அத்தியாயம் 92: ரித்திகாவை சந்திக்க சென்ற செண்பகம் (பார்ட் 2)
ஐந்தாவது பீரியட்...
டான்ஸ் பிராக்டிஸ் ஹாலில்....
இந்த பீரியட் கௌத்தம், ராகவி, இருவருக்குமே ஃப்ரீ பிரியடாக தான் இருந்தது. இருந்தாலும் ராகவி ஸ்டாப் ரூமிற்கு செல்லாமல், வரப்போகின்ற ஆண்டு விழாவிற்காக அவர்கள் மாணவர்களுக்காக தேர்வு செய்து வைத்து இருந்த பாடல்களை பிளே செய்து, டான்ஸ் ஆடி ப்ராக்டிஸ் செய்து கொண்டு இருந்தாள். கௌத்தம் தன்னுடைய மொபைல் போனை நோண்டிக் கொண்டு இருந்தான். அந்த பெரிய அறையில் அவர்கள் இருவரை தவிர வேறு யாரும் இல்லை.
அப்போது கௌத்தம்க்கு ஏதோ ஒரு மெயில் வந்து இருப்பதற்கான நோட்டிபிகேஷன் அவனுடைய மொபைல் ஸ்கிரீனில் பாப் அப் ஆனது. அதைப் பார்த்து ஆர்வம் அடைந்தவன், அது என்ன மெயில் என்று திறந்து பார்த்தான். அவனும், ரித்திகாவும், பங்கேற்கவிருக்கும் டான்ஸ் காம்படிஷனை நடத்துபவர்களிடம் இருந்து தான் அவனுக்கு மேல் வந்து இருந்தது. அந்த மெயிலில்....
பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இருந்து பெறப்பட்ட அப்ளிகேஷன்களில் இருந்து அவர்கள் ஃபில்டர் செய்து தேர்வு செய்ததில், ராகவியும், கௌத்தமும், முதல் மூன்று கப்புல்களுக்குள் ஒருவராக வந்திருப்பதற்காக சொல்லி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தனர். அது மட்டும் இன்றி இரண்டாவதாக நடக்க இருக்கும் செலக்ஷனில் கலந்து கொள்வதற்காக அவர்களுக்கான இன்விடேஷனும் அதில் இணைக்க பட்டு இருந்தது. அந்த இன்விடேஷனில் ராகவியின் பெயரும், கௌத்தமின் பெயரும் அருகருகே பிரின்ட் செய்ய பட்டு இருந்தது. அதை கவனித்த கெளத்தம் தனக்குள் சிரித்துக் கொண்டான். 😁 😁 😁
அவர்கள் கண்டிப்பாக செலக்ட் ஆவார்கள் என்ற நம்பிக்கை கௌத்தமிற்கு இருந்தது தான் என்றாலும், அது நிஜமாகவே நடக்கும் போது அவன் பேரானந்தத்தில் திளைத்தான். ☺️ 😁 அவனும், ராகவியும், அத்தனை மணி நேரம் ஒரே இடத்தில் கப்புல் ஆக சேர்ந்து ஆடப்போவதை நினைத்து அதீத மகிழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டவன்; தனக்கு அருகில் ஆடி கொண்டு இருந்த ரித்திகாவை பார்த்து, அவளுடைய பெயரை சொல்லி அவளை அழைத்தபடியே அவள் அருகே ஓடிச் சென்று, அவளை பின்னே இருந்து அனைத்த படி தூக்கி கொண்டு சுற்றியவன், “நாம செலக்ட் ஆயிட்டோம் ரித்திகா." என்று கத்தி சொன்னான். 🤗 🤩
முதலில் அவன் தன்னை திடீரென்று தூக்கியதால் அதிர்ந்தவள், பின் அவன் சொன்னதை கேட்டு அதன் காரணத்தை புரிந்து கொண்டு அமைதி அடைந்தாள். இருந்தாலும் அவன் உணர்ச்சி பெருக்கில் என்ன செய்து கொண்டு இருக்கிறான் என்பதை அவனுக்கு உணர்த்த நினைத்தவள், “சரி....!!! ஓகே. என்ன கீழ இறக்கி விடுங்க." என்றாள். அவள் பேசிய பின்பு தான் தன் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்த கௌத்தம், அவளை கீழே இறக்கி விட்டு, “சாரி...!! சாரி..!!!" என்றான் அவசரமான குரலில்...
ராகவி: “இட்ஸ் ஓகே கூல்."என்று கேஷுவலாக சொன்னாள். அவனோடு பழகிய இத்தனை நாட்களில் ஓரளவு அவனைப் பற்றி புரிந்து கொண்டு இருந்தவள், அவனை தவறாக நினைக்கவில்லை.
பின் அவர்கள் இருவரும் அவர்கள் பங்கேற்க இருக்கும் டான்ஸ் காம்பெட்டிஷனை பற்றியும், பள்ளியின் முதலாம் ஆண்டு விழாவை பற்றியும் டிஸ்கஸ் செய்து அதற்கான வேலையை செய்ய தொடங்கினர்.
லாஸ்ட் பீரியட்....
வைஷாலி இன்னும் கிரவுண்டில் தான் இருந்தாள். இது தன்னுடைய பீரியட் இல்லை என்றாலும், வைஷாலிக்காக மகேஷும் அங்கேயே இருந்தான். பீ.ட்.டி பீரியடுக்காக 11ஆம் வகுப்பு மாணவர்கள் கிரவுண்டுக்குள்ளே வந்து கொண்டு இருந்தனர். அவர்களை கண்காணித்த படியே அவர்களின் பின்னே வந்து கொண்டு இருந்தாள் ஷாலினி. காலையில் இருந்து அவள் அதிக நேரம், புட் பால் விளையாடிவிட்டதால், இப்போது வாலிபால் விளையாடலாம் என்று நினைத்தவள், அதற்கான இடத்தில் நின்று கொண்டு மகேஷ் உடன் அது பற்றி பேசிக் கொண்டு இருந்தாள்.
வைஷாயை பார்த்தவுடன், இவளுடைய முகத்தில் எல்லாம் தான் முழிக்க வேண்டுமா...??? என்று நினைத்த ஷாலினியின் முகம் அப்படியே திடீரென்று கோபமாக மாறியது. 😕 வைஷாலி தனக்கும் விஷ்ணுவிற்கும் இடையில் வருகிறாள் என்ற ஒரே காரணமே, ஷாலினிக்கு வைஷாலியை வெறுக்க போதுமானதாக இருந்தது. தன்னுடன் வந்த மாணவர்களை அரேஞ் செய்து ஒரு பக்கமாக நிற்க வைத்த ஷாலினி, மகேஷுன் அருகே சென்றாள். ஷாலினியை பார்த்தவுடன் மகிழ்ந்தாள் வைஷாலி. ஏனென்றால், விஷ்ணு அவளை தன்னுடைய பிரண்டு என்று அறிமுகப்படுத்தி இருந்ததால், விஷ்ணுவின் நண்பர்களை தாமும் நண்பர்கள் ஆக்கிக் கொண்டால், தன் மேல் அவனுக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் வரும் என்று நினைத்த வைஷாலி, ஷாலினி இடம் நட்பாக பேசினாள்.
அப்படி ஃபார்மாலிட்டிக்காக கூட நட்பாக வைஷாலி இடம் பேசுவதற்கு ஷாலினிக்கு பிடிக்கவில்லை என்றாலும், வேறு வழி இன்றி சகஜமாக அவளிடம் பேச முயன்றாள். மகேஷ் விளையாடுவதற்கு தேவையான அனைத்தையும் செட் செய்ய, வைஷாலி அவனுக்கு உதவினாள். அதை அனைத்தையும் அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள் ஷாலினி. பின் வைஷாலியும், மகேஷும், தங்களுடைய கைகளில் ஆளுக்கு ஒரு பந்தை எடுத்து கொண்டு; அதை எப்படி அந்த கூடையில் சரியாக போடுவது என்று மாணவர்களுக்கு போட்டு காண்பித்தார்கள்.
அந்த கூட்டத்தில் மாணவர்களோடு ஒருவராக நின்று கொண்டு இருந்த ஷாலினியும் அவர்களை கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தாள். வைஷாலியின் ஒவ்வொரு அசைவுகளும், அவளை ஒரு நேர்த்தியான விளையாட்டு வீராங்கனை என்று சொல்வதற்கு பொருத்தமாக இருந்தது. அதை எல்லாம் நினைத்துப் பார்த்த ஷாலினிக்கு, தன்னையும் அவளையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவளுக்கே தன்னை விட வைஷாலி தான் மிகவும் திறமை வாய்ந்தவள் என்றுு தோன்றியது. ஒரு வேளை தன்னை விட விஷ்ணுவிற்கு இவள் தான் பொருத்தமாக இருப்பாளோ..??? என்று கூட நினைத்து பார்த்த ஷாலினியின் மனம் வருந்தியது. 💔 ஏற்கனவே ஷாலினிக்கு இருந்த இனஃபிடியாலிட்டி காம்ப்ளக்ஸ் வைஷாலியை பார்த்தவுடன் இன்னும் அதிகமாகிவிட்டது. ஷாலினி ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் தன்னையும், அவளையும், ஒப்பிட்டு பார்க்க தொடங்கி விட்டாள். இருந்தாலும் அவளுடைய மனம் விஷ்ணுவை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கத் துணியவில்லை.
மாலை 6:00 மணி....
சித்தார்த் இன்று தன்னுடைய பாட்டி மாலை அவளை கோயிலில் வந்து சந்திக்கும் படி சொன்னதாக ரித்திகாவிடம் தெரிவித்து இருந்தால், இருந்தாலும் அதை பற்றி சுகந்தி இடம் கேட்டு கன்ஃபார்ம் செய்து கொண்டாள் ரித்திகா. முதன் முதலில் ரித்திகாவும், செண்பகமும், சந்தித்து கொண்ட அதே துர்கை அம்மன் கோயிலில் தான் மீண்டும் அவளை சந்திக்க வரும் படி அழைத்து இருந்தார் செண்பகம். சுகந்தி இடம் ரித்திகா, அங்கே வருவதற்கு சம்மதித்து இருந்தாலும், ஏன் சித்தார்த்தின் பாட்டி தன்னை பார்க்க வேண்டும் என்று அழைக்கிறார்கள் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதனால் தான் தனியாக செல்ல வேண்டாம் என்று நினைத்த ரித்திகா, ஷாலினியையும் தன்னுடன் அழைத்துச் சென்றாள். அவர்கள் ஸ்கூட்டியில் வரும்போது பல முறை ரித்திகாவிடம் ஏன் உங்களை சித்தார்த்தின் பாட்டி பார்க்க வேண்டும் என்கிறார்கள் என்று ஷாலினி கேட்டுவிட்டாள். அந்த கேள்விக்கு ராகவிக்கே பதில் தெரியாததால், “தெரியல டி. ஒரு வேளை சித்தார்த்த பத்தி ஏதாவது சொல்றதுக்காக இருக்குமோ என்னமோ." என்றாள். இப்படியே ஒருவருடன் ஒருவர் மாறி மாறி பேசியபடி இருவரும் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர்.
ரித்திகா அங்கே வரும்போது அவளை உள்ளே அழைத்துச் செல்வதற்காக, கோயிலின் வாசலிலேயே காத்திருந்தாள் சுகந்தி. ரித்திகாவோடு ஷாலினியும் வருவதை கவனித்த சுகந்தி, அவர்கள் இருவரையும் கோயிலின் உள்ளே செண்பகம் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள். அந்தக் கோயிலின் வெளி பிரகாரத்தில் உள்ள ஒரு படியில் அமர்ந்திருந்தாள் செண்பகம். பிரவீனால் ஏற்பட்ட பிரச்சனைகள் காரனமாக தன் குடும்பத்தினர் அனைவருக்கும் விஷ்வா பாதுகாப்பை அதிகப்படுத்தி இருந்தான். அதனால் செண்பகத்துடன் அவளுடைய பர்சனல் அசிஸ்டன்ட் தாராவும், அவளுடைய பாடி கார்ட் சோபியாவும் இருந்தனர்.
ரித்திகா அங்கே வந்தவுடன் அவளை அடையாளம் கண்டு கொண்ட செண்பகம், எழுந்து நின்றாள். ஆனால் அவளுடன் வரும் ஷாலினியை யார் என்று அவளால் அடையாளம் காண முடியவில்லை. செண்பகத்தை கை காட்டிய சுகந்தி, அவள் தான் சித்தார்த்தின் பாட்டி என்று ரித்திகாவிற்கு அறிமுகப்படுத்தினாள். செண்பகத்தை பார்த்த ரித்திகாவிற்கு உடனேயே அவளை இதற்கு முன் அவள் அதே கோயிலில் பார்த்ததும்; அங்கே அவளுடன் விஷ்ணு இருந்ததும், விஷ்ணு செண்பகத்தை தன்னுடைய அம்மா என்று சொன்னதும் அவளுக்கு ஞாபகம் வர, அதை இரண்டையும் இணைத்து பார்த்த ரித்திகாவிற்கு, சித்தார்த் யார் என்றும், சித்தார்த்துடைய அப்பா யார் என்றும் தெளிவாக புரிந்தது.
அதை நினைத்து பார்த்தவள், அதிர்ச்சி அடைந்தாள். 😳 தன்னுடைய மகனின் மீது எவ்வளவு பாசம் இருந்தால் அவனுடைய அலுவலகத்திற்கு அருகே இத்தனை பெரிய பள்ளியையே ஒருவன் கட்டுகிறான் என்றால், அவனுடைய மகன் எப்படி இருப்பான் என்று ராகவி பல முறை யோசித்து இருக்கிறாள். அவளும் அதே பள்ளியில் வேலை பார்ப்பதால், எப்போதும் அந்த லக்கியான பையன் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எப்போதுமே அவளுக்கு இருந்திருக்கிறது. அந்த பையன் சித்தார்த் தான் என்று இப்போது அவள் தெரிந்து கொண்ட பின், அவளால் அதை நம்பவே முடியவில்லைை. 😳 அதே அதிர்ச்சியோடு செண்பகத்தை பார்த்தவள், “அம்மா....!!! நீங்க தான் அப்ப சித்தார்த்தோட பாட்டியா...???" என்று கேட்டாள். 🙄 😳
செண்பகம்: அவளை பார்த்து அர்த்தமாக புன்னகைத்தவள், “ஆமா மா." என்றாள். 😁 😁 😁
அதற்கு மேல் ஷாலினி இங்கேயே இருந்தால் அவளுக்கு விஷ்ணுவை பற்றிய உண்மைகள் தெரிந்து விட கூடும் என்று நினைத்த ரித்திகா; ஷாலினியை பார்த்து, “நான் இவங்க கூட பேசிட்டு வரேன். நீ போய் சாமி கும்பிட்டுட்டு இரு." என்று சொல்லி அவளை அங்கு இருந்து அனுப்பி வைத்து விட்டாள். ரித்திகாவே இப்படி சொல்லிவிட்டதால், இதற்கு மேல் நாம் என்ன செய்ய...?? என்று நினைத்த ஷாலினியும், அவள் சொன்னது போலவே அங்கிருந்து சென்று விட்டாள். ஷாலினி சென்ற பின் செண்பகமும், ரித்திகாவும், அருகருகே அமர்ந்து பேச தொடங்கினர்.
இதற்கு முன் ராகவியை செண்பகம் சுடிதாரில் தான் பார்த்திருக்கிறாள். இப்போது ரித்திகா கோயிலுக்கு வருவதால் புடவை அணிந்து வந்திருந்தாள். அதனால் இப்போது ரித்திகாவை புடவையில் பார்த்த செண்பகத்திற்கு, இவள் தான் தன்னுடைய வீட்டின் மகாலட்சுமி என்று தோன்றியது.
ரித்திகா: “உங்க கூட சித்தார்த் வரலையா மா..??? சாரி... மேடம்....!!!" என்று திக்கி திக்கி பேசினாள்.
செண்பகம்: இந்த பார்மாலிட்டி எல்லாம் வேண்டாம் மா. நீ என்ன அம்மான்னே கூப்பிடு. எனக்கு நீ என்ன அப்டி கூப்பிடுறது ரொம்ப பிடிச்சிருக்கு." என்று சிரித்த முகத்துடன் சொன்னாள். 😁 😁 😁
ரித்திகா: செண்பகம் பேசிய விதம் அவளை அமைதிப்படுத்துவதற்கு போதுமானதாக இருந்தது. அதனால் அவளிடம் சகஜமாக பேச தொடங்கியவள், “ஏன் மா..!!!! நீங்க சித்தார்த்த உங்க கூட்டிட்டு வரலையா..??? அவன் தான் ரொம்ப எக்ஸைட்டட் ஆ இருந்தான். நீயும், நானும், ஒண்ணா கோயிலுக்கு போக போறோம் ரித்தின்னு என் கிட்ட சொல்லி கிட்டே இருந்தான்." என்றாள்.
செண்பகம்: ஆமா மா. நானும் ரித்தியை பாக்குறதுக்கு வந்தே தீருவேன்னு வீட்டிலேயே ரொம்ப அடம் புடிச்சிட்டு இருந்தான். நான் தான் உன் கிட்ட தனியா பேசணும்னு அவன அதையும், இதையும், சொல்லி வீட்டில விட்டுட்டு வந்துட்டேன். நான் உன்ன பாக்க இங்க வரேன்னு அவன் கிட்ட சொல்லி இருக்க கூடாது மா. தேவை இல்லாம சொல்லி தப்பு பண்ணிட்டேன்.
ரித்திகா: ஓ... சரி..!! பரவால்ல மா விடுங்க. நீங்க என் கிட்ட ஏதோ பேசணும்ன்னு சொன்னீங்கன்னு சுகந்தி அக்கா கூட சொன்னாங்க. சொல்லுங்க... ஏதாவது இம்பார்டன்டான விஷயமாமா? சித்தார்த்த பத்தி பேசணுமா அம்மா?
செண்பகம்: “ஆமா..!! ஆனா விஷயம் சித்தாரத்தை பத்தி மட்டும் இல்ல மா." என்று சொல்லி புதிர் போட்டாள்.
ரித்திகா: நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியல. எதுவா இருந்தாலும் டைரக்டாவே சொல்லுங்க அம்மா.
- நேசம் தொடரும்.. ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 92
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.