தனது அத்தை வெற்றிக்கும் தனக்கும் திருமணம் செய்து வைப்பது பற்றி மணிகண்டனிடம் பேச சென்றிருப்பதால் என்ன நடக்குமோ என்று நினைத்து பயத்துடன் குட்டி போட்ட பூனை போல தன் வீட்டிற்குள் நடந்து கொண்டு இருந்த அமுதா, “எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோ தெரியல! நானா ஹீரோயின் ஆகணும்னு ஆசைப்பட்டேன்! இந்த கடவுள் தானா எல்லாத்தையும் அமைச்சு கொடுத்துட்டு அப்புறம் அவரே எல்லாத்தையும் என் கிட்ட இருந்து பிடுங்கிக்க பார்க்கிறாரு.. இது எல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்ல.” என்று தனக்குள் தனியாக புலம்பி கொண்டு இருந்தாள்.
அப்போது அவள் கால் செய்து வரச் சொல்லி இருந்ததால் பதட்டமான முகத்துடன் அந்த வீட்டிற்குள் நுழைந்த கலைச்செல்வி “ஏய் அமுதா.. அமுதா எங்கடி இருக்க!” என்றபடி உள்ளே செல்ல, தனது அறையில் இருந்து வேகமாக வெளியில் வந்த அமுதா “ஏய் நான் இங்க தாண்டி இருக்கேன். எதுக்கு கத்துற?” என்று கேட்டுவிட்டு கலைச் செல்வியை அழைத்துக் கொண்டு வேகமாக வாசலை நோக்கி நடந்தாள்.
“என்ன டி ஃபோன்ல பதட்டமா பேசி வீட்டுக்கு வர சொல்லிட்ட நானும் உன்க்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பதட்டமா பார்க்க வந்தா இப்ப வலுக்கட்டாயமா என்ன வெளிய கூட்டிட்டு போற?” என்று கலை புரியாமல் அவளிடம் கேட்க, “ஐயோ அது பெரிய கதை. அதைப் பத்தி சொல்றதுக்கு தான் உன்னை வெளியே கூட்டிட்டு போறேன் வா.. அப்படியே நடந்துக்கிட்டே பேசுவோம். இந்த வீட்ல இருந்து எதையும் பேசுறதுக்கு கூட எனக்கு பயமா இருக்கு.” என்ற அமுதா அவளுடன் சாலையில் நடக்க தொடங்கினாள்.
“இப்ப என்ன தான் பிரச்சினை உனக்கு? அதான் உன் மாமக்காரன் உங்க அண்ணனுங்க கிட்ட எல்லாம் பேசி எல்லாரையும் சம்மதிக்க வைத்து உன்ன படத்துல நடிக்க வைக்க போறேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரிகிறானே! அவன் இருக்கும் போது உனக்கு என்ன பிரச்சனை வந்துட போகுது!” என்று கலை தன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு அமுதாவிடம் கேட்க,
“அட ஏண்டி நீ வேற.. இப்ப எனக்கு அவன் தான் பிரச்சனையாகவே வந்து நிக்கிறான்.” என்று சலிப்புடன் சொன்ன அமுதா வடிவு வந்து இறங்கியவுடன் நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லிவிட்டு, “எனக்கு அத்தை அப்படி பேசினது கூட ஆச்சரியமா இல்ல. இவங்க எல்லாருமே முன்னாடில இருந்து எனக்கும் வெற்றிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு தான் நினைச்சுட்டு இருந்தாங்க.
ஆனா இந்த வெற்றி பையன் மனசுக்குள்ளேயும் அந்த எண்ணம் இருந்திருக்கும் போல. எப்பயுமே அவன் எனக்காக என்ன வேணாலும் பண்ணுவேன் அப்படின்னு சொல்லிக்கிட்டே இருப்பான். அவன் என்னை லவ் பண்றதுனால தான் அப்படி சொல்றான் போல இருக்கு. ஆனா என் கிட்ட அவன் எப்பவுமே என்ன புடிச்சிருக்குன்னு சொன்னதே இல்ல. உனக்கே நல்லா தெரியும் இல்ல.. நான் அவன ஒரு நல்ல ஃபிரண்டா நினைச்சு தானே பழகிட்டு இருக்கேன்! திடீர்னு அவன போய் என்ன கல்யாணம் பண்ணிக்க சொன்னா நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்? அவனும் யாரையும் எதிர்த்து எதுவும் பேசுற மாதிரி தெரியல. நான் போய் எங்க அம்மா என்ன பண்றாங்கன்னு பாக்குறேன்னு அத்தை பின்னாடியே போயிருக்கான். என்ன நடக்குமோ..!!” என்று கலையிடும் புலம்பி கொண்டு இருந்தாள்.
“உனக்கு தான் அவன பிடிக்காதுன்னு எனக்கு முன்னாடியில இருந்தே தெரியுமே! ஆனா அந்த மரமண்ட பையனும் அதை புரிஞ்சுக்காம நீ பெரிய உலக அழகினு உன் பின்னாடியே சுத்திட்டு இருக்கான்.. நீ நல்லா அழகா தாண்டி இருக்க.
அதனால அவன் உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறதுலையும் தப்பு இல்ல. அவன் உனக்கு முறை பையன். உங்க வீட்ல உன்னை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறதுலையும் தப்பு இல்லை. ஏதாவது ஒரு மேஜிக் நடந்து உனக்கு வேற யார் கூடயாவது கல்யாணம் ஆகிட்டா, வெற்றி எனக்கு கிடைக்க வாய்ப்பு இருக்குனு நம்பிட்டு இருந்த நான் தான் முட்டாள்.” என்று நினைத்து பெருமூச்சு விட்ட கலைச்செல்வி,
“இதுல நீ பொலம்புற அளவுக்கு எல்லாம் எதுவும் இல்ல அமுதா. வெற்றி ரொம்ப நல்லவன். அவன மாதிரி ஒருத்தன நீ எங்கேயும் பார்க்க முடியாது. அவனுக்கு தான் உன் மேல பாசம் இருக்குன்னு நீயே சொல்றியே.. அப்புறம் அவனை கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு என்ன பிரச்சனை? உங்க வீட்ல உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டா உன்னை படத்துல நடிக்கறதுக்கும் அனுப்புறேன்னு சொல்றாங்க..
அப்புறம் என்ன? சந்தோசமா உன் மாமன கல்யாணம் பண்ணிக்கிட்டு சென்னைக்கு போய் பெரிய ஹீரோயின் ஆகி அங்கயே செட்டில் ஆகிடு. இன்னும் எத்தனை வருஷம் தான் இந்த கிராமத்துக்குள்ளையே கிடக்கிறது! உனக்கு ஒரு விடிவு காலம் பொறந்திருக்கு. நீ உன் வாழ்க்கையை நல்ல அமைச்சுக்கறது இனிமே உன் கைல தான் இருக்கு.” என்று அவளுக்கு ஒரு நல்ல தோழியாக அட்வைஸ் செய்தாள்.
உடனே அவளை முறைத்து பார்த்த அமுதா “ஏய் அடிச்சுப்புடுவேன் டி உன்ன.. நீ என்ன எங்க வீட்ல இருக்கிற பெருசுங்க மாதிரியே பேசிட்டு இருக்க! இதுக்கு தான் நான் கஷ்டப்பட்டு படிச்சேனா? இல்ல சினிமாவுல நடிக்கிறதுக்கு பர்மிஷன் வாங்கினேனா? நான் நடிக்கப் போகும்போது கல்யாணம் பண்ணிக்கிட்டு நடிக்கப் போனா எவன்டி என் படத்தை பார்ப்பான்?
அது எல்லாத்தையும் தாண்டி, இந்த சின்ன வயசுலயே கல்யாணம் எல்லாம் பண்ணிக்கிட்டு குடும்ப இஸ்திரி ஆகறதுல எனக்கு விருப்பமில்லை. இன்னும் என் வாழ்க்கையில நான் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு. நான் என்ன எல்லாம் பண்ணனும்னு ஆசைப்படுறனோ அது எல்லாமே பண்ணி முடிச்சதுக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணிக்கிறதை பற்றியே யோசிப்பேன்.
அப்பயும் என்னால வெற்றியை எல்லாம் கட்டிக்க முடியாது. நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ஒரே வீட்டில வளர்ந்திருக்கும். எனக்கு அவன் மேல அந்த மாதிரி ஃபீலிங்ஸ் எல்லாம் எப்பவும் வந்ததே இல்ல. இனியும் வராது. வெற்றி கேரக்டருக்கு உன்னை மாதிரி வீட்டை பார்த்துகிட்டு இந்த ஊருக்குள்ளயை குப்பை கொட்ட நினைக்கிற சாதாரண பொண்ணுங்க தான் அவனுக்கு செட் ஆகும்.” என்று உறுதியாக சொன்னாள் அமுதா.
“நீ அவனுக்கு செட் ஆக மாட்டேனு உனக்கு தெரியுது. அது அந்த எருமை மாட்டு பயலுக்கு தெரிய மாட்டேங்குதே.. என்ன பண்ணித் தொலையுறது? நான் கொஞ்சம் கருப்பா பொறந்துட்டேன். இந்த மதுரையில அடிக்கிற வெயிலுக்கு இன்னும் கருத்துப் போயிட்டேன்.. அதனால அவன் என்னை எல்லாம் ஒரு ஆளாவே மதிக்க மாட்டேங்குறான்.” என்று நினைத்து அழுத்துக்கொண்ட கலைச்செல்வி அமுதாவுடன் பேசியபடி சாலையோரமாக நடந்து சென்று கொண்டு இருந்தாள்.
அமுதா எப்போது வெளியில் வருவாள் என்று அவர்களது வீட்டு வாசலையை நோட்டமிட்டு கொண்டு இருந்த சிலர் யாருக்கோ கால் செய்து ” மேடம் நீங்க சொன்ன மாதிரி அந்த பொண்ணு வீட்டை விட்டு வெளியே வந்துருச்சு. ஆனா அவ பக்கத்துல இன்னொரு பொண்ணு இருக்கா. இப்ப என்ன பண்றது?” என்று கேட்க, “அவ கூட இன்னொரு பொண்ணா? எப்படியும் அவ சொந்தக்காரியாவோ இல்ல ஃபிரெண்டாவோ தான் இருப்பா.. அவ எவள இருந்தா எனக்கு என்ன? இன்னைக்கு அப்புறம் அமுதா எப்பயும் அவ மூஞ்சிய வெளியே யாருக்கும் காட்டவே கூடாது. நீ நான் சொன்ன வேலைய முடிச்சுட்டு யாருக்கும் தெரியாம தப்பிச்சு வந்துரு. ஒருவேளை யார் கிட்டயாவது மாட்டிக்கிட்டா கூட, நான் உன் கிட்ட ஏற்கனவே சொல்லிக் கொடுத்ததை சொல்லி தப்பிச்சிடு. போலீஸ் கேஸ் ஆனா கூட எப்படியாவது நான் உன்னை காப்பாத்திடுவேன். ஆனா என்ன ஆனாலும் இதுக்கு பின்னாடி நான் இருக்கேன்னு யாருக்கும் தெரியக் கூடாது.” என்று மறுமுனையில் லைனில் இருந்த அந்த இளம் பெண் அவனுக்கு கட்டளை இட்டுவிட்டு அந்த அழைப்பை துண்டித்து விட்டாள்.
உடனே அந்த இளைஞன் நம்பர் பிளேட் இல்லாத தனது பைக்கை ஹெல்மெட் அணிந்து ஸ்டார்ட் செய்தவாறு அமுதாவையும் கலைச்செல்வியையும் ஃபாலோ செய்து செல்ல தொடங்கினான். அவர்கள் இன்னும் அந்த தெருவை தாண்டி இருக்காதால் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அவர்கள் செல்லும்வரை காத்திருக்க முடிவு செய்து அவன் தன் பைக்கில் மெதுவாக சென்று கொண்டு இருந்தான்.
சில நிமிடங்களுக்கு பிறகு கலைச்செல்வி “ஏய் இப்படியே எவ்வளவு தூரம் டி நடந்து போய்க்கிட்டே இருக்கிறது? இப்ப நீ எங்க போலாங்குற?” என்று அவளிடம் சலிப்புடன் கேட்க, “விஜய் சார் வீட்டுக்கு வந்து பேசிட்டு போனதுக்கு அப்புறம் எந்த பிரச்சனையும் இல்லாம பெரிய அண்ணன் நான் படத்துல நடிக்கிறதுக்கு ஓகே சொல்லணும்னு நான் நம்ம ஊரு மாரியம்மன் கிட்ட தான் வேண்டிகிட்டேன். உடனே அது நடந்துச்சு.
இப்ப மறுபடியும் இன்னொரு பிரச்சனை வந்திருக்கு. அதான் இப்பயும் போய் அந்த அம்மன் கிட்டயே எனக்கு ஹெல்ப் பண்ண சொல்லி கேட்கலாம்னு நம்ம மாரியம்மன் கோவிலுக்கு தான் போயிட்டு இருக்கேன். எத்தனை தடவை இந்த ரூட்ல போயிருப்போம்.. அதக் கூட கெஸ் பண்ண முடியலையா உன்னால?” என்று அவளிடம் கிண்டலாக கேட்டாள் அமுதா.
“உனக்கு என்ன டி? எது நடந்தாலும் கடைசில உன் வாழ்க்கை நல்லா தான் இருக்கும். சின்ன வயசுல இருந்தே வெற்றியை நான் மனசுல வச்சு வாழ்ந்துட்டு இருக்கேன். இப்ப உனக்கும் அவனுக்கும் கல்யாணம் ஆகப்போகுதுன்னு சொல்லி நீ என் வயித்துல புளியைக் கரைகிற. அந்த விஷயம் தெரிஞ்சும் என்னால எப்படி நார்மலா இருக்க முடியும்? அப்படி ஆகிட்டா என்ன பண்றதுன்னு நினைச்சாலே எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு.” என்று நினைத்து பெருமூச்சு விட்ட கலைச்செல்வி பதிலுக்கு அமுதாவிடம் எதுவும் சொல்லவில்லை.
இப்போது வாய்க்கால் வரப்புகளில் அவர்கள் இருவரும் சென்று கொண்டு இருந்தார்கள். அந்த அமைதியான இடத்தில் அவர்கள் இருவரையும் தவிர வேறு யாரும் இல்லை. அவர்களை ஃபாலோ செய்தபடி பைக்கில் வந்த இளைஞன் இது தான் சரியான தருணம் என்று நினைத்து அவன் ஒழித்து வைத்திருந்த ஆசிப் பாட்டிலை சுற்றி முற்றி பார்த்தபடி வெளியில் எடுத்தான்.
ஒரு கையால் பைக்கின் ஹேண்டிலை பிடித்து அதை மெதுவாக ஓட்டியபடி மற்றொரு கையால் அந்த ஆசிட் பாட்டிலை அமுதாவின் முகத்திற்கு குறி வைத்தான் அவன்.
இது தெரியாமல் பேசி சிரித்தபடி அங்கே நடந்து சென்று கொண்டிருந்த அமுதாவிற்கும், கலைச்செல்வி க்கும் என்ன ஆகும்?
- காதல் மலரும்

Author: thenaruvitamilnovels
Article Title: நாயகன்-33
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.