அத்தியாயம் 98: மிஸ்ஸஸ் வருண் நாராயணன் வாழ்க (பார்ட் 2)
காபி டேபிளில் கிடந்த பைலை எடுத்துப் பார்த்த ரேவதி, அதில் இருந்தவற்றை படித்து பார்த்து குழம்பினாள். 🙄 இதை ஏன் விஷ்ணுவின் அம்மா ரித்திகாவிடம் கொடுக்க வேண்டும் என்று நினைத்த ரேவதிக்கு, ரித்திகாவின் முகத்தை வைத்தே ஏதோ சரி இல்லை என்று தோன்ற, தங்களுடைய அறையில் இருந்த சுதாகரை அழைத்தாள். அங்கே வந்த சுதாகரிடம் அந்த பைல் ஐ பற்றி ரேவதி சொல்ல, அந்த பைல் ஐ வாங்கி சுதாகரும் படித்துப் பார்த்தார்.
சுதாகர் குழப்பமாக தன்னுடைய மகளைப் பார்த்தவர், “இத ஏன் மா அவங்க உன் கிட்ட குடுத்தாங்க? இந்த போட்டோல இருக்கிறவர் தானே சித்தார்த்தோட அப்பா...??? அப்ப அவர் தான் நாராயணன் குரூப்ஸ் ஓட சேர்மேனா..??? இதுல போட்டு இருக்கிறது எல்லாமே உண்மையா..???" என்று ஆச்சரியமான குரலில் கேட்டார்.
ரித்திகா: “அதுல இருக்கிறது எல்லாமே உண்மை தான் அப்பா. சித்தார்த்தோட அப்பா தான் விஷ்வா நாராயணன். சித்தார்த்துக்காக தான் அந்த ஸ்கூலையே கட்டியிருக்காரு. விஷ்ணு தான் அந்த ஸ்கூல் ஓட சேர்மன். விஷ்ணுவை பத்தி எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனா அவனோட அண்ணாவ பத்தியும், சித்தார்த்த பத்தியும், எனக்கு இன்னைக்கு தான் தெரியும்." என்றவள், முதன் முதலில் அவள் செண்பகத்தை தீ விபத்தில் இருந்து காப்பாற்றியது முதல், விஷ்ஷாலினியை காதலிப்பது, ஷாலினிக்காக அவன் போட்ட டிராமா, விஷ்ணு ஷாலினியை காப்பாற்றியது, அவளைக் காப்பாற்றியது, விஷ்ணுவை பற்றிய உண்மை அவளுக்கு தெரிந்தது, இன்று அவள் செண்பகத்தை சந்திக்க சென்றது, அவள் தன்னிடம் சொன்னது, பின்பு அவள் ஷாலினியுடன் பேசிவிட்டு விஷ்ணுவிடம் பேசியது வரை, அனைத்தையும் மறைக்காமல் ஒன்று விடாமல் அப்படியே தன்னுடைய பெற்றோர்களிடம் சொல்லி விட்டாள்.
ரித்திகா முழுதாக பேசி முடிக்கும் வரை ரேவதியும், சுதாகரும், பொறுமையாக அவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தனர். இறுதியில் அவள் செண்பகத்தை பற்றி பேச தொடங்கிய உடனேயே அவர்களுடைய முகம் சட்டு என்று மாறிவிட்டது. 😳 😒 கடைசியாக ராகவி தான் திருமணத்திற்கு சமத்திற்கு விட்டதாக சொன்னதை கேட்டவர்களுக்கு பேர் அதர்சியாக இருந்தது. ரித்திகாவின் இந்த முடிவை அவர்கள் இருவராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லைை.
இந்த நொடி ஒரு பெற்றோர்களாக தாங்கள் தங்களுடைய பெற்றோர்களிடம் தங்களுடைய காதலை பற்றி சொல்லும்போது, அவர்கள் எப்படி உணர்ந்து இருப்பார்கள் என்று இப்போது அவர்களால் உணர முடிந்தது. முதலில் கோபத்தில் பேசத் தொடங்கிய ரேவதி, “யாரை கேட்டு நீ அவங்க கிட்ட கல்யாணத்துக்கு ஓகேன்னு சொல்லிட்டுு வந்த..???" என்று காட்டமாக கேட்டாள்.
ரித்திகா: “அதான் சொன்னேன்ல மா.... அவங்க அப்படி கேட்கும்போது என்னால அவங்கள மறுத்து பேச முடியல. அது மட்டும் இல்லாம, நான் சித்தரத்துக்காக தான் ஒத்துக்கிட்டேன். அவன் என் மேல எவ்ளோ பாசமா இருக்கான்னு உங்களுக்கே தெரியும் இல்ல மா...!!! அந்த நிமிஷம் அவனுக்காக என்ன வேணா செய்யலாம்ன்னு எனக்கு தோணுச்சு. எது எப்படியோ நான் அவங்களுக்கு ப்ராமிஸ் பண்ணி குடுத்துட்டேன். என்னால இப்போ அத மீறி எதுவும் செய்ய முடியாது." என்று உறுதியாகச் சொன்னாள்.
ரேவதி: “ஏன் டி இப்டி லூசு மாதிரி பேசுற..??? மத்த எல்லார பத்தியும் யோசிக்கிறியே நீ உன்ன பத்தி யோசிக்க மாட்டியா..??? அவங்க உன்ன நல்லா எமோஷனல் பிளாக் மெயில் பண்ணி இருக்காங்க. அந்த விஷ்வா தம்பி நல்லவர் தான். ஒரு வேளை விஷ்வா தம்பிக்கு கல்யாணம் ஆகலைன்னா கூட அவங்க அம்மா இப்படி உன்ன பொண்ணு கேட்டா, நான் உன்ன சந்தோஷமா கல்யாணம் பண்ணி குடுத்திருப்பேன்.
ஷாலினி உன் கிட்ட கேட்டது சரி தான். அவங்க பணக்காரங்கன்னா நாங்க உடனே உன்னை அவருக்கு கல்யாணம் பண்ணி குடுத்தரனுமா...??? அவங்க எவ்ளோ பெரிய மனுஷி... அவங்களுக்கு முறை என்னான்னு தெரியாதா..??? சின்ன பொண்ணு கிட்ட பேசி மனச கலைச்சிருக்காங்க...!!! நான் ஏன் என்னோட ஒரே பொண்ணை இப்படி கல்யாணமாகி குழந்தை இருக்கிற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி குடுக்கணும்..?? நீ இப்ப அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ சித்தார்த்துக்காக தான் அவரை கல்யாணம் பண்ணி இருக்கேன்னு உன்ன பெரிய தியாகின்னு நினைப்பாங்கன்னு நினைக்கிறியா..?? நீ அவர் கிட்ட இருக்கிற காசு பணத்துக்கு ஆசைப்பட்டு தான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிறேன்னு எல்லாரும் பேசுவாங்க. ஊர் வாய எத வச்சு அடைக்க முடியும் சொல்லு..???" என்று கோபத்தில் மூச்சு வாங்க கேட்டாள். 😡 😤
சுதாகருக்கு இப்போதும் தன்னுடைய மகளின் மீது அதீத நம்பிக்கை இருந்தது. அவள் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு செண்பகத்திடம் திருமணத்திற்கு சம்மதிப்பதாக சொல்லி இருந்தாலும், எப்படியும் தங்களுடைய பேச்சைை மீறி ராகவி எதுவும் செய்யப் போவதில்லை. அதனால் இந்த திருமணம் நடக்காது என்று நம்பிக்கையாக இருந்தவர், அமைதியாக ரேவதி பேசியதற்கு ராகவி என்ன பதில் சொல்கிறாள் என்று, தெரிந்து கொள்வதற்காக அவளையே கூர்மையான கண்களோடு பார்த்துக் கொண்டு இருந்தார்.
ரித்திகா: “சொசைட்டிய பத்தி கவலைப்படாம நமக்கு புடிச்ச மாதிரி தான் நம்ம இருக்கனும்ன்னு நீங்க தானே எனக்கு சொல்லிக் குடுத்து வளர்த்தீங்க..!!! இப்ப என்ன புதுசா சொசைட்டிய பத்தி எல்லாம் பேசுறீங்க மா...???? செண்பகம் அம்மா என்ன எமோஷனல் பிளாக்மெயில் பண்ணதாகவே இருக்கட்டும். ஆனா அவங்க சொன்னது எதுவுமே பொய்யில்லையே..??? சித்தார்த்துக்கு என் மேல இருக்கிற பாசம் உண்மை தானே..???
எனக்கு எப்பவுமே கல்யாணம் பண்ணிக்கணும்ன்ற எண்ணம் இருந்ததே இல்ல. நீங்க தான் என்ன எப்ப கல்யாணம் பண்ணிக்க போற....!!! எப்ப கல்யாணம் பண்ணிக்க போறன்னு... என் கிட்ட கேட்டுக்கிட்டே இருந்தீங்க. ஏன் நான் யாரையாவது லவ் பண்ணா கூட பரவால்லைன்னு அவன கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னீங்க. இப்ப நானே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா அத ஏன் நீங்க வேணான்னு சொல்றீங்க..???? நான் அவங்களுக்கு ப்ராமிஸ் பண்ணிட்டேன். என்னால அவங்களுக்கு பண்ண பிராமிசையும், சித்தார்த்தோட மனசையும், உடைக்க முடியாது. ஹி நீட்ஸ் மீ மா. புரிஞ்சுக்கோங்க." என்றாள் உறுதியாக.
ரித்திகா தன்னுடைய பெற்றோர்களின் பேச்சை எதிர்த்து பேசுவது இதுவே முதல் முறை. அதனால் தங்கள் முன் நடப்பவற்றை நம்ப முடியாமல் ரேவதியும், சுதாகரும், ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தனர்.
ரித்திகா: “செண்பகம் அம்மா உங்க கிட்ட வந்து முறைபடி பேசுறேன்னு சொன்னாங்க. ப்ளீஸ் அவங்க இங்க வரும்போது அவங்கள ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் பேசிடாதீங்க." என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
சுதாகர்: “அதுவரை அமைதியாக இருந்தவர் இப்போது ராகவி பேசியவற்றை பொறுத்துக் கொள்ள முடியாமல், “என்ன அவங்க உன்ன மருமகன்னு சொன்ன உடனே உனக்கு கல்யாணமே நடந்து முடிஞ்சிடுச்சின்னு நினைப்பா..??? நீ இன்னும் இந்த வீட்டு பொண்ணு தான் அத ஞாபகம் வச்சுக்கோ. நான் அந்த குடும்பத்துக்கு உன்ன தாரைவார்த்து குடுக்க மாட்டேன். இனிமே சும்மா அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற வேலை எல்லாம் வச்சுக்காத. அவங்க எவ்ளோ பெரிய பணக்காரங்களா இருந்தாலும் சரி, என்ன மீறி இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நான் பாக்கிறேன்." என்று கோபமாக சொன்னவர் தன்னுடைய அறைக்கு சென்று அதன் கதவை அடித்து சாற்றி விட்டார்.
ரித்திகா இப்போது தான் முதன் முதலில் தன்னுடைய அப்பா தன்னிடம் இவ்வளவு கோபமாக பேசிதால், அதைக் கேட்டவள் மனம் உடைந்துது அழுதாள். 😭 😭 பின் தன்னிலையை தன்னுடைய பெற்றோர்களுக்கு உணர்த்த நினைத்தவள், “நீங்க யாருமே ஏன் என்ன புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க...??? என்னால அந்த குழந்தைக்கு நல்ல அம்மாவா இருந்து அவனை பார்த்துக்க முடியும்னா, அதை செஞ்சா என்னான்னு நினைச்சு சரின்னு சொன்னேன். அது அவ்ளோ பெரிய தப்பா...??? சொசைட்டிய பத்தி எல்லாம் யோசிக்கிறீங்க. ஆனா நீங்களே இப்படி என்ன புரிஞ்சுக்காம பேசினா... மத்தவங்க எப்படி என்ன புரிஞ்சுக்குவாங்கன்னு நான் எதிர்பார்க்க முடியும்...???" என்று அழுது கொண்டே மூச்சு வாங்க தன்னுடைய அறைக்குள் இருக்கும் அவளுடைய அப்பாவிற்கு கேட்கும் அளவிற்கு சத்தமாக கேட்டாள். 😭 😭 😭
ரேவதி: “தன்னுடைய மகள் அழுவதை பொறுக்க முடியாமல் அவளின் அருகே சென்று அமர்ந்தவள், “எதுக்காக டி இப்படி நீயும் கஷ்டப்பட்டு எங்களையும் கஷ்டப்படுத்துற..??? எங்களால உன்ன புரிஞ்சுக்க முடியாம இல்ல. உன்னோட பேரன்ட்ஸா நாங்க என்ன யோசிக்கிறோம்ன்னு தான் உன்னால புரிஞ்சுக்க முடியல. நீ இவர கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு பதிலா, உனக்கு செட் ஆகிற மாதிரி கல்யாணம் ஆகாத பையன் யாரையாவது கூட்டிட்டு வந்திருந்தா சந்தோஷமா நாங்களே முன்னாடி இருந்து உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்போம்.
இந்த கல்யாணத்தால நீ கண்டிப்பா சந்தோஷமா இருக்கமாட்ட ராகவி. நீ சின்ன பொண்ணு உனக்கு சில விஷயங்கள் எல்லாம் சொன்னா புரியாது. இப்ப உனக்கு கல்யாண வாழ்க்கைன்னா என்னன்னு புரியாம இருக்கலாம். அதனால, நீ சித்தார்த்துக்கு அம்மாவா இருந்தா மட்டும் போதும்ன்னு நினைக்கிற. ஆனா அப்படி எல்லாம் இருக்க முடியாது.
நீ எல்லார் கூடயும் சீக்கிரமா அட்டாச்ட் ஆகுற டைப். அவரு உன்னோட ஹஸ்பண்டுனு வரும்போது, ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் உனக்கு அவர் மேல லவ் வரும். அவர் கூட சேந்து வாழணும்னுு தோணும். ஆனா அவரு உன்ன ஏத்துக்கலைனா என்ன பண்ணுவ...??? அதான் அவரோட அம்மாவே உன் கிட்ட தெளிவா சொல்லி இருக்காங்களே... அந்தப் பையன் இன்னும் அவரோட இறந்து போன வைஃப் ஐ நினைச்சுட்டு தான் வந்துட்டு இருக்காருன்னு. இப்ப நீ சித்தரத்துக்காக அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டினா இந்த மேரேஜ் லைப்ல உனக்குன்னு எந்த சந்தோஷமும் உனக்கு கிடைக்காது. நீ லைஃப் லாங் சித்தார்த்துக்கு மேய்டா மட்டும் தான் இருப்பியே தவிர விஷ்வாவோட வைஃப்பா இருக்க மாட்ட." என்று தன் மனதில் இருந்தவற்றை தெளிவாக தன்னுடைய மகளுக்கு ஆணி அடித்ததைப் போல் சொல்லி, அவளுடைய மனதை மாற்ற நினைத்தாள்.
ரித்திகா: “எனக்கு விஷ்வாவோட வைஃப்பா இருக்கணும்னு எந்த ஆசையும் கிடையாது. இன்பாக்ட் நான் யாரோட வைஃப்பாகவும் இருக்க விரும்பல. எனக்கு இதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லன்னு உங்களுக்கே நல்லா தெரியும்ல... அப்புறம் ஏன் திரும்பத் திரும்ப அதை பத்தியே பேசுறீங்க? நான் சித்தார்த் பத்திரமா பாத்துக்கிறேன்னு அவங்களுக்கு சத்தியம் பண்ணி கொடுத்துட்டேன் இனி மேல் சித்தார்த் என்னோட பொறுப்பு. அவன் என்னோட பையன். அவன் என்ன தவிர வேற யாரையும் அவனோட அம்மாவா ஏத்துக்க மாட்டான். எனக்கு அவன் மட்டும் தான் முக்கியம். எனக்கு நீங்க சொல்ற லவ்னா என்னான்னும் தெரியாது. அந்த மாதிரி ஒரு லவ் எனக்கு யார் மேலயும் வராது. எனக்கு சித்தார்த்தும், அவன் என் மேல வச்சிருக்கற பாசமும் மட்டும் போதும். மத்த படி அவனுடைய அப்பா கிட்ட இருந்து நான் வேற எதையும் எதிர்பார்க்கல." என்று உறுதியாக சொன்னாள்.
ரேவதி ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டவள், “சில விஷயங்கள் சொன்னா புரியாது. நீயா அத அனுபவிச்சு பாத்து தான் தெரிஞ்சுகுவேன்னு அடம் பிடிக்கிற. இதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும்..??? உனக்கு இண்டிபெண்டன்டா யோசிக்கறதுக்கு நாங்க தான் குடுத்தோம். அந்தப் பையனையும் அவனுடைய குடும்பத்தையும் பார்த்தா நல்லவங்க மாதிரி தான் தெரியுது. அவங்க சொன்ன மாதிரி அவங்க கிட்ட இருக்குற காசு, பணத்துக்கு, அவங்க எந்த குடும்பத்துல வேணாலும் பொண்ணு எடுக்கலாம்.
செண்பகம் சித்தார்த்திற்காக தான் ஒன்னு விஷ்வாக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறாங்க. சித்தார்த்துக்காகவாவது விஷ்வாவும், அவருடைய குடும்பமும், உன்ன சந்தோஷமா வச்சுக்குவாங்கன்னு நம்புறேன். இப்பயும் அவங்க அவங்களோட பண திமிரை காமிச்சி நம்ம கிட்ட வயலெண்டா பிஹேவ் பண்ணி இருந்தா, என்ன ஆனாலும் சரின்னு நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்.
ஆனா அவங்களோட இந்த பிஹேவியரும், ஆட்டிட்யூடும், எனக்கு பிடிச்சிருக்கு. கொஞ்சம் கூட அவங்க கிட்ட பணக்காரங்கன்ற திமிரும், அகம்பாவமும், இல்ல. அவங்களுக்கு பணத்திலேயும் சரி, குணத்திலேயும் சரி எந்த குறைவும் இல்லை. எப்பயுமே நீ எடுக்கிற முடிவு சரியா இருக்கும்ன்னு நாங்க நம்பி இருக்கோம். அதே மாதிரி இப்பவும் நான் உன்ன நம்புறேன். எந்த சிச்சுவேஷன்லயும் நாங்க உன் கூட இருப்போம். நானும் உன்னோட அப்பாவும் கல்யாணம் பண்ணும் போது, எங்களோட பேரண்ட்ஸ் கிட்ட இருந்து இந்த மாதிரி ஒரு சப்போர்ட் எங்களுக்கு கிடைக்கல.
அந்த மாதிரி நம்ம மேரேஜ் நடக்கிறப்ப நம்ப பேரன்ட்ஸ் நம்ம கூட இல்லனா, அது எப்படி இருக்கும்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். நாங்க பட்ட கஷ்டம் உனக்கு வேண்டாம். என்ன நாங்க லவ் மேரேஜ் பண்ண மாதிரி, நீயும் லவ் மேரேஜ் பண்ணி இருந்தா நல்லா இருக்கும். ஆனா இப்ப இதை என்ன மேரேஜ்ன்னு சொல்றதுன்னே எனக்கு குெரியல. எதுவா இருந்தாலும், எங்களுக்கு உன்னோட சந்தோசம் மட்டும் தான் முக்கியம். உனக்கு எது சரின்னு படுதோ அத செய். எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம். நான் உங்க அப்பா கிட்ட பேசுறேன்." என்று கலங்கிய கண்களுடன் ரித்திகாவின் கையை பிடித்துக் கொண்டு அவளுக்கு ஆறுதலாக பேசினாள்.
தன்னுடைய அம்மா பேசியதை கேட்டு நெகிழ்ந்து போன ராகவி, “தேங்க்ஸ் மா." என்று உணர்ச்சி வசப்பட்டு சொன்னவள், கண்ணீரோடு தன்னுடைய அம்மாவை கட்டி அணைத்
துக் கொண்டாள். 🤗 😭 😭 😭
- நேசம் தொடரும் ❤️

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 98
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.