் நிலையில் இருந்தாள்.
- காதல் மலரும் 🌹
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: நாயகன்-88
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.