அத்தியாயம் 94: ப்ளீஸ் ரித்திகா என் பையன கல்யாணம் பண்ணிக்கோ (பார்ட் 2)
செண்பகம்: “நீ சொல்றது எனக்கு புரியுது. நீ சொல்ற மாதிரி அதுல இருந்து காலப்போக்கில நான் வெளியில வந்தரலாம். ஆனா அந்த மாதிரி சித்தார்த்தலையும், விஷ்வாவாலையும், இருக்க முடியாது. ஒருத்தர் நம்மள விட்டுப்போன வலிய நம்ப மறக்கணும்னா அந்த இடத்துக்கு வேற ஒருத்தர் வந்து அந்த இடத்தை நிரப்புனா மட்டும் தான் மா அது முடியும்." என்று அர்த்தத்துடன் ராகவியை பார்த்து சொன்னாள்.
ரித்திகா: செண்பகம் எந்த அர்த்தத்தில் தன்னிடம் இதை சொல்லிக் கொண்டு இருக்கிறாள் என்று புரிந்து கொள்ளாதவள், “உண்மை தான் மா. பெரியவங்க கூட நம்ம ரியாலிட்டி இது தான்னு நினைச்சு, மனச தேத்திகிட்டு மூவ் ஆன் ஆகிடலாம். ஆனா சித்தார்த் சின்ன பையன். அவனுக்கும் அம்மா பாசம் வேணும்னு ஏக்கம் இருக்கும் இல்ல..." என்றாள்.
செண்பகம்: “கரெக்ட், என் மனசுல இருந்தத நீ அப்படியே சொல்லிட்ட ரித்திகா. விஷ்வாவுக்கு ஜான்வி தான் எல்லாமாவும் இருந்தா. அவ இப்ப உயிரோட இல்லன்றத இன்னமும் அவனால ஏத்துக்க முடியல. எங்க குடும்பத்துக்காகவும், அவனோட பையனுக்காகவும் தான் அவன் நிக்காம ஓடிக்கிட்டு இருக்கான். இல்லைனா எப்பயோ ஒரே இடத்துல முடங்கி போய் இருப்பான்.
சித்தார்த் பாக்க இப்ப சாதாரணமா தெரிஞ்சாலும், அவன் எல்லா குழந்தைய மாதிரியும் சாதாரணமான குழந்தை இல்ல மா. அந்த ஆக்சிடென்ட் நடக்குறதுக்கு முன்னாடி இருந்த சித்தார்த்துக்கும், இப்ப இருக்குற சித்தார்த்துக்கும், நிறைய வித்தியாசம் இருக்கு. முன்னாடி எல்லாம் அவனுக்கு ஜான்விய விட விஷ்வாவ தான் ரொம்ப பிடிக்கும். எப்ப பாத்தாலும் அப்பா அப்பான்னு அவன் பின்னாடியே சுத்திட்டு இருப்பான். இப்பலாம் விஷ்வாவ அவன் அப்பான்னு கூட கூப்பிடுறது இல்ல. நீ கவனிச்சு இருக்கியானு தெரியல. அவன் ஈஸியா யார் கூடயும் பேசி பழக மாட்டான். விஷ்வாவை பாத்தா கூட பயந்து அவன் கிட்ட போகாமாட்டான்.
இத விட கொடுமை என்னான்னா அவன் வயசு குழந்தைங்க கிட்டயே அவன் பேசி பழக மாட்டேங்குறான். அந்த ஆக்சிடென்ட்ல அவனோட அம்மா சாகிறத பக்கத்துல இருந்து அவன் பாத்திருக்கான். அது அவனோட ஆள் மனசு ரொம்ப பாதிச்சிருச்சு. அப்பல்லாம் அம்மா அம்மான்னு கேட்டு ஜான்விய நினைச்சு அழுதுகிட்டே இருந்தான். ரொம்ப நாள் நிறைய டாக்டர்ஸ்ச வச்சு ட்ரீட்மென்ட் குடுத்ததுக்கு அப்புறம் தான் அவன் கொஞ்சம் நார்மலாவே ஆனான். ஆனாலும் அவனால முன்ன மாதிரி இருக்க முடியல.
அவனுக்கு நெப்டோபோபியா இருக்கு. இருட்ட பாத்து பயப்படுறது. அது மட்டும் இல்ல அவன் எல்லாத்துக்குமே பயப்படுவான். எல்லார பாத்தும் பயப்படுவான். இப்போ உனக்கு புரியும்னு நினைக்கிறேன்... என் பையன் எதுக்கு அவனுக்காக கேர் பண்ணி தனியா ஒரு ஸ்கூலையே கட்டினான்னு...!!!" என்றாள்.
செண்பகம் பேசியதை கேட்டு ரித்திகா வாயடைத்து போய்விட்டாள். அவள் சொன்னதை போல், ரித்திகாவும் சித்தார்த்தின் சிறு சிறு மாற்றங்களை கவனித்திருக்கிறாள். ஆனால் அவனனோ சிறு வயதிலேயே தன், தாயே இழந்து டிப்ரஷனில் பாதிக்கப்பட்டு இருப்பான் என்று அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இதைப் பற்றி யோசித்தவளுக்கு, சித்தார்த்தின் சிறிய அழகிய அப்பாவியான சிரித்த முகம் ஞாபகம் வந்தது. அப்போது தன்னை அறியாமல் ராகவி கண்கலங்கி விட்டாள். 🥺 😥
ரித்திகா கண்ணீர் நிறைந்த கண்களோடு செண்பகத்தை பார்த்தவள், “அந்தச் சின்னப் பையனுக்குள்ள இவ்ளோ சோகம் இருக்கும்னு எனக்கு தெரியாது மா." என்று தழுதழுத்த குறலில் சொன்னாள். 😢
செண்பகம்: “நீ இத தெரிஞ்சுக்கணும்னு தான்மா நான் உன் கிட்ட சொன்னேன். அவனுக்கு உன்னோட தேவை எவ்வளவு இருக்குன்னு உனக்குு புரியணும்." என்று ஒரு உள் அர்த்தத்துடன் சொன்னாள்.
ரித்திகா: “நான் என்ன பண்ணனும்ன்னு நீங்க சொல்லுங்க மா. சித்தார்த்துக்காக எதுவா இருந்தாலும் நான் பண்ணுவேன்." என்று உறுதியாக சொன்னாள்.
செண்பகம்: ராகவியின் வாயில் இருந்து இந்த வார்த்தைகள் எப்போது வரும் என்று அதற்காகவே காத்திருந்தவள், “நீ என் பையன் விஷ்வாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு, என் பேரன் சித்தாரத்துக்கு அம்மாவா எங்களோட வீட்டுக்குு வருவியா...???" என்று சட்டென்று கேட்டு விட்டாள்.
அதிர்ச்சியின் உச்சகட்டத்தில் இருந்தாள் ராகவி. அவளுடைய காதுகளில் விழுந்ததை அவளாலேயே நம்ப முடியவில்லை. அதனால், அதிர்ச்சியில் சட்டென்று எழுந்து நின்று விட்டாள். “என்ன மா சொல்றீங்க.???? நான் எப்டி உங்க பையன...!!!" என்று திக்கி திக்கி செண்பகத்திடம் கேட்டவள், “என்னால அப்படி சும்மா யோசிச்சு கூட பாக்க்க முடியல மா." என்றாள் அதிர்ச்சி விலகாமல். 😳
செண்பகம்: ராகவியின் கையை பிடித்து இழுத்து மீண்டும் தன் பக்கம் அமர்த்தியவள், “நான் இப்படி திடீர்னு கேட்டது, உனக்கு அதிர்ச்சியா தான் இருக்கும்னு எனக்கு புரியுது ராகவி. ஆனா எனக்கு வேற வழி இல்ல மா. விஷ்வாவுக்கு கல்யாணம் பண்ணிக்கிறதுலையே விருப்பம் இல்ல தான், ஆனா அவன் சித்தார்த்துக்காக கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பான். அவன் என்ன தான் இப்ப ஜான்வியோட நினைப்புல சுத்திட்டு இருந்தாலும், ஒரு நாள் உன்னை புரிஞ்சுகிட்டு உன் கூட சேர்ந்து சந்தோஷமா வாழ்வான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு மா." என்று உத்தரவாதம் கொடுத்தாள்.
ரித்திகா: “ஐயோ..!!!! அம்மா நான் அந்த அளவுக்கு எல்லாம் யோசிக்கவே இல்ல. உண்மையை சொல்ல போனா, எனக்கு கல்யாணம் பண்ணிக்கிறதிலயே இன்ட்ரஸ்ட் இல்ல. நான் டீச்சரா இருந்து நிறைய பிள்ளைகளுக்கு எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். அது தாண்டி என் மனசுல எனக்கு வேற எந்த ஆசையும் கனவும் இல்லை.
அதே மாதிரி என்னால சித்தார்த்துக்கும் ஒரு நல்ல டீச்சரா இருக்க முடியும். இனிமே நான் எக்ஸ்ட்ரா கேர் போட்டு நல்லா பாத்துக்கிறேன். அதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லாதீங்க மா ப்ளீஸ்....!!! எனக்கு அந்த எண்ணமே இல்லை." என்று உறுதியாக மறுப்பு சொல்லி விட்டாள்.
செண்பகம்: “சித்தார்த்துக்கு டீச்சர் தேவை இல்ல ராகவி, ஒரு அம்மா தான் தேவை. அத புரிஞ்சுக்கோ ப்ளீஸ்...!!! நீயே சொல்லு அவன் உன்ன அவனோட டீச்சராவா பாக்கிறான்.???? அவன் வயசுல இருக்கிற பிள்ளைங்க கிட்டயே அவன் பிரண்டா பழக மாட்டான். அவன் ஏன் உன் கிட்ட பிரண்டியா பேசறான்...???? உன்ன அவன் ஏன் பிரண்டு நினைக்கிறான்னு தெரியுமா..???? ஏன்னா அவன் உன்ன ஜான்வியோட இடத்துல வச்சு பாக்கிறான். ஜான்விகிட்ட இருந்து அவனுக்கு கிடைக்காத தாய் பாசத்த உன் கிட்ட தேடிட்டு இருக்கான்.
நானும் விஷ்வாவுக்கு வேற பொண்ணு எல்லாம் பாத்தேன் மா. ஆனா அந்த பொண்ண சித்தார்த்துக்கு புடிக்கல. நான் என் பையனுக்கு ஒரு வைஃப் வேணும்ன்னு மட்டும் நெனச்சு தேடுனா... எல்லா பணக்கார குடும்பத்தில இருந்தும் என் பையனுக்கு பொண்ணு தரத்துக்கு நான், நீன்னு போட்டி போட்டுட்டு வருவாங்க. ஆனா வரப்போறவ விஷ்வாவுக்கு பொண்டாட்டியா இருக்கிறதை விட, சித்தாரத்துக்கு ஒரு நல்ல அம்மாவா இருக்கணும்னு தான் நாங்க எதிர்பாக்கிறோம்.
உன்னால அவனுக்கு ஒரு நல்ல அம்மாவா இருந்து நல்லது கெட்டது சொல்லிக் குடுத்து, அவன நல்ல படியா வளர்க்க முடியும்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. சோ ப்ளீஸ் மா ரித்திகா...!!! உன்ன தவிர என் பேரன் வேற யாரையும் அவனோட அம்மாவா ஏத்துக்க மாட்டான். அவனுக்காகவாவது வேணான்னு சொல்லாம என் பையனை கல்யாணம்பண்ணிக்கோ." என்றவள், ரித்திகாவின் முன் கண்ணீர் நிறைந்த கண்களோடு கைகூப்பி வேண்டி கேட்டுக்கொண்டாள். 😥 🙏
செண்பகத்தின் செயலை கண்ட ரித்திகாவின் மனம் கலங்கியது. 🥺 வயதிலும், பணத்திலும், குணத்திலும், தன்னை விட எவ்வளவு பெரிய மனுஷி; தன்னிடம் கை கூப்பி வேண்டுவதை அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அதனால் செண்பகத்தின் கூப்பிய கைகளை தன்னுடைய இரு கைகளால் பற்றி கொண்டு கண்ணீர் நிறைந்த கண்களோடு அவளை பார்த்தவள், “அம்மா நீங்க எவ்வளவு பெரியவங்க என் கிட்ட போய் நீங்க இப்படி கேட்கலாமா...???? நீங்க இப்படி பண்றது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ப்ளீஸ்...!!! இப்படி எல்லாம் பண்ணி என்ன தர்ம சங்கடமான நிலைக்குு ஆளாகாதிங்க. சத்தியமா நீங்க கேட்டதுக்கு உங்களுக்கு என்ன பதில் சொல்லணும்னு எனக்கு தெரியல மா." 😥 என்றாள்.
செண்பகம்: “இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சித்தார்த்துக்காக என்ன வேணாலும் செய்வேன்னு நீயே சொன்னியே மா... அப்போ அவன் என் பேரன். என்னோட பேரனுக்காக நான் இதை கூட செய்ய மாட்டேன்னா என்ன...??? ப்ளீஸ் மா...!!! கொஞ்சம் யோசிச்சு பாரு. நீ தான் உனக்கு கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பமே இல்லைன்னு சொல்லிட்டியே.... அப்புறம் நீ யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன..???
என் பையனுக்கும் கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்ல. உனக்கும் இந்த கல்யாணத்துல்துல விருப்பம் இல்லை. சோ நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒருத்தர இன்னொருத்தர் டிஸ்டர்ப் பண்ணாம நீங்க பாட்டுக்கு பிரண்ட்ஸ் மாதிரி கூட இருக்கலாம் இல்ல....!!! நீ எங்க சித்தார்த்துக்கு அம்மாவா மட்டும் இருந்தா போதும் மா. மத்தபடி உன் கிட்ட இருந்து நாங்க வேற எதையும் எதிர்பார்க்கல." என்று தன் மனதில் இருந்ததை அப்படியே உடைத்து பேசி விட்டாள்.
செண்பகத்தின் இந்த உறுதியான வார்த்தைகள் ரித்திகாவை மிகவும் யோசிக்க வைத்தது. ஒரு பக்கம் அவளுக்கும் செண்பகம் சொல்வது போல் செய்தால் தான் என்ன..?? அதுவும் சரியாக தானே இருக்கிறது என்று கூட தோன்றியது. இன்னொரு பக்கம் தன்னுடைய அம்மாவும், அப்பாவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்திக் கொண்டிருப்பதால், யாரோ ஒருவரை நாம் திருமணம் செய்து கொள்வதற்கு அந்த யாரோ ஏன் சித்தார்த்தின் அப்பாவாக இருக்கக் கூடாது என்று யோசித்துப் பார்த்தாள் ரித்திகா.
அமைதியாகவே இருந்தாள் ரித்திகா. அனைத்தையும் பற்றி யோசித்துப் பார்த்தவளுக்கு, “சித்தார்த்தின் அம்மா" என்று செண்பகம் சொன்னது மீண்டும் மீண்டும் அவளுடைய காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது. அப்போது அவளுக்கு சித்தார்த் தன் மீது வைத்திருக்கும் கள்ளம் கபடம் அற்ற உண்மையான பாசம் நினைவிற்கு வந்தது. சித்தார்த்தின் தூய்மையான அன்பை அவளால் நிராகரிக்க முடியவில்லை. இருந்தாலும் அவளுக்கு முடிவு எடுப்பதற்கு ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. தானே இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டு விட்டாலும், தன்னுடைய பெற்றோர்கள் இதற்கு சம்மதிப்பார்களா...??? என்ற கேள்வி அவள் எழுந்தது. அதனால் அதை நேரடியாக செண்பகத்திடமே கேட்டும் விட்டாள்.
செண்பகம்: “ஏற்கனவே ரித்திகாவிடம் இருந்து இந்த கேள்வி வரும் என்று எதிர்பார்த்து இருந்தவள், இறுதியாக தன்னுடைய பிரம்மாஸ்திரத்தை அவளிடம் பிரயோகிக்க முடிவெடுத்தாள். “உங்க அப்பா, அம்மாவ, பத்தி நீ கவலைப்படாத. அவங்க கிட்ட நான் பேசிக்கிறேன். அவங்க எங்க காலத்துல இருக்கிற மாதிரி ஆட்கள் இல்ல. ரெண்டு பேருமே நல்லா படிச்சவங்க. சோ நீ ஒரு முடிவு எடுத்தினா... அது சரியா இருக்கும்ன்னு அவங்க கண்டிப்பா நம்புவாங்க.
இந்த மாதிரி பொண்ணு கேட்கிறது எல்லாம் நேரடியா உன் பெத்தவங்க கிட்ட கேட்கிறது தான் முறைன்னு எனக்கு தெரியும். ஆனா நானோ, உங்க அப்பா, அம்மாவோ, வாழ்ந்து முடிச்சவங்க மா. வாழ போற உங்களோட சம்மதம் தான் முக்கியம். அதனால் தான் அவங்க கிட்ட பேசுறதுக்கு முன்னாடி, நான் உன் கிட்ட நேரடியா இத பத்தி பேசுறேன். எனக்கு ஏற்கனவே ஹார்ட்ல ஹோல் இருக்கு ராகவி. இன்னும் எத்தன நாள் நான் உயிரோட இருப்பேன்னு தெரியல.
நானும் சித்தார்த்தும் அந்த வீட்ல இருக்கறதுனால மட்டும் தான் என் பையன் ஒரு வேலையாச்சு வீட்ல வந்து உட்கார்ந்து எல்லார் கூடயும் சேர்ந்து சாப்பிடுறான். நான் மட்டும் இல்லேன்னா அந்த வீடு, வீடாவே இருக்காது. ஜான்வி போனதில இருந்து சித்தார்த்த நான் தான் பாத்துக்கிறேன். அவன் என் மேல பாசமா தான் இருப்பான். ஆனா என் கிட்ட இருக்கிறத விட, அவன் உன் கிட்ட தான் ரொம்ப அட்டாச்டா இருக்கான்.
என் வீட்டோட மூத்த மருமகளா வர்றது ஒரு பெரிய பொறுப்பு. அந்த பொறுப்ப உன்னால தான் சரியா செய்ய முடியும்ன்னு நான் நம்புறேன். ப்ளீஸ் இந்த கல்யாணம் வேணாம்ன்னு மட்டும் சொல்லிராத..!!!!" என்றவள் சட்டென்று ராகவியின் கையை எடுத்து தன்னுடைய தலைக்கு மேல் வைத்துக் கொண்டவள், “இங்க இருக்கிற துர்கா அம்மா சாட்சியா கேட்கிறேன் என் மேல சத்தியம் பண்ணி சொல்லு...!!! நீ என்னோட பையன கல்யாணம் பண்ணிக்கிறியா..????" என்று அழுத்தமான குரலில் கேட்டாள். செண்பகம் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ராகவியின் இதயத்தை நேரடியாக சென்று தாக்கியது.
அதனால் ஏதோ மந்திரச் சொல்லுக்கு கட்டுப்பட்டவள் போல், செண்பகத்திற்கு கட்டுப்பட்ட ராகவி; “நான் உங்க பையன கல்யாணம் பண்ணிக்கிறேன் மா. இது உங்க மேல சத்தியம்." என்று உறுதியாக சொன்னாள்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 94
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.