நாயகன்-87

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 87

விஜய் தங்கி இருந்த கெஸ்ட் ஹவுஸில் இப்போது அனாமிகா தங்கி இருந்தாள். அங்கே செல்ல பிடிக்காததால் ஷூட்டிங் முடிந்தவுடன் ஊருக்கு வெளியில் ஒதுக்குப்புறமாக காலியாக இருந்த ஒரு டீசன்ட்டான வீட்டை தினேஷை வாடகைக்கு பிடித்த விஜய் தனது ஆட்களுடன் அங்கே சென்று செட்டில் ஆனான்.

அவனுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அங்கே அரேஞ்ச் செய்து கொடுத்துவிட்டு அவனுடைய ஆட்கள் அனைவரும் அவன் முன்னே கை கட்டி நின்று கொண்டிருக்க, ஹாலில் உள்ள சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த விஜய் “எல்லாவருக்கும் முடிஞ்சுதா?” என்று தனது கனீர் குரலில் கேட்டான். அதற்கு அனைவரும் கோரசாக “எஸ் பாஸ்!” என்று சொல்ல, “நீங்க எல்லாருமே ஸ்டே பண்றதுக்கு இங்கே ஸ்பேஸ் ஓகேவா இருக்கா?” கேட்டான் விஜய்.

அதற்கும் அனைவரும் ஒன்றே போல “எஸ் பாஸ்!” என்று சொல்ல, “ஓகே தென், போய் எல்லாரும் உங்க வேலைய பாருங்க. அண்ட் நான் இங்க இருக்கிறது யாருக்கும் தெரியக் கூடாது. முக்கியமா அனாமிகாவுக்கு தெரியவே கூடாது. இங்க இருந்து அவளுக்கு எவனோ ஒருத்தன் நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்னு செகண்டுக்கு செகண்ட் இன்ஃபர்மேஷன் குடுத்துகிட்டே இருக்கான்.

அவன் யாருன்னு தான் நானும் தேடிக்கிட்டே இருக்கேன். என் கையில மட்டும் சிக்கினீங்க, எவனா இருந்தாலும் என்கொயரி பண்றது எக்ஸ்கியூஸ் கொடுக்கிறது எல்லாம் இல்ல. டைரக்டா ஒரே புல்லட் தான். பேசுறதுக்கு கூட டைம் குடுக்காம மேல அனுப்பி வச்சுருவேன்.” என்று அனைவரையும் பார்த்து மிரட்டும் தோரணையில் சொன்னான் விஜய்.

அவன் பேச்சுக்கு மிரட்டக்கூடியவன் அல்ல. நினைப்பதை தயக்கம் இன்றி ஒரே நொடியில் செய்து முடிப்பவன் என்று அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும் என்பதால் இப்போது பயம் கலந்த குரலில் அனைவரும் “ஓகே பாஸ்!” என்றார்கள். சொல்லுங்கள் என்பதைப்போல விஜய் அவர்களைப் பார்த்து தன் ஒற்றை விரலை அசைக்க, தினேஷ் தவிர மற்றவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

விஜயின் அருகில் சென்று அமர்ந்த தினேஷ் “பாஸ்.. அந்த கெஸ்ட் ஹவுஸ்ல நமக்கு குக் பண்ணி குடுத்துட்டு இருந்தவரை இங்க வர சொன்னா, அவர வச்சு அனாமிகா மேடம் நம்ம லொகேஷனை கண்டு பிடிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு. சோ நம்ம இன்னொரு குக்கை கண்டுபிடிக்கிற வரைக்கும் வெளியில தான் வாங்கி சாப்பிட்டாகனும்.

உங்களுக்கு என்ன வேணும்னு சொன்னீங்கன்னா நான் ஏதாவது நல்ல ரெஸ்டாரன்ட்டா பார்த்து ஆர்டர் பண்ணிடுவேன். நம்ம பசங்களுக்கும் ஃபுட் ஆர்டர் பண்ணனும். டின்னர் டைம் ஆயிடுச்சு.” என்று கேட்க, ம்ம்.. என்றான் விஜய்.

“இன்னும் நீங்க அந்த பொண்ணு அமுதாவை பத்தியே யோசிச்சிட்டு இருக்கீங்களா பாஸ்? நானும் உங்கள மார்னிங்ல இருந்து பார்க்கிறேன். சூட்டிங் ஸ்பாட்ல கூட கேமரா ஆன் ஆகுற வரைக்கும் எதையோ யோசிக்கிட்டே இருந்தீங்க. ஆக்டிங் பண்ணும் போது மட்டும் தான் நீங்க நார்மலா இருந்தீங்க.” என்று அக்கறையுடன் கேட்க, “அதான் உனக்கே தெரியுதுல.. அப்புறம் ஏன் கேக்குற?” என்று கேட்ட விஜய் அப்படியே சோஃபாவில் சாய்ந்து தன் கண்களை மூடினான்.

“இந்நேரம் அந்த பொண்ணுக்கு சரியாகிருக்கும் பாஸ். அதான் அவ கூட அவளோட ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாம் இருக்காங்களே! அவங்க அந்த பொண்ண நல்லா பாத்துக்கோங்க. குறிப்பா அந்த வெற்றி இருக்கானே.. அந்த பொண்ணு பின்னாடியே தான் எப்பயும் சுத்திட்டு இருப்பான். அவன் ஒருத்தன் போதும் அமுதாவை பார்த்துக்க.” என்ற தினேஷ் அவனிடம் எதார்த்தமாக சொல்ல,

அமுதாவை கவனித்துக் கொள்ள வெற்றி ஒருவன் போதும் என்ற தினேஷ் சொன்னது மட்டும் மீண்டும் மீண்டும் விஜயின் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது. கண்டிப்பாக அவன் அப்படி சொன்னது விஜய்க்கு பிடிக்கவில்லை. ஆனால் அது ஏன்? அதைப்பற்றி எல்லாம் இப்போது யோசிக்கும் மனநிலையில் இருந்திருக்காத விஜய் “உனக்கு இந்த டைம்ல எந்த வேலையும் இல்லல்ல.. அதானே ஜாலியா என் பக்கத்துல உக்காந்து கடலை போட்டுட்டு இருக்க நீ! ஆடிட்டிங் ஃபைல்ஸ் எல்லாத்தையும் ஒரு வாரத்துக்குள்ள உன்ன செக் பண்ணி என் கிட்ட சப்மிட் பண்ண சொன்னேன்ல்ல.. இப்ப பிளான்ல ஒரு சேஞ்ச்.

நீ அதை நாளைக்கே சப்மிட் பண்ற. மார்னிங் தூங்கி எந்திரிச்சு முதல் வேலையா நான் அதைத் தான் செக் பண்ணுவேன். மவனே ஃபைல் மட்டும் ரெடியாகாம இருக்கட்டும், அப்ப இருக்கு உனக்கு.” என்றான்.

அதைக் கேட்டு திருக்கிட்டு எழுந்து அமர்ந்த தினேஷ் “அய்யய்யோ பாஸ்... இப்ப நான் என்ன தப்பு பண்ணேன்னு எனக்கு இவ்ளோ பெரிய பனிஷ்மென்ட் குடுக்குறீங்க? நமக்கு எத்தனை பிசினஸ் இருக்கு.. ஒரு நாளோட டர்ன் ஓவர்ன்னு கால்குலேட் பண்ணாலே எத்தனை கோடி வரும்..

இந்த மாசத்தோட மொத்த ஆடிட்டிங் ஃபைலையும் நான் செக் பண்ணி முடிக்கணும்னா எனக்கு எப்படியும் பத்து நாளாவது ஆகும். நீங்க ஒன் வீக் டைம் குடுத்ததே கம்மி தான். இதுல என்னை ஓவர் நைட்ல எல்லாத்தையும் செக் பண்ண சொல்றீங்க? It's Impossible boss! நான் எனக்கே தெரியாம ஏதாவது பண்ணி உங்கள கடுப்பேத்தி இருந்தனா, உங்க கோபம் போற வரைக்கும் என்ன இரண்டு அடி கூட அடிச்சுக்கோங்க. இவ்ளோ பெரிய டாஸ்கை எல்லாம் கொடுத்து என்ன சாவடிக்காதீங்க பாஸ்!” என்று விஜய்யின் காலில் விழாத குறையாக கெஞ்சினான்.

“நான் சொன்னது சொன்னது தான் தினேஷ். நீ உன் கூட எத்தனை பேர வச்சு வேணாலும் வேலை பாரு. எனக்கு அதை பத்தி எல்லாம் எந்த கவலையும் இல்லை. நாளைக்கு ஆடிட்டிங் ஃபைல் பைனல் ஆகி என் டேபிளுக்கு வரணும். முக்கியமா எந்த எரர்சும் இல்லாமல் வரணும். அவ்ளோ தான்!” என்று சொல்லிவிட்டு அந்த சோஃபாவில் இருந்து எழுந்த விஜய் அவன் ஷூட்டிங்கில் இருந்து அப்படியே வந்திருந்ததால் அந்த காஸ்டியூமை மாற்றி விட்டு ரெப்ரெஷ் ஆவதற்காக தனது ரூமிற்கு சென்றான்.

தயாராகி வந்து தனது அறையில் உள்ள புதிய கட்டிலில் சாப்பிடாமல் கூட படுத்த விஜய் “நான் அவளை நைட்டு கால் பண்ண சொன்னேனே! பண்ணுவாளா மாட்டாளா?” என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்த தினேஷ் “பாஸ் நீங்க உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லாததுனால நீங்க எப்பயும் சாப்பிடுற ஐட்டம்ஸ் எல்லாத்தையும் நான் உங்களுக்காக ஆர்டர் பண்ணி வாங்கிட்டேன். சூடா இருக்கு, இங்க வைக்கிறேன் சாப்பிடுங்க.” என்று சொல்ல, “ச்ச்.. ரொம்ப முக்கியம்! வெச்சிட்டு வெளியே போடா. சும்மா டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு!” என்று சலிப்புடன் சொன்னான் விஜய்.

எங்கே தான் அவன் கண் முன்னே நின்று கொண்டிருந்தால் மீண்டும் தன் மீது கோபப்பட்டு இன்னும் ஏதாவது ஒரு கஷ்டமான டாஸ்கை அவன் கொடுத்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்து பயந்து தினேஷ் அவனிடம் எதுவும் பேசாமல் வெளியேறி விட்டான். அவன் சென்ற பிறகு வெகு நேரமாக கட்டிலிலும் படுத்திருக்க முடியாமல் எழுந்து சென்று அங்கிருந்த ஜன்னல் ஓரமாக நின்ற விஜய் வானத்தில் தெரிந்த பாதி நிலவை கண்டான்.

அதை பார்த்து லேசாக புன்னகைத்த விஜய் “உன்னாலேயே பெர்ஃபெக்டா இருக்க முடியல. திடீர் திடீர்னு பெருசாகி அப்புறம் சின்னதாகிட்ருக்க. அப்புறம் சாதாரண மனுஷங்க நாங்க எல்லாம் என்ன பண்றது? நேச்சர் ஓட கிரியேஷன்ல எதுவுமே பெர்ஃபெக்ட் இல்ல. பட் அது அதுக்குன்னு ஒரு definition and purpose இருக்கு.

இதுவரைக்கும் என் லைஃப்ல பெஸ்ட்டா என்னால என்னென்ன பண்ண முடியுமோ அது எல்லாத்தையும் நான் பண்ணி இருக்கேன். ஒருவேளை இது தான் நான் பொறந்ததுக்கான பர்பஸா இருக்கலாம். பட் நான் இப்ப வாழ்ந்துட்டு இருக்க இந்த வாழ்க்கையோட அர்த்தம் என்னன்னு தான் எனக்கு தெரியல. ஒருவேளை நான் சாகும்போது தான் அது புரியுமோ என்னமோ!” என்று அவன் பாட்டிற்கு லூசுத்தனமாக எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவனுக்கு அமுதாவின் நம்பரில் இருந்து கால் வந்தது. மொபைல் ரிங் ஆனவுடன் அவளாகத் தான் இருக்கும் என்று நினைத்து ஆர்வமுடன் வேகமாக சென்று அந்த காலை அட்டென்ட் செய்த விஜய் “Are you okay?” என்று அக்கறையுடன் கேட்டான். அவனுடைய கணீர் குரலில் கூட அந்த வார்த்தைகளை அவன் சொல்லி கேட்கும்போது மெல்லிசை ராகம் போல இதமாக அவளுடைய காதுகளில் ஒலித்தது. அதில் ஒரு நொடி தன்னையும் மறந்த அமுதா “Yes Sir, I'm Fine.” என்றாள்.

“சாப்டியா?”

“எஸ் ஆர், இப்ப தான் எங்க அண்ணி வந்து எனக்கு சாப்பாடு ஊட்டிட்டு போனாங்க.”

“ம்ம்.. உன்னோட பேரன்ட்ஸ் யாரும் உயிரோட இல்ல தானே?” என்று விஜய் கொஞ்சம் வருத்தத்துடன் கேட்க, “ஆமா சார். எங்க அப்பா வயல்ல வேலை செஞ்சுட்டு இருக்கும்போது பாம்பு கடிச்சு இறந்து போயிட்டாரு. அவர் இறந்து போய் கொஞ்ச நாள்ல தான் எங்க அம்மாவுக்கு அவங்க பிரக்னண்டா இருந்ததே தெரியும். எங்க அப்பா பொண்ணு வேணும்னு ரொம்ப ஆசைப்பட்டாராம்.

ஆனா நான் பிறக்கும் போது என்ன பாக்குறதுக்கு அவர் உயிரோட இல்லையேன்னு நெனச்சு அந்த சோகத்திலேயே நான் பொறந்த கொஞ்ச நேரத்திலேயே எங்க அம்மா இறந்துட்டாங்களாம். இது கூட எனக்கு எங்க பெரிய அண்ணா சொல்லி தான் தெரியும். நான் எங்க அப்பாவையும் அம்மாவையும் ஃபோட்டோல மட்டும்தான் பாத்திருக்கேன்.” என்று தானும் சோகமாக சொன்னாள் அமுதா.

“நீ எப்பயாவது அவங்கள மிஸ் பண்ணி இருக்கியா?” என்று விஜய் கேட்க, “அவங்க இல்லாம போய்ட்டாங்களேன்னு எனக்கு வருத்தமா இருக்கும் தான். ஆனா அதுக்காக நான் அவங்களை மிஸ் பண்ணல. ஏன்னா என்னோட அண்ணாவும், அண்ணியும் அப்பா அம்மா ஸ்தானத்தில இருந்து என்ன பாத்துக்கிட்டாங்க. ஏன் இத்தனை வருஷம் ஆகியும் கூட அப்படியே தான் இருக்காங்க.

ஒருவேளை நான் இப்போ என் அப்பா, அம்மா இல்லைன்னு நினைத்து வருத்தப்பட்டா, இத்தனை வருஷமா எங்க குடும்பத்துல இருக்குறவங்க என்ன மகாராணி மாதிரி பார்த்து பார்த்து வளர்த்தது எல்லாம் அர்த்தமே இல்லாம போயிடும். எங்க அப்பாவையும், அம்மாவையும் எடுத்துக்கிட்ட கடவுள் அதுக்கு பதிலா தான் என் மேல பாசமா இருக்கிற ‌இப்படி ஒரு நல்ல ஃபேமிலியை கொடுத்திருக்கிறாருன்னு நினைச்சு மனச தேத்திக்குவேன்.” என்று பெருமையாக சொன்னாள் அமுதா‌.

அவள் சொல்லும்போதே அவளுடைய குடும்பத்தை எந்த அளவிற்கு அவள் நேசிக்கிறாள் என்று அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கு காரணம் கண்டிப்பாக அவர்கள் இவள் மீது வைத்திருக்கும் அன்பு தான் என்று நினைத்த விஜய் அப்படியே தன் குடும்பத்தை பற்றி யோசித்துப் பார்த்தான்.

- காதல் மலரும் 🌹

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: நாயகன்-87
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.