தாபம் 93

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 93: ப்ளீஸ் ரித்திகா என் பையன கல்யாணம் பண்ணிக்கோ (பார்ட் 1)

செண்பகம்: “ஆமா..!! ஆனா விஷயம் சித்தாரத்தை பத்தி மட்டும் இல்ல மா." என்று சொல்லி புதிர் போட்டாள்.

ரித்திகா: நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியல. எதுவா இருந்தாலும் டைரக்டாவே சொல்லுங்க அம்மா.

செண்பகம்: “சொல்றேன் மா. அதுக்கு தானே இங்க வந்து இருக்கேன்... முதல்ல நீ உன்ன பத்தி சொல்லு. உங்க அம்மா, அப்பா, என்ன பண்றாங்க...???" என்று கேட்டாள். ராகவியின் முழு ஜாதகமே அவளுக்கு தெரியும் என்றாலும், எடுத்த எடுப்பில் திருமணத்தைப் பற்றி இப்படி பேசுவது என்று நினைத்தவள், இவ்வாறு பேச்சை ஃபார்மலாக தொடங்கினாள்.

ரித்திகா: முதலில் இதை எல்லாம் தான் செண்பகத்திடம் எதற்கு சொல்ல வேண்டும்...?? என்று தான் அவளுக்கு தோன்றியது. இருந்தாலும், செண்பகம் கேட்கும் போது அதை அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. “என்னோட அப்பா, அம்மா, இரண்டு பேருமே ரிட்டயர்ட் கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர்ஸ்." என்றாள்.

செண்பகம்: சரி மா. உனக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்லையா..???

ரித்திகா: “செண்பகம் தன்னுடைய குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருக்கிறாள் என்று புரிந்து கொண்டவள், அவளே தானாக தன்னுடைய குடும்பத்தை பற்றி சொல்லி தொடங்கினாள். “என்னோட குடும்பம் ரொம்ப சின்னது மா. அதுல நானும், என்னோட அப்பாவும், அம்மாவும், மட்டும் தான். என்னோட அப்பாவும், அம்மாவும், ஒரே ஸ்கூல்ல தான் வேலை பார்த்தாங்க. அப்போ அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.

அவங்க லவ்வ ரெண்டு பேரோட ஃபேமிலிலையுமே ஏத்துக்கல. அதனால ரெண்டு பேருமே வீட்டை விட்டு வெளியில ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இத்தன வருஷம் ஆகியும் என்னோட தாத்தா, பாட்டி, யாருன்னு எனக்கு தெரியாது. அவங்க இப்ப இருக்காங்களா இல்லையான்னு கூட தெரியாது. அவங்களுக்கு கல்யாணம் ஆகியும், ரொம்ப வருஷமா குழந்தையே இல்லை. ஒரு வேளை நம்ப நம்மளோட அப்பா அம்மாவ கஷ்டப்படுத்தி தனியா பிரிஞ்சு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டதுனால தான் நமக்கு இப்படி ஆயிடுச்சோன்னு அவங்களுக்கு எப்பயுமே கில்ட்டி ஃபீலிங் இருக்கும்.

அதனால நிறைய கோயிலுக்கு போய் வேண்டிக்கிட்டாங்க. கடைசியா அவங்க எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு துர்கா அம்மா கோயிலுக்கு போய் யாரோ சொன்னதுனால டெய்லி விளக்கு போட்டு இருக்காங்கங்க. அதுக்கப்புறம் தான் நான் பொறந்தேன். அதனால எனக்கும் என் ஃபேமிலிக்கும் துர்கா அம்மா ரொம்ப ஸ்பெஷல்." அவ்ளோ தான் அம்மா. இதுக்கு மேல என்ன பத்தி சொல்ற அளவுக்கு வேற ஒன்னும் இல்ல." என்றாள்.

செண்பகம்: அவளைப் பார்த்து பெரிதாக புன்னகைத்தவள், “நான் ஒன்னு கேட்டதுக்கு... மூச்சு விடாம எல்லாத்தையும் சொல்லிட்ட" என்றாள். 😁 😁 😁

ரித்திகாவும் பதிலுக்கு செண்பகத்தை பார்த்து புன்னகைத்தாள். 😁 😁 😁

செண்பகம்: “உங்களோட சொந்த ஊர் எது மா...???" என்று ஆர்வமாக கேட்டாள்.

ரித்திகா: “எங்களுக்கு கரூர் தாமா சொந்த ஊர். என் அம்மாவோட அம்மாவும், அப்பாவும், அதே ஊர்ல தான் ஏதோ ஒரு கிராமத்துல இருக்காங்கன்னு அம்மா சொல்லி இருக்காங்க. ஆனா எங்கன்னு தெரியல. எங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும், அவங்களை எல்லாம் போய் பாக்க தைரியம் இல்ல. அதனால கடைசி வரைக்கும் இத்தனை வருஷமா ஒரே ஊர்ல இருந்துட்டு அங்க போய் அவங்க தாத்தா, பாட்டிய, பாக்கவே இல்லை." என்று சொன்னவளின் குரலில் சிறிதளவு சோகம் எட்டிப் பார்த்தது. 😞 அவளுக்கும் தன்னுடைய தாத்தா, பாட்டியை, பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இருந்தாலும், அவர்களைப் பற்றி பேசி தன்னுடைய பெற்றவர்களை காயப்படுத்த வேண்டாம் என்று நினைத்தவள், எப்போதும் அதை பற்றி அவர்களிடம் கேட்கவே மாட்டாள்.

செண்பகம்: ராகவியின் குரலை வைத்து அவளால் ரித்திகாவின் மனதில் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. “உனக்கு சொந்தம்ன்னு சொல்லிக்கிறதுக்கு அவங்க எல்லாம் இருந்தும், அவங்க கூட பேச முடியலன்னு நினைச்சு வருத்தப்படாத மா. நீ அவங்கள போய் பாத்து பேசு. அவங்க அவங்களோட பிள்ளைங்க மேல வேணா கோவமா இருப்பாங்க. ஆனா யாராலயும் அவங்களோட பேரப் பிள்ளைங்க மேல கோவமா இருக்க முடியாது." என்று ஆறுதலாக பேசினாள்.

ரித்திகா: “இல்ல மா. நான் அவங்கள போய் பாக்கணும்னாலும் எனக்கு முதல்ல அவங்களை பத்தி தெரியணும் இல்ல... அங்க எப்படி இருப்பாங்கன்னு கூட எனக்கு தெரியாது. அப்புறம் எப்படி என்னால அவங்களை கண்டுபிடிக்க முடியும்...??" என்று ஆற்றாமையில் சோகமாக கேட்டாள். 😣

செண்பகம்: “விடு மா. அவங்கள கண்டுபிடிக்கிறது எல்லாம் ஒரு பெரிய விஷயமா..??? அதுலாம் ஈஸியா கண்டுபிடிச்சிடலாம். எங்களுக்கும் பூர்வீகம் கரூர் தான். என் வீட்டுக்காரரோட அம்மா, அப்பா, எல்லாருமே அந்த ஊர்ல வாழ்ந்தவங்க தான், பெரிய ஜமீன் குடும்பம். என்னோட குடும்பமும் ஜமீன் குடும்பம் தான். சுதந்திரத்துக்கு அப்புறம் ஜமீனா இருந்தவங்க எல்லாம் அப்படியே பண்ணையார்ரா ஆயிட்டாங்க.

எனக்கு ஈரோடு தான் சொந்த ஊரு. என் வீட்டுக்காரை அவங்க அப்பா அந்த காலத்திலேயே வெளி நாட்டுக்கு எல்லாம் அனுப்பிச்சு படிக்க வச்சாரு. அவரு படிச்சு முடிச்சுட்டு இந்தியாவுக்கு வந்ததுக்கு அப்புறமா, சென்னைக்கு போய் பிசினஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. அவர் தான் லட்சக்கணக்கில இருந்த எங்க குடும்ப சொத்த கோடிக்கணக்கில மாற்றினாரு. அப்ப ஒரு நாள் அவர் பிசினஸ் விஷயமா இங்க ஈரோட்டுக்கு வந்தாரு. அப்ப என்ன பாத்து விரும்பி எங்க அப்பா கிட்ட பொண்ணு கேட்டாரு. எங்க ரெண்டு பேரோட குடும்பமும் அந்தஸ்த்துல சரிசமமா இருந்தாலும், எங்க அப்பா அசலூர் காரணங்களுக்கு எல்லாம் பொண்ண கல்யாணம் பண்ணி குடுத்து என் பொண்ண தூரமா அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாரு.

அதனால அவரு இங்கயும் ஒரு பிசினஸ் தொடங்கி இங்கேயே செட்டில் ஆயிட்டாரு. எங்க அப்பாவும் இவரு நம்ப பொண்ணுக்காக இவ்ளோ செய்யும்போது கண்டிப்பாக நம்ம பொண்ண நல்லா பாத்துப்பாருன்னு நம்பி அவருக்கு என்ன கல்யாணம் பண்ணி குடுத்தாரு. எங்க அப்பா நம்புன மாதிரியே அவர் உயிரோட இருந்த வரைக்கும் அவரு என்ன ராணி மாதிரி வச்சுகிட்டாரு. எனக்கு நாலு பிள்ளைங்க. என்னோட வீட்டுக்காரர் இறந்ததுக்கு அப்புறமா என்னோட மூத்த பையன் விஷ்வா தான் அவரோட இடத்தில இருந்து எங்களோட ஃபேமிலி, பிசினஸ், எல்லாத்தையுமே பாத்துக்கிட்டான்.

இப்பவும் அவனோட தம்பி, தங்கச்சிங்கள, அப்பா ஸ்தானத்தில இருந்து அவங்களுக்கு வேணும்கிற எல்லாத்தையும் செஞ்சு குடுத்து பத்திரமா பாத்துக்கரான். என் புருஷன் சம்பாதிச்சு வாச்சிட்டு போன சில கோடிய, அவன் காலேஜ் படிச்ச முடிச்ச உடனேயே... சின்ன வயசுலயே, இவ்ளோ பெரிய பொறுப்பை எல்லாம் அவன் தலையில எடுத்து போட்டுக்கிட்டு இன்னைக்கு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பிசினஸ் சாம்ராஜ்யமா உருவாக்கி இருக்கான். என் பையனும், என்னோட நாத்தனார் வீட்டுக்காரரும், எங்களோட பிசினஸ் ஐ டேக் ஓவர் பண்ணலேன்னா.. இன்னைக்கு நாங்க இந்த நிலைமையில கண்டிப்பா இருந்திருக்க மாட்டோம்." என்று உணர்ச்சி வசப்பட்டு பேசியவளுக்கு, தன்னுடைய கடந்த கால நினைவுகள் எல்லாம் அவளுடைய மனதிற்குள் ஒரு நிழல் படமாக ஓடியது.

செண்பகம் பேசியதை கேட்ட ரித்திகாவிற்கு பணக்காரர்களைப் பற்றிய அவளுடைய கண்ணோட்டம் முற்றிலும் மாறியது. அதே மன நிலையில் செண்பகத்தை பார்த்தவள், “பரம்பரை.. பரம்பரையா... பணக்காரங்களா இருக்கிறவங்க எல்லாம் கஷ்டமே பட மாட்டாங்கன்னு நினைச்சேன் மா. ஏற்கனவே அவங்க கிட்ட நிறைய பணம் இருக்கும், அதை வேற ஏதாவது பிசினஸில இன்வெஸ்ட் பண்ணி இன்னும் காசுக்கு மேல காசுன்னு ஈசியா சம்பாதிக்கிறாங்கன்னு நினைச்சேன். ஆனா அவங்க அதே இடத்துல இருக்குறதுக்கும், அதில இருந்து இன்னும் மேல போறதுக்கு எவ்ளோ கஷ்டப்படுறாங்க இப்ப தான் புரியுது." என்றாள் நேர்மையாக.

செண்பகம்: மனதில் தோன்றுவனவற்றை அப்படியே வெளிப்படையாக பேசிவிடும் ராகவியின் குணம், அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் தன்னுடைய செலக்ஷனை நினைத்து தனக்குள் பெருமைப்பட்டவள், “கெட்டது வேணும்னா வேகமா நடக்கும். ஆன இந்த உலகத்துல எந்த நல்ல விஷயமும் சீக்கிரமா, ஈசியா கிடைச்சுராது. இன்னைக்கு சக்சஸ்புல்லா இருக்குற யாரா இருந்தாலும் அவங்களுக்கு பின்னாடி அவங்களுடைய பெரிய ஹார்ட்ஒர்க் நிறைய ஃபெயிலியர்ஸ் இருக்கும். அப்புறம் இத்தனை இருந்தும் அவங்க நிம்மதியா வாழறாங்களான்னு கேட்டா, அது அவங்களுக்கு மட்டும் தான் தெரியும்." என்று தன்மகன் விஷ்வாவை மனதில் வைத்து கொண்டுு சொன்னாள்.

ரித்திகா: உண்மை தான் அம்மா. பிரச்சனை இல்லாத வாழ்க்கைன்னு யாருடைய வாழ்க்கையும் இருக்க முடியாது.

செண்பகம்: “ம்ம்ம். ஆமா மா. நான் உன் கிட்ட ஒன்னு கேட்கணும். ஆனா அத நான் ஏன் உன் கிட்ட கேக்குறேன்னு நீ கண்டிப்பா புரிஞ்சுப்பேன்னு எனக்கு நம்பிக்கைை இருக்கு. நான் கேட்கட்டுமா..???" என்று சிறு தயக்கத்துடன் கேட்டாள்.

ரித்திகா: அதான் நீங்களே சொல்றீங்களே மா... என்னால அத புரிஞ்சிக்க முடியும்னு நீங்க நம்புறீங்கன்னு... அப்புறம் என்ன..??? எதுவா இருந்தாலும் சொல்லுங்க மா.

செண்பகம்: புரோக்கரிடம் கொடுப்பதற்காக தான் ரெடி செய்து வைத்து இருந்த விஷ்வாவை பற்றிய ப்ரோபைல் பைலை எடுத்து திறந்தவள், அதன் முதல் பக்கத்தில் இருந்த விஷ்வாவின் புகைப்படத்தை ராகவியிடம் காட்டி, “இவன் தான் என்னோட பெரிய பையன் விஷ்வா." என்றாள்.

அந்தப் புகைப்படத்தில் இருந்த விஷ்வாவை பார்த்த ரித்திகா, அதிர்ந்து விட்டாள். 😳 🙄 ராகவி, ஏற்கனவே விஷ்வாவை ஜான்வியின் பிறந்த நாள் அன்று ஜான்வி ஆதரவற்றோர் இல்லத்தில் நேரிலேயே பார்த்து இருந்தாள். அதனால் இந்த புகைப்படத்தில் இருப்பது தான் சித்தார்த்தின் அப்பா என்றால், சித்தார்த் உடைய அம்மா ஜான்வி. என்று நினைத்துப் பார்த்தவளுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. 😳 அதனால் அதே ஆச்சரியத்தோடு செண்பகத்தை பார்த்தவள், “அப்ப சித்தார்த் ஜான்வி மேடமோட பையனா...???" என்று கேட்டாள்.

இப்போது ஆச்சரியப்படுவது செண்பகத்தின் முறையாகிவிட்டது. 🙄 “உனக்கு ஜான்விய தெரியுமா...???" என்று ஆச்சரியமாக ரித்திகாவை பார்த்து கேட்டாள். தெரியும் என்று தன் தலையை ஆட்டிய ரித்திகா, அவள் எப்போதும் அந்த ஆசிரமத்திற்கு செல்வது பற்றியும், அவள் அப்படிஅங்கே செல்லும்போது, ஒரு நாள் ஜான்வியின் பிறந்த நாள் அன்று அங்கே வருணை அங்கே கண்டது பற்றியும் செண்பகத்திடம் சொன்னாள்.

செண்பகம்: “ம்ம்... ஜான்வி ஒரு நார்த் இந்தியன். வருண், 7 வருஷத்துக்கு முன்னாடி ஒரு பிசினஸ் விஷயமா மும்பைக்கு போனப்ப எங்கேயோ ஜான்வியை பாத்து லவ் பண்ணிட்டான். அப்புறம் கல்யாணம்ன்னு ஒன்னு பண்ணுனா அவள தான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம் புடிச்சு அவளையே கல்யாணமும் பண்ணிக்கிட்டான். சித்தார்த்துக்கு இரண்டரை வயசு இருக்கும் போ,து ஒரு நாள் குடும்பத்தோட அவங்க எல்லோரும் மும்பைக்கு ஒரு ட்ரிப் போய்ட்டு இருந்தாங்க. அப்ப ஜான்வி நிற மாசம் கர்ப்பமா இருந்தா. அவங்க போயிட்டு இருந்த கார் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. அந்த ஆக்சிடன்ட்ல, ஜான்வியும் அவ வயிற்றில இருந்த குழந்தையும் இறந்துட்டாங்க.

அப்பயும் தனக்கு என்ன ஆனாலும் பரவால்லன்னு தன்னோட பையனுக்கு ஒன்னு ஆக கூடாதுன்னு நினைச்சு மகாராசி ஜான்வி எப்படியோ சித்தார்த்த காப்பாத்திட்டா. அது நடந்து இப்ப ரெண்டு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. ஆனாலும் விஷ்வாவும், சித்தார்த்தும், அந்த சம்பவத்தில இருந்து இன்னும் வெளில வரவே இல்ல மா." என்று சொன்னவளின் கண்கள் கண்ணீரால் நிறைந்தது. 🥺

ரித்திகா: “நமக்கு ரொம்ப பிடிச்சவங்க நம்ம கண்ணு முன்னாடியே இறந்து போறத பாரக்கிறது ரொம்ப கஷ்டமா தான் மா இருக்கும். ஆனா நம்ம கைய மீறி நடக்கிற விஷயத்துக்காக நம்ம என்ன பண்ண முடியும்...??? இது பெரிய இழப்பு தான் ஆனா நம்ம இது கடந்து வந்து தான் ஆகணும். நீங்க வருத்தப்படாதீங்க மா." என்று சொல்லி செண்பகத்தை ஆறுதல் படுத்த முயன்றாள்.

- நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 93
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.