நாயகன்-85

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
ஒரு வழியாக பல போராட்டங்களுக்கு பிறகு எப்படியோ அமுதாவின் குடும்பத்தினர் அனைவரும் அவளை அட்மிட் செய்திருந்த ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தார்கள். வெற்றி அவர்களை உள்ளே அழைத்து செல்வதற்குள் அங்கே வந்த மீடியா ஆட்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு, “நீங்க விஜய் சாரை பாத்தீங்களா? இந்த ஊரை சேர்ந்த ஒரு பொண்ணை விஜய் சார் தூக்கிட்டு வந்து இந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணாருன்னு எங்களுக்கு ஒரு நியூஸ் வந்துச்சு. அது உண்மையா சார்?

அதைப்பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? அந்த பொண்ணு விஜய் சாரோட நியூ ஃபிலிம்ல நடிக்கப் போறாங்கன்னு நாங்க கேள்விப்பட்டோம். அந்த பொண்ணு உங்க குடும்பத்தை சேர்ந்த பொண்ணா?” என்று அவர்களிடம் மாறி மாறி ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கூடைந்தார்கள்.

அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மணிகண்டனும் மற்றவர்களும் திரு திருவென்று விழித்துக் கொண்டிருக்க, நல்லவேலையாக இடத்தை காலி செய்வதற்கு முன்பாக தினேஷ் மீடியா ஆட்க்கள் வந்தால் என்ன சொல்லி சமாளிக்க வேண்டும் என்று வெற்றியிடம் சொல்லிவிட்டு சென்றிருந்ததால் அதை அப்படியே மற்றவர்களிடம் சொல்லி சமாளித்த வெற்றி,

“கைல ஒரு மைக் கிடைச்சிட்டா போதும் இஷ்டத்துக்கு யாரை பார்த்தாலும் ஏதாவது ஒரு கொஸ்டின் கேட்கிறதே உங்களுக்கு வேலையா போச்சு. அதை கேமரால ரெகார்ட் பண்ணி உடனே ஒரு ட்ரெண்டிங் நியூஸ் கிரியேட் பண்ணனும் அதுக்காக என்ன வேணாலும் நீங்க பண்ணுவீங்க! எங்க வீட்டு பொண்ணை நாங்க இத்தனை பேர் இருக்கும் போது அவர் எதுக்கு சார் தூக்கிட்டு வந்து ஹாஸ்பிடல்ல சேர்க்கனும்?

நான் மறுபடியும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க. அமுதா நடிச்சிட்டு இருக்கிற படம் நல்லா ஓடணும்னு நாங்க எங்களோட குலதெய்வ கோயில பூஜை பண்ணிட்டு இருந்தோம்‌. அந்த பூஜைக்கு விஜய் சார் வந்தாரு அவ்வளவுதான். பூஜா நடக்குறப்ப அமுதாவுக்கு அடிபட்டுருச்சு. அதனால நான் தான் அவளை ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு வந்தேன். இங்க நடந்ததுக்கும் விஜய் சாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டான்.

அங்கே ஹாஸ்பிடலில் வேலை பார்ப்பவர்கள் மீடியா ஆட்களிடம் வேறு ஒரு கதையைச் சொல்லி அவர்களை இங்கே வரவழைத்து இருந்தாலும், இப்போது வெற்றி இத்தனை உறுதியாக கேமராவின் முன்னிலையில் பேசியதால் தங்களால் இதற்குள் விஜயை சம்பந்தப்படுத்த முடியாமல் அவர்கள் எதிர்பார்த்து வந்த நியூஸ் கிடைக்காததால் டிஸ்சப்பாயின்ட் ஆகி அங்கே இருந்து சென்று விட்டார்கள் மீடியா ஆட்கள்.

அந்த பிரச்சனையை ஒருவழியாக முடித்து சமாளித்துவிட்டு உள்ளே சென்று அனைவரும் அமுதா எப்படி இருக்கிறாள்? என்று டாக்டரிடம் விசாரிக்க, “அவங்க கீழ விழுகும் போது ஒரு கூர்மையான கல் அவங்க தலையில குத்திருக்கு. அதனால காயம் கொஞ்சம் ஆழமா தான் இருக்கு. நாங்க கொடுக்க வேண்டிய ட்ரீட்மென்ட் எல்லாத்தையும் கொடுத்தாச்சு. இருந்தாலும் அவங்களுக்கு இன்னும் கான்சியஸ் வரல. சோ அவங்க சுயநினைவுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் எதுவா இருந்தாலும் சொல்ல முடியும்.” என்று சொல்லிவிட்டு சென்றார் டாக்டர்.

“ஐயோ கடவுளே! ஒரு நல்ல காரியத்தை செய்யணும்னு நினைக்கிற நேரத்துல இப்படி போய் நடந்துருச்சே! எங்க ஆத்தா ஆத்தானு சொல்லி பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளைய நானே சரியா பாத்துக்காம விட்டுட்டேனே! எல்லாம் என் தப்பு தான்.

நான் தான் என் ஆத்தாவை ஒழுங்கா பாத்துக்கல. அன்னைக்கே கோயில்ல இரத்த காயம் படுறது, பத்திரிக்கை சாமிக்கு படைக்கும்போது கீழ விழுகிறது எல்லாம் அபசகுனமா இருக்கு. இப்போதைக்கு கல்யாணம் பண்ண வேண்டாம் தள்ளி போடுங்கன்னு பூசாரி அத்தனை தடவ சொன்னாரு. ஆனா நான் தான் என் வெட்டி பிடிவாதத்துக்காக கல்யாணம் நடந்தே ஆகணும்னு ஒத்த கால்ல நின்னேன்.

இப்ப நான் ஏற்பாடு பண்ண கல்யாணமும் நடக்காம போயிடுச்சு. என் பிள்ளைக்கும் இப்படி ஆயிடுச்சு! ஐயோ ஆத்தா! எங்களை மன்னிச்சிரு தாயி!” என்று கொஞ்சம் கூட கவுரவம் பார்க்காமல் தன் தலையில் அடித்துக் கொண்டு அந்த ஹாஸ்பிடலில் நின்று மணிகண்டன் சத்தமாக கதறி அழ தொடங்கி விட்டார்.

எதற்கும் கலங்காத அவ்வளவு பெரிய மனிதன் இன்று தன்னைப் பெற்ற தாய் போல நினைத்து தனது மகளாக சீராட்டி வளர்த்த பெண்ணுக்கு இப்படி தொடர்ந்து ஆபத்துகளாக வருவதை பொறுக்க முடியாமல் மணிகண்டன் குழந்தை போல உடைந்து அழுவதை அங்கிருந்த யாராலும் பார்க்க முடியவில்லை. ஹாஸ்பிடலுக்கு வரும் வரையிலும் விஜய் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்று நினைத்து அவனை வெட்டுவேன் குத்துவேன் என்று துள்ளிக் கொண்டிருந்த பாஸ்கரன் கூட இப்போது அமைதியாகி தன் அண்ணனை பிடித்துக் கொண்டு,

“அண்ணே நீங்க அழுகாதீங்க அண்ணே! நம்ம ஆத்தாவுக்கு ஒன்னும் ஆகாது. நான் தான் சரியான கூறு கெட்டவன். அந்த புள்ள என்னமோ பேச வந்துச்சு பாவம். நான் தான் கோவத்துல புடிச்சு அவளை தள்ளி விட்டுட்டேன். நான் மட்டும் அப்படி பண்ணாம இருந்திருந்தா அவளுக்கு இப்படி ஆயி இருக்காது.

நீங்க எனக்கு ஏதாவது தண்டனை கொடுங்கண்ணே. என்ன அடிங்க. அடிச்சே கொல்லுங்க! கோபம் வந்தா எனக்கு புத்தி கெட்டு போயிருது. நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரிய மாட்டேங்குது.” என்று சொல்லிவிட்டு கண் கலங்கினான்.

இப்படி பெரியவர்கள் இருவரும் மாறி மாறி அழுவதை பார்த்து இதுவரை தனக்குள் அடைத்து வைத்திருந்த சோகத்தை கண்ணீராக தானும் அவர்களுடன் சேர்ந்து கொட்டிய வெற்றி “அமுதாவுக்கு ஒன்னும் ஆகாது மாமா பயப்படாதீங்க. விஜய் சார் அவளை கரெக்டான நேரத்துல கொண்டு வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணது மட்டும் இல்லாம அவளுக்கு ப்ளட் கூட அரேஞ்ச் பண்ணி கொடுத்து போய் இருக்காரு. ஆனா நாம தேவை இல்லாம அவர புரிஞ்சுக்காம அவர் கூட சண்டை போட்டுட்டோம். நியாயமா இதுக்கு நம்ம அவருக்கு நன்றி தான் சொல்லணும். அவசரப்பட்டு நம்ம அவர் மேல கோவப்பட்டு பெரிய தப்பு பண்ணிட்டோம் மாமா. எனக்கு அதை நினைச்சாலும் ஒரு பக்கம் வருத்தமா இருக்கு.” என்றான்.

ஹாஸ்பிடலில் இருந்து தினேஷ் உடன் காரில் சென்று கொண்டிருந்த விஜயின் சிந்தனைகள் முழுவதும் அமுதா தான் நிறைந்து இருந்தாள். அவளை அப்படி அந்த நிலையில் விட்டு விட்டு வந்ததை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதற்கிடையில் அவனுக்கு அனாமிகாவிடம் இருந்து கால் வந்தது. தனது மொபைல் ஸ்க்ரீனில் தெரிந்த அவளது பெயரை பார்த்தவுடனேயே விஜய்க்கு கோபம் பற்றி கொண்டு வர, “இந்த பிசாசு இப்ப எதுக்கு எனக்கு கால் பண்ணுது? நான் எங்க போனாலும் மூக்கு வேர்த்த மாதிரி எப்படியாவது அதை கண்டுபிடித்து வந்து என்ன நோண்டலைனா இவளுக்கு நிம்மதியாக இருக்காது போல!” என்று நினைத்து அவள் அழைப்பை துண்டித்தான்.

“நீ என் காலை கட் பண்ணிட்டா நான் உன்னை அப்படியே விட்டுவிடுவனா? அவகிட்ட அப்படி என்ன இருக்குது மறுபடியும் மறுபடியும் நீ எதுக்காக அந்த அமுதா கிட்டயே போய் நிக்கிற விஜய்? உன்னை அவ கூட சேர்த்து வச்சு பார்த்தாலே எனக்கு அவ்ளோ கோவம் வருது. முதல்ல இந்த அமுதாவை ஏதாவது பண்ணி உன் லைஃப்ல இருந்து அவளை ஒழிக்கணும். அப்ப தான் என்னால நிம்மதியா இருக்க முடியும்.” என்று நினைத்த அனாமிகா மீண்டும் மீண்டும் விஜய்க்கு கால் செய்து கொண்டே இருந்தாள்.

“Oh God! Shit.. யாராவது நம்ம கூட பேச விரும்பலைனா மறுபடியும் மறுபடியும் அவுங்களுக்கு கால் பண்ணி அவங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்ற பேசிக் மேனர்ஸ் கூட இல்ல.. இவ எல்லாம் ஒரு ஆளு எங்கப்பன் எப்படித்தான் இவளை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாரோ தெரியல. வரட்டும் அந்த ஆளு அவருக்கு இருக்கு.

என்னை இந்த பிசாசு கூட கோத்துவிட்டு அவர் மட்டும் ஜாலியா பிசினஸ் மீட்டிங்கு போறேன்னு எல்லா கண்ட்ரிக்கும் போய் வேர்ல்ட் டூர் என்ஜாய் பண்ணிட்டு இருக்காரு.” என்று நினைத்த விஜய் கோவத்தில் சிவந்த முகத்துடன் தனது மொபைல் ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்து அதை கார் டாஷ் போர்டில் தூக்கி எறிந்தான்.

“அனாமிகா மேடம் உங்களுக்கு கால் பண்ண அதனால நீங்க இப்படி பிஹேவ் பண்றீங்களா? இல்ல அங்க அமுதாவை அப்படியே விட்டுட்டு வந்ததுனால அந்த கோவத்துல இப்படி பண்றீங்களே பாஸ்?” என்று தினேஷ் சந்தேகத்துடன் அவனைப் பார்த்து கேட்க, திரும்பி அவனை முறைத்து பார்த்த விஜய் “இந்த கொஸ்டினுக்கு இப்ப உனக்கு ஆன்சர் தெரிஞ்சே ஆகணும்ல!” என்று நக்கலாக கேட்டான்.

உடனே தன் தவறை உணர்ந்து “நோ நோ, சாரி பாஸ். வழக்கம்போல ஏதோ கேட்டுட்டே கோபப்படாதீங்க.” என்ற தினேஷ் இப்போது விஜய் தங்கி இருக்கும் கெஸ்ட் ஹவுஸை நோக்கி காரை செலுத்தினான். இப்போது அவர்கள் அங்கே போனால் அனாமிகா என்ற குள்ளிவாய்ப் பிசாசின் முகத்தில் முழிக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும் என்று நினைத்த விஜய் “அனாமிகாவை வீட்டை விட்டு துரத்துற வரைக்கும் நான் இனிமேல் கெஸ்ட் ஹவுஸ்க்கு போறதா இல்ல டா. பேசாம நீ நம்ம சூட்டிங் ஸ்பாட்டுக்கு போ. எனக்கு மைண்டே சரி இல்ல.

‌ நான் எவ்வளவு சோகமா இருந்தாலும் அது எல்லாத்தையும் மறந்துட்டு இருக்கிற ஒரே இடம் சூட்டிங் ஸ்பாட் மட்டும் தான். கேமராவை ஆன் பண்ணதுக்கு அப்புறமா என் மைண்ட்ல இருக்கிற எல்லாமே மறந்து போயிடும். அங்க நான் வெறும் ஆக்டர் விஜயின் மட்டும் தான் இருப்பேன். டைரக்டருக்கு கால் பண்ணி இன்னைக்கு ஷூட்டிங்கை சீக்கிரமா ஸ்டார்ட் பண்ண சொல்லு.

அமுதாவுக்கு சரியாகி அவ வரும்போது வரட்டும். அதுக்குள்ள எனக்கு மோனிஷாவுக்கும் இருக்கிற சீன்ஸ் எல்லாம் எடுத்துடலாம். எனக்கு கொஞ்ச நாள் இது எல்லாத்துலயும் இருந்து பிரேக் எடுத்துட்டு என் வேலைய மட்டும் பார்த்தா நல்லா இருக்கும்னு தோணுது.” என்றான்.

இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு சுயநினைவிற்கு வந்த அமுதா நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்து விஜயை தான் திருமணத்திற்கு வர சொல்லி அழைத்திருக்கக் கூடாது அதனால்தான் இத்தனை பிரச்சனையும் நடந்தது ‌ என்று எண்ணி குற்ற உணர்ச்சியில் கண் கலங்க அவளுக்கு அருகில் இருந்த நர்சை பார்த்து “சிஸ்டர் வெளியில என் ஃபேமிலி மெம்பர்ஸ் இருந்தாங்கன்னா அவங்கள வர சொல்லுங்க. நான் எங்க அண்ணன் கிட்ட பேசணும்.” என்றாள் உடைந்த குரலில்.

“உங்களுக்கு தலையில ஸ்டிச்சஸ் போட்டிருக்காங்க மேடம். இந்த டைம்ல நீங்க ரொம்ப எமோஷனல் ஆக கூடாது. உங்க மொத்த குடும்பமும் டாக்டர் வெயிட்டிங் ஏரியால இருக்க சொன்னா கூட கேட்காம இந்த ரூமுக்கு வெளியில தான் நின்னுட்டு இருக்காங்க. நான் போய் அவங்கள கூட்டிட்டு வரேன் இருங்க!” என்று சொல்லிவிட்டு வெளியில் சென்ற நர்ஸ் “பேஷன்டோட அண்ணா யாரு? அவங்க அவங்களோட அண்ணன பாக்கணும்னு சொல்றாங்க.” என்றாள்.

ஓரமாகக் கிடந்த சேரில் அமர்ந்திருந்த மணிகண்டன் தனது துண்டை தூக்கி தோளில் போட்டு கொண்டு “நான் தான்.. நான் தான் மா அவ அண்ணன்.” என்று சொல்லிவிட்டு கலங்கிய கண்களுடன் எழுந்து சென்றார்.

- நேசம் தொடரும் ❤️

(என்னை மற
க்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: நாயகன்-85
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.