நாயகன்-86

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
நாயகன் 86 💕

அமுதாவிற்கு மயக்கம் தெரிந்து விட்டதாக சொல்லி நர்ஸ் வந்து அழைக்க, வெற்றியும் மணிகண்டனும் அவளைக் காண உள்ளே சென்றார்கள். அவர்கள் இருவரையும் பார்த்து தன் கலங்கிய கண்களுடன் அமுதா “என்ன மன்னிச்சிடுங்க அண்ணா. நீயும் என்னை மன்னிச்சிரு வெற்றி. விஜய் சார் எனக்கு எவ்வளவோ நல்லது பண்ணி இருக்காரு. அவர் கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணா நல்லா இருக்காதுன்னு தான் அவர் வர சொன்னேன். ஆனா அவர் வந்து கல்யாணத்தை நிறுத்துற அளவுக்கு பிரச்சனை பண்ணுவாருன்னு சத்தியமா நான் எதிர்பார்க்கல.

என்னால தான் கல்யாணத்துக்கு வந்திருந்த எல்லாரும் முன்னாடியும் உங்களுக்கு அசிங்கமா போயிடுச்சு. தயவுசெஞ்சு என்ன மன்னிச்சிடுங்க. சத்தியமா இனிமே இப்படி நடக்காது. நான் விஜய் சார் கிட்ட பேசுறேன். இன்னொரு நல்ல நாளா பார்த்து நீங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க அண்ணா. நீங்க ஆசைப்பட்ட மாதிரி நான் வெற்றியை கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்று உடைந்த குரலில் சொன்னாள்.

அவர்கள் இருவரும் அவள் அருகில் செல்ல, அமுதாவின் கைகளை பிடித்து தன் முகத்தில் வைத்துக் கொண்டு கதறி அழுத மணிகண்டன் “இல்ல ஆத்தா வேண்டாம்.. இப்போதைக்கு இந்த கல்யாண பேச்சே வேண்டாம். ஏதோ நீ படத்துல நடிக்கணும்னு ஆசைப்பட்ட. நாங்களும் சரின்னு சொல்லிட்டோம். அதுக்குள்ள உன் மேல நம்பிக்கை இல்லாம நாங்க அவசரப்பட்டு இதெல்லாம் பண்ணுது தப்பு தான்.

அதான் நம்ம குலசாமியே இந்த கல்யாணம் நடக்க கூடாதுன்னு ஏதேதோ பிரச்சனை பண்ணி நிறுத்திடுச்சு. அன்னைக்கு கோயில்ல தடங்கல் ஆகும்போதே நான் யோசிச்சிருக்கணும். நான் யோசிக்காம விட்டுட்டேன். அதான் அடுத்தடுத்து உனக்கு ஏதாவது தப்பா நடந்துக்கிட்டே இருக்கு. என்ன மன்னிச்சிடுத்தா.. இனிமே அண்ணே உன் விருப்பம் இல்லாம எதுவும் செய்ய மாட்டேன். எனக்கு நீ நல்லா இருந்தா போதும்த்தா.” என்றார்.

தன் அண்ணனுக்கு தன் மீது அதிக பாசம் இருக்கிறது என்று அமுதாவிற்கு ஏற்கனவே தெரியும் தான். ஆனால் தனக்கு இப்படி ஒரு அடிபட்டதற்காக எவ்வளவு பெரிய மனுஷன் இந்த அளவிற்கு கலங்கி போவார் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. அதனால் அதிர்ந்த அமுதா “ஐயோ அண்ணா நீங்க எதுக்கு என் கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க? உங்க பேச்சை மீறி விஜய் சார் கிட்ட எனக்கு கல்யாணம் ஆக போற விஷயத்தை சொல்லி நான் தான் அட்ரஸ் அனுப்பினேன். அதனால தான் அவர் அங்க வந்து பிரச்சனை பண்ணாரு. இது எல்லாமே என்னால தான் அண்ணா.” என்று சொல்லிவிட்டு குற்ற உணர்ச்சியில் தலை குனிந்தாள்.

“இல்ல அமுதா, அந்த கல்யாணம் நின்னுது நல்லதுக்கு தான். அதுக்காக எல்லாம் நீ ஃபீல் பண்ணாத.” என்ற வெற்றி அவள் அருகில் சென்று நடந்த அனைத்தையும் அவளிடம் சொன்னான். அதை கேட்ட பிறகு நிம்மதி பெருமூச்சு விட்ட அமுதா “அப்படி பார்த்தா இந்த விஷயத்துலயும் விஜய் சார் எனக்கு நல்லது தான் பண்ணி இருக்காரு. நான் அவர போய் வேணும்னே வந்து என் கல்யாணத்துல பிரச்சினை பண்ணி நிறுத்திட்டாருன்னு தப்பா நினைச்சுட்டேன். ச்சே.. என் புத்தி ஏன் தான் இப்படி போகுதோ தெரியல. முதல்ல அவர பார்த்து தான் நான் சாரி கேக்கணும்.” என்று நினைத்தாள்.

அப்போது அமுதாவை செக் செய்வதற்காக அங்கே வந்த டாக்டர் “என்ன நடக்குது இங்க? அந்த பொண்ணுக்கு இப்பதான் கான்ஷியஸ் வந்திருக்கு. சுத்தி இத்தனை பேர் நின்னு மாறி மாறி பேசிக்கிட்டு இருக்கீங்க! என்ன நர்ஸ் நீங்களும் நடக்கிறதை வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்களா? முதல்ல இவங்க எல்லாரையும் வெளிய அனுப்புங்க. பேஷன்ட் ரெஸ்ட் எடுக்கணும் உங்களைத் தவிர இந்த ரூம்ல வேற யாரும் இருக்கக் கூடாது.” என்று சொல்லி திட்டியதால், அங்கே இருந்த அனைவரும் வெளியில் சென்றார்கள்.

டாக்டர் கிளம்பிய பிறகு தன் அருகில் இருந்த நர்ஸிடம் “டாக்டர் இப்ப தான் உங்களை திட்டிட்டு போனாரு. அதுக்குள்ள நான் இப்படி கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க சிஸ்டர். வெளியே எங்க அத்த பையன் வெற்றி இருப்பான். அவன் கிட்ட என் ஃபோன் இருந்துச்சுன்னா அதை மட்டும் வாங்கிட்டு வந்து கொடுங்களேன் ப்ளீஸ்! இல்லைனா வெளிய என் ஃப்ரண்ட் கலை இருப்பா. அவ ஃபோனை கூட வாங்கிட்டு வந்து குடுங்க. நான் அதுல இருந்து கால் பண்ணிக்கிறேன்.” என்று கெஞ்சி கேட்டாள் அமுதா.

இதுவரை அவளுடைய குடும்பத்தினர்கள் அனைவரும் அவளிடம் பேசிக் கொண்டு இருந்ததை வைத்து நடிகர் விஜய் உடன் இவள் சேர்ந்து ஒரு புதிய படத்தில் நடிக்கப் போகிறாள். தன் முன்னே இருப்பது பிரபல திரைப்படத்தின் வருங்கால ஹீரோயின் என்பதால் அவளிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த அந்த நர்ஸ் பெண்மணி வெளியில் சென்று வெற்றியிடம் அமுதா கேட்டதைப் போல அவளது மொபைல் ஃபோனை வாங்கிக் கொண்டு சென்று அவளிடம் கொடுத்தாள்.

சிரமப்பட்டு எழுந்து அமர்ந்து அவசரமாக அதிலிருந்து விஜயின் நம்பருக்கு கால் செய்தாள் அமுதா. சூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக நடித்துக் கொண்டு இருந்த விஜய் அவளது அழைப்பை ஏற்கவில்லை. தொடர்ந்து இரண்டு மூன்று முறை அவனுக்கு கால் செய்து அவன் அதை எடுக்காததால், “என்ன ஆச்சு இவருக்கு? உண்மை தெரியாம நானும் இவரை தப்பா நினைச்சதுனால என் மேல கோவமா இருக்காரா?

அதனால தான் என் கிட்ட பேசக் கூடாதுன்னு என்னை அவாய்ட் பண்றாரு போல இருக்கு. ஐயோ ப்ளீஸ் விஜய் சார் என் கிட்ட பேசுங்க. உங்க வாய்ஸை கேட்கிற வரைக்கும் என்னால நிம்மதியாவே இருக்க முடியாது.” என்று நினைத்து வருத்தப்பட்டு மீண்டும் அவனுக்கு கால் செய்து பார்த்தாள்.

அப்போது சரியாக ஷூட்டிங்கில் பிரேக் டைம் கிடைத்ததால் தனது கேரவனுக்கு வந்த விஜய் அவனது மொபைல் ஃபோன் ரிங் ஆகி கொண்டு இருப்பதை கவனித்து விட்டு அதன் அருகில் சென்றான். ஸ்கிரீனில் தெரிந்த அமுதாவின் பெயரை பார்த்தவுடன் அதுவரை இறுக்கமாக இருந்த அவனுடைய முகம் சட்டு என்று மலர்ந்தது. அவளிடம் பேச வேண்டும். அவள் குரலை கேட்க வேண்டும் என்று அவன் இதயம் வேகமாக துடிக்க, அவசரமாக அவளது அழைப்பை ஏற்று “ஹலோ!” என்று தனது வெண்கல குரலில் சொன்னான்.

அவனது குரலைக் கேட்டவுடன் உணர்ச்சி வசப்பட்ட அமுதா எதுவும் பேசாமல் தொடர்ந்து அழ, வெறும் அழுகை என்றாலும் கூட அவளுடைய இனிமையான வசீகரிக்கும் குரலை அடையாளம் கண்டு கொண்ட விஜய், “ஏய் அமுதா!” என்று அவளை அழைத்தான். அவனிடம் பேசவே அவளுக்கு தைரியம் வரவில்லை. அதனால் அவள் அழுது கொண்டே ம்ம்... என்று மட்டும் சொல்ல, “இப்ப எதுக்கு டி அழுது ஒப்பாரி வச்சிட்டு இருக்க? உன்ன ஹாஸ்பிடல்ல மனசே இல்லாம தான் விட்டுட்டு வந்தேன். இந்த தினேஷ் பையன் தான் என்னென்னமோ சொல்லி என் மண்டையை கழுவி என்ன கூட்டிட்டு வந்துட்டான்.

உனக்கு கான்சியஸ்னஸ் எப்ப வந்துச்சு? டாக்டர் என்ன சொன்னாரு? எதுவும் பிராப்ளம் இல்லையே!” என்று அவன் பாட்டிற்கு அக்கறையுடன் தனது கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றான். ஆனால் அதற்கு எல்லாம் பதில் சொல்லாமல் மீண்டும் அழுத அமுதா “சாரி சார்! மத்தவங்கள மாதிரி நானும் உங்களை தப்பா நினைச்சுட்டேன். லிகள் டாக்குமெண்ட் எல்லாம் கம்பெனி சார்பாக போடுவது. அந்த கம்பெனிக்குன்னு தனியா இன்வெஸ்டர்ஸ் இருப்பாங்க.

அதனால ஓனரே நினைச்சாலும் லீகல் டாக்குமெண்டை எதுவும் பண்ண முடியாதுன்னு எல்லாம் எந்த அறிவும் இல்லாம எங்க வீட்ல இருக்குறவங்க சொல்றாங்கன்னு நானும் தெரியாம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். நீங்க மட்டும் தினேஷ் சார் கூட வந்து கல்யாணத்தை நிறுத்தாம இருந்திருந்தா, நானும் என் ஃபேமிலியும் பெரிய ப்ராப்ளம் மாட்டிருப்போம்.

எங்க குடும்ப சொத்து எல்லாத்தையும் மொத்தமா வித்தா கூட ரெண்டு கோடி வருமான்னு தெரியல. எங்களால அவ்வளவு பெரிய அமௌன்ட் எல்லாம் கனவுல கூட கொடுக்க முடியாது. இதோட மூணாவது தடவையா பெரிய பிரச்சனையில இருந்து நீங்க என்ன காப்பாத்திருக்கீங்க சார். இதுக்கு எல்லாம் நான் எத்தனை தடவை தேங்க்ஸ் சொன்னாலும் பத்தவை பத்தாது.

உங்களைப் பத்தி நல்லா தெரிந்திருந்தும், நீங்க வேணும்னே என் கல்யாணத்தை நிறுத்த பாக்குறீங்கன்னு நானும் மத்தவங்கள மாதிரி உங்களை தப்பா நினைச்சுட்டேன். அதைத் தான் சார் என்னால தாங்கவே முடியல. ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க சார். இனிமே லைஃப்ல நான் எப்பவுமே உங்கள தப்பா நினைக்கவே மாட்டேன்‌. எனக்கு இப்ப நீங்க கடவுள் மாதிரி தெரியுறீங்க சார்.” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டே போனாள்.

அவள் தன்னை தவறாக நினைத்ததை பற்றி எல்லாம் விஜய் துலியும் வருத்தப்படவில்லை. ஏனென்றால் அவள் சட்ட சிக்கலில் மாட்டிக் கொள்வாள் என்பதற்காக மட்டும் தான் அவன் அவளை அந்த திருமணத்தில் இருந்து காப்பாற்றினானா? என்று கேட்டால் சத்தியமாக இல்லை. அது அவனுக்கே நன்றாக தெரியும்.

அவனை பொறுத்தவரை வெற்றி அமுதாவை திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அவனைத் தவிர அவளுக்கு பொருத்தமான வேறு யாரேனும் அவளை திருமணம் செய்து கொள்ளலாமா? என்று அவன் யோசித்துப் பார்த்தால் அதற்கும் அவனிடம் பதில் இல்லை. மொத்தத்தில் அவனைப் பொறுத்தவரை அமுதாவிற்கு திருமணம் நடக்கக் கூடாது அவ்வளவு தான். அதற்காகத் தான் தன் இமேஜை பற்றி கூட கவலைப்படாமல் நேரடியாக அவன் திருமணம் நடக்கும் இடத்திற்கே சென்று பிரச்சனை செய்தான்.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் அவனால் எப்படி அமுதாவிடம் வெளிப்படையாக பேச முடியும்? “இங்க பாரு அமுதா.. லூசுத் தனமா எதையாவது உளறிட்டு இருக்காத சரியா? உனக்கு இப்ப உடம்பு சரியில்லை. கம்முனு ஹாஸ்பிடல்ல ரெஸ்ட் எடுத்து சீக்கிரம் கியூர் ஆகி டிஸ்டார்ஜ் ஆகிற வழியை பாரு. சும்மா கண்டதை யோசிச்சு நீயே பிரஷர் போட்டுக்காத. நீ என்னை பத்தி என்ன நினைச்சாலும் எனக்கு கவலை இல்லை. நான் உன்னை தப்பா நினைக்கல போதுமா?” என்று விஜய் சாந்தமான குரலில் அவளிடம் கேட்க,

“thank you so much sir. It means a lot. நீங்க எனக்கு பண்ண எந்த நல்லதையும் நான் மறக்கவே மாட்டேன். நான் உங்களுக்கு ரொம்ப கடன் பட்டு இருக்கேன். பதிலுக்கு உங்களுக்கு நான் என்ன செய்யப் போறேன்னு தெரியல சார்.” என்று எமோஷனல் ஆகி சொன்னாள் அமுதா.

“சரி பேசி முடிச்சுட்டு இல்ல! Sorry accepted. நீ ரெஸ்ட் எடு. நான் இப்ப சூட்டிங் ஸ்பாட்டுல இருக்கேன். அப்புறமா நைட்டு கால் பண்றேன். ஃப்ரீயா இருந்தா எடு.” என்று சொல்லிவிட்டு விஜய் தன் அழைப்பை துண்டித்து விட்டான். அவனிடம் பேசிய பிறகு ஏதோ மனதில் உள்ள பெரிய பாரம் இறங்கியதைப் போல நிம்மதியாக உணர்ந்த அமுதா “இப்ப நைட்டு எப்ப வரும்னு இருக்கு எனக்கு.” என்று நினைத்து அவள் ஹாஸ்பிடலில் இருப்பதை மறந்துவிட்டு சந்தோஷத்தில் சிரித்தாள்.

அவள் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த நர்ஸ் விஜயின் குரலும் லேசாக அவளுக்கு ஃபோன் வழியாக கேட்டதால் “நீங்க இப்ப விஜய் சார் கிட்டயா பேசிட்டு இருந்தீங்க மேடம்?” என்று தயங்கி தயங்கி கேட்க, அந்த அறையில் அவளைத் தவிர வேறு யாருமில்லை என்பதால் “ஆமா, அவர் கிட்ட தான் பேசிட்டு இருந்தேன்‌. பட் ப்ளீஸ் நீங்க இத பத்தி யார் கிட்டயும் சொல்லிடாதீங்க. அப்புறம் அவருக்கு தான் பெரிய இஷ்யூவாகும். நாங்க இங்க ஃபேமிலியா பேசுனத கூட நீங்க கவனிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

ப்ளீஸ் அதையெல்லாம் உங்களுக்குள்ளயே வச்சுக்கோங்க. ஃபிரண்டுன்னு கூட யார் கிட்டயும் எதையும் ஷேர் பண்ணிடாதீங்க இட்ஸ் மை ஹம்பிள் ரெக்குவஸ்ட்.” என்று அவளிடம் கெஞ்சி கேட்டாள் அமுதா.

- காதல் மலரும் 🌹

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: நாயகன்-86
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.